தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்…

in 2017 அக்டோபர்

அமல்களின் சிறப்புகள்…

தொடர் : 29
M. அப்துல் ஹமீத்

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட செய்தி இடம் பெற்றுள்ள  விவரம்  :
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்தலைப்பு :  திக்ரின்  சிறப்புகள்குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்பக்கம் : 354,  ஹதீஃத்  எண் : 7ன் விளக்கம்

செய்தி : மன்சூர் இப்னு முஃதமர் (ரஹ்மத்துல் லாஹி அலைஹி) என்ற பெரியார் நாற்பது ஆண்டுகளாக இஷாவிற்குப் பின் எவருடனும் பேசாமலேயே (அல்லாஹ்வின் திக்ரிலேயே) இருந்திருக்கிறார்கள்.

ரபீஃ இப்னு ஹைசம் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) என்பவர்கள் பேசுவதையயல்லாம் ஒரு நாளில் குறித்து வைத்துக்கொண்டு இரவில் அதனை எடுத்துப் பார்த்து அவசியமான பேச்சு எது? அனாவசியமான பேச்சு எது? என்பதைப் பற்றி தங்களைத் தாங்களே விசாரணை செய்து கொள்வார்களாம். இவ்வாறு 20 ஆண்டுகள் வரை  அவர்கள்  செய்து  வந்திருக்கிறார்கள்.

மேலே உள்ள சம்பவங்களை படித்துவிட்டு, கீழே காட்டப்பட்டுள்ள ஹதீஃத்களை படியுங்கள். நபி(ஸல்) அவர்கள் உத்மான் இப்னு மழ்வூன்(ரழி) அவர்களிடம் ஓர் ஆள் அனுப்பி “”நீங்கள் என்னுடைய சுன்னத்தை புறக்கணித்து விட்டீர்களா? என்று கேட்டு வரச் சொன்னார் கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் நேரில் வந்து) “”இறைவன் மீது ஆணையாக, இல்லை, அல்லாஹ்வின் தூதரே! தங்களின் சுன்னத் தையே நான் விரும்புகிறேன்” என்றார். அப் பொழுது நபி(ஸல்) அவர்கள், நிச்சயமாக நானும் தொழுது வருகிறேன். தூங்கவும் செய்கி றேன், நோன்பு நோற்கிறேன், நோன்பு நோற் காமலும் இருக்கிறேன், திருமணமும் செய்துள் ளேன், எனவே உத்மானே, அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள். உங்கள் குடும்பத்தினர் மீது உங்களுக்கு சில கடமைகள் உண்டு, உங்கள் விருந்தினர் மீதும் உங்களுக்கு சில கடமைகள் உண்டு, உங்கள் மீதும் உங்களுக்கு சில கடமை கள் உண்டு. நீங்கள்(பகலில்) நோன்பு நோறுங் கள், நோற்காமலும் இருங்கள்.(இரவில்) தொழ வும் செய்யுங்கள், தூங்கவும் செய்யுங்கள்” என்று  அறிவுரை  பகர்ந்தார்கள்.     அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா(ரழி), நூல்: திர்மிதி

(மற்றொரு ஹதீஃதில் (அனஸ்(ரழி), புகாரி, முஸ்லிம், நஸயீ) இதுபோன்ற அமல்கள் செய் பவர்களைப் பற்றி, “”எவரேனும் என் வழியை புறக்கணித்தால் அவர் என்னைச் சேர்ந்தவர் அல்ல” என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள் ளார்கள்.

முதல் நபர் பெரியாராம், 40 ஆண்டுகளாக எவருடனும் பேசவில்லையாம். மாலைக்கண் என்று சொல்வது போல இரவு நேரங்களில் ஊமையாகி விடும் வியாதி கொண்டவரோ இவர் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் அப்படி யாரும் நினைத்து விடக் கூடாது என் றெண்ணி “”அல்லாஹ்வின் திக்ரிலேயே” இருந்த தாக அடைப்புக் குறிக்குள் அடையாளம் காட்டுகிறார்கள்.

மார்க்கத்தில் கடமையாக்கப்பட்ட அந்தஸ் தில் இருந்த தொழுகைகளை இஷாவிற்குப் பின் இரவெல்லாம் தொழுதவரையும், மார்க்கத்தில் கடமையாக்கப்பட்ட அந்தஸ்தில் இருந்த நோன்பை ஒவ்வொரு நாளும் பகல் நேரமெல் லாம் நோற்ற வரையும், நபி(ஸல்) அவர்கள் “”என்னைச் சார்ந்தவர் அல்ல” என்று எச்சரித்த பின், அமல்களின் சிறப்புகளின் ஆசிரியருக்கு என்ன நெஞ்சழுத்தம் இருந்திருந்தால் இவர் களையயல்லாம் “”பெரியார்கள்” என்று போற் றிப் புகழ்வார்? வீணாய் போன விசயங்கள் எல்லாம் இவருக்கு ஹதீஃத்களாக தெரிகின் றன, இஸ்லாத்தை களங்கப்படுத்தும் நோக்கம் கொண்டவர்களுடன், இவருக்கு தொடர்பு இருக்குமோ? அந்த தொடர்பால் முஸ்லிம் களை அமல்கள் என்ற பெயரில் வழிகெடுத்து வருகிறாரோ? என்ற சந்தேகம், அமல்களின் சிறப்புகள் புத்தகத்தை படிக்க படிக்க, வலுப் பெற்று வருவதோடு, அந்த சந்தேகம் உண்மை என்று  ஊர்ஜிதமும்  ஆகிறது,  இப்போது,

மேற்கண்ட பெரியார் கண்டிப்பாக திருமணம் செய்திருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அப்படியானால் 40 ஆண்டு களாக இரவெல்லாம் மனைவியோடு பேசவில் லையா? மனைவியுடன் சேர்ந்து அல்லாஹ் அனுமதித்த உடலுறவில் ஈடுபடவில்லையா? ஒருத்தியை கல்யாணம் செஞ்சிட்டு வந்து 40 வரு­மா ராத்திரி எல்லாம் அவளை ஒண் ணுமே செய்யாமல் வாட்டி வதைத்து பெரும் பாவம் செய்த இந்த ஆள், ஜக்கரியா சாஹிபுக்கு பெரியாராம்! ஒண்ணுமே செய்லேனாலும் பரவாயில்லை, 40 வரு­மா பேசுறது கூட இல்லை என்று அந்த அம்மா காவல் நிலையத் தில் புகார் கொடுத்திருந்தால், இந்நேரம் அந்த பெரியார் திக்ர் எனும் பெயரால் தஸ்பி மணியை எண்ணிக் கொண்டிருந்ததற்கு பதிலாக ஜெயிலில் கம்பி எண்ணி இருப்பார். ஜக்கரியா சாஹிபின் தயவால் ஏகப்பட்ட தப்லீக் ஜமாஅத் முஸ்லிம்களுக்கு மன்சூர் இப்னு முஃதமர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி பெரியாராக காட்சி தந்து கொண்டு இருக்கிறார்.

இன்னொருவர் ரபீஃ இப்னு ஹைசைம்! 20 வரு­மா இவருடைய வேலையை பாருங் கள், பகலில் ஸ்டெனோகிராஃபர் இரவில் மேஜிஸ்ட்ரேட் என்பது போல் பகலில் இவர் பேசுவதை எல்லாம் இவரே குறித்து வைத்துக் கொள்வாராம், ராத்திரியானா, குறித்து வைத்தலை எடுத்து வைத்துக்கொண்டு, அவசியமான பேச்சு எது? அனாவசியமான பேச்சு எது? என்பதைப் பற்றி தங்களைத் தாங்களே விசாரணை செய்து கொள்வார் களாம். லூசு பயலா இருப்பா போல தெரியுது.

இஸ்லாம் வந்து 1438 வருசமாகியும் முஸ்லிம்களை கேனப்பயலுகளா நௌச்சிக் கிட்டு இருக்காங்க பாரு. அதுலே கேவலம் என்னான்னா இந்த சம்பவங்களை தாலிமில் படிக்கும்போது சிலதுகள் தலையை கீழே பார்த் துக்கிட்டு மண்டைய மண்டைய ஆட்டிக்கும் அதாவது பாராட்டுறது இல்லை தாலிமில் படிக்கிறதை இது கவனிச்சு கேக்குதாம். அதை தெரியப்படுத்த மண்டையை ஆட்டிக்கிது. சிலதுகள் சுப்ஹானல்லாஹ், மாஷா அல்லாஹ் என்று சொல்லிக்கும். புல்லரிக்கிது இவர்கள் இபாதத்.

Previous post:

Next post: