2024 ஜூன்

புத்தாண்டின் பத்தாம் நாள் (ஆஷீரா) அபூ முஹம்மத் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷீரா என்று கூறப்படுகின்றது. அந்த நாளை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப் பின்னணியை நாம் காண்போம். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷீரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அதுபற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவியபோது “மூஸா(அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரியிடமிருந்து (பிர்அவ்ன்) அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும்”  என்று யூதர்கள் காரணம் கூறினர். உங்களை […]

தலையங்கம் : தியாகம் (குர்பானி) ஏன்? “எனது தொழுகையும், எனது தியாகமும், என் வாழ்வும், என் மரணமும் அல்லாஹ்வுக்கே  உரியன”    (அல்குர்ஆன் 6:162) மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறை நூலின் வசனம் நம்முடைய செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்யக்கூடியவையாக இருக்கவேண்டும் என்பதை நினைவுபடுத்துவதாகும். அப்பொழுதுதான் அல்லாஹ்வின் பொருத்தத்தைப்  பெறமுடியும். மேற்கண்ட இறைநூலின் வாசகத்திற்கு ஏற்ப பல தியாகங்களை செயலின் மூலம் செய்து அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்றவர்கள்தான் நபி இப்ராஹீம்(அலை) அவர்களது துணைவியார், மற்றும் அவர்களது மகன் […]

அல்குர்ஆனுக்கு மொழியாக்கம் – விளக்கம் – சுயவிளக்கம் அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : மே 2024  மாத தொடர்ச்சி….. பிக்ஹு சட்டங்களை முழுமையாக மண்டையில் ஏற்றிக்கொண்டு வெளிவருவதால், குர்ஆன் மொழி பெயர்ப்புகளும் அவரவர்கள் மத்ஹபு, தரீக்கா, இயக்கக் கொள்கைகளை நிலை நாட்டும் நோக்கில் அமைவதிலும் வியப்பில்லை. தர்கா–சமாதி வழிபாடுகளை மார்க்கமாக்கும் பரேல்வி கொள்கையுடைய மதகுருமார்கள் “மின்தூனில்லாஹ்‘ என்று குர்ஆனில் வரும் இடங்கள் அனைத்திலும் “அல்லாஹ் அல்லாதவைகள்‘ என மொழியாக்கம் செய்துள்ளனர். அஃறிணைப் பொருள்களான கல், சிலைகள், […]

அலைபாயும் மனதை (நப்ஸை) அடக்க முடியுமா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் மனிதனின் மனதில் எது பதிந்து நிற்கிறதோ, அல்லது எது அவனுடைய சிந்தனையை ஆக்கிரமித்திருக்கிறதோ  அதுவே  அலைபாயும்  மனதாக  இருக்கிறது. இத்தகைய அலைபாயும் மனதிற்கு எடுத்துக்காட்டாக இறைவன் தன் வழிகாட்டும் நூலில் (குர்ஆனில்) இரண்டு முக்கியமான சம்பவத்தையும், மற்றும் பல்வேறான நிகழ்ச்சிகளையும் கூறியுள்ளான். அவை ஒன்று: ஆதமுடைய இரு மகன்களின் வரலாறு.   (பார்க்க.  அல்குர்ஆன் 5:27-31) மற்றொன்று : நபி யூசுப்(அலை) அவர்களின் வரலாறு. (பார்க்க. […]

மனிதனை நரகத்திற்கு கொண்டு செல்லும் மூன்று தன்மைகள்! அஹமது இப்ராகீம்,  புளியங்குடி 1. ஆணவம்  2. மோசடி 3. கடன் ஆகிய இந்த மூன்றும் நீங்கிய நிலையில் ஒரு மனிதரின் உயிர் பிரிந்தால் அவர் சுவனத்தில் இருப்பார்! என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஸவ்பான்(ரழி) அவர்கள், (ஆதார நூல்கள் : திர்மிதி : 1497, அஹ்மத்: 2356) அடுத்ததாக ஆணவத்திற்கு அடையாளங்களாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்  கூறியது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) அவர்கள்  கூறியதாவது […]

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும்! அந்நாட்களின்  சிறப்பும்!! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்,  இலங்கை. விடியற்காலையின்  மீது  சத்தியமாக!   (89:1) “ஃபஜ்ர்‘ எனும் சொல்லைப் பொறுத்தவரையில் அது அனைவருக்கும் தெரிந்ததுதான் அதிகாலை, விடியற்காலை என்பதுதான் மஸ்ரூக்(ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப் பட்டுள்ளது. “விடியற்காலை‘ எனும் இந்த வார்த்தை (துல்ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளின்) அதிகாலையை மட்டும் குறிக்கும் அதுதான் பத்து நாட்களின் இறுதி நாள் ஆகும். இதுதான் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள், இப்னு ஸுபைர்(ரழி) அவர்கள், மற்றும் […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ,  குண்டூர் 1. கவ்ஸர் என்னும் நீர்தடாகத்தின் அளவு என்ன? ஒரு  மாத  பயண  தூரம்.   (புகாரி: 6579) 2. எந்த நேரத் தொழுகையை தொழுவதால் இரு மடங்கு நன்மை கிடைக்கும்? அஸர்  தொழுகை.   (முஸ்லிம் : 1510) 3. அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு இறந்தோரை உயிர்ப்பித்த நபி யார்? ஈஸா(அலை).   (அல்குர்ஆன் 5:110) 4. நாம் எதனை நினைவு கூறவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? மரணம்.   […]

ஹிஜ்ரி கமிட்டியினரின் முன்பின்னான முரண்பாடுகள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்,  இலங்கை. உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்.  (அல்குர்ஆன் 2:185)  திருக்குர்ஆன் மூலம் தமிழாக்கம், விளக்கவுரை, மெளதூதி(ரஹ்) இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், 1989-1993, வெளியீடு) உங்களில் அம்மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185) “திருக்குர்ஆன் விரிவுரை தஃப்சீர் இப்னு கஸீர்”, சென்னை ரஹ்மத் அறக்கட்டளை 2010, ஜூலை வெளியீடு) உங்களில் எவர் அம்மாதத்தை பெறுகிறாரோ அவர் அதில் நோன்பு […]

அறிவுபூர்வமான  வாதமும் அல்லாஹ்வின் பார்வையில் அறிவற்ற வாதமே! S. ராசிக்,  திருச்சி அல்லாஹ்வின் நெறிநூலில் மனித அறிவு சரிகாணாவிட்டாலும் இறையை–மறையை நம்பவேண்டும். அதுவே இறை, (ஈமானிய) நம்பிக்கை  என்கிறது  மார்க்கம். முதலில் அறிவுபூர்வமான வாதம் வைத்தவன் இப்லீஸ் என்கிற ஷைத்தான் மண்ணை விட நெருப்பே உயர்ந்தது. தாழ்ந்த ஒன்றுக்கு உயர்ந்த ஒன்று தலை வணங்க கூடாது என்று அறிவுபூர்வமாக சிந்தித்தான். வழிகேட்டில் விழுந்தான். தன் அறிவு எதை சொல்கிறதோ அது தான் மார்க்கம் என்பவர்கள் இப்லீஸின் ஏஜெண்டுகள் […]

அதிகபட்சம் முப்பது நாட்கள்தான் எனும்போது பதினாறு எப்படி வரும்? எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்,  இலங்கை. “பிறையுடைய ஒரு மாதம் என்பது அதிகபட்சம் முப்பது நாட்கள் தான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது அதில் பாதியளவு, பகுதியளவு, பெளர்ணமி பதினாறாக  எப்படி  வரும்?’’ அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மாதம் என்பது சில வேளை (குறைந்த பட்சம்) 29 நாட்களைக் கொண்டதாகவும் சில வேளை (கூடியபட்சம்) 30 நாட்களைக் கொண்டதாகவும் இருக்கும் என்று; (அறிவிப்பவர்கள் அபூஹுரைரா(ரழி), இப்னு உமர்(ரழி), […]

சமூகம் சீர்கெட  அலட்சியம் காரணமா? அறியாமை காரணமா? A.N. Trichy. பொதுவாக ஒவ்வொரு சமூகத்திலும் சீர்கேடு முதலில் சில தனி மனிதர்களிலிருந்தே தொடங்குகிறது. அதுவே அந்த சமூகம் உயிர் துடிப்புடன் இருந்தால் சீரழிந்து போன அந்த தனி மனிதனை அடக்கி வைக்க முடியும். அதனால் சமூகம் முழுவதும் ஒட்டுமொத்தமாகச் சீரழிந்து போகாமல் பாதுகாக்கப்படும். ஆனால் தவறு செய்யும் தனி மனித விசயத்தில் அலட்சியமாக இருந்தால் அந்த சீர்கேடு மெல்ல மெல்ல சமூகம் முழுவதும் பரவும். இதற்கு உதாரணம், […]

ஐயமும்!  தெளிவும்!! ஐயம் : ஷைத்தானின் நண்பர்கள் (நெருக் கமானவர்கள்) யார்? ஷைத்தானின் நண்பர்களை (நெருக்கமானவர்களை)  அடையாளம்  காணமுடியுமா? தெளிவு : இந்த கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்கு முன்பு ஷைத்தான் என்றால் யார்? அவன் என்ன செய்தான்? என்ன செய்வான் என்பதை தெரிந்துக் கொண்டுவிட்டால், ஷைத்தானுடைய நண்பர்கள் (நெருக்கமானவர்கள்) யார் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஷைத்தான்  என்பவன்  யார்? பொதுவாக ஷைத்தான் என்ற சொல் இறைவனால் சபிக்கப்பட்ட / வெறுக்கப்பட்ட இப்லீஸ் என்பவனை குறிக்கும். […]

அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2024  மே மாத  தொடர்ச்சி… பன்னிரெண்டு நீர் ஊற்றுக்கள் கொடுக்கப்பட்டவர்களான இஸ்ரவேலர்கள் எனும் யூதர்கள்: மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடிதண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு: “உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!” என்று வஹீ அறிவித்தோம். (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கிவந்தன; அவர்களில் […]

முஸ்லிம்–முஸ்லிமீன்–முஸ்லிமன்–முஸ்லிமத்தின்– முஸ்லிமத்தன்–முஸ்லிமைனி என்பது குறித்து… எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்,  இலங்கை. 2024-மே மாத  தொடர்ச்சி… நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான  நற்கூலியையும்  சித்தப்படுத்தியிருக்கின்றான்: 1. நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும், 2. நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், 3. இறை வழிபாடுள்ள ஆண்களும், பெண்களும், 4. உண்மையே பேசும்  ஆண்களும்,  பெண்களும்,  5. பொறுமையுள்ள  ஆண்களும்,  பெண்களும், 6. (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும், 7. தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், 8. […]