அந்நஜாத் –  ஜூலை 2019 ஷவ்வால்  – துல்கஃதா 1440 தலையங்கம்! அல்லாஹ் முஸ்லிம்களின் இறைவனா? அமல்களின் சிறப்புகள்! ஹதீஃதில் கூறப்படும் உதாரணங்கள்! 1 உருவப்படம் வரையலாமா?   (பகுதி-3) ஹஜ் பெருநாள் சிந்தனைகள்- தியாகத் திருநாள்… ஆதிகாலவேதங்களும், இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்… பெரும்பாண்மை… அறிந்து கொள்வோம்… தலையங்கம்!    நமது இரயில்வே! ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட இரயில்வே மேப், இரயில்வே டைம்டேபிள் ஆகியவைகளின் மாஸ்டர் காப்பி தொலைந்து போய், ரெஃபர் செய்வதற்கு வேறு நகல் இல்லாவிட்டால், ஆங்காங்கே ரயில்கள் மோதிக் […]

{ 0 comments }

அல்லாஹ் முஸ்லிம்களின் இறைவனா? ஜி.நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறெவரும், எதுவும் இல்லை! என்ற கொள்கையை ஏற்று அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தொகை உலகில் இருநூறு கோடிகளுக்கும் மேல், இந்த கொள்கையை மனதால் ஏற்று தன் நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டாலும் இந்த கொள்கை சரியானதுதான் என்றுகருதுபவர் களும் கோடிக்கணக்கில் உள்ளனர். “வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறெவரும், எதுவுமில்லை” என்ற கொள்கையை நாம் அரபு மொழியில் மொழிபெயர்த்தால் “”லாஇலாஹ இல்லா அல்லாஹ்” என்று […]

{ 0 comments }

அமல்களின் சிறப்புகள்…. தொடர் : 47 அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம். தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு: திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும்: பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. அமல்களின் சிறப்புகள்(அசி) புத்தகத்தில் ஸஹீஹான ஹதீஃதை சமயங்களில் குறிப்பிட்டுவிடுவார்கள். ஆனால், புரியும்படியாக […]

{ 0 comments }

ஹதீஃதில் கூறப்படும் உதாரணங்கள்!  ( ஓர் அறிவியல் பார்வை!) எஸ்.ஹலரத் அலி, திருச்சி அல்லாஹ் உலகைப் படைத்து, அதை ஆளும் மனிதகுல மக்களுக்கு நேர்வழி காட்ட தூதர்களையும் அனுப்பினான். அந்த இறை தூதர்களுக்கு வழிகாட்ட நெறி நூல்களையும் இறக்கி அருளினான். இப்படி நன்மை தீமைகளை பிரித்தறிவிக்கக் கூடிய வேதங்களிலும், அதன்படி வாழ்ந்து காட்டிய தூதர்களின் போதனைகளிலும் ஏராளமான உதாரணங்கள் சொல்லப்படுகின்றன. நம் கண் முன்னே உள்ள பொருட்களை உதாரணமாக காட்டியே அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சத்தியத்தை எளிமையாக விளக்குகிறார்கள். […]

{ 0 comments }

உருவப்படம் வரையலாமா? ( பகுதி-3 ) M.A. ஹனீபா,  பொட்டல்புதூர் 2019 ஜூன் மாத தொடர்ச்சி… நான் (சிறுமியாக இருந்தபோது) “பொம்மைகளை வைத்து விளையாடுவேன்” எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்ட தும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளை யாடுவார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா(ரழி), நூல்கள் […]

{ 0 comments }

ஹஜ் பெருநாள் சிந்தனைகள்-தியாகத் திருநாள்… –  அபூ அப்தில்லாஹ் மறுபதிப்பு : ஆகஸ்ட் 1986 இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாள்கள்) மட்டுமே. “”ஒன்று ஈகைத் திருநாள். மற்றொன்று தியாகத் திருநாள், இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன.\ ரமழான் முழுவதும் நோன்பு நோற்று, தனது அத்தியாவசியத் தேவைகளை இறை ஆணைக்குக் கட்டுப்பட்டு, தடுத்துக் கொள்வதன் மூலம், ஏழைகளின், இல்லாதவர்க ளின் நிலை எப்படி இருக்கும்? அவர்களின் […]

{ 0 comments }

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும் M.T.M. முஜீபுதீன்,  இலங்கை 2019 ஜூன் மாத தொடர்ச்சி….. கடன் வாங்கும்போதும், கடன் பெறும் போதும் எவ்வாறு மனிதர்கள் நடந்து கொள்ள வேண்டும் என அல்லாஹ் அல்குர்ஆனில் மேற்கண்டவாறு விபரிக்கின்றான். ஒரு மனிதன் கடன் பெறும்போது அவன் மனதில் பின்வருமாறு நினைத்தல் வேண்டும் என ஹதீஃத்கள் விளக்குகினறன. கவனியுங்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். எவன் மக்களின் பணத்தை அல்லது பொருட்களை திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் […]

{ 0 comments }

பெரும்பான்மை…. எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2018 நவம்பர் மாத தொடர்ச்சி… பெரும்பாலானவர்கள் விதண்டாவாதம் புரிகின்றனர். நிச்சயமாக இந்தக் குர்ஆனில்நாம் மனிதர்களுக்கு எல்லா(விதமான) எடுத்துக்காட்டுகளையும் (கூறி) விவரித்துள்ளோம். (ஆனாலும்) மனிதனோ பெரும்பான்மையாக விதண்டாவாதம் புரிபவனாகவே இருக்கின்றான். 18:54, 9:54, புகாரி:1127, 7347, 7455, முஸ்லிம் 1424. பெரும்பாலானவர்களுடைய பேச்சில் எந்த விதமான நன்மையுமில்லை : தர்மம் அல்லது நற்செயல் அல்லது மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றைத் தூண்டக்கூடியவர்(களின் இரகசிய உரையாடல்)களைத் தவிரஅவர்களில் பெரும்பாலான (வர்களின்) இரகசிய உரையாடல்களில் எந்தவிதமான […]

{ 0 comments }

மர்யம்பீ, குண்டூர், அல்லாஹ் நம்மிடத்தே எதை பார்க்கிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்? உங்களுடைய உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கிறான்.  அபூஹுரைரா (ரழி), முஸ்லிம்: 5012 எதனை வலுவாக பிடித்துக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான்? அல்லாஹ்வின் கயிற்றை (குர்ஆனை) வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளும்படி அல்லாஹ் கூறுகிறான். அல்குர்ஆன்: 3:103 ஜும்ஆ நாளில் பள்ளிக்கு முதலில் வருபவரின் சிறப்பு பற்றி நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு கூறுகிறார்கள்? கடமையான குளிப்பு போல் குளித்து விட்டு பள்ளிக்கு முதலில் வருபவர் அல்லாஹ்வின் […]

{ 0 comments }

நவம்பர் 2016 முஹர்ரம்-ஸஃபர் 1438 யூனிஃபோம் சிவில் கோட், பொது சிவில் சட்டம்… நாட்டைச் சுடுகாடாக ஆக்கும் பெரும் சதித் திட்டங்களுடன் துவங்கப்பட்டுக் கடந்த ஒரு நூற்றாண்டாகச் செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் எடுபிடியாகச் செயல்பட்டு வரும் பா.ஜ.க. அரசின் பிரதமர் நரபலி நரேந்திர மோடி இப்போது பொது சிவில் சட்டம் கொண்டு வரப்போவதாகப் பிதற்ற ஆரம்பித்திருக்கிறார். அது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. போகாத ஊருக்கு வழி சொல்வார்கள் என்பார்களே, அதுபோல் தான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் […]

{ 0 comments }

அந்நஜாத் –  ஜூன் 2019 ரமழான் -­ ஷவ்வால் 1440 தலையங்கம்! அந்நியனாய் வாழ்வோம், அர்த்தம் புரியும்…. குரங்கு, பன்றி, எலியாக உருமாறிய பனீ இஸ்ராயீல் மனிதர்கள்! தக்லீது – ஓர் ஆய்வு அமல்களின் சிறப்புகள்! தவ்ஹீது பேசும்  பிரிவினை இயக்கங்களும், அதன் குண்டர்களும்…. உருவப்படம் வரையலாமா?   (பகுதி-2) ஆதிகாலவேதங்களும், இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்… அறிந்து கொள்வோம்… தலையங்கம்! தலைநகரத்தின் அவல நிலை! இதுவரை கண்டிராத கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சென்னை மக்கள் சந்தித்து வருகின்றனர். பகலெல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காக […]

{ 0 comments }

அந்நியனாய் வாழ்வோம் அர்த்தம் புரியும்… ஜி. நிஜாமுத்தீன்,  பரங்கிப்பேட்டை ஒருவர் வெளியூருக்கோ அல்லது வெளி நாட்டிற்கோ செல்கிறார் என்றால் அங்கு அவரது வாழ்க்கை சூழல் எப்படி அமையும்? இது ஒரு தற்காலிக தங்குமிடம், இங்கு சில வேலைகளுக்காக நாம் வந்துள்ளோம். சொந்த ஊருக்கு திரும்பும் நாள் சீக்கிரம் வரவேண்டும் என்ற எண்ணம் தான் அவரிடம் மிகைத்து நிற்கும். சிந்தனையும், நினைவுகளும் சொந்தங்களையும், சொந்த ஊரையும் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கும். தாம் தங்கியுள்ள இடத்தில் கிடைக்கும் பொருட்கள் மீது […]

{ 0 comments }

“தக்லீது” – ஓர் ஆய்வு! – அபூ அப்தில்லாஹ் மறுபதிப்பு : செப்டம்பர் 1987 இன்றைய சூழ்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களிடம் “தக்லீது” செய்யாதீர்கள். “தக்லீது” குர்ஆனுக்கும், ஹதீஃதுகளுக்கும் முழுக்க, முழுக்க முரணானதாகும் என்று சொன்னவுடன், “தக்லீது” செய்யக்கூடாது என்றால், மனிதர்களால் ஏட்டில் கோர்வை செய்யப்பட்டுள்ள குர்ஆனைப் பார்க்கக் கூடாது, மனிதர்களால் சேகரம் செய்து தரப்பட்டுள்ள நூல்களைப் பார்க்கக் கூடாது. அந்நஜாத்தைப் பார்ப்பதும் கூடாது, காரணம் இவை எல்லாம் “தக்லீது” ஆகும் என்று உடனே சொல்லி விடுகிறார்கள். […]

{ 0 comments }

அமல்களின் சிறப்புகள்…. அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம். தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு: திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும்: பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ­வ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. தப்லீக் ஜமாஅத்தினர் கூறும் ஈருலக ஈடேற்றத்துக்கான 6 நம்பர்(?) பற்றி சென்ற இதழில் […]

{ 0 comments }

தவ்ஹீது பேசும் பிரிவினை இயக்கங்களும் அதன் குண்டர்களும்… ஹலரத் அலி, திருச்சி-7. இஸ்லாமானது ஓரிறை கொள்கையை சொல்லி வளர்ந்த மார்க்கமாகும். அன்றைய அரபிய மக்கா மாநகர், காபத்துல்லாஹ்வில், நாளுக்கொரு தெய்வம் என்னும் கணக்கில் 360 சிலைகளை வைத்து ஆண்டு முழுவதும் வணங்கி வந்தனர். இச்சூழலிலேயே வணங்கத் தகுதியுடைய ஒரே இறைவன் உலகத்தை படைத்துக் காத்து இரட்சிக்கும், ஒரே இறைவனான அல்லாஹ்வை தவிர வேறு எவருமில்லை. அவன் தனித்தவன். இணை துணை இல்லா தூயவன் என்ற கொள்கை இறங்கியது. […]

{ 0 comments }

உருவப்படம் வரையலாமா? ( பகுதி-2 ) M.A. ஹனீபா,  பொட்டல்புதூர் 2019  மே மாத தொடர்ச்சி… உருவப்படங்களும், நாயும் உள்ள வீட்டில் அருளைக் கொண்டுவரும் வானவர்கள் நுழைய மாட்டார்கள். ஆகியவற்றை எடுத்துச் சொல்லி உருவப்படம் வரையக்கூடாது, புகைப்படக் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களைப் புகைப்படம் எடுக்கக் கூடாது, ஒளிப்பதிவு செய்யும் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களை ஒளிப்பதிவு செய்யக்கூடாது, வீடுகளில் உருவப்படங்களை வைத்திருக்கக் கூடாது எனத் தீர்ப்பு வழங்குகின்றனர் சில அறிஞர்கள். முதல் வகையான மேற்கண்ட இவ்வறிவிப்புகளின் எச்சரிக்கை மட்டும் இருந்திருந்தால் […]

{ 0 comments }

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்  M.T.M. முஜீபுதீன், இலங்கை 2019 மே மாத தொடர்ச்சி….. அதேபோல் பெற்றோர், அநாதைகளின் சொத்துகளை உரியவர்களிடம் ஒப்படைத்தல் பற்றி அல்குர்ஆனில் பல இடங்களில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கவனிக்கவும். அல்குர்ஆன்: 4:1 முதல் 14 வரை. மேலும் கவனியுங்கள். இன்னும், தாய் தந்யைரும், நெருங்கிய பந்துக்களும் விட்டுச் செல்கின்ற செல்வத்தி லிருந்து விகிதப்படி அதையடையும் வாரிசுகளை நாம் குறிப்பாக்கியுள்ளோம். அவ்வாறே நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்கு கொடுத்து விடுங்கள் […]

{ 0 comments }

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர், ஸமூது கூட்டத்திற்கு அனுப்பப்பட்ட நபி யார் என அல்லாஹ் கூறுகிறான்? ஸாலிஹ் நபி. அல்குர்ஆன் : 7:73 நகைகளை உருக்கி காளை சிற்பத்தை உருவாக்கியவன் யார் என அல்லாஹ் கூறுகிறான்? சாமிரி. அல்குர்ஆன் : 20:87,88 பெயர் சூட்டப்பட்டு பிறந்த நபி யார் என அல்லாஹ் கூறுகிறான்? “யஹ்யா”. அல்குர்ஆன் : 3:39 விரயஞ் செய்பவர்கள் யாருக்கு சகோதரர்களாவார்கள் என அல்லாஹ் கூறுகிறான்? “ஷைத்தான்களின்”. அல்குர்ஆன் : 17:27 நயவஞ்சகர்களுக்கு பாவமன்னிப்பு […]

{ 0 comments }

 – எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7 அல்லாஹ் படைத்த படைப்பினங்களில் மனிதன் ஒரு சிறந்த படைப்பாக கண்ணியப்படுத்தப்பட்டவனாக இருக்கின்றான். மனிதனுக்கு முன்னால் படைக்கப்பட்ட மலக்குகள், ஜின்களை, ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு சிரம் பணிய அல்லாஹ் கட்டளையிட்டதன்  ( அல் குர்ஆன்.7:11) மூலம் மனிதனின் சிறப்பை புரிந்து  கொள்ளலாம்.  “ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச்  சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட […]

{ 0 comments }

அந்நஜாத் மே 2019 ஷஃபான்-ரமழான் 1440 தலையங்கம்! அல்லாஹ்வின் கடும் சோதனை! முஸ்லிம்களே சுதாரித்துக் கொள்ளுங்கள்! பயங்கரவாத ஆயுதமாகும் பருவ நிலை மாற்றங்கள்  (தொடர்-3) அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா?    (தொடர்-3) அமல்களின் சிறப்புகள்! உருவப்படம் வரையலாமா?   (பகுதி-1) எது இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த சந்திர காலண்டர்? பிறைகள் காலத்தை காட்டும் காலண்டர்! நோன்பை பற்றி குர்ஆன், ஹதீஃத் சொல்வது என்ன? ஆதிகாலவேதங்களும், இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்… விமர்சனம்! விளக்கம்!! தலையங்கம்!    நடந்து முடிந்த மக்களவைத்தேர்தல்… தேர்தலுக்கு […]

{ 0 comments }