அந்நஜாத் – மார்ச் 1988

in 1988 மார்ச்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்

அந்நஜாத்

இஸ்லாமிய  இலட்சிய  மாத  இதழ்

நோக்கம் : 2   –  விளக்கம் : 12

ஜ.அவ்வல் : 1408 – மார்ச் -1988

இதழின் உள்ளே…..

* நடுநிலைச் சமுதாயம்!

* விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

* துரைக்கோல் பரிந்துரைகள் செல்லாத நாள்

* நபி வழித் தொகுப்பு வரலாறு!

* முஸ்லிம்களின் சிந்தனைக்கு!

* அவுலியாக்கள் ஓர் விளக்கம்!

* நமது அழைப்புகளெல்லாம் வீணாவதேன்!

* கொண்ட ஈமானும் கற்ற கல்வியும்….

* நபி வழியில் நம் தொழுகை!

* பெண்மணியே உன் வழி என்ன?

* முதல் நூற்றாண்டின் முஸ்லிமாகத் திகழ்கிறார்!

* ஐயமும்!! தெளிவும்!!

**********************************************

நடுநிலைச் சமுதாயம்!

இன்று உலகில் எங்கு நோக்கினும் பீதி, பயம், விரோத குரோத உணர்வுகள் இப்படி அமைதியற்ற ஒரு நிலை நீடித்து வருவதையே பார்க்கிறோம். பலமுடையவர்கள் தங்கள் பலத்தை வைத்து பயமற்றவர்களை நியாயமற்ற செயல்களால் தீமைகள் நியாயப்படுத்தப்படுவதையும் பார்க்கிறோம். இன்று உலகில் நடைபெற்று வரும் காரியங்களில் பெரும்பாலானவை நியாயத்திற்கு விரோதமானவை என்பதையும் மக்கள் ஒப்புக் கொள்ளத்தான் செய்கிறார்கள். ஆனால் அந்த நியாயமற்ற காரியங்களைப் போக்கி, நியாயத்தை நிலை நாட்ட வகையறியாது தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் அது முடியாதது தான்.

ஆனால் நடுநிலைச் சமுதாயமான “முஸ்லிம்” சமுதாயத்தால் அது சாத்தியமான ஒரு காரியமேயாகும்ட. சத்தியத்தை நிலை நாட்ட தேவையான அனைத்து வழிகாட்டல்களும் குர்ஆனிலும், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறைகளிலும் அழகாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. கைசேதம் என்னவென்றால் இந்த முஸ்லிம் சமுதாயமும், தான் இறுகப் பிடிக்க வேண்டிய அல்லாஹ்வின் வழிகாட்டல்களான அல்குர்ஆனையும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் கைவிட்டு, இதர சமூகங்களைப் போல் இவர்களும் மனித அபிப்பிராயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பல பிரிவினர்களாகப் பிரிந்து கிடக்கின்றனர். நடுநிலைச் சமுதாயமே இவ்வாறு சீரழிந்து கிடக்கும்போது, உலக அமைதியை எவர் மீட்டுத் தரமுடியும்? இந்த அவல நிலைக்கு நடுநிலைச் சமுதாயமான முஸ்லிம் சமுதாயம் கண்டிப்பாக அல்லாஹு(ஜல்)விடம் பதில் சொல்லியேயாக வேண்டும். அவர்கள் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றி, அதன் மூலம் உலக சமாதான, சமத்துவ, சகோதரத்துவ வாழ்க்கையையும், அதன் மூலம் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் பெற நாடினால் மனித அபிப்பிராயங்களின்படி பல பிரிவினர்களாக இருப்பதை உடனடியாகக் கைவிட்டு அல்லாஹ்வின் ஆணைப்படி “முஸ்லிம்” என்ற ஓரணியில் இணைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கான முயற்சிகளில் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய தருணமிது. இணைந்து செயல்பட உறுதி பூண்டு ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட அல்லாஹு ரப்பில் ஆலமீன் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக. ஆமீன்.

***************************

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

* மாநில ஜ.உ.சபையை குற்றம் சாட்டும் தாங்கள், உங்கள் அணி மெளலவிகளின் தமிழ்நாடு ஜ.உ.சபையை மட்டும் குற்றம் கூறுவது இல்லையே! ஏன்?நபிவழியில் நடப்பதாகக் கூறும் இவர்கள் சமுதாயத்திலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்ட ஜ.உ.சபையை வைத்துள்ளார்களே! இது நபி வழியா? M.அபூநபீல் B.A. தேங்காள்ப்பட்டிணம்.

ஜ.உ.சபை, அறிஞர்களின் சபை – என்ற சொல்லே அறிஞர்கள் என்று ஒரு பிரிவினரையும், அறிஞரல்லாதவர்கள் என்ற ஒரு பிரிவினரையும் ஏற்படுத்தி, சமுதாயத்தைக் கூறுபோடுவதையே எடுத்துக் காட்டுகிறது. இச்சபையில் உளளவர்கள் அறிஞர்கள் மற்றவர்கள் இவர்கள் கூறுவதை மார்க்க முடிவாகக் கொண்டு வாழ வேண்டுமென வற்புறுத்துகிறார்கள். இவ்விதமே நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்து அரபி பேரறிஞர்கள் “தாருந்நத்வா” என்ற அறிஞர்கள் சபையை உருவாக்கி மார்க்கத்தின் புரோகிதர்களாக இருந்தனர். அவர்கள் சொல்வதையே மார்க்கமாக எடுத்து வாழ வற்புறுத்தினார்கள். ஆனால் அதனை நபி(ஸல்) அவர்கள் வரவேற்காமல்,அச்சபை வேரோடு வேரடி மண்ணோடு அழித்தொழியச் செய்தனர். ஆனால் இன்றைய மெளலவிகள் ஜ.உ.சபை அமைப்பதன் மூலம் புதிய “தாருந்நத்வாவை” உண்டாக்கி புரோகிதமற்ற இஸ்லாத்தில் புரோகிதத்தை  அழைக்கிறார்கள். ஒவ்வொரு முஸ்லிமும், குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளங்கியே வழிபட ஆணையிடுகிறது இஸ்லாம்.

குர்ஆனில் தலைசிறந்த விளக்க மேதையாக கணிக்கப்படும் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள், “ஃபாத்திருஸ் ஸமவாத்தி வல் அர்ழி” என்ற ஆயத்திலுள்ள “ஃபாத்திரு” என்ற பதத்திற்கு உண்மையான அர்த்தத்தை இரு காட்டு அரபிகளிடமிருந்து கற்றேன் என்று கூறுகிறார்கள். ஒரு தடவை இரு காட்டாபிகள் ஒரு கிணறு விஷயமாக சண்டையிட்டுக்கொண்டு வந்தனர். அதில் ஒருவர் நான் கிணற்றை முதலில் வெட்டி வடிவமைத்தேன் (Designed) என்றார். அப்போது தான் “ஃபாத்திரு” என்ற பதத்தின் உண்மையான பொருள் புரிந்தது என்கிறார்கள். (அல்-இத்கான், பாகம் 2, பக்கம் 113)

எனவே அறிவு எல்லோரிடமும் உண்டு. எல்லோரும் முயற்சித்தால் விளங்கி, அறிஞர்களாக முடியுமென்பதே குர்ஆனும், ஹதீஸும் காட்டும்  உண்மை நிலை. இந்நிலையில், மக்களை அறிஞர்கள், அறிஞர்களல்லாதவர்கள் என இரு கூறுபோடுவதும் தவறேயாகும். இவ்விஷயத்தில் தவறு செய்பவர்கள் அனைவரும் நமது விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே! இந்நிலையில் தான் நமது அணி மெளலவிகள் உருவாக்கிய தமிழ்நாடு ஜ.உ.சபையையும் வேண்டாமென்கிறோம். அதுவே அவர்கள் நம்மை விட்டு பிரிந்து செல்ல முக்கிய காரணங்களில் ஒன்று என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கும், நம்மை விளங்கியவர்களுக்கும், புரியும். ஜ.உ.சபை அமைப்பது நபிவழியல்ல.

*தங்களை காதியானி என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்களே? உண்மையா? M.அபூநபீல் B.A., தேங்காய்ப்பட்டணம்.

கொள்கையை கொள்கையால் எதிர்க்க ஆற்றல் அற்றவர்கள், மக்களைத் திசை திருப்ப இப்படிப்பட்ட அவதூறுகளை அள்ளி வீசுவது வழக்கம், யார் காதியானிஸத்தை முறியடிக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்? யார் காதியானிஸத்திற்குத் துணை போகிறார்கள் என்பதற்குக் காலமே பதில் சொல்லும்.

* பட்டப்பெயர் வைத்து அழைக்கக்கூடாது என்பதற்கு திருகுர்ஆனில் இருந்து 49:11வது வசனத்தை எடுத்து எழுதியிருந்தழுந்தீர்கள் இன்று உலகளவில் “அகமதியா ஜமாத்” என்று பெயர் வைத்துள்ள முஸ்லிம்களில் ஒரு பிரிவினரை தாங்கள் “காதியானிகள்” என்று “பட்டப்பெயர்” சூட்டி அழைத்தும்; எழுதியும் வருகின்றீர்களே? தாங்கள் திருக்குர்ஆன் வசனத்தைத் தெரிந்திருந்தும், இறைக் கூற்றை மீறி செயல்பட்டு வருகிறீர்களே! குர்ஆன் 49:11 வசனப்படி தாங்கள் அநியாயக்காரராக மாட்டீர்களா? இதிலிருந்து தங்களுக்கு மட்டும் விதி விலக்கு உண்டா? அ.சலீமுல்லாஹ், சேரன்மகாதேவி.

49:11 வசனப்படி பட்டப்பெயர் சூட்டுவது குற்றம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் காதியானி என்பது பட்டப் பெயர் என்று நீங்கள் கூறுவது தான் தவறாகும். இந்த 49:11 வசனம் இறங்கிய நபி(ஸல்) அவர்களின் காலத்தில், ஹபஷி, பார்ஸி, ரூமி என்று சில நபித்தோழர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனர். புகாரீ, ஜீலானீ என்றும், இன்னும் இதுபோன்று அவரவர்களின் ஊர்களின் பெயர்களால் அழைக்கப்பட்டு வருவது நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை இஸ்லாமிய வழக்கில் இருந்து வருகின்றது. இது பட்டப் பெயரை சார்ந்ததாக இருந்தால் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு அழைத்து வந்ததைத் தடுத்திருப்பார்கள். குலாம் அஹ்மது காதியானில் பிறந்திருப்பதால், காதியானி என்றும், குலாம் அஹ்மதைத் தக்லீது செய்பவர்களைக் காதியானிகள் என்றும் சொல்வது குற்றம் ஆகாது. குலாம் அஹ்மதைத் தக்லீது செய்பவர்கள் தங்களைக் குலாம் அஹ்மதிகள் என்று சொல்லிக் கொண்டால் அதுவே நியாயமாகும். யாரும் அதை மறுக்க முடியாது. அவர்கள் தங்களை அஹ்மதிகள் என்று அழைத்துக் கொள்வது உண்மைக்குப் புறம்பானதாகும். எனவேதான் அஹ்மதிகள் என்ற தவறான கூற்றை விட்டு காதியானிகள் என்று சரியாகக் குறிப்பிடுகிறோம்.

* “காதியானிகளின் ஆகாசப்புளுகு” என்ற நூல் விளம்பரத்தின் மூலம் வருமானத்திற்கு வழிகோலியிருக்கிறது நஜாத்! பிழைக்கத் தெரிந்தவர்கள்! என்று காதியானிகள் தங்கள் பத்திரிக்கையில் எழுதியுள்ளார்களே! முஹம்மது ஸலீம், திருச்சி.

காதியானிகளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் முஸ்லிம் சமுதாயத்திற்கு எந்த அளவு இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளவே அந்த விளம்பரத்தை வெளியிட்டிருந்தோம்.

