அறிவுக் கிறுக்கர்கள்!

in 2015 டிசம்பர்

Y. முஹம்மது ஹனீப், திருச்சி-2.

வரும் 2016 ஜனவரி மாதம் 2016ல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடக்க இருக்கும் ´ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்காக வேண்டி தினம் தினம் 9 மணியளவில் தமிழன் டிவியில் மேற்படி இயக்க நபர்களால் பிரச்சாரம் நடந்து வருகிறது. இதில் பிரச்சாரத்தில் பேசிய ஒரு நபரிடம் ஹிஜ்ரி காலண்டர் பற்றிய கேள்வி எழுப்பப்பட் டது. அதற்கு அந்த ததஜ இயக்க நபர் பதிலாக பேசியபோது.

ஹிஜ்ரிக் காலண்டர் என்ற ஒன்றே நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கிடையாது. ஹிஜ்ரி வருடம் என்பதும் நபியவர்களுக்குத் தெரியாது. அவர் கள் இறப்புக்குப் பின் கலீஃபா உமர்(ரழி) அவர் கள் காலத்தில் தான் ஹிஜ்ரி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டன என்றும், ஹிஜ்ரி கமிட்டி என்று சில கிறுக்கர்கள் ஹிஜ்ரி காலண்டரைப் போட்டுக் கொண்டு பிறையை கணித்துச் சொல்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் பிறையைக் கண்களால் பார்த்துத்தான் நோன்பு வைக்கச் சொன்னார்கள் என்றும், இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் ஒருவர் வந்து, நாங்கள் நேற்று பிறையைப் பார்த்துவிட்டோம் என்று சொன்னதற்கு அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் நாங்கள் எங்கள் பகுதியில் பிறைப் பார்த்தால் தான் ஏற்றுக்கொள்வோம் என்று சொன்ன ஹதீஃதை ஆதாரமாகக் காட்டி பிரலாபித்த தோடல்லாமல், நீங்கள் அந்த மாதத்தை அடைந்து கொண்டால் நோன்பு வையுங்கள் என்ற வசனத்தின்படி அதை அடையாதவர்களும் இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். எல்லோரும் ஒரே நேரத்தில், ஒரே நாளில் நோன்பு நோற்க முடியுமா? என்று கூறி இப்படியொரு கூட்டம் இப்போது கிளம்பியிருக்கிறது. மக்களை குழப்பத்தில் ஆழ்த்தித் தானும் வழிகெட்டுப் போகிற கூட்டம்தான் இந்த கூட்டம். இவர்களை நாங்கள் விவாதத்திற்கு அழைத்தோம் அவர்கள் வரவில்லை. தலைதெறிக்க ஓடுகிறார்கள். நாங்கள் ஹஜ் ஜுக்கு சென்று வந்த பிறகு விவாதிக்க வருகிறோம் என்று கூறிச் சென்றவர்கள் வரவே யில்லை என்று எகத்தாளமாக பேசிக் கொண்டி ருந்தார்.

இதற்கு நான் சில விளக்கங்களைக் கொடுக்க ஆசைப்படுகிறேன். ஹிஜ்ரி கமிட்டிக்காரர்களைப் பொறுத்தமட்டில் “”விவாதம் என்று எதற்கும் நாங்கள் வருவதற்கில்லை. அது எங்கள் வேலையுமல்ல. விவாதம் செய்வதால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை. நாங்கள் சத்தியத்தை கையில் வைத்திருக்கிறோம். அதை உலகுக்கு உணர்த்துவதே எங்கள் வேலை. நாங்கள் கூறுவதை நீங்கள் ஆய்வு செய்துபாருங்கள். அது உண்மையாய் இருக்கும் பட்சத்தில், குர்ஆன், ஹதீஃதுக்கும் முரணில்லா திருப்பின் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் எங்களுக்கு வருத்தம் இல்லை. நாங்கள் யாரையும் ஏசவும் மாட்டோம். உங்களது அறி யாமை நீங்கும்; மாற்றம் ஒருநாள் வந்தே தீரும் என்று தான் கூறுகிறார்கள்.

இந்த அறிவுக் கிறுக்கர்கள் கூறுவது போல் அவர்கள் தலை தெறிக்க ஓடவில்லை. இவர்கள் வெற்று விளம்பரம் தேடிக் கொள்ளவும், தான் ஆஜானுபாகுவானவன் என்று தனது தொண்டரடிப் பொடியாழ்வார்களுக்குக் காட்டிக்கொள் ளவுமே இவ்வாறு உளறித் திரிகிறார்கள்.

அடுத்து ஹிஜ்ரி கமிட்டியினர் கணித்துக் கூறுகிறார்கள் என்று சொல்வதானது இவர்களின் தலைவன் சொல்லிக் கொடுத்ததை கிளிப் பிள்ளையாக அப்படியே ஒப்பித்து வருவது தான். கணிப்பு எது? கணக்கீடு எது? என்று தெரியாதவர்களா இவர்கள்? ஒன்றுமே அறியாத மடையர்களா என்ன? அறிந்தும் புறக்கணிப் பவர்கள், இல்லையென்றால் கணிப்பு என்ற வார்த்தை இவர்கள் எல்லோர் வாயிலும் ஒரே மாதிரியாக வருமா?

ஒரு தோப்பில் மாங்காய்கள் காய்த்துள்ளன. அறுவடைக்குத் தயாராக உள்ள அவற்றை ஒருவர் பார்த்து மற்றவரிடம் இவற்றையெல்லாம் அறுவடை செய்தால் ஒரு 50 டன் மாங்காய் தேரும், என்கிறார் என்று வைத்துக் கொள் வோம், கணிப்பு என்பது இதுவே. அதே தோப்பில் உள்ள மாங்காய்களை அறுவடை செய்து பின் எடை போட்டு 55.75 டன் மாங்காய் உள்ளது என்று சொன்னால் அது தான் அளவீடு, கணக்கீடு என்ற சரியான சொல்லாக்கமாகும். கம்ப்யூட்டரில் 1000+1000=என்று தட்டி னால் 2000 என்று வருவதை கணிப்பு என்பார்களா? கணக்கீடு (புள்ளி விவரம்) என்பார்களா?

அந்தக் கால மடையர்கள் நாக்கை சாய்த்து அஸ்ஸலாமு அலைக்கும் என்பதை “அஸ்ஸாமு அலைக்கும்’ என்றும், உன்லுர்னா என்று தஞ்சமடைவதற்கு மாறாக “ராயினா’ (4:46 பார்க்க) என்று சொன்னார்களே அதைப் போலல்லவா இந்தக் கால மடையர்களாக இவர்கள் இருந்து கொண்டு தெள்ளத் தெளிவானதின் பக்கம் இருப்பவர்களை கிறுக்குக் கூட்டம் என்கிறார்கள். ஹிஜ்ரி கமிட்டியினர் சொல்வது கணக்கீடுதான் என்பதேயல்லாமல் கணிப்பு அல்ல.

நபி(ஸல்) அவர்கள் “நாம் விண்கலையை அறிந்தவர்கள் அல்ல’ என்று கூறும் ஹதீஸ் இவர் கள் கண்களில் படுவதேயில்லை. அன்று விண் கலையை பகுத்தாய்வும் அறிவும் கணக்கீடு முறைகளும், கம்ப்யூட்டரும் இல்லாததே அவர் கள் பிறைகளைப் பார்த்துக் கணக்கிடச் சொன் னார்கள் என்ற செய்தியை முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைக்கிறார்கள். (2:185) நீங்கள் அந்த மாதத்தை அடைந்து கொண்டால் நோன்பு வையுங்கள் என்ற வசனத்தின்படி பார்த்தால் அந்த மாதத்தை அடையாதவர் களும் இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம் என்று சுயவிளக்கம் கொடுக்கிறார்கள். அதாவது இவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் எல் லோரும் ஒரே நேரத்தில், நோன்பு நோற்க முடியாது. எந்த பகுதியில் பிறை தோன்றுகிறதோ அவர்கள் தான் நோன்பு நோற்க வேண்டும் என்கிறார்கள்.

இவர்கள் கூற்றுப்படியான நிலைக்கு நாம் வரும் போது ஒரே நாளில் என்பது இரண்டு மற் றும் மூன்று நாட்கள் ஆகிவிடுகிறதே இந்த இரண்டு, மூன்று நாட்கள் என்பது குர்ஆனின் 2:189, 10:5ம் வசனங்களுக்கு முரண்படுகிறதே என்பதைக் கூட இவர்கள் சிந்திக்கத் தவறிவிட் டனரே என்பதுதான் நமக்கு வேதனையையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது. மேலும் ஹிஜ்ரி வருடம், ஹிஜ்ரி காலண்டர் என்ற ஒன்றே இறைத் தூதருக்கு தெரியாது. இதெல்லாம் அவர்கள் காலத்தில் இல்லை, என்று கூறி பாமர மக்களை ஏய்க்கப் பார்க்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகுக்கு வந்தது இறைத் தூதை எத்தி வைக்கத்தானேயன்றி ஹிஜ்ரி காலண்டரை பிரிண்ட் போட்டு நமக்குத் தரவும், ஏரோப்பிளேனைக் கண்டுபிடித்து நமக்கு இயக்கிக்காட்டவும் அல்ல, என்பதை இந்த TNTJ௺ வினருக்கு அறிவிக்க விரும்புகிறேன்.

காலம் என்பது மாறும் இவர்கள் கற்பித்துத் திரிந்தவை கூறிய வார்த்தைகள் யாவும் கட்டுக் கட்டான அபத்தங்கள், குப்பைக் கழிவுகள் என்பதைக் காலம் இவர்களுக்கு உணர்த்தும், அப்படி உணர்த்தப்பட்டதை இவர்கள் உணரத் தவறினால் அல்லாஹ் இவர்களை வழிகேட்டில் விட்டு விட்டான் என்பதை நாமும் உணர்ந்து அவர்களுக்காக துஆ செய்வதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்.

ஆசிரியர் குறிப்பு : சந்திரச் சுழற்சியைக் கணக் கிட்டு குறிப்பிட்ட மாதங்களில், குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட அமல்களைச் செய்து வருவது இபாதத், மார்க்கத்திற்கு உட்பட்டது, வணக்க வழிபாடுகளில் உள்ளது.

ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கு முழுக்க முழுக்க உலகியல் தேவைகளை முன்னிட்டு நிர்வாக வசதிக் காக கலீஃபா உமர்(ரழி) ஆட்சி காலத்தில் நிறுவப்பட்டதை பித்அத் வழிகேடு அதாவது “”ஹிஜ்ரி காலண்டர் என்ற ஒன்றே நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கிடையாது. ஹிஜ்ரி வருடம் என்பதும் நபியவர்களுக்குத் தெரியாது” என்று பிதற்றும் பொய்யன் பீ.ஜை. பின் எந்த முகத்தோடு மார்க்க அடிப்படையில், மார்க்கத்திற்கு உட்பட்ட நிலையில் சமுதாயத்தைப் பிளவு படுத்தி தவ்ஹீத்வாதி என்றும் தவ்ஹீத் ஜமாஅத் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்றும் பிதற்றித் திரிகிறார். தவ்ஹீத்வாதி, ததஜ நபி (ஸல்) காலத்தில் இருந்ததா? இவை நபியவர்களுக்குத் தெரியுமா? அவரது ததஜ ஜமாஅத் பித்அத்களிலேயே கேடுகெட்ட பித்அத், குஃப் ரிலேயே கடும் குஃப்ர், ´ஷிர்க்கிலேயே ஆகக் கேடுகெட்ட ´ஷிர்க் என்பதை அவரால் உணர முடியவில்லையா? சிவசேனாவுக்கு எதிர் சவால் விடுவதன் மூலம் ததஜவினர் அறிவுக் கிறுக்கர் கள் மற்றும் சிவசேனாவைப் போல் ததஜவின ரும் வழிகேடர்களே என்பதை நிரூபித்துள்ள னர். அவரது பெருமை (7:146) அவரை பெரும் வழிகேட்டில் இட்டுச் செல்கிறது. அவர் பின் னால் சுய சிந்தனையைக் கடன் கொடுத்து விட்டு 47:24 இறைவாக்குச் சொல்வது போல் உள்ளத்திற்குப் பூட்டுப் போட்டுக் கொண்டு செல்லும் சகோதர, சகோதரிகளே அந்தப் பூட் டைக் கழற்றி எறிந்து விட்டு நேரடியாக குர் ஆனைப் பார்த்து 6:153 இறைவாக்குக் கூறும் நேர்வழிக்கு வர முன் வாருங்கள். அல்லாஹ் அருள்புரிவானாக.

Previous post:

Next post: