பெண்மணியே உன் வழி என்ன?

in 2018 மே

பெண்மணியே உன் வழி என்ன?

கு. நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை

இஸ்லாத்தின் இனிய சகோதரியே!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தில் ஆண்கள் ஓரளவு விழிப்புணர்வுடன் செயல்படுகின்றார்கள். குர்ஆன், ஹதீஃது வழியில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டு வருகிறார்கள்.

ஆனால் சகோதரியே! உங்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் நிலையை சற்று சிந்தித்துப்பார். இஸ்லாம் இயம்பும் முறைப்படி உன் வாழ்க்கை அமைந்துள்ளதா? அன்னை பாத்திமா(ரழி) வாழ்ந்த வாழ்க்கை வாழ்கின்றாயா? பெருமானார் (ஸல்) அவர்களின் வழியை பின்பற்றுகின்றாயா? மறுமையை நினைத்து, நரகத்தை நினைத்து வருந்தினாயா? இஸ்லாத்தில் பிறந்து விட்டோம் என்று இருமாப்பில் இன்பம் கண்டு கொண்டு இருக்கின்றாய்.

உன் வாழ்க்கையை சற்றே குர்ஆன், ஹதீஃதுடன் ஒப்பிட்டு மார்க்கத்தைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டு.

“மார்க்கக் கல்வி கற்றுக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் மீது (கட்டாய) கடமை” என்று அல்லாஹ்வும், ரசூலும்(ஸல்) கூறியுள்ளதைப் பார்.

குர்ஆன், ஹதீஃதை அறிந்து கொண்டால் அனாச்சாரங்களை அழிக்க நீயே முன் வருவாய்.

“(நபியே!) அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருந்த ஒவ்வொருத் தாயும் தான் பாலூட்டும் குழந்தையை மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பஸ்த்திரியின் கர்ப்பமும் சிதைந்து விடுவதை நீர் காண்பீர். மனிதர்களை சித்தமிழந்தவர்களாக நீர் காண்பீர். அவர்கள் (சித்தம் இழக்க காரணம்) போதையினால் அல்ல. அல்லாஹ்வுடைய வேதனை மிகவும் கடினமானது. (அதனைக் கண்டு திடுக்கிட்டு) அவர்கள் சித்தமிழந்து விடுவார்கள்” (22:2) என்று அல்லாஹ் தன் திருகுர்ஆனில் கூறுகின்றான். சகோதரியே! சிந்தித்துப் பார்!

“நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கின்றேன். அந்த இரண்டையும் கடை பிடிக்கும் காலம் எல்லாம் நீங்கள் ஒரு போதும் வழிதவறவே மாட்டீர்கள். ஒன்று குர்ஆன்; இரண்டு என்னுடைய சுன்னத் தான வழிமுறை” அறிவிப்பாளர்: அனஸ் (ரழி), நூல்: முஅத்தா என்று நபி(ஸல்) கூறி இருக்க, நீ யாரைப் பின்பற்றுகின்றாய்? யாருடைய பாதையை பின்பற்றி உன் வாழ்க்கைத் தேய்கிறது? பண்டிதர்கள், தலைவர்கள் என்று தன்னை பறைசாற்றிக் கொள்பவர்கள் கூறுவதை யயல்லாம் சீர்தூக்கிப் பார்க்காமல் மார்க்கம் என்று எடுத்து நீ நடக்கின்றாய். இறைவன் கூறுவதைப் பார், ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக பண்டிதர்களில் குருக்களிலும் அநேகர் மக்க ளின் சொத்துக்களை தவறான முறையில் சாப்பிடுகின்றார்கள்.

மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுக்கின்றார்கள். (அல்குர்ஆன்: 9:34) பெரியவர்கள் சொல்வதெல்லாம் சிந்தித்து விளங்காமல் மார்க்கம் என்று எண்ணினாயே? இறைமறை கூறுவதைப் பார். மேலும் (17:27, 24:51, 28:50, 20:124) ஆகிய வசனங்களையும் உற்றுநோக்கு; உன் நிலையையும் நீ எண்ணிப்பார். உனக்கு ஏதாவது தேவைப்பட்டால் அவ்லியாக்களின் கப்ரை (புதைக்குழி) நோக்கி ஓடுகின்றாய்; யார் யாருக்கோ நேர்ச்சை செய்கின்றாய்; முரீது கொடுக்கும் முல்லாக்களின் காலில் விழுந்து தன்மானம் இழந்து நிற்கின்றாய். மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கு நபி(ஸல்) எவ்வளவு பாடுபட்டார்களோ, அத்தனை மூட நம்பிக்கை களையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு கும்மாளம் போடுகின்றாய்; இது தான் உன் இஸ்லாத்தின் பண்பா? இதுதான் நீ இஸ்லாத்தின் மீது வைத்துள்ள அன்பா? அல்லாஹ்வையன்றி நீ அழைப்பவர்கள் அழிந்து விடுபவர்கள் என்று நபி(ஸல்) அறிவுரை பகர்ந்தார்கள்.

ஆனால் நீ செய்வது என்ன? உன் தேவை நிறைவேற “யாமுஹைய்யத்தீன்” என்று அழைக்கின்றாய், என்றோ, எங்கேயோ மெளத்தாகி விட்டவர் உன் அழைப்பை கேட்கிறார் என்றால் விந்தையாக உள்ளது. உனது கூற்று நியாயமானதா? குர்ஆனுடன் ஒப்பிடுக. நபியே! கப்ருக்குள் கிடப்பவர்களே நீர் செவுயுறச் செய்யமுடியாது (அல்குர்ஆன்: 35:32)

உன் கூற்று சரியா? குர்ஆனின் கூற்று சரியா? சிந்தித்துப்பார்! இணை வைக்கும் காரியத்தில் நீ உன்னை ஈடுபடுத்திக் கொள் ளாதே! அல்லாஹ்வின் தகுதிகளை அவனது அடியார்களுக்குத் தந்து உன்னை நீயே அழித்துக் கொள்ளாதே. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான் (4:48)

நீ இணை வைத்தால் உன் நிலை என்ன? உனது பிரார்த்தனை இறைவனை நாடியே இருக்க வேண்டும். உனது வணக்கங்கள் இறைவனுக்காகவே இருக்கவேண்டும். எவர்கள் மெய்யாகவே (அல்லாஹ்வை) விசுவாசம் கொண்டு நற்கருமங்கள் செய்கின்றார்களோ அவர்கள் “பிர்தவ்ஸ்” என்னும் சுவர்க்கத்தில் உபசரிக்கப்படுவார் கள். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். (18:107,108)

நீ இறைவன் மீது வைத்த அன்பிற்காக இறைவன் உனக்கு சுவர்க்கத்தை நிரந்தர மாக தருவதாக வாக்களிக்கின்றான். இதைவிட மாபெரும் பாக்கியம் உனக்கு என்னவேண்டும். இதோ! இறைவனை விட்டு அவனது அடிமைகளை பாதுகாப்பிற்கு அழைப் பதைப் பற்றி இறைவன் கூறுவதைப் பார்! நிராகரிப்பவர்கள் என்னையன்றி என்னுடைய (நல்) அடியார்களை தம் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா?

நிச்சயமாக அவர்களுக்காக நாம் நரகத்தையே தயார் செய்து வைத்துள்ளோம். (அல்குர்ஆன்:18:102) அல்லாஹ்வையன்றி அவனது அடியார் களை அழைப்பதை குறித்து இறைவன் எவ்வளவு கடுமையாக எச்சரிக்கின்றான் என்பதை ஆராய்ந்துப்பார். இவ்வுலக வாழ்க்கை உன்னை வீண் வழியில் அழைத்து சென்றுவிடாமல் எச்சரிக்கையாக இரு. உனக்கு ஏதாவது ஒரு தீங்கு நேர்ந்தால் உடனே மண்ணறை (புதைக்குழி)யை நோக்கி ஓடுகிறாய். உன் ஓட்டத்தின் முடிவு உன்னையே நரகிற்கு அனுப்பும்; அதற்கு முன் உஷாராகிவிடு, உன் செயல்களை திருத்திக் கொள். கப்ரு மோகம் கொண்டு அலையும் உன் நிலையை உடன் மாற்றிக் கொள்.

“நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து (ஒருவரை) நல்லடக்கம் செய்தோம். வேலை முடிந்து திரும்பும் போது ஒரு பெண்மணி! எங்களை முன்னோக்கி வந்தார். அருகே நெருங்கியபோது நபி(ஸல்) அவர்களின் அன்பு மகளார் பாத்திமா(ரழி) அவர்கள் தான் வந்து கொண்டிருந்தார்கள். “”வீட்டை விட்டு எங்கே புறப்பட்டுவிட்டீர்?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர். இந்த “மைய்யித்தீன் குடும்பத்தினர் மீது அனுதாபப்பட்டேன். (அதனால் அங்கே சென்று ஆறுதல் கூறி வருகிறேன்) என்று பாத்திமா(ரழி) அவர்கள் கூறினார்கள். நீ அவர்களுடன் கப்ருஸ்தலத்துக் சென்றாயா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர். அதற்கு பாத்திமா(ரழி) அவர்கள் “அல்லாஹ் காப்பாற்றுவானாக! நீங்கள் இது பற்றி எவ்வளவோ கூறியிருப்பதை நான் செவியேற்றிருக்கும்போது (நான் எப்படிக் கப்ருஸ்தானுக்குப் போவேன்) என்று கூறினார்கள்.

நீ மட்டும் அவர்களுடன் கப்ருக்குச் சென்றிருந்தால் உன் தந்தையின் பாட்டன் சுவனத்தைப் பார்க்கும் வரை, சுவர்க்கத்தை நீயும் பார்க்க முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்) அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி) (அஹமத், அபூதாவூத், நஸயீ, இப்னு ஹிப்பான், ஹாக்கிம்) கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண் களையும் அதன் மீது விளக்கு கொளுத்துப வர்களையும் நபி(ஸல்) சபித்தார்கள். அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரழி), நூல்:சுனன் நபி(ஸல்) அவர்களின் சாபம் உனக்குத் தேவையா? யோசித்து உன் செயலைத் திருத்திக்கொள். முரீது விற்பனை முல்லாக்கள் உன்னை முடக்க முற்படுவார்கள் முடங்கிவிடாமல் ஏகத்துவ பாதையில் முன்னேறிச் செல். அல்லாஹ்வின் குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளை யும் (சுயக்கருத்தை புகுத்தாமல்) கடைபிடித்துச் செல். அதுவே உன்னை சுவர்க்கத் திற்கு அழைத்துச் செல்லும். சுந்தர வழிகளாகும். வஸ்ஸலாம்.

Previous post:

Next post: