அடையாளப் பெயரும் கொள்கைப் பெயரும் ஒன்றா?

in 2016 பிப்ரவரி

அபூ அப்தில்லாஹ்

குர்ஆன் கூறுகிறது :

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; பின்னர், நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் எவர் (அல் லாஹ்விடம்) மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (49:13)

இன்னும், நீங்கள் எல்லோரும் ஜமாஅத்தாக அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்து விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள்; உங்கள் இதயங்களுக்கிடையே அன்பை ஏற்படுத்தினான்; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும் நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் விளிம்பின்மீது இருந்தீர்கள்; அதிலிருந்தும் அவன் உங்களைக் காப்பாற் றினான்; நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்குத் தெளிவாக்குகின்றான். (3:103)

(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார்(கருத்து) வேறுபாடு கொண்டு பிரிந்துவிட்டார்களோ, அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனையுண்டு. (3:105)

நிச்சயமாக, இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே, இதனையே பின்பற்றுங்கள்; இதர வழிகளை நீங்கள் பின்பற்றவேண்டாம்; அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர்வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவராக இதனை அவன் உங்களுக்கு ஏவுகிறான். (6:153)

நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகிவிட்டனரோ, அவர்களின் எந்தக் காரியத்திலும் (நபியே!) உமக்கு சம்பந்தமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது; அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி (முடிவில்) அவன் அவர்களுக்கு அறிவிப்பான். (6:159)

(நபியே!) நீர் சொல்வீராக! இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஆதாரத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, நான்(அவனுக்கு) இணைவைப் போரில் உள்ளவனல்லன். (12:108)

எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி, பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ, (அவர்களில் ஆகிவிட வேண்டாம்; அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். (30:32)

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியி ருக்கிறான்; ஆகவே, (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும் இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்தது என்னவென்றால், நீங்கள் (அனைவரும்) மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள்; நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள் என்பதே; இணைவைப்போருக்கு நீங்கள் எதன் பக்கம் அவர்களை அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்கு பெரும் சுமையாகத் தெரிகிறது; தான் நாடிய வர்களை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்; (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். (42:13)

அவர்கள், தங்களிடம் ஞானம்(நெறிநூல்) வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவே அன்றி, அவர்கள் பிரிந்து போகவில்லை; (அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களிடையே (இதற்குள்) நிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்; அன்றியும், அவர்களுக்குப் பின்னர் யார் நெறிநூலிற்கு வாரிசாக்கப்பட்டார்களோ நிச்சயமாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக் கின்றனர். (42:14)

இந்த ஒன்பது வசனங்களையும் மீண்டும் மீண்டும் நேரடியாகப் படித்து அவற்றின் சாரமும் சத்தும் உள்ளத்தில் நிறைந்திருக்கச் செய்யுங்கள். உங்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும் மனிதக் கருத்துக்களை சிறிது நேரத்திற்கேனும் ஒதுக்கி வையுங்கள். அப் போதுதான் இந்த குர்ஆன் வசனங்களின் நேரடி யான, சரியான, நேர்வழியான கருத்தை உள்வாங்க முடியும்.

அப்படி முழுமையாக முறையாக இந்த வசனங்கள் அனைத்தையும் விளங்கினால் மட்டுமே 49:13 இறைவாக்குக் கூறும் ஒருவரை ஒருவர், ஒன்றை ஒன்று பிரித்து அறிந்து கொள்ள உதவும் அடையா ளப் பெயர் வேறு; 3:103,105, 6:153,159, 12:108, 30:32, 42:13,14 இறைவாக்குகள் கூறும் சமுதாயத்தைக் கொள்கையளவில் பிளவுபடுத்தி ஒருவரை ஒருவர் முட்டி மோதச் செய்யும் கலவரங்களைத் தூண்டும் கொள்கை அடிப்படையிலான பிரிவுப் பெயர்கள் வேறு என்பதையும் முன்னையது அனு மதிக்கப்பட்டது பின்னையது கொடிய ஹராம்-அனுமதிக்கப்படாதது என்பதைத் திட்டமாகத் தெளிவாக அறிய முடியும்.

நபி(ஸல்) அவர்களது காலத்தில் 49:13 இறை வாக்குக் கூறும் அடையாளப் பெயர்களான முஹாஜிர், அன்சார், குறைஷ், பனூ ஹா´ம், பனூ குறைளா, பனூ நளீர் போன்ற அடையாளப் பெயர்களையும், இக்காலத்தில் புழக்கத்தில் இருக்கும் குடும்பப் பெயர்களையும் கணக்கில் எடுத்துப் பாருங்கள்.

அன்று அவர்களில் யாரும் நாங்கள்தான் நேர் வழியில் இருக்கிறோம். மற்றவர்கள் வழிகேடர்கள் என்று சொன்னார்களா? முஹாஜிர்களாகிய நாங் கள்தான் நேர்வழியில் இருக்கிறோம். மற்றவர்கள் அனைவரும் வழிகேடர்கள் என்று சொன்னார்களா? நாங்கள்தான் சுவர்க்கத்துச் ஜமாஅத் எனப் பீற்றினார்களா? அவர்கள் கொள்கை வேறு, எங்கள் கொள்கை வேறு என்று சமுதாயத்தைப் பிளவுபடுத்தினார்களா? ஒருவருக்கு ஒருவர் காஃபிர் ஃபத்வா கொடுத்தார்களா? அவர்கள் செய்த எந்தச் செயலையும் விளம்பரப்படுத்தி மக்களிடம் பிரபல்யமாகத் துடித்தார்களா? இப்படிப்பட்ட தறுதலைத்தன மான எந்தச் செயலையும் அடையாளப் பெயர்களை உடையவர்கள் செய்ய முற்பட்டதில்லை.

வேண்டுமானால் உலகியல் காரியங்களை வைத்துக் கிளைக்குக் கிளை, கோத்திரத்திற்குக் கோத்திரம் முழுமை பெற்ற இஸ்லாம் அவர்களுக்கு அறிமுகப்படுத்த முன்னர் வீண் பெருமை பேசி பெரும் பிரிவு கள் ஏற்பட்டுச் சண்டைகள் நடந்ததை அல்குர்ஆன் 3:103 இறைவாக்குக் கூறுகிறது. அப்படிப்பட்டச் செயல்கள் பெருத்த வழிகேடு, நரக நெருப்பின் விளிம்பில் கொண்டு சேர்க்கும் என்பதும் விளங்குகிறது. அறிவுடையோர் விளங்குவார்கள்!

இன்னும் முஸ்லிம்களில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு தனித்தனிப் பெயர்களையும், தனித்தனி குடும்பப் பெயர்களையும் வைத்துக் கொள்ள மார்க்கத்தில் தடை சிறிதும் இல்லை. தனித்தனி நிறுவனங்களுக்கும், தனித்தனி பத்திரிகைகளுக்கும் தனித்தனிப் பெயர்கள் வைக்கத் தடை இல்லை. உலகியல் ரீதியாக சங்கங்கள், அமைப்புகள், இயக்கங்களுக்குத் தனித்தனிப் பெயர் வைக்கவும் தடை இல்லை. இவர்களில் யாரும் நாங்கள்தான் நேர்வழி ஜமாஅத், சுவர்க்கத் ஜமாஅத், மற்றவர்கள் வழிகேடர்கள், நரகத்திற்குரியவர்கள் எனத் தம்பட்டம் அடிப்பதில்லை. எனவே உலகள வில் அடையாளம் தெரிந்து கொள்ள 49:13 இறை வாக்கு அனுமதித்துள்ள பெயர்களை வைத்துக்கொள்ள மார்க்கத்தில் தடையில்லை என்பதை ஆதாரமாகக் காட்டி தனித்தனிக் கொள்கை அடிப் படையிலான பிரிவுப் பெயர்களை நியாயப்படுத்து வது பெரும் வழிகேடு. குர்ஆனின் பல வசனங்கள் தெளிவாக, நேரடியாக மறுக்கும் கொள்கை அடிப் படையிலான பெயர்களுக்கு மார்க்கம் முற்றிலும் முழுவதுமாகத் தடை செய்துள்ளது என்பதை மேலே கண்ட குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்து கின்றன.

குர்ஆனில் முஸ்லிம்களைப் பல பெயர்களில் சிறப்பித்துக் கூறி இருப்பது உண்மைதான். அதை ஆதாரமாகக் காட்டி பீ.ஜை. தனது வழிகெட்ட ஷிர்க்கில் மூழ்கியுள்ள ததஜ பெயரை நியாயப்படுத்துவது வழிகேட்டிலும் பெருத்த வழிகேடாகும். எப்படி என்று பாருங்கள்.

அல்லாஹ் குர்ஆனில் முஃமினீன் என்றும் முஃமினூன் என்றும், யா அய்யுஹல்லதீன ஆமனூ -ஓ ஈமான் கொண்டவர்களே என்றும் எண்ணற்ற இடங்கில் கூறியுள்ளான். இவற்றை ஆதாரமாகக் காட்டி ஒருவர் “முஃமீன்கள் ஜமாஅத்” – “ஜமாஅத் துல் முஃமினீன்” என்று பெயரிட்டுக் கொள்ளலாமா? கூடாது-வழிகேடு. இதை குர்ஆன் 49:14 இறைவாக்கும், புகாரீ 1478 ஹதீஃதும் எச்சரிக்கின்றன.

குர்ஆனில் எண்ணற்ற இடங்களில் காணப்படும் “முஃமீனின்” என்பதையே பெயராகக் கொள்ள மார்க்கம் அனுமதிக்கவில்லை எனும்போது இதர பெயர்களையோ, இவர்களாகக் கற்பனைசெய்து இட்டுக் கொண்ட பெயர்களையோ மாரக்கம் அனுமதிக்குமா? நிச்சயம் அனுமதிக்காது.

அதற்கு மாறாக இந்த உம்மத்திற்கு அல்லாஹ் “முஸ்லிமீன்”-முஸ்லிம்கள் எனப் பெயரிட்டுள்ளதாக 22:78 இறைவாக்குத் திட்டமாகக் கூறுகிறது. எப்படிப்பட்ட நற்செயல்களைச் செய்தாலும் தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள்-மினல் முஸ்லிமீன் என்று அழைத்துக் கொள்ளவே 41:33 இறை வாக்கு வழிகாட்டுகிறது. இவை அல்லாமல் நபிமார்கள் அனைவருமே தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள்-மினல் முஸ்லிமீன் என்று அழைத்துக் கொண்டதாக 2:131,132, 5:44,111, 7:126, 10:72,84, 12:101 போன்ற பல குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்து கின்றன.

இன்று முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படும் எண்ணற்றப் பிரிவுகள், அவற்றால் ஏற்படும் குழப்பங்கள் காலத்தில் நீங்கள் ஜமாஅத்துல் முஸ்லிமீனையும், அதன் இமாமையும் பற்றிய படித்துக் கொள்ளுங்கள். அனைத்துப் பிரிவுகளை விட்டும் விலகி விடுங்கள். மரவேர்களைச் சாப்பிட்டு உயிர் வாழ நேரிட்டாலும் சரியே என்று கூறும் ஆதாரபூர்வ மான ஹதீஃத் பல ஹதீஃத் நூல்களில் காணப்படுகிறது.

ஷிர்க்கின் கோட்டை-ஷிர்க்கின் ஆக உச்சத்தில் இருக்கும் பொய்யன் பீ.ஜை. இந்த குர்ஆன் வசனங்களுக்கும், ஹதீஃத்களுக்கும் 2:159-162, 33:36,66-68 இறைவாக்குகள் எச்சரித்தும் அவற்றைப் புறந்தள்ளித் தானும் வழிகெட்டு, அவரை நம்பியுள்ள அப்பாவி பக்தர்களையும் வழிகெடச் செய்து அவர்களை நரகில் தள்ள அரும்பாடுபட்டு வருகிறார். 16:25 இறைவாக்குக் கூறுவது போல் அவரின் பாவச் சுமையோடு, அவர் வழிகெடுத்த கூட்டத்தினரின் பாவச் சுமையையும் நாளை பீ.ஜை. சுமக்கப் போகி றார் என்ற 16:25 வசனம் கூறும் உண்மையை, மார்க்கத்தை வியாபாரப் பொருளாக்கி முழுக்க முழுக்க ஹராமான வழியில் அவரது வயிற்றை நிரப்பி வருவதால் அவரது உள்ளம் 2:74, 5:13, 6:43,125, 57:16 இறைவாக்குகள் கூறுவது போல் கற்பாறையாக இறுகிக் கடினமாகி விட்டது. இந்த குர்ஆன் வசனங்களின் நேரடிக் கருத்துகளை அவரால் விளங்க முடியாது. அவரின் பெருமை காரணமாக 7:146 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ் வாலேயே அவர் குர்ஆன் வசனங்களிலிருந்து திருப்பப்படுகிறார். அல்லாஹ் குர்ஆனில் கூறும் ஒரே நேர்வழியை அவர் ஒருபோதும் ஏற்க மாட்டார். கோணல் வழிகளையே நேர்வழியாகத் தனது கண் மூடி பக்தர்களுக்குக் காட்டுவார். இவை நாம் சொல்வதல்ல. அல்லாஹ் பெருமை பேசும் ஆலிம்களை, குறிப்பாக பீ.ஜையைப் பற்றி 7:146 குர்ஆன் வசனத்தில் கூறியுள்ளவை. நீங்களே நேரடியாகப் படித்துத் தெளிவு பெறுங்கள். மேலும் 7:37 குர் ஆன் வசனத்தை நீங்களே நேரடியாகப் படித்துப் படிப்பினை பெறுங்கள்.

முஸ்லிமீன் அல்லாத மற்ற பெயர்களில் நம்மை அழைத்துக் கொள்வது வழிகேடு-நரகில் சேர்க்கும் என்பதை குர்ஆன் வசனங்களுக்கு 2:159, 33:36 குர் ஆன் வசனங்களை நிராகரித்து சுயவிளக்கம் எதுவும் கொடுக்காமல் உள்ளது உள்ளபடி பார்த்தோம். இனி அல்லாஹ் 22:78ல் பெயரிட்டுள்ளபடி “முஸ்லிமீன்” என்ற பெயர் பற்றிப் பார்ப்போம்.

ஒருவன் முஸ்லிம் என்ற நிலையில் இவ்வுலகில் எப்படிப்பட்ட பித்அத்தான குஃப்ரான, ஷிர்க்கான செயலை செய்தாலும் அவன் முஸ்லிம் இல்லை, காஃபிர், முஷ்ரிக் எனக் கூறி முஸ்லிம் சமுதாயத்திலிருந்து அவனை வெறியேற்ற மனிதர்களில் யாருக்கும் எந்த அல்லாமாவுக்கும் அனுமதி கடுகளவும் இல்லை. அப்படி அல்லாஹ்வின் அதிகாரத்தைத் தன் கையில் எடுத்து, அல்லாஹ்வே தீர்ப்பை மறுமைக் கென்று ஒத்திவைத்துள்ள நிலையில், எவன் அல்லாஹ்வின் அந்த அதிகாரத்தைத் தன் கையில் எடுத்து காஃபிர், முஷ்ரிக் ஃபத்வா கொடுத்து சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துகிறானோ, அவர்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட சுயமாகப் பெயரிட்டுக் கொள்கிறானோ அவன்தான் முதலில் நாளை நரகில் எறியப்படுவான்.

விளங்க உதாரணம் ஒன்று சொல்கிறோம். கவன மாகக் கேளுங்கள். ஒரு முஸ்லிம் தனது மகனுக்கு “அப்துல்லாஹ்” என்று சிறப்புக்குரிய பெயரை வைத்துள்ளார். அந்த அப்துல்லாஹ் வளர்ந்து வாலிபமான பின்னர் உலகில் காணப்படும் பஞ்சமா பாவங்கள் அனைத்தையும் செய்கிறான். பித்அத், குஃப்ர், ஷிர்க் அனைத்திலும் முங்கிக் குளிக்கிறான். அவன் அப்துல்லாஹ் இல்லை என்று யாரும் சொல்வார்களா? இல்லையே!

இப்போது சிந்தியுங்கள்! ஒரு மனிதன் தன் மக னுக்குச் சூட்டிய அப்துல்லாஹ் என்ற பெயரை மாற் றிச் சொல்லத் துணியாதவர்கள், குர்ஆன் 22:78ல் அல்லாஹ் முஸ்லிமீன் என்று சூட்டிய பெயரை மாற்றி காஃபிர், முஷ்ரிக் எனக் கூறத் துணிபவர்கள் எப்படிப்பட்ட வழிகேட்டில் இருக்கிறார்கள். 42:21 இறைவாக்குக் கூறுவது போல், அல்லாஹ் விதிக்காத சட்டங்களை இவர்கள் விதித்து, 49:16 இறைவாக் குக் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற் றுக் கொடுக்கத் துணிபவர்கள் எப்படிப்பட்ட வழி கேடர்களாக இருப்பார்கள் என்பதைச் சிந்தித்து விளங்குங்கள். ஒருவர் செய்யும் வழிகேடுகளை, ஷிர்க்்கான, குஃப்ரான செயல்களை குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்கள் கொண்டு கடுமையாக எச்சரிப்பதும் நாளை நரகம் சென்று அடையப்போகும் கடும் தண்டனைகளை எடுத்துக் காட்டுவதும் நமது கடமையே அல்லாமல், அவர் நமது எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் அதே தவறுகளில் ஈடுபடுகிறார் என்பதற்காக அவருக்கு குஃப்ர், ஷிர்க் ஃபத்வா கொடுக்க மனிதர்களில் எவருக்கும் அனுமதி இல்லை. அது ஷிர்க்கிலும் கொடிய ஷிர்க்.

இந்த உண்மைகளை 1987ல் பீ.ஜையும் மற்றும் ஒட்டுமொத்த மவ்லவிகளும் அந்நஜாத்திலிருந்து வெளியேறி பித்அத்தான, 12:108 இறைவாக்கில் அல்லாஹ் கொடுத்துள்ள ஒரே நேர்வழியை விட்டு வேறு வழியில் செல்வது அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் செயல், அப்படிப்பட்ட இணை வைப் போரில் உள்ளவன் அல்ல நான் என்று நபி(ஸல்) கூறியிருப்பதன் மூலம் “ஜாக்’ இவர்கள் கற்பனை செய்த பெயர்; வழிகேடான, ஷிர்க்கான பெயர் என்று தெளிவாக குர்ஆன் ஆதாரங்கள் கொண்டே எடுத்து வைத்தோம். 7:146 இறைவாக்குக்கூறுவது போல் இம்மவ்லவிகள் ஒரே நேர்வழியை ஏற்கவில்லை.

இந்த நிலையில் சென்னையில் நடந்த அவர்களது கூட்டம் ஒன்றில் ஜாக் வழிகேடு என்பதைத் தெளிவாக விளங்கிய சகோதரர் ஒருவர் கலந்திருக்கிறார். அங்கு “ஜாக்’ கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்று எழுதி அதில் அனைவரிடமும் கையயழுத்து வாங்கியுள்ளனர். இந்தச் சகோதரர் “ஜாக்’ வழிகேடு என்று அதில் எழுதி கையயழுத்திட்டுள்ளார். மூக்குக்கு மேல் கோபம் வந்துவிட்டது பீ.ஜைக்கு. என்னோடு வாதம் பண்ணி “ஜாக்’ வழிகேடு என்று நிரூபிக்கத் தயாரா? என்று சவால் விட்டுள்ளார். அவரைத் தனது சூன்யப் பேச்சால் மடக்கி வெற்றி பெற்றுவிடலாம் என்ற தைரியம் பீ.ஜைக்கு. அந்த சகோதரர் விவாத ஒப்பந்தத்தில் கையயழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு நேரடியாக எம்மிடம் வந்து நடந்தவற்றைக் கூறினார். நாம் விவாதத்திற்கு வருவதாக ஒப்புக் கொண்டோம்.

குறிப்பிட்ட நாளில் நாம் சென்னை போய் விவாதம் நடைபெற இருந்த மண்டபத்திற்குச் சென்றோம். எம்மைப் பார்த்ததும் பீ.ஜை. தடுமாற ஆரம்பித்து விட்டார். ஏதேதோ பிதற்ற ஆரம்பித்தார். கடந்த 30 ஆண்டுளாக விடாது எடுத்து வைக்கும் குருட்டு வாதங்களையே அன்றும் எடுத்து வைத்தார். அனைத்திற்கும் குர்ஆன், ஹதீஃதிலிருந்தே மறுப்புக் கொடுத்தோம். 22:78ல் அல்லாஹ் “”முஸ்லிமீன்” என்று பெயரிட்டான் என்பதை அல்லாஹ் முஸ்லிம் என்று சொன்னான், கூறினான் எனப் பிதற்றினார். முஸ்லிமீனை-கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்றும், ஜமாஅத்துல் முஸ்லிமீனை கட்டுப்பட்டு நடக்கும் கூட்டமைப்பு என்றும் தமிழில் மொழி பெயர்த்துச் சொல்ல வேண்டும் என்று பிதற்றினார்.

அதற்கு நாம் உங்களது பெற்றோர் இட்ட, பெயர் “ஜைனுல் ஆபிதீன்” நீங்கள் கற்பனை செய்துள்ள பெயர் ஜம்யிய்யத்து அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஃத் இவை இரண்டையும் தமிழில் மொழி பெயர்க்காமல் அரபியில் மட்டும் சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அல்லாஹ் இட்ட பெயரான முஸ்லிமீனை-கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்றும் ஜமாஅத்துல் முஸ்லிமீனை-கட்டுப்பட்டு நடப்பவர்களின் கூட்டமைப்பு என்று தமிழில் சொல்ல வேண்டும் என்கிறீர்களே உண்மையில் நீங்கள் அல்லாஹ்வின் அச்சம் உடையவரா? என்று கேட்டோம்.

இப்படி முதல் அமர்வு, சில நாள் கழித்து இரண்டாவது அமர்வு, இன்னும் காலம் கடந்து மூன்றாவது அமர்வு என்றும் சென்னை, திருச்சி, மதுரை என இழுத்தடித்தார். ஆயினும் அவரது சுய கற்பனை வாதங்கள் அனைத்தும் குர்ஆன், ஹதீஃதுக்கு முன் நிற்க முடியாமல் தவிடுபொடியாயின. இறுதியில் 3ம் அமர்வில் ஜாக் வழிகேடுதான். இனிமேல் எங்கள் கூட்டங்களில், வால்போஸ்ட்டர்களில் அப்பெயரைப் பயன்படுத்த மாட்டோம். ஆயினும் அமீர் றீ.கமாலுத்தீன் மதனியின் ஒப்புதலுடன் 4ம் அமர்வில் இறுதி முடிவு எடுப்போம் என்று கூறித் தப்பித்தோம் பிழைத்தோம் என்று தப்பி ஓடியவர், நாம் விரட்டோ விரட்டு என்று பலமுறை விரட்டியும் பீ.ஜை. நான்காம் அமர்வுக்கு வரவே இல்லை. அப்போது சகோதரர் ஹாமித் பக்கியும் 3ம் அமர்வில் பீ.ஜையுடன் இருந்தார். இதிலிருந்தே பீ.ஜையின் விவாதத் திறமை சுயமாகச் சிந்திப்பவர்களுக்கு நன் றாக விளங்கும். அதன் பின்னரும் பீ.ஜை. ஜாக்கில் இருந்த வரை ஜாக்கைத் தூக்கிப் பிடித்து மானங் கெட்டவராகப் பிரசாரம் செய்யத்தான் செய்தார்.

அதன் பின்னர் பம்பாயில் நடந்த ஜாக் கூட்டம் ஒன்றில் முஸ்லிமீன், ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று எங்களுக்குச் செயல்படத் தெரியாதோ? ஜமாஅத் துல் முஸ்லிமீன் என்ற பெயரில் கூட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி கேட்டால், போடா என்று தூக்கி எறிந்து விடுவான். அதனால்தான் நாங்கள் “”ஜாக்” என்ற பெயரைப் பயன்படுத்து கிறோம் என்று பிதற்றிய செய்தி நமக்கு வந்தது. உடனே நாம் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற பெயரில் அனுமதி பெற்று திருச்சியில் கூட்டம் நடத் திக்காட்டி அவரின் அந்த உளறலையும் முறியடித் தோம். அந்த மாநாட்டைக் கெடுக்கும் நோக்கத்தில் பல அவதூறுகளைப் பரப்பியதோடு அவற்றை பிரசுரமாக்கி எமது மாநாட்டு பந்தலிலேயே அதைக் கொடுக்க ஏற்பாடு செய்தார். நாம் எவ்விதத் தடை யும் செய்யாமல் அந்த அவதூறுகள் நிறைந்த பிரசுரத்தை எமது மாநாட்டுப் பந்தலிலேயே கொடுக்க அனுமதித்தோம்.

ஆக மார்க்க அடிப்படையில் மார்க்கப் பிரச்சாரங்களுக்கு, கொள்கை அடிப்படையில் தனித் தனிப் பெயர்களைக் கற்பனை செய்து சூட்டிக் கொண்டு மார்க்கப் பணி புரிவது பெருத்த வழிகேடு, கொடிய ஷிர்க் என்பதற்கு குர்ஆனிலிருந்தே பல ஆதாரங்கள் கொடுத்துள்ளோம். 51:55 இறைவாக்குக் கூறுவது போல் உள்ளத்தில் ஈமான் உடையவர்கள் மட்டுமே குர்ஆன் போதனைகளை ஏற்பார்கள். நாளை நரகை நிரப்ப இருக்கும் ஒவ்வொரு ஆயிரத்திலும் 999 பேருக்கு குர்ஆன் போதனைகள் எட்டிக் காயாகக் கசக்கவே செய்யும்.

இதை நாம் கூறவில்லை. அல்குர்ஆன் 17:41,45-47,89, 22:72, 25:60, 39:45 வசனங்களே கூறுகின்றன. யார் நேர்வழி நடக்க விரும்புகிறார்களோ அவர்கள் 2:186 இறைவாக்குக்குக் கட்டுப்பட்டு மனிதர்களில் யாரையும் நம்பாமல் அல்லாஹ்வை மட்டுமே நம்பி அல்லாஹ்வின் வழிகாட்டலை மட்டுமே ஏற்று நடக்க முன்வருவார்களாக. 7:3 இறைவாக்குக்குக் கட்டுப்பட்டு மனிதர்களில் எவரையும் தங்களின் நம்பிக்கைக்குரியவர்களாக, வழிகாட்டிகளாக, பாதுகாவலர்களாகக் கொண்டு அவர்களைப் பின்பற்றா மல் அல்லாஹ்வால் இறக்கப்பட்டவற்றை மட்டுமே பின்பற்றுவார்களாக. யாரெல்லாம் அல்லாஹ்வை நம்பாமல், அல்லாஹ் அவன் படைத்துள்ள மனிதர்களுக்குத் தெளிவாக விளக்கியுள்ளது தங்களுக்குப் புரியாது, விளங்காது, மவ்லவிகள் விளக்கித்தான் விளங்க முடியும் என்ற குருட்டு நம்பிக்கையில் இருப்பவர்கள் நிரா கரிப்பாளர்கள், முஷ்ரிக்குகள் அவர்களின் நல்லமல்கள் அனைத்தும் பாழ், நிரந்தர நரகை அடைபவர்கள் என்று குர்ஆன் 18:102-106 வசனங்கள் கூறுவதை மீண்டும் மீண்டும் படித்து இம்மவ்லவிகளின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு, குர்ஆனைப் பற்றிப் பிடித்து, நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல்படி (சுன்னா-ஹதீஃத்) நடக்க முன் வருவார்களாக. அவர்களே வெற்றியாளர்கள், சுவர்க்க வாசிகள் அல்லாஹ் அருள்புரிவானாக.

Previous post:

Next post: