மகத்தான மார்க்கப் பணி!

in 2013 பிப்ரவரி

S.N.K

வேதனை மேல் வேதனை:
உலகெங்கும் இஸ்லாத்தை ஏற்றதாய் பெயர் பண்ணிக் கொண்டு வாழும் பரம்பரை பெயர் தாங்கி முஸ்லிம்கள்! இஸ்லாத்தை ஏற்ற பெயர் தாங்கிகள் பெரும்பான்மையினர், இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாகக் கொள்ளவில்லை.

இஸ்லாமிய முலாமில், இஸ்லாம் அல்லாத, இஸ் லாத்திற்கு நேர்முரணான வழிகேடுகளே, இஸ்லாமாக அரங்கேறி வருவதுதான் வேதனைக்கெல்லாம் வேதனையான வேதனை.

காலங்கள், நாடுகள், மக்கள் மனோ நிலைக்கேற்ப 1400 ஆண்டுகளாய், மார்க்கம் சிதைக்கப்பட்டு வருவது மாறாத வாடிக்கையாகி விட்டது.

விளைவுகளின் விபரீதங்கள்:
“பிரிவுகளால் நாசமே, மோசம் போகாதீர்’! இதைத் தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி, சர்வதேச சமுதாயத்துக்கு “அந்நஜாத்’ துவங்கியதிலிருந்து அழுத்தமாய்க் கோடிட்டுக் காட்டி வருகிறது. ஓரளவு மார்க்கச் சிந்தனையுள்ளோரும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை எனில், மற்றவர்கள் நிலையை என்னென்பது?

“பிரிவுகள் இன்றி இஸ்லாம் இல்லை; இஸ்லாம் பிரிவுகள் சார்ந்தே இயங்குகிறது’.
பொருளீட்டுவதற்காகப் புரோகிதர்கள் உரு வாக்கிய வழிகேட்டுச் சித்தாந்தம் இது. அதனால் தான் மார்க்கத்தின் பெயரால் மக்கள் சர்வதேச அளவில் நிரந்தரமாய்ப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

பிரிவுகளால் நாட்டழிப்புக்கள், மக்கள் அழிப்புக்கள், பொருளாதார இழப்புக்கள்.. முதல் இன்ன பிற சொல்லொனா சேதாரங்களைப் பெயர் தாங்கிகளும், முஸ்லிம் பெயரைத் தாங்கிய நாடுகளும் சந்தித்து வருகின்றன. இதற்கெல்லாம் பிரிவுகள் சார்ந்திருப்பதே காரணம். இதை யாரும் உணர வில்லை; உணர முன்வருவோரும் தடுக்கப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள், விளைவுகள் விபரீதத்தை அனுபவிக்கிறார்கள். வினையின் வேரறுக்க முடியவில்லை. ஏன்?

நுழைக, முழுமையாய் முழுமனத்தோடு:
உண்மை முஸ்லிம்கள் சிலர் தவிர, பெயர்தாங்கி கள் இஸ்லாத்தை முழுமையாக சார்ந்திருக்கவில்லை. எவருடைய வாழ்வும் இஸ்லாத்தை முழுமையாக பிரதிப்பலிக்கவில்லை.

ஈமான் கொண்டவர்களே! “உத்ஹுலு ஃபிஸ்ஸில்மி காஃப்ஃபா, நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்…..
O, you have Certainly of faith!
Enter into Islam whole heartedly…
(அல்குர்ஆன்: 2:208)

முழு மனத்துடன் முழுமையாக இஸ்லாத்தினுள் பிரவேசிக்குமாறு ஈமான் கொண்டோருக்கு 2:208ல், அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். எனினும் ஏற்றோர் மிகச் சிலர் தவிர எவரும் இஸ்லாத்தினுள் முழுமையாக நுழையவில்லை.
இவண், பெயர் தாங்கிகள் இஸ்லாம் அல்லாத, இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான வழிகேடுகளை இஸ்லாம் என்று நம்பி ஏமாந்து வருகிறார்கள்.

இஸ்லாம் இதுதான் என்னும் தவறான நம்பிக்கையில் இஸ்லாத்தைத் தகர்க்கும் வழிகேடுகளை மிக வும் பக்தி சிரத்தையோடு பெயர் தாங்கிகள் செய்து வருகிறார்கள். இழுக்கை ஏற்படுத்திக் கொண்டு இஸ்லாத் துக்குச் சிறப்புச் சேர்ப்பதாய் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தகையோர் எதைப் பின்பற்றுகிறார்கள்?
பின்பற்றாதீர்!

அல்லாஹ் எதைப் பின்பற்றத் தடை விதித்துள்ளானோ அதையே பெயர் தாங்கிகள் பின் பற்றுகிறார்கள். (அந்தோ பரிதாபம்!) அது என்ன? அல்லாஹ் தெளிவுப்படுத்துகிறான்.
And do not follow the foot steps of satan; Indeed, he is be you an avowed enemy!

ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (அல்குர்ஆன்: 2:208)
அல்லாஹ்வை விரோதித்து அல்லாஹ்வால் சபிக் கப்பட்டவன்; மனித இன விரோதியாய் அல்லாஹ் வால் இனங்காட்டப்பட்டவன் ஷைத்தான்; ஏமாற்று வித்தைகளால் மனித இனத்தை மயக்கி, மனித இனத்தை வழிகெடுக்கும் ஷைத்தானின் அடிச்சுவற்றைப் பின்பற்ற அல்லாஹ் தடை விதித் துள்ளான். மறதி மனிதனுக்கு அல்லாஹ் இதைத் திரும்ப திரும்ப அல்குர்ஆன் நெடுகிலும் நினைவூட்டி எச்சரித்துள்ளான்.

இஸ்லாத்துக்கு முரணான, இஸ்லாத்துக்கு எதிரான, இஸ்லாத்தைத் தகர்க்கும் வழிகேடுகளே ஷைத்தானின் அடிச்சுவடு. இவைகளால் ஷைத்தான்கள் திருவிளையாடல்கள் எங்கே எப்போது விஸ்வரூபம் எடுக்கும்? யாராலும் கணிக்க, யூகிக்க முடியாது.
இதை சம்பந்தப்பட்ட இடங்களில் கள ஆய்வில் ஈடுபட்டு மட்டுமே அறிய முடியும். விரும்புவோர் கள ஆய்வில் ஈடுபட்டு உண்மைகளைக் கண்டறிக. கண்டறிந்த உண்மைகளைக் கட்டுரைகளாய் “அந்நஜாத்’துக்கு அனுப்புக.

தமிழகத்தில் வாழ்வோர் அவரவர் பகுதிகளில் நிகழ்ந்து வரும் மார்க்க மீறல்களையும், அரபு நாடுகளில், வேறு வெளிநாடுகளில் வசிப்போர் அந்த நாடுகளில் உள்ளோர் எப்படி மார்க்கத்தை மீறுகிறார்கள்? அந்த நாடுகளுக்குப் பிழைப்புக்காக வந்த வேற்று நாட்டவர் எப்படி மார்க்கத்தை மீறுகிறார்கள்? கூர்மையாக கவனித்தல் அவசியம். சர்வதேச அளவில் இஸ்லாத்தை ஏற்றோர், இஸ் லாத்துக்கு முற்றிலும் முரணான வழிகேடுகளை இஸ்லாமாக நம்பி ஏமாந்து வருவதை நிதர்சனமாய்க் காண முடிகிறது. எந்த இடத்தில், எப்போது, எப்படி ஏமாறுகி றார்கள்? நேரத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப இஸ்லாமிய மீறல் ஏற்படுத்தும் பாதிப்பு எப்படிப் பட்டது?

ஒவ்வொரு இடத்திலும் இஸ்லாம் வெவ்வேறு விதமாய் மீறப்படுகிறது; இதை உணர்ந்தோர் உணராத மிகப் பெரும்பான்மைக்கு எடுத்துக் காட்டும்போது, ஏற்படும் பிரளயம்… பல நேரங்களில் சுனாமித் தோற்றுவிடும்… தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் பெயர் தாங்கிகளையும் அவர்கள் வாழும் இடங்களையும் பெரிய அளவில் பாதித்துள் ளது, பாதித்தும் வருகிறது. ஆனால் இதைக் கண்டுக் கொள்ள எவருமே இல்லை; காண்போர் சிலரும் கண்டுங் காணாமல் விட்டு விடுகிறார்கள். அதனால் பதிய இயலாமல் பாதிப்புக்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன.

ஏதுமுண்டோ?
* இஸ்லாத்தை ஏற்றப்பின் இஸ்லாத்தை மீறுவது போன்ற மெகா தீமை வேறு ஏதும் உண்டா?
* இஸ்லாத்தை ஏற்றப்பின் இஸ்லாத்துக்கு முற்றி லும் முரணான வழிகேடுகளை இஸ்லாமாகப் பாவிப்பது போன்று வேறு மெகா தீமை ஏதும் உண்டா?
* இஸ்லாத்தை ஏற்றப்பின் இஸ்லாம் தீமையாய், பாவமாய்த் தடுத்தவைகளை நன்மையாய், புண்ணியமாய்ச் செய்து வருவது போன்ற மெகா தீமை வேறேதும் உண்டா?
* இஸ்லாத்தை ஏற்றப்பின் அல்லாஹ்வின் ஒருமை யைத் தகர்க்கும்
“´ஷிர்க்’ இறைக்கிணையாக்குதலை வணக்க வழி பாடாய் செய்து வருவது போன்ற மெகா தீமை வேறு ஏதுமுண்டா?
* ஒரு விசயத்தில் அல்லாஹ்வின் கட்டளைத் தெளிவாயிருக்க, அதற்கு முரணானதைச் செய லாக்குவது போன்ற மெகா தீமை வேறு ஏது முண்டா?

* ஆதாரப்பூர்வமான நபிவாழ்வியல் தெளி வாகியிருக்கும் விசயங்களில், அவைகளுக்கு முற்றிலும் மாற்றமான அறிஞர்களின் அபிப் பிராயங்களைப் பிரிவுகள் பெயரால் செயல் படுத்துவது போன்ற மெகா தீமை வேறு ஏதுமுண்டா?
* இஸ்லாத்தோடு ஐக்கியமாவதுதான் ஒன்று பட்ட முஸ்லிம் சமுதாயம் என்னும் இஸ்லா மிய இலட்சியம், நபி காலத்தில் நடைமுறைச் சாத்தியமாக்கிக் காட்டப்பட்டது. இது நபிய வர்கள் காலத்தோடு நின்று விடவில்லை. நேர் வழியில் நிலைத்திருந்த முதல் இரு கலீஃபாக்கள் காலங்கள் வரை நீடித்தது. பெரும் பெரும் பிரிவுகள் முதல் சின்னஞ் சிறு குழுக்கள், அணிகள் அனைத்துக்கும் இஸ்லாம் முற்றுப் புள்ளி வைத்தது. எனினும் மூன்றாம் கிலாஃபத்தின் இடைக்காலத்தில் முளை விட்ட பிரிவுகள்… இன்று வெட்ட முடியாத விருட்சங்களாகி விட்டனவே…!

* பிரிவுகளாய், குழுக்களாய், அணிகளாய்… பெயர் தாங்கிகள் சிதறிச் சின்னாபின்னமாகி யுள்ளனரே…! இது போன்ற மெகாத் தீமை வேறேதும் உண்டா? இதைத் தடுத்து நிறுத்தும் சக்திப் பெற்றோர், இப்பெருங் கேட்டைத் தடுத்து நிறுத்தாமல் இருந்தது போன்ற மெகா தீங்கு வேறேதும் உண்டா?

* இப்படிப் பட்டியல் நீள்கிறது… மிகச் சில விசயங்கள் நீங்கலாய் இஸ்லாத்தை ஏற்றோரே.. இஸ்லாத்தைத் துணிந்து மீறிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாத்துக்கு முர ணான வழிகேடுகளை இஸ்லாமாக நம்பி ஏமாறுவது, அதற்கு இஸ்லாமிய அந்தஸ்த்து கொடுப்பது உண்மையில் இஸ்லாத்தை அவ மதிப்பதா? இல்லையா? அது இஸ்லாமிய அவமதிப்பே! ஐயமில்லை.
இஸ்லாத்தை அவமதிப்பதை, இஸ்லாத்தை மதிப்பதாய் தவறாக எண்ணுவது போன்ற மாபெரும் மெகா தீமை வேறேதும் உண்டா?

கட்டாயக் கடமை:
இஸ்லாம் நன்மையாக்கியதைச் செய்யப் பணிப்பதும், இஸ்லாம் தீயதாய்த் தடுத்ததைத் தடுப்பதும் இஸ்லாத்தை ஏற்றோர் மீது இஸ்லாம் கட்டாயக் கடமையாக்கியுள்ளது.
(காண்க. அல்குர்ஆன் 3:104)

உணர்ந்தோர் இக்கடமையை உரிய முறையில் நிறைவேற்றவில்லை. மற்றக் கடமையாற்ற ஓரளவு ஆர்வமுடைய ஒரு சிலர் கூட நன்மை செய்யப் பணிப்பதில், தீமையைத் தடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. மட்டுமின்றி அலட்சியப்படுத் தப்படுகிறது; புறக்கணிக்கப்படுகிறது.””தப்லீஃ’ இயக்கத்தார், நன்மைச் செய்யப் பணித்தால் போதும், தீமை தானே விலகிவிடும். இது தப்லீஃ இயக்கத்தின் இஸ்லாத்துக்கு முரணான தவறான சித்தாந்தம்.

விளைவுகளின் கடுமை:
நன்மை செய்யப் பணித்து விடுவதால் தீமை தானே விலகிவிடும் எனில், அனைத்தும் அறிந்த அல்லாஹ் அதையே விதியாக்கியிருப்பான். ஆனால் அல்லாஹ் அப்படி விதியாக்கவில்லை.

“நன்மை செய்யப் பணிப்பதோடு, தீமையைத் தடுக்க வேண்டும்’ அன்று அல்லாஹ் கட்டளையிட் டுள்ளது, கூர்ந்து நோக்கத்தக்கது. தப்லீஃ இயக்கத் தின் தவறான சித்தாந்தப்படி, அவர்கள் நன்மைச் செய்யப் பணித்து வருகிறார்கள்; தீமைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். எத்த னைத் தீமைகள் தடுக்கப்பட்டுள்ளன? சிற்சில சில்ல ரைத் தீமைகள் விலகியிருக்கலாம். மெகா தீமைகள் ஏதும் தடுக்கப்பட்டுள்ளனவா? இல்லையே!

நன்மை செய்யப் பணிக்கும்போது அதற்கு முரணான தீமைத் தடுக்கப்பட வேண்டும். தீமைத் தடுக்கப்பட்டால்தான் குறிப்பிட்ட நன்மையால் நலன் விளையும். தனி மனிதன், குடும்பம், சமுதாயம்… இம்மை, மறுமையில் அந்நன்மையால் பயன் அடைய முடியும்.
அல்குர்ஆன் காட்டும் 25 நபிமார்கள் பிரச் சாரமும், வாழ்வும் இதை மெய்ப்பிக்கும் நிதர்சன எடுத்துக்காட்டு. நன்மைச் செய்யப் பணித்ததோடு விட்டிருந் தால் நபிமார்கள் கடுமையான கொடுமைகளால் பெருமளவு பாதிப்பிற்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள்.

விளைவுகள், பாதிப்புக்கள் கடுமை என்பதை அனைத்தும் அறிந்த அல்லாஹ் அறியாதவனா? நன்றாய் அறிந்தவனே! எனினும் நன்மை செய்யப் பணித்தல், தீமையைத் தடுத்தலை அவன் கட்டளை யால் அல்லாஹ் கட்டாயக் கடமையாக்கியுள்ளான். ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

இஸ்லாத்தை நிலைநாட்டுதல்:
இஸ்லாம் செய்யப் பணித்துள்ள அனைத்தும் நன்மை; இஸ்லாம் தடுத்துள்ள அனைத்தும் தீமை, நன்மை செய்யப் பணிக்கும் அதே நேரம், அந் நன்மைக்கு நேர் எதிரான தீமை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இஸ்லாம் காட்டும் நன்மைகளைச் செய்யப் பணித்து, இஸ்லாம் தடுத்த தீமைகளைத் தடுப்பதன் மூலம் இஸ்லாம் நிலை நிறுத்தப்படுகிறது. இஸ்லாத்தை நிலைநாட்டுமாறு நபிமார்கள், இறைத் தூதர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கிறான். ஆகவே, (நபியே!) நாம் உமக்கு “வஹி’ மூலம் அறிவிப்பதும் இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்தது என்னவென்றால், “நீங்கள்(அனைவரும்) மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள்; அதிலிருந்து (பல்வேறு பிரிவுகளாகப்) பிரிந்து விடாதீர்கள்’ என்பதேயாகும்….
(அல்குர்ஆன்: 42:13)

நபிமார்கள், இறைத் தூதர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருளிய வாழ்க்கை நெறி இஸ்லாம் ஒன்றே! அதில் எவ்வித மாறுதலும் இல்லை. அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் வழிப்பட்டு இஸ்லாத்தை நிலைநாட் டினர். அல்ஹம்துலில்லாஹ். இஸ்லாத்தை நிலை நாட்டுவதிலிருந்து அவர்களில் எவரும் பின்வாங்கவில்லை. இஸ்லாத்தை நிலைநாட்டுவதில் இருந்தும் அவர்களில் எவரும் பிரியவில்லை. இஸ்லாம் அல்லாத வேறு எதையும் அவர்கள் நிலை நாட்டவில்லை. இஸ்லாம் விட்டு பிரியவும் இல்லை.

கோட்பாடு, செயல்பாடு… எதுவாயிருப்பினும், அல்லாஹ் இஸ்லாமாக அருளியதை மட்டும் நிலைநாட்டினர். சிறு விசயம், பெரு விசயம் என அவர்கள் பாகுபாடு பார்க்கவில்லை. அவர்கள் வாழ்வில் இஸ்லாம் இழையோடியது. அவர்கள் வாழ்வே இஸ்லாமாக இருந்தது. இஸ்லாம் அல்லாத எதற்கும் அவர்கள் வாழ்வில் இம்மியும் இடமில்லை.

இரண்டறக் கலத்தல்:
அவர்கள்தான், அவர்கள் வாழ்வை இஸ்லாத் தோடு ஐக்கியப்படுத்திக் கொண்டவர்கள். இஸ் லாத்திலிருந்து அவர்களும், அவர்கள் வாழ்வும் பிரிந்து நிற்கவில்லை. இஸ்லாம் அவர்கள் வாழ் வோடு இரண்டறக் கலந்திருந்தது. இஸ்லாம் வேறு, அவர்கள் வாழ்வு வேறு என்னும் வேறுபாடின்றி, அவர்கள் வாழ்வு இஸ்லாத் தோடு அத்துவிதமாகி இருந்தது. அவர்கள் உடலும் உயிரும் இஸ்லாத்தோடு ஒட்டியிருந்தன.

அவர்கள் வாழ்வால் இஸ்லாத்தைச் சுவாசித் தார்கள். அவர்கள் வாழ்வு இஸ்லாத்தை உணவாக உட்கொண்டது. அவர்கள் வாழ்வில் இஸ்லாமிய மணம் கமழ்ந்தது. இஸ்லாத்தால் அவர்கள் மணம் பெற்றார்கள். இஸ்லாம் அவர்களால் மணம் பெற்றது. உலக மக்களிடையே இஸ்லாமிய மணத் தைப் பரப்பிச் சென்றார்கள். இன்றளவும் இப்புவியில் இஸ்லாமிய மணம் பரவ காரணமாயிருப்பவர்களும் அவர்களே! அதனால்தான் வல்லவன் அல்லாஹ் இஸ்லாத்தை நிலைநாட்ட அவர்களைத் தெரிவு செய்தான்.

நாடுகள், மொழிகள், இனங்கள் மாறுபட்டன. காலங்கள் மாறி மாறி வந்தன. இறைத் தூதர்களும், நபிமார்களும் மாறிக் கொண்டேயிருந்தார்கள். இஸ்லாத்தை நிலைநாட்டும் அவர்களது இடை விடாத பணி தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருந்தது.
எல்லாக் காலங்களிலும் மக்களில் மிகப் பெரும் பான்மை இஸ்லாத்துக்கு நேர் எதிரான பிரிவுப் பெருங்கேடுகளில் சிக்கியிருந்தனர். வழிகேடுகள் அனைத்தின் உறைவிடமான பிரிவுகளின் பெருங் கேடுகள் விட்டு… அம்மக்களைப் பெருநன்மை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதும், அம்மக்களைப் பெருநன்மை இஸ்லாத்தோடு ஐக்கியப்படுத்து வதும் கல்லில் நார் உரிப்பதைக் காட்டிலும் கடினப் பணியாய் சுமக்க முடியாத சுமையாக இருந்ததையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.

அல்லாஹ்வின் பொருத்தம்:
எனினும், கடினத்திலும் கடினமான அப் பணியை அல்லாஹ்வின் பொருத்தம் நாடி அவர்கள் மேற்கொண்டபோது, மாளா துன்பங்களால் அலைக்கழிக்கப்பட்டார்கள், துயரப்பட்டார்கள், இன்னுயிரையும் துச்சமாக்கி பெருநன்மை இஸ் லாத்தை நிலைநாட்ட, எதிர்ப்பட்ட இன்னல்க ளைத் துணிவோடு எதிர்க்கொண்டார்கள். இஸ் லாத்தை நிலை நாட்டினார்கள். அல்ஹம்து லில்லாஹ்.
இம்மை, மறுமையில் மனித இனத்துக்கு நலன் பயக்கும் நன்மைகள் அனைத்தையும் உள்ளடக்கியதே-இஸ்லாம். அதுபோல் மனித இனத்துக்கு கேடுகள் விளைவிக்கக் கூடிய தீமைகள் அனைத் தையும் தடுத்த நிறுத்துவதும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியின் தனிச்சிறப்பு.

இஸ்லாத்தை நிலைநாட்டுதல் உன்னத உயர்ப் பணி, இறை மார்க்கத்துக்குச் செய்யும் பெருஞ் சேவை. நன்மை செய்யப் பணித்தல், தீமையைத் தடுத்தல் இரண்டையும் ஒருசேர உள்ளடக்கிய பெரும் பணி.

இஸ்லாத்தை நிலைநாட்டுதல்:
இஸ்லாத்தை நிலைநாட்டுதல் பெரும் பணி, பெரும் நன்மை. அது இஸ்லாத்துக்கு நேர் எதிரான பெருந் தீமைகளைத் தடுத்தலையும் தன்னகத்தே இணைத்துக் கொண்ட மாபெரும் நன்மை. நபிமார் களைத் தொடர்ந்து இஸ்லாத்தை நிலைநாட்டும் பெரும் பணி, ஏற்றோர் மீது கடமையாக்கப் பட்டுள்ளது. எல்லாக் காலங்களிலும் ஏற்றோர் அனைவரும் இப்பணியில் ஈடுபடவில்லை; என்றாலும் சாதாரண சாமான்யர் ஒரு சிலர் இப்பணியில் எப்போதும் ஈடுபட்டே வந்துள்ளனர். இன்றளவு ஈடுபட்டும் வருகின்றனர்.

நபிகால இஸ்லாமிய ஐக்கியம்:
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அஸ்ஹாபிகள் பெரும்பாலோர் முழுமையாக இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ். எனினும், நபியவர்கள் காலத்துக்குப் பின், இப்பணியில் ஈடுபட்டோர் குறைந்து கொண்டே வந்தனர். பிரிவுகள் தோன்றவில்லை. முஸ்லிம்கள் இஸ்லாம் விட்டு பிரியவுமில்லை. அதனால் பிரிவுகளின் பெருங்கேடுகள் அவர்களைத் தீண்டவில்லை. இது முதல் இரு கலீஃபாக்கள் காலம் வரை தொடர்ந்து வந்தது. மூன்றாம் கிலாஃபத்தின் இடைக்காலத்தில் பிரிவுகள் தோன்றத் தொடங்கின. அது முதல் பிரிவுப் பெருங் கேடுகள் ஏற்றோரைச் சூழ்ந்து கொள்வதை இன்றள வும் தடுக்க முடியவில்லை.
பிரிவுகள் நிலைநாட்டப்படுவதா?

பிரிவுகள் தோன்றியபின் கடந்த 1400 ஆண்டு களாய்ப் பிரிவுகளை நிலைநாட்டும் பணிகளே தொடர்ந்து வருகின்றன. நிலமை நாளுக்கு நாள் மோசமாகிப் பிரிவுகளை இஸ்லாமாய்ப் பாவிக்கும் இழிநிலை உருவாகி விட்டது. பிரிவுகளை நிலை நாட்டுவதுதான் இஸ்லாத்தை நிலைநாட்டுவது என்ற தவறான போக்கு இஸ்லாத்தை நிலைநாட் டுவோரைப் பின்னுக்குத் தள்ளி விட்டது.
நன்மைகள் அனைத்தையும் உள்ளடக்கிய நன்மைகளுக்கெல்லாம் பெருநன்மை இஸ்லாம்; கேடுகளின் எல்லாம் பெருங்கேடுகளை விளைவித்து வரும் பெருங்கேடு பிரிவுகள்தான் பெருந் தீமை. பெரும் நன்மை இஸ்லாம் நிலைநாட்டப்பட பெரும், பெரும் கேடுகளை விளைவித்து வரும் பிரிவுகள் ஒழிக்கப்பட வேண்டும். வழி என்ன?

அன்பு அழைப்பு:
பிரிவுகள் அனைத்தையும் சார்ந்துள்ள ஏற்றோர், பிரிவுகள் விட்டு விடுபடுதல் அவசியம். இஸ்லாத்தோடு ஐக்கியமாகி, இஸ்லாத்தை நிலைநாட்டும் பணியில் போர்க்கால அவசரத்துடன் ஈடுபடுதல் அதைவிட அவசியம், காலத்தின் கட்டாயம். பிரிவுகளின் பெருங்கேடுகளிலிருந்து ஏற்றோரை விடுவித் தல் எல்லாவற்றையும் விட அவசியம். உணர்க… உணர்க… உணர்த்துக… உணர்த்துக…. உணர்த்துக… அரிதிலும், அரிதிலும் அரிதாய் முயற்சி செய்க. அயராது உழைத்து இம்மை மறுமையில் அல்லாஹ் வின் அருளைப் பெற அனைத்து அன்பு உள்ளங் களையும் அன்போடு அழைக்கின்றோம். அல்லாஹ் அருள் செய்வானாக. ஆமீன். வஸ்ஸலாம்.
இன்ஷா அல்லாஹ், மீண்டும் அடுத்த ஆய்வில் சந்திப்போம், சிந்திப்போம், சீர் பெறுவோம்.

Previous post:

Next post: