வரதட்சணை – ஒரு யதார்த்த ஆய்வு!

in 2017 ஏப்ரல்

L.M.A. முகம்மது புகாரி, திருச்சி. செல்:9942611130

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! நம் மைப் படைத்துப் பரிபாலிக்கும் ஒரே இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாவதாக. தற்காலத்தில் வரதட்சணை என்பது கிட்டத்தட்ட அனைத்து மதத்தவரிடமும் காணப் படும் ஒரு சமூகத் தீங்காக உள்ளது. ஆனால் இஸ் லாம் என்பது மதமல்ல, அது உண்மையான ஒரே கடவுளால் அனைத்து மனிதர்களுக்கும் அருளப் பட்ட ஒரே வழிகாட்டல், மார்க்கம் என்று சொல் கின்ற முஸ்லிம்களிடமும் இந்த வியாதி பரவியிருக் கிறது. அதனைத் தடுத்து நிறுத்த பல பேர் வரதட்சணை வாங்க மாட்டோம் என்று சத்தியம் செய்வது, அதனை பிச்சை, கொள்ளை என்று கடுமையான வார்த்தைகளைக் கூறி ஏசுவது போன்ற செயல்களைச் செய்து தடுத்து நிறுத்த முயற்சிப்பதையும் பார்க்கிறோம். எப்படியாவது அதற்கு எதிராக ஒரு வெறுப்பை உருவாக்கி ஒழித்து விடலாம் என்று முயன்றாலும் அது பல ரூபங்களில் மீண்டும், மீண்டும் சமுதாயத்திலே இருந்து கொண்டு தானிருக்கிறது. இப்படிப்பட்ட மனித முயற்சிகள் தோற்றுக் கொண்டுதானிருக்கின்றன.

உண்மையிலேயே வரதட்சனை ஒழியவேண் டும் என்றால் அதற்கு ஒரே வழிதான் உண்டு. இறை வன் கொடுத்த வழிகாட்டலைப் பின்பற்றி மனிதர் கள் வாழ்ந்தால்தான் வரதட்சனை ஒழியும். அதற்கு முஸ்லிம்கள் தான் முன்முயற்சி எடுக்கவேண்டும். அதாவது முஸ்லிம்கள், மதவாதிகளைக் காப்பியடிக் காமல் உண்மையிலேயே இஸ்லாத்தை உள்ளதை உள்ளபடி வாழ்க்கையில் முழுமையாக பின்பற்ற வேண்டும். ஒரு வி­யத்தில் இஸ்லாமியச் சட் டத்தையும் இன்னொரு வி­யத்தில் மதவாதிகளின் மனிதச் சட்டத்தையும் பின்பற்றுவது அரைக்கிணறு தாண்டுவது போல் ஆகிவிடுகிறது. எனவேதான் இறைவன் தன் வழிகாட்டல் அல்குர்ஆனில் “”ஓ நம்பிக்கை கொண்டவர்களே நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து கொள்ளுங்கள்” அல்குர் ஆன் : 2:208 என்று கட்டளையிடுகிறான். மனிதர் கள் அப்படிச் செய்யாத வரை எந்தக் கொம்பனா லும், எந்த மனிதச் சட்டத்தை இயற்றியும் வரதட்சனையை ஒழித்துவிட முடியாது.
வரதட்சணை என்றால் என்ன?

சமஸ்கிருத மொழியில் வரன் என்றால் மணமகன், தட்சணையயன்றால் காணிக்கை. மணமக(ன்)னுக்குக் காணிக்கை என்று பொருள். குருதட்சணை போன்று. காணிக்கையாக உருவா னது தான் பிற்காலத்தில் தற்போது சொல்லப்படும் “”வரதட்சணை”யாக பரிணாம வளர்ச்சியடைந் திருக்கிறது. நம் நாட்டில் பெரும்பாலான மதங்க ளில் பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது; சமீபத்தில் மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்றும் வரை. அதனால் சில இரக்க குணமுடைய, புத்திசா லித் தாய்மார்கள் “”ஆணும் நம் பிள்ளைதான், பெண் ணும் நம் பிள்ளைதான். ஆனால் சொத்துரிமை ஆண் களுக்கு மட்டும் என்பது என்ன நியாயம்?” என்ற சிந்தனையின் காரணமாக பெண்கள் திருமணத்தின் போது சீர் சீராட்டு, வரதட்சணை என்ற நடை முறைகளை உருவாக்கி அதன் மூலம் பெண் பிள் ளைக்கும் ஓரளவு பொருளாதாரத்தை கொடுப்பதற் காக இந்த நடைமுறைகள் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுவோரும் உண்டு. வசதி படைத்தவர்கள் செய்வதைப் பார்த்து காலப் போக்கில் பொருளாதா ரம் இல்லாதவர்களிடமும் “”எப்படிக் கொடுப்பீங் களோ எங்களுக்குத் தெரியாது ஆனால் கொடுத் தாக வேண்டும்” என்று நிர்பந்திக்கிற அளவுக்கு மனித மனங்கள் கல்லாகி விட்டன.

சரி, பெண்களுக்குச் சொத்துரிமை சட்டம் வந்த பிறகாவது ஒழிந்ததா என்றால் அதுவும் இல்லை. ஆணாதிக்க மனித சமுதாயம் அந்தச் சட்டத்தையும் சரியாக பின்பற்றுவதில்லை. அதிலும் மனிதர் போட்ட சட்டத்தில் ஆணுக்கும், பெண் ணுக்கும் சம பங்கு என்ற சட்டத்தையும் ஏற்க மறுக் கிறார்கள். வீ.V.யில் விவாதங்கள் அனல் பறக்கிறது.

இஸ்லாமியச் சட்டம் என்ன சொல்கிறது?
இஸ்லாமியச் சட்டம் அனைத்தும் அறிந்த, உண்மையில் உலகை ஆள்பவன் கடவுள் போட்ட, நீதியான அனைத்து மனிதருக்குமான சட்டம். அதன்படி பெண்களுக்கு எப்போதும் சொத்துரிமை உண்டு. இஸ்லாத்தின் இறுதி வடிவத்தை முகம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமாக இறைவன் அருளிய போது வருங்காலச் சூழல்கள், மனித நாகரீகம், குடும்ப அமைப்புகள் அடிப்படையில், பெண் ணுக்கு 1 பங்கு ஆணுக்கு அதைப் போல் 2 பங்கு என்ற சொத்துரிமை இன்று வரை சட்டபூர்வமாக உள்ளது. என்றைக்கும் இருக்கும். இருந்தும் இஸ்லா மியர் மத்தியிலும் எப்படி வந்தது வரதட்சணை. ஆம் உலகிற்கே வழிகாட்டவேண்டிய முஸ்லிம் களில் பலருக்குச் சரியான இறை நம்பிக்கையும், இஸ்லாமிய சட்டதிட்டங்களும் முழுமையாகத் தெரியாததால், தெரிந்து கொள்வது அவசியம் என்பதை உணராத காரணத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமியத் திருமணம் (நிக்காஹ்)
இஸ்லாம், மனிதன் பிறப்பது முதல் இறப்பது வரை எப்படி வாழவேண்டும் என்று வழிகாட்டு கிறது. இஸ்லாமியச் சட்டப்படி, வயது வந்த ஒரு ஆண் திருமணம் செய்ய விரும்பும்போது, தனக்குப் பிடித்த பெண்ணைத் தேர்ந்தெடுத்து (குடும்பத்தார் மூலம்தான்) பெண்ணின் சம்மதத்தை பெண்ணின் பொறுப்பாளர் முன்னிலையில் பெற்று, பெண் ணுக்கு மஹர் கொடுத்து (திருமணக் கொடை), 2 சாட்சிகள் இருக்க நிக்காஹ் (திருமண ஒப்பந்தம்) செய்து அங்கே அழைக்கப்பட்ட சொந்தபந்தங்கள், நண்பர்கள், மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் விருந்து கொடுக்கிறார் – அவருடைய பொருளாதார சக்திக்குத் தகுந்தபடி. இப்படித்தான் இஸ்லாம் வழிகாட்டுகிறது. மற்றபடி தற்காலத்தில் நடப்பது போன்று எந்தவித ஆடம்பர ஆர்ப்பாட்டம், வீண் விரயத்தையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. “”எந் தத் திருமணம் குறைந்த பொருட் செலவில், எளிமை யாக நடத்தப்படுகிறதோ அதுவே பரக்கத்தான திருமணம்” என்பது நபிகளாரின் வாக்கு, வழிகாட் டல். ஹதீஃத், பைஹகீ, நஸாஈ.

இஸ்லாம் நிக்காஹ் என்று சொல்லும் போது அது சம்பந்தப்பட்ட வேளைகள், பெரும்பாலும் மணமகன் சம்பந்தப்பட்ட வேளையாகத்தான் அவரது பொருளாதாரத்தை அனுசரித்துத்தான் வீண் விரயம், ஆடம்பரம், பெருமை, அனாச்சாரங் கள் இன்றிச் செய்யக் கட்டளையிடுகிறது.

இஸ்லாமிய பாகப் பிரிவினை :
அப்படி அவர் பெண்ணை வாழ்க்கைத் துணைவியாக ஏற்று வாழும்போது, பிற்காலத்தில் இந்த ஆணுக்கு அவர்கள் பெற்றோரிடமிருந்து பாகப்பிரிவினை மூலம் சொத்துகள் அவருடைய பங்கு கிடைப்பது போன்று, அந்தப் பெண்ணுக்கும் அவருடைய பெற்றோரிடமிருந்து பெண்ணுக்குரிய பங்கு சட்டப்படிக் கிடைக்கிறது. அப்படிக் கிடைப் பது கோடிக்கணக்கில் இருந்தாலும் அது வரதட் சணையாகாது. அல்லாஹ்வுடைய சட்டப்படி கிடைக்கும் அனுமதிக்கப்பட்ட (ஹலால்) அபி விருத்தி(பரக்கத்) உள்ள பொருளாதாரமாகும். இப் படிப்பட்ட இஸ்லாமிய வழிமுறைகளை (சட்டங் களை) அனைத்து முஸ்லிம்களும் பின்பற்றினால் திருமணத்தின் போது வரதட்சணை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

நடப்பதென்ன:
ஆனால் முஸ்லிம்கள் பெரும்பாலோர் இஸ் லாமியச் சட்டத்தைப் புறக்கணித்து பெயரளவில் முஸ்லிம்களாக இருந்துகொண்டு மதவாதிகளை ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் அப்படியே பின்பற்றி, ஆர்ப்பாட்டம், பெருமை பாராட்டுதல் வீண் விரயம் செய்து தான் ஒரு முஸ்லிம் அல்லாஹ் வுக்குப் பதில் சொல்ல இருக்கிறோம் என்ற உண்மை யையே மறந்து விடுகிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது, நடுத்தர மற்றும் ஏழை முஸ்லிம் கள்தான். செல்வந்தர்கள் கிலோ கணக்கில் நகை போடுபவர்கள், ஆடம்பரமாக செலவு செய்பவர் கள். அதற்குரிய பொருளாதாரத் தகுதியில் இருப் பார்கள். அத்தகைய பொருளாதார தகுதியில் உள்ள ஆணுக்குத் தான் பெண்ணைக் கொடுப்பார்கள். எனவே அப்படிப்பட்டவர்களுக்குப் பொருளாதார மற்றும் பிற கஷ்டங்கள் அதிகம் தெரியாது. ஆனால் இறைவன் கட்டளைப்படி வாழாத, பிற்காலத்தில் முறையாகச் செய்ய வேண்டியதை முன்னரே நிக்காஹ்வின்போது பெருமையடித்து ஊர் உலகத்திற்காகச் செய்து, ஹலாலாக பெண்ணுக்கு கிடைக்க வேண்டியதை ஹராமானதைப் போன்று ஆக்கிய, இஸ்லாத்தை பின்பற்றாத குற்றத்திற்காக இம்மை மறுமையில் அல்லாஹ்வுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். நிறைய செலவு செய்தும் அல்லாஹ்வின் அருளைப் பெறமுடியாது.

அதே நேரத்தில் இதையயல்லாம் பார்க்கின்ற கேள்விப்படுகின்ற நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழை முஸ்லிம்கள், பெண் வீட்டாரிடம் நகை, பொருட் கள் கொடுக்கும்படி பொருளாதார தகுதி இல்லாத வர்களையும் வற்புறுத்துகிறார்கள். முடிவு, நடுத்தர வர்க்கத்தினரில், ஒரு உதாரணத்திற்கு ஒரு குடும்பத் தில் இரண்டு ஆண், இரண்டு பெண் பிள்ளைகள் என்றால், சில குடும்பங்களில் அனைத்துப் பொரு ளாதாரத்தையும், குடியிருக்கும் வீட்டைக்கூட அடமானம் வைத்து 2 பெண் பிள்ளைகளுக்கு வரதட்சனை கொடுத்து நிக்காஹ் செய்து வைப்பார் கள். அதாவது பெண் குமர்களை கரை சேர்க்கிறார் களாம். 2 ஆண் பிள்ளைகள் திருமண வயது வந்திருந்தாலும் அவர்களை குமர்களாக நினைக்க மாட்டார்கள். பின்னர் அந்த ஆண்கள் எந்தவித மான குடும்ப பொருளாதாரமும் இல்லாத நிலை யில், அவர்கள் திருமணத்தின்போது, வரதட்ச ணைத் தவறை மிகவும் நியாயப்படுத்தியே செய் வார்கள். இப்படியே தவறுகள் தொடர்கதையா கிறது. வரதட்சணைப் பரிணாம வளர்ச்சியடை கிறது.

நடுத்தர வர்க்கத்தினர் நிலை இப்படியயன் றால் ஏழைகள் நிலையோ சொல்லி முடியாது. நிக்காஹ் செய்வதற்காகப் பலரிடம் உதவி பெற்று தன்மானத்தை இழந்து, மனம் நொந்து துர்பாக்கிய நிலைக்கு ஆளாகிறார்கள். கொடுக்க இயலாதவர் களையும் ஊர் உலக வழக்கம் என்று கூறி கொடுக் கும்படி வற்புறுத்துகிற, மனிதாபிமானமற்ற, வெட்கம் கெட்ட நிலைக்கு வரதட்சணை கேட்ப வர்கள் வந்து விடுகிறார்கள்.

ஆக செல்வந்தர்கள் விளையாட்டுப் போன்று அதிக சிரமமின்றி, பெருமைக்காகச் செய்கின்ற அதையும் வெளியில் சொல்கின்ற செயல் முழு சமுதாயத்தையும் பாதிக்கிறது. காரணம், நிக்காஹ் அனைத்து முஸ்லிம்களும், அனைத்து மனிதர் களுமே செய்ய வேண்டிய ஒரு அத்தியாவசியமான செயலாக இருக்கிறது. செல்வந்தர்கள் இஸ்லாமியச் சட்டப்படி நிக்காஹ்வின் போது எந்தவித கொடுக் கல் வாங்கலும் செய்து பெருமை பாராட்டாமல் அவர்களுடைய சொத்துக்களை இஸ்லாம் சொல் வது போன்று பாகப் பிரிவினை நேரத்தில் ஆண், பெண் பிள்ளைகளுக்கு பகிர்ந்தளித்தால் அதைப் பார்த்து முழு சமுதாயமுமே நிக்காஹ்வின்போது எவ்வித கொடுக்கல் வாங்கலும் செய்யாமல் மனித இனத்துக்கே முன்மாதிரியாக வாழ்ந்துகாட்ட முடியும். முஸ்லிம்கள் இப்படித்தான் செய்வார்கள் என்ற நிலை ஏற்படும்.

இங்கே சில வி­யங்களைக் கவனிக்கவேண் டும். பெரும்பாலான முஸ்லிம்கள் மார்க்கம் என்ன சொல்கிறது என்றே தெரியாத நிலையில் இருக்கி றார்கள். எவையயல்லாம் வரதட்சணை, எவை யயல்லாம் வரதட்சனையாகாது என்று பட்டி மன்றம் நடத்தாத குறையாக மனிதக் கருத்துக்களை விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சரியான மார்க்கச் சட்டம் தெரிந்திருந்தால் அல்லாஹ்வுக்குப் பயந்து வாழக் கூடியவர்களும் இருக்கத்தான் செய் கிறார்கள். இது வி­யமாக மக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தக்கூடிய பிரச்சாரங்கள், எழுத்து கள் மிகக் குறைவாகவே இருக்கிறது. நிக்காஹ் சம்பந்தமாக பேசும்போது பெண் வீட்டாருக்கு வீண் செலவு வைக்கிறார்கள் என்பது மட்டுமல்ல. ஆண் வீட்டாருக்கும் வீன் செலவுகள் வைக்கத்தான் செய்கிறார்கள். நிக்காஹ்வின்போது இஸ்லாமிய கோட்பாட்டிற்கு மாறாக பெண் வீட்டாரை விருந்து போட வைக்கும் இந்தச் சமுதாயம் ஆண் வீட்டாரையும் விட்டு விடுவதில்லை. அவர்களை ரிசப்­ன் என்ற பெயரில் விருந்து போட வைத்து அதற்கும் மண்டபச் செலவு, டெக்கரே­ன் போன்ற வீண் விரயங்களைச் செய்ய வைக்கிறார் கள். இருப்பவர்கள் எத்தனை விருந்து வைத்தாலும் அவர்களுக்கு பிரச்சினை இல்லைதான். ஆனால் ஊர் உலக வழக்கம் என்ற பெயரில் மனித சமுதாயத் தையே அது பாதிக்கிறதே. ஆக ஒரு நிக்காஹ்விற்கு இரண்டு விருந்து, இரண்டு நாட்கள் வீண் ஆர்ப் பாட்டங்கள், சொந்த பந்தங்களுக்கு, உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு நாள் பயணக் கஷ்டங்கள், அவரவர்களின் ஹலாலான தொழில் முயற்சிகள் பாதிப்பு என பல வீண் விரயங்கள் நடக்கின்றன.

இஸ்லாம் நிக்காஹ்விற்காக மணமகனை மட்டும்தான் “”வலிமா” என்று விருந்து வைக்கச் சொல்கிறது. அந்த வலிமா விருந்தை “”நிக்காஹ்” முடிந்தவுடனே கொடுக்க இஸ்லாம் அனுமதிக் கிறது. “”முதல் நாள் (திருமணத்தன்று) வலிமா விருந்து கொடுப்பது நபி வழி, இரண்டாம் நாள் வழங்குவது அனுமதி, மூன்றாம் நாள் வழங்குவது பகட்டாகும்.” இது ஹதீஃத். அறிவிப்பவர் இப்னு மஸ்ஊத்(ரழி), நூல் : திர்மிதி மற்றும் புகாரி எண் : 5163, 5166, 5170

ஆனால் ஊர் உலக வழக்கம் இதையயல்லாம் நாம் மாற்றமுடியுமா? என்று சப்பைக்கட்டுப் பேச்சு கள் பேசி இரு வீட்டாருமே வரட்டு கவுரவத்திற் காக தகுதி மீறி பொருள் விரயம், கால விரயம் செய் கிறார்கள். இங்கே இன்னொன்றையும் கூறுவது பொருந்தும். அதாவது நிக்காஹ் என்பது ஒரு குடும்ப நிகழ்ச்சியாக, உறவினர்கள் மற்றும் நட்பு வட்டத்தோடு மட்டும் செய்ய வேண்டியது. அப் படித்தான் இஸ்லாம் வழிகாட்டுகிறது. தொழில் சம்பந்தமாக தனியாக, எவ்வளவோ செய்து கொள்ளமுடியும். இஸ்லாம் தடுக்கவில்லை. தொழில் துறைகளையும் இதில் தொடர்புபடுத்து கிறபோது, பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சில இடங்களில் உறவினர்களைக் கவனிக்க இரண்டு வார்த்தைகள் பேசுவதற்கு கூட முடியாமல் மன வருத்தங்கள் ஏற்படும் சம்பவங்களையயல்லாம் பார்க்கிறோம். இப்போதெல்லாம் பல ஊர்களில் வசிக்கின்ற உறவினர்கள் ஒருவரை ஒருவர் சந்திப் பதே நிக்காஹ் போன்ற சந்தர்ப்பங்களில் தானே. தொழில் ரீதியாக எண்ணற்றவர்களை அழைக்கும் போது நல்ல சிந்தனை உள்ளவர்கள்கூட இதில் தவறிழைத்து, துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.

எதற்கெடுத்தாலும் ஊர் உலக வழக்கம் பற் றிப் பேசுகின்ற என் அருமை முஸ்லிம்களே, தற் போது ஊர் உலகத்தில் ரொம்பப் பேர் சிலை வணக்கம் செய்கிறார்களே, இஸ்லாத்திற்கு வருவ தற்கு முன் நம் முன்னோர்கள் சிலர் கூட செய்தார் களே, அதிலிருந்து மட்டும் எப்படி நாம் விடுபட் டோம்? அதே முறையில், அதே இஸ்லாத்தை முறை யாகப் பின்பற்றினால் வரதட்சணை என்ற முட் டாள் தனத்திலிருந்தும் நாம் விடுபட முடியும். உல கிற்கே வழிகாட்டமுடியும். இஸ்லாம் மனித இனம் முழுமைக்கும் ஒரே இறைவனால் வழங்கப்பட்ட ஒரே வழிகாட்டல். அது முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானது என்பது அபத்தமானது. உண்மைக் ஓர் மனிதன் இஸ்லாத்தை வாழ்க்கையில் ஏற்றபின் தான் அவன் இஸ்லாமியன், எந்த மனிதனும் இஸ்லாத்தைப் பின்பற்றலாம். அது இறைவன் கொடுத்துள்ள உரிமை.

இங்கே அனைத்து மதத்தினருமே ஓர் உண்மையைச் சிந்தித்து உணர்வது நல்லது. உலகில் உள்ள அனைத்து மதத்தவர்களிடமும் “”கடவுள்” எத்தனை பேர்” என்று கேட்டுப்பாருங்கள். “”கடவுள் ஒருவரே” என்றுதான் பதில் வரும். ஆயிரம் கடவுள் களை வணங்குபவர்கள் கூட, “”ஏகப் பரம்பொருள், எல்லாம் வல்ல இறைவன், ஆண்டவன், பகவான்” ஒருவன்தான் என்பார்கள். “”ஆயிரமாயிரம், கடவுள் கள் என்பதெல்லாம் ஒரே கடவுளின் பல அவதாரங் கள்” என்று கூறுகிறார்கள். அடுத்து உலகில் உள்ள மனிதர்கள் அனைவரையும் உற்று நோக்குங்கள்.

இறைவன் படைப்பில் எந்த வேறுபாடும் இல்லை. உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், மனிதர்களின் உறுப்புகளிலிருந்து, வாயால் உண்ணு தல், மூக்கால் சுவாசித்தல், காலால் நடத்தல் என்று அனைத்தும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அனைத்து மனிதர்களின் இரத்தம் கூட ஒரே நிறம் தானே. ஆக ஒரே கடவுள், ஒரே மனித இனத்தைப் படைத்து அதற்கு ஒரே வழிகாட்டல்தான் கொடுத் திருக்கமுடியும். இதுதான் அனைத்து மனித அறிவுக் கும் ஏற்புடைய கருத்து. கடவுள் மனிதர்களிடையே பாரபட்சம் காட்டுபவர் என்று யாராவது சொல் வார்களா? ஆக உண்மை இப்படியிருக்க, உலகில் எப்படி வந்தன இத்தனை மதங்கள்? டிசைன் டிசைனாக கடவுள்கள்.

ஆம், ஒரே உண்மையான கடவுள், தன் இறைத் தூதர்கள் மூலமாகக் கொடுத்த ஒரே வழிகாட்டலை, வசதியாக மறைத்துவிட்டு, மறந்துவிட்டு, மனிதர்கள் அவரவர் விருப்பத்திற்கு சிலரின் சுகபோக வாழ்விற்குத் தோதாக கோட்பாடு களை உருவாக்கி பலரின் மூளையைச் சலவை செய்து ஏற்படுத்தியவைதான் மதங்கள். இறைவன் கொடுத்த ஒரே வழிகாட்டலை இஸ்லாம் மார்க் கத்தைப் பின்பற்றுவதாகச் சொல்பவர்களிலும் சிலர் அதிலிருந்து மாறுபட்டு, அவரவர் விருப்பத்திற்கு உலகியல் ஆதாயங்களை எதிர்பார்த்து அல்லது சிலரின் சூனியப் பேச்சுக்களில் ஏமாந்து சடங்கு களையும், சம்பிரதாயங்களையும் உருவாக்கிக் கொண்டு வாழ்கிறார்கள். அதுவும் மதம்தான். ஒரு புரிதலுக்காகச் சொன்னால் முஸ்லிம் மதம் சில முஸ்லிம்கள் உருவாக்கிய மதம். அதுவும் மதங்க ளின் பட்டியலில்தான் சேரும்.

ஆக முதல் மனிதனும் முதல் நபியுமான ஆதம்(அலை) அவர்கள் முதல், இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் வரை-இறைத்தூதர்கள் நோவா, சாலேஹ், லோத், ஆப்ரஹாம், இஸ்மாயீல், ஐசக், ஜேகப், யோசப், மோஸஸ், ஆரோன், டேவிட், சாலமன், எலியாஸ், யோனா, ஜகேரியா, ஜீஸஸ் அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண் டாவதாக.-உட்பட அனைத்து இறைத்தூதர்களும் ஒரே வழிகாட்டலைத்தான், மார்க்கத்தைத்தான் மனிதர்களுக்கு போதித்தார்கள். அதற்குப் பெயர் தான் இஸ்லாம். அந்தந்த காலகட்டங்களில், மனித அறிவு வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி போன்ற அடிப் படைகளில், அப்போதைய மனிதர்கள் பின்பற்ற வேண்டிய, பின்பற்ற முடிகின்ற சட்டங்களில் மாற்றங்களை இறைவன் கொடுத்தானே ஒழிய, அடிப்படைக் கொள்கையான “”இறைவன் ஒரு வனே, மனித இனம் ஒன்றே” என்ற அடிப்படைக் கொள்கையில் அதாவது, தமிழ்நாட்டு வழக்கில், பேரறிஞர் அண்ணா அவர்கள் பானியில் சொன் னால் “”ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற கொள்கையில் எந்த மாற்றத்தையும் எந்தத் தூதரும் சொன்னதில்லை என்பதை உண்மைச் சரித்திரங்கள், உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

எனவே அனைத்து மனிதர்களும், மனிதர்க ளால் உருவாக்கப்பட்ட அனைத்து மதங்களையும் விட்டுவிட்டு, மனிதர்களின் ஒரே இறைவன் கொடுத்த ஒரே வழிகாட்டலைப் பின்பற்றி, மனித இனம் முழுவதும் சகோதர சகோதரிகளாய், ஒரு தாய் மக்களாய், முதல் மனு­ன், மனு´ ஆதம், ஹவ்வா(அலை) ஆகியோர் சந்ததிகளாய், ஒற்றுமை யோடு, சந்தோ­மாக அமைதியாக வாழமுடியும். இன்ஷா அல்லாஹ். அப்படிப்பட்ட நிலையில்தான் வரதட்சணை என்ற வியாதியும் முழுமையாக, நிச்சயமாக மறையும். அல்லாஹ் அருள்புரிவானாக.

Previous post:

Next post: