2022 டிசம்பர்

மெளலூது ஓதுவது சரியா? ஸ்.எம்.ரா´தா பின்த் ஹமீது நம்முடைய சமுதாயத்தில் யாருக்கும் அரபி மாதங்கள் தெரிகின்றதோ இல்லையோ. ஆனால் கண்டிப்பாக இந்த மாதங்கள் தெரிகிறது. அதாவது முஹியித்தீன் ஆண்டவர் மாதம், நாகூர் ஆண்டவர் மாதம், மெளலிது மாதம் இப்படி வகைவகையாக தங்களுக்குத் தாங்களே இவ்வாறு பிரித்துக்கொண்டு இஸ்லாத்தில் இல்லாத காரியத்தை செய்து வருகின்றனர். பொதுவாகவே ஒரு காரியம் ஒரு வணக்கமாக கருதப்பட வேண்டுமானால் அந்த காரியம் அல்லாஹ்வாலோ அல்லது நபி(ஸல்) அவர்களாலோ கற்றுத்தரப்பட்டிருக்க வேண்டும்; அல்லது நபியின் […]

அழைப்புப் பணியின் அவசர அவசியம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. அல்லாஹ் நபிமார்களிடம் நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் வழங்கி (அதன்) பின்னர் உங்களிடம் உள்ள (வேதத்)தை உண்மையாக்கும் (இன்னு மொரு இறைத்) தூதர் ஒருவர் உங்களிடம் வந்தால், அவரின் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவருக்கு உதவி புரிய வேண்டும் என்று உறுதிமொழி பெற்றதை எண்ணிப் பாருங்கள். (அப்போது) இதன் பேரில் நீங்கள் எனது ஒப்பந்தத்தை ஏற்று உறுதிமொழிகின்றீர்களா? என்று கேட்டான். அதற்கு அவர்கள் (அனைவருமே) […]

ஓதுவோம் வழிகாட்டும் இறைநூலை! நாமறிந்த மொழிகளில்! அமீத் அலி, சேலம். எதை எதையோ வேதமென (நெறி நூலான) சுமந்து திரியும் மானுட உறவுகள் மத்தியில் சத்திய நெறிநூல் அல்குர்ஆன் பொக்கி­மாய் உன்னிடம் இருந்தும், ஓதத் தெரியாதே, நேரமில்லையே என தன்னையே ஏமாற்றிக் கொண்டு, அடுத்த நொடி அல்லாஹ் நாடிவிட்டால், உன் மரணம் கரணம் தப்பாத விதியாகி விடும் என்பதையும் எண்ணி அஞ்சாமல் தைரியமாய், மார்க்கத்தில் சில அறிந்ததே போதுமே! நான் முஸ்லிம் என மார்தட்டி வீதிகளில் திரியும் […]

சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும் அபூ அஸீம், இலங்கை நவம்பர் மாத தொடர்ச்சி… எனவே அவர்கள் எத்தகையோர் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம்) கூறப்பெற்றால், அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும், அன்றியும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் “பொறுமையுடன்’ சகித்துக் கொள்வோராகவும், தொழுகையைச் சரிவரக் கடைப்பிடிப்போராகவும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (இறைவனின் பாதையில்) செலவு செய்வோராகவும் இருப்பார்கள். அல்குர்ஆன் 22:35 எனவே, “பொறுமையுள்ள’ ஆண்களு(க்கு)ம், (“பொறுமையுள்ள’) பெண்களு(க்கு)ம் அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக் கின்றான். அல்குர்ஆன் 33:35 பின்னர் […]

வேதமில்லாத சமுதாயம்! M.A.ஹனிஃபா, பொட்டல்புதூர் இறைவனின் இறுதி இறை நெறி நூலாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இறைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும் திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித் தரமாகக் கூறுகின்றான். இந்தக் அல்குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லா தவரிடமிருந்து வந்திருந்தால், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன் 4:82) இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கவனிடமிருந்து அருளப்பட்டது. (குர்ஆன்:41:42) ஆனாலும், திருக்குர்ஆனின் […]

மிகக் கடுமையான எச்சரிக்கை! K.M.H. அபூ அப்தில்லாஹ் ஆதிபிதா ஆதம்(அலை) அவர்களுக்கும், ஷைத்தானாகிய இப்லீஸுக்கும் ஏற்பட்ட மோதலில் ஷைத்தான் அல்லாஹ்வால் சபிக்கப்பட்டான்; நரகத்திற்குரியவனா வான். அதனால் அவன் ஆதத்தின் மீதும், ஆதத்தின் சந்ததிகள் மீதும் வற்றாத வன்நெஞ்சம் கொண்டான். ஆதத்தையும், ஆதத்தின் சந்த திகளையும் வழிகெடுத்து தன்னோடு நரகில் கொண்டு சேர்க்க சபதம் ஏற்று அல்லாஹ் விடம் உலகம் அழியும் வரை அவகாசம் கேட்டான். (பார்க்க 7:11-25) அல்லாஹ்வும் அவன் கேட்ட இறுதி நாள் வரை சாகா வரத்தை […]

 என்று தெளியுமோ? மார்க்க அறிஞர்களின் மதிமயக்கம்? இஸ்லாமிய மார்க்கம் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் மார்க்கம். அல்லாஹ்வுக்கே சொந்தமான மார்க்கம். அல்லாஹ்வின் அதிகாரத்திலுள்ள மார்க்கம். அதில் மனித தலையீட்டிற்கு அணுவின் முனை அளவும் அனுமதி இல்லை. 39:3,5:3,3:19,3:85, 42:21, 49:16, 9:31, 7:3, 33:66-68, 30:32, 6:159, 22:78, 41:33, 18:102-106. இன்னும் இவை போன்ற எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்கள் இதை உண்மைப்படுத்தும். ஆயிரம் விளக்கங்கள் கூறினாலும் அதை மனித அறிவு ஏற்றுக் கொண்டாலும் அதைக்கொண்டு அல்லாஹ்வின் ஒரேயயாரு […]