2021 ஜுலை

தலையங்கம்! தேர்வு இல்லை!  தேர்ச்சி உண்டு!! கொரோனா ஊரடங்கால் 2019-2020 கல்வி ஆண்டுகளில் தேர்வு நடத்தாமல் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருமே தேர்ச்சி பெறுவர் என அரசு அறிவித்தது. அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த அனைவருமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். தேனி மாவட்டம் சின்னமனூர் என்ற ஊரில் தனியார் பள்ளி ஒன்றில் 2019-2020ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு படித்த ஸ்ரீதர் என்பவர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. ஸ்ரீதரின் தந்தை சுரேஷ் குமார் பள்ளி […]

இறந்தவர்களுக்கு நன்மை சேருமா? கு. நிஜாமுத்தீன் முஸ்லிம்களில் மரணித்தவருக்கு நன்மை சேர்க்கிறோம் என்ற பெயரில் அனேக சடங்குகள் நடப்பதை நாம் காண்கிறோம். இது சம்மந்தமாக இருதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இறந்தவருக்காக எந்த நன்மையான காரியத்தை செய்தாலும் அதன் நன்மை இறந்தவருக்குப் போய்விடும் என்பதாகும். தர்மம் செய்தல், பாத்திஹா மற்றும் குர்ஆன் ஓதுதல் இதில் அடங்கும். இது முதல் சாராரின் கூற்று. நமது விருப்பப்படியயல்லாம் இறந்தவர்களுக்கு நன்மையை செய்ய முடியாது. மார்க்கம் ஒரு சில வி­யங்களையே அனுமதிக்கிறது என்பது […]

நாத்திகர்களுக்கு ஒரு சவால்! M.P. ரபீக் அஹ்மத் திரு குர்ஆனுக்கு நிகராக, திருகுர் ஆனைப் போன்ற ஒரு நூலை இதுவரை இந்த உலகம் உருவாக்கவில்லை. அது இலக்கியமா, காவியமா, வரலாறா, வெறும் போதனைகளா என்றால் இல்லை. அது வெறும் பிரார்த்தனைகளின் கோர்வையா, ஜபமா, மந்திரமா என்றால் இல்லை. அது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறா என்றால் அதுவும் இல்லை. அது கடந்த காலத்தின் காலக் கண்ணாடியா என்றால் இல்லை. அது வருங்காலத்தைப் பற்றிச் சொல்லும் பஞ்சாங்கமா […]

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத் தொடர் : 71 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட்,  திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு […]

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? தொடர் – 11 அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு மத்ஹபுகளை நியாயப்படுத்த, மார்க்கமாக்க மத்ஹபு முகல்லிது புரோகிதர்கள், ஏகன் இறைவனின் இறுதி வழிகாட்டியான அல்குர்ஆனின் வசனங்களை எப்படி எல்லாம் திரித்து வளைத்து மறைத்து வருகின்றனர் என்று சென்ற தொடரில் பார்த்தோம். அதே வரிசையில் அவர்களின் இருட்டடிப்புக்கு ஆளாகும் இன்னும் சில அல்குர்ஆன் வசனங்களை இத்தொடரில் பார்ப்போம். அல்குர்ஆன் அன்னிஸா 4:59ம் வசனம் வருமாறு : “நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள், […]

“ஸ்பீடு’ – வேகம்  – இன்ஜினீயர் மறு பதிப்பு “எந்த மவ்லவிகளானாலும், அல்லாஹ்வும் அவன் தூதர்(ஸல்) அவர்களும் கூறிய உண்மையான நேர்வழியைக் காட்டமாட்டார்கள்” என்று “அந்நஜாத்’ மூலம் சொல்லிக்காட்டிக் கொண்டே இருக்கிறோம். இவ்வுண்மையை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் “அல்லாஹ் அர்ஷ´ன் மீதா? அல்லது ஆகாயத்திலா?” என்ற ஒரு 21ம் நூற்றாண்டுக்கு மிகவும் தேவையான ஒரு கேள்வியை அவர்களாகவே கேட்டுக் கொண்டு பதிலையும் அவர்களாகவே கொடுத்துக் கொண்டுள்ளார்கள். இப்படி ஒரு அறிவுமிக்க ஒரு கேள்வியை எவருமே நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள். […]

ஹதீஃத் பெட்டகம்… Dr. A.  முஹம்மது அலி, ஜுன் மாத தொடர்ச்சி : அனஸ் பின் மாலிக்(ரழி) அவர்கள் விளக்குகிறார்கள்: யூதர்கள் மாதவிடாய் பெண்களுடன் உணவு உண்ணமாட்டார்கள். அவர்களது வீட்டில் தங்க வைக்க மாட்டார்கள். எனவே நபித்தோழர்கள் ரசூல்(ஸல்) அவர்களிடம் மாதவிடாய் பற்றி வினவினார்கள். அல்லாஹ் அருளிய வஹீ (இறைச் செய்தி)யை 2:222 ஓதிக் காட்டினார்கள். இதற்கு விளக்கமாக, மாதவிடாய் பெண்களுடன் உடலுறவைத் தவிர அனைத்தும் அனுமதிக்கப்பட்டது எனத் தெரிவித்தார்கள். இதனைச் செவியுற்ற யூதர்கள், இம் மனிதர் […]

மனிதனே உனக்கு மறு உலக வாழ்வு உண்டா? S.H.  அப்துர் ரஹ்மான் “இவ்வுலக வாழ்வு மட்டுமே மனிதனுக்கு உண்டு. மறு உலக வாழ்க்கை என்பது கற்பனையைத் தவிர வேறில்லை” என்றே பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். …”(இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்திருப்பதைத் தவிர (அப்பால் மறு உலக வாழ்வு என்று) ஒன்றும் இல்லை, நாம் (மரணத்திற்குப் பின் மறுபடியும்) எழுப்பப்பட மாட்டோம்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். (இறைநூல்: 6:29) இவ்வுலக வாழ்க்கையின் முடிவு மரணமே, இதை யாரும் மறுக்க முடியாது. […]

இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை! அபூ ஃபாத்திமா மறு பதிப்பு : “(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத் தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோ ருக்கு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீயோ ருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும், நபிமார்களை அனுப்பி வைத்தான், அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் முரண்பட்ட கருத்துக்களை தீர்த்து வைப்பதற்காக, அவர்களுடன் உண்மையுடைய இறைநெறிநூலை இறக்கி வைத்தான், எனினும் அந்நெறிநூல் கொடுக்கப்பட்டவர்கள், தெளிவான ஆதாரங்களும், அத்தாட்சிகளும் வந்தபின்னரும், தம்மி டையே உண்டான பொறாமை, பகை, காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் […]

அய்யாமுல் ஜாஹிலிய்யா அறியாமைக் காலத்து மடமைத்தனம்… – ABA மனித சமுதாயத்தை சீர்திருத்தும் உயர்ந்த எண்ணங்களோடு இலட்சியங்களோடு, இன்றைய உலகிலே பல்வேறு இயக்கங்கள் பாடுபடுவதாக கூறுகின்றன. அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம். இதிலே பகுத்தறிவு வாதம் பேசுவோர்களையும் சேர்த்துக்கொள்ளலாம். உலக மக்கள் அனைவரும் “ஒரே கடவுள்’ என்ற கொள்கையின் கீழ் வருவது பகுத்தறிவா? அல்லது அவரவர், மொழி ரீதியாக, இன ரீதியாக தத்தமது இஷ்டத்திற்கு வாழ்வை அமைத்துக் கொள்வது பகுத்தறிவா? என்ற இரண்டு கேள்விகளை மக்கள் முன் […]

விமர்சனமும்! விளக்கமும்!! – ABA விமர்சனம் : அந்நஜாத் ஜூன் 21 இதழ். பக்கம் 13ல் தப்லீக் மர்கஸிற்கு விவாதத்திற்கு வர அழைப்பு விடுத்து அனுப்பிய கடிதம் கண்டேன். அந்நஜாத்திற்கு தப்லீக் மீது இவ்வளவு வன்மம் ஏன் என்பது எனக்கு புரியவில்லை. 1985க்கு முன் ஆசிரியர் அபூ அப்துல்லாஹ் அவர்களும் அந்த பணியை செய்தவர்கள்தான் அதன்பிறகு தப்லீக் ஜமாஅத்திற்கு மட்டுமல்ல, முக்கியமான அனைத்து மதரஸாக்களுக்கும் கடிதம் எழுதினார்கள். எந்த பயனும் இல்லை என்று தெரிந்த பின் அதனை மக்கள் […]

குர்பானி கொடுக்க ஆள், இட, பண வசதி குறைவா? உங்களுக்கென்றே இந்த ஏற்பாடு! குர்பானி கொடுக்கக் கடமைப்பட்டவர்கள் அதை நிறைவேற்ற விரும்பினாலும், பெருநகர்களில் ஆள், இடம் தோதில்லாமல் தயங்குகிறார்கள். வெளிநாடுகளிலுள்ளவர்களுக்கு, அங்கு குர்பானி மிருகங்களின் அதிக விலை உயர்வு பெரும் தயக்கத்தைத் தருகிறது. அவர்களுக் காகவே இந்த ஏற்பாடு. ஆடு ஒன்றுக்கு ரூ.11,000/- அல்லது மாடு ஒரு பங்குக்கு ரூ.2600/- அனுப்பித் தந்தால், உங்களுக்குரிய குர்பானியை இங்கு தமிழகத்தில் நிறைவேற்றித் தருகிறோம். இன்ஷா அல்லாஹ். குர்பானி வகைக்கு […]