2019 ஏப்ரல்

அந்நஜாத் ஏப்ரல் 2019 ரஜப் -­ ஷஃபான் 1440 தலையங்கம்! அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா? முஸ்லிம்களை காஃபிராக்கும் பிரிவினை இயக்கத் தலைவர்கள்! அமல்களின் சிறப்புகள்… இஸ்ரா-இரவுப் பயணம்! மிஃராஜ்-விண்ணுலகப் பயணம்!! ஜம்வு கஸ்ரு, இணைத்துத் தொழுகை… அறிந்து கொள்வோம்… “தக்லீத்” ஓர் கூரிய பார்வை! நாளின் ஆரம்பம்… நெஞ்சில் பதிந்த கதறல்! தொலைக்காட்சி தொலைந்து போனது! சமூக வலைதளங்கள் பரபரப்பாயின! காம வெறி பிடித்த வாலிப கும்பல்! 6 ஆண்டுகள் நூறுக்கும் அதிகமான பெண்கள் மீது பாலியல் […]

அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா? ஜி. நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை ஆல இம்ரான் என்ற மூன்றாவது அத்தியாயத்தின் 31 வசனத்தின் விளக்கத்தை முன் தொடரில் ஓரளவு கண்டோம். இறை நேசம் என்ற ஆன்மீகத் தேடலின் வழிகாட்டல் முஹம்மத்(ஸல்) அவர்களிடமே இருக்கின்றது என்பதை அந்த வசனத்தின் வழியாக இறைவன் சொல்லியுள்ளான் என்பதை உதாரணங்களுடன் விளக்கினோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம். “(மனிதர்களே!) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறுவீராக! ஆன்மீகம் என்பதே இறைவனை […]

முஸ்லிம்களை காஃபிராக்கும் பிரிவினை இயக்கத் தலைவர்கள்! எஸ்.ஹலரத் அலி, திருச்சி அன்றைய ஜாஹிலியா அரேபியாவில் வாழ்ந்த மக்கள் தங்களுக்குள் குலம், கோத்திர பெருமையில் ஓயாது சண்டையிட்டுக் கொண்டும், கண்ணில் படும் சிலைகளை எல்லாம் வணங்கிக் கொண்டும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் நரக நெருப்பின் விளிம்பில் இருந்ததாக அல்லாஹ் கூறுகிறான். இப்படி வழிகேட்டில் வாழ்ந்த மக்களை குர்ஆனைக் கொண்டு ஒற்றுமைப்படுத்தி, ஒரே சகோதரர்களாக, அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்களாக மாற்றியது அல்லாஹ்வின் நாட்டமே. அல்லாஹ்வின் பெருங்கருணையால் […]

அமல்களின் சிறப்புகள்…. அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம். தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத் கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… அமல்களின் சிறப்பு (அசி) புத்தகம் நல்ல பிள்ளை வேஷம் போட்டு, புனித […]

இஸ்ரா-இரவுப் பயணம் மிஃராஜ்-விண்ணுலகப் பயணம் முஹம்மது சலீம், ஈரோடு நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் வழங்கப்பட்ட பிறகு மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமில் நபி(ஸல்) அவர்கள் இருந்தபோது நிகழ்ந்த அற்புதமான நிகழ்வைத்தான் நாம் இஸ்ரா மிஃராஜ் (இரவுப் பயணம், விண்ணுலகப் பயணம்) என்று அழைத்து வருகிறோம். சிறப்புமிக்க இந்த பயணம் குறித்து குர்ஆன் மற்றும் ஹதீஃதிலிருந்து சில முக்கியமான விஷயங்களை வரிசைப்படுத்திப் பார்ப்போம். மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப் புறத்தை பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை […]

ஜம்வு, கஸ்ரு, இணைத்துத் தொழுதல் M.A. ஹனீபா, பொட்டல்புதூர் ஜம்வு : (சேர்த்து தொழுதல்) : இரு நேரத் தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுவதை ஜம்வு என்று கூறுகிறோம். பிரயாணிகளுக்கு லுஹ்ரு, அஸ்ரு, மக்ரிப், இஷா ஆகிய நான்கு நேரத் தொழுகைகளை முறையே, லுஹ்ரையும், அஸ்ரையும் இணைத்து அவ்விரு தொழுகைகளின் ஏதேனும் ஒரு தொழுகை நேரம் முடிவுக்கு முன்னர் ஒரு வசதிப்படும் நேரத்திலும், மக்ரிபையும், இஷாவையும் இணைத்து அவ்விரு தொழுகைகளின் ஏதேனும் ஒரு தொழுகை நேரம் முடிவுக்கு முன்னர் […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர், அல்லாஹ் காற்றை எதற்காக அனுப்புவதாக கூறுகிறான்? கப்பல்கள் கடலில் செல்வதற்காகவும், மனிதர்கள் அருளை தேடிக்கொள்ளவும், நன்றி செலுத்தவும் என அல்லாஹ் கூறுகிறான். அல்குர்ஆன் :30:46 ஈமான் கொண்டவர்கள் வேறு வீடுகளில் பிரவேசிக்கும் முன் எப்படி நடந்து கொள்ள அல்லாஹ் கூறுகிறான்? அவர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை பிரவேசிக்க வேண்டாம் என்று கூறுகிறான்.  அல்குர்ஆன் : 24:27 குற்றவாளிகள் மறுமை நாளில் எவ்வாறு சத்தியம் செய்வார்கள் என அல்லாஹ் கூறுகிறான்? […]

“தக்லீத்”  ஓர் கூரிய பார்வை! கு. நிஜாமுத்தீன் பிப்ரவரி 2019  தொடர்ச்சி…. முஹம்மது(ஸல்)  உம்மத்தவரிடம் தக்லீத்: மக்கத்து நகரில் முன்னோர்கள், முன்னோர்கள் என்று மூழ்கிக் கிடந்த மக்களிடம் நபி(ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்து நபி பட்டத்திற்குப் பிறகு தக்லீதை வன்மையாக எதிர்த்தார்கள், தக்லீதை பற்றிய இவர்களின் பிரச்சாரம் வலுப்பட்டவுடன் தக்லீத் நேயர்களின் கோபமும் துளிர் விட்டு வளர்ந்தது. இந்த கோபத்தின் விளைவால் தாம் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு நாடு துறந்து செல்லக்கூடிய நிலைக்கு நபி(ஸல்) ஆளாக்கப்பட்டார்கள். அவர்களின் […]

நாளின் ஆரம்பம்… எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. பிப்ரவரி 2019 தொடர்ச்சி…. v சூரியன் மீதும் அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக முற்பகல் மீது சத்தியமாக பகலின் மீதும் சத்தியமாக இரவின் மீதும் சத்தியமாக. (91:1,3,4, 93:1) v ஹுதைஃபா(ரழி) அவர்கள் அறிவிப்பதாவது ஒருமுறை நாங்கள் கலீஃபா உமர் (ரழி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது கடலலை போன்று அடுக்கடுக்காக ஏற்படும் அரசியல் குழப்பங்கள் பற்றிய நபி(ஸல்) அவர்களது முன் அறிவிப்பு பற்றி அறிந்தவர் உங்களில் யார்? என்று கேட்டார்கள் மூஃமின்களின் தலைவரே! அந்தக் குழப்பங்களுக்கும் உங்களுக்கும் […]