2020 நவம்பர்

தலையங்கம்! வேலைவாய்ப்பு! வேலைவாய்ப்பு என்ற தலைப்பைப் படித்தவுடன் வேலை வாய்ப்பு செய்திகள் வெளியாகி இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றும். இது அதுவல்ல! தமிழகத்தில் வேலைவாய்ப்பு என்ற பெயரில் மத்திய மற்றும் தமிழக அரசும் தமிழர்களுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் இழைக்கும் அநீதி ஒன்று நீதிமன்றத்தின் கதவைத் தட்டி இருக்கிறது. ஊட்டியிலுள்ள ஆயுத தொழிற்சாலை ஒன்று 2015ஆம் ஆண்டு கெமிக்கல் புராஸசிங் பிரிவில் 140 காலி பணியிடங்களுக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கான எழுத்துத் தேர்வில் தமிழகத்திலுள்ள ஒட்டப்பிடாரம் […]

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? தொடர் – 3 அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : புரோகித மவ்லவிகளின் கல்நெஞ்சம் பாரீர்! எல்லாம் வல்ல ஏகன் மனிதனைப் படைத்த ஆரம்ப காலத்திலிருந்தே அவனுக்கென்று ஒரு சரியான-நேரான வாழ்க்கை நெறியைக் கொடுத்துள்ளான். அந்த ஒரே வாழ்க்கை நெறியை நடைமுறையில் செயல்படுத்திக்காட்ட காலத்திற்குக் காலம் தனது தூதர்களை அனுப்பி தனது கண்காணிப்பில் (52:48) செயல்பட வைத்து அந்த வாழ்க்கை நெறியை படிப்பறிவே அற்ற பாமரனும் விளங்கும் வகையில் மிகமிக எளிதாக்கியுள்ளான். […]

இஸ்லாமிய இறையியல் படைத்தவனும், படைப்பினங்களும்…. படைத்தவனை மட்டும் ஒரே இறைவனாகக் காட்டும் இஸ்லாம்! முஹிப்புல் இஸ்லாம் மறு பதிப்பு : நபிமார்கள் அனைவரும் இறையடியார்களே! நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகளே! வல்ல அல்லாஹ் இதிலிருந்து எந்த நபிக்கும் விலக்களிக்கவில்லை. இதை வல்ல அல்லாஹ் இறுதி, இறைவேதத்தில் இடம்பெறும் நபிமார்கள் பெயர்களைக் குறிப்பிட்டே கோடிட்டுக்காட்டி உள்ளான். அந்த ஏகன் அல்லாஹ்வின் நல்லருளால், முந்தய ஆய்வில் இதை இந்திய முஸ்லிம்கள் சிந்தனைக்கு கொண்டு வந்துள்ளோம். இறைவனால் இறுதி இறைத்தூதராக தெரிவு […]

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத்             தொடர் : 63 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் […]

இஸ்லாம் பார்வையில் வரவு, செலவு, சிக்கனம், சேமிப்பு… M.A. ஹனிபா அக்டோபர் தொடர்ச்சி….. பகுதி – 4 : அல்லாஹ்வே உணவளிப்பவன் : “எத்தனையோ உயிரினங்கள் அவை தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ்வே உணவளிக்கின்றான். அவன் செவியுறுபவன், நன்கு அறிந்தவன்.”   (அல்குர்ஆன்: 29:60, மேலும் பார்க்க : 11:6)ஷ எந்தவோர் உயிரினமாக இருந்தாலும் அதற்கு அல்லாஹ்வே உணவளிக்கிறான். மனிதனின் இம்மை வாழ்க்கைப் பயணம் ஒரு சாண் வயிறுக்கு உணவு தேடலிலிருந்து தான் துவங்குகிறது. “இரு […]

இயக்கவாதிகளுக்கு மீண்டும் ஓர் வேண்டுகோள்! அஹமது இப்ராஹிம், புளியங்குடி எனது அன்பான தவ்ஹீத் இயக்கங்களின் சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்! சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நமது தமிழகத்தில் உண்மையான இஸ்லாம் எதுவென்றே தெரியாமல் ஹனஃபி. ஷாஃபி என்ற இரு வழிகெட்ட மத்ஹபுகள் அத்துடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற மார்க்க விளக்கமில்லாத ஓர் அரசியல் கட்சி இவைகள் மட்டும்தான் இஸ்லாம் என நம்பி நாங்கள் வாழ்ந்து வந்தோம். ஆனால் உண்மையல்லாத இந்தப் போலியான மத்ஹபு மார்க்கத்தில் […]

சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும் எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.             செப்டம்பர் மாத தொடர்ச்சி… சுவர்க்கத்தில் கடுமையான  குளிரும் இல்லை: அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து மகிழ்ந்தவண்ணம் இருப்பார்கள். கடுமையான குளிரையும் அதில் அவர்கள் காணமாட்டார்கள். (76:13) குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்ட வேண்டிய தேவையும் இல்லை. (27:7, 28:28) வெள்ளிக்கிழமை தோறும் சுவர்க்கத்திலுள்ள  கடைத்தெரு : சுவர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுவர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது […]

துன்பங்கள் துயரங்கள் ஏற்படும்போது…. கோட்டூர் கலீல் நமக்கு ஏதாவது துன்பம் அல்லது துயரம் ஏற்படும்போது, அதாவது நம் பள்ளிவாசல்கள் கயவர்களால் இடிக்கப்பட்டது போல், NRC/ CAA போன்ற கொடூர சட்டங்கள் அராஜக அரசுகளால் கொண்டு வருவது போல், ஆதாரங்களின் அடிப்படையில் உங்களுடையதுதான். ஆனால் அவர்கள் எங்களுடையது என்று சொல்கிறார்கள். அதனால் அவர்களிடம் கொடுத்து விடுவோம் என்ற அநீதியான தீர்ப்புகள் போன்ற துன்பம், துயரம் ஏற்படும்போது, ஆர்ப்பாட்டம்  பண்ணு… போராட்டம்  பண்ணு… கடிதம்  எழுது…. ஈமெயில்  அனுப்பு… திருச்சியை […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர், ஸபவு வாசிகளுக்கு அல்லாஹ் அனுப்பிய பெருவெள்ளத்தின் பெயர் என்ன? அல்அரீம். அல்குர்ஆன்: 34:16 எவர்கள் வேதனையில் முன் நிறுத்தப்படுவார்கள் என அல்லாஹ் கூறுகிறான்? அல்லாஹ்வின் வசனங்களை தோற்கடிக்க முயற்சிப்பவர்கள். அல்குர்ஆன் : 34:38 அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான் என்று யாரை கூறுகிறான்? நிராகரிப்பர்களாகவே மரணிப்பவரை.  அல்குர்ஆன் : 47:34 அற்ப அளவும் அநீதி செய்யப்படமாட்டார்கள் என யாரை அல்லாஹ் கூறுகிறான்? எவர்கள் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை. […]

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : 1. நான் ஒரு புத்தகத்தில் படித்தேன். தஜ்ஜால் ரஷ்யாவில் ஒரு மலையில் இருப்பதாகவும் அந்த பகுதி, உயர செல்லும் வான ஊர்திகள் காணாமல் போவதாக சொல்கிறார்கள். உண்மையா? யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தை ஒடுக்கத்தான் நபி துல்கர்னைன் சைனா நாட்டில் மிக உயர்ந்த சுவர் எழுப்பினார்கள் என்ற செய்தியும் உண்மையா? சித்திக், அடியக்கமங்கலம், திருவாரூர். தெளிவு : தஜ்ஜால் ரஷ்யாவில் இருப்பதாக தாங்கள் படித்த புத்தகத்தின் பெயரைக் குறிப்பிட்டிருந்தால் கூட அதைப் பற்றி கருத்து தெரிவிக்க […]