முஸ்லிம்களே படிப்பினை பெற மாட்டீர்களா?

in 2017 ஏப்ரல்,தலையங்கம்

முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மிகக் கடுமையான சோதனைக்கு உலகம் முழுவதும் உள்ளாக்கப்பட் டிருக்கிறார்கள். இந்தக் கடும் சோதனைகள் முஸ்லிம்கள் தங்கள் கைகளால் தேடிக்கொண்ட வையே அல்லாமல் வேறு யாரும் இதற்குக் காரண மல்ல என்று பல இடங்களில் அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான். இத்தனைக்கும் முஃமின்களைக் காப்பாற்றுவது, முஃமின்களுக்கு உதவி செய்வது எனது கடமை என்றும் அல்லாஹ் கூறியுள்ளான். அப்படியானால் உலகளாவிய அளவில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் கடும் துன்பங்களுக்கு அவர்கள் உள்ளத்தில் ஈமான் நுழையாத பெயர்தாங்கி முஸ்லிம்களாக இருக்கிறார்களே அல்லாமல், உண்மை முஃமின்களாக இல்லை என்பது நிதர்சன உண்மையாகும்,

இந்த உண்மையை சமீபத்தில் நடந்து முடிந்த உ.பி. தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்துகின்றன. உ.பி.முஸ்லிம்கள் அதிகமாகவுள்ள மாநிலம். அதி லும் குறிப்பாக தேவ்பந்த் தொகுதி அதிகமான முஸ் லிம்களைக் கொண்டது. அங்கு பா.ஜ.க. மாநிலத்தில் ஒரேயயாரு முஸ்லிம் வேட்பாளரை யும் நிறுத்தவில்லை. அதற்கு மாறாக இதர கட்சிகள் அனைத்தும் அத்தொகுதியில் முஸ்லிம்களையே தங் களின் வேட்பாளர்களாகப் போட்டியிட வைத்துள் ளனர். விளைவு முஸ்லிம்களின் வாக்குகள் சிதறி, பா.ஜ.க. அத்தொகுதியைக் கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

உ.பி.யில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் 3:103 இறைக் கட்டளையை நிரா கரித்துச் சிதறுண்டு பல பிரிவினர்களாகப் பிரிந்து கிடக்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் முஸ்லிம்கள் 50க்கும் மேற்பட்டப் பிரிவுகளாகப் பிரிந்து சீரழிகின்றனர். இந்தப் பிரிவினர்கள் அனைவரும் 49:14 இறைவாக்குக் கூறுவது போல் பெயர்தாங்கி முஸ்லிம்களாக, நாளை நரகை நிரப்பும், நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த 72 பிரிவினர்களில் அடங்குவார்களே அல்லாமல் 6:153 இறைவாக்குக் கூறும் சுவர்க்கம் செல்லும் ஒரேயயாரு பிரிவில் அடங்க மாட்டார்கள். காரணம் இந்தப் பிரிவினர் அனைவரும் அல்குர்ஆனின் 3:103,105, 6:153,159, 12:108, 30:32, 42:13,14, 21:92,93, 23:52-56 போன்ற எண்ணற்ற வசனங்களைச் சுய விளக்கங்கள் மேல் விளக்கங்கள் கொடுத்து (பார்க்க : 2:159-162) நிராகரித்து குஃப்ரிலாவது உறுதியாகத் தெரிகிறது.

இந்த மாபெரும் வழிகேட்டிற்கும், நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகி ஒப்பாரி வைக்கப் போகும் பரிதாப நிலைக்கும் (பார்க்க : 33:36,66-68) கார ணம், நாங்கள்தான் மவ்லவிகள், ஆலிம்கள், அல்லா மாக்கள், குர்ஆனையும், ஹதீஃத்களையும் கரைத் துக் குடித்த மேதாவிகள், மக்கள் குர்ஆனுக்கு நாங் கள் கொடுக்கும் விளக்கத்தை ஏற்றே நடக்க வேண் டும், அவர்களாக குர்ஆனை அவர்களது மொழியில் படித்து விளங்க முற்படக்கூடாது என்று வீண் பெருமை பேசும் (பார்க்க : 7:146) மதகுருமார் களையும், அற்ப உலகியல் ஆதாயங்களைக் குறுக்கு வழியில் அடைய அரசியல் தலைவர்களையும் கண் மூடிப் பின்பற்றுவதேயாகும். அவர்கள் தங்களின் வசீகர, சூன்ய பேச்சால் பெருங்கொண்ட மக்களை மயக்கித் தங்களை கண்மூடிப் பின்பற்ற வைக்கின்ற னர். (தக்லீது)

முஸ்லிம்கள் ஒன்றிணைந்து ஒரே ஜமாஅத்தாக 3:103, இறைக்கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி நடக்க முன்வராவிட்டால் இவ்வுலகிலும் பேரழி தான். நாளை மறுமையிலோ நிரந்தர நரக நெருப்பு தான். முஸ்லிம்களே எச்சரிக்கை!

நாளை மறுமையில் இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்கள் “”என்னுடைய இறைவா! நிச்சயமாக என் சமூகத்ததார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணிக் கப்பட்டதாக ஆக்கிவிட்டார்கள்!” என்று(நம்) தூதர் கூறுவார் (25:30) என்று இறைவனிடம் முறை யிட இருக்கிறார்கள். மேலும் இம்மதகுருமார்களை யும், அரசியல் குருமார்களையும் அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் தரகர்களாக கொள்ப வர்கள் கொடிய ´ர்க்கில் மூழ்குகிறார்கள். ஆக இவர்கள் பின்னால், செல்கிறவர்கள் நாளை நரகை நிரப்புபவர்களே ஆதத்தின் மக்களில் ஒவ்வொரு ஆயிரத்திலும் 999 பேர் நரகிற்குரியவர்களே (பார்க்க புகாரி(ரஅ) 3348, 4741, முஸ்லிம் 379)

முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினர் இணை வைக்கும் நிலையிலேயே இருக்கின்றனர். (பார்க்க : 12:106)
குர்ஆன் வசனங்களையும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களை மட்டுமே எடுத்து வைக்கப்படும் கூட் டங்களுக்கு முஸ்லிம்களைப் போகவிடாமல் ஏன் இந்த மவ்லவிகள் தடுக்கிறார்கள் என்ற இரகசியம் புரிகிறதா? 2017 மே 14 ஞாயிறன்று பெரம்பலூர், துறைமங்களம், மூ.லு.மஹால் நிகழ்ச்சிக்கு வரவிடா மல் தங்கள் பக்த கோடிகளைத் தடுப்பதில்தான் இம்மவ்லவிகள் குறியாக இருப்பார்கள். 39:17 இறைவாக்குக் கூறும் தாஃகூத்கள் இம்மவ்லவிகள் தான். அவர்களை ரப்பாக ஆக்கி வணங்காமல், அவர்கள் தடுப்பதைக் கண்டு கொள் ளாமல் அங்கு வந்து குர்ஆன், ஹதீஃத்களை கேட்டு அதன்படி நடக்க முன்வருகிறவர்கள் மட்டுமே நேர்வழி பெறும், அல்லாஹ்வின் நன்மாராயம் பெறும் அறிஞர்கள் கூட்டமாகும். (பார்க்க:39:17,18)

Previous post:

Next post: