அந்நஜாத் மார்ச் – 2004

in 2004 மார்ச்

மார்ச் மாதம் 2004

ஸஃபர் 1425

இதழின் உள்ளே!

? புத்தாண்டின் பத்தாம் நாள்…

? இஸ்லாத்திற்கெதிரான சதிவலைகள்!

? இந்திய ஜனநாயக அரசியல் கட்சிகளின் போக்குகளும் Vறீ முஸ்லிம்களின் நிலையும்…

? மக்காளட்சி!

? இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இçடுத்தரகர்களா?

? பçடுத்தவனும், பçடுப்பினங்களும்!

? பித்அத் ஓர் ஆய்வு!

? ஐயமும்! தெளிவும்!!

புத்தாண்டின் பத்தாம் நாள்

மறுபதிப்பு :

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷீரா என்று கூறப்படுகின்றது. அந்த நாளை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப் பின்னணியை நாம் காண்போம்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷீரா தினத்தில் நோன்பு நேற்று வந்ததைக் கண்டனர். அது பற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவிய போது மூஸா (அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரியிடமிருந்து (ஃபிர்அவ்ன்) அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும் என்று யூதர்கள் காரணம் கூறினர். உங்களை விட மூஸா (அலை) அவர்களுக்கு நான் தான் அதிக உரிமை உள்ளவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி அன்று  நோன்பு வைக்குமாறு உத்தரவிட்டனர் . அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள் :  புகாரி, முஸ்லிம்

இந்த நபிமொழி மூலம் ஆஷீரா தினத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்று தெரிந்தாலும் ஆஷீரா நோன்பு கட்டாயக் கடமை அல்ல. காரணம் நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது ? ரமழான் நோன்பு கடமையாக்கப்படாத நேரத்தில் இந்த நோன்பைக் கடமையாக ஆக்கி இருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் இந்த ஆஷீரா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும் என்று  நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது ஆஷீரா தினத்தில் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டிருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின், விரும்பியவர்கள் இந்த ஆஷீரா தினத்தில் நோன்பு நோற்கட்டும்! விரும்பியவர்கள்கள் விட்டு விடலாம் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்

இதே  கருத்தை  முஆவியா  (ரழி)  அவர்களும்  அறிவிக்கிறார்கள்.  (புகாரி, முஸ்லிம்)

ஆஷீரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர் என்று நபி(ஸல்) அவர்களிடம் சில நபிதோழர்கள் கூறியபோது, அடுத்த ஆண்டு நான்  உயிரோடு  இருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக)ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு இந்த தினத்திற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் வஃபாத்தாகி  விட்டார்கள் .  அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி), நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது

மேற்கூறிய நபிமொழிகள் மூலம் முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளும், பத்தாம் நாளும், நோன்பு நோற்பது ன்னா என்பதை நாம் உணரலாம். இது தான்  ஆஷீரா நாளின் சிறப்பு. நோன்பு வைப்பவர்கள் பிறை 9ம், 10ம் வைக்க வேண்டும்,  பத்திலும்  பதினொன்றிலும்  வைக்க  ஆதாரமில்லை.

வழக்கமாக எல்லாப் பிரச்சனைகளிலும் கட்டுக்கதைகள் நுழைந்தது போலவே இந்த ஆஷீரா நாள் பற்றியும் நிறைய கட்டுக் கதைகள் உலா வருகின்றன.

ஆஷீரா நாளில் ஒருவன் குளித்தால் அந்த ஆண்டு முழுவதும் நோய்வாய்ப் படமாட்டான் என்று கூறப்படுவதும்.

ஆஷீரா தினத்தில் குடும்பத்தினருக்காக, தாராளமாகச் செலவு செய்தால் அந்த ஆண்டு முழுவதும் அவனுக்குச் செல்வம் பெருக்கெடுத்தோடு என்று கூறப்படுவதும்.

நபிமார்கள் வாழ்வில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளும், ஆஷீரா தினத்தில் தான் நடந்தன என்று கூறப்படுவதும் இட்டுக்கட்டப்பட்ட, நிராகரிக்கப்பட வேண்டிய பொய்களாகும். ஸஹீஹான ஹதீஸ்களில் இதற்கு எள்ளளவும் ஆதாரம் இல்லை. ஒரு சில குத்பா கிதாபுகளிலும், கிஸ்ஸாக்களிலும் தான் அவை காணப்படுகின்றன. ஹதீஸ் கலா வல்லுனர்கள் அவைகளை ஏற்கவில்லை.

இதே ஆஷீரா தினத்தில் நபி(ஸல்)  அவர்களின் திருப்பேரர் இமாம் ஹூஸைன் (ரழி) அவர்கள் கொல்லப்பட்டது, இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சோகமான நிகழ்ச்சியாகும். கல் நெஞ்சமும் கரைந்துவிடக் கூடிய அந்த நிகழ்ச்சி இந்த தினத்தில்  தான் ஏற்பட்டது. இஸ்லாமியன் மட்டுமல்ல; மனிதாபிமானம் உள்ள எவரும் இந்த நிகழ்ச்சியைக் கேள்வியுறும் போது கண்கலங்காமல் இருக்க முடியாது .

கர்பலா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களின் போர் இமாம் ஹூஸைன் (ரழி) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கக, நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக்கூறிய ஆஷீரா நாளை சோகமயமாக ஆக்கிக் கொள்ள நமக்கு அனுமதி  கிடையாது. இந்த நாளில் இரண்டு போராட்டங்கள் நடந்தன. ஒன்று ஃபிர் அவ்னுக்கும், மூஸா(அலை) அவர்களுக்கும்  நடந்தது. அதில் மூஸா(அலை) வென்றார்கள். அதே ஆஷீரா நாளில் நடந்த இன்னொரு போராட்டத்தில் இமாம் ஹூஸைன்(ரழி) அவர்கள் ­ஹீதாக்கப்பட்டார்கள்.

ஒரு உண்மையான முஸ்லிம் அந்த நாளில் நடந்த நல்லதை நினைத்துத் தன்னைத் தேற்றித் கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைப்படி அந்த நாளில் நோன்பு நோற்க வேண்டும். கர்பலா நிகழ்ச்சிகூட ஒரு நன்மைதான் என்று கருத வேண்டும். அல்லாஹ்வுக்காகத் தன்னுயிரை அர்ப்பணம் செய்த தியாகிகள், நபிமார்களுக்கு அடுத்த படியாக உயர்ந்த பதவியை அடைவார்கள் என்பது எவரும் அறிந்த உண்மை. தனது நபியின் திருப்பேரருக்கு அந்த மகத்தான அந்தஸ்தை அல்லாஹ் வழங்க நாடி அவர்களை ­ஹீதாக்கி (ரழி) அடைவதற்கு கர்பலா தான் காரணமாக இருந்தது.

இந்த உலக வாழ்வை மட்டும் குறிக்கோளாகக் கொண்டவர்கள், தான் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அழுவு புலம்புவர். மறு உலக வாழ்க்கை உண்டு என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டோர், நாம் மறு உலக வாழ்வில் இமாம் ஹூஸைன் (ரழி) அவர்களை மிக உயர்ந்த அந்தஸ்துடன் சந்திக்க இருக்கறோம் என்று, தம்மைத் தேற்றிக்கொள்வர்.

தங்களுக்கு ஏதேனும் முஸீபத் (சோதனை) ஏற்படும் போது நாங்களும் அல்லாஹ்வுக்கு உரியவர்களே; நாங்கள் அவனிடமே திரும்பச் செல்ல இருக்கிறோம் என்று கூறி பொறுமையை மேற்கொண்டவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன்2:156)என்று அல்லஹ் கூறியதற்கிணங்க நடக்கும் போதுதான் இறைவனின் திருப்பொருத்தத்துக்கு நாம் ஆளாக முடியும்.

அதற்காக, ஒப்பாரி வைப்பதும், மாரடித்துக் கொள்வதும், பஞ்சா எடுப்பதும், தீ மிதிப்பதும், ஊர்வலங்கள் நடத்துவதும் யஸீதையும் மற்றவர்களையும் ஏசுவதும், ஹூஸைன் மவ்லூது ஒதுவதும்  நமக்குத் தேவையில்லாதவற்çப் பேசுவது, ஒரு முறை ஹூஸைன் (ரழி) அவர்கள் கொல்லப்பட்டதை வர்ணனையுடன் பல பொய்களைக் கலந்து சொல்லி ஆண்டு தோறும் அவர்களைக் கொலை செய்வதும், இஸ்லாம் காட்டிய மரபு அல்ல.

கன்னத்தில் அறைந்து கொண்டு சட்டைகளைக் கிழித்துக் கொண்டு அறியாமைக் காலத்துக்கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பவன் நம்மைச் சேர்ந்தவனில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் (ரழி), நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்

உள்ளத்தினாலும், கண்களாலும் சோகத்தை வெளிப்படுத்துவது இறைவன் புறத்திலிருந்து உள்ளதாகும். கைகளாலும் நாவினால் சோகத்தைக் காட்டுவது ஷைத்தானின் வேலையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்கள் :அஹ்மத்

இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்ற பெரும்பாலான நிகழ்ச்சிகள் அறியாமைக் காலத்து நடைமுறைகள் தான். இவற்றைச் செய்வதன் மூலம் நபி(ஸல்) அவர்களைச் சேராதவர்களாக நாம் ஆகிவிடாமல் நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக.

தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளில் முஹர்ரம் மாதம் பத்து நாட்கள் புதுமணத் தம்பதிகளைப் பிரித்து விடுகின்ற கொடுமையும் நடந்து வருகின்றது. அந்தப் பத்து நாட்களில் கரு உருவானால் அந்தக் குழந்தை இரத்தக் காயம்பட்டு சாகும் என்று அதற்குக் காரணம் வேறு கூறிக்கொள்கின்றனர்.

இது அல்லாஹ்வோ, அவனது தூதரோ காட்டித் தராத வி­யமாகும். மேலும் இது மூட நம்பிக்கையைத் தவிர வேறில்லை அல்லாஹ் ஹலாலாக்கிய திருமண உறவைக்கூட சில நாட்கள் ஹராமாக்க எவருக்கும் உரிமை இல்லை. இவ்வாறு செய்வதன் மூலம், அல்லாஹ்வின் அதிகாரத்தில் நேரடியாகத் தலையிட்ட மாபெரும் குற்றத்திற்கு நாம் ஆளாக நேரிடும்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஹூஸைன்(ரழி) அவர்களின் தலை, கை போன்ற வடிவங்கள் கொழுக்கட்டை அவித்து, பாத்திஹா ஓதி வருகின்றனர். அவர்கள்மீது தாங்கள் கொண்ட அன்புக்கு இது ஓர் அடையாளம் என்று எண்ணிக் கொள்கின்றனர். இப்படி எல்லாம் செய்பவர்களைப் பற்றி என்னைச் சேர்ந்தவரில்லை என்று நபி(ஸல்) அவர்கள் மேலே கூறப்பட்டுள்ள ஹதீஸில் எச்சரிக்கை செய்துள்ளனர். இது போன்ற மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்த இஸ்லாத்தில் இது போன்ற செயல்களுக்கு அறவே இடம் இல்லை.

மூஸா நபியை அல்லாஹ் இந்த நாளில்தான் காப்பாற்றினான் என்று எண்ணிக் கொண்டு. அந்தப் பெரும் பாக்கியத்துக்கு நன்றி செலுத்தும் பொருட்டு நபி(ஸல்) அவர்கள் காட்டிய பிரகாரம் ஒன்பது, பத்து ஆகிய இரு நாட்களும் நோன்பு வைத்து ஏனைய சடங்குகளை விட்டொழிப்போமாக! அபூ முஹம்மது

வெற்றிகரமான (?) ஐந்தாவது மாதம் !

தவ்ஹீது மல்வவிகள் வெளியிடும் ஏகத்துவம் அக்டோபர் 2003 இதழில் ஒற்றுமைக்கு வழி என்ன? என்று  தலையங்கம்  எழுதி  இருந்தனர். அதில்

1. ஒவ்வொரு தரப்பினரும் மற்ற தரப்பினர்மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக மக்கள் மத்தியில் அல்லது ஒவ்வொரு  தரப்பும் ஏற்கக்கூடிய  நடுவர்கள்  மத்தியில்  விசாரிக்கப்பட  வேண்டும்.

2.  குற்றம் சுமத்தியவர்கள் தமது குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறினால், பகிரங்கமாக மன்னப்புக் கேட்கவேண்டும். அதற்காக நடுவர்கள் அளிக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஒரு மேடையில் மட்டுமில்லை; ஒரே தலைமையில் கூட ஒன்று பட முடியும்! என்று அறைகூவல் விட்டிருந்தனர். அந்த அறைகூவலை நாம் சுடச்சுட ஏற்று அந்நஜாத் நவம்பர் 2003, தலையங்கத்தில் பகிரங்க விசாரணைக்கு ஒப்புதல் அளித்திருந்தோம். ஆனால் அறை கூவல் விட்டவர்களோ பகிரங்க விசாரணைக்கு முன் வராமல் ஓடி ஒளிகிறார்கள். அவர்கள் பிடரியில் பின்னங்கால் அடிபட ஓடிக்கொண்டிருப்பது வெற்றிகரமான (?) ஐந்தாவது மாதமாகும் இது.

இந்த நிலையில் அவர்களின் பக்தகோடிகள், பகிரங்க விசாரணைக்கு அறைகூவல் விட்டது எமக்கில்லை, வேறு யாருக்கோ அறைகூவல் விட்டார்கள் என்று வெட்கமில்லாமல் கூறித்திரிகிறார்கள்.

அந்த வேறு யாருடனே பகிரங்க விசாரணைக்கு மேடையேறும் துணிச்சல் பெற்றவர்கள் தங்கள் கூற்று உண்மை என்று நம்புகிறவர்கள், அவர்கள் நம்மீது தொடர்ந்து பரப்பி வரும் அவதூறுகளை? குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க பகிரங்க மேடை ஏற துணிச்சல் பெறவில்லை காரணம் தங்கள் கூற்று அப்பட்டமான, கடைந்தெடுத்த பொய்கள் என்பதை அவர்களே அறிந்து கொள்வார்கள் என்பது உள்ளங்கை  நெல்லிக்கனி. அவர்களது தொடர் மெளமே அவர்கள் ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த பொய்யர்கள், கடைந்தெடுத்த  அயோக்கியர்கள் என்பதை அம்பலப்படுத்துகிறது. இதை அவர்களின் பக்த கோடிகள் புரிந்து  கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை இப்போதைக்குச் சொல்லி வைக்கிறோம்.

இஸ்லாத்திற்கெதிரான சதிவலைகள் !

தொடர் ? 3

றீ. சாதிக், சென்னை 1.

மறுமையைப்  பற்றி  இஸ்லாம் :

ஜோசப் ஆப்ரஹாம் என்பவர் (அதாவது முன்னால் மஹ்மூத்) கிறிஸ்தவ சமயத்தை தான் ஏற்றதற்கான காரணங்களைப் பட்டியல் போட்டிருந்தார். அதில் முதலாவதாக அவர் கேட்டிருந்த கடவுள் பற்றிய கேள்விக்கான பதிலை அல்குர்ஆன் ஒளியில் கடந்த டிசம்பர் 2003 இதழில் கண்டோம்.

இவ்விதழில் அவரது இரண்டாவது கேள்வியான மறுமையைப் பற்றி விளக்கமாகக் கண்போம்:

என் சிறு வயதிலேயே கேள்வி கணக்கு மற்றும் மறுமையைப் பற்றி கேள்விகள் கேட்டேன். என் கேள்விகள் அனைவருக்கும் கேலியாகத் தெரிந்தன என்று மேற்படியார் குறிப்பிடுகின்றான். குர்ஆன் திரும்பத் திரும்ப வலியுறுத்தி எண்ணற்ற இடங்களில் கூறும் மறுமையைப் பற்றி, சிறு பிள்ளைத்தனமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு கேலியாகத்தான் தெரியும்?

இதே குர்ஆன் கூறுகிறது : மனிதர்களே மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால் (அறிந்து கொள்ளுங்கள்) நாம் நிச்சயமாக முதலில் உங்களை மண்ணிலிருந்தும், பின்னர் இந்திரியத்திலிருந்தும் பின்பு அலக் கிலிருந்தும் பின்பு உருவாக்கப் பட்டதும் உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம். உங்களுக்கு விளக்குவதற்காகவே இதனை விவரிக்கிறோம். மேலும் நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்வரை கர்ப்பப்பையில் தங்கச் செய்கிறோம். உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படி செய்கிறோம். அன்றியும் (இதனிடையல்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள். (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயதுவரை விட்டு வைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள். இன்னும் நீங்கள் (தரிசாய்க் கிடக்கும்) வறண்ட பூமியைப் பார்க்கிறீர்கள். அதன்மீது நாம் மழை நீரைப் பெய்யச் செய்வோமோயானால் அது  பசுமையாகி வளர்ந்து அழகான பல்வகை புற் பூண்டுகளை முளைப்பிக்கிறது.

இது ஏனெனில் அல்லாஹ் அவனே உண்மையானவன் : (நிலையானவன்) நிச்சயமக அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கின்றான்.  இன்னும் நிச்சயமாக அவன்தான் எல்லாப் பொருட்களின்மீதும் பேராற்றலுள்ளவன் என்பதனால், அவ்வேளை நிச்சயமாக வரும் இதில் சந்தேகம் இல்லை; மண்ணறைகளில் இருப்போரை நிச்சயமாக அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்புவான். ஹஜ் 22:5,6,7

இன்னும் (இறந்து) எலும்புகளாகவும் உக்கிப்போனவையாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களா? என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; (நபியே) நீர் கூறும் நீங்கள் கல்லாகவோ இரும்பாகவோ ஆகுங்கள்; அல்லது மிகப்பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள். (எப்படியாயினும் நீங்கள் நிச்சயம் எழுப்பப்படுவீர்கள்) எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்? என்று அவர்கள் கேட்பார்கள்; உங்களை எவன் முதலில் படைத்தானோ அவன்தான் என்று நீர் கூறும்  பனி இஸ்ராயீல் 17:49, 50, 51

(இறந்து மக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகிறானா? அல்ல அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செம்மையாக்க நாம் ஆற்றலுடையோம். கியாம நாள் எப்பொழுது வரும் என்று ஏளனமாகக் கேட்கிறான். ஆகவே பார்வையும் மழுங்கி, சந்திரன் ஒளியும் மங்கி சூரியனும்  சந்திரனும்  ஒன்று சேர்க்கப்பட்டு விடும் அந்நாளில் எங்கு விரண்டோடுவது என்று மனிதன் கேட்பான்; இல்லை இல்லை தப்ப இடமேயில்லை என்று (அவனிடம் கூறப்படும்). கியாமா 75: 3,4, 6, 7, 8, 9, 10,11

நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டி இருக்கிறது. அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது. நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதங்றகாக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான்.   யூனூஸ்: 10:4

எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன நேர்ந்தது? சிறியவையோ, பெரியவையோ எதையும் வரையறுக்காது விட்டு வைக்கவில்லையே! என்று கூறுVர்கள்.  கஹ்பு 18:49

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் நிழல்களிலும், நீர்ச்சுனைகளிலும் இருப்பார்கள். இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.  முர்ஸலாத் 77:41,42

தோட்டங்களும், திராட்சைப் பழங்களும், ஒரே வயதுள்ள கன்னிகளும், பானம் நிறைந்த கிண்ணங்களும் (இருக்கின்றன) நபா 78:32,33,34

நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது .வரம்பு மீறியவர்களுக்கு தங்குமிடமாக அதில் அவர்கள் பல யுகங்களாக தங்கியிருக்கும் நிலையில் அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்க மாட்டார்கள்; கொதிக்கும், நீரையும் சீழையும் தவிர; அதுதான் அவர்களுக்கு தக்க கூலியாகும்.  நபா78:21,22,23, 24, 25, 26

மறுமையை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தக்கூடிய எண்ணிலடங்கா வசனங்கள் குர்ஆனில் இருந்தும், இந்த கருத்துக் குருடர் அதை ஆராயவில்லை எனும் போது நாம் என்ன செய்வது ? வரும் இதழில் அடுத்த கேள்விக்கான பதிலைக் காண்போம். இன்ஷா அல்லாஹ்

இந்திய ஜன நாயக அரசியல் கட்சிகளின் போக்குகளும் Vவி முஸ்லிம்களின் நிலையும் ஜாஹீர் ஹூசைன் நாச்சிக்குளம்.

சமய சந்தர்ப்பங்கள் நிகழும் போது முஸ்லிம்களை ஒரு கருவேப்பிலையாக பயன்படுத்துவது ஜனநாயக அரசியல் கட்சிகளின் வாடிக்கையாகப் போயிவிட்டது கருவேப்பிலையாக தங்களுக்குத் தாங்களே தயார்படுத்திக் கொள்வது  முஸ்லிம்களின்  வாடிக்கையாகவும்  போய்விட்டது.

உதாரணத்திற்கச் சொல்வதென்றால் தேசிய கட்சியல் ஒன்றாகவும் இந்திய நாட்டை ஆளுகின்ற முஸ்லிம்களின் எதிரிக்கட்சியான பாரதீய ஜனதா கட்சியில் கூட முஸ்லிம்கள் அங்கத்தினர்களாக உள்ளார்கள். இன்னும் போக போக யூறீறீ. Vக்ஷிP. பஜ்ரங்தளம், சிவசேனா போன்ற அமைப்புகளில் கூட முஸலிம்கள் பிற்காலத்தில் அங்கத்தினர்களாக இருப்பார்கள்  என்பதற்கு  ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இன்னும் முஸ்லிம்களை நாங்கள் அரவணைத்துச் செல்கிறோம், நல்லதுகள் செய்கிறோம், பலதிட்டங்கள் பாரி வழங்குகிறோம் என்று பசப்பு வார்த்தைகள் சொல்லி முஸ்லிம்களை நயவஞ்சகமாக ஏமாற்றி தங்கள் கட்சிகளை செல்வச் செழிப்போடு நடத்திக் கொண்டிருக்கிற இந்திய ஜனநாயக தேசிய அரசியல் கட்சிகள், பிறகு மாநில கட்சிகள் எல்லாம் முஸ்லிம்களை மறைமுகமாக நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கும் முஸ்லிம்கள் தாங்களுக்குத் தாங்களே தயார்படுத்திக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட கட்சிகளில் இருக்கும் முஸ்லிம்களும் செல்வச் சீமானாகத்தான் வாழ்கிறார்கள்.

இப்போது நமக்கு தேவை என்னவென்றால் சிறுபான்மை முஸ்லிம்கள் உரிமைகளோடும், கொள்கை கோட்பாடு ஒரு தனி சமுதாய சுதந்திரமாக வாழ முடியவில்லை. இதற்க இந்திய ஜனநாயக அரசியல் கட்சித் தலைவர்களையோ அல்லது இந்திய ஆட்சிக் தலைவர்களோயோ நாம் குறைப்பட்டுக் கொண்டாலும் முஸ்லிம்கள்தான் அதற்கு ஒத்துழைப்புக் கொடுத்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் என்பவர்கள் ஜனநாயக அரசியல் கட்சிகளில் ஐக்கியமாவதற்கு என்ன காரணம் என்பதுதான் இப்போது நாம் மிக மிக முக்கியமாக அலசி ஆராய வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.

முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனி அரசியல் கட்சி இல்லையா? அல்லது முஸ்லிம்களுக்கு என்று அமைப்புகள் இல்லையா? எல்லாம் இருக்கிறது! பிறகு இருக்கின்றவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? இதற்கு நாம் விடை காணனும் என்றால் ஒரு அமைப்பு, ஒரு கட்சியாகத்தான் இருக்க வேண்டும் காரணம் ஒரே இறைவன், ஒரே நபி, ஒரே வேதம் என்பதுபோல எல்லாமே ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் இப்போதுதான் நாம் சிந்திக்க வேண்டிய இடத்தில் இருந்துக் கொண்டிருக்கிறோம்.

ஒன்றே  குலம் ஒருவனே தேவன்; ஒரு கையில் இறைவேதம்; மறு கையில் நபிபோதம் என்ற வாக்கியங்கள் முஸ்லிம்களின் அடிப்படை கொள்கையாகும். முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இந்திய ஜனநாயக அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் வால் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் முஸ்லிம்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகள் ஊதித்தள்ளப்படுகின்றன. முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இருப்பதில்லை என்பதை அடுத்த தலைமுறை இளைஞர்கள் நோக்கும்போது இவர்களும் இஸ்லாமிய கொள்கையின் அப்படையில் அமைப்பை ஏற்படுத்துகிறோம் என்று சொல்லி புதிய புதிய இயக்கங்களை தோற்றுவிக்கிறார்கள் இதனால் எண்ணிக்கையற்ற அமைப்புகள், மன்றங்கள், இயக்கங்கள், லீக்குகள், கழகங்கள், பேரவைகள் எல்லாம் நாளொரு முஸ்லிம்களும், பொழுதொரு இயக்கங்களும் ஆக புற்றீசல் போல உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இஸ்லாம், முஸ்லிம் என்று பெயர் இருந்தாலே அது அல்லலாஹ்வாலும், அவனுடைய தூதராலும் அங்கீகரிக்கப்பட்ட இயக்கமாக இருக்கிறது. பிறகு வேறொரு பெயரை வைத்துக்கொண்டு அமைப்பை ஏற்படுத்தும் போது அதுவே ஒரு இயக்கமாக வளர்கிறது. அது கடைசி வரையிலும் எவ்வளவு நாட்கள் நீடித்தாலும் அது இயக்கம் இயக்கம்தான். அங்கே ஒற்றுமை என்பதற்கு பதிலாக வேற்றுமையில் வளர்கிறார்கள். அவர்கள்  என்னதான் ஒற்றுமையைப் பற்றி பேசினாலும் அவர்களும் ஒரு இயக்கமாகத்தான் இருக்கிறார்கள். இப்படியாகத்தான் எல்லா இயக்கங்களும் வளர்ந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் எல்லா இயக்கங்களும் ஒருமித்து ஒற்றுமையைப் பற்றி

வாய்கிழிய பேசுவதுதான் வாடிக்கையாகப்போய்விட்டது. அதை நாம் ஒரு வேடிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

அந்த இயக்கங்களுக்கோ அல்லது இயக்க  நிர்வாகிகளுக்கோ பலவித நெருக்கடிகள், பிரச்சனைகள், பணம் பற்றாக்குறைகள், காரியங்கள் சாதித்துக் கொள்ளுதல் போன்றவைகள் ஏற்படும் போது ஜனநாயக அரசியல் கட்சிகளுக்கு வால் பிடித்து ஜால்ரா அடிக்கத் தொடங்கி விடுகிறார்கள் . இன்னம் சொல்லப்போனால் தேர்தல் நேரங்களில் அந்த கட்சிகளுக்கும், இந்திய ஜனநாயக அரசியல் கட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிவிடுகிறது. இப்படியாப்பட்ட சமய சந்தர்ப்ப சூழ்நிலை நேரங்களில்தான் இஸ்லாமிய இயக்கத்தில் உள்ள அங்கத்தினர்கள் காசைப் பார்ப்தற்கும், பதவி சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கும், காரியங்களை சாதித்துக் கொள்வதற்கும் அரசியல் கட்சிகளில் தஞ்சம் அடைந்து அங்கத்தினர்களாக ஐக்கியமாகி விடுகிறார்கள். ஆக ஒரு ஜனநாயக அரசியல் கட்சியில் முஸ்லிம் ஐக்கியமாவதற்கு முஸ்லிம் அமைப்புகள்தான் காரண கர்த்தவாக இருக்கிறார்கள். பிறகு இயக்கவாதிகள் அந்த முஸ்லிமை பார்த்து பெயர்தாங்கி முஸ்லிம் என்று விமர்சனம் செய்கிறார்கள். என்னமோ இவர்கள் உண்மையான குர்ஆன் மற்றும் ஹதீஸை பின்பற்றி நடக்கிற இயக்கமாக இருப்பதுபோல்.

நம்மை பொறுத்தமட்டில் இந்திய ஜனநாயக அரசியல் கட்சி ஒன்றில் அங்கத்தினராக  இருப்பதும்,  முஸ்லிம் கட்சிகள் அல்லது இஸ்லாமிய இயக்கங்களில் அங்கத்தினராக இருப்பதும் ஒன்றுதான். காரணம் என்னவென்றால் இதை நாம் புரிந்துக்கொள்கிற பாஷையில் அதாவது பழமொழியில் சொல்வதென்றால் ஒரு குட்டையில் ஊறிய பல மட்டைகள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம் ஜனநாயக அரசியல் கட்சிகள் உண்ணாவிரம் ? உண்ணும் விரதம், பந்த், ஆர்ப்பாட்டம், சாலைமறியல், கடையடைப்பு, வேலை நிறுத்தம் போன்றைவகளைக் கையாளுகிறார்கள். அதே வேலைகளைத்தான் இந்த இஸ்லாமிய, முஸ்லிம் அமைப்புகளும் கையாளுகிறார்கள். ஆக என்ன பொருத்தம்!

முஃமினான முஸ்லிம்கள் இந்திய ஜனநாயக அரசியல் கட்சிகளில் அங்கத்தினராக இருப்பதற்கு தகுதி கிடையாது. காரணம் இன்றைய அரசியல் என்பது ஒரு சாக்கடை என்ற வேதாந்தத்தை உலகமே ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இஸ்லாம் சொல்லக்கூடிய அரசியல் என்பது கமழ்கின்ற சந்தனத்தைப் போன்றது. ஆக ஜனநாயக அரசியல் கட்சிகளை வளர்ப்பதோ அல்லது நிர்வாகிகளை ஆதரிப்பதோ நிச்சயம் அது வன்முறையில்தான் முடியும். அதற்கு உதாரணங்கள் பம்பாய் கலவரம், குஜராத் கலவரம், கோயும்புத்தூர் கலவரம், காஷ்மீர் கலவரம் போன்றவைகளை ஒரு சாம்பிளாக எடுத்துக் கொள்ளலாம்.

எப்போது ஜனநாயக அரசியல் கட்சிளிலிருந்து முற்றிலுமாக முஸ்லிம்கள் விலகிக் கொள்கிறார்களோ ஓரணியில் ஒன்றுபடுகிறார்களோ அப்போதுதான் முஸ்லிம்களில் தன்மானம், தனிமரியாதை, தனி உரிமைகள், தனி கெளரவம், தனி கொள்கை பிடிப்பு தனி சுதந்திரமாக அதாவது முஸ்லிம் முஸ்லிமாக வாழலாம்.

அதே போலத்தான் இஸ்லாமிய எண்ணிக்கையற்ற இயக்கங்கள் எப்போது முற்றிலுமாக  கலைக்கப்படுகின்றனவோ எப்போது முற்றிலுமாக கலைக்கப்படுகின்றனவோ அப்போதுதான் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டித்தந்த ஒன்றுபட்ட இஸ்லாமிய முஸ்லிம் ஜமாஅத் என்ற அரசியல் அமைப்பைத் தோற்று விக்கலாம்!

முஸ்லிம்களே உன்றுபட சிந்திப்பீர்! சுபிட்சமாக  வாழ  இஸ்லாத்தை வளர்ப்பீர்!!

சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்துவது என்பது பகலில் நோன்பு நோற்று, இரவில் நின்று வணங்குவதை விட லோனது.

*****************************************************

மக்களாட்சி

கமாலுத்தீன்,  பெங்களூர்

ஆட்சி, அதிகாரம் இதற்கு ஆசைப்படாதவர்கள் வெகு சொற்பம். ஆட்சி ஒரு அமானிதம் என்பதை அறியாமல், அதிகார போதை தலைக்கேற ஆணவத்தோடு ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும்தான் அதிகம் இங்கே.

பொது சேவை செய்ய போட்டியிட்டு வந்தவர்கள் பொன்னும் பொருளும் சேர்க்க அரசியல், அற்புதமான வழி என்று கண்டு கொண்டார்கள். தொட்டது எல்லாம் ஊழல், கண்ணில் பட்டது எல்லாம் பட்டா போட்டு விடும், பயங்கரமான ஆட்கள்தான் பதவியில் உள்ளார்கள்.

குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசு ஆட்சி கூவத்தை போல் சற்று கூடுதலாகவே நாறுகிறது. நாளுக்கு நாள் நாறிக்கொண்டு போகும் அவலத்தை காணாமல் ஜனநாயகவாதிகள் சந்தோசப்படுகிறார்கள்.

மக்களாட்சி என்ற பெயரில் மக்கள் விரோத ஆட்சி, உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் 140 நாடுகளில் ஜனநாயக கோமாளிக்  கூத்துக்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

வெகு ஜன மக்களின் விருப்பத்தில் விளைந்த ஜனநாயகம் வி­மாகி கொண்டு வருகிறது. மக்களாட்சி மகத்தான சேவை செய்யும் என  நம்பியவர்களுக்கு மகா ஏமாற்றம்.

உண்மையில் இன்று நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சி அல்ல பணநாயக ஆட்சி. ஆட்சியில் இருக்கும் போது தவறான வழிகளில் 10 ஆயிரம் கோடி கொள்ளை அடித்து, அதில் ஐந்து ஆயிரம் கோடியை அடுத்த தேர்தலில் அப்பாவி மக்களிடம்  லஞ்சமாக வாரி இறைத்தால் மீண்டும் ஆட்சியைப் பிடித்து 20 ஆயிரம் கோடி கொள்ளை அடிக்கலாம். எனவே தான் பணநாயக ஆட்சி என்கிறோம்.

இன்று, அரசியல் அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் ஆகிவிட்டதால், யோக்கியர்கள், நல்லவர்கள் அரசியலுக்கு வருவதே இல்லை. முன்னால் தேர்தல் தலைமை அதிகாரி லிண்டோ கூறியது போல் அரசியல் புற்று நோய்க்கிருமிகளால் புழுந்து  நாறுகிறது.

மேலும் இன்றைய ஆட்சி முறையை மக்களாட்சி என்று கூறுவதைவிட குண்டர்களின் ஆட்சி கிரிமினல்களின் ஆட்சி என்று கூறுவதே மிகப் மிகப் பொருத்தம். பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி நடக்கும் ஆட்சி ?  ஜனநாயக ஆட்சி என்று கூறுவதும் சுத்தப் பித்தலாட்டமாகும். வாக்காளர்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் வாக்களிப்பதில்லை. அதிலும் ஒரு தொகுதியில் ஐந்து நபருக்கு மேல் போட்டியிடும் போது, வாக்குகள் பிரிவதால் 15 சதவிகிதம் வாக்கைப் பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். ஆக 100 சதவிகித மக்களில் வெறும் 15 சதவிகித மக்களின் வாக்கைப் பெற்று ஆட்சி மன்றம் நுழைகிறர்களின் ஆட்சியை பெரும்பான்மையினரின் ஆட்சி ? ஜனநாயக ஆட்சி என்று எப்படிக் கூறுகிறார்களோ? ஒருக்கால் சாக்கடை அரசியலில் முங்கிக் குளித்தால் புரியுமோ? என்னவோ?

வரி வாங்கிக் கொள்கிறார்கள்; வசதிகள் செய்து தருவதில்லை. சுதந்திரம் பெற்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களில் கூட சரியான சாலை வசதியில்லை. தூய்மையான குடிநீர் இல்லை. எல்லோருக்கும் கல்வி என்பது இன்னும் எட்டா கனியாகவே உள்ளது.

ஐந்து ஆண்டுக்கு ஒரு  முறை நடைபெறும் தேர்தல் திருவிழாவில் வாக்குறுதிகளை வாரி வழங்குபவர்கள், அடிப்படை வசதிகளை அவசியம் செய்வதாகச் சொல்பவர்கள் வெற்றி பெற்ற பிறகு தொகுதியை மறந்தேபோவார்கள். இதுதான் ஐம்பது வருடமாக நடந்துள்ளது.

மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு பணம் பார்த்தவர்கள் தான் இந்தியா முழுவதும் நிறைந்துள்ளார்கள். பொது மக்கள் சேவையை மறந்து தங்கள் குடும்ப தேவைக்காக முனைப்போடு செயல்படுவதால், அனேக அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இதை தனியாருக்கு தாரைவார்த்து தருவதன் மூலம் நஷ்டத்தை இலாபமாக்க முடியும் என அரசு சொல்கிறது. என்ன காரணம்?

மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் எந்த வேலையை செய்தால் எவ்வளவு கமி­ன் கிடைக்கும்? என பார்க்கும் மனநிலை அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் காணப்படுகிறது.

விளைவு! தவறான கொள்கையால் நாட்டை இட்டுச் செல்கிறார்கள். உலக வங்கியிடம் கடன் வாங்க அஞ்சாத ஊழல் வர்க்கத்தினால் கடன் சுமை ஏறிக் கொண்டே போகிறது. வளர்ச்சிப் பணிகள் எதிர்பார்த்த அளவு நடைபெறாததால், உலக வங்கி நிறைய நிபந்தனைகளை போடுகிறது. அவற்றில் முக்கியமானது, மக்கள் தொகை பெருக்கம் குறைந்தால்தான் வளர்ச்சிப் பணிகள் தன் நிறைவு பெறும் என்பது. இடை விடாத பிரச்சாரத்தால் இவ்வெண்ணம் ஈடேறத்

துவங்கியுள்ளது. அளவான குடும்பம் வளமான வாழ்வு என  தொடங்கியவர்கள், சிறு குடும்பம் சீரான வாழ்வு! ஒன்று பெற்றால் ஒளிமயம் அதிகம் பெற்றால் அல்லல் மயம் என்றவர்கள், நாமே குழந்தை நமக்கேன் குழந்தை என்பதை நோக்கி போக ஆரம்பித்து விட்டார்கள்.

எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்கவும், அடிப்படை வசதிகளும் தன்னிறைவு பெற தடையாக இருப்பது மக்கள் தொகை பெருக்கம்தான் காரணமா? என்பதை புத்தியை கடன் வாங்காமல் சுயமாக சிந்தித்துப் பார்த்தால் உண்மை தெரியும்.

குதிரை, ஒட்டகம் மாடுகளின் மேல் பயணம் செய்த மனிதன் அதிகமான மக்கள் பயணம் செய்ய கட்டை வண்டியை கண்டு பிடித்தான்; மேலும் மக்கள் தொகை பெருக. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகச் செல்ல கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்கள் தான் இன்றைய இரண்டு, மூன்று, நான்கு சக்கர வகனங்கள், பேருந்து, கப்பல், விமானம் இவை எல்லாம் மக்கள் தொகை பெருக்கமே காரணம்.

இத்தகைய மாற்றங்களை விவசாயத்திலும் காணலாம்; விஞ்ஞானத்தின் ஒவ்வொரு வியப்பான கண்டு பிடிப்பும் அறிவியலின் ஒவ்வொரு ஆய்வுக்கும் பின்னால் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக இருப்பதை எப்படி இவர்கள் மறந்து போனார்கள்?

உலக வங்கி போடும் மற்றொரு நிபந்தனை, போலீஸ், ராணுவம் இதை தவிர மற்ற எல்லாவற்றையும் தனியார் மயமாக்கி விட வேண்டும் என்பது. இப்படி செய்வதன் மூலம் எல்லா துறைகளின் வழியாக அரசுக்கு இலாபம் கிடைக்கும். அப்படி கிடைக்கும் இலாபத்தின் மூலம் வட்டியை அடைக்கலாம். முடிந்தால் அசலையும் திருப்பி செலுத்தலாம்.

அப்படி என்றால் அரசின் பணிதான் என்ன? வாங்கிய கடனுக்கு வட்டியை ஒழுங்காக கட்ட வேண்டும் மக்கள் சேவையயல்லாம் செய்யக்கூடாது, இலவசமாக எதையும் செய்யக்கூடாது, எதற்கும் மானியம் வழங்கக் கூடாது, எதை செய்தாலும் அதன் மூலம் அரசுக்கு வருமானம் வரவேண்டும். அப்படி செய்தால் எத்தனை மில்லியன் டாலர் வேண்டுமானாலும் கடன் கிடைக்கும்.

அப்படி கிடைக்கும் கடனை வைத்து சாலைகளை புதுப்பிக்கலாம்; அந்த சாலைகளை பயன்படுத்துவோர் அதற்குரிய தனி வரியை தரவேண்டும். இதே போல் ஒவ்வொரு செயல்பாடும் அமையும்; இவ்வழியை கடைபிடித்த சில நாடுகள் மக்களின் கோபத்திற்கு ஆளாகி கொந்தளித்து புரட்சி வெடித்து உள்ளது.

உண்மையான மக்காளட்சி என்பது இஸ்லாம் கூறும் வழி நடக்கும் ஆட்சி, இறையாட்சி ? அங்கு மக்கள் சேவை மகத்தான சேவையாக இருக்கும். மக்கள் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ள அரசாக இருக்கும் மக்களை நுகர்வோராக மட்டும் கருதாத ஆட்சியாக, அடிப்படை தேவைகளை அவசியம் நிறைவேற்றக்கூடிய ஆட்சியாக, ஊழல் செய்யாத ஆட்சியாக, ஒளிவு மறைவு இல்லாத ஆட்சியாக இருக்கும். அப்படியிருந்து தூய்மையான ஆட்சியை இஸ்லாம் நிகழ்த்தி காட்டவே செய்தது; அந்த மகத்தான ஆட்சி மறுபடியும் வர நல்ல சட்டங்கள் சரியான திட்டங்கள், நேர்மையான ஆட்சியாளர்கள் ? நிம்மதியான உலகத்தை இஸ்லாம் மட்டுமே உருவாக்க முடியும்.

அப்படி ஒரு அற்புதமான ஆட்சிக்கு மக்கள் ஏங்க வேண்டும் என்பதற்காகவோ என்னவோ இங்கு அலங்கோலமான, அதிருப்தியான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தலிலும் கூடிக்கொண்டே வருகிறது. தமிழக சட்ட மன்றத் தேர்தல்களில் 1996ல் 4.25 கோடி வக்காளர்களில் 1.41 கோடி பேரும் 2001ல் 4.74 கோடி வாக்காளர்களில் 1.92 கோடி பேரும் வாக்களிக்கவில்லை. காரணம் அரசியல்வாதிகளின் மீதுள்ள அவநம்பிக்கை. கொள்கை இலட்சியத்தை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டு கோடிகளை சம்பாதிக்க ஆசைப்படும் அரசியல் கட்சிகள் 20 அல்லது 25 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சிபீடம் ஏறும் ஜனநாயக அவலம் இன்று சந்தி சிரிக்கும்படி ஆகி விட்டது.

இந்நிலை மாற இஸ்லாமிய ஆட்சியை பற்றி ஆர்வம் மக்களிடம் ஏற்பட இஸ்லாத்தைப்பற்றி ? அதன் கொள்கை, கோட்பாடுகளைப் பற்றி பிரச்சாரம் செய்வதே சிறந்த வழியாகும்.

இதற்கென்று பெரியமேடையோ, பண பலமோ தேவையில்லை. தனி மனித சந்திப்புகளே போதுமானவை. ஒவ்வொரு முஸ்லிமும் மாதம் ஒரு பத்து மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொன்னாலே போதுமானது. இன்ஷா அல்லாஹ் நல்ல மாற்றம் நாளை ஏற்படும். அதற்கான வழியை வல்ல இறைவன் நமக்கு இலகுவாக்கித் தரட்டும்.

நிச்சயமாக இது நினைவூட்டும் நல்லுபதேசமாகும்; ஆகவே எவர் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவனிடம் (செல்லும் இவ்) வழியை எடுத்துக் கொள்வாராக . அல்குர்ஆன்73:19, 76:29

********************************************

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?

தொடர் : 2

அபூஅப்தில்லாஹ்

புரோகித மவ்லவிகளின் தில்லுமுல்லுகள்

எல்லாம் வல்ல ஏகன் இறைவன் மனிதனைப்படைத்து அவனுக்கென்று ஒரு வாழ்க்கை நெறியைக் கொடுத்துள்ளான். அந்த ஒரே வாழ்க்கை நெறியை மனித வர்க்கத்திற்கு  நடைமுறையில் செயல்படுத்திக் காட்ட இறைத்தூதர்களை  காலத்திற்குக் காலம் அனுப்பி வைத்தான்.  அவர்களுக்கு நேர்வழியைக் காட்டும் வேதங்களையும் அருளினான். இறுதி வேதமான அல்குர்ஆனை அவனது இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளி அதைத் தெளிவு படுத்தும் பொறுப்பை தானே ஏற்றுக்கொண்டதோடு (பார்க்க அல்குர்ஆன் 75:19) நடைமுறையில் விளக்கிக் காட்டும் பொறுப்பை தனது கண்காணிப்பில் (பார்க்க அல்குர்ஆன்52:48) நபி(ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தான் (பார்க்க 16:44) அல்லாஹ்வினதும் அவனது இறுதித்தூதரினதும் விளக்கத்திற்கு மாறாக வேறு விளக்கம் சொல்லுவது பகிரங்க வழிகேடு; அது ஆணாயினும் சரி; பெண்ணாயினும் சரி என்று கடுமையாக எச்சரித்துள்ளான் (பார்க்க33:36) இவ்வளவு கடுமையான எச்சரிக்கைகளையும் மீறி அல்குர்ஆனுக்கு விளக்கம் கூறும் பேர்வழிகள் என்று கிளம்பும் புரோகித மவ்லவிகள் உண்மையில் விளக்கம் கூறுபவர்களாக இல்லை; மாறாக அல்லாஹ்வின் தெள்ளத் தெளிவான விளக்கத்தை மறைப்பவர்கள்; உண்மையைத் திரிப்பவர்கள், வளைப்பவர்கள். அவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான்; மலக்குகளும் சபிக்கிறார்கள்; சபிப்பதற்கு உரிமையுடைய மனிதர்களும் சபிக்கிறார்கள்; அவர்களும் மீளா நரகமே அதிலிருந்து விடுதலையோ மீட்சியோ இல்லை என்றும் மிகக்கடுமையாக எச்சரித்துள்ளான் அல்லாஹ் (பார்க்க அல்குர் ஆன் 2:159-162)

இந்த மவ்லவிகளின் கல் நெஞ்சம் எந்த அளவு கொடூரமாக இருக்கிறதென்றால். ஏகன் இறைவனின் இத்தனைக் கடுமையான எச்சரிக்கைகளையும் மீறி? துச்சமாக மதித்து ? புறக்கணித்து விட்டு, அல்குர்ஆன் வசனங்களுக்கு சுய விளக்கங்கள் கொடுத்து, தாங்களும் வழிகெட்டு மக்களையும் வழி கெடுக்கிறார்கள் என்ற விபரங்களை பிப்ரவரி 2004 இதழில் பார்த்தோம்.

இந்த இதழில் வழிகேடுகளில் மிகப் பெரிய வழிகேடான கபுரு சடங்குகளை ? சமாதி வழிபாடுகளை அல்குர்ஆன் வசனங்களை திரித்து வளைத்து மறைத்து நியாயப்படுத்தும் முகல்லிது மவ்லவிகளின் தில்லு முல்லுகளை? தகிடு தத்தங்களை விரிவாகப் பார்ப்போம்.

´ர்க் இணைவைத்தலின் ஆரம்பம்

ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து நபி நூஹ் (அலை) அவர்களுக்கு முன்னர் வரை ஆதத்தின் சந்ததிகளான மனிதவர்க்கத்தினர் கொலை, கொள்ளை, மது, மாது, சூது, திருட்டு போன்ற பஞ்சமா ? பாவங்கள் செய்கிறவர்களாக இருந்தாலும், இறைவனுக்கு அவனால் படைக்கப்பட்ட மனிதர்களையோ, மற்ற படைப்பினங்களையோ இணையாக்கும் அதாவது ´ர்க் வைக்கும் இறைவானால் மன்னிக்கப்படாத மிகக்கொடிய  பாவத்தை ? மிகப் பெரும் அநியாயத்தை மனிதரில் யாருமே செய்யவில்லை. ஆயினும் மேலே கூறப்பட்ட பஞ்சமா? பாவங்களை செய்தாலும் அவை பாவங்கள் என்ற உள்ள உறுத்தலோடு செய்து வந்ததால். பின்னர் அவை பற்றி மனம் கேட்டு மீளும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். ஆனால் ஆதத்தின் சந்ததிகளை வழி கெடுத்து நரகில் கொண்டு தள்ளுவேன் என்று  சபதம் ஏற்றிருக்கும் ஷைத்தானுக்கு இது பெரும் ஏமாற்றமாகவே இருந்து வந்தது.

பெரும் முயற்சிகள் செய்து, மனிதர்களை அவர்களின் இச்சைக்கு அடிமைப்படுத்தி, இந்த பஞ்சமா ? பாவங்களை செய்ய வைத்தாலும், இறுதியில் அவர்கள் மனம் வருத்தி இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டு மீண்டு விடுகிறார்கள். எனவே ஷைத்தான் தனது சபதத்தை நிறைவேற்ற பெரும் தடை ஏற்படும் விடுவதாக மிக மிக வருந்திக் கொண்டிருந்தான். இந்த நிலையில் அவனது அபார அறிவில் பொறிதட்டிய பாவச் செயலே ? இறைவனால் மன்னிக்கப்படாத செயலே ? இறைவனால் படைக்கப்பட்ட மனிதனையும் மற்றும் படைப்பினங்களையும் இறைவனுக்கு இணை வைக்கும் கொடூரச் செயல். அதுவும் மனிதர்கள் மிகப்பெரிய பாவமான இந்த இணை வைக்கும் செயலை ? வழிகேட்டை மிகப் புண்ணியமான செயல் ? வழிபாடு என்று நம்பி செய்ய வைக்கும் நயவஞ்சகத் திட்டமாகும். இதனை அல்குர்ஆன் 18:102, 103, 104, 105, 106 வசனங்களில் அல்லாஹ் தெள்ளத் தெளிவாகக் கூறி எச்சரித்துள்ளான்.

மனிதர்களில் நல்லவர்களுக்கு மரியாதை செய்கிறோம், நன்றி செலுத்துகிறோம் என்ற பெயரில் இறந்து போனவர்களுடைய கபுருகளில் ? சமாதிகளில் சில ஞாபகார்த்த சடங்குகளைச் செய்ய வைத்தான் ஷைத்தான் முதலில் ஆக ஏகன் இறைவனுக்கு இணைவைக்கும் மிகக் கொடிய மாபாதகச் செயலின் ஆரம்பம் கபுரு?சமாதிச் சடங்களேயாகும். அதன் பரிணாம வளர்ச்சியே புத்?விக்ரஹ?சிலை வணக்கமாகும். இந்த உண்மையை இன்று அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிகளுக்குப் போய் பார்ப்பவர்கள் நிதர்சனமாகத் தங்களின் கண்களாலேயே பார்த்து உணர முடியும். நல்லதைச் செய்கிறோம் ? வழிபாடு செய்கிறோம் என்ற மூட நம்பிக்கையில் கபுரு?சமாதி சடங்குகளையும், சிலை வணக்கத்தையும் பக்தியின் பெயரால் மக்களை செய்ய வைத்தான் ஷைத்தான்.

உண்டியல் வருமானம்

இப்படிப்பட்ட சடங்கு சம்பிரதாயங்களைக் கொண்டு உண்டியல் வருமானம் வர வாய்ப்பு ஏற்பட்டதால், புரோகிதர்களும் தங்களின் ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டு, ஷைத்தானின் நேரடி ஏஜண்டாகச் செயல்பட ஆர்வமுடன் முன் வந்தனர். ஷைத்தான் தன்னுடைய முயற்சியில் பெரும் வெற்றி கொண்டான். மனித வர்க்கத்தில் பெருங்கொண்ட கூட்டத்தை நரகில் கொண்டு போய் தள்ள வழிகண்டான். மனிதர்களும் பக்தியின் பெயரால் ? புண்ணியம் என்ற நினைப்பில் இணை வைக்கும் இம்மாபாதகச் செயலில் ஈடுபட்டதால், தங்களின் தவறை உணர்ந்து தங்களைப் படைத்த இறைவனிடம் பாவ மன்னிப்புக் கேட்கும் வாய்ப்பை இழந்தனர். அழிந்து நாசமாயினர் ? நாசமாகி வருகின்றனர்.

இந்த இணை வைக்கும் செயல் நபி நூஹ் (அலை)அவர்களின் வருகைக்கு முன்னரே கற்பனை செய்யப்பட்டு, அவர்கள் நபியாக வந்து போது கொடி கட்டிப்பறந்தது. இந்த விபரங்களை 10:71, 11:25,26,27, 71:1-10, 21-25 போன்ற அல்குர்ஆன் வசனங்களை படித்து விளங்குகிறவர்கள் உணர முடியும். அந்தச் சமுதாயம் தங்களுக்கு முன்னர் இவ்வுலகில் வாழ்ந்து, சிறந்து மடிந்த நல்லோர்களையே முதலில் சமாதி வழிபாட்டின் மூலமும், பின்னர் சிலை வழிபாட்டின் மூலமும் ஏகன் இறைவனை நெருங்கச் செய்பவர்களாகவும், தங்களுக்காக இறைவனிடம் பரிந்துரை செய்பவர்களாகவும் மூடத்தனமாக நம்பி வழிபட்டு வந்தனர். அந்த நல்லடியார்களின் பெயர்களையும் ஏகன் இறைவன் தனது இறுதி வேதத்தில் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.

உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள்; இன்னும் வத்து, வாஉ, யகூ , யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக  நீங்கள் விட்டு, விடாதீர்கள் என்று (புரோகிதர்கள்) சொல்கின்றனர். அல்குர்ஆன்71:23

அன்று ஆரம்பித்தது இன்று வரை தொடர்கிறது

அன்று ஆரம்பித்த ஏகன் இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய பாவச் செயல், அன்றிலிருந்து இன்று  வரை ஆதத்தின் சந்ததிகளைப் பிடித்து ஆட்டுகின்றது. பஞ்சமா ? பாவங்களை செய்ய வைத்துத் தோற்றுப் போன ஷைத்தான், இறைவனுக்கு மனிதனையும், படைப்பினங்களையும் இணை வைக்கச் செய்து மனித வர்க்கத்தை நரகில் கொண்டு தள்ள நிரப்பும் தனது தந்திரம், தான் நினைத்ததை விட வெற்றியடைந்துள்ளதைக் கண்டு பூரிப்படைதந்து கைகொட்டிச் சரித்து மகிழ்கிறான் இறைவனது நல்லடியார்கள் என்று நம்பி, இறந்து போனவர்களை, சமாதிகளாவும், சிலைகளாவும் வடித்து தங்களுக்காக இறைவனிடம் பரிந்துரைப்பவர்களாகவும் இறைவனை நெருங்கச் செய்பவர்களாகவும் நம்பி வழிபட்டு வருகின்றனர். (பார்க்க 10:18, 39:3) இன்னும் சில புரோகிதர்கள் அதற்கும் ஒருபடி மேலே போய் இறந்து போன அவர்களிடம் நேரடியாகவே கேட்கலாம். அவர்கள் கேட்பவற்றைக் கொடுக்கும் வல்லமை பெற்றவர்கள் என்று பொய்யாகக்  கூறி மக்களை வஞ்சித்து வருகின்றனர்.

கொடுமைகளிலெல்லாம் பெருங்கொடுமை!

கொடுமைகளிலெல்லாம் பெருங்கொடுமை என்னவென்றால், தெள்ளத் தெளிவான அல்குர்ஆனின் போதனைப்படிதான் நடக்கிறோம் என்று மார்தட்டும் முஸ்லிம்களிடமும் ஏகன் இறைவனுக்கு, அவனது அடியார்களை இணையாக்கும் கொடூரமான பாவச் செயலை இந்தப் புரோகித வர்க்கம் கொண்டு வந்து நுழைத்திருப்பதுதான். முஸ்லிம்களில் மிகப் பெருங் கொண்டவர்கள் இந்த வழிகேட்டில் மூழ்கித் திளைக்கின்றனர். அழிந்து நாசமாகின்றனர். நரகில் போய் விழுகின்றனர்.

பாமரனும் குர்ஆனை விளங்க முடியும்!

இப்போது இறைவனுக்கு இணைவைக்கும் இம்மாபெரும் வழிகேடு எவ்வளவு பெரிய கொடூரமான பாவம் ? இறைவனால் மன்னிக்கப்படாத குற்றம் என்பதை விவரிக்கும் அல்குர்ஆன் வசனங்களை வரிசையாகத் தருகிறோம். படித்துப் பார்த்து சிந்தித்து உண்மையை உணர வேண்டுகிறோம். 4:48, 116, 5:72, 7:33, 9:31, 10:18, 18:102-106, 22:31, 33:66, 67, 68, 39:3, 40:12, 42:21 இன்னும் இவை போல் எண்ணற்ற வசனங்களில் இறைவனுக்கு இணை

வைக்கும் மாபாதகச் செயல் பற்றி ? மன்னிக்கப்படாத பாலம் பற்றி உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்குகின்றன. இவற்றை மூன்றாம் வகுப்பு வரை படித்த, தமிழைத் திக்கித்திக்கிப் படிக்கும் ஆணாயினும், பெண்ணாயினும் விளங்க முடியும். அல்லது எழுதப்படிக்கத் தெரியாத கை நாட்டுப் பேர் வழியாக இருந்தாலும் பிறர் அவற்றைப் படிப்பதைக்காதால் கேட்ட மாத்திரத்தில் இறைவன் கூறுவதை தெளிவாக விளங்க முடியும் ? புரிய முடியும்.

ஆனால், அதற்கு மாறாக இன்று என்ன நடக்கிறது? பாமரர்களுக்கு குர்ஆன் விளங்காது என்ற மூட நம்பிக்கையை இந்தப் புரோகிதர்கள், மக்கள் உள்ளங்களில் புரையோடச் செய்திருப்பதால், அவர்கள் அறிவிழந்து, இந்தப் புரோகிதர்கள் இந்த தெளிவான, நேரடியான வசனங்களைத் திரித்து, வளைத்து, மறைத்துக் கொடுக்கும் கோணல் விளக்கங்களை அப்படியே கண்மூடி ஏற்று வழிகெட்டுச் செல்கின்றனர். இதையும் ஏகன் இறைவன் 2:41, 79, 174, 3:78,187,188, 4:44,46, 9:9,10,34, 11:18,19, 31:6 இன்னும் இவை போல் பல வசனங்களில் தெள்ளத் தெளிவாகக்  கூறுகிறான்.

குறிப்பான ஒரே பொருளைத்தரும் வசனங்கள்

இந்த வசனங்கள் அனைத்தும் தெள்ளத் தெளிவான குறிப்பான ஒரே பொருளை மட்டுமே தரும் முஹ்க்கமாத் வசனங்களாகும். இவற்றிற்கு வேறு பொருள்கள் கொள்வது ? விளக்கம், வியாக்யானம் ? தஃப்ஸீர் என்ற பெயரால் இந்தப் புரோகிதர்கள் கற்பனைக் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவது, அப்பட்டமான வழிகேடாகும்; நரகத்தில் கொண்டு சேர்க்கும். இதையே அல்குர்ஆன் 2:159-162 வசனங்கள் ஐயம் திரிபற ?சந்தேகத்திற்கு இடமின்றி பறை சாற்றுகின்றன.

அல்குர்ஆன் கூறும் தெள்ளத் தெளிவான விளக்கங்களை மறைத்து மக்களை வழிகெடுக்க இந்தப் புரோகிதர்கள் கையாளும் தந்திரங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலில் இந்த வசனங்கள் காஃபிர்களுக்கு நிராகரிப்பவர்களுக்கு இறங்கியது. முஸ்லிம்களாகிய நம்மைக் கட்டுப்படுத்தாது என்று அப்பட்டமான பொய்யைக் கூறி அப்பாவி முஸ்லிம்களை வழி கெடுக்கிறார்கள். காஃபிர்கள் பிறப்பிலேயே காஃபிர்களாகப் பிறப்பது போலும், அதற்கு மாறாக முஸ்லிம்கள் மட்டும் பிறப்பிலேயே முஸ்லிம்களாக பிறப்பது போலும் கதையளந்து மக்களை மடையர்களாக ஆக்குகிறார்கள். உண்மை நிலை என்ன? எந்தக் குழந்தையும் பிறக்கும் போது பாவத்தைச் சுமந்து கொண்டோ, நிராகரிக்கும் நிலையிலோ பிறப்பதில்லை. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயற்கை மார்க்கமான இஸ்லாத்திலேயே பிறக்கின்றன என்பது நபி(ஸல்) அவர்களின் தெளிவான போதனையாகும். பின்னர் அக்குழந்தை வளர்ந்து விபரம் அறிந்த பின் அதன் செயல்பாட்டை வைத்தே அது முஸ்லிமாகவோ, காஃபிராகவோ ஆகின்றது. இறைவனின் இறுதி வேதத்தின் நேரடிக் கட்டளைகளையும். இறுதி நபியின் வழகாட்டலையும் அப்படியே ஏற்று  நடப்பவர்கள் முஸ்லிம்கள். மறைத்து, திரித்து, வளைத்து, நிராகரித்து நடபவர்கள் காஃபிர்கள். மற்றபடி முஸ்லிம் குடும்பத்தில் பிறப்பதால் மட்டும் முஸ்லிமாக இருக்கப் போவதுமில்லை; காஃபிர் குடும்பத்தில் பிறப்பதால் காஃபிராக ஆவதுமில்லை. முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் முஸ்லிமாகவே இருந்தார்கள்; அவர்களின் சந்ததியில் வந்தவர்களே இறைக்கட்டளைகளைப் புறக்கணித்து காஃபிரானார்கள். (பார்க்க அல்குர்ஆன்  2:38,39)

சபிக்கப்பட வேண்டியவர்கள் புரோகிதர்கள்!

இறைவனது இறுதி வேதத்தில் தவறானவை ? வழிகேடு எனக்கூறப்பட்டவை அனைத்தும் ஆதத்தின் சந்ததிகள் அனைவரையும் கட்டுப்படுத்தும். இந்தச்  சுய நல புரோகிதர்கள் கூறுவது போல், முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தாது, காஃபிர்களை மட்டுமே கட்டுப்படுத்தும் என்பது அப்பட்டமான பொய்க்கூற்றாகும். பெரும் பித்தலாட்டமாகும். முஸ்லிம்களை மயக்கி வழிகெடுக்கும் பெரும் அயோக்கியத்தனமாகும். அல்குர்ஆனின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் கடமை?கட்டாயம் அல்குர்ஆனை இறைவனின் இறுதி வேதம் என ஒப்புக் கொண்டுள்ள முஸ்லிம்களுக்கே மிகமிக அதிகமாக இருக்கிறது. அதற்கு மாறாக இறைவனின் இறுதி வேதமான அல்குர்ஆனிலுள்ள வசனங்கள் அதை வேதமாக ஏற்றுள்ள முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தாது; காஃபிர்களுக்காக இறக்கப்பட்டவை என இந்தப் புரோகித முல்லாக்கள் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி வழி கெடுப்பது அப்பட்டமான அயோக்கியத்தனம் அல்லாமல் வேறு என்னவாம்? இப்படிப்பட்ட புரோகிதர்களை இறைவன் 2:161 கூறியிருப்பது போல் சபித்தாலும் குற்றமில்லை. அதற்கு மாறாக நாம் அவர்களை மிகக் கடுமையாகச் சாடி, தோலுரித்துக்காட்டி அனைத்து முஸ்லிம்களையும் அவர்களின் உடும்புப்பிடிலிருந்து விடுவிக்கவே பாடுபடுகிறோம்.

அனைத்தையும் அறிந்த இறைவனிடமே பரிந்துரையா?

அடுத்து இன்னொரு தந்திரத்தைக் கையாண்டு அப்பாவி முஸ்லிம்களை வழி கெடுத்து நரகில் கொண்டு தள்ளுவார்கள். அல்லாஹ்விடம் சிபாரிசு செய்பவைகளாக, பரிந்துரைப்பவைகளாக, நெருங்கச் செய்பவைகளாக

புத்களை ? சிலைகளை வணங்குவதுதான் இணைவைக்கும் குற்றம். இறந்து போன அவுலியாக்களை இக்காரியங்களுக்காக அணுகுவது ? சடங்குகள் செய்வது இணை வைப்பது ஆகாது எனக்கூறி அப்பாவி மக்களை வழி கெடுப்பார்கள். இப்படி மக்களை வழி கெடுப்பதற்காகவே மின்தூனில்லாஹ் என்று அல்குர்ஆனில் இடம் பெறும் இடங்களிலெல்லாம் அல்லாஹ் அல்லாதவர்கள் என்று சரியாக மொழி பெயர்க்காமல் அல்லாஹ் அல்லாதவைகள் என சிலைகளைக் குறிப்பது போல் திரித்து வளைத்து மொழி பெயர்த்து அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி வழி கெடுப்பார்கள். இப்படி ஏமாற்றி, சிலை வணக்கம்தான் கூடாது ? இணை வைக்கும் குற்றம். மற்றபடி கபுரு வணக்கம் ? சமாதி வணக்கம் கூடும் ? இபாதத் ? வழிபாடு என்று திரித்துக் கூறி வழிகேட்டை வழிபாடுபோல் கற்பனை செய்து, தங்களின் உண்டியல் வருமானத்திற்கு வழி வகுப்பார்கள். ஃபாத்திஹா, மெளலூது, கந்தூரி, கூடு கொடி, கவாலி, பாட்டுக்கச்சேரி என ஜாம் ஜாம் என நடத்தி வருமானத்தைப் பெருக்கிக் கொள்வார்கள்; அப்பாவி முஸ்லிம்களை நரகில் தள்ளுவார்கள்.

மக்களை மயக்கி ஏமாற்றும் மவ்லவிகள்

அல்குர் ஆனின் பல வசனங்கள் தெள்ளத் தெளிவாக நேரடியாக அல்லாஹ்வின் அடியார்களை (சிலைகளை அல்ல) பரிந்துரைப்பவர்களாக சிபாரிசு செய்பவர்களாக அல்லாஹ்வை நெருங்கச் செய்பவர்களாக நம்பி சடங்குகள் செய்வதைத்தான் வணங்குவதாகக் கூறுகின்றன. என்பதை மக்களிடமிருந்து மறைந்து விடுவார்கள். (பார்க்க 10:18, 18:102-106, 39:3)

நாங்கள் அவுலியாக்களை?அல்லாஹ்வின் அடியார்களை வணங்கவா சொல்கிறோம். அந்த நல்லடியார்களிடம் அல்லாஹ்விடம் எங்களுக்காக சிபாரிசு செய்யுங்கள் என்று கேட்கத்தானே சொல்லுகிறோம். அவுலியாக்களின்?நல்லடியார்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்கத்தானே சொல்லுகிறோம் என்று கூறி அப்பாவி முஸ்லிம்களை மயக்கி ஏமாற்றுவார்கள். வைத்தியரிடம் சென்று நோய்க்காக வைத்தியம் செய்வதில்லையா? வக்கீலிடம் சென்று வழக்கை நடத்தும்படி கேட்பதில்லையா? முதன் மந்திரியிடமோ, மந்திரியிடமோ னிளீ,னிஸிபு, னி,P., க்களைக் கொண்டு சிபாரிசு செய்யச் சொல்வதில்லையா? இதுவெல்லாம் ´ர்க்கா ? இறைவனுக்கு இணை வைப்பதாகுமா? என்று வாய்ஜாலங்களைக் கூறி முஸ்லிம்களை மயக்கி அவுலியாக்களைக் கொண்டு அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வதை நியாகப்படுத்துவார்கள்.

தஆவுன், இஸ்திஆனத் வேறுபாடு!

உயிரோடுள்ள மனிதர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் காரணகாரியங்களுடன் செய்து கொள்ளும் உதவி தஆவுன் . இதை  அல்லாஹ் ஆகுமாக்கி இருக்கிறான். அல்லாஹ்விடம் மட்டுமே  கேட்கும் உதவி இஸ்திஆனத் இது பரஸ்பர உதவி இல்லை. ஒரு தரப்பு உதவி தேடுதல் ஆகும். இந்த இஸ்திஆனத் என்ற ஒரு தரப்பு உதவியை அல்லஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும் இந்த உதவியை அல்லாஹ் அல்லாத யாரிடமும், அவர்கள் உயிரோடு இருந்தாலும், இறந்து விட்டாலும் கேட்கக் கூடாது. அதுவே இணை வைக்கும் பெருங்குற்றம் என்பதைப் பல அல்குர்ஆன் வசனங்கள் உணர்த்துகின்றன. (பார்க்க 10:18, 18:102-106, 39:3)மிக மிக நெருக்கமாக. நம்பிக்கைக்குரியவனாக, உதவி செய்பவனாக அல்லாஹ்வைத்தவிர வேறு எந்த அவுலியாவும் வர முடியாது என்பதையும் பல குர்ஆன் வசனங்கள்  உணர்த்துகின்றன. (பார்க்க 2:186, 11:61, 34:50, 50:16, 56:85)

மனித உதாரணங்கள் இறைவனுக்கு பொருந்துமா?

இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் பற்றிய எந்த உதாரணமும் அல்லாஹ்வுக்குப் பொருந்தாது என்ற அல்லாஹ்வின் கடுமையான எச்சரிக்கைகளைப் புறக்கணித்து விட்டு முதன் மந்திரி, மந்திரி உதாரணங்களைக் கூறி இறந்து போன அல்லாஹ்வின் அடியார்களிடம் உதவி தேடுவதை நியாயப்படுத்தும் இந்தப் புரோகிதர்கள் எந்த அளவு கல் நெஞ்சம் உடையவர்களாக இருப்பார்கள் என்பதை சிந்திப்பவர்களே விளங்க முடியும்.

மனிதர்களைப் பொறுத்த மட்டிலும் முதன் மந்திரியாக இருந்தாலும், மந்திரியாக இருந்தாலும் சிபாரிசு செய்யப்படுபவரைப்பற்றி அ, ஆ கூட தெரியாத நிலையில் இருப்பார்கள். னிளீ, னிஸிபு, னிP., அறிமுகப்படுத்திய பின்னர் அறிந்து கொள்ளும் பரிதாப நிலையிலேயே இருப்பார்கள். எனவே னிளீ, னிஸிபு, னிP., சிபாசிசை ஏற்று, அல்லது லஞ்சத்தைப் பெற்ற விரும்பும் காரியத்தைச் செய்து கொடுக்கலாம். மந்திரிகளுக்கு, முதன் மந்திரிகளுக்கு பெண்டாட்டி, வைப்பாட்டி போன்றவர்களின் தயவு கட்டாயம் தேவைப்படும்.  அதனால் அவர்களுக்காக சில காரிங்களைச்  செய்து கொடுக்கவும் கூடும். இந்த அறிவற்ற நிலையை தேவையுடைய நிலையை அல்லாஹ்வுடன் ஒப்பிட்டுக் கூறும் இந்த தர்ஹா புரோகித மவ்லவிகள் எந்த அளவு மரமண்டைகளாக இருப்பார்கள்? அல்லது அறிந்த நிலையில் அப்பாவி முஸ்லிம்களை நரகில் தள்ளி உண்டியல் ஆதாரயம் தேடும் கல்நெஞ்சர்களாக இருப்பார்கள் என்பதைச் சிறிது சிந்தித்துப் பாருங்கள்! உணர்வீர்கள்.

அல்லாஹ் அறிவிலக்குறைந்தவனா !

சிபாரிசு செய்யப்படுபவரைப்பற்றி சிபாரிசு செய்யும் அவுலியா அறிந்திருப்பதை விட (இறந்து போன அவர்கள் எதையுமே அறிய முடியாது. ஒரு வாதத்திற்காக அறிவதாக ஒப்புக் கொண்டாலும்) அல்லாஹ் மிக மிக அறிந்தவனாக இருக்கிறான். இந்த நிலையில் இந்த சிபாரிசில் பொருள் இருக்க முடியுமா? அப்படியானால் இப்படி உதாணங்கள் கூறி மக்களை ஏமாற்றுகிறவர்கள்மீது இரக்கம் காட்ட முடியுமா? அல்குர்ஆன் 2:159-162 வசனங்கள் கூறுவது போல் அல்லாஹ்,  மலக்குகள்,  மனிதர்கள் அனைவரது சாபத்தைப் பெற்று  ஷைத்தானுடன் நரகம் புகுபவர்களா இல்லையா?

புரோகிதர்களின் கற்பனை தர்ஹாக்கள்

இன்னும் பெரிய வேதனைக்குரிய கண்டிக்கத்தக்க வி­யம் இந்த தர்கா புரோகித மவ்லவிகள், உண்மையான அவுலியாக்களுக்காக ? நல்லடியார்களுக்காக தர்ஹாக்கள் கட்டி மக்களை ஏமாற்றிவில்லை. மடாகுடிகாரன், கஞ்சா மஸ்தான், ஸ்திரீலோலன், பைத்தியம், பீங்காட்டப்பா, சட்டி மஸ்தான் போன்ற கேடுகெட்ட மனிதர்களை மட்டுமல்ல, கழுதை, குதிரை, யானை,  நாய், பூனை போன்ற மிருங்களையும், மிதியடி, கட்டை போன்வற்றையும் புதைத்து வைத்துக் கொண்டு, தர்காக்கள் கட்டி அங்கெல்லாம் உண்டியல் வைத்து, மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்கள் எப்படிப்பட்ட கல் நெஞ்சர்களாக,  கொடுமையாளர்களாக  இருப்பார்கள்  என்பதை  சிறிது  சிந்தித்துப்  பாருங்கள்.

இன்று தமிழகத்தில் காணப்படும் பெரும்பாலான தர்காக்கள் ஒரு குடிகாரனின், ஒரு கஞ்சா மஸ்தானின் கனவில், பச்சைத் தலைப்பாவுடன் ஒரு தாடி வைத்த பெரியவர் (?) வந்து இங்கு நான் அடக்கமாகி இருக்கிறேன். எனக்காக இங்கு ஒரு தர்ஹா கட்டுங்கள் என்று சொன்னதாகத்தான் இருக்கும். மற்றபடி அங்கு உண்மையிலேயே ஒரு சாதாரண நடுத்தர மனிதர் கூட வாழ்ந்து இறந்து அடக்கப்பட்டதாக எவ்வித ஆதாரமும் இருக்காது.

இதை நாம் மிகைப்படுத்திக் கூறவில்லை. இந்த எமது கூற்றை மறுக்கும் சமாதி வழிபாடு புரோகித மவ்லவிகள் இருந்தால், அவர்கள் எல்லா தர்ஹாக்களுக்கும் வேண்டாம். ஒரு சில தர்ஹாக்களுக்காவது இவர்கள் எழுதி வைத்துள்ள கட்டுக்கதைகள் இல்லாமல் ஆதாரபூர்வமான சரித்திரத்தையோ, வரலாறையோ கொண்டு வந்து நிரூபித்துக் காட்டட்டுமே பார்க்கலாம்.

சமாதி வழிபாட்டு புரோகித மவ்லவிகளின் தில்லு முல்லுகள், பித்தலாட்டங்கள் இன்றும் ஏராளம் இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்துப்  பார்ப்போம்.

*************************************************************************

இஸ்லாமிய இறையியல்

படைத்தவனும், படைப்பினங்களும்

முஹிப்புல்  இஸ்லாம்

அல்லாஹ்வின் அடிமை என்று பிரகடனப்படுத்திய இறுதி இறைத்தூதர் !

முரண்படும்  மனித  நிலை

படைத்த  ஏக இறைவனாகிய அல்லாஹ்விற்கு மட்டுமே மனித சமுதாயம் முழுமையும் அடிமையாகி வாழ வேண்டும். மனிதர்கள் மற்ற படைப்பினங்களுக்கும், மனிதர்கள் கற்பித்தவைகளுக்கும் அடிமைகளாகுதல் ? இறைக்கிணையாக்கும் மாபாதகம் (4:36) என்று படைப்பினங்கள் அனைத்தின் ஒரே எஜமானனாகிய வல்ல அல்லாஹ் தெளிவு படுத்தியுள்ளான். மனிதர்கள்  இதற்கு முரண்படுவதால் ? இறைக்கட்டளைகளைத் தாங்கிய நபிமார்களைத் திரும்பத் திரும்ப அனுப்பி சிறு பிள்ளைக்கும் புரியும் எளிய மொழியில் ஏக வல்ல அல்லாஹ் இதை மனித சமுதாயத்திற்குப் புரிய வைத்துள்ளான்.  அல்ஹம்துலில்லாஹ்.

நபியவர்களின் அழகிய முன்மாதிரி வாழ்வியல் !

அல்லாஹ்வால் தெரிவு செய்யப்பட்ட நபிமார்கள் அனைவரும் படைத்த ஏக வல்ல அல்லாஹ்விற்கு அடிமைகளாய்த் திகழ்ந்தார்கள்.  இதை சென்ற ஆய்வில்  தெளிவாய்ப்  பார்த்தோம்.

இன்று நபி(ஸல்) அவர்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. எனினும் நபியவர்கள் அல்லாஹ்விடமிருந்து பெற்ற இறைக்கட்டளைகள் அல்குர்ஆனாகவும், அந்த அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு நபி(ஸல்) அவர்கள் ? அல்லாஹ்வின் உத்திரவுப்படி  கொடுத்த செயல் வடிவம் ? மனித சமுதாயத்திற்கு அழகிய முன்மாதிரி வாழ்வியலாகவும் (33:21) நம்மை வந்தடைந்துள்ளன. இது மனித சமுதாயத்தை வியப்பில் ஆழ்த்தில் கொண்டிருக்கிறது.

அந்த நபியவர்களின் அழகிய முன்மாதிரி வாழ்வியலின் ஆதாரப்பூர்வ பதிவியல்களே அல்ஹதீது தொகுப்புகளாகும். இதையே நாம் அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை ஊர்ஜிதம் செய்யபட்ட ஆதாரப்பூர்வ நபி வாழ்வியல் வழிகாட்டுதல் என்கிறோம். என்னே!  மனித சமுதாயத்தின்மீது அல்லாஹ் சொரிந்துள்ள அளப்பரிய அருள்!

வாழ்வின்  அனைத்து நிகழ்விலும் நபி(ஸல் ) அவர்களின் அழகிய முன்மாதிரி வாழ்வியலைப் பிரதிபலிப்பது ? முஸ்லிம்கள்மீது தலையாய கடமையாகும். இந்தப் பிரதான கடமையை சரியாக நிறைவேற்ற அல்குர்ஆனையும் அல்ஹதீதுகளையும் முறையாக கற்றுக்கொள்வது அவசியமாகும். இவ்விரண்டையும் இறையச்சத்துடன் கற்க முற்படுவோர் தாங்களும் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்வது போன்ற உணர்வைப் பெறுவது நிச்சயம். அல்குர்ஆன், அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை ஊர்ஜிதம் செய்யப்பட்ட ஆதாரப்பூர்வ அல்ஹதீதுகள் உயிரோட்டம் இங்குதான் நிதர்சனமாய் நிரூபணமாகிறது.

இறையருள் வழிகாட்டுதல் !

அல்குர்ஆனும், அல்ஹதீதும் அனைத்துக் காலத்துக்கும், அனைத்துலக மக்களுக்கும் நேர்வழிகாட்டும் இறையருள் வழிகாட்டுதலாகும். முற்றிலும் அல்லாஹ்விற்கே கீழ்படிந்தவர்களாய் இறைக் கட்டளைகளுக்கு செயல்வடிவம்  கொடுத்த  நபி(ஸல்) அவர்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும், தங்களை அல்லாஹ்வின் அடிமை என்று வாக்காலும், வாழ்வாலும் மெய்ப்பித்துக் காட்டினார்கள்.

மனித சமுதாயத்திற்கோர் அழகிய முன்மாதரி

அல்லாஹ்வின் நபியாக இருந்தாலும், முதற்கண் தாங்கள் ஒரு அல்லாஹ்வின் அடிமை என்று பிரகடனப்படுத்தி நபி(ஸல்) அவர்கள் பெருமிதப்பட்டவர்கள். நபித்துவம் அருளப்பட்டதிலிருந்து ? இறுதி மூச்சுவரை நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விற்கு அடிமையாக வாழ்ந்து காட்டினார்கள்.

வாழ்வு முழுவதிலும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே அடிமையாகி  அல்லாஹ்வை ஒருமைப்படுத்த மனித சமுதாயத்திற்கு  நபி(ஸல்) அவர்கள் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்களை வாழ்வின் அனைத்து நிகழ்விலும் அழகிய முன்மாதிரியாக்கிக் கொள்ளவேண்டும் என்ற உந்துதல் உள்ளோர் ? நபி(ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரி வாழ்வியலைக் கூடுதல் சிரத்தையுடன், ஆழ்ந்த சிந்தனையுடன் கற்றுக் கொள்ள முற்பட்டால் ? தாங்களும் நபியவர்கள் காலத்தில் வாழ்வது போன்ற உணர்வைப்

பெறுவது திண்ணம் அல்குர்ஆனையும்,  ஆதாரப்பூர்வ அல்ஹதீதுகளையும் வேம்பாய் ஒதுக்கும் தமிழ் முஸ்லிம்கள் எப்படி இந்த உணர்வு பெற முடியும் ? விலக்கு பெறுவோர் வெகு சொற்பமே !

அல்லாஹ்வின் அடியார்  :

நபி(ஸல்) அவர்களை ஏக வல்ல அல்லாஹ், தனது இறுதி வேதத்தில் அல்லாஹ்வின் அடியார் என்று சிறப்பித்துள்ளது நம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

பெரும்பாக்கியம் நிறைந்த அல்லாஹ், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும் ஃபுர்க்கானை ? அல்குர்ஆனை ? நபி(ஸல்) அவர்களுக்கு அருளியதை உறுதிப்படுத்தும்போது, நபி(ஸல்) அவர்களைத் தன் அடியார் (அப்திஹி) என்றும் (அல் ஃபுர்க்கான் 25:1)

சத்தியத்தையும், அசத்தியத்தையும் வேறுபடுத்திக் காட்டும் இறுதி இறைவேதம், எப்படிப்பட்டது?

கோணல் (முரண்பாடு) இல்லாத வேதத்தை நபி(ஸல்) அவர்களுக்கு அருளியதைக் கோடிட்டுக்காட்டும் புகழ் அனைத்திற்கும் உரித்தான அல்லாஹ் நபி(ஸல்) அவர்களைத் தன்னுடைய அடியார் (அப்திஹி) என்றும் (அல் கஹ்ஃபு 18:1)

முரண்பாடுகள் இல்லாத இறைவேதம் எதற்காக அருளப்படுகிறது? மனிதர்கள்மீது பரிவும் கருணையும் மிக்க அல்லாஹ், மனித சமுதாயத்தை இருள்களிலிருந்து வெளியேற்றி, வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக தெளிவான இறைவாக்குகளை  ? நபி(ஸல்) அவர்களுக்கு அருளிக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டும் போது நபியவர்களைத் தன் அடியார்  (அப்திஹீ) என்றும் (அல் ஹதீது 57:9)

மனித சமுதாயத்தை அறியாமை இருள்களிலிருந்து வெளியேற்றி அறிவு வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் அல்குர்ஆனை, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்று உறுதிப்படுத்தும்போது, ஏக வல்ல அல்லாஹ் நபி(ஸல்) அவர்களை, நம் அடியார் (அப்தினா) என்றும் (அல்பகரா 2 :23)

அல்லாஹ்விடமிருந்து வஹியைத்தாங்கி வரும் வலிமைமிக்க நுண்ணறிவாளரான ஜிப்ரயீல் (அலை) அவர்கள், முதன் முறையாக, நபி(ஸல்) அவர்கள் முன், சுய உருவில் தோன்றி வஹி அறிவித்தார்கள். அப்போது, வில்லின் இருமுனையைக் காட்டிலும் ஜிப்ரயீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களை நெருங்கினார்கள் என்பதை நிலைநாட்டும் போது, வல்ல அல்லாஹ், நபி(ஸல்) அவர்களை அவனுடைய அடியாருக்கு (அப்திஹி) என்றும் (அந்நஜ்ம் 53:5-10) சிறப்பித்துள்ளான்.

நபி(ஸல்) அவர்களை மக்கள் அல்லாஹ்வின் அடியார் என்று புரிந்து தெளிவதற்காக நபியவர்கள் வாழ்வு முழுவதிலும் நிரம்பியுள்ள நிகழ்வுகளை நினைவுகூறிக் கொண்டே செல்லலாம். அவைகள் நூல்களாய் மட்டுமன்றி, பல்வேறு பாகங்களாய் விரிந்து கொண்டே செல்லும் ? மிக நீண்ட விரிவான ஆய்வுகளாய் விரிந்து செல்லும். எந்த நிகழ்வை எடுத்து ஆராய்ந்தாலும், அவைகள் நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் அடியார்தான் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும்.

ஏக வல்ல அல்லாஹ் ஒருவனே தங்களுக்கு எல்லா நிலைகளிலும் எஜமானன் தாங்கள் என்றென்றும் அவனது அடியார்தான் என்பதை நபி(ஸல்) அவர்கள் எப்போதும் மறந்ததே இல்லை. அதனால் ஏக வல்ல அல்லாஹ்வும் நபி(ஸல்) அவர்களை அடியார்  என்று சிறப்பிக்கிறான் :

அல்லாஹ்வின் அடியார் (அப்துல்லாஹி) அவனை அல்லாஹ் ஒருவனை அழைப்ப(தொழுவ)தற்காக எழுந்து நின்றபோது, மக்கள் அவர்மீது பாய முனைந்து விட்டார்கள். (அல்ஜின்னு 72:19)

நபி(ஸல்) அவர்களை, அடியார் ஒருவர் (அப்தன்) தொழுது கொண்டிருக்கையில் அவரைத் தடுப்பவனை நீர் பார்த்தீரா? (அல் அலக் 96:10)

அனைத்தையும் படைத்த ஒரே எஜமானனாகிய ஏகவல்ல அல்லாஹ் ஒருவணை வணங்கி வழிபட்ட நபி(ஸல்) அவர்களை, அல்லாஹ்வின் அடியார் என்றும் (92:19) அடியார் ஒருவர் (96:19) என்றும் சிறப்பித்திருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது. அனைத்தையும் படைத்த ஒரே எஜமானான ? ஏகவல்ல அல்லாஹ்வை ? வாழ்வு முழுவதிலும் அந்த ஒரே இறைவனுக்கு மட்டும் அடிமை என்று ஒருமைப்படுத்துவதில் நபி(ஸல்) அவர்கள் முன்னணியாளராகவும், அழகிய முன்மாதியாளராகவும் திகழ்ந்தார்கள் என்பதற்கு மேற்கண்ட இறைவாக்குகள் சான்று பகர்கின்றன.

அல்குர்ஆனில் நபி(ஸல்) அவர்கள் எத்தனையோ விதங்களில், எத்தனையோ கோணங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளார்கள். அது போன்று நபி (ஸல்) அவர்களை வேறு எவரும், ஏன் மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் சிறப்பிக்க முடியாது. எத்தனை, எத்தனை சிறப்புகளை ஏகவல்ல அல்லாஹ் வாரி, வாரி வழங்கியிருந்தாலும், அல்லாஹ்வின் அடியார் என்று அல்லாஹ் சிறப்பித்துள்ளதை நபி(ஸல்) அவர்களும் வழி மொழிந்துள்ளார்கள்.

என்னை அல்லாஹ்வின் அடியார் (அப்துல்லாஹி) என்றும், அவனது தூதர் (ர லிஹி) என்றும் கூறுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் நவின்றதை உமர்(ரழி) அவர்கள் கூற இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். (அல்ஹதீது பதிவாளர் : ரஜீன்)

நாம் என்ன செய்கிறோம்?

அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும், எத்துணைத் தெளிவாய் பிரகடனப்படுத்தியுள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்று  ?ஆனால் இந்திய முஸ்லிம்கள் பெரும்பாலோர் அல்லாஹ்வும் , நபியும் ஒன்றுதான் ? என்று தப்புக் கணக்குப் போட்டுள்ளனர். அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் இணைத்தே பார்க்கின்றனர். பல மஸ்ஜிதுகளில், உள்ள மிஹ்ராப்களில் அல்லாஹ் முஹம்மது (அரபியல்) என்று எழுதப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். அல்லது வேறு இடங்களில் அல்லாஹ் முஹம்மது என்று (அரபியில்) எழுதப்பட்டிருக்கும். காலண்டர்களில், ஸ்டிக்கர்களில் வீட்டு முகப்பு நிலைக்கதவுகளில் பதிக்கப்பட்டுள்ள கண்ணாடிகளில் வீடுகளில் தொங்க விடப்பட்டுள்ள கண்ணாடி பிரேம்களில், அல்லாஹ் முஹம்மது என்று (அரபியில்) எழுதப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம்.

இப்படி அல்லாஹ்வையும், அவனது தூதரையும் இணைத்துப் பார்க்கிறோம். இதன் மூலம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் கண்ணியப்படுத்துவதாக இந்திய முஸ்லிம்கள் மனப்பால் குடிக்கின்றனர். ஆனால் யாதர்த்தம் இதற்கு மாற்றமானது என்பதைப் புரிந்து கொள்ள தவறிவிட்டோம். அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒன்றானவர்கள் என்று சித்தரிப்பதே இதை உருவாக்கியோர்கள் உள்நோக்கம் என்பதை உணரத் தவறிவிட்டோம்.

அல்லாஹ்வுடன், அவனது தூரையும் இணைத்துப் பார்த்தல் ? இறைக்கிணையாக்கும் இறை மன்னிப்பில்லா மாபாதகம்! என்பதை முஸ்லிம்கள் சிந்தித்து, உணர்ந்து, இந்த விபரீதத்திலிருந்து விடுபட முன் வர  வேண்டும்.

இப்போது ஹஜ் சீசன் ஹஜ்ஜூக்கு செல்வோர் பயணம் சொல்லிக் கொள்ள வருகிறார்கள். உங்களை நோகச் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள், என்று அறிந்தோர், உறவினரிடம் மன்னிப்புக் கோரும் போது அல்லாஹ், ர லுக்காக, மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சர்வ சாதாரணமாய் சொல்லி வருகிறார்கள். இப்படி சொல்லாதோர் குற்றவாளிகளாக்கப்படுகிறார்கள்.

அல்லாஹ்தான் அனைத்து படைப்பினங்களின் ஒரே எஜமானன்

இப்படி அல்லாஹ்வையும் அவனது தூதரையும் இணைத்தே பார்க்கிறார்கள். அல்லாஹ்தான் அனைத்துப் படைப்பினங்களில் ஒரே எஜமானன். அவனல்லாத அனைத்தும் அந்த அல்லாஹ்வின் படைப்பினங்களே. இதிலிருந்து அல்லாஹ் ? எந்த படைப்பினத்திற்கும் விலக்களிக்கவில்லை. அதனால் நபி(ஸல்) அவர்கள் உட்பட அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகளே !

உயர் அந்தஸ்திற்குரித்தானவர்கள்

மனித சமுதாயத்தில், அல்லாஹ்விடம் மற்றவர்கள் எட்டிப்பிடிக்க முடியாத உயர் அந்தஸ்திற்கு உரித்தானவர்களே  நபிமார்கள்.  ஆயினும் அந்த நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்விற்கு அடிமைகளே !

அல்லாஹ்தான் நபிமார்களுக்கு அந்த உயர் அந்தஸ்த்தை அருளியுள்ளான். அதே அல்லாஹ்தான் அந்த நபிமார்களை அல்லாஹ்வின் அடியார்கள் என்றும் பிரகடனப்படுத்தியுள்ளான். சம்பந்தப்பட்ட நபிமார்களும் அல்லாஹ்வின் உத்திரவிற்கிணங்க, தங்களை அல்லாஹ்வின் அடிமைகள் என்றே பிரகடனப்படுத்திச் சென்றுள்ளார்கள்.

இணைத்தலே இணைவைத்தல்

அல்லாஹ்வுடன் தங்களை இணைத்துப் பார்ப்பதை எந்த நபியும் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக கடுங்கண்டனத்துடன் தடுத்துச் சென்றுள்ளார்கள். வாழுங் காலங்களில் அல்லாஹ்வின் அடிமைகளாய் வாழ்வதற்கு நபிமார்கள் மனித  சமுதாயத்திற்கு  முன்  உதாரணமாய்த்  திகழ்ந்தார்கள்.

மனித எதிர்ப்புகள் எல்லை தாண்டும் போது

நபிமார்கள் அனைவரும் அவர்கள் வாழும்போது அல்லாஹ்வின் அடிமைகளாய்த் திகழ்ந்ததால்தான் ? மற்ற சக மனிதர்களின் கடும் எதிர்ப்பிற்காளானார்கள். ஆட்சியாளர்களின் கொடுமைகளுக்கும் ஆளானார்கள். அடிக்கப்பட்டார்கள்;  உதைக்கப்பட்டார்கள். எழுத்தில் வடிக்கவியலா ஏச்சு, பேச்சுகளையும், திட்டுக்களையும் வாங்கிக் கட்டிக் கொண்டார்கள்.

வாழ்வு முழுவதிலும் மனிதர்கள் அல்லாஹ்விற் கடிமையாகி, அல்லாஹ் ஒருவனை ஒருமைப்படுத்த வேண்டும்! என்ற ஓரிறைக் கொள்கையை ஓங்கி ஒலித்ததற்காக எல்லா வகையான மனித இன்னல்களுக்கும் இரையானார்கள்.

அல்லாஹ்வின் நபி என்ற உயர் அந்தஸ்து அல்லாஹ்வின் அடிமை என்பதை நிலைநாட்டவே !

அல்லாஹ்வின் நபி என்ற அல்லாஹ்வால் அருளப்பட்ட உயர் அந்தஸ்து ? நபிமார்களும் அல்லாஹ்வின் அடிமைகள் என்று நிலை நாட்டுவதற்காகவே. மாறாக, நபிமார்களை அல்லாஹ்வுடன் இணைப்பதற்கல்ல. அல்லாஹ்வால் நபிமார்களுக்கு அருளப்பட்ட வஹி ? இறை அறிவித்தல் ? இதை ஐயத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கும். அல்லாஹ்வை ஒரே இறைவனாக அவனது படைப்பினங்கள் ஏற்றுக்கொண்டு, அவனுக்கு மட்டுமே அடிமையாகி விட வேண்டும். வல்ல அல்லாஹ் எந்த படைப்பினத்திற்கும் இதிலிருந்து விதிவிலக்களிக்க வில்லை: 19:93,94 இதனைத் தெளிவாக அறிவிக்கின்றது.

அனைத்துப் படைப்பினங்களும் அல்லாஹ்வின் அடிமைகள் !

அல்லாஹ்வின் படைப்பினங்களில் மிக பிரம்மாண்ட படைப்பினமாயிருந்தாலும் சரி, மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் சரி, பிரமிக்கத்தக்க ஆற்றுலுடையதாயினும் சரி, சராசரி மனிதனைக் காட்டிலும், அறிவு, திறமையில் விஞ்சி நின்று சாதனைப் படைத்திருந்தாலும் சரி, பிரமிக்கத்தக்க சாகஸங்களால் சக மனிதர்களை வென்றவர்களாய் இருந்தாலும் சரி, மற்ற மனிதர்களால் எத்தனை ஈர்க்கப்பட்டிருந்தாலும் சரி, அதுவும், அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகளே! இதிலிருந்து எவர்க்கும், எதற்கும், எந்தப் படைப்பினத்திற்கும் அல்லாஹ் விதி விலக்களிக்கவில்லை. இதை முஸ்லிம்களில் பெரும்பாலோர் முறையாக உணரவில்லை. அதனால்தான் இந்திய தேச வழக்கப்படி இந்திய முஸ்லிம்களும் படைத்தவனோடு படைப்பினங்களை  ஐக்கியமாக்கி விடுகின்றனர். இஸ்லாத்தின் பார்வையில், இது இறை மன்னிப்பில்லா மாபாதகம் என்பதும் முறையாக  உணர்த்தப்படவில்லை.

இஸ்லாமிய இறையியலின் தனித்துவம்

படைத்தவனைப் படைத்தவனாகவும், படைப்பினங்களைப் படைப்பினங்களாவும் வேறுபடுத்திக் காட்டும் இஸ்லாமிய இறையியலின் உன்னதம், இஸ்லாமிய இறையியலின் தனித்துவம், இந்திய முஸ்லிம்களுக்கு முறையாக உணர்த்தப்படவில்லை.  அதனால்தான்,

இந்திய முஸ்லிம்களுக்கு, நபிமார்கள் அல்லாஹ்வின் அடிமைகள் என்பதை ஜீரணிப்பது கடினத்திலும் கடினமாயிருக்கிறது. இன்று, வல்ல அல்லாஹ். அந்த நிலையை அவனது பிரத்யேக அருளால் மாற்றி வருகிறான் அல்ஹம்துலில்லாஹ்!

ஒரிறைக் கொள்கையைக் பிரதிபலிக்கும் வாழ்க்கைத் திட்டம் !

நபிமார்கள் அல்லாஹ்வின் அவதாரங்கள் அல்லர். தெய்வாம்சம் பொருந்தியவர்களும் அல்லர். கடவுள் தன்மையைப் பிரதிபலிக்க கூடியவர்களும் அல்லர். எந்த நிலையிலும், எந்தக் காரணத்திற்காகவும் ஒரே இறைவனோடு ஐக்கியமாகிவிடக் கூடியவர்களும் அல்லர். இதை மனித சமுதாயத்திற்குத் தெளிவாகவும், உறுதியாகவும் பிரகடனப்படுத்தவே, வல்ல அல்லாஹ், ஓரிறைக் கொள்கை, அந்த ஓரிறைக் கொள்கையைப் பிரதிபலிக்கும் வாழ்க்கைத் தட்டத்துடன் நபிமார்களை அனுப்பிக் கொண்டேயிருந்தான்.

மகத்தான அருட்கொடை

எங்கெல்லாம் எப்போதெல்லாம் ஓரிறைக் கொள்கை, இறைக்கிணையாக்குதலாய் மாற்றப்பட்டதோ ? அங்கெல்லாம் அப்போததெல்லாம், வல்ல அல்லாஹ், அதை மனித சமுதாயத்திற்கு தெளிவுபடுத்தி எச்சரிக்கத் தவறவில்லை. இதுதான் வல்ல அல்லாஹ் மனிதர்களுக்குப் புரிந்துள்ள அருட்கொடைகளில் மகத்தான அருட் கொடையாகும். இதற்குரிய சான்றுகள் இறுதி இறைவேதம் நெடுகிலும் விரவியுள்ளன. இது முறைப்படி உணர்த்தப்படாததால், இந்திய முஸ்லிம்கள், இறைக்கிணையாக்குதலை வணக்கம், வழிபாடு, நன்மை, புண்ணியம் என்று முனைப்புடன் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதைக்கண்ணுறும் உண்மை முஸ்லிம்கள் யாரும் இரத்தக் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது. எந்த அளவிற்கென்றால் சென்ற ஆய்வை படித்த சகோதர, சகோதரிகள் பலர்? மற்ற நபிமார்கள் அல்லாஹ்வின் அடிமைகள்தான்; ஆனால் நமது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமை என்பதை ஏற்க முடியவில்லை என்கின்றனர். நிலைமையின் விபரீதத்தை இதன் மூலம் எளிதாய் புரிய முடிகிறது. அன்பிற்குரியவர்களே!  நமது நபியவர்களை, அந்த வல்லவன் அல்லாஹ் அடியார் என்றே பிரகடனப்படுத்தியுள்ளான். அதை நபி(ஸல்) அவர்களும் வழி மொழிந்துள்ளார்கள். இதை மேலே இடம் பெற்றுள்ள இறைவாக்குகளும் நபி(ஸல்) அவர்கள் வாழ்வியல்  வழிகாட்டலும்  ஐயத்திற்கிடமின்றி,  தெளிவுபடுத்துகின்றன.

அல்லாஹ்வின் எச்சரிக்கை !

நபிமார்கள் அல்லாஹ்வின் அடிமைகள் அல்லர் என்ற எண்ணமுடையோர், கடுங்கண்டத்திற்கும், இறைத் தண்டணைக்கு முரியவர்கள்.

(ஈஸா) மஸீஹூம் (அல்லாஹ்விற்கு மிக) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்விற்கு அடிமையாயிருப்பதை இழிவாக கருதமாட்டார்கள். எவர்கள் அல்லாஹ்விற்குப் (அடிமையாகி) பணிந்து வாழ்வதை இழிவாகக் கருதி கர்வமும் கொள்கிறார்களோ ? அவர்கள் அனைவரையும் (தண்டிப்பதற்காக) மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான். அந்நிஸா 4:172

….. எவர்கள் (அல்லாஹ்விற்கு அடிமையாகி) பணிந்து வாழ்வதை இழிவாகக் கருதித் தற்பெருமை கொண்டிருந்தார்களோ ? அவர்களுக்கு அல்லாஹ் துன்புறுத்தும் தண்டணை அளிப்பான்.  அல்குர்ஆன் 4:173.

அல்லாஹ்வின் அடிமைகள் என்றே அந்த வல்ல அல்லாஹ் நபிமார்களைச் சிறப்பித்துள்ளான் தனது படைப்பினங்கள் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. இந்த இறைக்கட்டளைக்கு முற்றிலும் கீழ்ப்படிபவர்கள் ? அல்லாஹ்வின் திருப்பொருத்தம் என்னும் பெரும் பேறு பெற்றவர்கள். அந்த பட்டியலில் முதலிடம் வகிப்பவர்கள் தான் ? நபிமார்கள். மாறு செய்வோர் அல்லாஹ்வின் அதிருப்திக்கும், தண்டனைக்கும் ஆளாவார்.  அல்லாஹ்  காத்தருள்வானாக !

அன்பு வேண்டுகோள் !

அன்பிற்குரியவர்களே! அல்லாஹ்வின் மார்க்கம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் அடிமை என்று திட்டவட்டமாய் பிரகடனப்படுத்தியிருக்க, அதற்கு முற்றிலும் மாற்றமான கருத்தில் முஸ்லிம்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர். இது நாள் வரை, நமது சிந்தனைக்கு கொண்டு வரப்படாத இறைவாக்குகளை இந்த ஆய்வின் கருப்பொருளாக்கியுள்ளோம்.

அறிஞர்கள் அபிப்பிராயங்கள், பெரும்பாலோர், முன்னோர்கள், ஊர்வழக்கம் என்று உதாசீனம் செய்யாமல், அல்லாஹ்வின் வாக்குகளை ஆழ்ந்து கற்று சிந்தித்து ? தெளிவு  பெற்று, நம்முடைய தவறான கருத்துக்களிலிருந்து உண்மை விரும்பிகள் ? உடனடியாக விடுபடவேண்டும் என்று அல்லாஹ்வின் நல்லருளை ஆதரவு வைத்து அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் அத்துடன்,

முரண்டு பிடிப்போர், உண்மையை உணர அல்லாஹ்விடம் துஆ செய்து, அவர்கள் உண்மை உணர்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு அன்பர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம். அல்லாஹ் அருள் செய்வானாக ஆமீன். முயற்சிகள் தொடரட்டும். (இன்ஷா அல்லாஹ், மீண்டும் சந்திப்போம்! சிந்திப்போம்!! சீர் பெறுவோம்).

*******************************************************


பித்அத் ஓர் ஆய்வு

அபூ  ஃபாத்திமா

மறுபதிப்பு

அல்லாஹ்(ஜல்) கூறுகிறான் : அல்லாஹ், அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும் (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின்) வார்த்தை இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு அல்குர்ஆன்42:21

(நபியே! நீர் கூறும்) அல்லாஹ்வுக்கு நீங்கள் உங்கள் மார்க்கத்தை கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும்; பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான். அன்றியும், அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான். அல்குர்ஆன் 49:16

இந்த இரண்டு குர்ஆன் வசனங்களும்,

அல்லாஹ்வுக்கே மார்க்கம் சொந்தம்!

அவனே அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான்!

ஒன்றை மார்க்கமாகும் அதிகாரம் அவனுக்கு மட்டுமே இருக்கிறது!

அதற்கு மாற்றமாக மனிதர்களால் மார்க்கமாக்கப்பட்டதை அதாவது, பித்அத்துக்களை எடுத்து நடப்பவர்கள் அல்லாஹ்வுக்கு  இணை (´ர்க்) வைக்கிறார்கள்!

அந்த பித்அத்துக்களை உண்டாக்கியவர்களை அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக ஆக்கி விட்டார்கள்!

இது இணை (´ர்க்) வைக்கும் மன்னிக்கப்படாத குற்றமே என்பனவற்றை தெள்ளத் தெளிவாக அறிவுறுத்துகின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : எனக்கு முன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களும், தோழர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த நபியினுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்த தோழர்கள் செய்யாததை செய்ததாகச் சொல்வார்கள்; அவர்களுக்கு ஏவப்படாததை யயல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ அவன் முஃமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் முஃமினாவான். எவன் தனது உள்ளதால் ஜிஹாது செய்கிறானோ அவனும் முஃமினாவான் இதன் பின்னர், ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது, என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரழி), நூல்: முஸ்லிம்

வார்த்தையில் சிறந்தது அல்லாஹ் (ஜல்)வின் வேதம். நடைமுறையில் சிறந்தது முஹம்மது(ஜல்) அவர்களின் நடைமுறை; காரியங்களில் கெட்டது (நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்துக்கள் பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத்(ரழி), ஜாபிர் (ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம், நஸயீ

உங்களிடையே இரண்டை விட்டுச் சொல்கிறேன்; அவற்றைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள் ஒன்று அல்லாஹ்(ஜல்)வின் வேதம், இரண்டு எனது வழிமுறை . அறிவிப்பாளர் : மாலிக் இப்னு அனஸ் (ரழி), நூல் : முஅத்தா

எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப்பட்டவையாகும். அவை நூறு ­ரத்துகளாயினும் சரியே என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : மாலிக் இப்னு அனஸ்(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்

எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப்பட்டவையாகும் . என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் :அன்னை ஆயிஷா(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்

வெள்ளைவெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்லுகிறேன்; அதன் இரவும், பலைப் போன்றது. அதில் அழிந்து நாசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழி தவறவே மாட்டார்கள். அறவிப்பாளர் : உமர்(ரழி) நூல் : ரஜீன்

மக்கா மாநகரம் வெற்றிக் கொள்ளப்பட்ட ஆண்டு ரமழான் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் அங்கு புறப்பட்டனர். குராவுல் கமீம் என்ற இடத்திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு சென்றார்கள். மக்களும் (நோன்போடு) இருந்தனர். பின்னர் நபி(ஸல்) அவர்கள் ஒரு கோப்பையில் நீர் கொணரச் செய்து மக்கள் அனைவரும் பார்க்கும்

அளவுக்கு கோப்பையை உயர்த்தி, மக்களும் அதனைப் பார்த்த பின்னர் அதனைப் பருகினார். இதன் பின் மக்களில் சிலர் நோன்போடு இருப்பதாக நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் அத்தகையோர் பாவிகளே! அத்தகையோர் பாவிகளே! என்று கூறுனார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர்(ரழி) நூல்கள் :முஸ்லிம், திர்மிதி

எவர் மார்க்கத்தில புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். அறிவிப்பாளர் : அலீ(ரழி),  நூல்கள்: அதூVவூது, நஸயீ

நபி(ஸல்) அவர்கள், நபிதோழர் பராஉ பின் ஆஸிப் (ரழி) அவர்களுக்கு, இரவில் படுக்கப் போகும் பொழுது  ஓதும் துஆ ஒன்றைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ..வ நபிய்யி கல்லதீ அர்ஸல்த…. என்று கற்றுத் கொடுத்ததை நபிதோழர் அதை ….வ ரசூலி கல்லதீ….. என்று ஓதிக் காண்பித்த போது, இதைக் கேட்டவுடன் நபி(ஸல்) அவர்கள் இல்லை வநபிய்யி கல்லதீ அர்ஸல்த….. என்று (தான் ஓதிக்காட்டிய படியே) ஓதுமாறு கூறினார்கள். நூல் :புகாரி

( நபிய்யீ கல்தீ என்பதை ரசூலிகல்லதீ என்று சொன்னதையே நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்காமல் அதைக் கண்டித்து  திருத்தி இருக்கும் போது, ஒருவர் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை, அது அழகானது என்று கூறி செய்ய முற்பட்டால் அவருடைய நிலை என்ன என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டள்ளோம்.)

மேற்காணும் குர்ஆனின் வசனங்களும், நபி(ஸல்) அவர்களின் போதனைகளும், மார்க்கத்தில் புதிதாக அணு அளவும் இணைக்க முடியாது என்பதை நடுநிலையோடு சிந்திக்கும் உண்மை விசுவாசிகள் விளங்கிக் கொள்ள முடியும். இனி பித்அத் வி­யமாக நபிதோழர்களுடைய அறிவுரைகளைப் பார்ப்போம்.

1. நான் உங்களிடம் அல்லாஹ் கூறுகிறான்; அல்லாஹ்வுடைய நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் என்று கூறுகிறேன். நீங்களோ அபூபக்கர் சொன்னார்; உமர் சொன்னார் என்று கூறுகிறீர்கள். எனவே உங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரி பொழியப்படுமோ என்று நான் அஞ்சுகிறேன் என இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.

2. நான் பின்பற்றுகிறவனே அல்லாமல், புதிதாக உண்டாக்குகிறவன் அல்லன். நான் நேராக நடந்தால் என்னைப் பின்பற்றுங்கள். பிழை விட்டால் என்னை திருத்துங்கள் என அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.

3. ஒரு பள்ளியினுள்ளே அமர்ந்து கூட்டாக திக்ரு ஸலவாத்து, ஓதிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள், நான் நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவனாக இருக்கிறேன். நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் யாரும் இவ்வாறு திக்ரு , ஸலவாத்து ஓதுவதை நான் பார்த்ததே இல்லை. எனவே நீங்கள் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத பித்அத்தை செய்கிறீர்கள் . என்று கூறி அவர்களை பள்ளிவாசலை விட்டும் வெளியேற்றி விட்டார்கள்.

4. ஒருவர் தும்மியதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தபடி சொல்வதோடு வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் என்று இணைத்துக் கொண்டார். இதனை பித்அத்து என்று கண்டித்து திருத்தினார்கள் இப்னு உமர்(ரழி) அவர்கள்

5.   பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் தான். மனிதர்கள் அவற்றில் சிலதை அழகானது (ஹஸன்) என்று கருதினாலும் சரியே என்று இப்னு உமர்(ரழி) கூறியுள்ளார்கள்.

6. பின்பற்றுபவனாக  இரு, புதிதாக ஒன்றை ஏற்படுத்தாதே என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் உபதேசம் செய்துள்ளார்கள்.

7. நபிதோழர்கள் செய்யாத வணக்க வழிபாடுகள் எதனையும் செய்யாதீர்கள். முன் சென்றவர்கள் பின்  சென்றவர்களுக்கு எதனையும் விட்டு வைக்கவில்லை , என ஹூதைபா (ரழி) அறிவித்துள்ளார்கள்.

8. அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரழி) அவர்கள் பிஸ்மியை சப்தமிட்டு ஓதிக் கொண்டிருந்ததாகவும், அதைக்கண்ட அவருடைய தகப்பனார், மகனே! நான் நபி(ஸல்) அவர்கள், அபூபக்கர் சித்தீக் (ரழி), உமர்(ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோருக்குப் பின்னே தொழுதிருக்கிறேன்; அவர்களில் யாரும் பிஸ்மியை சப்தமிட்டு ஓதியதை நான் கேட்டதில்லை. எனவே, மார்க்கத்தில் இல்லாத பித்அத்தை நீ செய்வதாக நான் கருதுகிறேன் என்று கண்டித்துள்ளார்கள் . இச்செய்தியை அவர்களே  அறிவிக்கிறார்கள். நூல்கள் : திர்மிதி, நஸயீ, அஹ்மத்

அடுத்து, தாபிஈன்களில் தலை சிறந்தவரும், சீரிய கலீஃபாவுமான உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் பித்அத் வி­யமான எச்சரிக்கையையும் தருகிறோம். அது பின்வருமாறு உள்ளது.

அல்லாஹ்வின் ஏகவல்களைக் கொண்டும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளைக் கொண்டும் மார்க்கத்தைப் போதுமாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்னால் வந்தவர்கள் ஏற்படுத்திய புதுமை (பித்அத்)களை விட்டு விடுமாறு எச்சரிக்கை செய்கிறேன் .

இமாம்களின் உபதேசங்கள்

இதற்கு மேலும் இது வி­யத்தில் சந்தேகிப்பவர்கள் இமாம்களின் பெயரால் மத்ஹபுகளை அமைத்துக் கொண்டிருக்கும் முகல்லிதுகளேயாகும். ஆனால் அந்த மரியாதைக்குரிய இமாம்கள் எங்களைத் தக்லீது செய்யாதீர்கள் ? எங்கள் பெயரால் மத்ஹபுகளை அமைக்காதீர்கள் என்றே தெளிவாகக் கூறி இருக்கின்றார்கள். அந்த இமாம்களின் கூற்றுக்கு முரணாக மத்ஹபுகளை அமைந்திருப்பது போல், இங்கு அந்த இமாம்களின் தெளிவான உபதேசங்களுக்கு விரோதமாகவே பித்அத்களை உண்டாக்கி செய்து வருகின்றனர். இதோ அந்த மரியாதைக்குரிய இமாம்களின் நல் உபதேசங்கள்.

1. இமாம் அபூஹனீஃபா(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்

நீங்கள் ஹதீஸ் ஆதாரங்களையும், நபிதோழர்களின் நடைமுறைகளையும் பற்றிப் பிடிப்பவர்களாய் இருங்கள். மார்க்கத்தில் புதிதாக தோன்றியவை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அனைத்து பித்அத்துக்களும் வழிகேடுகளேயாகும்

2. இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்

மார்க்கத்தில் பித்அத்தை உண்டாக்கி அதற்கு பித்அத்து ஹஸனா என்று எவன் பெயர் சூட்டுகின்றானோ, அவன், நபி(ஸல்) அவர்கள் தனது ரிஸாலத்தில் (தூதுவப் பணியில்) மோசடி செய்து விட்டார்கள் என்றே கருதுகிறான். ஏனென்றால் அல்லாஹ் அல்யவ்ம அக்மல்த்து லக்கும் தீனக்கும்… என்று சொல்லிவிட்டான். அன்று மார்க்கமாக இல்லாதது இன்றும் மார்க்கமாக இருக்க முடியாது.

3. இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள் :

எவன் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை உண்டாக்கி, அதை பித்அத்து ஹஸனா (அழகிய பித்அத்து) என்று சொல்கிறானோ அவன் புதிதாக ஒரு மார்க்கத்தையே (மதம்) உண்டாக்கி விட்டான் .

4. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்

எங்களிடத்தில் சுன்னாவின் அடிப்படையா வது : நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் இருந்த வழியை உறுதியாகப் பற்றிப் படித்து, அவர்களைப் பின்பற்றி பித்அத்துகளை விடுவதேயாகும். ஏனென்றால் பித்அத்துக்கள் வழிகேடுகளேயாகும் .  நூல் : அஸ் ன்னத்து வல் பித்ஆ

மேற்கூறிய மரியாதைக்குரிய நான்கு இமாம்கள் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருக்கிறோம் என்று சொல்பவர்கள். அவர்களின் மணியான இந்த உபதேசங்களுகுகு நேர் முரணாக பித்அத்துக்களில் ஏன் தான் மூழ்கி இருக்கிறார்களோ? நாம் அறியோம். அது மட்டுமல்ல பித்அத்துக்களை வகை வகையாக தரம் பிரித்துக் கொண்டு தங்களும் குழம்பிப் போய், மக்களையும் குழப்புவது அதைவிட விந்தையாக இருக்கிறது.

அடுத்து, பித்அத்துக்களை நியாயப்படுத்த அவர்கள் கூறும் காரணங்களை ஆராய்வோம் !

கால மாறுதலினால் விஞ்ஞான வளர்ச்சியினால், ஏற்பட்டுள்ள வசதி வாய்ப்புகளை முஸ்லிம்கள் ஏற்பட்டுள்ள வசதி வாய்ப்புகளை முஸ்லிம்கள் பயன்படுத்துவதை காரணமாகக் காட்டி, இவையயல்லாம் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாதவை தானே! புதுமைகள் தானே! பித்அத்து ஹஸனா தானே! என்று நியாயம் கற்பித்து மார்க்கத்திலும் புதுமைகளை நுழைக்க முற்படுகிறார்கள்.

உதாரணமாக, நவீன வாகனங்களை பயன்படுத்துவது. நவீன கட்டிடங்களில் வாழ்வது, நவீன கல்விக் கூடங்கள் கட்டுவது, நவீன கருவிகளை பயன்படுத்துவது, இவற்றையயல்லாம்   பித்அத்து ஹஸனா என்று பெயர் சூட்டுகின்றனர். இவையயல்லாம் தவிர்க்க  முடியாதவை என்று கூறி மார்க்கத்திலும் பித்அத்து ஹஸனாவை உண்டாக்குகின்றனர். ஆழ்ந்து சிந்திப்பவர்கள்  இக்கூற்றில் உள்ள தவறை உணர்ந்து  கொள்ள  முடியும்.

நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹீ மூலமாகவும் அவனது அங்கீகாரத்தின் மூலமாகவும் போதித்த மார்க்கத்தில், மனித அபிப்பிராயத்தில் நலவாகத் தெரியும் வி­யங்களை புகுத்துவதையே பித்அத்து என்று கண்டித்துள்ளார்களேயல்லாமல், இவையல்லத உலகக் காரியங்களில் உலகிலேயே நிதர்சனமாக இலாபத்தைப் பெறும் அதே சமயம் குர்ஆனுக்கோ, ஹதீ க்கோ முரண் இல்லாத நவீன கண்டுபிடிப்புகளைப் பற்றி பித்அத்து என்று கூறவில்லை. இதற்கு ஆதாரமான ஹதீஸ்களைக் கீழே தருகிறோம்.

நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்த ஆரம்பத்தில் அங்கு நடந்து வந்த ஒரு விவசாய முறையைத் தடுத்து விட்டார்கள். அதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இது வி­யம் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிந்ததும், நானும் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்களின் மார்க்கம் பற்றி நான் கட்டளையிடுவேனாயின் அதை ஏற்று நடங்கள். அன்றி, நான் எனது ஆலோசனையைக் கொண்டு ஒன்றைக் கூறினால், உங்கள் நோக்கப்படி செய்து கொள்ளுங்கள் என்று அறிவிததனர். அறிவிப்பாளர்: ராபிஃ இப்னு கதீஜ்(ரழி),  நூல் : முஸ்லிம்

இதே போல் விடுதலைப்பெற்ற பரீரா(ரழி) தனது அடிமைக் கணவர் முகீஸை(ரழி) வேண்டாம் என்று அறிவித்த போது, முகீஸின் (ரழி) மனவேதனையைக் கேட்டு,  நபி(ஸல்) அவர்கள் வருந்தி பரீராவை(ரழி), முகீஸோடு (ரழி) வாழும்படி சொன்னதற்கு, இது மார்க்கக் கட்டளையா? என்று  பரீரா(ரழி) கேட்டனர். எனது சிபாரிசு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். நபி(ஸல்) அவர்களின் சிபாரிசை பரீரா(ரழி) ஏற்றுக் கொள்ளவில்லை. நபி(ஸல்) அவர்களும் அதற்காக அவர்களைக் கண்டிக்கவில்லை. அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரழி)  நூல்கள் : புகாரி, அபூதாவூத், நஸயீ, திர்மிதி

பத்ருப் போரின் போது முஸ்லிம்கள் தங்கள் முகாமை எந்த இடத்தில் அமைத்துக் கொள்வது என்ற வி­யத்தில், நபி(ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்திற்கு மாற்றமாக வேறு இடத்தை ஹப்பாப் இப்னுல் முந்திர் என்ற நபிதோழர் தேர்ந்தெடுத்து, இது முகாம் அமைப்பதற்கு மிகப்பொருத்தமான இடம் என்று சொன்ன போது அதை நபி(ஸல்) அவர்கள் ஏற்று தன் கருத்தை, மாற்றிக் கொண்டார்கள் . காரணம், நபி(ஸல்) அவர்கள் முதலில் தேர்ந்தெடுத்த இடத்தில்தான் முகாம் அமைக்க வேண்டுமென்பது இறைக்கட்டளை அல்ல. இதை நபி(ஸல்) அவர்கள் தன் கருத்தை மாற்றிக் கொண்ட தன் மூலம் விளங்க முடிகிறது.

மேற்காணும் ஹதீஸ் ஆதாரங்களிலிருந்து உலகக்காரியங்களில் நிதர்சனமாக, பலனைப்பெறும் வி­யங்களை செய்வது பித்அத்து ஆகாது. விபரம் அறியாதவர்களே இவற்றை பித்அத் என்று கூறுகிறார்கள் என்பது தெளிவாகின்றது.

பித்அத்து போல் தோன்றும் காரியங்கள்

அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்கள் காலத்தில் குர்ஆன் ஒரே நூலாக இணைக்கப்பட்டது, உதுமான் (ரழி) அவர்கள் காலத்தில் குர்ஆனின் பல பிரதிகள் எடுக்கப்பட்டது; குர்ஆனை எளிதாக ஓத அரபி லிபியில் அகர, இகர, உகர குறிகள் இடப்பட்டது, உமர் (ரழி) அவர்கள் ரமழான் இரவுத்தொழுகையை மீண்டும் ஜமா அத்தாக ஆக்கியது, இவற்றை ஆதாரமாகக் காட்டி, இவற்றிக்கு பித்அத்து ஹஸனா என்று பெயரிட்டு பித்அத்தை நியாயப்படுத்த முற்படுகின்றனர். அறிவளிகளும் இவற்றில் தடுமாறவே செய்கின்றனர். எனவே இவற்றை மிக நுட்பமாக ஆராய்ந்து விளங்குவோம்.

1. குர்ஆன் ஒரே நூலாக இணைக்கப்படுவது

நபி(ஸல்) அவர்களுடைய  காலத்திலேயே குர்ஆனில் முதல் அத்தியாயத்தில் இருந்து 114-ம் அத்தியாயம் வரை முறையாக நபி(ஸல்) அவர்களாலேயே கோர்வை செய்யப்பட்டன என்பதே உண்மையாகும். புதிதாக சில வசனங்கள் இறங்கியவுடன் நபி(ஸல்) அவர்கள் அவற்றை ஓதிக்காட்டி இன்ன அத்தியாயத்தில், இன்ன வசனத்திற்கும் இன்ன வசனத்திற்கும் இடையில் இணைத்துக் கொள்ளுங்கள் என்று தெளிவாகக் கூறி அவ்வாறே பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு அத்தியாயத்தினுடைய பிஸ்மி முதற்கொண்டு நபி(ஸல்) அவர்களின் கட்டளையின்படியே எழுதப்பட்டன. 9ஆம் அத்தியாயமான சூரத்துத் தவ்பாவிற்கு பிஸ்மி எழுதும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. இன்று வரை பிஸ்மி எழுதப்படாமலே இருக்கிறது. இன்று யாரும் அதுவும் ஒரு அத்தியாயம் தானே பிஸ்மி தவறுதலாக விடப்பட்டு இருக்கின்றது என்று கூறி 9 ஆம் அத்தியத்திற்கு பிஸ்மி எழுத முற்பட்டால் அது பித்அத்தே ஆகும். ஆக மார்க்க அடிப்படையில்  குர்ஆனில்  எவ்வித  கூடுதல்,  குறைதல்  ஏற்படவில்லை  என்பதே  உண்மையாகும்.

நபி(ஸல்) அவர்களுடைய காலத்திலேயே, இவ்வாறு நிறைவு செய்யப்பட்டு, நபிதோழர்கள் சிலர் சிலரிடம் இருந்த சில சில வசனங்கள் அனைத்தையும் அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒன்று திரட்டப்பட்டு ஒரே நூலாக ஆக்கப்பட்டது. உஸ்மான்(ரழி) அவர்கள் காலத்தில் பல பிரதிகள் எடுக்கப்பட்டன; இதனால் வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட குர்ஆன் வசனங்களிலோ அவற்றின் கருத்துக்களிலோ புதிதாக (பித்அத்) ஒன்றும் இணைக்கப்படவில்லை என்பதே உண்மையாகம். முறையோடு சிந்திப்பவர்கள் இதை மறுக்க மாட்டார்கள். இதே போல் அன்று தோலிலும், எலும்புத் துண்டுகளிலும் எழுதப்பட்ட குர்ஆன் வசனங்கள் இன்று அழகிய காகிதத்தில் எழுதப்படுகின்றன. இதற்கு மேலும் முன்னேறி குர்ஆன் வசனங்கள் காரிகளின் இனிமையான குரல்களில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு அவற்றை நாம் கேட்டு விளங்கிச் செயல்பட எளிதாக ஆக்கப்பட்டுள்ளது.

நாளை கம்யூட்டரில் கொடுக்கப்பட்டு , தேவைப்படும் வசனத்தை தேவைப்படும் நேரத்தில் மிக எளிதாக எடுத்துப் பார்த்து விளங்கிச் செயல்பட இன்னும் நவீன வசதிகள் ஏற்படலாம். (இன்று அந்த நல்ல வாய்ப்பும் ஏற்பட்டு விட்டது அல்ஹம்துலில்லாஹ்). எனவே இவற்றை எல்லாம் பித்அத் எனச் சொல்வது. நபி(ஸல்) அவர்கள் எவற்றை பித்அத் என்று குறிப்பிட்டார்கள் என்பதை முறையாக விளங்கிக் கொள்ளாததேயாகும்.

2. உஸ்மான் (ரழி)அவர்கள் காலத்தில் குர்ஆனின் பல பிரதிகள் எடுக்கப்பட்டதின் நோக்கம், பரந்து விரிந்த

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் உள்ள மக்களுக்கு முறையாக கோர்வை செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் எளிதில் அவர்களுக்கு கிடைத்து, அவர்கள் அவற்றை பார்வையிட்டு விளங்கிச் செயல்பட வேண்டும் என்பதேயாகும். அதல்லாமல் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டு மறுமையில் இலாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செயல்படுத்தும் மார்க்க காரியங்களைப் போல் செய்யப்பட்டது அல்ல. பரக்கத் உண்டாகும் என்ற நம்பிக்கையில் செய்யப்பட்டதும் அல்ல எனவே, இச்செயலையும் பித்அத் என்று குறிப்பிடுவது அறியாமையேயாகும்.

3. குர்ஆன் நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் அகர, இகர, உகர குறிகள் இல்லாமல், எழுதப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. நபி(ஸல்) அவர்களது காலத்திற்குப் பிறகு இஸ்லாம் உலகம் முழுவதும் பரவி, அஜமி (அரபி அல்லாதவர்கள்) களும் குர்ஆனை ஓதும் நிலை ஏற்பட்டது. எனவே அவர்கள் எளிதாகவும், முறையாகவும் குர்ஆனை ஓதி விளங்கி, செயல்படும் நோக்கத்தோடு குர்ஆனுக்கு அகர, இகர, உகர குறிகள் இடப்பட்டன. உண்மையில் இது அரபி லிபியில் ஏற்பட்ட ஒரு முன்னேற்றமேயல்லாமல் மார்க்கத்தில் ஏற்பட்ட அல்லது குர்ஆனில் ஏற்பட்ட ஒரு புதுமை (பித்அத்) அல்ல. அரபி தெரிந்தவர். அந்தக் குறிகள் இடப்படாத குர்ஆனை எப்படி ஓதுகின்றாரோ, அதை எப்படி விளங்கிச் செயல்படுகிறாரோ, அதே போல் அதில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஓர் அஜமி (அரபி அல்லாதவர்) அந்த குறிகள் இடப்பட்ட குர்ஆனை ஓதவும், விளங்கிச்  செயல் படவும் செய்கிறார். எனவே, நபி(ஸல்) அவர்களுக்குக் வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதில் எவ்வித மாற்றமும் இதனால் ஏற்படவில்லை. ஆகவே, இதனையும், பித்அத் என்று கூறுவது தவறேயாகும்.

4.உமர் (ரழி) அவர்களும்,ரமழான் இரவுத் தொழுகையும்

உமர் (ரழி) அவர்கள் ரமழான் இரவுத் தொழுகையை   தராவீஹ் என்று பெயரிட்டு அதனை 20 ரகா அத்துகளாக்கி ஜமா அத்தாகவும் ஆக்கியதாக முஸ்லிம் சமுதாயம் காலங் காலமாக நம்பி வருகின்றது! சொல்லி வருகின்றது! ஆனால் இவற்றிற்கு ஹதீஸில் நம்மால் எந்தவித ஆதாரத்தையும் பார்க்க முடியவில்லை. நபி(ஸல்) அவர்களும் நபிதோழர்களும் இத்தொழுகையை ரமழான் இரவுத் தொழுகை என்ற பெயரால் 8 ரகா அத்துகள் தொழுது வந்ததற்கு மூன்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் காணப்படுகின்றன. அதே போல், உமர்(ரழி)அவர்கள் உபை இப்னு கஃபு(ரழி), தமீமுத்தாரி(ரழி) ஆகிய இரு நபிதோழர்களுக்கு 8 ரகா அத்துக்கள் தொழ வைக்க கட்டளையிட்ட ஆதாரப்பூர்வமான ஹதீ ம் காணப்படுகிறது. நபி(ஸல்) அவர்கள் மூன்று இரவுகள் ஜமாஅத்தக இத்தொழுகையை தொழுது விட்டு நான்காவது இரவு அது ஃபர்ழாக ஆக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவோ, அவர்கள் ஜமாஅத் செய்வதை விட்டதாக தெளிவான அறிவிப்பு புகாரியில் காணப்படுகிறது. மற்றபடி நபி(ஸல்) அவர்களே, உபை இப்னு கஃபு(ரழி) அவர்கள் பெண்களுக்கு இத்தொழுகையை 8 ரகாஅத்து ஜமாஅத்தாக நடந்த அங்கீகாரம் அளித்ததற்குரிய ஸஹீஹான ஹதீஸ் காணப்படுகின்றது ஆகவே, உமர்(ரழி) அவர்கள் இத்தொழுகையில் செய்த ஒரே மாற்றம் ரசூல் (ஸல்) அவர்கள்  3 நாட்கள ஒரே ஜமா அத்தாக செய்து காட்டிய சுன்னத்தைப்பின் பற்றி மீண்டும் அதை அமுல்படுத்தியதாகும். சிறு சிறு ஜமா அத்துகளாக நடந்து வந்த இத்தொழுகையை ஒரே இமாமின் கீழ், ஒரே ஜமாஅத்தாக ஆக்கியது மட்டுமேயாகும்.

மேற்கண்ட விபரங்களையயல்லாம் முறையாக சிந்திப்பவர்கள் உமர்(ரழி) அவர்கள் மார்க்கத்தில புதிதாக (பித்அத்) ஒன்றையும் ஏற்படுத்தவில்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். மற்றபடி, உமர்(ரழி) அவர்கள் தராவீஹ் என்று  பெயரிட்டார்கள் . 20 ரகா அத்துக்களாக ஆக்கினார்கள் என்பதற்கு ஹதீஸிலோ, சரித்திர நூற்களிலோ எவ்வித ஆதாரமும் இல்லை. அவ்வாறு சொல்வதெல்லாம் அவர்கள்மீது வீண் பழி சுமத்துவதேயாகும். மார்க்கத்தில் இல்லாததை புதிதாக அவர்கள் உண்டாக்கவில்லை என்பதை உறுதியுடன் சொல்ல முடியும். மேலும், அவர்கள் நிஃம ஹாதிஹில் பித்ஆ என்று கூறியதாக ஹதீஸில் காணப்படுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட பித்அத்தாக அறிஞர்களால் கணிக்கப்படவே இல்லை. நடைமுறையில் ஆச்சரியத்தோடு சொல்லப்பட்ட ஒரு வார்த்தையாகவே கணிக்கப்படுகின்றது. காரணம், நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத புதிய எந்த ஒரு வி­யமும் உமர்(ரழி) அவர்களின் இந்த நடவடிக்கையில் ஏற்படவில்லை என்பதேயாகும்.

இவ்வளவு தெளிவான விளக்கத்திற்குப் பிறகும் கலீஃபாக்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட இந்த நடைமுறைகளை ஆதாரமாகக் காட்டி, பித்அத் ஹஸனா வை நியாயப்படுத்த யாரும் முற்பட்டால் அவர்களுக்கு நாம் கூறும் இன்னொரு விளக்கமாவது வருமாறு : நபி(ஸல்) அவர்கள் எனது சுன்னத்தையும், நேர்வழி நடந்த எனது கலீஃபாக்களின் சுன்னத்தையும், பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்ற கருத்துப்பட வரும் ஸஹீஹான ஹதீஸ் ஒன்று காணப்படுகின்றது. இதில் நபி(ஸல்) அவர்கள் எனது  சுன்னத்து என்று  குறிப்பிட்டது வஹீயின் தொடர்போடு இருந்த,

நபி(ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம் ஆகும். நேர்வழி நடந்த கலீஃபாக்களின் சுன்னத்து என்று குறிப்பிட்டது, நபி(ஸல்) அவர்களின் சொல், செல் அங்கீகாரத்திற்கு மாற்றமில்லாத கலீஃபாக்களின்  நடைமுறை ஆகும். இந்த அடிப்படையில், கலீஃபாக்களுடைய  இச்செயல்களுக்கு நபி(ஸல்) அவர்களின் ஒப்புதல் இருக்கின்றது. என்பது தெளிவாகின்றது. மேலும் அந்த நடவடிக்கைகள் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்திற்கு முரணாக இல்லை என்பதும் தெளிவான வி­யமாகும்.

இந்த நிலையில், பின்னால் வந்தவர்கள், கலீஃபாக்களின் இந்த நடவடிக்ககைளை பித்அத் ஹஸனா விற்கு ஆதாரமாகக் காட்டி, இவர்கள், மார்க்கத்தில் புதுமைகளை (பித்அத்) உண்டாக்க, இவர்களுக்கு யார் அனுமதி  கொடுத்தார்கள்? கலீஃபாக்களின் நடைமுறைகளுக்கு மேலே உள்ள ஹதீஸ் ஆதாரமாக இருப்பது போல், இவர்களின் நடைமுறைகளுக்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸை காட்ட முடியுமா? அப்படி எந்த ஒரு ஹதீ ம் இல்லை என்பதே உண்மையாகும். மேலே காணப்படும் ஹதீஸ் விஷேசமாக நேர்வழி நடந்த கலீஃபாக்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட அனுமதி என்பதை தெள்ளத்தெளிவாக குறித்துக்காட்டுகின்றது. எனவே, அவர்களின் இந்த வாதமும் தவறேயாகும்.

குத்பா அரபி அல்லாத மொழிகளில் செய்வது பித்அத்தா?

இன்னொரு முக்கிய வி­யம், நமது தமிழகத்தின் பல பகுதிகளில் குத்பாக்கள் தமிழில் செய்யப்பட்டு வருகின்றன. இது பித்அத்து ஹஸனா என்று காரணம் கூறி இதன் மூலம் மற்ற பித்அத்துக்களை நியாயப்படுத்த முற்படுகின்றனர். சமீபத்தில் வெளியான பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பத்வாத் தொகுப்பு ஓர் அறிமுகம் என்ற நூலிலும் இதை பித்அத் என்றே குறிப்பிடுகின்றனர். அதே சமயம் எங்கு அந்த வழக்கம் இருக்கன்றதோ, அங்கு அதை நிறுத்தினால் பிரச்சனை ஏற்படும் என்றிருந்தால் அப்படியே விட்டு விடுவதில் தவறில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் நமக்கு ஆச்சரியத்தை தருகின்றது. பித்அத் என்றால் அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அது பித்அத்து தான்! இருந்தாலும் பரவாயில்லை! என்பது மார்க்கத்தில் மனித அபிப்பிராயத்தை நுழைப்பதாகும்.

உண்மையில் பிற மொழிகளில் குத்பா செய்வது பித்அத்தே இல்லை. ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பி வைத்தோம், (14:4) என்ற வசனத்தின்படி குத்பா என்பது மக்களை நோக்கி, மக்கள் விளங்குவதற்காக செய்யப்படும் உபதேசம் ஆகும். வெள்ளிக்கிழமை 2  ரகாஅத் ஃபர்ழு தொழ வைக்கப்படுவதால் எஞ்சியுள்ள2 ரகாஅத்துக்கு பகரமாக இந்த குத்பா செய்யப்படுகிறது என்ற தவறான எண்ணம் மக்களிடையே பரவலாக காணப்படுகிறது. தொழுகை அல்லாஹ்வுக்காக தொழப்படுகின்றது. குத்பா ? உபதேசம் மக்களுக்காக ? மக்கள் விளங்கி செயல்படுவதற்காக ?      மக்களை நோக்கி செய்யப்படுவதாகும். அதனால் தான் இமாம் குத்பா செய்யும் போது  கிப்லாவை முன் நோக்காமல், மக்களை முன் நோக்கி நிற்கிறார். நபி(ஸல்) அவர்களுடைய காலத்திலோ, நபி(ஸல்) அவர்கள் போற்றிய மூன்று தலைமுறையினருடைய காலத்திலோ, இப்பழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை, என்று காரணங்காட்டி அதனை பித்அத்து என்று சொல்வதும் சரியாகத் தெரியவில்லை. அந்தக் காலக்கட்டங்களில் இருந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அரபி தெரிந்தவர்களாக இருந்தமையால் அவர்கள் விளங்கக் கூடிய மொழியான அரபியில் குத்பா ? உபதேசம் இடம் பெற்றதே உண்மையாகும். ? ஆக குத்பாவின் பிரதான நோக்கம் எந்த மக்களை நோக்கி குத்பா ? உபதேசம் செய்யப்படுகின்றதோ அந்த மக்கள் அந்த குத்பாவை ? உபதேசத்தை விளங்க வேண்டும் என்ற சாதாரண வி­யம் அனைவருக்கும் புரிந்ததே!

குர்ஆன் ஒரே நூலாக தொகுக்கப்பட்டது, அதனை பல பிரதிகளாக எடுத்தது, அகர, இகர, உகர குறிகள் இடப்பட்டது, எப்படி பித்அத்து இல்லையோ, மக்கள் இவ்வுலகில் எளிதாக குர்ஆனை ஓதி, விளங்கி செயல்படுவதை நோக்கமாக கொண்டு செய்யப்பட்டிருக்கின்றனவோ, அதே போல் கதீப் ? உபதேசிப்பவர், செய்யும் குத்பாவை ? உபதேசத்தை எதிரில் உள்ள மக்கள் எளிதில் விளங்கி செயல்படுவதை நோக்கமாகக் கொண்டே குத்பா ? உபதேசம்,  அரபி அல்லாத மொழிகளில் செய்யப்படுகின்றது. எனவே, அதனையும் பித்அத்து என்று சொல்லுவது தவறேயாகும்.

முடிவுரை

மேலே நாம் பார்த்த விளக்கங்கள் எந்த வகையிலும் மார்க்கத்தில் புதிதாக (பித்அத்) ஒன்றை உண்டாக்க முடியாது! உண்டாக்கக்கூடாது! என்பதை தெளிவுபடுத்துகின்றன. இதற்கு மேலும், பித்அத்துக்களுக்கு புதிய புதிய விளக்கங்கள் கொடுத்துக் கொண்டு, வகை வகையாக பிரித்துக்கொண்டு, பித்அத்தை நியாயப்படுத்த முற்படுவது மார்க்க முரணான செயலே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஆதத்தினுடைய சந்ததிகளை வழிகெடுத்து நரகில் கொண்டு சேர்க்க ஷைத்தான் பயன்படுத்தும் இரண்டு மிக

பயங்கரமான ஆயுதங்கள் ´ர்க்கும் (இணை வைத்தல்), பித்அத்து(புதுமைகள்)மேயாகும். எனவே, முஸ்லிம்கள் இவற்றில் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

அல்லலாஹ் (ஜல்) அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் வழிகேடான முயற்சிகளை மேற்கொண்டு தாங்கள் உண்மையிலேயே அழகான காரியங்களைச் செய்வதாக எண்ணிக் கொள்கிறார்களே! அவர்கள்தாம் தம் செயல்களில் மிகப்பெரும் நஷ்டவாளிகள் ஆவார்கள் . (18:103, 104) என்று குறிப்பிடுவது போல், ஷைத்தான் வழிகேடான இச்செயல்களை புண்ணியம் தரும் செயல் என்று நம்பி வழிகெடச் செய்துள்ளான். அதன் முடிவையும் அல்லாஹ் மிக பயங்கரமாக எச்சரிக்கிறான். அதாவது, அவர்களது செயல்கள் யாவும் (நற்செயல்கள் உட்பட) வீணாகும். இறுதித் தீர்ப்பு நாளன்று நாம் அவர்களுக்காக நிறுக்கும் தராசையும் நாட்ட மாட்டோம் ? நரகமே அவர்களுக்கு கூலியாகும். அல்குர்ஆன் 18:105, 106ன் சுருக்கம்

எனவே, பித்அத்தான (புதுமையான) செயல்களை இவை அழகானவை தானே! நன்மை தரக்கூடியவை தானே! சின்ன வி­யம் தானே! என்று இவர்களோ, தம்மை தாமே திருப்தி செய்து கொண்டு பித்அத்துக்களில், இவர்கள் மூழ்குவது ஷைத்தானின் சூழ்ச்சியேயாகும்; அல்லாஹ் எச்சரிப்பது போல் நரகம் புக நேரிடும்.

உண்மையான உள்ளச்சத்துடனும் தெளிவான சிந்தனையுடனும் அறிந்த வி­யங்களில் அல்லாஹ்வை அஞ்சி முறையாக மார்க்க கடமைகளை நிறைவேற்றி வருபவர்கள் மட்டுமே ஷைத்தானின் இந்த மாய வலைகளிலிருந்து, அல்லாஹ்வின் அருள் கொண்டு தப்பமுடியும். அந்த பாக்கியம் பெற்ற கூட்டத்தில் அல்லாஹ், நம் அனைவரையும்,  இணைத்தருள்வானாக! ஆமீன்!!

***************************************

ஐயமும் ! தெளிவும்!!

ஐயம் :   ஜமாஅத் அல் முஸ்லிமீன் ஜமாஅத்தைச் சார்ந்த ஒருவரின் வீட்டுத் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. நிக்காஹ்வில் வழக்கமாக ஒதும் துஆவை இமாம் ஓதினார். மேடையிலிருந்தாலும், அவர்கள் துஆவில் கலந்து கொள்ளவில்லை. மேடையில் இதே ஜமாஅத் நபர், வேறொருவரும் இருந்தார். அவர் கூறியிருந்தால், அந்த இமாம் துஆ ஓதாமல் கூட இருந்திருப்பார். அப்படிக் கூறியிருந்தால் அந்த தீமை நடக்காமல் தடுத்திருக்க அவரால் முடிந்திருக்கும். அவர் அதைச் செய்யவில்லையே! ஏன்?      ஹி. காஜா மொஹிதீன், காட்டூர், திருச்சி.

தெளிவு : நிக்காஹ் மேடையிலிருந்து ஜமாஅத் அல் முஸ்லிமீன் ஜமாஅத்தைச் சார்ந்த அந்த ஒருவர் கூறயிருந்தால் துஆ ஓதாமல் தடுத்திருக்க முடிந்திருக்கும் என எழுதியிருக்கிறீர்கள். இது உங்களின் யூகமேன்றி உறுதியான ஒரு சொல் அல்ல. எவர் வீட்டுக் திருமணமோ அந்த நபர் மேடையில் அமர்ந்திருந்தும் அந்த பித்அத் துஆவில் கலந்து கொள்ளவில்லை என்பதை நீங்களே ஒப்புக்கொண்டும் இருக்கிறீர்கள். அப்படியானால் அவரது சக்திக்கு அப்பால் நிர்பந்த நிலையில் அத்திருமண நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது என்று தானே விளங்க முடிகிறது அப்படியானால் அவராலேயே அந்த பித்அத் துஆ ஓதுவதைத்தடுத்து நிறுத்து முடியவில்லை என்றால், வேறொரு நபர் அதைச் தடுத்து நிறுத்த முடிந்திருக்கும் என்று எப்படி நம்புகிறீர்கள். மேலும் அதிகாரம் பெற்றவர்களேயன்றி வேறு யாரும் ஒரு தவறு நடக்கும் போது அந்த இடத்திலேயே அதைத் தடுத்து நிறுத்த முற்படுவது வீண் சச்சரவையும், குழப்பத்தையுமே ஏற்படுத்தும்.

கஃபதுல்லாஹ்வில் சிலைகளும், சமாதிகளும் நிறைந்திருந்த நிலையில் நபி(ஸல்) அங்கு சென்று வந்து கொண்டிருந்தார்கள். அங்கு ஏகன் இறைவனை மட்டும் வணங்கிக் கொண்டிருந்தார்கள். ஆயினும் அவர்களுக்கு அதிகாரம் வரும் வரையில் அச்சிலைகளை உடைக்கவோ, சமாதிகளை அகற்றவோ முற்படவில்லை. அவற்றை வணங்குபவர்களுக்கு அது தவறு; இணை வைக்கும் குற்றம் என்று அழகிய முறையில் உபதேசித்தார்களே அல்லாமல், அவர்களின் அச்செயலை நேரடியாகத் தடுத்து நிறுத்த முற்படவில்லை. ஆனால் அதிகாரம் பெற்று இரத்தம் சிந்தாமல் கஃபதுல்லாஹ்வைக் கைப்பற்றிய பின்னர் அங்கு எவ்வித சச்சரவுக்கோ, குழப்பங்களுக்கோ இடமில்லாத நிலையில் சிலைகளை உடைத்துத் தகர்த்தார்கள். சமாதிகளைத் தரை மட்டமாக்கினார்கள். ஏகன் இறைனை மட்டும் வணங்கும் புனித இடமாக அதை மாற்றினார்கள். இதையே ஆதாரப்பூர்வமான செய்திகள் அறிவிக்கின்றன. அதற்குமாறாக இன்று  தவ்ஹீத்வாதிகள் என்று பீற்றிக் கொள்வோர், தவ்ஹீத் புரோகித மவ்லவிகளைக் குருட்டுத்தனமாக நம்பி அவர்களின் சொல்லை வேதவாக்காக எடுத்துக் கொண்டு பள்ளிகளிலும் மற்றும் சபைகளிலும் தங்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லாத நிலையில் இப்படிப்பட்ட தவறுகளை தடுக்கப்போய் வீண்சச்சரவுகளையும், குழுப்பங்களையும் உண்டாக்குகிறார்கள். அல்லது அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாது புறக்கணிக்கிறார்கள். இது நபிவழியல்ல. அதனால் சமுதாயத்தில் மேலும் பிளவுகளும், பிரிவுகளும், தனிப்பள்ளிகளும் உருவாகின்றன. தனிப்பள்ளி கட்டி  தனி அதிகாரம் பெற்றுத் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பும் தவ்ஹீத் மவ்லவிகள், இப்படி சபைகளில் ஒழுங்குமீறி நடக்கத் தூண்டுவார்கள்; மற்றபடி சமுதாயத்தை ஒன்றுபடுத்தும் எண்ணம் உண்மையிலேயே உள்ளவர்கள் சபைகளில் நடக்கும் தவறுகளை, அதிகாரம் இல்லாத நிலையில் உடனடியாகத் தடுக்க முற்பட்டு கலவரம் ஏற்பட வழிவகுக்க மாட்டார்கள். முஸ்லிம் சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்தும் எச்செயலையும் ஜமா அத் அல் முஸ்லிமீன் ஜமா அத்தைச் சார்ந்தவர்கள் ஒரு போதும் செய்யமாட்டார்கள்.

ஐயம் :  உங்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி , ஃபிர்அவ்ன் நியமித்த சூன்யக்காரர்கள், மோசஸ் செய்த சூனியத்தைப் பார்த்துத்தானே மனம் மாறினார்கள்? அவர்கள் அல்லாஹ்வை இறைவன் என்ற மனமாற ஏற்றுக் கொண்டார்களா, இல்லையா? பதில் தருவீர்கள் என்று நினைக்கிறேன். பெனடிக்ட் அலெக்ஸ், தூத்துக்குடி.

தெளிவு: உங்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ள படி எனக்குறிப்பிட்டிருக்கிறீர்கள். குர்ஆன் எங்களுக்கு (முஸ்லிம்களுக்கு) மட்டும் சொந்தம் அல்ல; (குர்ஆனாகிய) இது உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை என்று அல்லாஹ் அறிவித்துள்ளான். எனவே அனைத்து மக்களும் நேர்வழி பெற வேண்டும் என்ற நன்நோக்கோடு மட்டுமே குர்ஆன் ஆகிய இந்த வேதப் புத்தகத்தை இறைவன் அருள் புரிந்திருக்கிறான் என உறுதியாக நம்பிக்கைக் கொள்ளுங்கள்.

குர்ஆனில் கூறப்பட்டுள்ள என்று தாங்கள் தெரிவித்திருக்கும் வார்த்தைப் பிரயோகத்திலிருந்து குர்ஆனை தாங்கள் படித்துள்ளீர்கள் என்பதை அறிய முடிகிறது. ஆனால் கிருத்துவ நம்பிக்கை தங்களிடம் மேலோங்கியிருப்பதால்,

குர்ஆனைப் படித்தும், அது கூறும் உண்மைகளை அறியாமல் இருக்கிறீர்கள். ஒருக்கால் வேண்டா வெறுப்புடன் படித்திருந்தால்,  நடுநிலையோடு மீண்டும் கவனமாகப் படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதனால் உள்ளது உள்ளபடி உண்மைகளை அறிய முடியும்.  உங்கள்  ஐயத்திற்கான  தெளிவையும்  குர்ஆனிலிருந்தே  பெறமுடியும்.

இருப்பினும் இப்போது தங்களின் ஐயத்திற்கான தெளிவைத் தருகிறோம். அதுவும் எமது சுய சிந்தனையிலிருந்தோ, அறிவாற்றலிருந்தோ இதனைத் தரவில்லை. குர்ஆனின் 7வது அத்தியாயத்தின் 113வது வசனத்திலிருந்து 126வது வசனம் வரை உங்கள் முன் வைக்கின்றோம். மோசஸ் செய்தது சூன்யம் அல்ல; இறைவன் புறத்திலிருந்து வந்தது என்பதை முழுமையாக நம்பிக்கைக் கொண்டுதான் அந்த சூன்யக்காரர்கள் முஸ்லிம்களாயினர் என்பதை அறிவீர்கள். இதன் மூலமாக வேண்டா வெறுப்புடன் கிருத்துவ தாக்கத்துடன் தாங்கள் குர்ஆனை அணுகிய தவறையும் உணர்ந்து விடுவீர்கள்.

9:113 அவ்வாறே  ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், நாங்கள் வென்று விட்டால் நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா? என்று கேட்டார்கள்.

9:114 ஃபிர்அவ்ன் கூறினான் : ஆம்! இன்னும் நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு  நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்.

9:115 மூசாவே! முதலில் நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் எறியட்டுமா? என்று கேட்டார்கள்.

9:116 நீங்கள் எறியுங்கள் என்று (மூசா) கூறினார். அவ்வாறே அவர்கள் (தம்  கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின்  கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும் படியான மகத்தான சூனியத்தைச் செய்தனர்.

9:117 அப்பொழுது நாம் மூசாவே! நீர் உம்கைத்தடியை எறியும் என அவருக்கு நாம் வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தை) கற்பனை செய்த எல்லாவற்றையும் விழுங்கி  விட்டது.

9:118 இவ்வாறு உண்மை உறுதியாயிற்று அவர்கள் செய்த (சூனியங்கள் )யாவும் வீணாகி விட்டன.

9:119 அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; அதனால் அவர்கள் சிறுமைப்பட்டார்கள்.

9:120 மேலும் அந்த சூனியக்காரர்கள் சிரம் பணிந்து

9:121 அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்;

9:122 அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி), உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே  நீங்கள் அவர்மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும். இந்த நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூசாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியாகும். இதன் விளைவை அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்!

9:124 நிச்சயமாக நான் உங்கள் கைகளையும், கால்களையும் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன் என்று கூறினான்.

9:125 அதற்கு அவர்கள், நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம்தான் திரும்பிச் செல்வோம் என்று கூறினார்கள். 9:126 எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழிவாங்குகிறாய் என்று கூறி எங்கள் இறைவனே! எங்கள்மீது பொறுமையையும் பொழிவாயாக; முஸ்லிம்களாக எங்களைக் கைப்பற்றிக் கொள்வாயாக எனப்பிரார்த்தித்தனர்.

மோசஸ் செய்தது சூனியம் அல்ல; இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சி என்று சூனியக்காரர்கள் நம்பிக்கைக் கொண்டே முஸ்லிம்களாய் ஆனதாக 9:126 வசனம் கூறுவதை கவனியுங்கள். மேலும், சூனியக்காரர்கள் தமது கைத்தடிகளை எறிந்து மக்களின் கண்களுக்கு பாம்புகளாய் போன்ற தோற்றத்தைத்தான் சூன்யத்தால் ஏற்படுத்தினார் என்பதை 9:116 வது வசனம் கூறுகிறது.

மேலும் மூசாவுக்கு சூன்யம் தெரியாது; தமது கைத்தடியை எறிந்தால் என்னவாகும் என்பது கூட தெரியாதவராகத்தானிருந்தார் என்பதை 27:10 வது வசனம் நிரூபிக்கிறது.

உம்கைத்தடியைக் கீழே எறியும் (என இறைவன் கூற அதை அவர் எறியவும்) அது பாம்பு போல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது திரும்பிப் பார்க்காது ஒடிவிட்டார். மூசாவே! பயப்படாதீர்! நிச்சயமாக தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள் என்று இறைவன் கூறினான்.

தமது கைத்தடியை எறிந்தால் அது என்னவாகும் என்பதை அறியாத மூசா, அது பாம்பு போல் நெளிவதைக் கண்டு பயந்து ஓடி விட்ட சம்பவம் இது இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சி என்பதை சூன்யக்காரர்கள் மிகத் தெளிவாக நம்பிக்கைக் கொண்டே முஸ்லிமானார்கள் என்பதும் புரிகிறதல்லவா? அதுமட்டுமல்ல! இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சியானது பாம்பு போல் நெளிந்தாலும், தாங்கள் செய்த திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தை (9:116) எல்லாம், அது விழுங்கி விட்ட (9:117) அதிசயத்தையும் தமது கண்களால் கண்ட சூன்யக்காரர்கள் இறைவன் மீது நம்பிக்கைக் கொண்டு முஸ்லிம்களாயினர் என்பதையும் அறிவீர்களாக.

ஐயம்: பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவதை ஆயிஷா(ரழி) அவர்கள் தடுத்துள்ளதாக சில மவ்லவிகள் கூறுகின்றனர். மேலும் பள்ளிவாசலுக்கு வந்து ஃபர்ளு தொழ வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இல்லை என்றும் கூறுகின்றனரே. இது சரியான சட்டமா? லு.னி.யூ.  ஜஃபருஃல்லாஹ். சென்னை 1.

தெளிவு :  இந்தக் கூற்று தவறானது. பெண்களின் செயல்களை நபி(ஸல்) அவர்கள் பார்த்தால், பனீ இஸ்ரவேலர்களின் பெண்கள் தடுக்கப்பட்டது போல, (நமது) பெண்களையும் பள்ளிக்கு வருவதை தடுப்பார்கள் என அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்துள்ளதாக அப்துர் ரஹ்மான்(ரழி) அவர்களின் மகள் உம்ரா(ரழி) அவர்கள் தெரிவிக்கின்றனார்கள்.  நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூது, முஅத்தா

இக்கருத்து அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் கருத்தாகும். இக்கருத்தைத் தெரிவிக்கும் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள், அவர்களது காலத்திலிருந்த பெண்களை பள்ளிக்குச் செல்லவேண்டாம் என்று தடுத்திருந்ததாக இந்த ஹதீஸில் அறிய முடியவில்லை. மாறாக, பெண்கள் செயல்பாடுகள் குறித்து அன்னை அவர்கள் கொண்டிருந்த அதிருப்தியையே ஹதீஸின் வாசகங்கள் தெரிவிக்கின்றன. அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் கருத்திற்கு மாற்றமாக, உமர் (ரழி) அவர்களின்  செயல்கள் அமைந்திருந்ததையும்  கீழ்க்கண்ட  ஹதீஸ்  தெரிவிப்பதையும்  கவனியுங்கள்.

ஜைது இப்னு அம்ரு இப்னு நுஃபைல் அவர்களின் மகள் ஆதிகா(ரழி) அவர்கள் தமது கணவரான உமர்(ரழி) அவர்களிடம், நீங்கள்  தடுத்தாலே தவிர நான் (பள்ளிக்குச்) செல்வேன் என்று கூறி பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டார்கள். உமர்(ரழி) அவர்கள் (பள்ளிக்குச் செல்வதை) தடுக்கவில்லை அறிவிப்பாளர் : யஹ்யா இப்னு ஸயீத்(ரழி) நூல் : அல் முஅத்தா

அல்லாஹ்வின் தூதரிடமே அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று (அல்குர்ஆன்33:21) அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதால், இது வி­யத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன் மாதிரியை கவனிப்போமாக.

அல்லாஹ்வின் பள்ளிகளில் அல்லாஹ்வின் அடிமைகளான பெண்களைத் தடுக்காதீர்கள் என நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள். அறிவிப்பாளர்கள்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி), அபூ ஹூரைரா(ரழி), நூல்கள் :அஹமத்,  அபூதாவூத், இப்னு குஸைமா

மேலும் ஆயிஷா (ரழி) அவர்கள் பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கத்தில்தான் அவ்வாறு கூறியுள்ளார்கள் என்று நினைப்பவர்கள் ஆயிஷா(ரழி) மீது பெரும் பழியைச்சுமத்துகிறார்கள். பின்னால் என்ன என்ன நடக்கும் என்பதை நபி(ஸல்) அவர்கள் அறியாதிருக்கலாம். ஆனால் அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்த (பார்க்க 52:48) அல்லாஹ்வுக்கும் அது தெரியாது என்று ஆயிஷா(ரழி) நினைத்துச் சொன்னதாக அவர்கள்மீது வீண் பழி சுமத்துவது ஆகும். ஏனென்றால் பெண்கள் பள்ளிக்கு வருவதைக் தடுக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்ட போது, அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்த அல்லாஹ்வும் எதிர்கால பெண்களின் நிலை தெரியாமல் அதை மறுக்காமல் அங்கீகரித்து விட்டான் என்றே அல்லாஹ்மீது  குற்றம் சுமத்துவது ஆகும். இது எவ்வளவு பெரிய ஹிமாலயத் தவறான வாதம் என்பதை முகல்லிது மவ்லவிகள் உணர்வார்களா?

ஐயம்: பூனைகள் வாய் வைத்து அருந்தியதை நாம் அருந்தலாம்? மூ. முஹம்மது ஆஸிஃப், பேரணாம்பட்டு

தெளிவு : பூனைகள்  வாய் வைத்து அருந்தியதை நாம் அருந்தலாம் என்றே அறிய முடிகிறது.

அபூ கதாதா(ரழி) அவர்கள் எனது வீட்டிற்கு வந்தபோது, அவர்கள் உளூ செய்வதற்கான தண்ணீரை நான் (ஒரு பாத்திரத்தில்) ஊற்றிக் கொடுத்தேன். அப்போது ஒரு பூனை வந்து அப்பாத்திரத்திலிருந்து குடிக்க ஆரம்பித்தது. அது குடித்து முடியும் வரை அவர் (அபூ கதாதா (ரழி) அவர்கள்)  அப்பாத்திரத்தை (அப் பூனை குடிப்பதற்கேற்றவாறு) சாய்த்துக் கொண்டிருந்தார். அவரையே நான் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவர், என் சகோதரரின் மகளே!

நீ அச்சரியப்படுகிறாயா? என்று கேட்டார். நான் ஆம் என்றேன்.   பூனைகள் அசுத்தமானவை அல்ல; அவைகள்  உங்களை அண்டி வரக்கூடியவைகள் என்று  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ கதாதா(ரழி) அவர்கள் கூறியதாக கஃபு இப்னு மாலிக்(ரழி) அவர்களின் புதல்வி சுப்ஷா(ரழி) அவர்கள், நூல்கள் : அபூதாவூத், திர்மிதி, அஹ்மத், முஅத்தா, இப்னுமாஜா

அபூ கதாதா(ரழி) அவர்கள் பூனை குடித்த தண்ணீரைக் கொண்டு உளூச் செய்தார்களா அல்லது அருந்தினார்களா என்ற விவரம் இந்த ஹதீஸில் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், பூனைகள் அசுத்தமானவை அல்ல; அவைகள் உங்களை அண்டி வரக்கூடியவைகள் என்று நபி(ஸல்) அவர்கள் தெரிவித்திருப்பதால், பூனைகள் வாய் வைத்து அருந்திய நீரை பயன்படுத்தலாம் என்றறிய முடிகிறது.

ஐயம் :  இறந்து விட்ட பிறகுதான் ­ஹீத்கள் எனும் நிலையை மனிதன் அடைய முடியும் என்பதுதான் உண்மை; தல்ஹா(ரழி) என்ற நபித்தோழர் உயிரோடு இருந்த போதே நபி(ஸல்) அவர்கள் தவ்ஹா(ரழி) அவர்களை ­ஹீத் என்று குறிப்பிட்டதாக எங்கள் ஊரிலுள்ள மவ்லவி ஒருவர் சொல்கிறாரே உண்மையா?  றீ. முஹம்மது இல்யாஸ் வாணியம்பாடி

தெளிவு : தல்ஹா(ரழி) அவர்களைக் குறித்து கைஸ்(ரழி) எனும் நபிதோழர் ஒருவர் குறிப்பிட்டுள்ளனர். அதை இங்கே காணப்போம்.

உஹத் போரில் தல்ஹா(ரழி) அவர்களின் ஒரு கை செயலிழந்து போயிருந்த நிலையில் கூட, அக் கையின் துணையால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை தல்ஹா(ரழி) அவர்கள் காத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று கைஸ்(ரழி), அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : கைஸ் (ரழி), நூல்கள் : புகாரி, இப்னு மாஜ்ஜா

நபி(ஸல்) அவர்கள் கூறியதை இப்போது கவனிப்போம் : தங்கள் பணியை முழுமையாக நிறைவேற்றியவர்களில் இவரும் ஒருவர் என்று நபி(ஸல்) அவர்கள் தல்ஹா (ரழி) அவர்களைப் பார்த்துக் கூறினார்கள். அறிவிப்பாளர் : முஆவியா(ரழி),  நூல் : இப்னு மாஜ்ஜா

இந்த ஹதீஸைப் பதிவு செய்து திருகுர்ஆனின் 33:23வது வசனமும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வசனமாவது:

முஃமின்களிலுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள், அவர்களில் சிலர் (­ஹீதாக வேண்டும் என்ற) தமது இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் (­ஹீதாக ஆவதற்கு ஆர்வத்துடன் சந்தப்பத்தை) எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும்  மாறவில்லை அல்குர்ஆன் 33:23

அடுத்துள்ள ஹதீஸையும் கவனிப்போம் : நபி(ஸல்) அவர்கள் தல்ஹா(ரழி) அவர்களை கடந்து சென்ற போது, இவர் பூமியில் நடமாடும் ­ஹீம் ஆவார்  எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி) நூல் : இப்னு மாஜ்ஜா

மேற்கண்ட ஆயத்தையும், ஹதீஸ்களையும் அறியும் போது, ­ஹீதின் அந்தஸ்தை  தல்ஹா(ரழி) அவர்கள் பூமியில் உயிருடன் இருந்தபோதே பெற்றுள்ளார் என்பதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அறிந்திருப்பதை நாம் காண முடிகிறது. இது நபி(ஸல்) அவர்களுக்குரிய சிறப்பாகும். இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்துக் கொண்டு, உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எவருக்கும் ­ஹீத் என்ற நற்சாட்சி பத்திரம் வழங்கும் உரிமை மனிதர்களில் எவருக்கும் இல்லை என்பதை நாம்  அறிந்து கொள்ள வேண்டும்.

Previous post:

Next post: