2020 ஆகஸ்ட்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் ஆகஸ்டு 2020 துல்ஹஜ்1441 – முஹர்ரம் 1442 தலையங்கம்! நஃப்ஸும் ரூஹும் ஒன்றா? நபி வழியே நம் வழி! கடமையான தொழுகையில் ஏற்படும் குறையும்…  அதை நிறைவாக்கும் உபரியான தொழுகையும்… அமல்களின் சிறப்புகள்…. பெண்களுக்கும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளும் உரிமை உண்டா? ஹலாலான சொந்த செல்வத்திற்கே ஜகாத்! சுவர்க்கம் என்பதும் மறைவான  இறை நம்பிக்கையில் உள்ளதாகும்! 09.அறிந்து கொள்வோம் ! ஐயமும்! தெளிவும்!! தலையங்கம்! போலிஸ் போலிஸ் […]

நஃப்ஸும் ரூஹும் ஒன்றா? இப்னு ஹத்தாது மறு பதிப்பு : அல்குர்ஆன் 39:42 இறைவாக்குக் கூறும் நேரடிச் செய்தி, “அல்லாஹ் ஆன்மாக்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காத வற்றை அவற்றின் தூக்கத்திலும் கைப்பற்றி, பின்பு எதன்மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை நிறுத்திக் கொள்கிறான். மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்டத் தவணை வரை அனுப்பி விடுகிறான். சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.” (39:42) இங்கு அரபியில் “அன்ஃபுஸ்” என்றே இருக்கிறது. அதை நேரடியாக மொழி பெயர்த்தால் […]

நபி வழியே நம் வழி! அஹமது இப்ராஹீம்,  புளியங்குடி அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் வின் அருள் உண்டாவதாக! அன்பாளர்களே! ஒரு தாய் மக்களாக இருக்கவேண்டிய அனைத்து சமுதாய மக்களும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு இரத்தம் சிந்தக் கூடிய அளவுக்கு அதுவும் கொரானா நோய் இறங்கி மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலும் மதவாதப் புரோகிதர்கள் அப்பாவி மக்களைத் தூண்டி மத மோதல்களை உருவாக்குகின்றனர். நம்முடைய சகோதர சமுதாயத்தில் அவர்கள் கடவுளாக வணங்கக்கூடிய முருகன் பற்றி […]

கடமையான தொழுகையில் ஏற்படும் குறையும்… அதை நிறைவாக்கும் உபரியான தொழுகையும்… M.H. ஹனிபா ஒருவர் தொழுது முடித்து (வீடு) திரும்புகிறார். அவருக்குத் தொழுகையின் நன்மையில் பத்தில் ஒன்றோ, ஒன்பதில் ஒன்றோ, எட்டில் ஒன்றோ, ஏழில் ஒன்றோ, ஆறில் ஒன்றோ, ஐந்தில் ஒன்றோ, மூன்றில் ஒன்றோ, இரண்டில் ஒன்றோதான் கிடைக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். (அறிவிப்பாளர் : அம்மார் பின் யாஸிர்(ரழி), நூல்கள்: அபூதாவூத் 796, அஹ்மத்) ஆக, ஓர் இறையடியாரின் முழுத் […]

அமல்களின் சிறப்புகள்…. தொடர் : 60 அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் :  பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ­ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் […]

பெண்களுக்கும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளும் உரிமை உண்டா? S.H.  அப்துர் ரஹ்மான் அன்புள்ள சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமிழகத்தில் ஜனாஸா தொழுகை விஷயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்தும் நபி(ஸல்) பெண்களுக்கு வழங்கிய அனுமதி குறித்தும் இக்கட்டுரையில் பார்ப்போம். இன்றைய தமிழக முஸ்லிம்கள் ஜனாஸா தொழுகையில் பெண்கள் பங்கெடுக்க அனுமதிப்பதில்லை. தந்தையை இழந்த மகளுக்கும், கணவனை இழந்த மனைவிக்கும் ஜனாஸா தொழும் உரிமை மறுக்கப்படுகிறது. இது நியாயமா? தந்தைக்காக மகளோ, கணவனுக்காக மனைவியோ கூட […]

ஹலாலான சொந்த செல்வத்திற்கே ஜகாத்! நிஜாமுதீன் ஜூலை மாத தொடர்ச்சி…. ஒருவர் கடன் பெறுவதற்கு காரணம் அவரது சொந்த தேவைகளை பூர்த்தி செய் துக் கொள்வதற்குத்தான். உதாரணமாக வீடு கட்டுவதற்காக ஒருவர் பல லட்சங்கள் கடன்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அது அவரது சொந்த தேவைக்குரியதாகிவிடுகிறது. சொந்தத் தேவை என்பது அவரை பொறுத்தவரை உச்சவரம்பை கடக்காததாகும். அதாவது தேவைக்கு போக மீதமுள்ளதை என்று இறைவன் குறிப்பிட்டுள்ளான். கடன் பட்டவர் சொந்த தேவைக்காகத்தான் கடன் படுகிறார் என்பதால் […]

சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும்… எஸ்.எம். அமீர்,  நிந்தாவூர்,   இலங்கை. ஜூலை  மாத   தொடர்ச்சி…. சுவர்க்கத்தில் பசி எனும் அந்தரங்க அவலம் இல்லை. இன்ப ருசியை அனுபவிப்பதற்காகவே உண்ணலும், பருகலும்: நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் (சூரியனால் ஏற்படும்) வெயிலில் (கஷ்டப்) படவும் மாட்டீர். இன்னும் இதில் நீர் தாகிக்கவும் மாட்டீர். பசியாகவும் இருக்க மாட்டீர்(என்று கூறினோம். 20:118.119, 76:13) அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்தவர்களாக) இருப்பார்கள். (சூடாக இருக்கும்) சூரியனையோ, கடுங் […]

அறிந்து கொள்வோம்!   மர்யம்பீ, குண்டூர், தான் எந்த தினத்தில் பிறந்ததாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? திங்கட்கிழமை.  அபூகத்தாதா அல்அன்சாரி (ரழி), முஸ்லிம் : 2153 யாரை மறுமை நாளில் குருடனாக எழுப்புவேன் என அல்லாஹ் கூறுகிறான்? அல்லாஹ்வுடைய உபதேசத்தை புறக்கணிப்பவன். அல்குர்ஆன் : 20:124 எந்த நோயானாலும் நிவாரணம் இருக்கும் பொருள் எது? என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? கருஞ்சீரகம், மரணத்தை தவிர எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உண்டு. அபூஹுஹைரா (ரழி), முஸ்லிம்: 4452 உறங்கச் […]

ஐயமும்! தெளிவும்!! ஐயம் :   ஹதீஃத் அறிவிப்புகளில் இப்னு அப் பாஸ்(ரழி) என்று வருகிறது. இப்னு அப்பாஸ் என்றால் அப்பாஸ் உடைய மகன் என்றுதானே அர்த்தம். முகம்மது பாரூக், பேட்டை, திருவெல்வேலி. தெளிவு : ஒருவரை யார் என்று தெரிந்து கொள்ள, தந்தை பெயர் மூலமாக இன்னாரின் மகன் என்று அறியப்படுவது, அரபிகளின் வழக்கம். எனவே, அப்பாஸ்(ரழி) அவர்களின் மகனை இப்னு அப்பாஸ்(ரழி) என்று அழைத்து வந்தனர். இப்னு அப்பாஸ் அவர்களின் பெயர் அப்துல்லாஹ் ஆகும். அப்துல்லாஹ் இப்னு […]