இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து!

in 2016 ஜனவரி,தலையங்கம்

பெரியார்

முன்னர் திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு சட்டசபையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்த முற்பட்டது அரசு. இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த அர்ச்சகர் வழக்குத் தொடர்ந்தார். அவ் வழக்கில் கீழ்நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றம் என மிக நீண்ட காலம் கழித்து இப்போது தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஆகம விதி முறைகள்படி உயர் ஜாதியினர் மட்டுமே அர்ச்சகர்களாகப் பணிபுரிய முடியும் என்பதே அத்தீர்ப்பு. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே பெரியார் அது உச்சநீதிமன்றமல்ல; உச்சிக்குடுமி நீதிமன்றம் எனச் சாடினார். அங்கு நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா? ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. இந்த உண்மையை சமீபகால பல தீர்ப்புகள் நிரூபித்து வருகின்றன.

மனித குலத்தினர், அவர்களைப் படைத்து இவ்வுலகில் சோதனைக்காக-பரீட்சை அடிப்படையில் தற்காலிகமாக மிக சொற்ப காலம் வாழ விட்டிருக்கும் ஏகனாகிய இறைவன் இறக்கியருளியுள்ள இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆனின் வழிகாட்டல்படி நடக்கவும், அது அளிக்கும் தீர்ப்பை ஏற்று நடக்கவும் எதுவரை முன்வரவில்லையோ அதுவரை மனிதனை மனிதன் ஏமாற்றிப் பிழைக்க வும், உயர் ஜாதியினர் என பெருமை பேசுபவர்கள், கீழ் ஜாதியினராக அவர்களால் கற்பனை செய்துள் ளவர்களை கொத்தடிமைகளாக நடத்தவும், அவர்கள் மீது குதிரைச் சவாரி செய்யும் அவலமும் தொடரத் தான் செய்யும்.

இன்று மேல் ஜாதியினரான பார்ப்பனரை அரியணையில் அமர்த்தி வைத்திருப்பவர்கள் யார்? மோடி கீழ் ஜாதிதானே! பல மந்திரிகள் கீழ் ஜாதிதானே! பா.ஜ.கவில் அங்கம் வகிப்பவர்களில் பெரும்பான்மையினர் கீழ் ஜாதிதானே. பாபரி மஸ்ஜித் இடிபடும்போது அம்மாநில முதல்வர் கீழ் ஜாதிதானே! பல மந்திரிகள் கீழ் ஜாதிதானே! அதைப் பார்த்துக் கும்மாளம் போட்டுக் கூத்தாடிக் கொண்டாடியவர்கள் கீழ் ஜாதியினர்தானே! பகவத்கீதை, கம்பராமாயணம் என அவர்கள் தூக்கிப் பிடிக்கும் இந்துப் புராணங்களின் கற்பனையாளர்கள் யார்? சிந்தியுங்கள்.

மேல் ஜாதியினர் யாரைக் கீழ் ஜாதியினர், அவர்களைத் தொட்டால் தீட்டு, மலம் கழித்துவிட்டு கழுவும் அப்பகுதியை மட்டும் கழுவினால் போதும். அதற்கு மாறாகக் கீழ் ஜாதியினரைத் தவறாகத் தொட்டுவிட்டால், குளித்தால் மட்டுமே தீட்டுப் போகும், நாய் பன்றி முதல் அனைத்து மிருகங்களும் அவர்களின் வீட்டின் உள்ளே வரலாம். மாடு வந்து அவர்களின் வீட்டினுள் சானி, மூத்திரம் (கோமியம்) கழித்தால் அது அவர்களுக்கு அமிர்தம்.அதற்கு மாறாக கீழ் ஜாதியினர் என அவர்களால் இழிவுபடுத்தப் படுபவர்கள் அவர்களின் வீட்டினுள்ளே வரக்கூடாது என்று அறிவுக்கே பொருத்தமில்லாத காட்டுமிராண்டிச் சட்டங்களை மனுநீதி என்ற பெயரால் இயற்றி வைத்துக் கொண்டு, சமுதாயத்தின் பெருங்கொண்ட மக்களை இழிவுபடுத்தி வருகின்றனர். அவர்களால் இழிவுபடுத்தப்படும் கீழ் ஜாதியினர் என இகழப்படும் மக்களே இன்று பா.ஜ.க.வில் நிறைந்து காணப்படுகின்றனர்.

இதில் இன்னும் பெரும் கொடுமை, அவர்களின் இழிநிலையைப் போக்குகிறோம் பேர்வழிகள் என்று பெருமை பேசிக்கொண்டு, அந்த மேல் ஜாதியினரின் கற்பனையில் உருவான பல்லாயிரம் கோடி பொய்க் கற்பனைத் தெய்வங்களோடு மனித குலத்தைப் படைத்த தன்னந்தனியான, இணை, துணை, தேவை எதுவுமே இல்லாத ஓரிறைவனை வணங்கி, வழிபடுவதை விட்டு, உண்மையான ஓரிறைவனையும், பல்லாயிரம் கோடி பொய்த் தெய்வங்களோடு மறுப்பதன் மூலம், மேல் ஜாதியினர் தம் ஜாதிப் பிரிவு, இன இழிவு, தீட்டு என அனைத்து அராஜகங்களையும் மேலும் வலுவாக நிலைநாட்ட நாத்திகர்களும் துணை போகிறர்கள் என்பதே எதார்த்த உண்மை. இது குறித்து அவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கி றார்கள். சுயசிந்தனையே உரிய நல்ல பலனைத் தரும்!

அண்ணாத்துரை அன்றே சொன்னார். கடவுளுக்கு அடுத்து ஈர்ப்பு அரசியல் என்று. அரசியல் ஈர்ப்பில் முங்கிக் குளிக்கும் இந்த நாத்திகர்கள் அதை விட அதிகமாக ஈர்க்கும் கடவுளை மறுக்க முற்பட்டால் அது பலன் தருமா? அதனால் மேல் ஜாதியினர் என பெருமை பேசுபவர்களின் ஆதிக்கம் வழுத்து வருகிறது. கீழ் ஜாதியினரும் பா.ஜ.க.வில் இணைகிறார்கள்.

1982ல் இரண்டே இரண்டு எம்பிக்களைக் கொண்டிருந்த ஜனசங் பின்னரே பா.ஜ.கவாக உருவெடுத்தது. பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் மவ்லவிகளின் தூண்டுதலில் இன உணர்வுக்கு ஆட்பட்ட முஸ்லிம் களின் குர்ஆன், ஹதீஃதுக்கு முரண்பட்டப் போக்கும், நாத்திகர்களின் ஓரிறை மறுப்புக் கொள்கையுமே பா.ஜ.கவின் அதீத வளர்ச்சிக்குக் காரணமாயிற்று. முஸ்லிம்கள் 3:186 இறைவாக்கை நிராகரித்துப் பெருங்கொண்ட மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளும் பெருமை பேசும் மவ்லவிகளின் கோணல் வழிகளை (பார்க்க : 7:146) நேர்வழியாகக் கொண்டு செயல்பட்டதே பா.ஜ.கவின் மிகவேகமான வளர்ச் சிக்குக் காரணமாயிற்று. படிப்படியாக பாராளு மன்றத்தில் எம்.பிக்களை அதிகப்படுத்தி இறுதியில் கடந்த பொதுத்தேர்தலில் மிருக பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். நாட்டில் மீண்டும் மனு நீதி ஆட்சியை அதாவது ஹிந்துத்துவா ஆட்சியை ஆகம விதிமுறைப்படி நிலைநாட்ட முற்பட்டு விட்டனர். அதற்குரிய வழியை திறந்து விட்டவர்கள் முஸ்லிம்களும், நாத்திகர்களும்.

மார்க்ஸ், ஏங்கல்ஸ், பெரியார், அண்ணா இன் னும் பல அறிவு ஜீவிகளின் முயற்சிகள் விழலுக்கிறைத்த நீராகி வருகின்றன. அன்பார்ந்த நாத்திக வாதிகளே, ஓர் உண்மையை மறைக்காமல் கூறுவதால் எம்மீது கோபப்படாதீர்கள். உண்மைக் கசக்கத்தான் செய்யும். ஆயிரம் மார்க்ஸ்கள், ஆயிரம் ஏங்கல்ஸ்கள். ஆயிரம் பெரியார்கள், ஆயிரம் அண்ணாக்கள், இப்படி ஆயிரமாயிரம் அறிவு ஜீவிகள் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அயராது தங்கள் வாழ்நாள் முழுதும் செலவழித்துப் பாடுபட்டாலும் இன இழிவை ஒருபோதும் நீக்க முடியாது. இதுதான் எதார்த்த உண்மை. பேரண்டங்களை விட பேரறிவுடைய இறைவனின் அறிவுக்கு முன்னால், குண்டூசி முனை அளவு கூட (பார்க்க : 17:85) இல்லாத அற்ப அறிவுடைய மனிதச் சட்டங்கள், திட்டங்கள் மூலம் மனித வாழ்வை மேம்படச் செய்ய ஒருபோதும் முடியாது. மனுநீதிச் சட்டங்களான மனிதன் அமைத்தச் சட்டங்களை என்று மனித குலத்தினர் புறக்கணித்து நிராகரித்து விட்டு, ஏகன் இறைவன் அளித்துள்ள இறைச் சட்டங்களை மட்டும் நடை முறைப்படுத்த முன் வருகின்றனரோ அன்றே மனித குலத்தினர் நிம்மதியான, வளமான, சந்தோபீமான வாழ்வைப்பெற முடியும். அதற்காகப் பாடுபட முன்வாருங்கள்!

1947ல் பெரியார் தன் தொண்டர்களுடன் இஸ்லாத்தைத் தழுவ விரும்பினார், அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்தார். ஆனால் அவருடன் இருந்த சிலர், ஐயா! அங்கு மட்டும் என்ன வாழுது? முஸ்லிம்களும் நம் இந்துக்களிடம் காணப்படும் மூட நம்பிக்கை, மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், அநாச் சாரங்கள் அனைத்தையும் செய்து வருகிறார்கள். இந்துக்கள் ஐயரைக் கொண்டு சமஸ்கிருதத்தில் அம் மூடச் சடங்குகளை செய்து வருகின்றனர். முஸ்லிம் கள் மவ்லவிகளைக் கொண்டு அதே மூடச் சடங்கு களை அரபியில் செய்து வருகின்றனர். அதனால் இஸ் லாத்தில் இணைவதால் பெரிய பலன் ஒன்றுமில்லை என்று கூறியே பெரியாரின் இஸ்லாத்தைத் தழுவும் முயற்சியை கைவிடச் செய்தனர். இதே காரணங்க ளால்தான் அம்பேத்கார் தன் தொண்டர்களுடன் இஸ்லாத்தைத் தழுவும் முயற்சியும் முறியடிக்கப் பட்டது. அம்பேத்கர் பெளத்த மதத்தைத் தழுவினார்.

உண்மை நிலை இதுதான். இன்று இந்தியாவில் வாழும் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களில் 95%, உயர் ஜாதியினரால் தீண்டத் தகாதவர்களாக, இன இழிவால் கூனிக் குறுகிப் பெருத்த மன வேதனையோடு வாழ்ந்த மக்கள் வெட்கம், மானம், ரோசம், சூடு, சொரணை உடையவர்கள், இந்த இழிவு நிலை நமக்கு வேண்டவே வேண்டாம் என நினைத்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள்தான். இந்த ஆக்கத்தை எழுதும் எமது முன்னோர்களும் அப்படி இஸ்லாத் தைத் தழுவியவர்களாகவே இருக்கலாம். அதனால் தான் காவியினர் ”கர்வாபசி’ என மீண்டும், மீண்டும் அவர்களை இந்து மதத்திற்கு அழைத்த வண்ணம் இருக்கின்றனர். ஏன் எங்கள் மதச் சடங்குகளை அந்நிய மொழியான அரபியில் செய்கின்றீர்கள், ஏற்கனவே செய்தது போல் சமஸ்கிரதத்தில் செய்ய வாருங்கள் என தொடர்ந்து அழைத்து வருகின்றனர்.

உண்மை இதுதான். இன இழிவைத் தாங்க முடியாமல் அவர்கள் மதம் மாறினார்களே அல்லாமல் மனம் மாறவில்லை. அவர்கள் எதிர்பார்த்த இன இழிவு அவர்களை விட்டும் இருந்த இடம் தெரியாமல் போயே போய் விட்டது. (அதற்கு மாறாக கிறித்தவ, பெளத்த மதங்களைத் தழுவியவர்களுடன் அந்த இன இழிவு இன்னும் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது) ஆயினும அங்கு செய்து கொண்டிருந்த அனைத்து மூடச் சடங்குகளையும் கொண்டு வந்துவிட்டனர். முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவிகளும், ஏனைய மதங்களைப் போல், ஏகன் இறைவனுக்கு இணை வைக்கும் முஸ்லிம் மதத்தை நடைமுறைப்படுத்தி, அவர்களைப் போல் இவர்களும் ஹராமான-தவறான முறையில் வயிறு வளர்ப்பவர்கள்தானே. அவர்கள் இறைவன் அளித்த தூய இஸ்லாத்தைப் பின்பற்றுகிற வர்கள் இல்லையே. இறைவனின் இறுதி வாழ்வியல் வழிகாட்டி குர்ஆன் ஒட்டுமொத்த மனித குலத்திற் கென்றே அருளப்பட்டது. அதை மக்களிடமிருந்து மறைத்தவர்கள்தானே! அதனால் தான் மனித குலம் இன்று அழிவின் விளிம்பில், நரக விளிம்பில் நிற்கிறது.

அதன் தூய நேர்வழிப் போதனை 17:41,45-47, 89, 22:72, 25:60, 39:45 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல், ஏனைய மதங்களின் மதகுருமார்களுக்கு எட்டிக்காயாகக் கசப்பது போல் முஸ்லிம் மதகுரு மார்களான மவ்லவிகளுக்கும் எட்டிக்காயாகக் கசக்கவே செய்கிறது. அதனால் குர்ஆனின் நேரடிப் போதனைகளை 2:159-162 இறைவாக்குகள் கூறுவது போல் மறைத்து, ””மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அறிவில்லாமல் (மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுக்கவும், அதனைப் பரிகாச மாக்கிக் கொள்ளவும், வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்குகிறார்கள். இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு (31:6) என்று இறைவன் கூறுவது போல் அனைத்து மதங்களின் மதகுருமார் களும் குறிப்பாக முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவி களும் மனித குலத்தினரை வழிகெடுத்து நாளை நரகில் தள்ளுவதோடு, இவர்கள் கேவலம் தங்களின் ஒரு ஜான் வயிற்றை முழுக்க, முழுக்க ஹராமான வழியில் நிரப்புகிறார்கள். இப்போது புரிகிறதா? ஏன் இந்த மவ்லவிகள்.

முஸ்லிம்கள் உட்பட மனிதகுலத்தினர் அனைவரையும் அவர்களுக்கே சொந்தமான இறுதி இறை
நூல் குர்ஆனை நெருங்கவிடாமல், அதைப் படித்து விளங்க விடாமல் தடுத்து வருகிறார்கள் என்பது. ஆம்! குர்ஆனை யார் பொருள் அறிந்து படித்து விளங்கு கிறார்களோ, அவர்கள் இந்த மவ்லவிகளுக்கு ஒரு நாய், பன்றிக்குக் கொடுக்கும் மரியாதை கூட கொடுக்கமாட்டார்கள். மனிதர்களிலேயே ஆகக் கேடுகெட்டவர்கள் இம்மவ்லவிகளே!

இந்த ஆக்கத்தை எழுதும் எம்மையே எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கையிலேயே ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவன் நான். எமது 18வது வயதிலி ருந்து 42(1984) வயதுவரை குர்ஆனை ஒளூவுடன் (அங்கசுத்தி) தினசரி ஒரு பாகம், மாதம் ஒரு குர்ஆன் என இம்மவ்லவிகளின் போதனைப்படி பொருள் அறியாமல் கிளிப்பிள்ளைப் பாடமாக ஓதிவந்தோம். எமது 42வது வயது வரை இம்மவ்லவிகளுக்கு எமது பெற்றோரை விட அதிக மதிப்புக் கொடுத்து அவர் களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினோம். அந்த அளவு முரட்டு, குருட்டுப் பக்தி!

அதன் பின்னர் அவர்களின் இழி செயல்களை நேரடியாகக் கண்கூடாகப் பார்த்த பின்னரே, குர் ஆனைப் பொருள் அறிந்து படிக்க முற்பட்டோம். அதன் பின்னரே வழிகேடர்களிலேயே பெருத்த வழி கேடர்கள் இம்மதகுருமார்கள், அவர்களிலும் பெருத்த வழிகேடர்கள் மவ்லவிகள், அவர்கள் ஆடு, மாடு, நாய், பன்றிகளை விட கேடுகெட்டவர்கள் என்பதைத் திட்டமாக அறிந்தோம். அந்த உண்மையை மக்கள் மன்றத்தில் 1984லிலிருந்து எடுத்து வைத்து வருகிறோம்.

ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த நாமே எமது 42வயது வரை (1984) குர்ஆனை நேரடியாக படிக்கா மல் இம்மவ்லவிகளின் வழிகேட்டுக் கருத்துக்களை வேதவாக்காகக் கொண்டு செயல்பட்ட நிலையில் மார்க்ஸ்க்கோ, ஏங்கல்ஸ்க்கோ, அம்பேத்கர்க்கோ, பெரியாருக்கோ குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்க வாய்ப்புக் கிடைத்திருக்குமா? சிந்தியுங்கள்! அவர்களுக்கு குர்ஆனை நேரடியாகப் பொருள் அறிந்து படிக்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் அவர்கள் ஒருபோதும் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கையில் எடுத்திருக்கமாட்டார்கள். அந்த வாய்ப்புக் கிடைக்கவே இல்லை.

அதற்கு மாறாக உலகியல் துறைகளில் படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கே அத்துறைகள் பற்றிய ஞானம் இருக்கும் என்ற இயற்கை நியதிப்படி மதத் துறையிலும் படித்தப் பட்டம் பெற்றவர்களுக்கே மத ஞானம் இருக்கும் என்ற தவறான நம்பிக்கையில் இந்த மவ்லவிகள் சொல்லுவதைத்தான் குர்ஆன் சொல்கிறது என்ற தவறான நம்பிக்கையில், முஸ்லிம் மதமும் இதர மதங்களைப் போல் ஒரு மதமே! அபின் போல் போதை தருவதே. வழிகேடே; அது போதிக்கும் கடவுள் இல்லவே இல்லை. கடவுளை மற மனிதனை நினை எனப் போதிக்க முற்பட்டார்கள். நாத்திகம் வளர்ந்த கதை இதுதான்!

ஆத்திக அன்பர்களே, நாத்திக நண்பர்களே நீங்கள் பெரிதும் மதிக்கும் அந்த அறிஞர்களுக்குக் கிடைக்காத பெரும் பாக்கியம் உங்ளுக்குக் கிடைத்துள்ளது. இறைவனின் இறுதி வாழக்கை நெறிநூல் குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. மனித குலத்தினருக்கே சொந்தமானது என்பதை அந்த குர் ஆனாகக்கொண்டே தெளிவாக கடந்த 32 வருடங்க ளாக விளக்கி வருகிறோம். 1986லிருந்து அந்நஜாத் மாத இதழில் குர்ஆன் ஆதாரம் கொண்டே விளக்கி வருகிறோம்.

நீங்கள் யாராக இருந்தாலும் எந்த மதத்திலிருந்தாலும், ஆத்திகர்களாக இருந்தாலும், நாத்திகர்களாக இருந்தாலும், உங்கள் உள்ளங்களில் இதுவரை இருக்கும் நம்பிக்கையைச் சிறிது ஒதுக்கி வைத்து விட்டு நடுநிலையோடு குர்ஆனைப் படித்து விளங்கினால், குர்ஆன் கூறுவது மட்டுமே ஒரே நேர்வழி. (6:153). எஞ்சிய வழிகள் அனைத்தும் பெருத்த வழிகேடுகளே என்பதைத் திட்டமாக அறிவீர்கள். நாங்கள் ஆலிம்கள்-மார்க்க விற்பன்னர்கள் என வீண் பெருமை பேசும் மவ்லவிகள் வழிகேடர்களிலே பெருத்த வழி கேடர்கள். அவர்கள் போதிப்பது நேர்வழியல்ல. கோணல் வழிகளே (பார்க்க : 7:146, 31:6) என்பதையும் அறிந்து கொள்வீர்கள். 26:69 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆனில் முயலவோர் நேர்வழி பெறுவார்.

மனித இனம் ஓரினம்; சமத்துவ சகோதரத்துவ சமுதாயம். ஜாதி வேற்றுமையோ, இன வேற்று மையோ அறவே இல்லை. இந்தியாவில் மக்கள் மனதில் புரையோடிப் போயிருக்கும் இன இழிவு கடுகளவும் இல்லை. எனவே அன்று ”இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து’’ என்று பெரியார் கூறி அவரும் அவரது தொண்டர்களும் இஸ்லாத்தைத்தழுவ முற்பட்டதைத் தடுத்தவர்கள் இன்று அவர் மீது உண்மையான பற்றும் பாசமும் இருந்தால் பெரியாரின் விருப்பத்தை நடைமுறைப்படுத்த முன் வாருங்கள்.

மேல் ஜாதி எனப் பெருமை பேசும் மக்களே உங்களுக்கு உண்மையிலேயே இறைவன் மீதும், மறுமையிலும் நம்பிக்கை இருந்தால், உங்களின் இந்த வீண் பெருமை நாளை உங்களுக்கு நரகத்தையே பெற்றுத் தரும். நீங்கள் தூக்கிப் பிடிக்கும் நான்கு வேதங்கள், புராணங்கள், அனைத்தும் ஓரிறைவனால் ரத்து செய்யப்பட்டு இறுதி வாழ்க்கை நெறி நூலாக அந்த இறைவனால் கொடுக்கப்பபட்டதே குர்ஆன். உங்கள் வேதங்கள் முன் அறிவிப்புச் செய்யும் கல்கி அவதாரத்திற்குக் கொடுக்கப்பட்டதே குர்ஆன். அதில் உங்களுக்கும் முழு உரிமை இருக்கிறது. முஸ்லிம்க ளுக்கு மட்டும் சொந்தமானதல்ல. அதை நடுநிலை யுடன் படித்து நேர்வழியை அறிந்து அதன்படி நடக்க முன்வரும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

Previous post:

Next post: