சொர்க்கம், நரகம் உண்டா?

in 2017 மார்ச்

இப்னு ஸதக்கத்துல்லாஹ்

கடவுளைப் பற்றிச் சரியான ரீதியில் ஆராய்ந்து முடிவுக்கு வந்துவிட்டால் மறுமை சொர்க்கம், நர கம் என்பதெல்லாம் நம்புவதற்கு மிகச் சாதாரணமா னவையே. இது ஒரு வழி. மற்றொரு வழியாகவும் சொர்க்கம், நரகம் உண்டா? என்பதை உறுதிப்படுத் தலாம். அதுதான் கப்ர் வாழ்க்கை என்பது; கப்ரைத் தோண்டிப் பார்த்தால் யாருமே வாழ்வதைப் பார்க்க முடியாது. கப்ர் வாழ்க்கை என்பதைச் சரி யான முறையில் புரிந்து கொள்ள வேண்டியது அவசி யம். நல்லவர் கெட்டவர் அனைவரும் கப்ர் வாழ்க் கையை அனுபவிக்கின்றனர் என்பதற்கு இஸ்லாத் தில் ஆதாரங்கள் உள்ளன.

பலர் தீயிட்டுப் பொசுக்கப்ப்டடு சாம்பலாக்கப் படுகின்றனர். அவர்களின் சாம்பல்கள் பல பகுதி களில் ஓடும் ஆறுகளில் கரைக்கப்படுகின்றன. இவர் கள் குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட வில்லை; மாறாக நாட்டின் பல பகுதிகளிலும் இவர் களின் சாம்பல் பரப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கு கப்ரே இல்லை என்பதால் கப்ர் வாழ்க்கை கிடை யாது எனக் கூற முடியாது. அதுபோல் ஒரு மனி தனை காட்டு விலங்குகள் அடித்துச் சாப்பிட்டு விடு கின்றன. அல்லது கடலில் மூழ்கிச் செத்தவனை மீன்கள் உணவாக உட்கொண்டுவிட்டன. இவர் களுக்கெல்லாம் கப்ர் வாழ்க்கை எங்கே? ஆக, கப்ர் வாழ்க்கை என்பது அடக்கம் செய்யப்பட்ட அந்த இடத்தில்தான் நடக்கிறது என்று நாம் எண்ணக் கூடாது.

அவர்கள் எழுப்பப்படும் வரை அவர்களுக்கு மறைவான வாழ்க்கை இருக்கின்றது. (23:100)
இறந்தவர்களின் உயிர்களைக் கைப்பற்றிய இறைவன் மனித ஜின் வர்க்கங்களின் புலன்களுக்கு எட்டாத வகையில் வைத்து அவர்களின் அந்த வாழ்க்கையை நடத்தாட்டுகிறான் என்பதை இந்த வசனத்தின் வாயிலாக அறிகிறோம். சில கப்ர்களில் வேதனை செய்யப்படுவதை நபி(ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டியிருப்பதாக ஹதீஃத்கள் உள்ளன. அவை மக்களுக்கு இறைச் செய்தியை சொல்ல வந்த இறைத்தூதர் என்ற முறையில் மக்களுக்கு சொல்வ தற்காக அவர்களுக்கு அறிவிக்கப்பட்டவை.

இந்த கப்ர் வாழ்க்கைதான் மறுமையின் நுழை வாயில், ஏனென்றால் ஒருவன் மறுமையில் எதை அனுபவிக்கப்போகிறான் என்பதை இந்த கப்ர் வாழ்க்கை தீர்மானித்து விடும். கப்ரில் ஒருவன் இன்பத்தை அனுபவித்தால் அவன் மறுமையிலும் இன்பத்தைத்தான் அனுபவிப்பான். வேதனையை அனுபவித்தால் மறுமையிலும் வேதனையைத்தான் அனுபவிப்பான். எனவே, கப்ரை மறுமையின் நுழை வாயில் என்று சொல்வதில் தவறில்லை. மறுமை சொர்க்கம் நரகம் பற்றிய அறிவுபூர்வமான ஆதாரங் கள் இதுவரை கிடைக்காவிட்டாலும், இந்த கப்ர் வாழ்க்கை அறிவுபூர்வமாக உறுதிப் படுத்தப்பட்டுள் ளது. இந்த கப்ர் வாழ்க்கை என்பது உண்மைதான் என்பது நிரூபிக்கப்பட்டால், அதற்கு பின்னால் வரும் சொர்க்கம், நரகம் உண்டு என்பது தானாகவே நிரூபணமாகி விடும். மனிதனின் கேட்கும் திறனை விட மிருகங்களு டைய கேட்கும் திறன் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. இதற்கு ஆதார மாக, இலங்கையில் சுனாமி வந்த பகுதியில், மிருகங் கள் அழியவில்லை. சுனாமி வருவதற்கு ஓரிரு தினங் களுக்கு முன்பே அவை அந்த இடத்çக் காலி செய்து விட்டதாக சொல்லப்படுகிறது.

நிலநடுக்கம் வந்த பகுதிகளில் நிலநடுக்கம் வருவ தற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்தே கட்டி வைக் கப்பட்டிருந்த கால்நடைகள் வழக்கத்துக்கு மாறாக அலை பாய்ந்து கொண்டிருந்ததாகச் சொல்லப்படு கிறது. அதாவது நில நடுக்கம் வரப் போவதை ஓரிரு தினங்களுக்கு முன்பே அவை அறிகின்றன எப்படி?

மனித ஜின் வர்க்கங்களின் செவிப்புலனுக்கு எட்டாத பூமிக்குள் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் பூமியடுக்குகள் பாறையடுக்குகள் நகரும் போது ஏற் படும் சப்தத்தை அவை செவியுறுகின்றன. உடனே, சுதந்திரமாக சுற்றித் திரியும் மிருகங்கள் அந்த இடத்தை விட்டு போய் விடுகின்றன. கட்டி வைக் கப்பட்ட மிருகங்கள் வழக்கத்துக்கு மாறாக அலை பாய்கின்றன.

முற்காலத்தில் கிணறு வெட்டுவதற்காக நீரூற்று இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க குறிப்பிட்ட நிலப்பரப்பில் பசுவை மேய விட்டு அது எந்த இடத்தில் படுத்து ஓய்வெடுக்கிறதோ, அந்த இடத் தில் கிணறு வெட்டியதாக சொல்லப்படுகிறது.

இதுவும் அதே கோணத்தில் உள்ளதுதான். பூமிக் குள் நீரூற்று இருக்கும் இடத்தில் தண்ணீர் சலசலப்பு இருக்கும். மனித ஜின் வர்க்கங்களின் செவிப் புல னுக்கு எட்டாத, தண்ணீர் சலசலக்கும் அந்த சத் தத்தை பசு செவியுறுகிறது. அந்த நிலப்பரப்பின் ஏனைய இடங்களை விட தண்ணீர் சலசலப்புச் சத் தம் கேட்கும் அந்த இடம் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் பசு அந்த இடத்தில் படுத்து அசை போடுகிறது.

இவையயல்லாம், இன்று உறுதி செய்யப் பட்டவை. இதையேதான் 1400 வருடங்களுக்கு முன் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஓர் அடியா னது உடலை அடக்கம் செய்த பின் அவன் நிராகரித் தவனாகவோ, நயவஞ்ச கனாகவோ இருந்தால், இரும்பாலான சுத்தியால் இரண்டு காதுகளுக்கு மிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது அவன் கத்துவது மனிதர்கள், ஜின்கள் தவிர மற்ற அனைத்து ஜீவராசிகளும் செவியேற்கும். அறிவிப்பவர் : அனஸ்(ரழி), புகாரி.

கப்ர் வாழ்க்கை உண்டு என்பது இதன் மூலம் உறுதியாகிறது. கப்ர் வாழ்க்கை உறுதி எனும் போது, அதற்குப் பின்னால் வரப்போகும் சொர்க்கம், நரகம் என்பதும் உறுதியாகி விடுகிறது அல்லவா?

Previous post:

Next post: