2020 டிசம்பர்

தலையங்கம்! நீதி தென்படுகிறது! நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த விசாரணையின் போக்கில் நீதி தென்பட்டுக் கொண்டிருப்பதில் திருப்தி அடைந்ததால் உருவான தலையங்கம் இது! எமது மே 2020 இதழில் “அமல்களின் சிறப்புகள்” ஆய்வுத் தொடரில் தப்லீக் ஜமாஅத்தினரின் மாநாட்டில் பங்கேற்றவர்களால் தான் கொரோனா வைரஸ் நோய் அதிகமாகப் பரவியதாக சில ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்தி, பொய் என்பதை எழுதி இருந்தோம். ஊடகங்களின் பொய் செய்திகளை முன் வைத்து, “ஜாமியத் உலமாயே […]

எனதருமை முகநூல் இஸ்லாமிய சகோதரர்கள் கவனத்திற்கு! அஹமது இப்ராஹீம்,  புளியங்குடி சமீப காலமாக சில வெறி பிடித்த சங்கிகள் நாத்திகர்கள் என்ற போர்வையில் இஸ்லாமிய மார்க்கத்தையும் அல்குர்ஆனையும் நமது உயிரினும் மேலான ரஹ்மத்தன்லில் ஆலமீனாகிய நபி(ஸல்) அவர்களையும் நம்மால் தாங்கமுடியாத அளவுக்கு மோசமான வார்த்தைகளைக் கொண்டும் மிகவும் கடுமையான வசைச் சொற்களைக் கொண்டும் முகநூலில் பதிவிடுகிறார்கள். இவ்வாறான நிராகரிப்பவர்கள் திட்டும்போது நாம் என்ன செய்ய வேண்டும் அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி கீழ்க்கண்ட அல்குர்ஆன் […]

வேற்றுமையில் ஒற்றுமை காணமுடியுமா? அஹமது இப்ராஹீம், புளியங்குடி ஜனநாயக இந்தியாவில் சமயம், மொழி, இனம் என்ற பிரிவுகளில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். எல்லோரும் ஒத்துக்கொள்வது மாதிரி அரசியல் அமைப்பு சட்டத்தை நிறுவி மக்கள் ஜனநாயக சமயசார்பற்ற இந்தியா என்று அழைக்கப்பட்டது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையின் மூலம் இந்திய மக்கள் ஒன்றுபட்டுள்ளார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியர்களின் தாரகமந்திரமாக ஒலிக்கலாம். ஆனால் இந்தியாவில் வசிக்கக்கூடிய முஸ்லிம்கள் பல பிரிவுகளை அமைத்துக்கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெயரில் ஒன்று […]

மிஸ்வாக் (பல் துலக்குதல்) சையித் முபாரக், நாகை நாம் மறந்த சுன்னாவில் ஒன்றுதான் மிஸ்வாக் செய்வது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் தினமும் பலமுறை மிஸ்வாக் செய்பவர்களாக இருந்தார்கள்; அதை வலியுறுத்தியும் இருக்கிறார்கள். “பல் துலக்குவது பற்றி நான் மிகவும் அதிகமாக வலியுறுத்தியுள்ளேன்” என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) மரண வேளையில் : நபியவர்கள், தமது மரணத் தருவாயில் இருந்தபோது கூட பல் துலக்க நாடினார்கள் என்பதிலிருந்து மிஸ்வாக்கின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம். (நபியவர்கள் […]

மனிதர்களே உங்களை படைத்த  ஒரே இறைவனை மட்டும் வணங்க மாட்டீர்களா? S.H. அப்துர்ரஹ்மான் மனிதர்கள் யாரை மட்டும் வணங்க வேண்டும்? “மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் (ஒரே) இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறையச்சமும், (தூய்மையும்) உடையோராகலாம். (2:21) இறை நூலில் தெளிவாக படைத்த ஒரே இறைவனை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் நாத்திகர் தவிர மனிதர்கள் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் மனிதர்களிடம் அதில் நேர்மையில்லை. படைத்தவன் […]

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? தொடர் – 4 அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : புரோகித மவ்லவிகளின் தில்லுமுல்லு  பாரீர்! புரோகித மவ்லவிகளில் ஆகக் கடைநிலையிலுள்ள புரோகிதர்கள், செத்தவர்களின் பெயரால் என்ன என்ன நாடகங்கள் நடத்துகிறார்கள், எத்தனை ஏமாற்றுப் பித்தலாட்டங்களைச் செய்கிறார்கள். மக்களிடமிருந்து காசு பிடுங்க எத்தனை வேஷங்கள் போடுகிறார்கள், எத்தனைக் கற்பனை கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு மக்களை மடையர்களாக்கி ஏமாற்றி வயிறு வளர்க்கிறார்கள். கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் எத்தனை பொய் தர்காக்களை, […]

புரோகித அரபி மதரஸாக்களுக்கு மாற்றாக…. உடனடித் தேவை ஒரு இஸ்லாமிய பல்கலைக் கழகம் முஹிப்புல்  இஸ்லாம் சர்ச்சைகள் : மதரஸாக்கள் குறித்த சர்ச்சைகள் இந்திய தேசத்தில் உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கும் நேரம் இது! சகோதர சமயத்தவர்கள் மதரஸாக்கள் பற்றி பல்வேறு கோணங்களில் வினாத் தொடுக்க தொடங்கியுள்ளனர். விதண்டாவாதங்களை ஒதுக்கி அவர்களின் நியாயமான ஐயங்களைத் தெளிவுபடுத்துவது முஸ்லிம்களின் நீங்காக் கடமையாகும். அதற்குமுன், மதரஸாக்கள் பற்றி முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? என்பதை அறிதல் அவசியமாகும். வேரூன்றி விடுதல் : இந்தியாவில் […]

இதோ ஓர் ஜிஹாத்! அப்துல்லாஹ் இப்னு அருணாச்சலம், திருச்சி ஜிஹாத் … இக்கட்டுரை விளக்கமல்ல… வேறு கோணப் பார்வை… இது ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவம்… அல்லாஹ் ஒரு பெண்ணை ஜிஹாத் செய்ய நாடியிருந்தான். அவளும் அல்லாஹ் வின் பாதையில் அவனது பொருத்தத்தை நாடி அறப்போரில் (ஜிஹாத்) பயணமானாள். மணித்துளிகள் சேர்ந்து நாளானது, நாட்கள் கைகோர்த்து வாரங்களாயின, வாரங்கள் சில சேர்ந்து மாதங்கள் என காலம் உருண்டோடியது. அவள் மேற்கொண்ட ஜிஹாதில் பலர் அவளோடு […]

சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும் எஸ்.எம். அமீர், நிந்தாவூர், இலங்கை. நவம்பர் மாத தொடர்ச்சி…. இனி உங்கள் மீது கோபப்படமாட்டேன் என்று கூறுவான் : அல்லாஹ்(மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி “சொர்க்கவாசிகளே!’ என்று அழைப்பான். அவர்கள் “எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மை அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளது’ என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் நீங்கள் திருப்தியடைந்தீர்களா? என்று கேட்பான். மக்கள் “எங்கள் அதிபதியே! நாங்கள் திருப்தியடையாமலிருக்க எங்களுக்கு என்ன? நீ உன் படைப்புகளில் எவருக்கும் […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ,  குண்டூர், எதனை முன்னிலைப்படுத்தி என்னிடம் உதவி தேடுங்கள் என அல்லாஹ் கூறுகிறான்? பொறுமையை கொண்டு.   அத். 2:45 பிர்அவ்னின் கூட்டத்தாரை எப்படி அழித் ததாக அல்லாஹ் கூறுகிறான்? கடலை பிளந்து மூழ்கடித்ததாக கூறுகிறான்.   குர்ஆன் : 2:50 இறுதி நாளையும், நம்பிக்கை கொண்டு நல்லறம் புரிபவரின் கூலி யாரிடம் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்? தன்னிடம் இருப்பதாக கூறுகிறான்.  குர்ஆன் :  2:62 ஷைத்தான் விரும்புவது எது என அல்லாஹ் கூறுகிறான்? மது, சூதாட்டம் மற்றும் தொழுகையை தடுப்பது.   அத். 5:91 […]

ஐயமும்!  தெளிவும்!! ஐயம் : பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவதை ஆயிஷா(ரழி) அவர்கள் தடுத்துள்ளதாக சில மவ்லவிகள் கூறுகின்றனர். மேலும் பள்ளிவாசலுக்கு வந்து ஃபர்ளு தொழ வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இல்லை என்றும் கூறுகின்றனரே, இது சரியான சட்டமா?  ஜஃபருல்லாஹ், சென்னை. தெளிவு : இந்தக் கூற்று தவறானது. “பெண்களின் செயல்களை நபி(ஸல்) அவர்கள் பார்த்தால், பனீ இஸ்ரவேலர்களின் பெண்கள் தடுக்கப்பட்டது போல, (நமது) பெண்களையும் பள்ளிக்கு வருவதை தடுப்பார்கள்” என அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்துள்ளதாக அப்துர் ரஹ்மான்(ரழி) அவர்களின் […]