சூரியக் கணக்கை ஏற்கும் மவ்லவிகள் சந்திரக் கணக்கை மறுக்கும் மர்மம் என்ன?

in 2015 ஜுலை,பிறை

அபூ அப்தில்லாஹ்

சூரியனும் சந்திரனும் துல்லிய கணக்கின்படியே சுழல்கின்றன என்று உறுதி கூறும் குர்ஆன் வசனங்களின் அப்பகுதிகள் வருமாறு.

சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே (சுழல்கின்றன. (6:96)
சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங் களையும் (தன்) கட்டளைக்குக் கீழ்ப்படிய வைத்தான். (7:54)

ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக் கணக்கையும் நீங்கள் அறியும் பொருட்டு அதற்கு (சந்திரனுக்கு) பல படித்தரங்களை உண்டாக்கினான். (10:5)

அவனே(அல்லாஹ்) சூரியனையும், சந்திர னையும் (தன்)அதிகாரத்தினுள் வைத்துள்ளான். அனைத்தும் குறிப்பிட்டக் காலத்திட்டப் படியே சுழல்கின்றன. (13:2)

சூரியையும், சந்திரனையும் தம் வழிகளில் (முறையான கணக்கின்படி) செல்லுமாறு அவனே உங்களுக்காக வசப்படுத்திக் கொடுத் தான். (14:33)

இரவையும் பகலையும், சூரியனையும் சந்திரனையும் உங்களுக்கு அவன் வசப்படுத்திக் கொடுத்தான். (16:12)

இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் அவனே படைத்தான். அவை ஒவ்வொன்றும் (கணக்கின்படி) வானில் நீந்து கின்றன. (21:33)

வானங்களையும், பூமியையும் படைத்து சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தி இருப்பவன் யார்? (29:61)

சூரியçனும், சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்துள்ளான். ஒவ்வொன்றும் குறிக்கப்பட்டத் தவணைப்படியே சுழல்கின்றன. (35:13)

சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தி யுள்ளான். இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப்படியே சுழல்கின்றன. (39:5)

சூரியனும், சந்திரனும் கணக்கின்படியே உள்ளன. (55:5)

இந்த குர்ஆன் வசனங்களின் மேலே எடுத்தெழுதப்பட்டப் பகுதிகளை மீண்டும் மீண்டும் படித்து மனதிலிருத்திக் கொள்ளுங்கள்.

அப்படி இந்த குர்ஆன் வசனங்களை யார் நேரடியாகப் படித்து விளங்குகிறார்களோ. அவர்கள் நிச்சயமாக எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்விடம் சூரியனுக்கு ஒரு சட்டம், சந்திரனுக்குப் பிரிதொரு சட்டம் என அறிவீனமாக விதண்டாவாதம் செய்யமாட்டார்கள்.

அதற்கு மாறாக எப்படிச் சூரியனின் சுழற்சியைக் கணக்கிட முடிகிறதோ அதேபோல் சந்திரனின் சுழற்சியையும் கணக்கிட முடியும் என்பதை நிச்சயம் ஏற்பார்கள். எப்படி ஐங்காலத் தொழுகை நேரங்களை முன்கூட்டியே கணக்கிட்டுப் பள்ளிகளில் தொழுகை நேர அட்டவணையைத் தொங்கவிட்டிருக்கிறார்களோ அதேபோல் சந்திர மாதங்களின் துவக்கத்தையும், முடிவையும் முன்கூட்டியே கணக்கிட்டு அட்டவணைத் தொங்கவிட முடியும் என்பதையும் மறுக்காமல் ஏற்பார்கள்.

சூரியனும், சந்திரனும் ஒரே நிலையில் கணக்கின்படியே சுழல்கின்றன என்று மேலே எடுத்தெழுதப்பட்ட குர்ஆன் வசனங்கள் மட்டுமல்ல, பல ஹதீஃத் ஆதரங்களும் இருக்கின்றன. எந்த அரபி பதம் ருஃயத் சந்திரன் விஷயத்தில் கண்ணால் பார்ப்பது மட்டுமே என வாதிடுகிறார்களோ அதே அரபி ருஃயத் பதம் சூரியன் விஷயத்திலும் ஹதீஃத்களில் காணப்படுகிறது. உதாரணமாக ஐங்காலத் தொழுகை நேரங் களை அன்று கண்ணால் பார்த்தே (ருஃயத்) முடிவு செய்தார்கள். இச்செய்தி அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவித்து முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

அதே போல் அன்று நோன்பை ஆரம்பிக்க மெய் வெள்ளையை கண்ணால் பார்த்தே (ருஃயத்) முடிவு செய்தார்கள். நோன்பு துறக்க சூரிய அஸ்தமனத்தைக் கண்ணால் பார்த்தே முடிவு செய்தார்கள். (பார்க்க புகாரீ. 1941)

இன்று அவர்களே இவற்றைக் கண்ணால் பார்ப்பதைப் புறக்கணித்துவிட்டு கடிகாரத்தில் நேரம் பார்த்துச் செயல்படுவது எப்படி? மேலும் ருஃயத்தின் திரிபுகளான தர, அரா, தரா, யரா போன்ற பதங்கள் புறக்கண்ணால் மட்டும் பார்ப்பதைக் குறிக்கவில்லை. உள்ளத்தால், தகவலால், அறிவால், ஆய்வால், கணிப்பினால் கணக்கீட்டால் பார்ப்பதையும் குறிப்பிடுகின் றன என்பதை அறிய முடியும். (பார்க்க : 37:102, 105:1, 89:6, 3:143, 8:48, 12:43, 20:46, 27:20, 40:29)

மேலும் தர என்ற பதம் 36 இடங்களிலும், யரா 8 இடங்களிலும் இப்படி சுமார் 164 இடங்களில் குர்ஆனைப் பொருள் அறிந்து அன்றாடம் படித்து வருகிறவர்கள், தமிழ் மொழியில் “”பார்த்து” என்ற பதம் கண்ணால், உள்ளத்தால், அறிவால், ஆய்வால், தகவலால், கணிப்பால், கணக்கால், நிதானமாக நடப்பது (பார்த்து நட) என பல பொருள்களில் இடம் பெறுவது போல், அரபி மொழியிலும் “”ருஃயத்” என்ற பதம் இப்ப டிப் பல முறைகளில் பார்ப்பதையே குறிக்கிறது என்பதை நிச்சயமாக உணர முடியும். ஆனால் ஒரேயயாரு வித்தியாசம் தமிழில் “”பார்த்து” என்று ஒரே உச்சரிப்பில் வருவது போல் அரபி மொழியில் வராது. அரபி மொழி விதியின்படி தர, தரா, ரஅய்த்த, யரா, யரவ், யரவ்ன என பல உச்சரிப்புகளில் வருவதாகும். அனைத்தும் பல நிலைகளில் பார்ப்பதையே குறிக்கும். கண் ணால் மட் டும் பார்ப்பதைக் குறிக்காது.

கண்ணால் மட்டும் பார்ப்பதைக் குறிப்பதாக இருந்தால் குர்ஆன் 3:13ல் வருவது போல் “”ரஃயல் ஐன்” என்று கண்ணைக் குறிக்கும் “ஐன்’ என்ற அரபி பதம் இணைந்தே வரும். அப்படி பிறையைக் கண்ணால் மட்டுமே பார்க்க நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தால் இந்த “”ஐன்-கண்” என்ற பதத்தை இணைத்தே கூறி இருப்பார்கள். அப்படி ஐன் இணைக்கப்பட்டு கூறும் ஒரேயொரு ஆதாரபூர்வமான ஹதீஃத் அல்ல, பலவீனமான ஹதீஃதை அல்ல, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஃதையும் இந்த மவ்லவி களால் காட்டவே முடியாது.

அப்படியானால் எந்த ஆதாரத்தின் அடிப் படையில் பிறையைக் கண்ணால் மட்டுமே பார்த்து மாதத்தைத் துவங்கவேண்டும்; கணிப்பை (கணக்கைதான் மூடத்தனமாக கணிப்பு என்கிறார்கள்) ஏற்கக் கூடாது என்கிறீர் கள் என்று கேட்டால் அன்று நபி(ஸல்) கண்ணால் பார்த்துத்தானே மாதத்தைத் துவங்கி னார்கள் என்ற மடமை வாதத்தை வைக்கின் றனர். மூன்றாம் பிறையை முதல் பிறையாகக் கணித்து (உண்மையில் அது புதிய மாதத்தின் 2ம் அல்லது 3ம் பிறையாக இருக்கும்) இம்மவ்லவி களின் வழிகாட்டல்படி தயாரித்தத் தவறான சிவகாசி காலண்டரின் பிறை 29 என்றிருக்கும் நாளில் மேற்குத் திசையில் மறையும் பிறையை மட்டும் பார்த்து மாதத்தைத் துவங்கும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்ட ஒரேயொரு ஆதாரத்தையும் இம்மவ்லவிகளால் காட்ட முடியாது. அதற்கு மாறாக அன்றைய வழக்கத் தில 2:189 குர்ஆன் வசனம் கூறுவது போல் அன் றாடம் வளர்ந்து தேயும் பிறைகளை ஒவ்வொரு நாளும் பார்த்து வந்தார்கள். மாதத்தின் இறுதி நாளுக்கு முந்திய நாள் கிழக்கில் சூரிய உதயத்திற்கு முன் கண்ணுக்குத் தெரியும் இறுதிப் பிறையை (உர்ஜூனில் கதீம் பார்க்க 36:39) கண்ணால் பார்த்தார்கள். அடுத்த நாள் மாதத் தின் முடிவு நாள் (நம் பகுதியில் அமாவாசை) எனத் தெளிவாக அறிந்து அடுத்த நாளை முதல் நாளாகக் கணக்கிட்டார்கள். மாத இறுதியில் மேற்கில் மறையும் பிறையைக் கண்ணால் பார்த்து மாதம் துவங்கிவிட்டது, நாள் ஆரம்பித்துவிட்டது என்ற மூடப் பழக்கம் கி.மு. 383ல் யூதர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டதாகும்.

இம்மதகுருமார்கள் தக்லீதை நியாயப்படுத்தி யூதர்களின் நடைமுறைகளான மத்ஹபுகள், தரீக்ககாக்கள் போன்றவற்றை முஸ்லிம் களிடையே தந்திரமாகப் புகுத்தியப் பின்னர் தான் யூதர்களின் நடைமுறையான மாத இறுதி யில் மேற்கில் மறையும் பிறையைக் கண்ணால் பார்த்து மாதத்தைத் துவங்கும் மூடப் பழக்கம் முஸ்லிம்களிடையே மத்ஹபுகள், தரீக்காக்கள் நடைமுறைக்கு வந்தது போல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு ரமழான் இரவுகளில் மத்ஹபினர் நோன்பு நிய்யத்தாகச் சொல்லிக் கொடுக்கும் பித்அத்தான செயலே போதிய ஆதாரமாகும்

மேற்கில் மறையும் பிறை பார்க்கும் பித்அத் தான இச்செயலை மத்ஹபினரிடமிருந்து காப்பி அடித்தே, அவர்களை ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றியே ததஜவினரும் கடைபிடிக்கின்றனர். சந்திரன் மேற்கில் உதித்து கிழக்கில் மறைகிறது. நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்று ததஜ நவீன இமாம்(?) பீஜை உளறி வருவதே அவர் எந்தளவு மூடராக இருக்கிறார் என்பதையும், அவர் குர்ஆன், ஹதீஃதைப் பின் பற்றவில்லை; பிறை விஷயத்தில் அவரின் தீர்ப்பின் படியே (ஃபத்வா) வழிகெட்ட மத்ஹபின ரையே தக்லீது செய்கிறார் என்பது உறுதியாகிறது. குர்ஆன், ஹதீஃத்படி நடக்கும் நேர்வழிக் கூட்டம் எங்கள் ததஜ என்பதிலும் அவர் பெரும் பொய்யர் என்பதே உறுதியாகிறது. அவர் உண்மையாளர் என்றால் சந்திரன் மேற்கில் உதித்து கிழக்கில் மறைகிறது என்பதற்கு குர்ஆனிலிருந்தோ, ஆதாரபூர்வமான ஹதீஃதி லிருந்தோ நேரடி ஆதாரம் தந்து நிலை நாட்டட்டும்.

சூரியனும், சந்திரனும் கணக்கின்படியே சுழல்கின்றன என்று பல குர்ஆன் வசனங்கள் இரண்டையும் இணைத்தே கூறுகின்றன. இந்த நிலையில் நீங்கள் சூரியக் கணக்கை ஏற்று சந்திர கணக்கை மறுக்கும் மர்மம் என்ன? என்று கேட்கும்போது பீ.ஜை. 33:36 குர்ஆன் வசனத்தை நிராகரித்துப் பகிரங்கமான வழிகேட்டில் இருந்து கொண்டு அவர் கூறும் சுய விளக்கம் என்ன தெரியுமா? தஜ்ஜாலுடைய காலத்தில் நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்கிறார்கள். அதை ஆதாரமாகக் கொண்டு சூரியக் கணக்கை ஏற்கிறோம் என்ற அறிவீனமான பதிலைத் தருகிறார்.

சூரிய ஓட்டத்தைப் பார்த்து நேரத்தை அறிந்த காலத்தில் முதன் முதலாக கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த போதும் இவரின் ஆபாக்களான மதகுருமார்கள் இன்று இவர் சந்திரக் கணக்கைக் கடுமையாக எதிர்ப்பது போல் சூரியக் கணக்கையும் மறுக்கத்தான் செய்தார்கள். அவர்கள் திருந்த வில்லை. காலம்தான் அவர்களைத் திருத்தியது. அதேபோல் இவர்களும் ஒருபோதும் திருந்தி நேர்வழிக்கு வரமாட்டார்கள். காலம் தான் இவர்களையும் திருத்தும். அவர் கூறும் தஜ்ஜாலு டைய ஹதீஃத் முஸ்லிம் 5228ல் இடம் பெற்றுள் ளது. நீங்களே எடுத்து நேரடியாகப் படித்துப் பாருங்கள்.

“”இறைத்தூதர் அவர்களே! ஓர் ஆண்டு போல் (ஒருநாள்) இருக்கும்; அந்நாளில் நாங்கள் ஒரு நாளுக்குரிய தொழுகையைத் தொழுதால் போதுமா? என நாங்கள் கேட்டோம்.
“”இல்லை, அதைச் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்” என்று நபி(ஸல்) கூறியதாக இருக்கிறது.

இப்பாகத்தை மீண்டும் மீண்டும் படித்து உள்வாங்குங்கள். இதில் எத்தனை நாட்களுக் குரிய தொழுகை என்று கணக்கிடக் கட்டளையிட்டார்களா? தொழுகையின் நேரத்தைக் கணக்கிடக் கட்டளையிட்டார்களா? சிந்தியுங் கள்! நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் நாட்களைக் கணக்கிடக் கட்டளையிட்டார்களே அல்லாமல், தொழுகையின் நேரங்களைக் கணக்கிடக் கட்டளையிடவில்லை. நாட்களைக் கணக்கிடுவது அதாவது மாதம் 29-தா அல்லது 30-தா என்பதை சந்திரக் கணக்கின்படி கணக்கிட முடியுமே அல்லாமல் சூரியக் கணக்கின்படி அல்ல என்பதை அறிஞர்கள் (உலில் அல்பாப்) ஏற்பார் கள். அறிவீனர்கள் (ஜாஹில்கள்) மட்டுமே மறுக்க முடியும். எனவே இந்த முஸ்லிம் 5228 ஹதீஃத் சந்திரக் கணக்கை உறுதிப்படுத்துகிறதே அல்லாமல் சூரியக் கணக்கை அல்ல. மேலும் தஜ்ஜாலுடைய காலத்தில் நாட்களைக் கணக்கிடுவது பற்றிய ஹதீஃதை தஜ்ஜால் வருகைக்கு முன்னால் சூரிய நேரத்தைக் கணக் கிட ஆதாரமாகக் காட்டுவது அறியாமையிலும் பெருத்த அறியாமையாகும். மேலும் சந்திர நாட்களைக் கணக்கிடச் சொல்லும் ஹதீஃதை சூரியன் காட்டும் நேரத்தைக் கணக்கிடுவதற்கு ஆதாரமாகத் தருவது மடமையிலும் பெருத்த மடமையாகும்.

இன்னும் இப்னு உமர்(ரழி) அறிவித்து புகாரீ 1913 ஹதீஃதாக இடம் பெறும் ஹதீஃத் நபி (ஸல்) அவர்களது காலத்தில் இல்லாத நவீன கணினி இன்று அல்லாஹ்வின் அருளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் 29ல் முடிகிறதா 30ல் முடிகிறதா என்பதை அறிவதோடு, 200, 300, 500 வருடங்களின் ஒவ்வொரு மாதம் துவங்கும் கிறித்தவ தேதி, முடியும் தேதி இவற்றை இன்றே கணக்கிட்டுப் பதிவு செய்ய முடியும். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இடம் பெறும் சூரிய, சந்திர கிரகணங்களை இன்றே வருடம், மாதம், தேதி, நாள், நேரம் எனத் துல்லியமாகக் கணக்கிட்டுப் பதிவு செய்யவும் முடியும். இதையும் பீ.ஜை. ஒப்புக் கொண்டு தனது இதழில் எழுதியுள்ளார்.
இதையே புகாரீ 1913 ஹதீஃத் உறுதிப் படுத்து கிறது. இந்த ஹதீஃதில் “லாநக்துபு வலா நஃக்ஸுபு” என்ற அரபி வசனத்திற்கு சூரிய சந்திர ஓட்டத்தைக் கணக்கிடவும் தெரியாது, பதியவும் தெரியாது என் றிருப்பதை ஜாக் மவ்லவிகள் கணக்கிடவும் கூடாது, பதிவு செய்யவும் கூடாது என்று மொழி பெயர்க்கிறார்கள். ததஜ மவ்லவிகள் “”நமக்கு சாதாரண கணக் கும் தெரியாது, எழுதவும் தெரியாது என்று மொழி பெயர்க்கின்றனர். இவர்கள் அரபி மொழி கற்ற பெரும் மேதைகளாம்! வெட்கக் கேடு!!

ஜாக் மவ்லவிகள் அறிவியலை-விஞ்ஞானத்தைப் படிக்கவும் கூடாது. எழுதிப் பாதுகாக்கவும் கூடாது, அய்யாமுல் ஜாஹிலிய்யா காலத்திலேயே இருங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதாக அவர்கள் மீது கடைந்தெடுத்தப் பொய்யைக் கூறுகிறார்கள். இப்படி மக்களை அறிவற்ற மூடர்களாக வைத்திருந்தால்தான், அவர்களிடம் மார்க்கத்தை மார்க்கம் அல்லாததாகவும், மார்க்கம் அல்லா ததை மார்க்கமாகவும் சொல்லி அவர்களின் ஹரா மான வயிற்றுப் பிழைப்பை ஜாம் ஜாம் என்று நடத்தலாம் என்பது ஜாக் மவ்லவிகளின் நம்பிக்கை.

அன்று நபி(ஸல்) அவர்களின் சமூகமும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற சாதாரண கணக்கும் தெரியாதவர்களாகவும், அவற்றை எழுத வும் தெரியாதவர்களாகவும் இருந்தார்கள் என்பது ததஜ மவ்லவிகளின் அபத்தமானக் கூற்று. உண்மை என்ன?
அன்று நபி(ஸல்) அவர்களும், நபி தோழர்களும் பெரும் வியாபாரிகளாக இருந்தார்கள். இந்த கூட்டல் கழித்தல் கணக்குத் தெரியாமல் வியாபாரம் செய்திருக்க முடியுமா? அவர்களில் சிலருக்காவது எழுதத் தெரியாமல் இருந்தால் குர்ஆன் முறையாக, சரியாக எழுதப்பட்டு நமக்குக் கிடைத்திருக்குமா? சிந்தியுங்கள்! நபி(ஸல்) அவர்கள் இன்று இந்த மவ்லவிகளே திணரும் அளவில் இருக்கும் வாரிசு சொத்தைப் பிரித்துக் கொடுக்கும் பின்னக் கணக்கையும் துல்லியமாக அறிந்து வைத்திருந்தார்கள். இந்த நிலையில் நபி(ஸல்) அவர்களுக்கும், நபி தோழர் களுக்கும் சாதாரண கணக்கும் தெரியாது, எழுதவும் தெரியாது என்று துணிந்து பொய் கூறும் ததஜ மவ்லவிகள் எந்தளவு வழிகேடர்களாக இருக்கிறார்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். அதுவும் மாதம் 30ல் முடிகிறதா, 29ல் முடிகிறதா என்பதைத் துல்லியமாகக் கணக்கிடும், சந்திரச் சுழற்சி பற்றியக் கணக்கையே குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பது தமது விரல்களைக் கொண்டு முதலில் 30ஐயும் பின்னர் 29ஐயும் காட்டுவது கொண்டு உறுதியாகிறது. ஜாக்கினரும், ததஜவினரும் இதைக் கூட அறிய முடியாத மூடர்களா? இந்தத் திருகு தாளங்கள் அனைத்தும் சந்திரனும் துல்லிய கணக்கின்படியே சுழல்கின்றது என்ற பேருண்மையை மறைத்து, ஹராமான வழியில் தங்களின் வயிறு களை வளர்க்கவே (பார்க்க 36:21)

கண்ணுக்குத் தெரியும் மேற்கில் மறையும் 2ம் நாள் பிறையைப் பார்த்து விட்டு பிறை பிறந்து விட்டது, பிறை பிறந்துவிட்டது நாள் ஆரம்பித்து விட்டது என்று கோரஸ்பாடி அடுத்த மூன்றாம் நாளை முதல் நாளாகக் கொள்ளும் யூதர்கள் கி.மு. 383ல் நடைமுறைப்படுத்திய மூட நம்பிக்கையை முஸ்லிம்களிடையே புகுத்தி அவர்களை வழிகேட்டில் இழுத்துச் செல்ல ததஜ மவ்லவிகள் எடுத்து வைக்கும் இன்னொரு ஆதாரம் என்ன தெரியுமா?

பிறையைப் பார்த்து ஆரம்பியுங்கள், பார்க்காமல் ஆரம்பிக்காதீர்கள் என்று வலியுறுத்தும் பல ஹதீஃத்கள் இருக்கின்றன. சூரிய சுழற்சியைப் பார்த்துத் தொழுங்கள், பார்க்காமல் தொழாதீர்கள் என்று ஒரு ஹதீஃதும் இல்லை. அதனால் சூரியக் கணக்கை ஏற்கும் நாங்கள் சந்திரக் கணக்கை மறுக்கிறோம் என்ற சுயநல விதண்டாவாதத்தை வைக்கிறார்கள். இங்கும் அவர்களின் அறியாமைதான் வெளிப்படுகிறது. அன்று மாதத்துவக்கத்தை அறிவதில் இருந்து சிரமம், நேரத்தை அறிவதில் இருக்கவில்லை. மாதத் துவக்கத்தை அறிவதில் மக்களிடையே ஏற்பட்டக் கருத்து வேறுபாடு போல் நேரத்தை அறிவதில் ஏற்பட வில்லை. எப்படி என்று பாருங்கள்!

சூரிய ஓட்டப்படி கண்ணால் பஜ்ர், மஃறிபு, இஷா நேரங்களைப் பார்ப்பது மட்டுமல்லாமல் ஒரு குச்சியை நட்டுவைத்து, அதன் நிழல் உச்சி சாய்வதை வைத்து ழுஹரையும், அந்தக் குச்சியின் அளவு அதன் நிழல் வருவதை வைத்து அசரையும் எளிதாக அறிந்து கொண்டார்கள். இப்படி ஐங் காலத் தொழுகைகளின் நேரங்கள் அறிவதில் நபி தோழர்களிடையே எவ்விதக் கருத்து வேறுபாடும் ஏற்பட வழியே இல்லை, பிளவுபட வழியுமில்லை. ஆனால் சந்திரனைக் கண்ணால் பார்த்தும், கணித்தும் செயல்படுவதில் கருத்து வேறுபாடும், அதனால் பிளவும் ஏற்படும் நிலை அன்றிருந்தது. அதற்குக் காரணம் குறிப்பிட்ட மாதம் 29ல் முடிகிறதா? அல்லது 30ல் முடிகிறதா? என்ற ஐயமே!

யூதர்களின் நடைமுறையான மாதக் கடைசியில் காலையில் கிழக்கில் உதித்து மேற்கில் மாலையில் மறையும் பிறையைப் பார்த்து பிறை பிறந்துவிட்ட தாக நாள் துவங்குவதாகப் பிதற்றும், இன்று மவ்லவிகள் அரங்கேற்றும் கபட நாடகம் அன்று நபிதோழர் களிடம் இருக்கவில்லை. தினசரி பிறையின் தோற்றத்தைப் பார்த்தும், இடக்கையை நேராக நீட்டி அதற்கு மேல் நான்கு நான்கு விரல்களை அடுக்கியும் நாட்களைக் கணித்தும் அதாவது தோராயமாகக் கணக்கிட்டு வந்தார்கள். அதனால் சிலர் மாதம் 30ல் முடிகிறதன்றும் சிலர் இல்லை! மாதம் 29ல் முடிகிற தென்றும் கருத்து வேறுபாடுபட்டு பிளவுபட முயன்றார்கள். அன்று கணினி மூலம் கணக்கிடும் முறை இல்லை. கணினி கண்டு பிடிக்கப்படவில்லை. அதனால் மாதம் 29ல் முடிகிறதென்றோ, 30ல் முடி கிறதென்றோ உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

அதனால் 29 என்றும் 30 என்றும், வீணாகச் சண்டையிடாதீர்கள். அடுத்தடுத்துப் பிறைகளை இறுதிவரைப் பார்த்து மாதத்தின் கடைசி நாளுக்கு முந்திய நாளில் கிழக்கில் சூரிய உதயத்திற்கு முன் கண்ணில் படும் கடைசிக் காட்சிப் பிறையை (உர்ஜூனில் கதீம்) பார்த்து அடுத்த நாளைப் பூர்த்தி செய்து அதற்கடுத்த நாள் புதிய மாதத்தை துவங்குங் கள் என்று நபி(ஸல்) கட்டளையிட்டதையும் நிரா கரித்துவிட்டு, யூதர்கள் கி.மு.383ல் மூடத்தனமாக நடைமுறைப்படுத்திய மேற்கில் கண்ணுக்குத் தெரி யும் மறையும் 2ம் பிறையை முதல் பிறையாகக் கொண்டு, பிறை பிறந்துவிட்டது, நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்று கூறி மூன்றாம் நாளை முதல் நாளாகக் கொண்டதை அடிபிசகாமல் கண்மூடி ஏற்றுள்ள இம்மவ்லவிகள், இன்றைய கணினி யுகத்திலும் பிறையை மாத இறுதியில் மேற்கில் மறை யும் பிறையைப் பார்த்து மாதம் துவங்கிவிட்டதாக, நாள் ஆரம்பிப்பதாக பகுத்தறிவுக்கே சம்பந்தமில்லாமல் பிதற்றுகின்றனர். ஆக பிறையைப் பார்க்கும் படி பல ஹதீஃத்கள் இருப்பது போல் சூரியனைப் பார்க்க வலியுறுத்தும் ஹதீஃத்கள் இல்லை. அதனால் சூரியக் கணக்கை ஏற்கும் நாங்கள் சந்திரக் கணக்கை ஏற்பதில்லை என்ற இம்மவ்லவிகளின் வாதமும் விதண்டாவாதமே! பெருத்த வழிகேடே!

இம்மவ்லவிகளின் மவ்ட்டீகத்தின்-அறியாமை யின் ஆழத்தை இன்னும் பாருங்கள். சூரியனையும், பூமியையும் அவற்றின் மத்திய புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டை சந்திரனின் மத்திய புள்ளி தாண்டிவிட்டால் பழைய மாதம் முடிந்து புதிய மாதம் ஆரம்பித்துவிடுகிறது. இது விஷயத்தில் முஸ்லிம் மதகுருமார்களை விட இந்து மத குருமார்கள் அதிபுத்திசாலிகளாக இருக்கிறார்கள். அமாவாசையின் ஆரம்பப் பகுதியை தேய்பிறை என்றும் அதாவது கழியும் மாதத்தின் இறுதிப் பகுதி என்றும், சந்திரனின் மத்திய புள்ளி நேர்கோட்டைத் தாண்டிய அடுத்த வினாடியே புதிய சந்திர மாதம் பிறந்து விட்டது. வளர்பிறையின் ஆரம்பப் பகுதி என்றும் தெளிவாக விளங்கி இருக்கிறார்கள். அமாவாசைக்கு அடுத்த நாளைப் பிரதமை-முதல்நாள் என்று மிகச் சரியாகக் கூறுகின்றனர். மூட முல்லாக்கள் அதை பாட்டிமை என்று இல்லாத ஒன்றைக் கூறி முஸ்லிம்களை மூடர்களாக்கிறார்கள்! விஞ்ஞானிகளும் சந்திரனின் மத்திய புள்ளி நேர்கோட்டைக் கடந்தவுடன் புதிய மாதம் ஆரம்பித்துவிட்டது என்றே கணக்கிடுகிறார்கள். முஸ்லிம்களைப் பொறுத்த மட்டிலும், சங்கமம் ஆகும் அந்த நாளில் கடக்கும் மாதத்தின் இறுதிப் பகுதியும், புதிய மாதத்தின் ஆரம்பப் பகுதியும் இணைந்திருப்பதால் அதைப் பிறையின் முழு நாளாகக் கொள்ள முடியாது என்ப தால், அதற்கு அடுத்த நாளை முதல் நாளாகக் கொள்கிறோம். நபி(ஸல்) அவர்கள் பிறை வெளிச்சம் மறைக்கப்படும் அந்த நாளை முடியும் மாதத்துடன் இணைத்தே வழிகாட்டி இருக்கிறார்கள்.

இப்போது இந்த மூட முல்லாக்களின் அறிவீனத்தின் ஆழத்தைப் பாருங்கள். சங்கமத்துடன் பழைய மாதம் முடிந்து புதிய மாதம் துவங்கிவிட்டது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். கணக்கின்படி இன்ன தேதியில் இந்த இடத்தில் இந்த நேரத்தில் பிறை இருக்கும் என்று கணித்தால்(?) நிச்சயம் இருக்கும். ஆனால் மாதம் ஆரம்பிக்க இதுவல்ல நமக்கு அளவு கோல், நபி(ஸல்) அவர்கள் மாலையில் மேற்கில் மறையும் பிறையைப் பார்த்தே மாதத்தைத் துவங்கக் கட்டளையிட்டுள்ளார்கள். எனவே கண்ணுக்குத் தெரியும் 3ம் பிறையைத்தான் நாங்கள் 1ம் பிறையாக எடுப்போம் என்று நாக்கூசாமல், கூச்சமின்றி தொடர்ந்து கடைந்தெடுத்தப் பொய்யைக் கூறி வருகிறார்கள். பொய்யர்களுக்குக் கேடுதான்!

இவர்களின் இந்த அறிவிப்புப்படி கண்ணுக்குத் தெரியாத 1ம் நாளும் 2ம் நாளும் தேதியோ, நாளோ இல்லாத வெற்று நாட்களாகத்தான் இருக்க முடியும். இந்த மூளை வரண்டவர்கள் என்ன செய் கிறார்கள்? அந்த வெற்று இரண்டு நாட்களைக் கழிந்துவிட்ட சங்கமத்திற்கு முன்னால் உள்ள மாதத் துடன் இணைத்துக் கணக்கிடுகிறார்கள். அதாவது ரமழானின் முதல் இரண்டு நாட்களை ஷஃபானு டன் இணைத்துக் கணக்கிடுகிறார்கள். அதேபோல் ஷவ்வால் மாதத்தின் முதல் இரண்டு நாட்களை ரமழானுடன் இணைத்துக் கணக்கிடுகிறார்கள். சங்கமத்திற்கு முன்னால் உள்ள பழைய மாதத்துடன் சங்க மத்திற்குப் பின்னால் உள்ள புதிய மாதத்தின் ஆரம்ப 2 நாட்களை இணைக்க முடியுமா? என்ற அற்பமான அறிவும் இம் மவ்லவிகளுக்கு இல்லவே இல்லை. தாருந்நத்வா மூடர்கள் போல் அடி மூடர்களாக இருக்கிறார்கள். நாளோ, தேதியோ இல்லாத வெற்று நாட்கள் என்று உண்மையைச் சொன்னால் அவர்களின் பக்தகோடிகளும் அதை ஏற்கமாட்டார்கள்; அதற்காகவே இந்தத் தந்திரம்.

ஆக இம்மவ்லவிகள் ரமழானுடைய முதல் இரண்டு நாட்களை ஷஃபானுடனும், ஷவ்வாலின் முதல் இரண்டு நாட்களை ரமழானுடனும் இணைத்தும், தங்கள் சுய நலத்துக்காக மாதங்களை முன்பின் ஆக்குகிறார்கள். இச்செயல் நிராகரிப்பை, குஃப்ரை அதிகப்படுத்தும் மிகக் கொடிய செயல் என்பதை 9:37 குர்ஆன் வசனம் எச்சரிப்பதை உணர விடாமல் இம்மவ்லவிகளின் ஆணவம், பெருமை தடுக்கிறது. இந்த அவர்களின் நாலுகால் மிருகங்களைவிட கேடுகெட்ட நிலையை 7:146, 175-179, இன்னும் இவை போல் எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. இம்மவ்லவிகள் ஒருபோதும் திருந்தமாட்டார்கள். 22:27 ஒட்டக வாகனம், சூரியனைக் கண்ணால் பார்த்து நேரத்தை முடிவு செய்தது, ஆள் நேரில் வந்து தகவல் சொன்னது, ஒலி, ஒளி விவகாரங்கள் இவற்றில் அவர்கள் திருந்தாமல் காலமே அவர்களைத் திருத்தியது போல, சந்திரக் கணக்கின் விஷயத்திலும் காலமே அவர்களைத் திருத்தும். இந்த மவ்லவிகளின் மடமையே!
நாங்கள் தான் மவ்லவிகள், ஆலிம்கள், மார்க்கம் கற்ற மேதைகள், நீங்கள் எல்லாம் அவாம்கள், ஆடு மாடுகளைப் போன்றவர்கள், உங்களுக்கு மார்க்கம் விளங்காது. குர்ஆன் மொழி பெயர்ப்புகளைப் பார்த்து நீங்கள் நேர்வழியை விளங்க முடியாது.

எங்கள் வழிகாட்டல்படிதான் நீங்கள் நடக்க வேண்டும் என்று நியாயமின்றி, உண்மையின்றி வீண் பெருமை பேசும் இவர்கள் ஆலிம்களா? வடி கட்டிய ஜாஹில்களா என்பதை பெருமை பற்றி எச்சரிக்கும் இந்த வசனங்கள் அனைத்தையும் நீங்கள் நேரடியாகப் படித்து விளங்க முன் வாருங்கள். 2:34, 4:36, 7:36-40, 146,206, 11:10, 16:22, 23,49, 17:37, 21:19, 25:63, 28:83, 31:7, 18, 32:15, 35:10, 39:49,72, 40:35, 47,48,56, 60, 45:37, 49:13, 57:23, 59:23, 74:1-3, 34:31-33.

இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் சோம்பல் படாமல் எவர் 29:69 இறைக் கட்டளைக்கு அடிபணிந்து நேரடியாகப் பார்க்கிறார் களோ அவர்கள் பெருமையடிக்கும் இந்த மவ்லவிகளை சாதாரண அவாமான ஒரு அடிமட்ட மனித நிலையிலும் மதிக்க மாட்டார்கள். நாயிலும் கேடா கவே மதிப்பார்கள். (பார்க்க : 7:175-179)

சூரியனும், சந்திரனும் ஒரே வரையறையில் எவ்விதப் பாகுபாடும் இல்லாத நிலையில் கணக்கின்படி சுழல்கின்றன என்பதைத் திட்டமாகத் தெளிவாகப் பல குர்ஆன் வசனங்கள் கூறிக் கொண்டிருக்க அவை அனைத்தையும் நிராகரித்து, சந்திரன் மனிதக் கண்ணின் கட்டுப்பாட்டில் சுழல்கிறது. சந்திரனின் ரிமோட் கண்ட்ரோல் மனிதக் கண்கள் என்று தொடர்ந்து கூறி வரும் இம்மவ்லவிகள் அந்தளவு அறிவு சூன்யங்களா? மர மண்டைகளா? மூளை வரண்டவர்களா? இல்லை! 2:146, 6:20 வசனங்கள் கூறுவது போல் அவர்கள் தங்கள் பெற்றக் குழந்தைகளை அறிவது போல் உண்மையை நன்கு அறிவார்கள். நன்கு அறிந்த நிலையில் தான் அதை மறுக்கிறார் கள். காரணம் என்ன தெரியுமா?

36:21 குர்ஆன் வசனம், கூலிக்கு மாரடிக்காமல், அதாவது கடமையான மார்க்கப் பணியை அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி மட்டுமே செய்கிறவர்களே நேர்வழியில் இருக்கிறார்கள் என்று உறுதிப் படுத்துகிறது. ஒரே நேர்வழி மார்க்கத்தைப் பல கோணல் வழி மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்ள இம்மவ்லவிகளை விடக் கேடுகெட்ட ஜன்மம்-படைப்பு இவ்வானத்தின் கீழ் இல்லவே இல்லை. கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி கூடவே கூடாது என்று 14 வசனங் களும், கூலி வாங்குபவர்கள் ஒரு போதும் நேர்வழி யில் இருக்க முடியாது. கூலி வாங்குகிறவர்கள் செய்யும் அக்கிரமம், அநியாயம், பொய்ப் பித்தலாட்டங் கள், பரப்பும் அவதூறுகள், அனைத்து வகை வழி கேடுகள் பற்றி சுமார் 332 இறைவாக்குகள் மிகக் கடுமையாக எச்சரிக்கின்றன. அவர்களின் உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் மிகக் கொடிய ஹராமாக இருப்பதால் இந்த குர்ஆன் வசனங்களை விளங்க விடாமல் அவர்களின் உள்ளங்கள் 2:74, 5:13, 6:43,125, 57:16 இறைவாக்குகள் கூறுவது போல் கற்பாறைகளை விட மிகக் கடினமாக இறுகி விட்டன. அவர்களின் நியாயமற்ற வீண் பெருமை காரணமாக குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் விட்டு அல்லாஹ்வாலேயே திருப்பப்படுவதாக 7:146 இறைவாக்கு நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் எச்சரிக்கின்றது. மதகுருமார்கள் ஒட்டு மொத்தமாகக் கூலிக்கு மாரடிப்பவர்களே! எனவே அவர்கள் ஒருபோதும் நேர்வழியை ஏற்கமாட்டார்கள். (பார்க்க : 7:146) அவர்கள் வழிகெட்டிருப்ப தோடு பெருங்கொண்ட மக்களையும் வழிகெடுப் பதே அவர்களின் இலட்சியம். (பார்க்க :4:44)

அப்படிப் பெருங்கொண்ட மக்களை வழி கெடுத்தால்தான் இவர்களின் தொப்பை நிறையும், உலகியல் வசதி வாய்ப்புகள் பெருகும். பெருமைப் படப் பெருங்கூட்டம் சேரும். ஒவ்வொரு ஆயிரத்திலும் நரகை நிரப்பும் 999 பேர்வழிகள் இவர்கள் பின்னால் அணி வகுப்பார்கள். குர்ஆன், ஹதீஃதில் ஹராம், ஹலால் பாராமல், இவர்கள் ஹராம் என்று கூறுவதை ஹராம் என்றும், ஹலால் என்று கூறுவது ஹலால் என்றும் கண்மூடி ஏற்பார்கள். (பார்க்க : 5:87, 10:59, 16:116) “”வெள்ளைக் காக்கா மல்லாக்க பறக்குது” என்று இவர்கள் சொன்னாலும் அதை அப்படியே கண்மூடி ஏற்று அவர்களது பக்தகோடிகள் ஊர் முழுக்க பரப்புவார்கள். 9:31 இறைவாக்குக் கூறுவது போல் இவர்களைத் தங்களின் ரப்பாக ஏற்று வழிபடுவார்கள். தங்களின் பக்தர்களை தறு தலைகளாக ஆக்கி அராஜகங்கள் அனைத்தையும் செய்ய வைக்க முடியும். நேர்வழி நடப்பவர்கள் இதற்கெல்லாம் துணை போவார்களா? இல்லையே! நரகை நிரப்பும் 1000ல் 999 நபர்களே இம்மதகுரு மார்களின் முதலீடு. அதனால் அவர்களின் ஆதர வைப் பெற வழிகேடுகளையே நேர்வழியாகக் காட்டும் கட்டாயத்தில் இம்மதகுருமார்கள் இருக்கிறார்கள்.

எனவே இம்மவ்லவிகளுக்கு குர்ஆன் வசனங்களை எடுத்துக் காட்டுவதும், காட்டாமல் இருப்பதும் ஒன்றுதான். அவர்கள் நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். (பார்க்க:2:146,7:146) முன் சென்ற மதகுருமார்கள் பற்றி குர்ஆனில் எச்சரிக்கப் பட்டுள்ள 2:8-20,27,38,39,41,42,44,74,78,79,85,86, 96,99,145, 146,174,175,176, 4:44 இந்த வசனங்கள் இம்மவ்லவிகளுக்கும் நூற்றுக்கு நூறு பொருந்தும், இன்னும் குர்ஆனை நேரடியாகப் படித்து அறிகிறவர்கள் கூலிக்குக் கடமையான மார்க்கப் பணி புரியும் இம்மவ்லவிகளின் இழி நிலைகளை அறிய முடியும். அவற்றிலும் சில வசனங்கள் இதோ : 2:159-162, 3:77, 4:27, 5:48, 6:157, 7:175-179, 11:15,16,18,19, 16:25, 105, 18:57, 104,105, 17:18, 27:14, 31:20, 45:23, 47:25.

இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் சிர மம் பாராமல் பெரும் முயற்சியாக-ஜிஹாத் (26:69) படித்து உணர்கிறவர்கள் பெருமையடிக்கும் இம் மவ்லவிகளுக்கு ஒரு நாய்க்குக் கொடுக்கும் மரி யாதை கூட கொடுக்க மாட்டார்கள். மக்களே இம் மவ்லவிகளை நம்பி மோசம் போகாதீர்கள். நாளை நரகில் கிடந்து வெந்து கொண்டு 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47,50, 41:29, 43:36-45 வசனங்கள் கூறுவது போல் 34:31, 32,33, 40:47,48 வசனங்கள் கூறும் பெருமையடிக்கும் இம்மவ்லவிகளை சபித்துப் புலம்புவதால் நரகிலிருந்து விடு தலை ஒருபோதும் கிடைக்காது. இவ்வுலகிலேயே அவர்களின் மாய, வசீகர, உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு, நேரடியாக குர்ஆன், மற்றும் ஆதாரபூர்வ மான ஹதீஃத்களைப் பார்த்து, அதன்படி நடக்க முன் வாருங்கள் அப்படி நீங்கள் முயற்சி செய்தால் 29:69ல் அல்லாஹ் வாக்களித்துள்ளபடி நிச்சயம் உங்களுக்கு நேர்வழி காட்டக் காத்திருக்கிறான்.

Previous post:

Next post: