குர்ஆனின் நற்போதனைகள்

in 1996 ஏப்ரல்,அல்குர்ஆன்

Dr.A.முஹம்மது அலி, Ph.D.,

1. வானங்களையும், பூமியையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 31:20;45:13)
2. சூரியனையும், சந்திரனையும் அவனே உங்களுக் வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 14:33,16:12,29:61,31:29,35:13, 39:5)
3. பூமியிலுள்ளவைகளை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 22:65)
4. இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 14:33,16:12)
5. ஆறுகளை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்(அல்குர்ஆன் 14:32)
6. தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 14:32 ,16:14,45:12)
7. நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் (அல்லாஹ்) உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹுவின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது. (அல்குர்ஆன் 14:34)
8. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு பள்ளியிலும் தொழும்போது உங்களை ஆடைகளால் அலங்கரித்துக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள்; பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 7:31)
9. தன் பெற்றோருக்கு நன்மை செய்யும் படியாக நாம் மனிதனுக்கு உபதேசம் (வஸிய்யத்) செய்திருக்கிறோம். (அல்குர்ஆன் 29:8,31:14,46:15)
10. ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும் அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும் களைந்து சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக் குள்ளாக்க வேண்டாம். (அல்குர்ஆன் 7:27)
11. நிச்சயமாக மனிதனுக்கு ஷைத்தான் பகிரங்க பகைவனாவான். (அல்குர்ஆன் 12:5, 17:53)
12. ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 25:29)
13. ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு””பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா. (அல்குர்ஆன் 36:60)

கவனிக்க: அல்லாஹ் மனிதனை தனது பிரதி நிதியாக (கலீஃபாவாக) படைத்து அவனுக்கு அழகிய உருவமைப்பையும், அறிவு ஞானத்தையும், நல்லது கெட்டதை பிரித்தறியும் பகுத்தறிவையும் அளித்து, வானங்கள், பூமியிலுள்ளவைகளையும் அவனுக்கு வசப்படுத்தித் தந்தான். இவ்விதமாக மனிதனை கெளரவித்து, சிறப்பித்து படைப்பிடனங்க ளிலேயே உயர்வானதாக்கினான். அதே சமயம் நமது பகிரங்க விரோதியையும் அடையாளம் காட்டி அவனைப் பின்பற்ற வேண்டாமென எச்சரிக்கவும் செய்தான். அந்த எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டு நாம் அவனை நமது பகிரங்க விரோதியாகவும், அவனைப் பின்பற்ற மாட்டோமென்றும் =7:172 வசனத்தில் கூறியது போல- உறுதி மொழியும் அளித்துள்ளோம். (பார்க்க 36:60) இருப்பினும் அல்லாஹ் அவ்வப்போது தனது திருத்தூதர்களையும், வேத அறிவுரைகளையும் அனுப்பி நம்மை நேர்வழியில் வாழ தொடர்ந்து அறிவுறுத்தினான். என்பதை நினைவூட்டும் மனிதனின் ஒரு பக்கமாகும். ஆனால்……

அல்லாஹ் நமக்கு அருட்கொடையாக அருளிய அறிவைக் கொண்டே, அழகிய அமைப்பைக் கொண்டே, செல்வ செழிப்பைக் கொண்டே நமது விரோதி ஷைத்தான் நம்மை வழிகெடுக்கிறான் என்பதை நாம் மறந்து வழ்கிறோம். மனிதனின் மறுபக்கத்தைப் பார்க்கும்போது ஷைத்தானின் தாக்கம் நம்மீது எந்த அளவு ஊடுருவியுள்ளது என்பதை அறியலாம்.

Previous post:

Next post: