கூடாதவைகள்…

in 2017 ஜுன்

மு.முகமது ஹனீஃப், திருச்சி

நாடு, இனம், மொழி, குலம், கோத்திரம் என்று மனிதன் தனக்குள் வேறுபடுத்திக் கொள்வதெல்லாம் அவனை அடையாளம் காண வேண்டும் என்பதற்காக என்பதை அறியாமல் உயர்வு தாழ்வு கற்பிப்பது, பச்சை குத்திக் கொள்வது, தன் கோலத்தை மாற்றிக் கொள் வது, சவுரிமுடியை எப்போதும் தரித்திருப்பது, பெருமையாக நடப்பது, எப்போதும் மொட்டை போட்டுக் கொள்வது, பெண்கள் மொட்டையடிப்பது, ஆடையணிந்தும் அங்கங்கள் வெளியில் தெரியுமாறு பெண்கள் நடப்பது, மகரம் இல்லாதாருடன் பெண்கள் பயணிப்பது, மாற்றுமத கலாச்சாரத்தை அப்படியே பின்பற்றுவது, எப்போதும் நீண்ட அங்கியும், நீண்ட தலைப்பாக, நீண்ட தாடியுடன் தோன்றி பெரிய அவுலியா போல் நடிப்பது, நகத்துக்கு பாலிஸ் போட்டுக் கொள்வது, போன்றவையும்…          தர்ஹாவுக்கு நேர்ந்து கொள்வது, நன் மையை எதிர்நோக்கி தர்காக்களுக்குப் பயணிப்பது,

தர்காக்களுக்கு பலி கொடுப்பது, அங்கு அடங்கப்பட்டிருப்பவரிடம் முறையிடுவது, தோப்புக்கரணம் போடுவது, ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் கஃபாவை சுற்றும்போதும் சயீ செய்யும்போதும் மவ்லூது ஓதுவது, கல்லெறியும் இடத்தில் செருப்பை வீசுவது, பயணத் தொழுகையை சுருக்காமல் தொழுவது, தனித்து தொழுமிடங்களில் பாங்கு இமாமத் சொல்லாமலிருப்பது, மீகாத் எல்லையை தாண்டிய பிறகும் தொப்பியை கழற்றாமலேயே இருப்பது, நெருப்பு சலவாத் (ஸலாதுன்னாரியா) மன்ஜில் ஓதுவது, பைஅத் என்ற பெயரில் ஒரு குருவை ஏற்படுத்திக் கொண்டு அவரின் கட்டளைப்படி நடந்து கொள்வது, ஹஜ்ஜுக்கு போய் வந்தவருக்கு 40 பேரை சுவர்க்கம் கூட்டிப் போக உரிமையுண்டு என்று ஒப்புக் கொள்வது, ஒரு ஆலிம் 70 பேரை தனது தலைப் பாகையைப் பிடித்துக் கொண்டு சுவர்க்கம் புகலாம் என்று நினைத்து அதை நம்புவது….

வீடு ஒத்திக்கு பிடித்து அதில் இன்பமாக வாழ்வது, வட்டி வாங்குவது போல் கொடுப் பதும், அதற்காக ஜாமீன் போடுவது, வரதட் சணை நான் வாங்கவில்லை எனது தாயார்தான் வாங்கினார் என்று கூறிக் கொள்வது, பிள்ளை களை உலக அறிவு பெறும் கல்வியை ஊட்டும் போது மார்க்க அறிவையும் சேர்த்து ஊட்டி வளர்க்காமல் விடுவது, இரத்த சம்பந்தமான உறவு முறைகளை உடைத்தெறிவது.

எப்போது பார்த்தாலும் கடுகடுவென்றிருப்பது, புன்னகைக்குக் காசு கேட்பது, தனக்கே உபயோகமில்லாத கஞ்சத்தனத்தால் தன் கைகளை பிடரியில் கட்டிக் கொள்வது, அல்லாஹ் தமக்களித்துள்ள அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் அதை மனம் போன போக்கில் வீண் விரயம் செய்வது, பிறரைப் பார்த்து எப்போதும் பொறாமையால் வெந்து போவது, பிறர் சொத்தை அபகரிக்க நினைப்பது, முறையற்ற வழிகளில் காம இச்சையை தீர்க்க நினைப்பது, செயல்படுத்துவது, போதை தரும் வஸ்துக்களை உபயோகிப்பது, வீண் விளையாட்டுக்களில் நேரத்தைக் கழிப்பது, இறப்பு, மறுமை பற்றியதான சிந்தனையற்றிருப்பது, ஒவ்வொரு காரியம் செய்யும் போதும் இறைவன் பெயரைக் கூறாமலிருப்பது, அதை முடிக்கும் தருவாயில் அவனைப் புகழாமல் விடுவது, எதுவும் தன் அறிவால் நடந்ததாக பிதற்றுவது, தொப்பி யைப் பிரதானமாகவும், தாடியை அசட்டை யாகவும் கொள்வது, மீசை தாடியை வழு வழு வென்று மழுங்க சிரைத்துக் கொண்டு பெண் களைப் போல் காட்சியளிப்பது.

நோன்பு மாதம் (ரமழான்) துவக்க நாள் அதன் முதல் நாளாகிய 24 மணி நேரத்திற்குள்ளேயே அடங்கும் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் புறந்தள்ளி மூடராவது, குர்ஆன், ஹதீஃதை ஏற்று தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் புறந்தள்ளி பிறரை கண்மூடி பின்பற்றுவது, திருமணத்தில் மாலை மாற்றுவது, தாலி கட்டுவது, முகத்தில் ஜேராப் போடுவது, திருமணத்தில் ஆடம்பரமாக செலவு செய்து தன் பெருமையை நிலைநாட்டுவது, குழந்தை பிறந்துவிட்டால் 7வது நாளில் அக்கீக்கா கொடுக்காமலிருப்பது, மவுத்து விழுந்து விட்டால் யாசீன், ஹத்தம் என்று பக்திப் பரவசம் காட்டுவது, 3ம் நாள், 7ம் நாள், 40-ம் நாள், வருடப் பாத்திஹா என்று தூள் கிளப்புவது, இஸ்லாத்தின் கடமைகளைப் பேணாமல் வாழ்வது, தாய் தந்தையருக்கு பணி விடை செய்யாமல் உதாசீனப்படுத்துவது, கணவனை மதிக்காமல் துரோக்கம் செய்வது, சிறியோரிடம் அன்பு பாராட்டாமல், பெரி யோரை மதிக்காமலிருப்பது, இரண்டு மனைவி களில் ஒருவர் பக்கமே சாய்ந்திருப்பது..

மிஃராஜ் இரவு, சபேபராஅத் இரவு, 27ம் கிழமை இரவு என்றும், மீலாத் விழா, கந்தூரி என்றும் கொண்டாட்ட விழாக்கள் நடத்து வது, பெண்களைப் பள்ளிக்கு வரவிடாமல் தடுத்து வைப்பது, நபிவழித் தொழுகையைத் தொழாமல் ஆளாளுக்கு ஒரு முறையில் தொழு வது, இமாமை முந்துவது, சஃப்பில் நெருக்க மாக உரசி நிற்காமல் இடைவெளி விட்டு தீண்டத் தகாதவராய் நிற்பது, ஜக்காத் வருடா வருடம் முறையாகக் கொடுக்காகமல் விட்டு விடுவது, நோன்பு திறக்கும் நேரம் (பொழுது அஸ்தமனமாதல்) ஆகி ஜந்தாறு நிமிடம் தாமதித்து (பேணுதலுக்காக என்று) நோன்பு திறப்பது.

அல்லாஹ்வின் வார்த்தைகளை மறைப்பது, அல்குர்ஆனை ஒளுவின்றி தொடக்கூடாது என்று தடுப்பது, மாற்று மதத்தினருக்கு அல்குர் ஆனைக் கொடுக்கக்கூடாது என்று சொல்வது, அல்லாஹ் உண்ண ஆகுமாக்கி வைத்தவை களை விலக்கிக் கொள்வது, ஹராமான வஸ்துக் களை உண்பது, கொடி, கந்தூரி, தீ மிதித்தல், மயிலாட்டம், புலிவேசம், கூத்து போன்ற வற்றை தலையிட்டு செய்வது, மிஃராஜ் இரவு நோன்பு, பத்து நோன்பு, ஒடுக்கத்து புதன், பூரியான் ஃபாத்திஹா, கொழுக்கட்டை ஃபாத்திஹா போன்ற பித்அத்தான காரியங் களைச் செய்வது, உண்மையை அது உண்மை தான் என்றறிந்த பின்பும் நம்பாமல் மறுதலிப் பது, பட்டாடை தங்க நகைகளை ஆண்கள் அணிவது, தங்கம் வெள்ளிப் பாத்திரங்களில் உண்பது குடிப்பது, சுன்னத் (ஃகத்னா), பெண் கள் பூப்பெய்துதல், வளைகாப்பு வைபவம், முர்தாக்கள் ஃபாத்திஹா, நலுங்கு வைத்தல் போன்றவைகளை வீட்டுத் தேவையாக (விழா வாக) நடத்தாட்டுவது.

ஜனஸா தொழுகையில் அல்ஹம்து ஓதா மலும், பெண்களை ஜனாசாத் தொழுகையிலும் பங்கு பெற விடாமல் செய்வது, நபி வழித் தொழுகையை புறக்கணிப்பது, மத்ஹப்களை கெட்டியாகப் பிடித்திருப்பது, ஆலிம்-அவாம் என பிரித்துப் பார்ப்பது, மார்க்க ஞானம் பெற்றவர்களை மதிக்காமல், மெளலவி, முஃப்தி, காரி, மெளலானா, ஹாஃபிஸ்களுக்கு தெய்வீக மதிப்பளிப்பது, மார்க்கத்தை விளங்க வேண்டி யது கடமை என்பதை மறநந்து முன்னோர்கள், பெரியார்கள், ஹஜ்ரத்மார்கள், பெரும்பான் மையினர்களைப் பின்பற்றி வாழ்ந்தால் போதும் என நினைத்தல், ஆளும் அரசுக்கு எதிராக போராடுகிறோம்(ஜிஹாத்) என்ற பெயரில் தற்கொலைப் படைத்தாக்குதல் நடத்துவது, அப்பாவிப் பொதுமக்கள் மத்தியில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து கொலை செய்வது….

வீட்டில் நாய் வளர்ப்பது, உருவப் படங் களை மாட்டி அலங்கரிப்பது, விருந்தழைப்பை ஏற்காமல் புறக்கணிப்பது, மூன்று தலாக்கையும் ஒரே நேரத்தில் சொல்வது, மனைவி மக்களை கண்மூடித்தனமாக அடித்து உதைப்பது, கடன் வாங்கிவிட்டு அதை வேண்டுமென்றே கொடுக் காமல் தள்ளிப் போடுவது, இணை வைத்தலுக் கான சின்னங்கள் மீது பூஜை செய்த பொருட் களை உண்பது, அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்காத பிராணிகளை உண்பது, மனிதர் களின் கால்களில் (தாய் தந்தையாயினும்) வீழ்ந்து வணங்கி வாழ்த்துப் பெறுவது, கால்கள் பட்டுவிட்டால் தொட்டு முத்திக் கொள்வது, பள்ளியில் நுழைந்ததும் தொழாமல் அமர்வது…

கயிறு, தாயத்துக்களை மந்திரித்துக் கை, கழுத்துகளில் கட்டிக் கொள்வது, சோதிடம், ஆரூடம், நல்ல நேரம், பொருத்தம், ஜாதகம், நாள் நட்சத்திரம், நஹ்சு, பால் கிதாபு பார்ப்பது, சூனியம் செய்வது, பொய் புறம் கோள் அவதூறு சொல்வது, பொய் சாட்சி கூறுவது சூதுகளில் ஈடுபடுவது, ஹராமான பொருட்களை விற்பது, குழந்தைகளை கருவி லும், வெளியிலும் கொல்வது, மார்க்கத்தில் பித்அத்தான (நவீன வழிமுறைகள்) காரியங் களைச் செய்வது, அண்டை வீட்டரைப் பகைப் பது, அன்பளிப்பைத் திரும்பப் பெறுவது, திருட்டுப் பழக்கம், இரக்கமின்மை, கடுங் கோபம், வெட்கமின்மை, சபித்தல், மானக் கேடான காரியங்களைச் செய்தல், நன்மையை ஏவாமலும் தீமையைத் தடுக்காமலும் இருத்தல், பெண்கள் தங்களை அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மூடி புர்கா அனிதல், ஹோமோ செக்ஸ், லெஸ்பியனில் ஈடுபடுதல்….

இறைவனிடத்தில் நிராசை அடைதல், இணைவைப்பு, வட்டி, கொலை போன்ற பெரும் பாவங்களைச் செய்தல், தற்கொலை செய்து கொள்வது, சந்தேகம், பயம், கோழைத் தனம் கொள்வது, உயிரினங்கள் மீது கருணை யின்றி சித்திரவதை செய்வது, மேம்பாடுள்ள ஆக்கபூர்வ சிந்தனையற்று, அழிக்கும் சிந்தனை கொள்ளல், தேவையற்று டி.வி. பார்ப்பது, செல்போன் விளையாட்டில் காலவிரயம், ஆபாசங்களையே கண்டு களிப்பது, இசைக் கருவிகளை வாசித்துக் கொண்டே இருப்பதும் இசையை அதிகம் ரசிப்பதும், கூத்தும கும்மாள மும், விசிலடிப்பதும, கைதட்டுதலும், ஆடிப் பாடி அரற்றுவதும், கற்ற கல்வியைப் பிறருக்குப் போதிக்காமல் இருப்பது, மார்க்கப் பணிக்கு கூலி வாங்குவது, அமீருக்கு (தலைமைக்கு) கீழ்ப்படியாமலிருப்பது, தனது பிள்ளைகளி டத்தில் ஏற்றத் தாழ்வுகள், சஹாபாக்களை பின்பற்றலாம் என்று கூறுவது, மத்ஹப்கள், தரீக்கா, தஸவ்வுஃப், இயக்கங்கள், பிரிவுகள் ஆகும் என்று வாதிப்பது, மார்க்கத்தின் பெயரால் பல பிரிவுகளாகப் பிரிந்து நிற்பது போன்றவைகள் கூடாது.

அல்லாஹ்வின் பாகப்பிரிவினைச் சட்டத்தை மதிக்காமல் மனம் போன போக்கில் சொத் தைப் பிரிப்பது, பெண்களுக்குச் சொத்தில் பங்கு தர மறுப்பது, பிறர் சொத்தை அல்லது நிலத்தை அபகரிக்க நினைப்பது, அநாதைகளின் சொத் துக்களை அபகரித்துக் கொள்வது, பொதுச் சொத்துக்களை அபகரிப்பது, பள்ளி வாசல்களி லிருந்து சுரண்டுவது, மதரசாக்கள் பெயரால் வசூல் வேட்டை செய்வது, மக்தப் மதரஸாக் கள் என்ற பெயரால் குர்ஆன், ஹதீஃதை போதிக்காமல் இதற்கு மாற்றமாக போதனை செய்வது, ஆலிம்களை உருவாக்குவது, அதிலி ருந்து பட்டம் பெற்று வரக்கூடியவர்கள் குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் மாற்றமாக நடப்பது -நடத்தாட்டுவது, இந்த ஆலிம்கள் ஓதிக் கொடுக்கிறேன் என்ற பெயரில் பெண் பிள்ளைகளிடத்தில் சில்மி­த்தில் ஈடுபடுவது, ஆண் பிள்ளைகளிடத்தில் தகாத முறையில் நடந்து கொள்வது ஆகியவைகள் கூடாதவை கள் பட்டியலில் சேரும்.

அறிந்தவர் அறியாதவர் யாராயினும் சலாம் கூறாமல் போவது, தன்மீது சலாம் கூறப்பட் டால் பதில் கூறாமல் இருப்பது, அனுமதியின்றி (சலாம் கூறாமல்) வீடுகளில் பிரவேசிப்பது, மறைவான பகுதிகளில் உள்ள ரோமங்களை 40 நாட்களுக்கு மேல் களையாமல் வைத்திருப்பது, திக்ர் மஜ்லிஸ் என்ற பெயரில் எல்லோரும் கூடி ஒரு இருட்டு வீட்டுக்குள் கோரஸாக திக்ர் செய்வது, தொழுகை முடிந்தவுடன் பள்ளியில் ஒன்றுகூடி திக்ர் செய்வது, மற்றும் மைக்கை போட்டுக் கொண்டு திக்ர் செய்வது, மெளலூது பள்ளியில் ஓதுவது, வீட்டில் பரக்கத் வரும் என்று மெளலூது ஓதுவது அறவே கூடாது.

கபுருகளை உயர்த்திக் கட்டுவது நபி(ஸல்) ரவுலாவில் சென்று அவர்களிடம் வேண்டுவது முதலியன கூடாதவைகள் பட்டியலில் அடங் கும். ஜமாஅத் தலைவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சாமல் மனிதர்களுக்கு அஞ்சுவதும் நீதியை நிலைநாட்டாதவர்களாய் இருப்பதும் கூடாது.

பின் குறிப்பு : மேற்கண்ட கூடாதவைகள் பற்றியதான வாசகங்களின் கருத்துக்கள் இஸ்லாத்தின் பெயரால் எடுத்தாளப்பட்டது சரிதானா என்று சந்தேகம் எழுந்தால் குர்ஆன், ஹதீஃத் ஒளியில் அதை சரிபார்த்து அல்லது கற்றறிந்த அறிஞர்களிடம் (மத்ஹப் மவ்லவிக்கள் அல்ல) கேட்டு ஆய்வு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Previous post:

Next post: