முஹிப்புல் இஸ்லாம்
மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும்.சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகிறீர்கள். தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள்… (குர்ஆன்: 3:110)
சீரிய சிந்தனைப்பாளர், சிறந்த மார்க்க சேவகர்
அன்பு சகோதார் ஆபூ அப்தில்லாஹ் அவரது 77 ம் வயதில் இம்மை வாழ்வை நிறைவு செய்து கெண்டு, சென்ற 12.7.17ல் மறுமை வாழ்வின் முதல் படி எடுத்து வைத்து விட்டார். சாலை விபத்தில் ஸஹிதாகி விட்டார். இன்னா லில்லாஹீஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஏகன் அல்லாஹ், அவரின் இம்மை பிழைகள் பொறுத்து, மண்ணறையைக் சுவனப் பூங்காவாக்கி, மறுமையின் நற்பேறுகள் அனைத்தையும் நல்கிட மனமுறுகி துஆ செய்யகிறோம். அனைவரும் அவ்வாறு துஆ செய்யுமாறு அன்போடு, கேட்டு கொள்கிறோம்.
இலங்கையில் B.Sc., பட்டப் படிப்பை முடித்தார். பூர்வீக மத்ஹப் ஷாஃபி, தப்லீக் இயக்க சேவையால் ஈர்க்கப்படார். அதனால் தப்லீக் இயக்கத்தில் அவரும் முழுமையாக ஐக்கியமானார். தப்லீக் இயக்கத்தில் இருந்து செய்யும் சேவையே, உண்மை மார்க்க சேவை என்று உறுதியாக நம்பினார். அதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்தார். அக்கால கட்டங்களில், மார்க்கத்திற்காக மவ்லவிகளைச் சார்ந்த முகல்லிதாகவே இருந்து வந்தார்.
காலங்கள் சென்றன. குர்ஆன் தமிழாக்கத்தைப் பயிலத் துவங்கினர் அதுகாறும் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல்வேறு உண்மைகள் வெட்ட வெளிச்சமாயின; வெகுண்டெழுந்தார்; அத்துடன் M.R.M. அப்துர் ரஹீமின் அல்ஹதீத் (3 பாகங்கள்) பயிலத் துவங்கினார். குர்ஆன், ஹதீதுகளோடு தப்லீக் தஃலீம் தொகுப்பை ஒப்பாய்வு செய்தார். தஃலீம் தொகுப்புகளில் பெரும்பா லானவை குர்ஆன் ஹதீதுகளுக்கு முரணானவைகளைக் கண்டறிந்தார் உரிய நேரத்தில் உரியவர்களிடம், அவைகளைச் சுட்டிக் காட்டி னார் ஆனால் ஏற்கும் நிலையில் எவருமில்லை. இனி கார்க்கூன்களை நம்பி பயனில்லை. டெல்லி சென்றார். தப்லீக் தலைமை பீடத்திடம், தஃலீம் தொகுப்பில் உள்ள தவறுகளைத் தகுந்த ஆதாரங்களுடன் எழுத்துப்பூர்வ ஆவணமாக்கிக் கொடுத்தார். பலன் பூஜியமே!
தஃலீம் தொகுப்புக்கு பதில் குர்ஆன் ஹதீது வாசிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். நன்மை செய்யப் பணித்தல் குர்ஆன், ஆதார பூர்வமான ஹதீஃது வாசிக்கச் செய்தல். தீமையைத் தடுத்தல்: தஃலீம் தொகுப்பு வாசிப்பதைத் தடுத்தல். நன்மை செய்யப் பணித்தும், தீமையைத் தடுப்பவரே சிறந்த சமுதாயத்தவராவார் இது ஏகன் அல்லாஹ் வழங்கும் நற்சான்று. அந்த நற்சான்றுக்குத் தீமையைத் தடுப்பதன் மூலமே நன்மையை நிலை நிறுத்துதல் சாத்தியம் என்ற ஏக இறைக் கட்டளையை அனுபவப் பூர்வமாய் உணர்ந்தார். அல்ஹம்துலில்லாஹ்.
அதிலிருந்து இஸ்லாத்திற்கு விரோதமானது என அவர் கண்டறிந்த அனைத்தையும் தயவு தாட்சயண்யமின்றி விமர்சித்தார். கண்டனங்களைத் தொடுத்தார். அதன் சாட்சிதான் அந் நஜாத்தில் வெளிவந்த அவரது எழுத்துக்கள்; பதிவுகளாகியுள்ள உரைகள்; விவாதங்கள்; பதிவாகாத அவரது உரையாடல்கள்….. துண்டு பிர சுரங்கள், நூல்கள் இத்யாதி… இத்யாதி இப்படி சொல்லிக் கொண்டே செல்லலாம். யா அல்லாஹ்! உன் நிறை அருளால் அன்பர் அபூ அப்தில்லாஹ் அவர்கள் சிறந்த சமுதாயத்தின் ஓர் அங்கமாக்கியருள்வாயாக ஆமீன். வஸ்ஸலாம்.