ஐயமும்! தெளிவும்!!

in 2017 அக்டோபர்,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் :  இறந்துபோன என் பெற்றோர் ஹஜ் போனதில்லை. இவர்களுக்காக நாங்கள் ஹஜ் செய்யலாமா? செய்வது கடமையா? விரும்பத் தக்கதா? வேறு நபர்களை அனுப்பி வைக் கலாமா? தயவு செய்து விளக்கம் அளிக்கவும்.ஐயம் :  இறந்துபோன என் பெற்றோர் ஹஜ் போனதில்லை. இவர்களுக்காக நாங்கள் ஹஜ் செய்யலாமா? செய்வது கடமையா? விரும்பத் தக்கதா? வேறு நபர்களை அனுப்பி வைக் கலாமா? தயவு செய்து விளக்கம் அளிக்கவும்.       ஆத்தூர் சுல்தான்ஜி.

தெளிவு : தங்கள் ஐயத்திற்கு பதிலளிக்கும் 2 ஹதீஃத்கள் :1. ஃபள்லுப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வாகனத் தில் அமர்ந்திருந்தனர். அப்போது “”கஸ்அம்” கூட்டத்திலுள்ள ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து மார்க்கம் பற்றி வினவி னாள். அப்போது ஃபள்லு(ரழி) அவர்கள் அப்பெண்ணைப் பார்த்தார். அப்பெண் ணும் அவரைப் பார்த்தாள். நபி(ஸல்) அவர்கள் ஃபள்லுடைய முகத்தை வேறு பக்கம் திருப்பி விட்டார்கள். அப்பெண் “”அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்கள் மீது ஹஜ்ஜை கடமையாக்கி இருப்பதைப் போல என் தந்தை மீது ஹஜ் கடமையாகி இருக்கிறது. என் தந்தையோ முதுமையை எய்தியுள் ளார். அவரால் வாகனத்தின் மீதமர்ந்து பிர யாணம் செய்ய இயலாது. எனவே, அவருக் காக நான் ஹஜ் செய்யலாமா?” என்று வினவினாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “”ஆம்” என்று பதிலளித்தார்கள். இது ஹஜ் ஜத்துல் விதாஃவில் நடந்தது”. இப்னு அப்பாஸ்(ரழி), புஹாரி, முஸ்லிம், முஅத்தா  அபூதாவூத்  திர்மிதி,  நஸாயீ.

2. “”­ப்ரமாவுக்காக நான் இங்கு வந்துள் ளேன், அடிபணிந்தேன்” என்று ஒருவர் கூறியதை நபி(ஸல்) அவர்கள் செவியுற்ற னர். “­ப்ரமா என்பவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் வினவினர். தன் உடன் பிறந்தான் என்றோ, தன் உறவினன் என்றோ அவர் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள்,”” நீர் உமக்காக ஹஜ் செய்து விட் டீரா?” என்று கேட்டனர். “”இல்லை” என்று அவர் பதிலுரைத்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள், “”உமக்காக ஹஜ் செய்யும்; பின் னர் ­ப்ரமாவிற்காக ஹஜ் செய்யும்” என்று கூறினார்கள்.              இப்னு அப்பாஸ் (ரழி), அபூதாவூத்

எனவே, தங்களுக்கு ஹஜ் கடமையாயி ருந்து இன்னும் நிறைவேற்றவில்லை என்றால், நீங்கள் உங்கள் ஹஜ்ஜை செய்துவிட்டு, பிறகு உங்கள்  பெற்றோருக்காக  செய்யலாம்.

செய்வது கடமையா? விரும்பத்தக்கதா? என்று உங்களின் கேள்விக்குள் கேள்விகளை சொருகி இருக்கிறீர்கள். தங்கள் கேள்விகளுக்கு  கீழே  உள்ள  ஹதீஃத்  பதிலளிக்கிறது.

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “”நிச்சயமாக என்னுடைய உடன் பிறந்த சகோதரி ஹஜ் செய்ய நேர்ச்சை செய்திருந் தாள். ஆனால் அவர் இறந்து விட்டார். நான் அவருக்காக ஹஜ் செய்யவா? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், “”ஒருவேளை அவர் மீது  கடன் ஏதும் இருந்தால், நீர் அவருக்காக அதை தீர்த்து விடுவீரா?” என்று வினவினர். அவர் “”ஆம்” என் றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், “”அவ்வாறாயின் அல்லாஹ்வின் கடனைத் தீர்ப்பாயாக! ஏனெனில் அவனே இதற்கு மிகவும் தகுதி உடையவன்” என்று கூறினார் கள். (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம், நஸாயீ)

எனவே, பகரமாக ஹஜ் செய்வதற்கு விரும்புவர்கள் :1. பகரமாக ஹஜ் செய்பவர் யாருக்காக ஹஜ் செய்கிறாரோ, அவருக்கு உறவுமுறை உடையவராய் (மகன்/மகள்/ சகோதரன்/ சகோதரி / உறவினர்) இருத்தல் அவசியம் என்பது ஹதீஃத்களிலிருந்து) தெரிகிறது.

2. ஹஜ் செய்பவர் ஹஜ் தனக்கு கடமை யான நிலையில், தனக்கு ஹஜ் செய்ய வேண் டும்; பிறகு தாங்கள் விரும்பும் அனுமதிக்கப் பட்டவருக்காக செய்யலாம்.

3. யாருக்காக ஹஜ் செய்ய விரும்புகிறாரோ அவருக்கு ஹஜ் கடமையாயிருந்திருக்க வேண்டும்.

4. சம்பந்தமில்லாத வேறு நபர்களை அனுப்பி வைக்க ஆதாரம் இல்லை.ஐயம் : உளூ செய்யும் முன் பிஸ்மி கூற வேண் டும் என்பது, பிஸ்மி கூறி ஒரு செயலை செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்ற பொதுவான ஹதீஃதின் அடிப்படையிலா? அல்லது தனியாக ஹதீஃத் எதுவும் இருக்கிறதா? அப்படி இருந் தால் தெரியப்படுத்துங்கள். கமருன்னிஷா, புதுக்கோட்டை.தெளிவு  :  தனியாக ஹதீஃத் உள்ளது.

“”எவருக்கு உளூ இல்லையோ, அவரது தொழுகை, தொழுகை அல்ல. எவர் உளூவின் போது அல்லாஹ்வின் பெயரைக் கூறவில் லையோ அவருடைய உளூ உளூவே அல்ல” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர், அபூ ஹுரைரா(ரழி), நூல் : அபூதாவூத்.ஐயம் : ஃபிர்தவ்ஸ் சொர்க்கத்தை கேட்டு பிரார்த்திக்கும்படி ஹதீஃத் வருகிறதே. எந்த அடியாருக்காவது அந்த பதவி கிடைக்கும் என்று குர்ஆனில் குறிப்பிட்டு சொல்லப்பட்டு இருக்கிறதா?     முகமது யாசின், நுங்கம்பாக்கம், சென்னை.

தெளிவு : சென்ற இதழில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ல் சுவர்க்கம் கிடைக்க என்ன அமல்கள் செய்ய வேண்டும் என்பதற்கு குர்ஆனின் 23:2 முதல் 9 வசனங்களை எழுதி இருந்தோம். முக்கியமான முதல் வசனத்தை (23:1) சொல்லவில்லை. முதல் வசனத்தில் அல்லாஹ் “”முஃமின்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டார்கள்” என்று கூறு கிறான். 2 முதல் 9 வசனங்களில் உள்ள அமல் களை செய்திருந்து, அவர் விசுவாசம் கொள்ளா தவராய் இருந்தால் பிரயோஜனம் இல்லை. எனவே, 23வது அத்தியாயத்தின் 1 முதல் 9 வசனங்களில் உள்ள அமல்கள் செய்தவருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் சுவர்க்கம் கிடைக்கும் என்று 10 மற்றும் 11 வசனங்களில் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட “”அடியார்” என்ற தங்களின் வினா, “”எவரையாவது குறிப்பிட்டு சொல்லப் பட்டிருக்கிறதா?” என்ற அர்த்தத்தில் கேட்கப் பட்டிருக்குமேயானால், குறிப்பிட்ட எந்த அடியாரின் பெயரும் குர்ஆனில் இடம் பெற வில்லை என்பதே சரியானதாகும். ஆனால், ஹதீஃத் ஒன்றில்ஹாரிஸா(ரழி) அவர்களின் பெயர் குறிப்பிட்டு சொல்லப்பட்டு இருக்கிறது ஹதீஃதை காண்போம்.

“”நபி(ஸல்) அவர்களிடம் உம்மு ஹாரிஸா (ரழி) வந்து, “”அல்லாஹ்வுடைய நபியே! ஹாரிஸாவின் நிலைமையை எனக்கு தெரிவி யுங்கள். அவர் பத்ரு யுத்தத்தில் கொல்லப்பட்டு இறந்தார். எவருடைய அம்போ அவரை மாய்த்து விட்டது. எனவே, அவர் சொர்க்கத் தில் இருந்தால், நான் பொறுமையாக இருந்து விடுகிறேன். அப்படி இல்லாமல், அவர் வேறு எங்காவது இருந்தால், அழ முடியும் அளவுக்கு சிரமப்பட்டு அழுது விடுகிறேன்” என்று கூறி னார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், உம்மு ஹாரிஸாவே! நிச்சயமாக சுவனபதிகள் பல உண்டு, உண்மையாக உமது மைந்தர் ஃபிர்தவ்ஸ் என்னும் உயர்ந்த சுவனபதியை எய்து விட்டார்” என்று கூறினார்கள்.        அனஸ் (ரழி) புகாரி, திர்மிதீ.

ஐயம் :  சென்ற சுதந்திர தின விழாவில் எங்கள் ஊர் முஸ்லிம் கல்லூரியின் முதல்வர் ஆற்றிய உரையில் “”தேசிய பற்று” ஈமானின் (இறை நம் பிக்கையின்) ஒரு பகுதி” என நம் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு நபிமொழி, ஹதீஃத் இருப்பதாகக் கூறினார். இப்படி யயாரு நபிமொழி உண்டா? அதன் தரமென்ன? இது உண்மையான நபிமொழியா? நம்ப தகுந்ததா? என்பதைத் தெளிவாக்கவும். சகோதரர்கள் : அன்வர், அதிராம்பட்டிணம், அபூபக்கர்,  திண்டுக்கல்.

தெளிவு : “”அஸ்த ஃபிருல்லாஹ்”=யா அல்லாஹ் உன் அளப்பெரும் கருணையால் நம்மனைவ ரின் பாவங்களை மன்னித்து அருள் புரிவாயாக! ஆமீன்! இப்படியயாரு பிரார்த்தனையை உங்கள் ஊர் முஸ்லிம் கல்லூரி முதல்வர் செய்த தவறுக்காக அவருக்கும், அவர் கூறிய தவறான கூற்றை செவிமடுத்த உங்களுக்கும், உங்களை போன்றோருக்கும், இதற்கு பதிலளிக்க செவி யுற்ற எங்களுக்கும் பாவமன்னிப்பு கோரு கிறோம் என்றால் அவர் உண்மை அறியாமல் யாரோ கூறியதை அப்படியே அவர் ஆராயா மல் கூறி இருக்கலாம். இதன் தரம், நம்பகத் தன்மை பற்றி தெளிவாக்க வேண்டியதால்  சிறிது  விரிவாக  பார்ப்போம்.

நாமறிந்த வரையில் இப்படி ஒரு ஹதீஃத் நபிமொழியை எந்தவொரு ஹதீஃத் நூலிலும் நாம் கண்டதில்லை. எவராவது அப்படியயாரு ஹதீஃதை சரியான அறிவிப்பாளர்கள் வரிசை யுடன் சமர்ப்பித்தால், மிக்க நன்றியுடன் அதனை ஏற்று, பரிசீலனை செய்து பொது மக்க ளுக்கும், இன்ஷா அல்லாஹ் தெரிவிப்போம். எவராலும் முடியாது என்று எம்மால் உறுதியாக கூற முடியும். அப்படியயனில், இப்படிப்பட்ட நபிமொழிகள் எப்போது, யாரால் ஏன்? ஏற்பட் டது, மக்களிடையே உலவி வருகிறது என்ற நியாயமான வினாக்களுக்கு விடை காண்பது அவசியம்.

இந்தியா சுதந்திரம் அடைந்து “”மக்க ளாட்சி” என்ற பெயரில் நாடு மொழி ரீதியாக வும், மத, கலாச்சார ரீதியாகவும் பற்பல பிராந் தியங்களாகப் பிரிக்கப்பட்டது. அனைவரை யும் திருப்திப்படுத்த மொழி, மத, இன, குல, கலாச்சாரங்களுக்கு முதலிடம் அளிக்கப்பட் டது. எனவே பிராந்திய வெறி, மொழி வெறி, கலாச்சார வெறி மக்களிடையே அதிகமானது. இதனைக் கண்ட மத்திய அரசு இந்திய “”தேசிய பற்று” வெறி மக்களிடையே விதைத்தது. மக்களிடையே “”மக்களாட்சி தேசியம்” Democracy, Nationalism) அதிகமாக  வலியுறுத்தப் பட்டது. ஆன்மீக ரீதியாக அதிகம் பாதிக்கப் பட்டுள்ள இந்தியா  மக்களிடையே இக்கருத் தினை கொண்டு போக நல்ல வழியாக மக்களின் மத போதகர்களை பயன்படுத்தினார் கள். முஸ்லிம்களிடையே பெரும்பாலோர் ஏற்று சிறப்பிக்கும் மார்க்க அறிஞர்களாக கூறப் படும் உல(ரும்) மாக்களை தேர்வு செய்தார்கள். அரபி மதரஸாக்களில் தேசப்பற்று பற்றி போதிக்கப்பட்டது.

பிராந்திய பற்று, மொழி பற்று, கலாச்சார பற்று, குலப்பற்று, இனப் பற்று, இறுதியாக பெருமக்கள் தங்களால் முடிந்த உதவியாக இது போன்ற கருத்துக்களை தங்களின் கூற்றாக கூறி னால், மக்கள் ஏற்கமாட்டார்கள் என நாம் அளவுக்கதிகமாக கண்ணியப்படுத்தும் நம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டி கூறலானார்கள். இதனை அவர்கள் அறிவிக்கும் கூற்றிலிருந்தே  நன்கு  அறியலாம்,  எப்படி? தங்களுக்கு கிடைக்கும் பொது மேடை கள், ஜும்மா குத்பாக்களில் நமது இந்திய ஜனநாயக அரசின் அடிவருடியாக, தாங்கள் அறிந்த, ஆனால் பாமர மக்கள் அறியாத அரபி மொழியில்  தேசப்பற்றை  உயர்த்தி,  “”ஹுப்புல்  வதன்  நிஸ்புல்  ஈமான்” பொருள் : “”தேசப்பற்று இறை நம்பிக்கையில் பாதி!” என அழகாக கூறி இறுதியாக, நிச்சய மாக, அவசியமாக தாங்கள் மாட்டிக் கொள்ளா மலிருக்க, தந்திரமாக :

“”அவ் கமா கால ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹ்  அலைஹி  வஸல்லம்”இதன் பொருள் : இது போன்றதை ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் கூறினார்கள், என தங்கள் சொற்பொழிவை முடிப்பார்கள் அல்லது தொடர்வார்கள். சிறிது சிந்தியுங்கள்! அவர்கள் கூறிய சொற்களோ, வாசகமோ நம் அருமை நபி(ஸல்) அவர்கள் கூறியதல்ல! அது போன்ற ஒன்றை நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள்  என  அர்த்தமாகிறது.

இப்படி நம் ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டி கூறுவது இன்றுவரை ஜும்மா குத்பாக்களில் நிகழ்வதை நாம் (ஓரளவு அரபி மொழி அறிந்தவர்கள் அறிய லாம். இந்த ஐயத்திற்கு விடையளிக்கும் நபர் நிதர்சனமாக இன்றும் கண்டு வருவதையே விவரிக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வும்.  இனி உங்கள் பள்ளி இமாம்கள் “”அவ் கமா கால ரசூலுல்லாஹ் (ஸல்)” என கூறினால் நிச்ச யமாக, நம் ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டி தன் சொந்த யூகத்தை சொல்கிறார்  என  விளங்கிக்  கொள்ளுங்கள்.

பாவம்! உங்கள் ஊர் கல்லூரி முதல்வர் யாரோ ஒரு மெளலானா, மெளலவி சொன் னதை சத்திய வாக்காக, நம் நபி(ஸல்) கூறியதாக நம்பி கூறியிருக்கலாம். தமிழ் அறிஞரான அவ ருக்கு அரபி மொழி தெரிய வாய்ப்பில்லை. நிச்சயமாக, அவருக்கு ஏதாவதொரு தெரிந்த வர். ஆனால் ஹதீஃத் ஞானமற்றவர் அரபியில் கூறியதை கூறியுள்ளார் என நாம் அவர் மீது நல்லெண்ணம் வைக்கிறோம். அவருக்கு நாம் கூற விரும்புவது நமது கூற்றோ, அறிவுரையோ அல்ல, ஏகன் அல்லாஹ்வின் அறிவுரையே: தயவு செய்து அவர் அல்குர்ஆன் வசனம்: 49:6ஐ படித்து விளங்கி செயல்படுவது அவருக்கும், அவரிடம் பயிலும் மாணவ, மாணவியர்களுக் கும் இவ்வுலகிலும், மறுமையிலும் நன்மை பயக் கும்  என  நினைவூட்டுகிறோம்.

“”எவரொருவர் நான் சொல்லாததை நான் சொன்னதாக சொல்கிறாரோ அவர் தங்கு மிடம் நரகம் ஆகட்டும்” என ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறிய நபிமொழி. ஹதீஃத் இடம் பெறாத ஹதீஃத் நூல்களே இல்லை என லாம். இவையனைத்தும் நம் மெளலானா, மெளலவி, மார்க்க மேதைகள், உல(ரும்) மாக்க ளுக்கு நன்றாக தெரியும். இருந்தும் இவர்கள் நாட்டு பற்று, தேசிய நேசத்திற்கு வக்காலத்து வாங்குவதெல்லாம் மக்களிடம் நற்பெயர் பெறவும், அரசு அதிகாரிகளை திருப்திப்படுத்து வதற்காகவும் தான் என்றால் மிகையாகாது. இது முந்தியதைவிட மிகப்பெரிய பாவம் என் பதை விளங்காமல் நம் மெளலானா, மெளலவி கள் புலம்பித் திரிகிறார்கள். இப்புலம்பலை தங்கள் ஊர் கல்லூரி முதல்வர் போன்ற படித்த வர்களே நம்பியுள்ளார்கள் என்றால் பாமர மக்களைப்  பற்றி  என்ன  சொல்ல  முடியும்?

இவர்கள் தாங்கள் நம்பி, பின்பற்றி இவ் வுலகில் வாழ்ந்த தங்கள் கல்லூரி முதல்வர் போன்றவர்கள் மரணத்திற்கு பின் மறுமையில், அல்லாஹ்வின் கடும் தண்டனையை சுவைக் கும் போது தாங்கள் நம்பி மோசம் போன மெளலானா, மெளலவிகள், மார்க்க மேதை கள், உல(ரும்) மாக்களைப் பற்றி எப்படியயல் லாம் ஏகன் அல்லாஹ்விடம், அவர்களை சபித்து பிரார்த்திப்பார்கள் என்பதை அல்குர்ஆன் வசனங்கள் : 33:66 முதல் 68 மற்றும் 41:29 பார்த்து படிப்பினை பெற வேண்டிக் கொள்கிறோம்.

அகில உலக இரட்சகன் அல்லாஹ்வை தன் இறைவனாகவும், அகில உலக மக்களுக்கு நேர்வழி காட்டியாகவும், அருட்கொடையாக வும் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களை தங்களின் இறைத் தூதராகவும், நேர்வழிகாட்டியாகவும் அல்குர் ஆனை அகில உலக மக்களுக்குரிய நெறிநூலாக வும் ஏற்றுள்ள நாம் முஸ்லிம்கள் எந்தவொரு நாட்டுக்கோ, மொழிக்கோ, குலத்துக்கோ, இனத்துக்கோ சொந்தக்காரர்கள் அல்ல. நாம் அனைவரும் “”அகில உலக வாதிகள்” (Globalists- Internationalists) என்று பெருமையுடன் வாழ் வோமாக! ஈருலகிலும் அல்லாஹ்வின் நேசத் தையும், பாசத்தையும் பெற்று பேரருள் பெறுவோமாக! ஆமீன்.

Previous post:

Next post: