உணர்வு….

in 2017 மார்ச்

இப்னு ஸதக்கத்துல்லாஹ்
அல்லாஹ்வின் அருளை (இஸ்லாத்தை இன வாதம் பேசும்) நிராகரிப்பாக மாற்றி, தங்கள் சமுதாயத்தை அழிவுக் கிடங்கில் இறக்கிவிட் டவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? 14:28

அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு (தங்கள் பக்கம் மக்களைத்) திருப்புவதற்காக (இன உணர்வை) அவனுக்கு சமமாக்குகிறார் கள். (அவர்களிடம்) நீங்கள் சொல்லுங்கள். நீங் கள் (இவ்வுலகில் சில காலம்) சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். (கடைசியில்) நீங்கள் போய்ச் சேரப்போவது நரகத்தில்தான் என்பது உறுதி. (என்று சொல்லுங்கள்) 14:30

கேள்வி : வெறும் வளர்ச்சி மட்டுமே வெற்றிக்கு போதாது என்று இன்னொரு சந்தர்ப்பத்திலே நீங்கள் சொல்கிறீர்கள்.
பதில்: ஆமாம், பொருளாதார முன்னேற்றம் ஏற் படுத்துவதை மட்டும் வைத்து தேர்தலில் ஜெயிக்க முடியாது. அது அவசியம், ஆனால், அது மட்டும் போதாது.

கேள்வி : அது மட்டுமே சக்ஸஸ்ஃபுல் ஃபார்முலா கிடையாது (என்கிறீர்கள் அப்படித்தானே?).
பதில் : எஸ் இட் இஸ் நாட் எனாஃப்.

கேள்வி : அதுக்காக ஒரு ஒரு சென்டிமென்ட் எமோ­ன் (வேண்டும் என்கிறீர்கள் அப்படித் தானே?)

பதில் : ஆமாம், ஒரு சென்டிமென்ட் ஒரு உணர்வு (வேண்டும். அதை) உண்டாக்குவதற்கு நமக்கு இந்துத்வா வேண்டும்.

கேள்வி : ஸோ, ஒரு அன்டஸ்டிங்ல பாத்தா வளர்ச்சி என்பது வந்து கவர்மென்ட்டுக்கு இந்துத்வா என்பது பப்ளிகுக்கு ஓட்டுக்கு (அப்படித்தானே)
பதில் : ஓட்டை (பிரியாமல்) சேர்ப்பதற்கு, ஏன்னா நம்ம இந்து சமுதாயம் பிரிந்து கிடக்கி றார்கள். ஜாதி, மொழி அடிப்படையில் பிரிந்து கிடக்கிறார்கள். அதை ஒன்னாக்கிறதுக்கு, ஜாதி மொழி (உணர்வை) மீறி ஓட்டு கிடைப்பதற்கு நமக்கு இந்துத்துவாதான் ஒரே வழி. பீ.ஜே.பி. ஜெயிக்கனும்னா வாஜ்பாய் போல் தவறு பண்ண கூடாது. வாஜ்பாய் என்ன தவறு பண்ணினார் என்றால் இன்டியா சைனிங், இன்டியா சைனிங் என்று சொல்லியே ஜெயிச் சுடலாம்னு பார்த்தார். அப்படி ஆகல. (எற் கனவே இருந்ததில) நாம பாதியாயிட்டோம். இன்னைக்கு வெற்றிக்கு காரணம் டெவலப் மென்ட், ஹிந்துத்வா, ஊழல் ஒழிப்பு.

கேள்வி : இந்த மூனும் கம்ப்பைன்டா போகனும் அப்படியா?

பதில் : ஆமாம், அதுக்குத்தான் நமக்கு மெஜா ரிட்டி கிடைச்சுது. தனியா ஜெயிக்கிறதுக்கு கார ணம் ஒண்ணு நரேந்திரமோடி, ரெண்டு சுப்ரீம் கோர்ட்ல நான் கேஸ் போட்டு ஊழல் வாதிகள் பேரை கெடுத்தது, மூணாவது ஆர்.எஸ்.எஸ். இதில் ஆர்.எஸ்.எஸ். உடைய பங்களிப்புதான் ஜாஸ்தி; ஏனென்றால் அவர்கள் தான் இந்தியா பூராவும் ஜாதியை மீறி ஓட்டு கிடைப்பதற்கு முயற்சி செய்தார்கள். அதனால் தான் 21% ஓட்டு இருந்த நமக்கு 31%க்கு போச்சு.

அதனால்தான் நீங்கள் இந்த ராமர் கோயில் விவகாரத்தை இன்னும் தீர்க்காமல் வைத்திருக் கிறீர்களா? அதாவது, நீங்க சொன்னபடி பார்த் தால் எலெக்சன்ல ஜெயிக்கணும்னா வளர்ச்சி மட்டும் போதாது. சென்டிமென்டும் வேண்டும். எமோசனும் வேண்டும், அதுக்காகத்தான் இந்த விசயத்தை பிடித்து கொண்டிருக்கிறீர்களோ?

மேலே இருப்பது 03.12.2016 தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ரங்கராஜ் பாண்டே பீஜே.பியின் சுப்ரமணியம் சுவாமியி டம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் தந்த பதில்களும், (சுருக்கம்) இதை ஏன் எடுத்தெழுதி யிருக்கிறோமென்றால், இந்த ஃபார்முலாவைத் தான் சில மாற்றங்கள் செய்து முஸ்லிம் இயக் கங்களும் கடைபிடிக்கிறார்கள். அதாவது, ஆர்.எஸ்.எஸ். காரர்களின் வழிமுறையைத் தான் முஸ்லிம்களும் பின்பற்றுகிறார்கள். இது போன்ற செயல்களைத்தான் அல்லாஹ் கீழ் காணும் வசனத்தில் தடை செய்கிறான்.

நம்பிக்கையாளர்களே! (அரைக் கிணறு தாண்டாதீர்கள்) நீங்கள் இஸ்லாத்தில் முழுமை யாக நுழைந்து விடுங்கள். மேலும் ஷைத்தான் (பிடித்தவர்களின்) அடிச்சுவடுகளைப் பின்பற் றாதீர்கள். நிச்சயமாக (அந்த) ஷைத்தான் (பிடித்தவர்கள்) உங்களுக்கு தெளிவான எதிரி (களாக இருப்பதை) கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்) (அவர்களின் வழியை நீங்கள் பின்பற்றலாமா? 2:208

இந்த வி­யத்தில் மற்றவர்களைப் பற்றி நாம் அதிகம் பொருட்படுத்தவில்லை. ஏனென் றால், அவர்கள் இஜ்மா, கியாஸ், தர்கா, தரீக்கா, சடங்கு, சம்பிரதாயம், மத்ஹபு என்று போய் விட்டவர்கள். ஆனால், குர்ஆன், ஹதீஃத் என்று பேசுபவர்களிடமும் இது இருப்பதைத்தான், இதுதான் இஸ்லாம் என்று அவர்கள் சொல்வ தைத்தான் நாம் பெரிய ஆபத்தாகப் பார்க்கி றோம். நிழலோடு யுத்தம் செய்வது போல, எங்களை பெரிய எதிரியாக சித்தரித்துக் காட்டி, முஸ்லிம் வந்து பிடித்து விடுவான், முஸ்லிம் வேலைக்கு வந்து விடுவான். முஸ்லிம் அதிகாரியாகி விடுவான். முஸ்லிம் நீதிபதியாகி விடுவான். முஸ்லிம் பிரதமர் ஆகிவிடுவான். அதனாலே ஒண்ணு சேருங்கள் என்று எங்களைப் பற்றி பூதாகரமாக சித்தரித்து காட்டி வளர்கிறார்கள்.

முஸ்லிமுக்கு எதிரான கலவரத்தை உண் டாக்குகிறார்கள். முஸ்லிமை ஒழித்தால்தான் நிம்மதி என்று ஒரு பாதுகாப்பு இல்லாத தோற் றத்தை இந்துக்களுக்கு உண்டாக்கி மத வெறியை தூண்டி விடுகிறார்கள். முஸ்லிம்கள் எல்லாம் சைலென்ட் ஆகிவிட்டால் அவர்கள் சிதறிப் போவார்கள். அவர்கள் என்ன செய்தா லும் சரி, நாங்கள் வாயைத் திறக்க மாட்டோம் என்று முஸ்லிம்கள் முடிவெடுத்து விட்டால் அவர்களுக்குள்தான் சண்டை நடக்கும். ஹிசிநிறீ7 சேனலில் Pமூ சொன்னது. அவர்கள் உள்ளம் ஒப் புக் கொண்ட உண்மையை அவர்கள் மனச்சாட்சி ஒப்புக்கொண்ட உண்மையை செயல்படுத்த அவர்கள் தயாரில்லை. அதே சமயம், இது நமக்கு ஆச்சர்யமாகவும் பட வில்லை. ஏனென்றால், (சொர்க்கத்துக்கு அழைக்கிறோம் என்ற பெயரில்) நரகத்துக்கு அழைப்பவர்கள் தோன்றுவார்கள். அவர்கள் நம்மைச் சார்ந்தவர்களாகவும், நாம் பேசு வதையே பேசுபவர்களாகவும் இருப்பார்கள். (புகாரீ)

என்று நபி(ஸல்) முன்னறிவிப்பு செய்து விட்டார்களல்லவா? அதனால்தான். ஆயினும் சொல்லி வைக்கிறோம். திருந்தி விடுங்கள், திருந்தாவிட்டால், ஒவ்வொரு ஆத்மாவும் தன் (தீய) செயல்களின் காரணமாக (மறுமையில்) ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் (6:70) என்பதை மட்டும் ஞாபகமூட்டுகிறோம் அவ்வளவுதான்.
யாரெல்லாம் அல்லாஹ்வின் (தூய) வழியை (மக்களுக்கு)த் தடுத்து, (மக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக) அதில் (இனவாதத்தை) கலப் படம் செய்கிறார்களோ அவர்களும் மறுமையை நிராகரிப்பவர்கள்தான். 11:19

(இந்த) நிராகரிப்போரை நீங்கள் எச்சரித்தா லும் (சரி) எச்சரிக்காவிட்டாலும் சரி இவர்கள் (திருந்தவும் மாட்டார்கள்) நம்ப(வும்) மாட் டார்கள் இது உறுதி (2:6) (ஏனென்றால்) அல் லாஹ் இவர்களின் இதயங்களிலும், செவிகளி லும் சீல் வைத்து விட்டான், இவர்களின் பார்வை மீதும் ஒரு திரை கிடக்கிறது. மேலும் இவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு. (2:7)

Previous post:

Next post: