நமது மார்க்கம் இஸ்லாம் ! நாம் முஸ்லிம்கள்! தூய இஸ்லாம் ஃபிர்அவ்னைச் சென்றடைதல்!

in 2013 ஜூலை

முஹிப்புல் இஸ்லாம்

நோக்கம் : அல்லாஹ் தூயவன். அல்லாஹ் அருளிய மார்க்கம் தூய்மையானது. அல்லாஹ் அருளிய தூய வடிவில் நபிமார்கள் அனைவரும் இஸ்லாத்தை நிலைநாட்டியுள்ளனர். இஸ்லாமிய அழைப்புகளில் நபிமார்கள் இஸ்லாத்தின் தூய்மையைப் பிரதிபலித்தனர்.

அல்லாஹ்வின் விரோதி, ஃபிர்அவ்ன் மனித இனத்துக்கும் கொடிய விரோதியே! ஃபிர்அவ்ன் வரை இஸ்லாம் தூய வடிவில் சேர்ப்பிக்கப்பட்டு விட்டது. அந்தக் கொடியவனுக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பிலும் இஸ்லாத்தின் தூய்மை அப்பட்டமாய் நிலை நாட்டப்பட்டுள்ளது.

தூய்மையின் அனைத்துக் கோணங்களையும் அல்லாஹ் மிக விரிவாய் தெளிவு படுத்தியுள்ளான். தூய்மைகாட்டும் மார்க்கத்தின் தூய்மைக் காப்பதை ஏற்றோர் மீது அல்லாஹ் விதியாக்கியிருக்கிறான். அல்லாஹ் அருளிய மார்க்கத்தின் தூய்மைக் காப்பதில் ஏற்றோர் மட்டற்ற அலட்சியம் காட்டி வருகின்றனர். விளைவு மார்க்க முலாமில் மார்க்கக் கலப்படம் மார்க்கமாய் பவனி வந்து கொண்டிருக்கிறது.
மார்க்கக் கலப்படத்தை முற்றாக முறியடிக்க ஏற்றோர் போர்க்கால அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை ஆழமாகவும், அழுத்தமாகவும் கோடிட்டுக் காட்ட விழைகிறோம்.
கலப்படமாக்குவோர் யார்?

மற்ற அசுத்தங்களைக் களைய மக்கள் கூடுதலாய் முனைப்புக் காட்டி வருகிறார்கள். அதைவிடக் கூடுதலாய் அறிவு ஜீவிகள் பேசியும் எழுதியும் வருகிறார்கள். நவீன தகவல் தொடர்பு ஊடகங்கள் அனைத்தையும் விஞ்சும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றன. ஆனால், மார்க்கக் கலப்படம் மார்க்கத்தை அசுத்தப்படுத்தி வருவதைக் கண்டு கொள்ளாமல் எல்லோரும் அலட்சியப்படுத்தி வருவது ஏன்? இது மார்க்கத்துக்கு மட்டுமின்றி அல்லாஹ்வுக்கும் செய்யும் துரோகம் அல்லவா?

மார்க்கத்தைக் கலப்படமாக்குவோர் யார்? மார்க்கக் காவலர்களாய் மக்கள் நம்பும் அறிஞர்கள்… அறிஞர்களின் அபிப்பிராயங்களைப் பாடத்திட்ட மாக்கிக் கொண்ட மதரஸாக்கள்… மதரஸாக்கள் உற்பத்தி செய்யும் மவ்லவிகள்….

முன்னரே அறிஞர்கள் செய்துள்ள நல்ல விலை போகும் கலப்படங்களின் விநியோகஸ்தர்களும் மவ்லவிகளே! காலச் சூழ்நிலைகளுக்கேற்ப சந்தைக் குத் தேவைப்படும் புதுப்புது கலப்படங்களைத் தயாரித்து முதலீடின்றி பெரும் இலாபத்தை இலகுவாய் அள்ளிக் குவித்து வரும் விநியோகஸ்தர்களும் மவ்லவிகளே!
இப்படி மார்க்கக் கலப்படம் கைமாறி, கைமாறி.. ஒருவர் மாறி மற்றவர், இன்னொருவர் மாற்றி வேறொருவர் என்று வினாடிக்கு வினாடி… மார்க்கக் கலப்படம் கட்டுக்கடங்காத காட்டாற்று வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து விட்டது. கட்டுப் படுத்தவும் தடுத்து நிறுத்தவும் எவருமே இல்லையா? அச்சம் ஏற்படுகிறது.

மார்க்கம் இன்று கலப்பட அசுத்தங்களில் மூழ்கி, மூழ்கி மக்கள் எழுந்து கொண்டிருக்கும் படு மோசமான பரிதாப நிலை! இதற்கு மேலும் இந்த மோசமான நிலை நீடிக்கலாகாது. இனியும் மார்க்க விசயங்களில் மக்கள் ஏமாறாமல் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்வதுதான் உண்மை உணர்ந்தோரின் பொறுப்புமிகு சீரிய மார்க்கப் பணியாக இருக்க முடியும்.

தார்மீகக் கோபம்:
மார்க்கத்தின் தூய வடிவை மக்கள் முறையாக தரிசிக்க ஆவனச் செய்தல் போர்க்கால அவசரம், அவசியம். மார்க்கக் கலப்படத்தை அயராது செய்து வரும் அறிஞர்கள், மதரஸாக்கள், மவ்லவிகள் மீது தார்மீகக் கோபம் எழுவது தவிர்க்க இயலாததே! அது அளவுகடந்து விடக் கூடாது. அது மிதமாய் இருப்பது மிக முக்கியம். தார்மீகக் கோபம் அளவு கடந்து விடும்போது மார்க்கத்தின் தூய வடிவைத் தரிசிக்க அதுவே தடைக்கல்லாகி விடுகிறது. தார்மீகக் கோபம் அதற்கு ஒருபோதும் காரணமாகிவிடக் கூடாது.

மார்க்கக் கலப்படக்காரக் கொடியோர் நம்மீது விரோதம் காட்டுவது சகஜமானதே! அதே வேகத்தில், அல்லது அதைவிடக் கூடுதலாய் அல்லது குறைவாய் நாமும் அவர்களை விரோதிப்பதை மார்க்கம் எந்த நிலையிலும் அனுமதிக்கவில்லை. அவர்கள் நம்மீது எத்தனை விரோதம் பாராட்டினாலும் நாம் அணு அளவும் அவர்கள் மீது விரோதம் பாராட்டலாகாது. எல்லை மீறும் தார்மீகக் கோபம் விரோதமாய் மாறும் அபாயத்தை ஏற்படுத்தி விடும். எச்சரிக்கை! எச்சரிக்கை.

எல்லா நேரத்திலும், எந்த நிலையிலும் கூடுதல் உஷாராய் இருத்தல் அவசியம்! அறியாது அறியாமையில் அல்லது அறிந்து வேண்டுமென்றே நம்மை விரோதித்துப் பழிவாங்குவோரிடம் அல்லாஹ் பழி தீர்த்துக் கொள்வான். சும்மா விட்டுவிட மாட்டான். அவர்களிடம் பழிதீர்த்துக் கொள்வது நமது வேலையல்ல. கோபமூட்டும் போது பழி தீர்த்தல் அல்லாஹ்வின் நியதி.

இறுதியில் அவர்கள் நம்மை கோபமடையச் செய்த போது, நாம் அவர்களிடம் பழி வாங்கினோம். அவர்கள் அனைவரையும் மூழ்கடித் தோம். அல்குர்ஆன் : 44:55

நாம் அவர்களை (அழிக்கப்பட்ட) முந்தியவர்க ளாகவும், (அல்லாஹ்வை கோபமூட்டும்) பின் வருவோர்க்கு (பாடமும் படிப்பினை தரும்) உதாரணம் ஆக்கினோம். அல்குர்ஆன் :44:56

மார்க்க வரம்பு:
இறைவாக்குகள் 44:55,56 கூறும் எச்சரிக்கையை மீண்டும், மீண்டும் படித்து மனிதர்கள் அனைவரும் பாடமும், படிப்பினையும் பெற்றுக் கொள்வது அவ சியம், கட்டாயக் கடமை. நூல்களில், இதழ்களில், பிரசுரங்களில் எழுதும் போது, மேடைகளில் பேசும்போது, கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும்போது, தொலை, அலை பேசிகளில் பேசும் போது, சந்திப்பின்போது, கலந்துரையாடும் போது, இன்னபிற சந்தர்ப்பங்களின்போது… தார் மீகக் கோபத்தைப் பொங்கும் கடலாக்கிவிடலாகாது. வேறு என்ன செய்ய வேண்டும்? பொறுமை காக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் அறிவுறுத்தல்…. எப்படி?

அல்லாஹ்வுக்கு மட்டுமின்றி, நபி மூஸா அலை அவர்களுக்கும் கொடிய விரோதி ஃபிர்அவ்ன் (அல்குர்ஆன் : 20:39) ஏன் மனித இனத்துக்கும் ஃபிர் அவ்ன் கொடிய விரோதியே! அட்டூழியங்கள் அனைத்தின் மொத்த உருவான ஃபிர்அவ்னுக்கும் மார்க்கத்தை எடுத்துக்காட்ட நபி மூஸா, நபி ஹாரூன்(அலை.அம்) இருவருக்கும் அல்லாஹ் கட்டளையிட்டான். ஃபிர்அவ்ன் வரம்பு மீறியவன் (அல்குர்ஆன்:20:43) என்று உஷார் படுத்தியும் உள்ளான்.

வரம்பு மீறுதலில் ஃபிர்அவ்னை வென்றுவிட வேறு யாராலும் முடியாது. வரம்பு மீறுதலில் ஃபிர்அவ்னுக்கு நிகர் ஃபிர்அவ்னே! வரம்பு மீறிய வம்பனுக்கெல்லாம் வம்பனான கொடிய ஃபிர்அவ் னுக்கும் மார்க்கத்தை வரம்பை மீறாமல் சேர்ப்பிக் குமாறு அல்லாஹ் இரு நபிமார்களுக்கும் கட்டளையிட்டு, மக்கள் அனைவருக்கும் அதைப் பாடமும் படிப்பினையும் மிகுந்த கடமையாக்கி இருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

மென்மையான அணுகுமுறை:
வரம்பு மீறிய கொடுங்கோலன் ஃபிர்அவ்னிடம் மார்க்கத்தை இதமான இனிய சொற்களால் சேர்ப்பிக்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். திண்ணமாக, அவன் வரம்பு மீறி விட்டிருக்கின் றான். அவனிடம் நீங்கள் மென்மையாகப் பேசுங்கள். அவன் அறிவுரையை ஏற்கக்கூடும். அல்லது (அல்லாஹ்வை) அஞ்சக் கூடும்.
(அல்குர்ஆன்: 20:44 ஒப்பு நோக்குக: 20:45-48, 79:18,19)

தூய இஸ்லாம் ஃபிர்அவ்னையும் சென்றடைதல்:
அல்குர்ஆன் நெடுகிலும் நபி மூஸா(அலை) வரலாறு இடம் பெற்றுள்ளது. ஃபிர்அவ்னிடம் கலந் துரையாட வேண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம் மேற்கண்ட அல்லாஹ்வின் ஆணையை மூஸா (அலை) மிகவும் சிறப்பாக நிறைவு செய்துள்ளார் கள். அல்ஹம்துலில்லாஹ். அதனால்தான் ஃபிர் அவ்ன் சில நேரங்களில் இஸ்லாத்தை ஏற்க முன் வந் தான். பிரமுகர்கள் தடுத்து விட்டார்கள். ஃபிர்அவ்ன் இஸ்லாத்தை ஏற்கவில்லை. எனினும் அவன் வரை இஸ்லாம் தூய வடிவில் சேர்ப்பிக்கப்பட்டு விட்டது. எப்படி?

அ. மேலும், நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல் களைக் கடலைக் கடக்கச் செய்தோம்.
ஆ.ஃபிர்அவ்னும் அவனது படைகளும், அநீதி யும், அக்கிரமும் இழைப்பதற்காக பின் தொடர்ந்து சென்றனர்.
இ. இறுதியில் ஃபிர்அவ்ன் நீரில் மூழ்கத் தொடங் கிய போது அலறினான்.
ஈ. இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எந்த இறைவன்மீது ஈமான் கொண்டார்களோ அவனைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாருமில்லை என்று நானும் ஈமான் கொண்டேன்.
உ. இன்னும் நான் முஸ்லிம்களில் ஒருவனாக இருக்கிறேன் என்று கூறினான்.
அல்குர்ஆன்: யூனுஸ்:10:90

ஈமான் கொண்ட முஸ்லிம்… என்றாலும்?
அழிவு நெருங்கிவிட்டது. தப்பிக்கும் புகழிடம் வேறு எதுவும் இல்லை. (இ) ஃபிர்அவ்ன் ஈமான் கொண்டான். 10:90 இறைவாக்கின் ஈ, உ, இறுதிப் பகுதி மக்களின் உடனடிக் கவனத்துக்கும் ஆழ்ந்த சிந்தனைக்கும் உரியது.
அவனுக்கு முன்னும் அவனுக்குப் பின்னும் மனித இனம் கண்டிராத கொடிய கொடுங்கோல் ஃபிர் அவ்ன் இஸ்லாத்தை தூய வடிவில் உணர்ந்ததை உணர்த்துகிறது.

1. அல்லாஹ்வை, ஒரே இறைவனாய் ஏற்று மற்ற கடவுள்களை நிராகரித்து அல்லாஹ்வின் ஒரு மையை ஈமான் கொள்ளுதல் (ஈ)

2. அல்லாஹ்வுக்குச் சரணடைந்த முஸ்லிம்களில் ஒருவன் என்று இஸ்லாத்தை ஏற்றுக் கொள் ளுதல்(உ)
இது, ஃபிர்அவ்ன் போன்ற கொடியவன்களிடமும் இஸ்லாம் தூய வடிவில் சேர்க்கப்பட்டுவிட்டது. ஏற்பதும், நிராகரிப்பதும் சம்பந்தப்பட்டோர் சுயப் பொறுப்பில் விடப்பட்டுள்ளது.

அல்லாஹ் அங்கீகரிக்கவில்லை ஏன்?
வேதனை அண்டிவிட்டது. அழிவு நிச்சயம். தப்பிக்கும் முகாந்திரம் ஏதுமில்லை. இறுதிக் கட்டம். வாழ்ந்தக் காலத்தில் வரம்பு மீறுதலை வழக்கமாக் கிக் கொண்டிருந்த கொடியவன் ஃபிர்அவ்ன், இஸ்லாத்தை தூய வடிவில் அறிந்ததைத் தெளி வாகப் பிரகடனப்படுத்தினான். ஈமான் கொண்ட முஸ்லிம்களில் ஒருவன்.

அல்லாஹ் ஏற்றானா? இல்லையே! ஏன்?
அ. (ஃபிர்அவ்னே! நீ) இப்போது தான் ஈமான் கொள்கிறாயா?
ஆ. இதற்கு சற்று முன் வரை நீ மாறு செய்து கொண்டிருந்தாய்.
இ. குழப்பம் விளைவிப்பவர்களில் ஒருவனாக வும் இருந்தாய். அல்குர்ஆன் : 10:91
பிர்அவ்ன் மீது அல்லாஹ்வின் கண்டனக் கணை கள் பாய்ந்தன. தண்டனைக்கு முன்னர் அல்லாஹ் கொடுத்திருந்த அவகாசம் முடிந்தது. அல்லாஹ்வின் தண்டனை வந்துவிட்டால் யாராலும் எந்த நிலையி லும் தப்பிக்க முடியாது. அராஜகத்தின் மொத்த உருவான ஃபிர்அவ்னின் இறுதி முடிவு கொடூரமா யிருந்தது. அவனது உயிரற்ற சடலத்தை அல்லாஹ் பாதுகாப்பதாய் உத்திரவாதம் அளித்தான். ஏன்?
அ. உன் உயிரற்றச் சடலத்தை மட்டும் நாம் பாதுகாப்போம். அல்குர்ஆன் : 10:92
ஆணவத்தால் அதற்குமுன் எவருமே செய்யாத அத்தனை அராஜகங்களையும் செய்து வந்த ஃபிர் அவ்ன் அழிந்தான். கர்வத்தின் மொத்தக் குத்தகைத் தாரனான ஃபிர்அவ்னின் சடலத்தைப் பாதுகாக்க வேண்டுமா? எதற்காக இந்த ஏற்பாடு? ஜீரணிக்க முடியாத அறிவுஜீவிகளுக்கு அல்லாஹ் தந்துள்ள விளக்கம்:
ஆ. உனக்குப் பின்னால் வரக்கூடிய மக்களுக்குப் படப்பினைத் தரும் அத்தாட்சியாக விளங்கும் பொருட்டு… அல்குர்ஆன் : 10:92

மோசமான உதாரணம்:

பெருமை அடித்துச் சிறுமை அடைந்து அழிந்து ஒழிந்த இழிந்தவனுக்கு ஃபிர்அவ்ன் ஓர் மோசமான உதாரணமானான். பெருமை, ஆணவம், கர்வம்… திமிர் பிடித்த தீயவர்களுக்கு விடப்படும் இறை எச்சரிக்கையே ஃபிர்அவ்னுடைய உயிரற்றச் சட லம். பாடமும், படிப்பினையும் பெறுதல் அவசியம். (காண்க 10:92) இன்றளவும் மக்கள் ஃபிர்அவ்ன் சடலத்தை மியூஸியத்தில், தொலைகாட்சியில் மற்ற ஊடகங்களில் பார்த்து வியப்பை வெளிப் படுத்து கிறார்கள். ஆம்! ஃபிர்அவ்ன் உயிரற்ற சடலம் அதி சயத்தில் ஆழ்த்தும் இறை அத்தாட்சியே! ஐயமில்லை.

கர்வத்தின் மொத்தக் குத்தகைக்காரனான ஃபிர் அவ்னின் உயிரற்ற சடலத்தை அல்லாஹ் பாதுகாக்க வேண்டுமா? எதற்காக இந்த ஏற்பாடு? ஜீரணிக்க முடியாத அறிவு ஜீவிகளுக்கு அல்லாஹ் தெளிவு படுத்தியும் உள்ளான். (காண்க: அல்குர்ஆன் : 10:92)

ஆணவத்தால் அதற்குமுன் எவருமே செய்யாத அராஜகங்களைச் செய்து வந்த ஃபிர்அவ்ன் அழிந் தான். பெருமையால் கர்வத்தை வழக்கமாக்கிக் கொண்ட ஃபிர்அவ்ன் உயிரோடிருந்த பொழுது மோசமான உதாரணம். பெருமையால் இழிவடைந் தவனின் இறுதி முடிவு இழிந்தவனின் மோசமான உதாரணம். அதனால் அவன் உயிரற்ற சடலம் பின் வரக்கூடிய மக்களுக்கு எச்சரிக்கையூட்டும் பாடம், படிப்பினையாக இருத்தல் வேண்டும். வெறும் காட்சிப் பொருளாவதற்காக அவன் சடலம் பாது காக்கப்படவில்லை. மறந்துவிட வேண்டாம். மறந் தும் இருந்துவிட வேண்டாம்.

நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி (கண்டுங் காணாமல்) அலட்சியமாய் இருக்கின்றார்கள்.
(அல்குர்ஆன்: 10:92)

எத்தனை, எத்தனை இறை அத்தாட்சிகள், காலம், இடம், சூழ்நிலைக்கேற்ப அல்லாஹ் அருளிக் கொண்டேயிருக்கிறான். இறை அத்தாட்சி அருளப்பட்ட காலத்திற்கு மட்டுமின்றி அடுத்து வரக்கூடிய மக்கள் அவற்றிலிருந்து பாடம், படிப் பினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எத்தனை இறை அத்தாட்சிகளைக் கண்ணால் கண்டாலும் எல்லாக் காலங்களிலும் பெரும்பான்மையினர் அவற்றை அலட்சியப்படுத்துவதை வாடிக்கை யாகக் கொண்டுள்ளனர்.

குறிப்பாகவும், சிறப்பாகவும், இறை அத்தாட்சிகள் உணர்த்தும் பாடம் யாதெனில், இஸ்லாம் தூய வடிவில் நிலைநிறுத்தப் பட வேண்டும். அல்லாஹ் வின் தன்னிகரற்ற வல்லமையை அனைவரும் அறிந்து அல்லாஹ்வை ஒருமைப்படுத்த வேண்டும். மக்கள் வாழ்வு சீர்பட வேண்டும். அல்லாஹ்வை அஞ்சக் கூடிய “தக்வா’ உள்ள மக்கள் சமுதாயம் மலர வேண்டும். எனினும் இறை அத்தாட்சிகளை அலட்சியப்படுத்துவதே பெரும்பான்மையினர் வாடிக்கை. இன்றளவும் இதே நிலை நீடிக்கிறது. ஃபிர்அவ்ன் உயிரற்ற சடலத்தைக் காணும் நவீன அறிவியல் யுக மக்களும் படிப்பினைப் பெற வில்லை. அலட்சியப்படுத்தி வருகிறார்கள். படிப்பினைப் பெற்றோர் குறித்த தகவல் அறிந்தோர் அந்நஜாத்துக்கு அறியத்தர அன்போடு விழைகிறோம். படிப்பினை பெறுவோர் குறைவானவர் களே! அதனால் அவர்கள் பற்றிய தகவல் அறிய ஆவல் மேலிடுவது இயல்புதானே!

எல்லாம் அறிந்த அல்லாஹ், பின் நடக்க இருப்பதைத் துல்லியமாக அறிந்தவன், ஃபிர்அவ்ன் கர்வத்தால் கெட்டழியப் போவதையும் முன்னரே அறிந்தவன், பெரும்பான்மையினர் மார்க்கத்தை ஏற்க மாட்டார்கள், அல்லாஹ் அருளியதைப் பின் பற்ற மாட்டார்கள் (அல்குர்ஆன்: 7:3, 32:13, 11: 118,119)) இதையயல்லாம் நன்கறிந்த அல்லாஹ், படைப்பினங்கள் அறிய முடியாத அனைத்தையும் அறிந்தவன். ஃபிர் அவ்ன் போன்ற கொடியவன் களுக்கும் இஸ்லாம் தூய வடிவில் சென்றடைய ஏற் பாடு செய்துள்ளான். இதை ஃபிர்அவ்ன் ஒப்புதல் வாக்குமூலம் தெளிவாக உணர்த்துகிறது. அனைத் தும் அறிந்த அல்லாஹ் இம்மையில் ஏற்றோருக்கும், நிராகரிப்போருக்கும், மறுப்போருக்கம் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அர்ரஹ்மான் அளப் பெரும் அருட்கொடைகளை வாரி வாரி வழங்கும் வள்ளல். கொடியவன் ஃபிர்அவ்ன், அல்லாஹ்வின் கொடிய விரோதி, அவனுக்கும் இஸ்லாம் தூய வடிவில் சென்றடையச் செய்துள்ளான்.

இவ்வாறே காலங்கள் தோறும் வாழ்ந்து கொண் டிருந்த வம்பர்கள், கொடுங்கோலர்கள், அநியாயக் காரர்கள், கொடியவர்கள், அப்பாவிகள், பாமரர் கள்… என்று அனைத்துத் தரப்பு மக்களிடமும் இஸ்லாம் தூய வடிவில் சென்று சேர்ந்துள்ளது. அல்குர் ஆன் பதிவு செய்துள்ள அனைத்து நபிமார்கள் வரலாறு, இதை மெய்பிக்கும் சான்றாய்த் திகழ்கிறது.

இஸ்லாத்தைத் தூய வடிவில் நிலைநாட்டும் பணி யில் அனைத்து நபிமார்களும் அல்லாஹ்வின் கட்ட ளையைப் பிராதானப்படுத்தியுள்ளது குறிக்கத் தக்கது. இஸ்லாம் தூய வடிவில் நிலைநாட்டப்படும் நபிமார்களின் இலட்சிய அழைப்புகளில் சுடு சொற் கள், கடுஞ் சொற்கள், அவசியமற்ற சாடல்கள், தேவையற்ற விமர்சனங்கள், வசவுகள்… அவை போன்ற எதுவும் இம்மியும் இடம் பெற்றதில்லை. இதை அழுத்தமாய் அடிக்கோடிட்டுக் கொள்க. கல் வெட்டாய் மனதில் பதிவு செய்து கொள்க. எந்த நிலையிலும் மறந்திடலாகாது.

பாடமும், படிப்பினையும் பெறுக:
உலக மஹா கொடியவன் ஃபிர்அவ்ன், அவனுக்கு நபி மூஸா(அலை), ஹாரூன்(அலை) கொடுத்த இஸ்லாமிய அழைப்பில் இஸ்லாத்தின் தூய்மை அடிபிசகாமல் பிரதிபலிக்கப்பட்டது.

கொடியவனுக்குக் கொடியோனாய் இருந்தா லும் அவனுக்கு விடுக்கப்படும் அழைப்பில் மென்மை யான அணுகுமுறை கையாளப்பட்டது. அதனால் கொடியவன் ஃபிர்அவ்ன், ஈமான் கொண்டு இஸ் லாத்தை ஏற்று முஸ்லிம்களில் ஒருவனாகிவிட்டதாய் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். (காண்க. அல்குர்ஆன் 10:90) இது ஃபிர்அவ்ன் வரை இஸ்லாம் தூய வடிவில் சென்று சேர்ந்துள்ளதைத் தெளிவுபடுத் துகிறது. ஆனால் அதை அல்லாஹ் ஏற்கவில்லை.
(காண்க. அல்குர்ஆன் 10:91)

மென்மையான அணுகுமுறைதான், இஸ்லாமிய அழைப்பில் இஸ்லாத்தின் தூய்மையைப் பிரதிபலிக் கச் செய்வதாகும். இதே ஆய்வை ஊன்றிப் படித்து ஆழ்ந்து சிந்தித்து எந்தெந்த விதங்களில் முடியுமோ, அந்தந்த விதங்களில் அனைத்துவித பாடமும், படிப் பினையும் பெற்றுக் கொள்வது அனைவர் மீதும் நீங்காக் கடமையாகும். அல்லாஹ்வின் அறிவுறுத்தல் இதோ!

ழி. முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் இவ்வரலாறு களில் பகுத்தறிவுடையோர்க்கு அரிய (பாடம்) படிப்பினைகள் உள்ளன.

ணு. (குர்ஆன் விவரிக்கும்) இச் செய்திகள் புனைந்து ரைக்கப்பட்டவை அல்ல.
உ. இந்த குர்ஆன் தனக்குமுன் அருளப்பட்ட அற நூல்களை மெய்ப்பிக்கக் கூடியதாகவும், ஒவ் வொன்றையும் விவரிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

d. ஈமான்கொள்ளும் சமூகத்தார்க்கு நேர்வழியாக வும், அருளாகவும் திகழ்கிறது.
(அல்குர்ஆன் : யூஸுஃப் 12:111)
(இன்ஷா அல்லாஹ், அடுத்த இதழில் சந்திப்போம், சிந்திப்போம், சீர்பெறுவோம்)

Previous post:

Next post: