ஐயமும்! தெளிவும்!!

in 2015 ஜூன்,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : 60 வயதுப் பெண் தூரத்து உறவுக்கார ஆண் (அண்ணன் உறவு) உடன் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா? M. ஜலாலுதீன், சென்னை.

தெளிவு : செல்லக்கூடாது.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் கொண்டு ஈமான் கொண்ட பெண் அவளுக்கு மஹ்ரமான (திருமணம் முடிப்பதற்குத் தகுதியற்ற தகப்பன், உடன் பிறந்தவன்) துணையில் லாமல் ஓர் இரவு, ஒரு பகல் தூரம் பயணம் செய்வது ஹலால் ஆகாது. அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி.

என்று தெளிவான ஹதீஸ் வந்துள்ளதால் தகுந்த துணையின்றி ஹஜ் செய்வது கடமை யில்லை. மேலும் ,

மஹ்ரமானவன் இல்லாமல் ஒரு பெண்ணு டன் ஆண் தனித்திருக்க வேண்டாம். மஹ்ர மான(துணை) இல்லாமல் பயணம் செய்ய வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் சொல்வ தைக் கேட்டபோது ஒரு மனிதர், “”யாரஸூலல் லாஹ்” என மனைவி ஹஜ்ஜுக்குப் புறப்பட் டிருக்கிறாள். நான் இன்னின்ன போர்களில் ஈடு பட்டிருக்கின்றேன் (இது சரியா?) என்று கேட் டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உனது மனை வியுடன் ஹஜ்ஜுக்குச் செல் என்று கூறினார் கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம்.

மேற்கண்ட ஹதீஃத்கள் மூலம் தகப்பன், கணவன், மகன், உடன் பிறந்த அண்ணன், தம்பி, சிறிய தந்தை, பெரிய தந்தை போன்ற தகுந்த துணையின்றி பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்வது கூடாது என்று உணரலாம்.
———————————————————-
ஐயம் : தொழுகைகளுக்கு முன்னால் பாங்கு, இகாமத் சொல்வதற்கு கேஸட்டை உபயோகித்து முஅத்தின் இல்லாமல் அழைப்பு விடுக்கலாமா? நதீம் அஹ்மது, ஆம்பூர்.

தெளிவு : என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள். தொழுகை நேரம் வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். பின்பு உங்க ளுக்கு உங்களில் பெரியவர், இமாமத் செய்யட் டும். அறிவிப்பவர் : மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரி), நூல் : புகாரி, முஸ்லிம்.

இந்த ஹதீஃதில் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும் என வந்துள்ளது. எனவே கேஸட் என்பது உயிருள்ளதல்ல.

கியாமத் நாளில் மூன்று பேர் கஸ்தூரி மலை மேல் இருப்பார்கள். 1.அல்லாஹ்வின் கட்டளைகளையும் தனது எஜமானனின் கடமைகளையும் நிறைவேற்றிய அடிமை. 2.ஒரு கூட் டத்தார் பொருந்திக் கொண்ட நிலையில் அவர் களுக்கு இமாமத் செய்யும் இமாம்,

3.ஒவ் வொரு நாள் இரவிலும், பகலிலும் 5 வேளை தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் மனிதர்.  அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி) நூல்: திர்மிதி.

இந்த ஹதீஃதில் தொழுகைக்காக அழைக்கும் மனிதர் என்ற வார்த்தையை நபி(ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

யா அல்லாஹ் (தொழவைக்கும்) இமாம்க ளுக்கு நேர்வழி காட்டு, பாங்கு சொல்பவர் களை மன்னித்துவிடு என்று நபி(ஸல்) துஆ செய்தனர். அறிவிப்பவர்:அபூ ஹுரைரா(ரழி),
நூல்கள்:அஹ்மது, அபூதாவூது, திர்மிதி.

இந்த ஹதீஃதில் மன்னித்துவிடு என்று நபி (ஸல்) அவர்கள் துவா செய்துள்ளனர். கேஸட், பாவம் செய்வதுமில்லை. அதற்கு மன்னிப்பு என்பதும் இல்லை என்பதை நாம் நன்றாகவே புரிந்து வைத்துள்ளோம்.

——————————-

ஐயம் : கணவரின் பெயரை மனைவி கூறுவது சரியா? தவறாகுமா? கூறத் தடை உண்டா?
A.முஹம்மத் ஷஹீத், UAE

தெளிவு : ஒருமுறை ரசூல்(ஸல்) அவர்கள் தம் மனைவி ஆயிஷா(ரழி) அவர்களிடம், ஆயிஷாவே நீ என்மீது சந்தோஷ உள்ளத்துடன் அல்லது சின மான உள்ளத்துடன் இருப்பதை நான் நன்கு அறிந்து கொள்வேன் என்றார்கள். அதற்கு ஆயிஷா(ரழி) அவர்கள் எப்படி அறிவீர்கள் என வினவ, அதற்கு நபியவர்கள், ஆயிஷாவே நீ பேசும்பொழுது சில சமயம் முஹம்மதின் ரப்பின் மீது சத்தியமாக என்று கூறினால் அன்பு உள்ளத்துடன் நீ இருப்பதாகவும், இப்றாஹீ மின் ரப்பின் மீது சத்தியமாக என கூறினால் நீ நல்ல மன நிலையில் இல்லை என்றும் கணித்துக் கொள்வேன் என்றார்கள்.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் நபியவர்க ளைப் பார்த்து, யா ரசூலல்லாஹ், நான் இப்றாஹீமின் ரப்பின் மீது ஆணையாக என்று கூறியது உங்கள் மீது சினங் கொண்ட மன நிலையில், தங்களின் பெயரைச் சொல்வதைத்தான் தவிர்த்துக் கொண்டேனேயன்றி, உங்களை வெறுக்கவில்லை என்றார்கள். அறிவிப்பவர் :
அன்னை ஆயிஷா(ரழி), ஆதாரநூல் : புகாரி, முஸ்லிம்.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் கணவரின் பெயரைக் கூறியிருக்கிறார்கள். நபியவர்களும் தடுக்கவில்லை. எனவே பெண்கள் பிறருக்குத் தகவல் தெரிவிக்கவோ, இன்னாருடைய மனைவி என்பதை விளக்கக் கணவரின் பெயரைக் கூறுவதோ தவறாகி விடாது.

——————————–

ஐயம் : 1. ஒவ்வொரு மனிதனும் தான் செய்த செயலுக்கு (தானே) பொறுப்பாளியாக இருக் கிறான். (52:21)
2. அணுவளவு நன்மை செய்தோர் அதன் பலனைக் கண்டு கொள்வர், அணுவளவு தீமை செய்தோர், அதன் கேட்டையும் கண்டு கொள் வர் (99:7) உங்களுக்கு அவனை(அல்லாஹ்வை) அன்றி உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாருமில்லை. நீங்கள் (இதனை) சிந்திக்க வேண்டாமா? (32:4)

3. எச்சுமையாளனும் (தனது சுமையை அன்றி) மற்றெவரின் சுமையையும் சுமந்து கொள்ள மாட்டான் (53:38). இக்கருத்து குர் ஆனின் பல வசனங்களில் இடம் பெற்றுள்ளது. வி­யம் இவ்வாறிருக்க, ஒருவர் மற்றொரு வரின் பாவ மன்னிப்புக்காக அல்லது அவர் உயர் பதவி அடைய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்வதில் என்ன அர்த்த மிருக்கிறது? இவ்வாறு ஒருவர் மற்றொருவருக் காக வக்காலத்து வாங்கிக் கொண்டு, அவர் செய்த பாவத்திற்கு இவர் அல்லாஹ்விடம் மன் னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தால், அவர் தாம் செய்த பாவத்திற்குரிய தண்டனையை அவர் எப்படி அனுபவிப்பது? தக்க ஆதாரத்துடன் இச் சந்தேகத்தைத் தெளிவுபடுத்துக)
M. யூசுப் மரைக்காயர், திருவனந்தபுரம்.

தெளிவு : 1. பின்னர் அவர்கள் எங்கள் ரட்ச கனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்க ளுக்கு முந்தியவர்களான எங்களின் சகோதரர்க ளுக்கும் நீ மன்னிப்பருள்வாயாக! அன்றி ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்கள் உள் ளங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! நீயோ, மிக்க இரக்கமுள்ளவனும், கிருபை மிக்க வனுமாவாய் என்று கூறுவார்கள். (59:10)
2. நபியே நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை என்று உறுதியாக நம்பு வீராக! மேலும் உம்முடைய பாவதற்காகவும், மூஃமின்களாகிய ஆண்களுக்காகவும், பெண் களுக்காகவும் (எம்மிடம்) பாவ மன்னிப்புத் தேடுவீராக! (47:19)

3. அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சூழ்ந்துள்ளவர்களும் தங்கள் இறைவ னின் புகழைக் கொண்டு அவனைத் துதி செய்கி றார்கள், அவனை விசுவாசிக்கிறார்கள், ஈமான் கொண்டோரின் பாவங்களை மன்னிக்கும்படி யும் கோருகிறார்கள். எங்கள் ரட்சகனே! நீ (உனது) ஞானத்தாலும் கருணையாலும், யாவையும் சூழ்ந்திருக்கிறாய், எனவே பாவ மன்னிப்புத் தேடி உன் வழியைப் பின்பற்றுப வர்களுக்கு நீ மன்னித்தருள்வாயாக!. (40:7)

4. எனது ரட்சகனே! நான் சிறு பிள்ளையாயி ருக்கும்போது, என் பெற்றோர் என்னைக் கிருபையாய் வளர்த்தது போன்று, அவ்விரு வருக்கும் நீ கிருபை செய்தருள்வாயாக! (17:24)

தாங்கள் குறிப்பிட்டுள்ள திருவசனங்களில் காணப்படுவதுபோல் ஒவ்வொரு நபரும் தாம் செய்த நன்மை, தீமையின் லாப, நஷ்டங்களை அனுபவித்தே தீரவேண்டும் என்பதில் சிறிதே னும் சந்தேகமில்லை, ஏனெனில், அது அல்லாஹ்வின் எச்சரிக்கை, வல்ல அல்லாஹ் பாவிகளுக்கு அவ்வாறு எச்சரிக்கை விடுத்ததன் பின்னர், அவர்கள் மீது கருணைகூர்ந்து அவர் களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான பரி காரங்களையும் அல்குர்ஆனில் பல இடங்களில் கூறியிருப்பதால், அவற்றையும் கவனித்தே ஒரு முடிவுக்கு வரமுடியும்.

அல்லாஹ் பாவிகளைத் தண்டிப்பதாகக் கூறிவிட்டால் அவர்களை அவன் தண்டித்தே தீரவேண்டும் என்பதல்ல, அவன் அவர்களை மன்னிக்கவும் செய்யலாம்,ஏனெனில், அவன் செய்வது பற்றி கேட்பதற்கு எவருக்கும் அதி காரமில்லை, அவனே அனைவரைப் பற்றியும் கேட்கும் அதிகாரமுள்ளவனாகும்.

அவன் தான் நாடியவரை மன்னிப்பான், தான் நாடியவரை தண்டிப்பான். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் கொண்ட வனாகும் (2:284)

ஆகவே மேற்காணும் திருவசனங்களின் மூலம் ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம் சகோதர ருக்கு பாவமன்னிப்புத் தேடலாம் என்பது மட்டுமின்றி பாவமன்னிப்புத் தேட வேண்டும் என்பதையும் உணர்கிறோம்.

அல்லாஹ் குறிப்பாக, தனது நபி அவர்க ளுக்கு உமது தவறுக்கு நீர் பாவமன்னிப்புத் தேடுவதுடன், உம்மைப் பின்பற்றிய மூமினா கிய ஆண், பெண் அனைவருக்காகவும் பாவ மன்னிப்புத் தேடுவீராக! என்று உபதேசிப்பதன் மூலம் பொதுவாக அனைத்து மூமின்களும் பிற மூமின்களுக்கு பாவமன்னிப்புத் தேடுவது அவசியம் என்பதை உணர்த்துகிறான்.
கிருபையுள்ள ரஹ்மான் பாவியாகிவிட்ட தனது அடியார் மீது கொண்டுள்ள அளவிலாக் கருணையினால், மீண்டும் அவர்களை நல்லவர் களாக, தனக்கு உவந்தவர்களாக ஆக்கும் பொருட்டே ஒரு மூமினைப் பிற மூமினுக்கும், நபியைத் தமது உம்மத்துக்கும் பாவமன்னிப்புத் தேடும்படிப் பணித்துள்ளான்.

அது மட்டுமின்றி, தனது மலாயிகத்துமார்க ளையும் கூட மூமின்களுக்காகப் பாவமன்னிப் புத் தேடுவதற்கும், நல்ல துஆ செய்வதற்கும் நியமித்துள்ளான் என்பதை திருகுர்ஆன் (40:7) வசனத்தில் பார்க்கிறோம்.

இம்மகத்தான சலுகைகள் அனைத்தும் இறை விசுவாசிகளான மூமின்களுக்கு மட்டுமே இறையருளால் அருளப்பட்டிருக்கின்றன. முஷ்ரிக்குகள் (இணைவைத்து வணங்குபவர்) தமது நெருங்கிய உறவினர்களாயிருப்பினும் நிச்சயமாக அவர்கள் நரகவாசிகள் என்பது தெளிவானதன் பின்னர் அவர்களுக்காக பாவ மன்னிப்புக் கோருவது நபிக்கும்,ஈமான் கொண் டவர்களுக்கும் முறையல்ல. (9:113)

இவ்வசனத்தின் மூலம் ஒரு மூமினாகியவர் இணைவைத்து வணங்கும் முஸ்லிம் அல்லாத வர்களுக்கு எக்காரணத்தை முன்னிட்டும் பாவ மன்னிப்புத் தேடுவது (ஹராம்) கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

———————————————————-

ஐயம் : இடது கையால் உண்ணவோ, பருகவோ கூடாது என்பதற்கும், பிஸ்மில்லாஹ் சொல்லித் தான் எதையும் சாப்பிட வேண்டும் என்பதற் கும் ஹதீஃதின் வாயிலாக ஆதாரம் உண்டா?
ஹைதர் அலி, இளங்காகுறிச்சி

தெளிவு : உங்களில் எவரும் தமது இடது கையால் உண்ணவோ, குடிக்கவோ செய்யாதீர். ஏனெனில் நிச்சயமாக ஷைத்தான் தனது இடது கையால் உண்ணவும், குடிக்கவும் செய்கிறான்.
இப்னு உமர்(ரழி) முஸ்லிம்.

அன்னை உம்மு ஸலமா(ரழி) அவர்களின் முந்தைய கணவர் அபூ ஸலமா அவர்களின் மகன் உமர்(ரழி) என்பவர் அறிவித்துள்ளார். நான் நபி(ஸல்) அவர்களின் மேற்பார்வையில் அவர்களிடம் இருந்து வந்தபோது, (ஒருமுறை, சாப்பிடும்போது) எனது கை சாப்பாட்டுப் பாத்திரத்தில் எல்லாப் பக்கங்களிலும் சுழன்று வருவதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் என்னை நோக்கி, குழந்தாய்) பிஸ்மில்லாஹ் சொல்லி, உமக்கு அருகில் இருப்பதை உமது வலது கையால் சாப்பிடும் என்றார்கள். உமரு பின் அபிஸலாமா(ரழி), புகாரி, முஸ்லிம்.
ஸலமத்து பின் அக்வம்(ரழி) அறிவிக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்களின் அருகில் ஒருவர் தனது இடக்கையால் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உமது வலக்கையால் சாப்பிடும் என்றார்கள். அதற்கவர் (தனது ஆண வத்தால் வலக்கையால்) சாப்பிட முடியாது என்றார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் “உனக்கு (வலக்கையால்) சாப்பிட முடியாது என்று கூறிவிட்டு இவரது ஆணவத்தைத் தவிர வேறு எதுவும் நான் கூறியதை அவன் செய்வதற்குத் தடையாக இருக்கவில்லை என்றார்கள். பின்னர் அவர் வலக்கையை அவரது வாய்க்கு உயர்த்தவே இல்லை. (அந்நிலையில் செயலற்றுப் போய்விட்டது) (முஸ்லிம்)

—————————————–

ஐயா: அல்லாஹ்வின் வீட்டை (பள்ளிவாசலை) பரிபாலனம் செய்யக்கூடியவர்களுக்கு என்ன தகுதிகள் வேண்டும்? குர்ஆனில் விளக்கம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நூருத்தீன், தோப்புத்துறை

தெளிவு : அல்லாஹ்வின் வீட்டை (பள்ளி வாசலை) பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, தொழுகையைக் கடைபிடித்து, ஜகாத்தை முறையாகக் கொடுத்து, அல்லாஹ் அல்லாத மற்றெவருக்கும் அஞ்சாதவர்கள்தாம்; இத்தகையவர் தாம் நேர்வழியில் இருப்பதாக நம்பத்தக்கவர்கள். (9:18)
மேற்காணும் ஐந்து அம்சங்ளும் உடைய நல்லவரே இறை இல்லங்களைப் பரிபாலனம் செய்ய தகுதி படைத்தோராவர். ததஜவினர் நிர் வாகம் செய்வதை இமாமத் செய்வதாக மூடத் தனமாகச் சொல்கின்றனர். இது பெரும் தவறும், பெரும் வழிகேடுமாகும்.
ஐயம் : உலகில் சிலரேனும் முழுமையாக குர் ஆன், ஹதீஃதின் ஏவல் விலக்கல்களை ஏற்று எப் பாவமும் செய்யாது, பூரணமாக வாழ முடி யுமா? வாழ்ந்திருக்கிறார்களா? விளக்கம் தேவை.    இமாம் அலி, கும்பகோணம்.

தெளிவு : முறைப்படி வாழ முடியுமா? வாழ்ந்தி ருக்கிறார்களா? என்று தாங்கள் கேட்பதைப் பார்த்தால் அவ்வாறு வாழ்வதற்கு சாத்தியக் கூற இல்லை என்று கூறுவீர் போல் தெரிகிறதே! அவ்வாறு மனிதரால் சாத்தியமில்லாதவை எவற்றையும் வல்ல நாயன் நம்மீது கடமை யாக்கவில்லை.

இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எவ் விதச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. (22:78)
அல்லாஹ் யாதோர் ஆத்மாவுக்கும் அது தாங் கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை. (2:286)

இவ்வாறு வல்ல அல்லாஹ் மார்க்கத்தை அனைவரும் அனுஷ்டிப்பதற்கு ஏதுவான வகை யில் இலகுவாக அமைத்துத் தந்திருப்பதாகக் கூறியிருக்கும்போது முழுமையாக முறைப்படி ஷரீஅத்தைப் பின்பற்றி வாழ முடியுமா? வாழ்ந் திருக்கிறார்களா என்ற தங்களின் கேள்வி வியப்பை அளிக்கிறது. ஷரீஅத்தின் நெறி பிறழாது நேர்மையாக நாம் நடப்பதுடன், மற்றவர்களையும் அவ்வாறு நடக்கப் பெரு முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம் இவ்வுலகம் முடியும் வரை இருந்து கொண்டிருக்கும் என்று நபி (ஸல்) அவர்களின் ஹதீஃதின் வாயிலாக காணுகிறோம்.

இறுதி நாள் என்னும் இறைவனின் கட்டளை வரும் வரை எனது சமுதாயத்தில் ஒரு கூட்டத்தார் (சத்தியத்தை நிலைநாட்டும் வகையில்) மேலோங்கியவராக இருந்து கொண்டேயிருப் பர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முகீரத்துபின் ஷிஃபா(ரழி), (புகாரீ)

—————————————

ஐயம் : பாங்கு, இகாமத்து எந்த ஆண்டில் அமுலுக்கு வந்தது விளக்கம் தேவை.
முஹம்மது இத்ரீஸ், திருச்சி-2.

தெளிவு : பாங்கு ஹிஜ்ரி முதல் ஆண்டில் அமுலுக்கு வந்தது! அமுலாக்கப்பட்டதன் நோக்கம்:

அப்துல்லாஹ்பின் உமர்(ரழி) அறிவிக்கிறார்கள்:
முஸ்லிம்கள் மதீனாவுக்கு வந்தபோது, தொழுகைக்காக, ஒரு நேரத்தைக் குறித்து வைத் துக் கொண்டு, அதில் அனைவரும் கூடுவர். அதற்காக அழைப்புக் கொடுப்பதற்குரிய ஏற் பாடு எதுவுமில்லாதிருந்தது.

ஒருநாள் அதுபற்றித் தம்மிடையே பேசத் துவங் கினர், அவர்களில் ஒருவர் கிறிஸ்தவர்களின் மணியைப் போன்று, ஒரு மணியைத் தயாரித் துக் கொள்ளுங்கள் என்றார், மற்றொருவர் யூதர் கள் கொம்பு ஊதுவது போன்று, ஒரு கொம் பைத் தயாரித்துக் கொள்ளுங்கள் என்றார். அப்போது உமர்(ரழி அவர்கள் தொழுகைக்கு அழைக்கும் ஒரு அழைப்பாளரை அனுப்பி வையுங்கள் என்றார்கள்.

உடனே நபி(ஸல்) அவர்கள், (உமர்(ரழி) அவர்களின் அவ்வபிப்பிராயத்தைச் சரிகண்டு) பிலாலே! நீ எழுந்து (மக்கள்) தொழ வருவதற்கு அழைப்புக் கொடுப்பீராக! என்றார்கள்! இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம், திர்மதீ, நஸயீ

ஐயம் : மனிதர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் நபியாக இருப்பது போல் ஜின் கூட்டத்தாருக்கு நபிகள் உண்டா? விளக்கம் தேவை.
அப்துல் மாலிக், திருமானூர்.

தெளிவு : ஜின் கூட்டத்தாருக்கு அவர்களின் இனத்தைச் சார்ந்த நபிமார்கள் அனுப்பப்பட்டி ருப்பதாக குர்ஆன், ஹதீஃதின் வாயிலாக எவ் வாதாரமும் கிடையாது. ஆனால் மனித இனத் திலிருந்தே ரசூல்மார்களும், நபிமார்களும் அனுப்பப்பட்டுள்ளானர் என்பதை பின்வரும் திருவசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.(21:7)

(நபியே!) உமக்கு முன்னரும், மனிதர்களையே அன்றி (மற்றொவரையும்) நம்முடைய வேதத்தையும் ஏற்படுத்தினோம். (57:26)

ஜின் வர்க்கத்தில் நபிமார்கள் நியமிக்கப்படா திருப்பினும் ஜின் கூட்டத்தார் அவ்வப்போது வாழ்ந்து வந்த நபிமார்களைச் சந்தித்து விஷயங்களைத் தெரிந்து, தமது ஜின் கூட்டத்தாரிடம் அவ்விஷயங்களைக் கூறி அவர்களை எச்சரித்திருப்பதன் காரணத்தால், திருகுர்ஆன் ஜின்களில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோர் இருந்திருக்கின்றனர் என்பதை பின்வருமாறு தெளிவு படுத்துகிறது.

(நபியே!) இந்த குர்ஆனை செவியேற்கும் பொருட்டு ஜின்களில் சிலரை நாம் உம்மிடம் வருமாறு செய்தோம். அவர்கள் அங்கு வந்த போது (தங்கள் இனத்தாரை நோக்கி) நீங்கள் வாய் பொத்தி இதனைக் கேட்டுக் கொண்டு) இருங்கள் என்று கூறினார்கள். (அது) ஓதி முடிவு பெறவே தங்கள் இனத்தாரிடம் சென்று அவர் களுக்கு அச்சமூகம் எச்சரிக்கை செய்தனர்.

எங்கள் இனத்தவரே! நிச்சயமாக நாங்கள் ஒரு நெறிநூலை செவியுற்றோம். அது மூஸாவுக் குப் பின்னர் அருளப்பட்டுள்ளது. (அது) தனக்கு முன்னுள்ள நெறிநூல்களையும், உண்மைப் படுத்துகின்றது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் வழிகாட்டுகிறது.

எங்கள் இனத்தாரே! அல்லாஹ்வின்பால் அழைப்பவருக்கு பதில் கூறி, அவரை விசுவாசியுங்கள். உங்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காத்துக் கொள்வான். (46:29-31)

Previous post:

Next post: