போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்வது இறை நிராகரிப்பே! ´ஷிர்க்கே!

in 2018 மே

போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்வது இறை நிராகரிப்பே! ´ஷிர்க்கே!

புளியங்குடி அபூ ஹனிஃபா

“(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன், அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. 2:186

கபுரில் கையேந்துபவர்கள் அல்லாஹ்வின் சோதனையில் தோற்று ஈமானை இழந்து, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுல கில் விதித்ததை அடையும் போது அவுலி யாக்களே கொடுத்தார்கள் என்று நம்பி பெருமையடைவது போல், அதையே மக்களுக்குக் கூறித் திரிவது போல், போராட்டங்களின் மூலம் அரசிடம் கையேந்துபவர்களும் அல்லாஹ்வின் சோதனையில் தோற்று ஈமானை இழந்து, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகில் விதித்ததை அடையும் போது, பெரும் மகிழ்ச்சி அடைந்து, தங்களின் போராட்டத்தால் கிடைத்த வெற்றி என இறுமாப்படைகின்றனர்.

தங்களின் பத்திரிகைகளில் பெரிதும் விளம்பரப்படுத்திப் பெருமை கொள்கின்றனர். “அணு அளவு பெருமையுடையவனும் சுவர்க்கம் நுழைய முடியாது” என்ற நபி(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கையை ஷைத்தான் மறக்கச் செய்துவிடுகிறான்.

ஆக கபுரில் கையேந்துபவர்களுக்கும், அரசிடம் கையேந்துபவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.2:186 இறைக்கட்டளைப்படி செத்தவர்களிடம் கையேந்துபவர்களும், உயிரோடிருப்பவர்களிடம் கையேந்துபவர்களும் ஒரே குற்றத்தையே செய்கின்றனர். இறைவனுக்கு இணை (ஷிர்க்) வைக்கின்றனர்.

 “அல்லாஹ் கொடுப்பதை எவரும் தடுக்க முடியாது. அல்லாஹ் தடுப்பதை எவரும் கொடுக்க முடியாது” என்பதை ஓர் இறை நம்பிக்கையாளன் ஒருபோதும் மறுக்க முடியாது. இன்று முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் அனைத்தும் அவர்கள் தங்கள் கைகளால் தேடிக்கொண்டவையே என்று 2:95, 195, 3:117,182,4:62, 30:41, 42:30, 59:2 இறைவாக்குகள் எச்சரிப்பதை இன்று முஸ்லிம்கள் உணர்வதில்லை.

2:186 இறைக் கட்டளையை நிராகரித்து அல்லாஹ்வை நம்பாமல் அரசை நம்புகின் றனர். இது பெரும் குற்றம் இறை நிராகரிப்பு.

“முன்னிருந்தோரை ஆட்சியாளர்களாய் ஆக்கியது போல், உங்களில் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிபவர்கள் பூமிக்கு ஆட்சியாளர்களாக்கி வைப்பதாக வும், அவர்களுக்கென அவன் பொருந்தியுள்ள மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்துவதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அமைதியானதாய் மாற்றுவதாகவும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் எனக்கு எதையும் இணைவைக்காமல், என்னையே வணங்குவார்கள். இதன் பின்னர் மாறு செய்வோரே பாவிகள். (24:55)

இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் இறையச்சத்துடன் மறுமையில் உறுதி யான நம்பிக்கையுடன் படித்து உணர்கிற வர்கள், அல்லாஹ் 2:186 இறைவாக்கில் கட்டளையிடுவது போல் “நான் அருகிலேயே இருக்கிறேன். அழைப்போரின் அழைப்பிற்கு அவர் அழைக்கும்போது விடையளிக்கிறேன். எனவே, அவர்கள் நேர் வழியைப் பெற என்னிடமே கேட்கட்டும். என்னையே நம்பட்டும்” (2:186) என்று கட்டளையிடுவதற்கு அடிபணிந்து அல்லாஹ்வையன்றி படைப்புகளிடம் இறந்தவர்களிடமோ, உயிரோடிருப்பவர்களிடமோ கையேந்தமாட்டார்கள். 49:14 இறைவாக்குக் கூறுவது போல் உள்ளத்தில் நம்பிக்கை நுழையாமல் பெயர் தாங்கி முஸ்லிம்களாக இருப்பவர்களும், 12:106 இறைவாக்குக் கூறுவது போல், இணை வைப்புடன் (ஷிர்க்) நம்பிக்கைக் கொண்டவர்கள் மட்டுமே, 2:186, 7:3, 18:102-106 இறைவாக்குகளை நிராகரித்து படைப்புகளிடம் தங்களின் தேவைகளுக் காகக் கையேந்துவார்கள்.

Previous post:

Next post: