2021 ஜுன்

தலையங்கம்! கொரோனா வைரஸ் – 2019 (COVID – 19) 2019ல் கொரோனா என்ற வைரஸால் ஏற்பட்டதாக கூறப்படும் வியாதி தான் COVID-19. கடுமையான சுவாச நோய்க் குறி இருப்பதாகக் கூறி இதற்கு SARS-CoV2 (SEVERE ACUTE RESPIRATORY SYNDROME-CORONA VIRUS2) என்ற அதிகாரப்பூர்வ பெயரை இட்டது உலக சுகாதார அமைப்பு (WHO) உலகம் முழுவதும் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கும் பயங்கர தொற்று நோய் என்று உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் எல்லோராலும் பேசும் பொருளாகிக் கொண்டிருக்கிறது. நோய் […]

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? தொடர் – 10 அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு இந்த தலைப்பில் சென்ற தொடர்களில் மார்க்கத்தை மதமாக்கி தொண்டைத் தொழிலாக்கி அது கொண்டு பிழைப்பு நடத்தும் வயிறு வளர்க்கும் புரோகிதர்கள் எத்தனை வகையினர்? இப்படி அவர்களிலும் பல பிரிவினர் ஏற்படக் காரணம் என்ன? என்பதையெல்லாம் விரிவாகப் பார்த்தோம். அவர்களில் ஆக அடிமட்டப் புரோகிதர்களான இறந்தவர்களுக்கு சமாதி கட்டி அவை கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் தர்கா முகல்லிது புரோகிதர்கள் […]

ஜமாஅத் அல்முஸ்லிமீன் ஏன்?  எதற்கு? ஹளரத் அலீ,  ஜித்தா “எவர்கள் விரும்புகிறார்களோ அவர் களை மனிதர்களுக்கு அடிபணிவதிலிருந்து விடுவித்து அல்லாஹ்வுக்கே அடிபணியும் வாழ்க்கை முறைக்கு அழைத்து வரவேண்டும். இந்தக் குறுகிய உலக வட்டத்திலிருந்து விடுவித்து விசாலமான உலகின்பால் கொண்டுவரவேண்டும். அநீதமான வாழ்க்கை முறைகளின் கொடுமைகளிலிருந்து விடுவித்து இஸ்லாம் அளிக்கும் நீதியின் நிழலுக்குள் அவர்களைக் கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர்களை (மக்களை) இறைநெறியின் பால் அழைக்க வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய சத்திய நெறியை வழங்கி வல்ல இறைவன் […]

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத் தொடர் : 70 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட்,  திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு […]

முஸ்லிமை காஃபிராக்கும் மடமையைக் கொளுத்துவோம்! இப்னு ஆதம்,   சென்னை. மறு பதிப்பு : இன்றைய காலச் சூழ்நிலையில், ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமைப் பார்த்து “காஃபிர்’ என்று சொல்லி, தான்தான் “ஒரிஜினல் முஸ்லிம்’ என்று பீற்றிக்கொண்டு நடப்பதைப் பார்க்கிறோம். இந்தச் சூழ்நிலை “தவ்ஹீத் மவ்லவிகள்’ என்று தங்களை தம்பட்டம் அடிக்கும் “மார்க்கப் பிரிவினை வாதிகள்’ வந்த பிறகு தலைவிரித்தாடுகிறது. “மத்ஹபுகள் கூடாது’ என்று சொன்ன இவர்கள் “தங்களுக்குள் குறுகிய காலத்தில் பல மத்ஹபுகளாகப் பிரிந்து, பிரித்து சாதனைப்பட்டியலில் […]

நீரால் தூய்மை செய்வது இஸ்லாம் சொன்னது. S.H.  அப்துர் ரஹ்மான் உடல் தூய்மை பற்றி பார்ப்போம்! இஸ்லாத்தில் தூய்மையாக இருப்பது அவசியம். உடை தூய்மை, உடல் தூய்மை உள்ளத்தூய்மை போன்றவை பற்றி இஸ்லாம் வலியுறுத்துகிறது. இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான். மேலும் (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்.  (அல்குர்ஆன்: 25:48) தூய்மையான நீரைக் கொண்டு அடிக்கடி ஒழு செய்து உடலை தூய்மையாக வையுங்கள்: யஹ்யா […]

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை! ஷரஹ் அலி,  உடன்குடி நிச்சயமாக மனிதன் பதற்றமிக்கவனாகப் படைக்கப்பட்டுள்ளான். அவனுக்குத் துன்பம் நேரும்போது கலக்கமடைகிறான். தனக்கு நன்மை ஏற்படும்போது (வசதி வாய்ப்புக்கள் மற்றும் செல்வம் வரும்போது மன இறுக்கம் உள்ளவனாக ஆகி மகா கஞ்சனாகி விடுகிறான். தொழுகையாளிகளைத் தவிர… (தொழுகையாளிகள் இத்தகைய தவறுகளில் இருந்து விடப்பட்டிருக்கிறார்கள்) (இறைநூல்: 70:19-22) அல்லாஹூம்ம  மஸ்துர் அவ்ராத்தினா வ ஆமின் ரவ்ஆத்தினா. இறைவா! என் மானத்தை பாதுகாப்பாயாக! வாழ்க்கையில் திடுங்கங்கள் வரா மல் பதரும் நிலை ஏற்படாத […]

குழந்தைக்கு பெயரிடுவதும் அகீகாவும்…. M.A.  ஹனிபா பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்காக வும், மார்க்க ரீதியாக நிறைவேற்ற வேண்டிய செயலைச் சார்ந்தது. “அகீகா” என்பதா கும். குழந்தை பிறந்த ஏழாம் நாளில், அந்தக் குழந்தைக்காக ஓர் ஆடு அறுக்கப்பட்டு, தலைமுடி மழிக்கப்பட வேண்டும். அன்றே குழந்தைக்கு பெயரிட வேண்டும். இதுதான் “அகீகா” கொடுப்பதன் முறை! இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “பையன் (பிறந்த) உடன் “அகீகா” (கொடுக்கப்பட்டால்) உண்டு. எனவே, அவனுக்காக (ஆடு அறுத்து) “குர்பானி” கொடுங்கள். அவன் (தலைமுடி களைந்து) […]

ஹதீஃத் பெட்டகம்… Dr. A.  முஹம்மது அலி, அல்லாஹ்  தெளிவுபடுத்துகிறான்: நபியே! மாதவிடாய் பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகிறார்கள், நீர் கூறும்: “அது ஓர் (இயற்கையான) உபாதையாகும். ஆகவே, மாதவிடாயின்போது பெண்களை விட்டும் விலகியிருங்கள், அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள், அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படிக் கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள், பாவங்களை விட்டு மீள்பவர்களை நிச்சய மாக அல்லாஹ் நேசிக்கிறான், இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கிறான். (அல்குர்ஆன்: 2:222) மாதவிடாய் ஒரு இயற்கையான […]

திருமண அவலங்கள்… (பகுதி-3) Y. முகமது ஹனீப், திருச்சி அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான் : படாடோபமான ஆடம்பரத் திருமணங்களை நடத்தி நம் சமூகம் எவ்வாறெல்லாம் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது பற்றி சென்ற ஆக்கங்களில் பார்த்தோம். இப்போது இன்னும் சில திருமண அவலங்கள் பற்றியதான நடைமுறைகளை பார்ப்போம். பெண் பார்த்து முடிவு செய்தல் என்பது நபிகளாரின் காலத்தில் சாதாரணமான ஒரு விஷயமாகவே இருந்து வந்தது. ஒரு சஹாபி “நான் ஒரு அன்சாரிப் பெண்ணை மணக்கப் போகிறேன்”, என்று நபி(ஸல்) அவர்களிடம் […]