மாடர்ன் தர்ஹா

in 2017 ஜுன்

இப்னு தைக்கத்துல்லாஹ்

நாங்கள் அபூசயீத் அல்குத்ரீ(ரழி) அவர்களிடம் காரிஜிய்யாக்கள் பற்றி அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டுள்ளீர் களா? என்று கேட்டோம். அதற்கு அபூசயீத்(ரழி) அவர் கள், காரிஜிய்யாக்கள் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பின்வரு மாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்.

இந்தச் சமுதாயத்தாரிடையே ஒரு கூட்டத்தார் கிளம்புவர். அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையை ஒப்பிட்டுப் பார்த்தால் உங்களது தொழுகை கம்மியாக இருக்கும். (அந்த அளவுக்கு அவர்கள் அதிகமாக தொழுவார்கள்) அவர்கள் குர்ஆனை படிப்பார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக்குழிகளைத் தாண்டி (உள்ளத்துக்குள்) செல்லாது. (அதாவது, விளங்காமலேயே படித்துக் கொண்டிருப்பார்கள். வேட்டைக்காரனின்) அம்பு வேட்டைப் பிராணியின் உடலில் (பாய்ந்து, மறு பக்க மாக) வெளியேறிவிடுவதைப் போல் அவர்கள் (வந்த சுவடே தெரியாமல்) மார்க்கத்திலிருந்து வெளியேறி விடுவார்கள் என்று சொன்னார்கள். முஸ்லிம்: 1925

தமிழகத்து தர்ஹாக்களை பார்க்க வருவோர் கணிசமான அளவுக்கு குறைந்து விட்டதை காணலாம். ஏன்? தர்ஹாக்கள் காலியாகி விட்டது என்று கூட சொல்லலாம். இதெல்லாம் தங்களின் வீரியமிக்க பிரச்சாரத்தின் காரணமாகத்தான் சாத்தியமானது என்கின்றனர். தவ்ஹீது மெளலவிகள். உண்மைதான், இவர்களின் வீரியமிக்க பிரச்சாரம் இதைச் சாதித்தென்னவோ உண்மைதான். அதே சமயம், தர்ஹாவிலிருந்து காணாமல் போனவர்கள் எங்கே என்று தேடினால் திடல்களிலும், தெருக்களிலும், ரோடுகளிலும், மைதானங்களிலும் கோஷம் போட்டுக் கொண்டு நிற்கிறார்கள். அதாவது, முன்பு தர்ஹாக்களில் அவ்லியாக்களிடம் கையேந்திக் கொண்டிருந்தவர்கள் இப்போது தெருவுக்கு வந்து அரசியல்வாதிகளிடம் கையேந்திக் கொண்டிருந்தவர்கள் வந்த வேகத்தில் வெளியேறி விட்டார்கள். இதுவும் இவர்களின் சாதனைதான். இவர்களின் வீரியமிக்க பிரச்சாரம் இதைச் சாதித்திருக்கிறது. அதாவது, ஒரு சாக்கடையில் கிடந்தவர்களை எடுத்து மற்றொரு சாக்கடையில் போட்டிருக்கிறார்கள். இதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது?

சொல்லப்போனால், இன்று பூதாகரமாக உருவடுத்து நிற்பது இவர்கள் உண்டாக்கி வைத்திருக்கும் இந்த நவீன தர்ஹாதான். இந்த நவீன தர்ஹா-பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால், இவர்களின் வீரியமிக்க பிரச் சாரத்தில் சிக்கி இன உணர்வு முற்றி, இந்த நவீன தர்ஹாவில் போய் நிற்கும் முஸ்லிம்கள் தங்களையறியாமல், என்ன செய்கிறோம் என்று தெரியாமல், இஸ்லாமிய விரோதிகள், முஸ்லிம்களின் எதிரிகள் இந்த மண்ணில் வளர்வதற்கு உதவிக் கொண்டிருக்கி றார்கள். முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் தொகுதி களில் முஸ்லிம் விரோதிகளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஓட்டுகளே இதற்குச் சான்று. எனவேதான், இன்றைய சூழலில் இந்த நவீன தர்ஹா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

எனக்கு பிறகு (ஆட்சியாளர்களிடம்) நிறைய சுய நலப் போக்கையும், வெறுக்கும்படியான பலவற்றை யும் நீங்கள் காண்பீர்கள் என்று நபி(ஸல்) சொன்னார் கள். அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், குடி மக்கள் என்ற முறையில் நீங்கள் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்து வாருங்கள். உங்களு டைய உரிமையை அல்லாஹ்விடத்தில் கேளுங்கள் என்று சொன்னார்கள். புகாரீ : 7052
முஸ்லிம்கள் அரசியல்வாதிகளிடம் கையேந்தி நிற்க கூடாது என்பதற்கு மேற்கூறிய ஒரு ஹதீஃதே போது மானதாகும்.

நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ உங்களுக்கு இல்லை என்பதை நீங்கள் அறியவில்லையா? 2:107

அல்லாஹ்வே! ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆட்சி யாளன்! 3:26
மனிதர்களுக்காக எந்த அருளையாவது அல்லாஹ் திறந்து விட்டால் அதை தடுக்கும் (மேலானவன்) எவனும் இல்லை. அவன் தராததை தரும் (போட்டி யாளன்) எவனும் இல்லை. அவன்(தான்) மேலானவன்; முழுமையான அறிவுடையவன். 35:2

அல்லாஹ் தான் உண்மையான ஆட்சியாளன், சகல அதிகாரங்களும் அவனிடம்தான் இருக்கிறது. இங்கிருப்பதெல்லாம் போலிகள் என்பதை மேற்கூறிய மூன்று வசனங்கள் விளக்குகின்றன.
நபி(ஸல்) அவர்களது காலத்தில் பொருட்களின் விலைவாசி உயர்ந்து விட்டது.(அதனால்) மக்கள் நபி (ஸல்) அவர்களிடம், வந்து அல்லாஹ்வின் தூதர் அவர் களே! விலைவாசிகள் உயர்ந்து விட்டன. எனவே, மக்களுக்காக விலை நிர்ணயம் செய்யுங்கள் என்று கேட்டனர்.
(உற்பத்தி குறையச் செய்து) விலைவாசியை ஏற்றி விடுவதும், (உற்பத்தி பெருகச் செய்து விலைவாசியை) இறக்கி விடுவதும், நெருக்கடி ஏற்படுத்துவதும், விசாலத்தை ஏற்படுத்துவதும், தேவையானதைக் கொடுப்பதும் (ஆக எல்லாமே) அல்லாஹ்தான். (எனவே, விலையை நிர்ணயம் செய்து) உங்களில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியவனாக நான் அல்லாஹ்வை சந்திக்க விரும்பவில்லை. உங்கள் உயிரிலோ பொருளிலோ (நான்) அநீதியிழைத்ததாக உங்களில் யாரும் என்னிடம் முறையிடாத நிலையில் என் இறைவனைச் சந்திக்கவே விரும்புகிறேன் என்று சொல்லி நபி(ஸல்) அவர்கள் விலை நிர்ணயம் செய்ய மறுத்துவிட்டார்கள். அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.

மிக்க பலசாலி(யாகவும் ஆட்சியாளராகவும் இருந்த) எனது அடியார் தாவூதை எண்ணிப் பாருங் கள். நிச்சயமாக அவர் (எதுக்கெடுத்தாலும்) என்னைத் தான் எதிர்பார்த்து நின்றார். 38:17
ஆட்சியாளர்களாயிருந்த நபிமார்களின் நிலையே இதுதான் என்றால், இன்றிருக்கும் அரசியல்வாதிகள் எந்த மூலைக்கு? இவர்களிடம் போய் கையேந்தலாமா?
பூமியில் (எல்லோருக்கும் பொதுவாக) ஏற்படு கின்ற அல்லது உங்களுக்கு (மட்டும் தனிப்பட்ட முறை யில்) இறங்குகின்ற எந்த (இன்ப) துன்பமானாலும் அதனை நாம் ஏற்படுத்துவதற்கு முன்பே அது (எப்போது எங்கே, எப்படி ஏற்படும். எப்போது எங்கே,எப்படி முடியும் என்பது) குறித்து விதி ஏட்டில் எழுதி வைக்காமல் இல்லை. 57:22

அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல் எந்தத் துன்ப மும் எப்போதும் யாருக்கும் வருவதில்லை. 64:11

உங்களுடைய இறைவன் சங்கையானவன். அவனு டைய அடியார் (எதையாவது கேட்டு) தனது கையை அவன் பக்கம் உயர்த்தினால் அந்த இரு கைகளையும் வெறுங்கைகளாக திருப்பி அனுப்புவதற்கு வெட்கப் படுகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: இப்னு மாஜா : 3911

அவன் கேட்டதையே கொடுத்து விடலாம் அல்லது அதை (அவன் கேட்டதை) மறுமைக்கான சேமிப்பாக மாற்றலாம் அல்லது (அதற்கு பதிலாக) அவனுக்கு ஏற் படவிருக்கும் ஆபத்தை நீக்கலாம். மேலும், அல்லாஹ் கேட்பதை விட அதிகம் கொடுப்பவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அஹ்மத் : 10709

யார் தனக்கேற்பட்ட வறுமையை (துன்பத்தை போக்க) மனிதர்களிடம் கையேந்துகிறாரோ அவரது வறுமை (துன்பம்) நீங்கப் போவதில்லை. யார் அல்லாஹ்விடம் கையேந்துகிறாரோ அவருக்கு உடனடியாகவோ அல்லது சிறிது காலம் கழித்தோ அல்லாஹ் செல்வத்தை வழங்கக்கூடும் என நபி(ஸல்) கூறினார்கள். அபூதாவூத், திர்மிதீ.

அல்லாஹ் (வழங்குவதில்) ரொம்ப பெரிய மனசுக் காரனாகவும், (கொடுத்தால் இவன் ஒழுங்கா இருப்பானா அல்லது உருப்படாமல் போவானா என்பது பற்றியயல்லாம்) ரொம்ப தெரிந்தவனாகவும் இருக்கின்றான். 2:268

உனக்குப் பயன் தருவதை மட்டுமே நீ விரும்பு. (அதற்காக) தளராமல் இறைவனிடம் கையேந்து. (உனக்கு தெரிந்த ஹலாலான வழிகளில் பாடுபடு, முயற்சி செய். அந்த முயற்சியில்) உனக்கு ஏதாவது துன்பம் தோல்வி ஏற்பட்டால், (அடடா) அப்படிச் (செய்திருந்தால் நல்லாயிருந்திருக்குமே) இப்படி (செய்திருந்தால் நல்லா ஆயிருக்குமே) என்று (அங்கலாய்த்துக்) கூறாதே, அல்லாஹ்வின் விதிப்படி நடந்து விட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான் என்று (திருப்திபட்டு) கொள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்: 5178

நான் பிரார்த்தனை செய்து பார்த்து விட்டேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்பட்டதாக தெரிய வில்லை என்று நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரீ : 6340

(அல்லாஹ்விடம் மட்டுமே கையேந்த வேண்டிய விஷயங்களில் அல்லாஹ்வைத் தவிர வேறு) எந்த மனிதரிடமும் கையேந்த மாட்டேன் என்று யார் உறுதி எடுத்துக் கொள்கிறாரோ அவர் சுவர்க்கம் செல் வதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபி(ஸல்) கூறினார்கள்? அஹ்மத், நஸயீ, அபூதாவூத்.

எவ்வித சந்தேகமுமில்லாமல், (நூற்றுக்கு நூறு) தன்னை (அல்லாஹ்வை) மட்டுமே முழுமையாக நம்பி செயல்படுவோரை அல்லாஹ் நேசிக்கின்றான். 3:159

விஷயம் இப்படி தெளிவாக இருக்கிறது. இதெல்லாம் இவர்களுக்கு தெரியாமலில்லை. கேவலம் இந்த பூவுலக 50 அல்லது 100 வருட சுக வாழ்வுக்காக இவர்கள் அரசியல்வாதிகளிடம் கையேந்தும் இந்த மாடர்ன் தர்ஹாவை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். இவர்களை என்னவென்று சொல்வது?
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்! ஒரு முழுமையான அலசல்! என்ற தலைப்பில் இணைய தளத்தில் அவர்கள் எழுதியிருப்பதையும் மேலே நாம் எழுதியிருப்பதையும் நடுநிலையோடு இணைத்து பார்ப்பவர்கள் மேலே நாம் எழுதியிருப்பதில் குறை காணமாட்டார்கள்.

மேலும், அதைத் தொடர்ந்து நியூஸ் 18ன் “”வெல்லும் சொல்” நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் அவர் களால் காலூன்றவே முடியாது ஏனென்றால் இது பெரியார் பண்படுத்திய மண் என்று சொல்லியிருக்கி றார். இதே வாய்தான் 27 அக்டோபர் 2013ல் செய்தி யாளர்களிடம் பேசுகையில் சில கணக்குகளை சொல்லி மோடி ஆட்சிக்கு வரவே முடியாது. வாய்ப்பே இல்லை சான்ஸே இல்லை என்று அடித்து பேசியதையும் நினைவில் கொள்க. மேலும் தற்போது இவர்களுக்குப் பெரியார் “”ரப்” ஆகிவிட்டதையும் கவனத்தில் கொள்க.

Previous post:

Next post: