2022 ஜனவரி

தலையங்கம்! கேரளா தரும் படிப்பினை! அகில இந்திய அளவில் முஸ்லிம்களின் மனம் கவராத இ.யூ.மு.லீக் கேரளாவில் மட்டும் கொடி கட்டிப் பறக்கின்றது. என்ன காரணம்? என்று சிறிது ஆராய்வோம். தமிழ கத்திலும் கேரளாவைப் போல் இ.யூ.மு.லீக் கொடி கட்டிப் பறந்திருக்கும். ஆனால் இங்குள்ள தாய்ச் சபைக்காரர்கள் 1986களில் இஸ்லாமிய மார்க்க விழிப்புணர்வு ஏற்பட்ட நேரத்தில் கட்சிப் பணியை விட்டுவிட்டு தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்களில் அதோ வருகிறான் நஜாத்காரன், இதோ இவன் தொப்பி இல்லாமல் தொழுகிறான், விடாதே பிடி […]

இணை வைக்கும் முஸ்லிம்கள்! அபூ ஹனிபா, புளியங்குடி இணை வைக்கும் முஸ்லிம்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு மனம் வருத்தப்பட்டாலும் உண்மையை சொல் லித்தான் ஆகவேண்டும். ஏன் என்றால் இன்றைக்கு ஏதோ சில முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அல்லது மாற்று மத சகோதர, சகோதரிகள் இணைவைக்கும் செயல்களில் ஈடுபட்டு அதைப் பற்றி எச்சரிக்கை செய்யாமல், கண்டும் காணாமல் போனால், நாளை நமது சந்ததிகளும் இணைவைக்கும் செயல் களில் ஈடுபடமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் கொடுக்க முடியும்? இன்றைக்கு பக்கத்து […]

செல்வந்தர்களே! உங்களைத்தான்!! இப்னு ஹத்தாது பேராசை பெரும் ஆபத்தே! v  காசேதான் கடவுளப்பா! கடவுளுக்கும் இது தெரியுமப்பா!! v  பணம் பந்தியிலே! குணம் குப்பையிலே!! இப்படி வீணர்களான–பொய்யர்களான கவிஞர்களும் கவிபாடும் அளவுக்கு மக்கள் பணப் பைத்தியம் பிடித்தவர்களாக அலைகின்றனர். மனிதனைப் படைத்துப் பரிபாலிக்கும் ஏகன் இறைவனும், மனிதனின் பணப் பித்தை இவ்வாறு விவரிக்கிறான். 1.    பணத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (இறைவனை விட்டும்) பராக்காக்கி விட்டது. 2.    நீங்கள் புதை குழிகளைச் சந்திக்கும் வரை. 3.    அவ்வாறில்லை, […]

அல்லாஹ்வின் தூதரை (அவ)மதிப்பது யார்? K.S.H. அபூ அப்தில்லாஹ் (ஜித்தா) நபி(ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம். கண்ணியப்படுத்துகின்றோம் என்று கூறியே, “பித்அத்‘ஆன மீலாது, மெளலூது போன்ற மார்க்க முரணான செயல்கள் புரோகித ஆலிம்களால் அரங்கேற்றப்படுகின்றன. நபி (ஸல்) அவர்கள் மேல் கொண்ட முஹப்பத் (பிரியம்)தால் “பரக்கத்‘(அபிவிருத்தி), “­பா அத்‘(பரிந்துரை) கிடைப்பதற்காகவே மெளலூது ராத்தீபுகள் எனப்படும்  ஷிர்க்கான அரபி பஜனைப் பாடல்கள் இல்லங் கள் தோறும் இசைக்கப்படுகின்றன. இதுபோன்ற மீலாது, மெளலூதுகள் மார்க்கத்தில் இல்லாத “பித்அத்‘கள் என விளங்கிக் கொண்டவர்கள் கூட, “ஹஜ்ரத்‘ […]

இறைவனை முறையாக அஞ்சுவோர் அறிஞர்களே! அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள்தான்.  (அல்குர்ஆன் 35:28) அனஸ் பின் மாலிக்(ரழி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதரே! “நல்லதை ஏவு வதையும், தீமையை தடுப்பதையும் எப்போது நாங்கள் நிறுத்த வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு முன் வந்தவர் களிடையே தோன்றியவை உங்களிடையே தோன்றும் போது நீங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள். “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு முன் வந்தவர்களிடம் தோன்றியவை என்ன?”  என்று  கேட்டேன். அதற்கு, […]

என்று மாறும் இந்த இழிநிலை? அபூ உஸ்மான்,   சென்னை எல்லாம் வல்ல அல்லாஹ் சுப்ஹானவத ஆலா குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்: “மனிதர்களுக்காக தோற்றுவிக்கப் பட்ட (சமுதாயத்தில்)சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள்; (ஏனெனில்) நீங் கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை கொள்கிறீர்கள்…”  அல்குர்ஆன் 3:110 நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் : உங்களில் எவரும் ஒரு தீமையைக் கண் டால் தமது கையால் அதைத் தடுக்கட்டும். அது இயலாவிட்டால் தமது நாவினால் […]

அறிந்து கொள்வோம்!  மர்யம்பீ,  குண்டூர் 1.   அல்லாஹ்வால் பெயர் சூட்டப்பட்ட இரண்டு நபிமார்கள் யார்? யஹ்யா(அலை) 19:7, ஈஸா(அலை) 3:45 2.  வயது முதிர்ந்த நிலையில் குழந்தை பேறுக்கான நன்மாராயம் கூறப்பட்ட இருவர் யார்? இப்ராஹீம் நபி அவர்களின் மனைவி (11:72) ஜக்கரியா(அலை) அவர்கள். ( 19:8) 3.  பத்ரு போரில் அல்லாஹ் எத்தனை வானவர்களை இறக்கி உதவி செய்தான்? மூவாயிரம் வானவர்கள். (3:124) 4.  அல்லாஹ் காரூனையும், வீட்டையும் எவ்வாறு அழித்தான்? பூமியில் விழுங்கச் செய்து […]

நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்,   இலங்கை. டிசம்பர் 2021 தொடர்ச்சி… “தனது இனத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சியின் முன்மாதிரியாக எறும்பை அல்லாஹ் குர்ஆனில் (அந்நம்ல்) “எறும்பு” எனும் அத்தியாயத்தில் சொல்லிக் காட்டுகின்றான்”. (27:17-19) நபி சுலைமான்(அலை) அவர்களுக்காக ஜின்கள், மனிதர்கள், குதிரைகள், பறவைகள் எனப் பல்லினங்களின் படை கள் ஒன்று திரட்டப்பட்டனர். அவர்கள் அனைவரும் அணி வகுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் எறும்புகள் கூட்டமாக வாழும் ஓர் ஓடையைக் கடந்து சென்ற போது ஓர் எறும்பு சுலைமான் […]

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை! எம்.­ரஹ் அலி உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். (படைத்த) அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். அந்த ஒரே இறைவனின் பெயரால்… ஏக இறைவனின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக! யார் நமது நேர்வழியில் செல்ல முயற்சி செய்கிறாரோ அப்படிப்பட்டவரை நம்முடைய நேர்வழியில் நடத்துவோம்.  (இறைநூல் 29:69) உங்கள் மீது சாந்தி உண்டாவதாக! உங்கள் இறைவன் கருணை புரிவதைத் தனக்குத் தானே கடமையாக்கிக் கொண்டான். […]

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : செல்வந்தர்கள் தங்கள் வருமானத்தை மேலும், மேலும் பெருக்க, கட்டிடங்களாக வாங்கி வாடகைக்கு விடுகின்றனர். அப்படி கோடிக்கணக்கான ரூபாய்கள் பெருமதிக்கு கட்டிடங்கள் இருந்தாலும், அவற்றில் லட்சக்கணக்கான ரூபாய்கள் வாடகையாகப் பெற்றாலும், வருடம் முடிவதற்குள் வாடகையாகப் பெற்ற பணத்திற்கும், புதிய கட்டிடங்களை வாங்கி விடுகின்றனர். ஜகாத் பற்றி அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. கேட்டாலும் சொத்துக்கள் இருக்கின்ற னவே அல்லாமல், ஜகாத் கொடுக்க பணமாக இல்லை என்று தங்களின் செயலை நியாயப்படுத்துகின்றனர். குர்ஆன், ஹதீத் படி இது […]