நமது அந்த அறிவிப்பைப் பார்த்து இதுவரை காதியானிகள், காதியானிகளின் போலித்தனத்தைத் தெரிந்து கொள்ள ஆர்வமுடையவர்கள் இரு சாராருமாக 9 நபர்களே M.O. அனுப்பியுள்ளனர். காதியானிகளுக்கு மக்களிடையே இருக்கும் செல்வாக்கு இதிலிருந்தே நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. தங்களுக்குப் பெரும் செல்வாக்கு இருப்பதாக தங்களின் எழுத்துக்களின் மூலம் பிரமையை உண்டாக்குவதில் வல்லவர்கள் காதியானிகள். அதே பாணியில் எழுதியுள்ளனர். நாம் அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.

***********************************************

துலாக்கோல் – கிரிட்டிக்

பு.மி.பிப்ரவரி 88ல் வெளியான கடமையான குளிப்பு சம்பந்தப்பட்ட மார்க்க விளக்கம் மிகவும் தவறானது. அதன் விரிவான விளக்கத்தை இந்த இதழில் இடம் பெறச் செய்வதாக வாக்களித்திருக்கிறோம். அது வருமாறு:

“தஹ்தீபுத் தஹ்தீப்” 7ம் வால்யூம் 207ம் பக்கம் இடம் பெறும் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்களின் தீர்ப்பில் பூமி குறிப்பிட்டிருந்த “ஏனெனில் அதா இப்னுஸ்ஸாயிப் குழப்பத் துவங்கிய பின்னரும் அவர் மூலம் ஹம்மாது இப்னு ஸலமா அறிவிப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது” என்ற பகுதி இல்லை. மாறாக சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஸஹீஹானது என்ற கருத்திலேயே எழுதியுள்ளார்கள். இதைத் தெளிவாக அவர்கள் தனது “தல்கீஸ்” என்ற நூலில் 52ம் பக்கம் குறிப்பிடுகிறார்கள். இதனை இமாம் ஷவ்கானி(ரஹ்) தனது நைலுல் அவ்த்தார் பாகம் 1, பக்கம், 247ல் ஊர்ஜிதம் செய்கிறார்கள். அல்பானி அவர்களும் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்களின் முடிவை ஏற்றுக்கொண்டு தமது அபிப்பிராயத்தையும் கூறியுள்ளார்கள்.

மேலும் இந்த ஹதீஸுக்கு வலுவூட்டும் வகையில் ஸிஹாஹுஸ் ஸித்தாவில் 11 ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. விரிவை அஞ்சி 5 ஹதீஸ்களை மட்டும் இங்கு இடம் பெறச் செய்துள்ளோம்.

இப்படிப்பட்ட ஒரு ஹதீஸை, “பலவீனமானது என்று கூறுவதை விட இட்டுக் கட்டப்பட்டது என்று கூறலாம் என பு.மி. எழுதி இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. கபுரு வழிபாட்டுக்காரர்களும், முகல்லீதுகளும், “சஹீஹான ஹதீஸ்களை எல்லாம் அவர்களுக்குப் பிடிக்காவிட்டால் லயீஃப் என்று சொல்லி விடுவார்கள்” என்று நம்மைப் பற்றி கூறும் பொய்க் குற்றச்சாட்டை, உண்மைப்படுத்துவதாக பு.மி.யின் வாசகங்கள் அமைகின்றது என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் கவனத்திற்கு கொள்ளவும்.

புகாரியில் இது குறித்து இமாம் புகாரி(ரஹ்) அவர்களின் தலைப்பு:

முடியின் வேர்ப்பாகமாகிய மண்டைத்தோல் வரை தண்ணீர் ஊடுருவிச் சென்றுவிட்டதென்ற உறுதி ஏற்படும்  வரை தலை ரோமங்களைக் கோதிக் கழுவுதல்.

1. அன்னை ஆயிஷா(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்களுக்கு (ஜனாபத்) ஏற்பட்டு குளிக்கும்போது, ஆரம்பமாக இரு கைகளையும் கழுவிக்கொண்டு,தொழுகையின் ஒளூ போன்று, ஒளூ செய்துகொண்டு குளிப்பார்கள். பின்னர் தமது கையால் உரோமங்களைக் கோதிக் கழுவுவார்கள். முடியின் அடிப்பாகத்தில் தண்ணீர் ஊடுருவிச் சென்று அது நனைந்து விட்டதென்று உறுதி நமக்கு ஏற்பட்டவுடன் அம்முடியின் மீது மும்முறைத் தண்ணீரை ஊற்றுவார்கள். பின்பு தமது மேனி அனைத்தையும் கழுவிக்கொள்வார்கள். (புகாரீ)

2. அன்னை ஆயிஷா(ரழி) அறிவித்துள்ளார்கள்:
(அறிவிப்பின் சுருக்கம்) நபி(ஸல்) அவர்கள் தமக்கு பெருந்தொடக்கு (ஜனாபத்) ஏற்பட்டு குளிக்கும்போது தொம் தொழுகைக்கு செய்யும் ஒளூபோன்று ஒளூ செய்துகொண்டு, பின்னர் தண்ணீர் பாத்திரத்திற்குள் தமது இது கைகளையும் புகுத்தி (தாம் அள்ளிய தண்ணீரால், தமது உரோமங்களை (முடியின் அடிபாகமாகிய) தோல் பாகம் வரைத் தண்ணீர் செலுத்தப்பட்டு விட்டதாக தாம் உணரும் வரைத் தமது உரோமத்தைக் கோதிவிட்டு, மும்முறைத் தமது தலையில் தண்ணீரை ஊற்றுவார்கள். குளித்தபின் எஞ்சியுள்ள தண்ணீரையும் தமது தலைமீதே ஊற்றிக்கொள்வார்கள். (அபூதாவூத்)

3. அன்னை ஆயிஷா(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்களிடம் அஸ்மா பிளத்து யஜீத்(ரழி) அவர்கள் வந்து, ஒரு பெண் தனது ஹைளுக்காக குளிக்கும்போது எவ்வாறு குளிக்க வேண்டும் என்று கேட்க, அதற்கவர்கள் உங்களிலொருவர் தாம் குளிக்க ஆயத்தமாகும்போது தண்ணீரையும், எலந்தை இலையையும் எடுத்து வைத்துக்கொண்டு, அவற்றால் நன்கு (தம்மைச்) சுத்தப்படுத்திய பின் தனது தலையில் தண்ணீரை ஊற்றி தலைமுடியில் வேர்பாகங்களுக்கு தண்ணீர் சென்றடையும் வரை தனது தலைமை பலமாக நன்றாகத் தேய்த்து பிறகு அவன் தன் மீது தண்ணீரை ஊற்றி குளித்துக் கொள்ள வேண்டும். பின்னர் கஸ்தூரி (போன்று) வாசனை தடவிய சிறிதளவு பஞ்சைக் கொண்டு அவள் தன்னைச் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்கள். அதற்கு அந்த ஸஹாபிப் பெண் நபி(ஸல்) அவர்களை நோக்கி அப்பஞ்சைக் கொண்டு எவ்வாறு சுத்தமாக்கிக் கொள்வது? என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் (விளக்கம் எதுவும்) கூற முடியாத நிலையில் “சுப்ஹானல்லாஹ்” அதைக் கொண்டு அவள் தன்னைச் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று (மீண்டும்) கூறினார்கள். (அந்த அம்மையார் ஒன்றும் புரியாது நிற்பதைக் கண்ட) உடன் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் மறைமுகமாக அவ்வம்மையாரிடம் இரத்த வாடையை அப்பஞ்சை வைத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.

மீண்டும் அப்பெண் நபி(ஸல்) அவர்களிடம் (ஹைளு நிஃபாஸ் அல்லாத) ஜனாபத்துக் குளிப்பு பற்றி கேட்டார்கள். அதற்கவர்கள் தண்ணீரை எடுத்து (தன்னை) நன்கு சுத்தம் செய்து கொண்டு பிறகு தலையில் தண்ணீரை ஊற்றி அது உரோமங்களின் வேர் பாகங்களை அடையும் வரை தேய்த்து பின்னர் தன்மீது தண்ணீரை ஊற்றி (குளித்து)க் கொள்ளவேண்டும் என்றார்கள்.

(இவ்வுரையாடலை நேரில் பார்த்துக் கொண்டிருந்த) அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் “பெண்களிலேயே மதீனத்து அன்ஸாரி பெண்களே மேலானவர்கள். ஏனெனில், மார்க்கத்தைக் கேட்டு விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற அவர்களின் ஆர்வத்திற்கு அவர்களின் வெட்கம் சிறிதும் தடையாகவே இல்லை என்று கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜ்ஜா)

4. ஜுமை உபின் உமைர்(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நான் எனது தாயார், சிறிய தாயார் ஆகியவருடன் அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது அவ்விருவரில் ஒருவர்(அன்னை) அவர்களிடம் நீங்கள் (கடமையான) குளிப்பின்போது எவ்வாறு குறிப்பீர்கள் என்று கேட்க, அதற்கு அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் (குளிக்கும்போது) தாம் தொழுகைக்குச் செய்வது போல ஒளூ செய்து கொண்டு, பின்னர் தமது தலையில் மும்முறை தண்ணீரை ஊற்றிக் கொள்வார்கள். நாங்களோ(தலையில்) பின்னல் இருப்பதன் காரணத்தால் 5 முறை தண்ணீரைத் தலைகளில் ஊற்றிக் கொள்வோம்.

5. உரோமத்தின் வேர் பாகங்கள் நனைந்து விட்டதாக உணர்ந்ததன் பின்னரே இரு கைகள் நிறைய தண்ணீரை அள்ளி ஊற்றுதல்”

அன்னை ஆயிஷா(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் ஜனாபத் ஏற்பட்டு குளித்தால் அரம்பமாக தமது இரு கைகளையும் கழுவிக் கொள்வார்கள். பிறகு தமது வலக்கையால் தண்ணீரை அள்ளி இடக்கையில் ஊற்றி தமது மர்மஸ்தலத்தைக் கழுவிக்கொண்டு, பிறகு தமது தொழுகைக்கு ஒளூ செய்வது போல் ஒளூ செய்து கொள்வார்கள்.

பின்னர் தண்ணீரை அள்ளியதோடு தமது விரல்களை உரோமங்களின் வேர்பாகங்களில் புகுத்துவார்கள். அவை அனைத்தையும் தாம் நனைத்து விட்டதாக நம்பிக்கை ஏற்பட்டவுடன், தமது இரு கைகள் நிறைய மும்முறை தண்ணீரை அள்ளி தமது தலையில் ஊற்றுவார்கள். பின்னர் தமது அனைத்து மேனியிலும் தண்ணீரை ஊற்றிவிட்டு தமது கால்களைக் கழுவிக் கொள்வார்கள். (முஸ்லிம்)

*****************************************

சமூகவியல்:

6. பரிந்துரைகள் செல்லாத நாள்! புலவர் செ. ஜாஃபர் அலி, பி.லிட்.,

உறங்கிக் கொண்டிருந்தவன் தொடையில் கயிறு திரித்தானாம் ஒருவன்! “தன் தொடையில் கயிறு திரிக்கின்றான் ஒருவன்! என்ற உணர்வு கூட இன்றி ஆழ்ந்த உறக்கம் கொண்டவனைப் பற்றி என்ன எண்ணுவது?

பாமரர்கள் என்று எண்ணப்படுவோர், தங்கள் முன்னோர்கள் நடந்து காட்டிய வழியிலேயே நடக்க ஆசைப்பட்டு, இன்னும் சொல்லப் போனால் ஒருவித வெறி உணர்வுடன் வாழத் துணிந்து செயல்படுகின்றார்கள். அதற்குத் தகுந்தாற்போல் பக்க மேளங்களாகச் செயல்படுபவர்கள் இந்த முல்லாக்களும், ஊர் முத்தவல்லிகளும் என்றால் மிகையில்லை.

சான்றாக, ஓர் எடுத்துக் காட்டை இவண் தருகின்றேன். “கைக்கூலி” என்னும் வரதட்சணை பெண் வீட்டாரிடமிருந்து பெறுவது கூடாத செயலாகும். “மஹர்” என்று ஒரு தொகையை, மணமகன் காலம் முழுவதும் தன்னுடன் வாழப்போகின்ற பெண்ணுக்குக் கொடுப்பது மார்க்கத்தில் மிக மிக இன்றியமையாத ஒன்றாகும்.

இந்நிலையில் சமுதாயத்தில் நடப்பதென்ன? நிச்சயதார்த்தம் என்னும் பெயரால் பெண்வீட்டார் மாப்பிள்ளைக்கு ஒரு பெருந் தொகையை “கைக்கூலியாக” ஊர்ஜமாஅத்தார் முன்னிலையில் பட்டுத்துணியில் (அதுவும் மஞ்சள் துணிணில் தான் கட்ட வேண்டுமாம்) கட்டி, “கத்தீப்” “துஆ” ஓதியவுடன், அந்த ஹராமான பணத்தை அந்த கத்தீப் தொட்டுக் கொடுக்க, அந்த சபையில் உள்ளவர்கள் அனைவர் கையிலும் மாறி மாறி வர, அமர்ந்திருப்பவர்கள் அத்தனை பேரும் அதனைக் கண்களில் ஒற்றி… ஒற்றி… (அப்பப்பா! கேவலம்!)

“சுன்னத்துல் வல்-ஜமாஅத்” (நபி பெருமானார்(ஸல்-அம்) அவர்களின் அடியொற்றி நடக்கும் சமுதாயம்) என்று தங்களைத் தாங்களை விளம்பரப் படுத்திக் கொள்ளும் இவர்கள் எப்படிப்பட்ட அலங்கோலங்களுக்கு உடந்தையாக இருக்கின்றார்கள்! எண்ணிப் பாருங்கள்! தீமையைச் சுட்டிக்காட்டி-தடுத்து – நன்மையை விளக்கி செயற்படுத்தத் தூண்டவேண்டிய சமுதாயக் காவலர்கள்-மார்க்கத்தில் புற்றுநோய் போல் வளர்ந்து விட்ட கொடுமைகளுக்குப் பாதுகாப்பாக அல்லவா இருக்கின்றார்கள்?

மக்களும் “இவர்கள் தம்மை தீயவழியிலே செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்” என்பதை உணராமல் இருக்கின்றார்கள். இது ஒரு புறம்!

“நாம் அவர்களுக்குத் தோதாக நடந்தால் தான் நம் காலம் செல்லும்்்! என்று எண்ணுகின்ற சண்டாளர்கள் பிறிதொரு புறம்!

“விசுவாசிகள்)தங்களைப் போன்ற) விசுவாசிகளையன்றி, நிராகரிப்போரைத் தங்களுக்குப் பாதுகாப்பாளர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து (தங்களைக்) காப்பாற்றிக் கொள்வதற்கன்றி, எவரேனும் இவ்வாறு செய்தால் அவர்களுக:கு அல்லாஹ்விடத்தின் எத்தகைய சம்பந்தமுமில்லை. அல்லாஹ் தன்னைப்பற்றி உங்களுக்கு(அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான். (நீங்கள்) அல்லாஹ்விடம் தான் (இறுதியாக) செல்ல வேண்டியதிருக்கின்றது”.(அல்குர்ஆன் 3:28)

எனவே நல்லடியார்களே! அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும், அவன் மீதுள்ள அச்சமும் இருக்கின்றரை நீங்கள் வழி தவறியவர்களாக ஆகமாட்டீர்கள்!

நயவஞ்சகர்கள், முற்றும் துறந்த ஞானிகளைப் போல – பச்சைப் பொர்வையால் தங்களை மறைத்துக் கொள்வார்கள்! அவர்களை ஆய்ந்து பார்த்தால் பச்சையான சில விஷயங்கள் தாம் அவர்களிலிருந்து வெளிப்படுமே ஒழிய, மற்றபடி வாழ்க்கை நெறியில், சத்திய மார்க்கத் தூண்மை இருக்காது.

“இஸ்லாம்” அதனைப் பின்பற்றுவோருக்கு இலகுவான மார்க்கம் மனிதாபிமான நெறிமுறைகளுக:கும் – மனிதப் பகுத்தறிவுக்கும் முற்றிலும் ஒத்துவரக்கூடிய மார்க்கம். குதர்க்கங்கள் – கரடுமுரடுகள் மற்றும் இல்லை! பூச்சாண்டி காட்டுபவர் தாம் பயங்கரமாக இஸ்லாத்தைச் சித்தரித்து “ஷரீஅத்தைச்” சற்றும் சட்டை செய்யாமல், ஹகிகத்-மஃரிபத்-தரீக்கத்- என்று உளறத் தொடங்குவார்கள். பாமர முஸ்லிம்களையும் அவ்வலைகளுக்கும் பிடித்துப் போட்டு “கண்கட்டு வித்தை” நடத்துவார்கள்! மொத்தத்தில் சுவர்க்கத்தைக் காட்டும் புரோக்கர்களாகச் செயல்படுவார்கள்.

எவருள்ளத்தில் கடுகளவு ஏகத்துவம் ஒட்டிக் கொண்டிருக்கின்றதோ அவரை இவர்களால் மாயவலை  விரித்துப் பிடிக்க முடியாது!

“(நபியே!) நீர் கூறும்! என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்புமீறி தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கையிழந்து விடவேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் யாவையும் மன்னித்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும். அருளுடையோனுமாயிருக்கின்றான்” (அல்குர்ஆன் 39:53)

“ஆகவே, (மனிதர்களே!) நீங்கள் உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே உங்கள் இறைவன் பால் திரும்பி அவனுக்கு முற்றிலும் வழிபட்டு நடவுங்கள். (வேதனை வந்து விட்டாலோ) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்”.

“(மனிதர்களே!) நீங்கள் அறியாத விதத்தில் திடுகூறாக உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னதாகவே உங்களிறைவனால் உங்களுக்கு அருளப்பட்ட அழகான கட்டளைகளைப் பின்பற்றுங்கள்”. (அல்குர்ஆன் 39:54,55)

இறுதித் தீர்ப்பு நாள் ஒன்றுண்டு! அந்நாளின் அதிபதி எல்லாம் வல்ல அல்லாஹ்! அவனிடம் எந்த வக்கீலின் வாதங்களும் செல்லா: அல்லாஹ்வின் அனுமதியின்றி எவருடைய சிபாரிசுகளும் செல்லா: எவரும் சிபாரிசு செய்யவும் இயலாது! உங்களுடைய உண்மையான பயபக்தியும், நன்னடத்தைகளுமே உங்களை வெற்றியாளர் கூட்டத்தில் சேர்க்கும்!

இறைவா! உன்னுடைய முழுமையான பேரருளை அனைவருக்கும் தந்தருள்வாயாக! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! அருளாலன் அன்புடையோன் நீ ஒருவனே!

(இன்ஷா அல்லாஹ் வளரும்)

*****************************************

நபிவழித் தொகுப்பு வரலாறு – தொடர் – 14

– அபூஅஸ்மா

ஸஹீஃபத்த அனஸிப்னி மாலிக்(ரழி)

இது அனஸ்(ரழி) அவர்களின் கைப்பிரதி, ஸயீதுபின் ஹிலால்(ரஹ்) எனும் நாபியீ கூறுகிறார்கள். ஒரு நாள் அனஸ்(ரழி) அவர்கள் நமது நினைவுச் சின்னமான கையெழுத்துப் பிரதி ஒன்றை எங்களிடம் எடுத்துக்காட்டினார்கள். இதிலுள்ளவை அனைத்தும் நானே நேரிடையாக நபி(ஸல்) அவர்கள் கூற எனது காதுகளால் கேட்டு நானே பதிவு செய்து வைத்தவையாகும். மேலும். நான் இதிலுள்ள அனைத்தையும் நபி(ஸல்) அவர்களின் முன்னிலையில் வாசித்துக் காட்டி, சரிபார்த்து வைத்துள்ளேன் என்று கூறினார்கள். (ஸஹிபத்துஹுமாம், பக்கம் 34: முஸ்நத்ரக் ஹாக்கிம்)

ரிஸாலத்து ஸமுரத்துபின் ஜுன்துபு(ரழி):

இது ஸமுரத்துபின் ஜுன்துபு(ரழி) அவர்களின் பிரதி, இது அவர்களின் மகனுக்கு அனந்தரப் பொருளாக கிடைத்துள்ளது, ஏராளமான ஹதீஸ்களைக் கொண்டுள்ள மாபெரும் பொக்கிஷம் பேழையாக அமைந்திருக்கிறது.

ஸஹீஃபத்து ஸஃதுபின் உBபாதா(ரழி):

இது ஸஃதுபின் உBபாதா(ரழி) அவர்களின் ஏடு. இதன் தொகுப்பாளராகிய இவர்கள் தாம் இஸ்லாத்திற்கு வருமுன்பே எழுத்தறிவில்லாக் காலத்திலேயே சிறந்த எழுத்தாளராக இருந்துள்ளார்கள்.

மக்தூபத்து நாஃபிஉ (ரஹ்)

இது நாஃபிஉ(ரஹ்) அவர்களால் எழுதப்பட்ட கடிதங்கள், அப்துல்லாஹ்பின் உமர்(ரழி) அவர்கள் எடுத்துக் கூற நாஃபிஉ(ரஹ்) அவர்கள் இக்கடிதங்களை எழுதியுள்ளார்கள் என்று கலைமானு பின் மூஸா அறிவித்துள்ளார்கள்.

மஅன்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள். நான் ஒரு சமயம் அப்துல்லாஹ்பின் மஸ்ஊத்(ரழி) அவர்களின் மகனார் அப்துர் ரஹ்மான்(ரழி) அவர்களோடிருந்தேன்: அப்போதவர்கள் ஒரு நூலை எடுத்து எனக்குக் காட்டி அப்துல்லாஹ்பின் மஸ்ஊத்(ரழி) அவர்கள் தமது திருக்கரத்தால் இரு எழுதப்பட்டது என்று கூறினார்கள்.

எனவே இது பற்றி மேலும் தொடர்ந்து தேடி பார்க்கும் போது பல உண்மை சம்பவங்கள் கிடைக்கின்றன. இத்தகைய காலக்கட்டத்தில் சில சஹாபாக்களும், தாபீயீன்களும் தாங்கள் ஒவ்வொருவரும் நினைவுபடுத்திக் கொள்வதற்காக ஹதீஸ்களை எழுதிவைத்துக் கொள்வதில் தனி கவனம் செலுத்தியுள்ளார்கள் என்பது புலனாகிறது.

எனவே முதலாம் காலக்கட்டத்தை விட இரண்டாம் காலக்கட்டத்தில் ஹதீஸ்களைச் சேகரித்தல் அவற்றை நூல் வடிவாக்கல் முதலிய சேவைகள் மிகவும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. ஹதீஸ்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்போர், தமது சொந்த அறிவாற்றலுடன் தமது நகரத்திலும், அதை ஒட்டிய பகுதிவாழ் மார்க்க அறிஞர்களை அணுகி தமது அறிவிப்புகளை எடுத்துக்காட்டி அவற்றை உறுதிபடுத்திக் கொண்டனர்.

இரண்டாவது காலக் கட்டம்:

இவ்விரண்டாம் காலக்கட்டமென்பது ஏறத்தாழ ஹிஜ்ரீ இரண்டாம் நூற்றாண்டின் மத்தியில் முற்றுப் பெறுகிறது. இக்காலத்தில் வாழ்ந்து வந்த தாபியீன்களின் ஒரு பெரும் கூட்டம் நமக்கு முன் வீழ்ந்தோரின் எழுத்துப் பணிகள் அனைத்தையும் மிக விசாலமான முறையில் நூல் வடிவிலாக்க வேண்டும் என்பதற்காக தம்மைத் தயார் செய்து முழுமையாக அதில் இறங்கி விட்டார்கள்.

ஹதீஸ்களை ஒட்டுமொத்தமாக சேகரித்தவர்கள்:

1. முஹம்மது பின் ஷிஹாபு ஜுஹரி(ரஹ்) அவர்கள் மறைவு ஹிஜ்ரி 124. இவர்கள் தமது காலத்தில் பிரசித்தி பெற்ற முஹத்திஸீன் ஹதீஸ் காலவல்லுநர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்கள். இவர்கள் பின்வரும் மாமேதைகளிடம் ஹதீஸ் கலைஞானம் பெற்றிருக்கிறார்  பின்வரும் மாமேதைகளிடம் ஹதீஸ் கலைஞானம் பெற்றிருக்கிறார்கள்.

நபித் தோழர்களில், அப்துல்லாஹ்பின் உமர்(ரழி), அனஸுபின் மாலிக்(ரழி), ஸஹிலுபின் ஸஃது(ரழி) ஆகியோரும், தாபியீன்களில், ஸயீதுபின் முஸய்யபு, மஹ்மூது பின் ரபீஉ ஆகியோரும், மற்றும் சிலரும் இவர்களின் ஆசிரியர்களாவர். அவர்களின் மாணவர்களில் ஹதீஸ்கலா வல்லுநர்கள் என்று கணிக்கப்படும் இமாம் அவ்ஜாயீ,  இமாம் மாலிக் மேலும் ஸுஃப்யானுபின் உயைனா(ரஹ்) ஆகியோராவர்.

இமாம் ஜுஹரீ(ரஹ்) அவர்களை உமரு பின் அப்துல் அஜீஸ்(ரஹ்) ஹிஜ்ரீ 101ல் ஹதீஸ்களைச் சேகரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்கள். இது மட்டுமின்றி இவ்வாறே மதீனாவின் ஆளுநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த, அபூபக்கருபின் முஹம்மத் பின் அம்ரூபின் ஹஜ்மு அவர்களுக்கும்; அம்ரா பின்து அப்துர் ரஹ்மான்(ரழி), காஸிமுபின் முஹம்மத் ஆகியோரிடத்திலுள்ள ஹதீஸ் திரட்டுகளையும் எழுதி வைத்துக் கொள்ளுமாறு பணித்தார்கள்.

இந்த அம்ரா என்பவர் அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் மாணவ, மாணவிகளில் மிகப் பிரதானமானவராவார். அபூபக்கர்(ரழி) அவர்களின் மகனார்  அப்துர் ரஹ்மான்(ரழி) அவர்களின் மகளும், காசிமு பின் முஹம்மத் அவர்களின் சகோதரியுமானார். அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் சகோதரர் அப்துர் ரஹ்மான்(ரழி) அவர்களின் புதல்வி என்னும் வகையில் அன்னை அவர்கள் உறவு முறையில் இவர்களுக்கு மாமி(அத்தை) ஆகிறார்கள். இவர்களின் தந்தை இவர்களின் சிறு பிராயத்திலேயே காலமாகி விட்டதால், தமது மாமி அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக ஹதீஸ் கலையையும் நற்பயிற்சிகளையும் பெற்று தமது கண்ணியத்திற்குரிய மாமி அவர்களின் வாயிலாக பெரும்பாலான ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள். இவர்கள் ஹிஜ்ரி 103ல் காலமானார்கள். (தஹ்தீபுத் தஹ்தீபு பாகம் 7, பக்கம் 172)

மேற்காணும் ஏற்பாடுகளை மட்டுமின்றி உமருபின் அப்துல் அஜீஸ்(ரஹ்) அவர்கள் தமது காலத்திய இஸ்லாமிய அரசு சிப்பந்திகள் அனைவருக்கும் ஹதீஸ்களின் திரட்டுகளை சேமித்து நூல் வடிவில் ஆக்கும்படி கட்டாய உத்தரவு பிறப்பித்திருந்தார்கள்.

அவ்வாறு அமுல் நடத்தப்பட்டதன் பயனாக ஹதீஸ்களில் பதிவேடுகள் மிக அதிகமாக தயாரிக்கப்பட்டு விட்டன. அப்பதிவேடுகள் அனைத்திலிருந்தும் ஒட்டு மொத்தமாக எடுத்தெழுதப்பட்ட பெரிய நூல் ஒன்று அரசின் தலைநகரம் டமாஸ்கஸ் வநது சேர்ந்தது. அப்போதிருந்த கலீஃபா, அந்நூலிலிருந்த ஹதீஸ்கள் அனைத்தையும் நகல் செய்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவச் செய்து விட்டார்.

(தத்கிரத்துல் ஹுப்பாழ், முதலாம் பாகம்: பக்கம் 106, முக்தஸர் ஜாமிஉல் இல்மு, பாகம் 38)

இமாம் ஜுஹரி(ரஹ்) அவர்கள் ஹதீஸ்களை முறைப்படுத்தி அவற்றை நூல் வடிவில் தயாரித்த பின்னரே, அக்கால கட்டத்தில் வாழ்ந்து அறிஞர் பெருமக்களும் அவ்வடிப்படையில் ஹதீஸ்களை தொகுக்கவும், நூல் வடிவிலாக்கவும்  ஆரம்பித்து விட்டார்கள்.

(இன்ஷா அல்லாஹ் வளரும்)

*****************************************

முஸ்லிம்களின் சிந்தனைக்கு!

37 வருடங்களுக்கு முன், “நூருல் ஹக்” 1951 நவம்பர் இதழின் பக்கம் 22லிருந்து பக்கம் 30 வரை, “தீனும் ஷரீஅத்தும்” என்ற தலைப்பில் அபுல் அஃலா மெளலூதி(ரஹ்) அவர்கள் ஆற்றிய உபதேசத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு இடம் பெற்றுள்ளது. தமிழில் தந்தவர் காலஞ்சென்ற மவ்லவி P.S.K.முஹம்மது இப்றாஹிம், ஸாஹிப் அவர்களாகும். அந்த உபதேசத்தின் முடிவுரையை சிந்தனையாளர்களின் சிந்தனைக்கு விருந்தாகத் தருகிறோம்.

“முஸ்லிம்களே! உங்களுடைய இந்தப் படுவீழ்ச்சியிலிருந்து நீங்கள் மீட்சி பெற வேண்டுமாயின், இந்தக் கட்சிப் பிளவுகளைக் களைந்தெறிந்து விட்டு முஸ்லிம்கள் என்ற ஒரே வகுப்பினராய்ப் பரஸ்பர சகோதரர்களால் ஒன்றுபட்டு வாழ நீங்கள் முயல வேண்டும். ஹனபி, ஷாபிஈ, அஹ்லுல் ஹதீஸ், ஷீஆ, ஸுன்னி என்று வெவ்வேறு பிரிவினராகப் பிரிந்து நிற்பதற்கு ஆண்டவனுடைய ஷரீஅத்தில் ஆதாரம் கிடையாது. இந்தப் பிரிவு வேற்றுமையுணர்ச்சி அறியாமையால் சிருஷ்டிக்கப்பட்டதாகும். இறைவன் “முஸ்லிம் உம்மத்” என்ற ஒரு பிரிவையே வகுத்திருக்கிறான்”.

****************************************

பொது நலம் பேணல்!

ஜரீருபின் அப்துல்லாஹ்(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நான் தொழுகையை நிலைநிறுத்தல், ஜகாத்தைக் கொடுத்தல், அனைத்து முஸ்லிம்களின் நலம் பேணல் ஆகியவை குறித்து (முறையாய் நடந்து கொள்வதாக) நபி(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்துள்ளேன். (புகாரீ, முஸ்லிம்)

**********************************************
அவுலியாக்கள் – ஓர் விளக்கம்!

– M.A.R. மொஹிதீன், பி.இ., விருதுநகர்.

(மூமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை: அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 10:62)

நாகூர், அஜ்மீர் என்று தமிழக முஸ்லிம்கள் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவுலியாக்கள் பற்றி ஓர் சிந்தனை எழுந்தது.

அவுலியாக்கள் என்போர் ஒரு தனி வகையைச் சார்ந்தவர்கள், அதை யாருமே அடைய முடியாது என்பதாக நமது ஊர் முல்லாக்கள் சிந்தனையற்ற மக்களை நன்றாக மொட்டை அடித்து ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். பொதுமக்களுக்கும் தங்களது சிந்தனா சக்தியை சிறிதும் பயன்படுத்தாது முல்லாக்களிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அநேகமாக எல்லோருமே அவுலியாக்கள் பற்றி தவறாக புரிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம். ஏதாவது ஒரு அவுலியாவின் தர்ஹாவுக்கு செல்லா விட்டால் பாவம், தர்ஹா இல்லாத ஊரில் குடியிருப்பது பாவம் என்ற (இப்படியும் சில பத்திரிகைகள் எழுதுகின்றன) ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஜமாதுல் ஆகிர் மாதம் புனிதமான மாதம் என்று பேசுவதை (இவ்வாறு ஒருவர் ஜும்மா பிரசங்கத்தில் விருதுநகரில் கதை விட்டார்) சகித்துக் கொண்டிருக்கிறோம்.

முஸ்லிம்கள் அடைய முடியாத சில நிலைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளை நாம் மறுக்கவில்லை. இந்த தருணத்தில்  இன்ஸானுக்கு மனிதனுக்கு உள்ள படித்தரங்கள் 27 என்று சிலர் கதை விடுவது போல் நாம் கதை விட விரும்பவில்லை. ஒரு முல்லா பாக்கவி சில அர்த்தம் புரிந்து கொள்ள முடியாத அரபு வார்த்தைகளைச் சொல்லி மொத்தம் 27 படித்தரங்கள் (தந்தஸ்துகள்) என்று சரடு விட்டுக்கொண்டு திரிவதை  இங்கு குறிப்பிடுகிறேன்.

இன்றைய முஸ்லிம்கள் நபிமார்கள், ஸஹாபாக்கள், தாபியீன்கள் என்ற அந்தஸ்தை நிச்சயமாக அடைய முடியாது. இதில் சந்தேகமே இல்லை. இந்த அந்தஸ்துகள் முடிந்து போன விஷயம் என்பதை எல்லோருமே அறிந்து வைத்திருக்கிறோம்.

ஆனால், அவுலியாக்கள் என்பது அடைய முடியவே முடியாத அந்தஸ்து அல்ல முதலில் இந்தப் பதத்தினுடைய அர்த்தத்தைப் பார்ப்போம் “வலீ” என்பது ஒருமைச் சொல் இதன் பொருள் “நண்பர்” வலீ எ்னற பதத்தின் பன்மை தான் “அவுலியா” அப்படியானால் அவுலியா என்றால் நண்பர்கள் என்று மட்டும்தான் பொருள்.

எனவே “அவுலியா” என்றவுடன் “நண்பர்கள்” என்று மட்டும்தான் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ள முடியும். நண்பர் என்றால் யாருக்கும் நண்பராக இருக்க முடியும்” “அவுலியாவுல்லாஹ்” அல்லாஹ்வுடைய நண்பர் என்றும் “அவுலியா ஷையாதீன்” ஷைத்தானுடைய நண்பர் என்றும் பொருள்.

பொதுவாக முஸ்லிம்கள் இரண்டு வகையாகத்தான் இருக்க முடியும் ஒன்று அல்லாஹ்வுடைய நண்பர்கள் மற்றொன்று நமது பரம விரோதி ஷைத்தானுடைய நண்பர்கள்.

அல்லாஹ்வுடைய கட்டளைகளை, உள்ளச்சத்துடன் ஏற்று நடக்கும் ஏனைய முஸ்லிம்களும் அவுலியாக்களாக ஆக முடியும். உண்மையான உள்ளச்சமுடையவர்களை அவுலியாக்களாக ஆக முடியும். உண்மையான உள்ளச்சமுடையவர்களை அல்லாஹ் மட்டும் தான் அறிவான். இதை நாம் இவ்வுலகில் அறிந்து கொள்ள முடியாது. இதை மறுமையில் தான் நிதர்சனமாக கண்டு கொள்ள இயலும். சிலர், சிலரை அவுலியா பட்டம் கட்டி வைத்திருப்பது வெறும் வசூலுக்காகத்தான் என்பதை நாம் கண் கூடாகக் கண்டு கொண்டிருக்கிறோம். எல்லோரும் “அவுலியாவுல்லாஹ்” ஆக முயற்சிக்க வேண்டும். இவர்கள் இவர்களுக்குண்டான பரிசை அல்லாஹ்வுடைய நாட்டப்படி மறுமையில் பெற்றுக் கொள்ளலாம். நாமும் அல்லாஹ்வுடைய நண்பர்களாக ஆகுவதை விட்டுவிட்டு அல்லாஹ்வுடைய நண்பர்களைப்(உண்மையான நண்பர்கள் யார் என்று தெரியாத நிலையில்) பார்த்து என்ன சாதிக்க முடியும். சற்று சிந்தியுங்கள்.

இந்த ஒரு அரபு வார்த்தையை, “அவுலியா” என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு சிலர் வசூல் பண்ணி சாப்பிட்டுக் கொண்டு இஸ்லாத்துடைய கடமைகளை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களில் சிலர் ஒருசில காசுகளை ஏதாவது ஒரு மஸ்தான் அவுலியாவிடம் சென்று போட்டுவிட்டால் ஈடேற்றம் பெற்று விடலாம் என்று நினைப்பது எவ்வளவு பெரிய அறியாமை!

“கராமத்” காண்பிப்பவர் தான் அவுலியாக்கள்” மந்திரவாதிகளும் கண்கட்டு விந்தைக்காரரும் “கராமத்” காண்பிக்கிறார்கள். கோயில்களிலும், கராமத்கள் காண்பிக்கப்படுகின்றன. எனவே “கராமத்” காண்பிப்பவர்கள் முன்பு எழுதிய மாதிரி யாருடைய நண்பராகவும் இருக்கலாம்.

ஆனால் அல்லாஹ்வுடைய நண்பராக அவுலியாவாக இருக்க வேண்டும் என்றால் தனித்த நிலையிலும் உள்ளச்சமுடைய முஸ்லிம்களாகத்தான் திகழ வேண்டும். இவர்கள்தான் அல்லாஹ்வுடைய அவுலியாக்கள், இவர்களுக்கு தான் அச்சமில்லை: மேலும் இவர்களே துக்கிக்கவே மாட்டார்கள் என்று அல்லாஹ் முதலில் காட்டியுள்ள திருவசனத்தில் குறிப்பிடுகிறான்.

தனிமையிலும், அல்லாஹ்வுக்கு பயப்படும் முஸ்லிம் வேறு யாரையும் பார்த்து பயப்படமாட்டான். ஏனெனில் அவன் அல்லாஹ்வுக்கு பயந்து தவறு எதுவும் செய்ய துணிவதில்லை. கணக்கு சரியாக வைத்திருக்கும் ஒரு வியாபாரி அதிகாரிகளை கண்டு பயப்படமாட்டான். மடியில் கனம் இருந்தால் தானே யாரையும் கண்டு பயப்பட வேண்டும்! மாறாக தில்லு முல்லு செய்பவர்கள் எந்நேரம் யார் வந்து பார்த்து விடுவார்களோ என்று பயந்து கொண்டுதானே இருக்க வேண்டும்? இவர்கள் உள்ளூருக்குள் துக்கப்பட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.

எனவே முஸ்லிம்கள் அனைவரும் அவ்லியாக்களின் கபுருகளைத் தேடி அலைவதை விடுத்து தாமே அல்லாஹ்வின் அவ்லியாக்களாக ஆவதற்கு இயன்றரை முயற்சித்துக் கொண்டே இருப்போமாக!

*********************************

கத்தாத துப்னின் நுஃமான்(ரழி) அறிவித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ் ஓர் அடியாரை நேசித்து விட்டால், உங்களிலொருவர் தமது வியாதியஸ்தரை தண்ணீரை விட்டும் பாதுகாப்பது போன்று, அல்லாஹ் அவரை உலக(ஆடம்பர)த்தை விட்டும் பாதுகாத்துக் கொள்கிறான். (அஹ்மத், திர்மிதீ)

*************************************************

சென்னையில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு!

நாள் : ஞாயிற்றுக்கிழமை

தேதி : 27.3.1988

நேரம்: காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

இடம்: பெரியார் திடல், E.V.K. சம்பத் ரோடு, சென்னை-7. (தினத்தந்தி ஆபீஸ் பக்கத்தில்)

    அனைவரும் மாநாட்டில் கலந்து கொண்டு குர்ஆன், ஹதீஸ் விளக்கங்களை அறிந்து பயனடையும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவன்,

மாநாட்டு அமைப்புக் குழுவினர்

*********************************************************

குறிப்பு: 1. பெண்களுக்கு தகுந்த தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.

      2. பகல், இரவு இரு வேளைகளுக்கும் சலுகை விலையில் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

****************************************************

நமது அழைப்புகளெல்லாம் வீணாவதேன்? – S. அஸ்லம், தாராபுரம், இலங்கை.

“மனிதர்களில் தோன்றிய உம்மத்துகளிலெல்லாம் (முஸ்லிம்களே!) நீங்கள் தரம் மிக்க மேன்மையுடையவர்கள் (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள், தீயதை விட்டும் விலக்குகிறீர்கள். (3:110)”

“எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து ஸாலிஹான நல்ல அமல்கள் செய்து நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்? (41:33)

“காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு சாலிஹான நல்ல அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ, அவர்களைத் தவிர” (அத்தியாயம்: 103)

இன்றைய இஸ்லாமிய அழைப்புப் பணியாளர்கள் மூன்று சாராராக உள்ளனர். ஒரு சாரார் குர்ஆனையும், ஹதீஸையும் சரியாக விளங்கி ஏற்று நடந்தும், தங்களக்கென்று தனிப்பெயர்கள் வைத்து ஸலபி என்றும், அஹ்லெ-ஹதீஸ் என்றும், முஜாஹித் என்றும் அழைத்துக் கொள்கின்றனர்.

மற்றொரு சாரார், குர்ஆனையும், ஹதீஸையும் சரியாக விளங்கிப் பின்பற்றாது. இமாம்களை குருட்டுத்தனமாக பின்பற்றி(தக்லீத்) அந்த கண்ணியமிக்க இமாம்களின் சொல்லையும் மீறி, தன்னை ஷாபி என்றும், ஹனபி என்றும், ஹன்பலி, மாலிக்கி என்றும் கூறி சுன்னத்  வல் ஜமாஅத் என்று இயங்கி வருகின்றனர். இந்த சாரார் இமாம்கள் பெயரால் பிரிந்தது மட்டுமல்லாமல் நன்மையை ஏவுமளவுக்கு தீமையை முழுமையாக தடுப்பதில்லை. மேலும் இவர்கள் கண்ணியமிக்க இமாம்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதைகளை மார்க்கமாக எண்ணி செயல்படுவதோடு பிற முஸ்லிம்களையும் குர்ஆன் ஹதீஸ் வழியிலிருந்து திசை திருப்பி விட்டார்கள்.

பிரிதொரு சாரார் அல்லாஹ்வையும், அவனது தூதர்(ஸல்) அவர்களது சொல், செயல், அங்கீகாரத்தை முழுமையாக ஏற்று நாமும் நடப்பதோடு மற்ற சகோதரர்களுக்கும் எடுத்துக் கூறி நம்மை முஸ்லிம்கள் என்று மட்டுமே அழைத்துக் கொள்கின்றனர். இவர்களைப் பற்றியே இறைவன் 4:33 வசனத்தில மிகத் தெளிவாகக் கூறுகிறான்.

இறைவன் கூறுவது போல மார்க்கப் பணி புரிபவர்கள் தம்மை முஸ்லிம் என்றும், நம்முடைய மார்க்கம் இஸ்லாம் என்றும், நமது வழிகாட்டல் குர்ஆனும், ஹதீதும் என்றும் கூறுவதிலேயே முழுமையான வெற்றி கிட்டும் என்பது திண்ணம். மேற்கூறிய இந்த அம்சங்களில் ஏதேனுமொன்றில் மாற்றம் செய்து செயல்பட முனைவோமானால், இறைவாக்கை மீறுவதோடல்லாமல், முழு வெற்றியும் கிட்டாது.

மேற்சொன்ன இறைவசனத்திற்கு கட்டுப்பட்டு நபி(ஸல்) அவர்களால் அபீஸீனிய நாட்டுக்கு அனுப்பப்பட்ட உத்தம சஹாபாக்கள்(ரலி) மார்க்கப் பிரச்சாரம் செய்தார்கள் என்பது நிதர்சனமான உண்மை. நூல்: பிதாயா, பாகம்-3, பக்கம்-72.

மார்க்கப்பணி புரிவோர் முஸ்லிம் அல்லாத வேறு  எந்த நல்ல பெயரை வைத்தாலும் நிச்சயமாக நம்முடைய அழைப்புப் பணியில் பூரண வெற்றி பெற முடியாது. மேலும் அவர்கள் தங்களுடைய இயக்கங்களுக்கு அதிகமான ஆட்களையும் பெருமையையுமே சேர்க்க முயற்சி செய்கிறார்கள். அதிகமான மக்களை சேர்க்க விரும்பும் மனிதன் முழுமையாக உண்மைகளைக்  கூறி அழைக்க முடியாமல் போய்விடுகிறது. ஆக அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று மட்டும் சொல்வதே மிகச் சிறப்பு.

விலாசத்திற்காக பெயரை வைக்கிறோம் என்று சொல்பவர்கள் தங்களை “முஸ்லிம் ஜமாஅத்” என்றே அழைக்கலாமே! தவறான கொள்கையுடையவர்களும் ஒரே பெயரில் இயங்கினால் எங்ஙனம் அடையாளம் காண்பது? இது நம்மவர்களிடையே எழுப்பப்படும் கேள்வி? இதற்கும் இறைவனே அழகாக பதில் தருகிறான். (அவர்கள்) சொல்லை – நல்லுபதேசத்தை செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியை செலுத்துபவர்கள் இத்தகையவர்கள் தரம்; இவர்கள் நாம் நல்லறிவுடையோர். (39:18)

உண்மை விசுவாசிக்கு, குர்ஆனும், ஹதீதும் தான் அழகானது என்பது தெரியாததல்ல. மேலும் மறுமைக்காக பாடுபடும் மார்க்க அழைப்பாளர்கள் உலக பிரச்சனைகள் குறித்து என் கவலை அடையவேண்டும்? மேலும் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே பெயரில் இயங்குவதால் இவ்வுலக ஒற்றுமைக்கு வழிகோலுவதோடு – இறைவனின் கட்டளைக்கும் மாறு செய்யாதவர்களாகவும் வாழ்வோம்.

உலக மாந்தர்கட்கு அடையாளம் காட்டுவதற்கென்று தனிப் பெயர் சூட்டி ஒன்றுபட்ட இஸ்லாமிய சமுதாயத்தில் பிரிவுகளை ஏற்படுத்தி அதில் மகிழ்ந்து கொண்டிருப்பவர்கள் 41:33 வசனத்தின்படி சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

அழைப்புப் பணி செய்யும் ஒரு சாரார் உபதேசிப்பது போல் அவர்கள் வாழ்வில் கடைபிடிப்பதில்லை. இவர்களைப் பற்றியே இறைவன் “ஈமான் கொண்டோரே நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள் (61:2)” எனவே இவர்களுடைய பணியும் பயன் தராது என்பதை இறைவாக்கின் மூலம் அறிகிறோம்.

மற்றொரு சாரார் இஸ்லாத்தைப் பற்றி மேலோட்டமான சிறப்புக்களைக் கூறுவர். மேலும் நன்மையை ஏவும் அளவுக்கு தீமைகளைத் தடுப்பதில்லை. இதற்காக சில நவீன காரணங்களையும் நா கூசாமல் சொல்லி விடுவர். அதாவது நன்மையை ஏவி விட்ால் தீமை தானாகவே அகன்று விடும். வெளிச்சம் வந்தால் இருள் அகலவில்லையா?… இக்குறைமதியாளர்கள் நிறைமதி பெற்ற இறைவனுக்கு புத்தி வந்து விட்டார்கள். எனவே இவர்களது பரிதாப நிலை.

இறைவன் எங்கெல்லாம் நன்மையை ஏவச் சொல்கிறானோ அங்கெல்லாம் அதற்கடுத்தார் போல் தீமையைத் தடுக்கச் சொல்லத் தவறுவதில்லை. உண்மையில் இவர்கள் கூறும் காரணங்கள் பொய்யானவை. அடி உதைக்கு பயந்தும், சமுதாயத்தில் நமது கண்ணியம் குறைந்துவிடும் என்று எண்ணியும், நொண்டிச் சாக்கை கூறுகிறார்களே தவிர வேறில்லை இவர்கள் கூறுவது போல் செயல்பட வேண்டுமென்பது உண்மையானல் நபி(ஸல்) அவர்கள் மார்க்கப் பணி புரிய தாயிஃப் சென்று இரத்தம் வடிய அடிபட்டு வந்திருக்கத் தேவையில்லை. மேலும் இவர்களின் கூற்று மக்கள் குழம்புவார்களாம்.

நபி(ஸல்) அவர்கள் அன்று மார்க்கப் பிரச்சாரத்தை துவங்கியபொழுது பெரும்பான்மையானவர்கள் குழம்பினார்கள். ஏசினார்கள், அடித்தார்கள், கலகக்காரன் என்றார்கள், சூனியக்காரன் என்றார்கள். எனினும் சத்தியத்தை எடுத்துச் சொல்ல தயங்கினார்களா? இல்லையே! நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதாகச் சொல்லும் இவர்கள் தயங்கக் காரணம், சொல்லும் அளவுக்கு நபி(ஸல்) அவர்களை முழுமையாக பின்பற்றுவதில்லை. மூதாதையர்கள், இமாம்கள் சொன்னதை விளங்கிச் செயல்படாமல் குருட்டுத்தனமாக செயல்படுவதேயாகும். இச்சாராரின் மார்க்கப் பணியும் முழுமையான வெற்றியைத் தருவதில்லை. மாறாக, இவர்களது அழைப்பும் வீணாகிக் கொண்டிருக்கிறது.

எனவே, மார்க்க அழைப்புப் பணியாளர்களே! நாம் ஈடுபட்டிருக்கும் இம்மகத்தான பணியில் இறைவனது கட்டளையையும், நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தையும் ஏற்று செயல்படுவோமாக வல்ல அல்லாஹ் உலக முஸ்லிம்கள் அனைவரையும் உண்மை முஸ்லிமாக செயல்படச் செய்து மற்ற சகோதர, சகோதரிகளுக்கும் நன்மையை ஏவி, தீமையை தடுத்து தன்னை முஸ்லிம் என்று மட்டுமே கூறி அழைப்புப் பணி புரிய அருள் புரிவானாக!

***********************************

ஒவ்வொரு சந்தாதாரரும், இன்னொரு சந்தாதாரரை அந்நஜாத்திற்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், கலப்படமற்ற இஸ்லாம் வளர உதுவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

***********************************

“உண்மையும், நேர்மையும் உள்ள வணிகர்(மறுமையில்) நபிமார்கள், உண்மையாளர்கள், தியாகிகள், நல்லோர்கள் ஆகியோருடன் இருப்பர்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்” திர்மிதீ, அறிவிப்பவர்: அபூஸயீது(ரழி),

*****************************************

தமிழகத்தின் முதுமையான மதரஸா பாகியாத்துஸ் ஸாலிஹாத்தில் கற்று “பாகவி”யாகி, தேவ்பந்து தாருல் உலூமில் பயின்று “தேவபந்தி”யாகி, “தீன்” அறிவு பெற்றவரென காண்பிக்க மெளலானா, மவ்லவி என அடைமொழிகள் கொண்ட சகோதரர் ஒருவர் ஆற்றும் பணியைப் பாரீர்! பெற்ற பட்டங்களால் நாகூர் தர்ஹா காதிரிய்யா மதரஸாவின் ஆசிரியராகவும், நாகூர் நகர ஜமாஅத்துல் உலமாசபை செயலாளருமாகத் திகழ்கிறார். சகோதரர் M.S.E.முஹம்மது அலி, பாகவி தேவ்பந்தி, அறிவு புகட்டவேண்டிய ஆசிரியர் “இறைபணிக்கு” தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாகக் கூறும் மவ்லவி, மக்களுக்கு கூறும் உபதேசமும் ஆற்றும் பணியும் இதோ!

நஃல் ஷரீப் அதாவது ரசூல்(ஸல்) அவர்களின் பாத ரட்சை என அரபியில் எழுதப்பட்டு அச்சடிக்கப்பட்ட செருப்பின் படங்கள் விற்பது இவர் புரியும் வியாபாரம், அவைகளை விற்கும் விலை(ஹதியா?) ரூபாய் இரண்டு, விற்பனைப் பெருக பயன்படுத்தும் விளம்பரம்.

ரசூல்(ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்றபோது அல்லாஹ் கூறினான். “ஹபியே! நீர் உமது பாத அணிகளை அகற்ற வேண்டாம், என் அர்ஷில் அதன் தூசி பட்டு தங்களின் பரக்கத் ஏற்பட வேண்டும்”

இதை, இரவு பகலாக முத்தமிட்டுக் கொண்டிருக்கிறோம். என் தலையில், என் முகத்தில், நெஞ்சில் வைத்து பரக்கத் பெற்று கொண்டிருக்கிறேன்” எனப் பல பெரியோர்கள் கூறியுள்ளார்கள்.

நல்லவை ஏவி, தீயவை தடுத்து மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும். அரபி மொழி கற்று “தீன” அறிவு மிக்கவர், தானும் தான் கற்ற கல்விக்கொப்ப ஒழுகி மற்றவர்க்கு, கற்பித்து முன்மாதிரியாக விளங்க வேண்டியதிருக்க, மக்களின் அறியாமையைப் பயன்படுததி அவர்களை மெளட்டீகத்தில் நிலைக்கச் செய்வதோடல்லாமல், அல்லாஹ்வினால் மன்னிக்கப்படாத ஷிர்க்கின்பால் இட்டுச் செல்லும் அவல நிலையை என்ன சொல்லுவது? தவ்ஹீதை எடுத்து இயம்பி குர்ஆன், ஹதீஸ் இவைகளை ஆதாரமாகக் கொண்டு வாழ்வோம் என மக்களை உண்மை இஸ்லாத்தின் பக்கம் அழைக்கும் ஆலிம்களின் பட்டங்களை பறிக்க பரிந்துரை செய்யும் ஜ.உ.சபைக்கு மேலே கூறிய “அவல நிலை” கண்ணில் படவில்லையா?

இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! மேலே கூறிய படங்களை வாங்கி நாமும் வீணாகாமல், நம்மவர்களும் வீணாகாமல் தடுக்க, இத்தகையவர்களின் செய்கைகளைத் தடுத்து நிறுத்த முன்வாருங்கள். சமூகத்தில் இதுபோன்ற தீமைகளுக்கு இடம் கொடுத்தால் நாம் யாவருமே குற்றவாளிகள் ஆகிவிடுவோம்.

திருமறையில் அல்லாஹ் இத்தகையவர்களைப் பற்றி பின்வருமாறு கூறியுள்ளான். “நிச்சயமாக (அவர்களுடைய) பண்டிதர் (உலமாக்)களிலும் குருகுலத்தவர்களிலும் அநேகர் மக்களின் பொருள்களை தவறான முறையில் விழுங்கி விடுவதுடன், மக்களை (அல்லாஹ்வுடைய) பாதையில் செல்லுவதை தடைசெய்கின்றனர்” (அல்குர்ஆன் 9:34)

நாம் விழித்துக் கொள்ள வேண்டும். நம் சகோதர, சகோதரிகளை நாம் விழிப்படையச் செய்ய வேண்டும். அல்லாஹ் தெளபீக் செய்வானாக!

*************************************

நீங்களும் உதவுங்கள்

சத்திய இஸ்லாத்தைக் கலப்படமற்ற நிலையில் நிலைநாட்டும், றமது இந்த அரிய முயற்சியின் ஆரம்பத்திலிருந்து வெளியான பிரசுரங்கள், மவ்லவி கடிதங்கள், பல்சமய மக்களிடையெ உரை, மற்றும் சில ஆக்கங்கள் அனைத்தையும் இணைத்து “முஸ்லிம் சமுதாய சிந்தனைக்கு” என்ற பெயரில் வெளியிட்டுள்ளோம். அதனைப் பார்வையிடுபவர்களில் பெரும்பாலோர் தாங்கள் இதுகாலம் வரை செய்து கொண்டிருந்த தவறுகளை உணர்ந்து தவ்பா செய்து, கலப்படமற்ற தூய இஸ்லாத்தை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கின்றனர். எனவே பல ஆயிரக்கணக்கான பிரதிகள் செய்து கொண்டிருக்கிறோம். வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்கள் பலர் ஆர்வமாக 50, 100 பிரதிகளுக்கு பணமும், முகவர்களும் அனுப்பி, நமது இந்த தீன் பணியில் முழு ஒத்துழைப்புத் தந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இம்மை, மறுமையின் நலன்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். ஆங்காங்குள்ள சகோதரர்கள் தங்கள் தங்கள் பகுதிகளில் இந்தப் புத்தகம் பரவ தங்களால் ஆன முழு ஒத்துழைப்பைத் தந்துதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

சகாய விலை                                                               தொடர்பு கொள்ளுங்கள்:

உள்நாடு தபால் செலவுடன் ரூ. 5.00                                               அந்நஜாத்

வெளிநாடு தபால் செலவுடன் ரூ.50.00                                              51-B,ஜாஃபர்ஷா தெரு, திருச்சி-8.

*************************************

மாபெரும் மோசடி!

“மோசடியில் மிகக் கொடியது, உமது சகோதரர் உம்மை மிக உண்மையானவர் என்று நம்பியிருக்கும் நிலையில், நீர் பொய்யனாக இருந்து கொண்டு அவரிடம் ஒரு செய்தியை எடுத்துக் கூறுவதாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.

ஸுப்யானுபின் அஸீதினில் ஹழ்ரமீ(ரழி) அபூதாவூத்.

**************************************

நபி வழியில் நம் தொழுகை தொழர் 15  

– அபூ அப்துர்ரஹ்மான்

(நபியெ!) சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னை பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான், மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாகும். (3:31)

“என்னைத் தொழக் கண்டவாரே நீங்களும் தொழுங்கள்” – மாலிக் பின் ஹுவைரிஸ்(ரழி), புகாரி, முஸ்லிம்.

சென்ற பிப்ரவரி இதழில் அதானும், இகாமத்தும் என்னும் தலைப்பில், அவை சம்பந்தப்பட்ட விவரங்களைப் பார்த்தோம். இன்ஷா அல்லாஹ்  இவ்விதழில் “அஸ்ஸலாத்” என்னும் தலைப்பில் தொழுகையின் முக்கியத்துவம் பற்றி குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் விளக்கத்தையும், தொழுகை நேரங்களில் விபரங்களையும் விரிவாகக் காண்போம்.

‘அஸ்ஸலாத்” (தொழுகை) அரபிப் பதத்திற்கு “அத்துஆஉ” (பிரார்த்தனை) என்பது பொருள். மார்க்க ரீதியில் தக்பீரைக் கொண்டு துவங்கி, ஸலவாத்தைக் கொண்டு நிறைவுபெறும் குறிப்பிட்ட சொற்செயலைக் கொண்டதோர் வணக்க வழிபாடு என்பதாகும்.

இஸ்லாத்தில் தொழுகையின் நிலை:

இஸ்லாத்தில் தொழுகை என்பது ஏனைய வணக்க வழிபாடுகளுக்கு மத்தியில் ஒப்பற்ற உன்னத ஸ்தானம் வகிப்பதோடு, அதன் இன்றியமையாத் தூணாகவும் திகழ்கிறது. இதுவே வணக்க வழிபாடுகளில் முதன்மையாகக் கடமையாக்கப்பட்டுள்ள முக்கிய அனுஷ்டானங்களாகும்.

அனஸ்(ரழி) அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் இரவு வழி நடத்தப்பட்ட (மிஃராஜின்) போது, 50 ஆகக் கடமையாக்கப்பட்டு, பின்னர் அவற்றைக் குறைத்து 5 ஆக்கப்பட்டது. பின்னர் “முஹம்மதே” என்று அழைக்கப்பட்டு நிச்சயமாக என்னிடம் சொல்லில் மாற்றம் ஏதும் செய்யப்பட மாட்டாது. உண்மையாக உமக்கு இவ்வைந்து (நேரத் தொழுகை)க்கும் 50(நேரத் தொழுகையின் கூலி உண்டு என்று கூறப்பட்டது. (நஸயீ, திர்மதீ,அஹ்மத்)

மறுமையில் முதல் விசாரணை தொழுகையைப் பற்றியே!

மறுமையில் மனிதனிடம் தொழுகையைப் பற்றியே முதலில் விசாரணை செய்யப்படும் என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “அது முறையாயிருப்பின் அனைத்து அமல்களும் முறையாக அமையும். அது மோசமடைந்து விடின் அனைத்து அமல்களும் மோசமடைந்து விடும் என்டறு கூறினார்கள். அப்துல்லாஹ் பின் கர்த்(ரழி), தப்ரானீ.

தொழுகையைப் பற்றி அல்குர்ஆன்:

தொழுகைகளையும், (குறிப்பாக) நடுத் தொழுகையையும், நீங்கள் (முறையாகத்) தொழுது கொள்ளுங்கள்! (தொழுகையின் போது) அல்லாஹ்விடம் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். (2:238)

தொழுகையை விடுவதே நரகம் செல்வதற்கான முதற்காரணமாகும்:

“(அவர்கள்) சுவனபதிகளில் இருந்து கொண்டு உங்களை நரகத்தில் புகுத்தியது எது? என்று குற்றவாளிகளைக் (நோக்கி) கேட்பார்கள். அதற்கவர்கள் “நாங்கள் தொழக்கூடியவர்களில் (ஒருவராக) வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் (சேர்ந்து) நாங்களும் மூழ்கிக் கிடந்து விட்டோம். கூலி கொடுக்கும் இத்தனையும் பொய்யாக்கிக் கொண்டிருந்தோம்” (என்று கூறுவர்) (74:40-46)

தொழுகையைப் பற்றி அல்ஹதீஸ்:

தொழுகையை விட்டவர் காபிராகி விடுவர் என்ற மிகக் கடுமையான எச்சரிக்கை:

(மூமினான) மனிதருக்கும், குப்ருக்கும் இடையில் தொழுகையை விடுவதே வித்தியாசமாகும். மற்றொரு அறிவிப்பில் ஈமானுக்கும், குப்ருக்கும் இடையே வித்தியாசமே தொழுகையை விடுவது தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜாபிர்(ரழி),முஸ்லிம், திர்மதீ, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)

முறையாகத் தொழாதோர் மறுமையில் கொடும்பாவிகளின் கூட்டத்தில் இருப்பர்:

அப்துல்லாஹ் பின் அம்ருப்னுல் ஆஸ்(ரழி) அறிவிக்கிறார்கள். ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தொழுகையைப் பற்றி கூறும்போது எவர் அதை முறையாகப் பேணித் தொழுவாரோ அவருக்கு அது மறுமை நாளில் பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், ஈடேற்றமாகவும் அமைந்துவிடும். எவர் அதைப் பேணித் தொழவில்லையோ, அவருக்கு அது பிரகாசமாகவோ, அத்தாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ ஆகமாட்டாது; எனினும் அவர் மறுமை நாளில் (கொடும்பாவிகளான) காரூன், பிர்அவ்ன், ஹாமான், உபையு பின் கலஃப் ஆகியோருடன் இருப்பார். (உஹ்மத்)

உப்பாத துப்னு ஸ்ஸாமித்(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள். அல்லாஹ் தனது அடியார்கள் மீது ஐந்து (நேரத்) தொழுகைகளை கட்டாயக் கடமையாக்கியுள்ளான் எவர் அவற்றின் கடமையை அலட்சியம் செய்து, அவற்றில் எதனையும் பாழ்படுத்தி விடாது, முறையோடு அவற்றை நிறைவேற்றி வருகிறாரோ, அவரை சுவர்க்கத்தில் புகுத்தும் பொறுப்பு அல்லாஹ்வைச் சார்ந்ததாகும்.

யார் அவற்றை நிறைவேற்றவில்லையோ, அவருக்கு அல்லாஹ்விடம் எப்பொறுப்பும் கிடையாது. அவன் நாடினால் அவரை வேதனை செய்வான்; அவன் நாடினால் அவரை சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான். (மாலிக், அபூதாவூத், நஸயீ, இப்னு ஹிப்பான்)

தொழுகை யார் மீது கடமை:

தொழுகையானது புத்தி சுவாதீனமுள்ள, பருவ வயதையடைந்த முஸ்லிமாகிய ஒவ்வொரு ஆண், பெண் ஆகியோர் மீது கடமையாகும். எனினும் மாதாந்திர தீட்டோ, அல்லது பேறுகாலத் தீட்டோ உள்ள பெண்களுக்கு அத்தீட்டுகளின் தவணை முடியும் வரை அவர்கள் மீது தொழுகை கடமையில்லை.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அறிவித்துள்ளார்கள். “மூவரை விட்டும் (எழுதும் மலக்குகளின்) எழுதுகோல் அகற்றப்பட்டுள்ளது. தூங்குபவர் விழிக்கும் வரை, சிறுவர் பருவ வயதடையும் வரை பைத்தியக்காரர் தெளிவடையும் வரையிலுமாகும். (அஹ்மத்)

மேலும் இது போன்றொரு அறிவிப்பை அலி(ரழி) அவர்களின் வாயிலா அஹ்மத், அபூதாவூத், திர்மதீ ஆகியோரும் பதிவு செய்துள்ளனர். மேற்காணும் ஹதீஸின் மூலம் பைத்தியக்காரர், சிறுவர் முதலியொர் மீது தொழுகை கடமையில்லை என்பதை உணரலாம்.

தொழுகை நிறைவு பெறுவதற்கான ஷர்த்துகள் (நிபந்தனைகள்) தொழுகைக்குரிய நேரம் வருதல்:

குறிப்பிட்ட நேரத்தில் தான் தொழ வேண்டும்!

நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது மூமின்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. (4:103)

குர்ஆனில் ஐங்காலத் தொழுகை நேரங்கள் பற்றி பொதுவான அறிவிப்பு!

(நபியே!) சூரியன் (உச்சியை விட்டும்) சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூளும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிபு, இஷா நேரத்) தொழுகையை நிலை நிறுத்துவீராக! இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (தொழுவீராக!) நிச்சயமாக பஜ்ருடைய தொழுகையானது (அதுவே இரவு, பகல் ஆகியவற்றின் மலக்குகள்! ஆஜராகும் தொழுகையாகும். (17:78)

பகலின் (காலை, மாலை என்னும்) இரு முனைகளிலும், இரவில் (குறிப்பிட்ட சில) நேரங்களிலும் நீர் தொழுகையை நிலைப்படுத்துவீராக! (11:114)

மேற்காணும் திருவசனத்தில் பகலின் இரு முனைகளான காலை, மாலை என்பவற்றில் காலை பகுதி என்பது ஃபஜ்ரு, ளுஹ்ரு, தொழுகையையும், மாலைப்பகுதி என்பது அஸ்ரு தொழுகையையும் “இரவின் சில நேரங்களில் என்பது மஃரிபு, இஷாத் தொழுகை ஆகிய ஐங்காலத் தொழுகைகளையும் சூசகமாகக் காட்டுவதாக இப்னு அப்பாஸ்(ரழி) கூறுகிறார்கள். (தப்ஸீர் இப்னு கதீர்)

ஐங்காலத் தொழுகைகளில் இரு நேரத் தொழுகைகளின் பெயர்களே குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.

பஜ்ரு, இஷா ஆகிய இரு நேரத் தொழுகையின் பெயர்கள் மட்டுமே குர்ஆனில் இடம் பெற்றிருப்பினும், மேற்காணும் திரு வசனங்களில் கூறப்பட்டது போல் சூசகமாக ஐங்காலத் தொழுகைகளைப் பற்றி பல வசனங்களும் உணர்த்துகின்றன.

இரு நேரங்களின் பெயர்கள் மட்டும் கூறப்பட்டுள்ள திருவசனம்!

“விசுவாசிகளே! உங்களுடைய அடிமைகளும் பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம்ட அனுமதி கோரவேண்டும். பஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான) உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் மதிய நேரத்திலும், இஷாத் தொழுகைக்டகுப் பின்னரும், ஆகிய(இம்) மூன்று நேரங்களும் நீங்கள் மறைவாயிருக்கும் சந்தர்ப்பங்களாகும். இவற்றைத் தவிர மற்ற நேரங்களில் உங்கள் அனுமதியின்றியே அவர்கள் உங்களிடம் வருவது அவர்கள் மீதும், உங்கள் மீதும், குற்றமில்லை. (24:58)

ஐங்காலத் தொழுகையின் பெயர்களும், அவற்றின் நேரங்களும்:

ஜாபிரு பின் அப்துல்லாஹ்(ரழி) அறிவித்துள்ளார்கள்”

நபி(ஸல்) அவர்களிடம் ஜிப்ரில்(அலை) வந்து, “எழுந்து தொழுவீராக!” என்றார்கள். அதற்கவர்கள் எழுந்து சூரியன் உச்சியை விட்டும் சாய்ந்து விட்ட அந்நேரத்தில் (ளுஹ்ரைத்) தொழுதார்கள்.

மீண்டும் அவர்களிடம் அஸ்ருக்கு வந்து, “எழுந்து தொழும்!” என்றார்கள். அதற்கவர்கள் எழுந்து ஒரு பொருளின் நிழல் அதைப் போன்று ஒரு மடங்காகும் நேரத்தில், அஸ்ரைத் தொழுதார்கள்.

மீண்டும் அவர்களிடம் மஃரிபுக்கு வந்து “எழுந்து தொழும்!” என்றார்கள். அதற்கவர்கள் எழுந்து சூரியன் மறைந்த நேரத்தில் மஃரிபைத் தொழுதார்கள்.

மீண்டும் அவர்களிடம் இஷாவுக்கு வந்து “எழுந்து தொழும்!” என்றார்கள். அதற்கவர்கள் எழுந்து செம்மேகம் மறைந்து விட்ட அந்நேரத்தில் இஷாவைத் தொழுதார்கள்.

மீண்டும் அவர்கள் ஃபஜ்ருக்கு வந்து, “எழுந்து தொழும்” என்றார்கள், அதற்கவர்கள் எழுந்து சூரியன் உதிக்கும் திசையில் (மெய்வெள்ளை) வெண்மை தோன்றிய நேரத்தில் ஃபஜ்ரைத் தொழுதார்கள்.

அதன்பின்னர் அடுத்தநாள் அவர்களிடம் ளுஹ்ருக்கு வந்து, “”எழுந்து தொழும்ட!” என்றார்கள. அதற்கவர்கள் எழுந்து ஒரு பொருளின் நிழல் அதைப் போன்று ஒரு மடங்கு ஆகிவிட்ட நேரத்தில் ளுஹ்ரைத் தொழுதார்கள்.

மீண்டும் அவர்களிடம் அஸ்ருக்கு வந்து, “எழுந்து தொழும்!” என்றார்கள். அதற்கவர்க்ள எழுந்து, ஒரு பொருளின் நிழல் அதைப் போன்று இரு மடங்கு ஆகிவிட்ட நேரத்தில் அஸ்ரு தொழுதார்கள்.

மீண்டும் அவர்களிடம் மஃரிபுக்கு, அதன் (முந்தைய) அதே நேரத்தில் வந்தார்கள். அதில் சிறிதும் மாற்றம் செய்யவில்லை (அப்போது எழுந்து தொழும் என்று கூற, நபி(ஸல்) அவர்கள் மஃரிபைத் தொழுதார்கள்)

மீண்டும் அவர்கள் இஷாவுக்கு இரவில் சரியாகப்பாதி, அல்லாதுமூன்றில் ஒரு மடங்கு நேரம் கடந்து வந்தார்கள். (எழுந்து தொழும்படி கூற, அந்நேரத்தில் எழுந்து) இஷாவைத் தொழுதார்கள்.

மீண்டும் முழுமையாக நிலம் தெளித்து விட்ட போது வந்துஆ எழுநது இந்நேரத்தல் தொழும்! என்றார்கள். உடன் எழுந்து ஃபஜ்ரு தொழுதார்கள். பின்னர் (இரு தினங்களில் காட்டப்பட்டுள்ள) இரு (வகை) நேரங்களுக்கு மத்தியில் தான் (தொழுகையின்) நேரம் இருக்கிறது என்றார்கள். (திர்மிதீ: நஸயீ, அஹ்மத்)

மேற்காணும் ஹதீஸிர் அனைத்துத் தொழுகைகளின் பெயர்களும், நேரங்களும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. தொழுகை நேரங்கள் குறித்துள்ள ஹதீஸ்களில் இதுவே ஆக ஸஹீஹான ஹதீஸாகும் என்று இமாம் புகாரீ(ரஹ்) கூறியுள்ளார்கள்.

இஷாவின் நேரம் எப்பொழுது முடிகிறது?

மஃரிபைத் தவிர மற்ற நான்கு தொழுகைகளுக்கும் இரு வகையான நேரங்கள் ஹதீஸில் கூறப்பட்டிருப்பது தெளிவு. அவ்வாறே இஷாவின் நேரம் செம்மேகம் மறைந்தவுடன் ஆரம்பித்து கிழக்கு திசையில் இரண்டாவது வெண்மை தோன்றும் வரை நீடிக்கிறது. ஆனால் பாதி இரவுக்கும மேல் பிற்படுத்துவது முறையல்ல ஏனெனில் இரவில் மூன்றில் ஒரு பகுதி, அல்லது பாதி இரவு வரை இஷாவைப் பிற்படுத்தி தொழுவது விசேஷயம் என்பதை ஹதீஸில் பார்க்கிறோம்ட.

அபூகதாதா(ரழி) அறிவித்துள்ளார்கள்” தூக்கத்தின்போது (அல்லாஹ்வின்) அத்து மீறல் எதுவும் யாருக்கும் ஏற்படுவதில்லை.  ஆனால் அத்துமீறல் எல்லாம் ஒருவர் விழித்துக் கொண்டே ஒரு நேரத் தொழுகையை அடுத்த தொழுகையின் நேரம் வரும் வரை பிற்படுத்துவதில்தானிருக்கிறது. (முஸ்லிம்)

அடுத்த தொழுகை நேரம் வரும் வரை அதற்கு முந்தின நேரத் தொழுகையைப் பிற்படுத்துவதில் தான் அத்துமீறல் ஏற்படுகிறது” என்று இவ்வாசகத்திலிருந்து, அடுத்த தொழுகைநேரம் வரும் வரை முந்தின தொழுகையின் நேரம் நீடிக்கிறது என்பதை உணருகிறறோம. ஆனால் ஃாஜ்ருடைய நேரம் ளுஹ்ரு வரை நீடிக்காது. சூரிய உதயத்துடன் முடிந்து விடுகிறது என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

அபூ ஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். சூரிய உதயத்திற்கு முன் சுப்ஹு தொழுகையின் ஒரு ரகாஅத்தை அடைந்து கொண்டவர், சுப்ஹு தொழுகையையே அடைந்து கொண்டார். (முஸ்லிம், அபூதாவூத், திர்மதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)

இமாம் புகாரீ அவர்களின் அறிவிப்பின்படி “அவர் தனது தொழுகையை நிறைவு செய்து கொள்வாராக!” என்று பதிவாகியுள்ளது.

சூரிய உதயத்துடன் சுப்ஹுடைய நேரம் முடிவு பெற்று விடுவதனால் முற்கூட்டியே ஒரு ரகாஅத்தொழுத நபருக்கு, மேலும் ஒரு ரகாஅத்தை தொழுது அதை நிறைவு செய்து கொள்வதற்கு சலுகை தரப்பட்டிருக்கிறது.

(இன்ஷா அல்லாஹ் வளரும்)

***********************************

பெண்மணியே உன் வழி என்ன?

கு.நிஜாமுத்தீன் – பரங்கிப்பேட்டை

இஸ்லாத்தின் இனிய சகோதரியே!

அஸ்ஸலாமு  அலைக்கும்(வரஹ்)

இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தில் ஆண்கள் ஓரளவு விழிப்புணர்ச்சியுடன் செயல்படுகின்றார்கள. குர்ஆன், ஹதீது வழியில் தன் வாழ்வை அமைத்து கொண்டு வருகின்றார்கள்.

ஆனால் சகோதரியே! உங்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் நிலையை  சற்று சிந்தித்துப் பார். இஸ்லாம் இயம்பும் முறைப்படி உன் வாழ்க்கை அமைத்துள்ளதா? அன்னை பாத்திமா(ரழி)  வாழ்ந்த வாழ்க்கை வாழ்கின்றாயா? பெருமானார் (ஸல்) அவர்களன் வழிய பின்பற்றறுகின்றாயா? மறுமையை நினைத்து, நரகத்தை நினைத்து வருந்தினாயா? ஏதோ! இஸ்லாத்தில் பிறந்து விட்டோம் என்று இருமாப்பில் இன்பம் கண்டுக் கொண்டு இருக்கின்றாய்.

உன் வாழ்க்கையை சற்றே குர்ஆன், ஹதீதுடன் ஒப்பிடு. மார்க்கத்தைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டு.

“மார்க்கக் கல்வி கற்றுக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் மீது (கட்டாய) கடமை” என்று அல்லாஹ்வும், ரசூலும்(ஸல்) கூறியுள்ளதைப் பார்.

குர்ஆன், ஹதீதை அறிந்து கொண்டால் அனாச்சாரங்களை அழக்க நீயே முன்வருவாய்.

“(நபியே) அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருந்த ஒவ்வொருவரும் தாயும் தான்் பாலூட்டும் குழந்தையை மறந்து விடுவான். ஒவ்வொரு கர்பபஸ்திரியின் கர்ப்பமும் சிதைந்து விடுவதை நீர் காண்பீர். மனிதர்களை சிநதமிழத்வர்கள் நீர் காண்பீர். அவர்கள்(சித்தம் இழ்க்கக் காரம் ) போதையினால் அல்ல, அல்லாஹ்வுடைய வேதனை மிகவும் கடினமானது. (அதனைக் கண்டு திடுக்கிட்டு) அவர்கள் சிந்தமிழந்து விடுவார்கள். (22:2) என்று அல்லாஹ் தன்மறையில் கூறுகின்றான். சசேகாதரியே; சிந்தித்துப்பார்.

“நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கின்றேன். அந்த இரண்டையும் கடைப்பிடிக்கும் காலம் எல்லாம் நீங்கள் ஒருபோமு் வழிதவறவே மாட்டீர்கள். ஒன்று குர்ஆன், இரண்டு என்னுடைய சுன்னத்தான வழிமுறை”. (அறிவிப்பாளர்: அனஸ்(ரழி) நூல் முஅத்தா)

என்று பெருமானார்(ஸல்) கூறி இருக்க, நீ யாரைப் பின்பற்றுகின்றாய்? யாருடைய பாதையை பின்பற்றி உன் வாழ்க்கைத் தேய்கின்றது? பண்டிதர்கள், தலைவர்கள் என்று தன்னை பறைசாற்றிக் கொள்பவர்கள் கூறுவதையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்காமல் மார்க்கம் என்று எடுத்து நீ நடக்கின்றாய்.

இறைவன் கூறுவதைப் பார்.

ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக பண்டிதர்களிலும், குருக்களிலும் அநேகர் மக்களின் சொத்துக்களை தவறான முறையில் சாப்பிடுகின்றார்கள் மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுக்கின்றார்கள். (அல்குர்ஆன்: 9:34)

பெரியவர்கள் சொல்வதெல்லாம் சிந்தித்து விளங்காமல் மார்க்கம் என்று எண்ணினாயே? இறைமறை கூறுவதைப் பார். மேலும் (17:27:24,5,28:50,20:124) ஆகிய வசனங்களையும் உற்றுநோக்கு, உன் நிலையையும் நீ எண்ணிப்பார்.

உனக்கு ஏதாவது தேவைப்பட்டால் அவ்லியாக்களின் கப்ரை (புதைக்குழி) நோக்கி ஓடுகின்றாய், யார் யாருக்கோ நேர்ச்சை செய்கின்றாய்; முரீது கொடுக்கும் முல்லாக்களின் காலில் விழுந்து தன்மானம் இழந்து நிற்கின்றாய். மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கு நபி(ஸல்) எவ்வளவு பாடுபட்டார்களோ, அத்தனை மூட நம்பிக்கைகளையும் குத்தகை எடுத்துக்கொண்டு கும்மாளம் போடுகின்றாய், இது தான் உன் இஸ்லாத்தின் பண்பா? இதுதான் நீ இஸ்லாத்தின் மீது வைத்துள்ள அன்பா?

அல்லாஹ்வையன்றி நீ அழைப்பவர்கள் அழிந்து விடுபவர்கள் என்று நபி(ஸல்) அறிவுரை பகர்ந்தார்கள். ஆனால் நீ செய்வது என்ன? உன் தேவை நிறைவேற  யாமுஸைய்யத்தீன்” என்று அழைக்கின்றால், என்றோ எங்கேயோ மெளத்தாகி விட்டவர் உன் அழைப்பை கேட்கிறார் என்றால் விந்தையாக உள்ளது. உனது கூற்று நியாயமானதா? குர்ஆனுடன் ஒப்பிடு.

நபியே! கப்ருக்குள் கிடப்பவர்களை நீர் செவியுறச் செய்ய முடியாது. (அல்குர்ஆன் 35:22) உன் கூற்று சரியா? குர்ஆனின் கூற்று சரியா? சிந்தித்துப் பார். இணைவைக்கும் காரியத்தில் நீ உன்னை ஈடுபடுத்திக் கொள்ளாதே. அல்லாஹ்வின் தகுதிகளை அவனது அடிமைகளுக்குத் தந்து உன்னை நீயே அழித்துக் கொள்ளாதே.

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான். (4:48) நீ இணை வைத்தால் உன் நிலை என்ன? உனது பிரார்த்தனை இறைவனை நாடியே இருக்க வேண்டும் உனது வணக்கங்கள் இறைவனுக்காகவே இருக்க வேண்டும்.

எவர்கள் மெய்யாகவே (அல்லாஹ்வை) விசுவாசம் கொண்டு நற்கருமங்கள் செய்கின்றார்களோ அவர்கள் “பிர்தவ்ஸ்” என்னும் சுவர்க்கத்தில் உபசரிக்கப்படுவார்கள். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். (18:107,108)

நீ இறைவன் மீது வைத்த அன்பிற்காக இறைவன் உனக்கு சுவர்க்கத்தை நிரந்தரமாக தருவதாக வாக்களிக்கின்றான். இதைவிட மாபெரும் பாக்கியம் உனக்கு என்னவேண்டும்.

இதோ! இறைவனை விட்டு அவனது அடிமைகளை பாதுகாப்பிற்கு அழைப்பதைப் பற்றி இறைவன் கூறுவதைப்பார்.

நிராகரிப்பவர்கள் என்னையன்றி என்னுடைய (நல்) அடியார்களை தம் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம்ட என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக அவர்களுக்காக நாம் நரகத்தையே தயார் செய்து வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 18:102)

அல்லாஹ்வையன்றி அவனது அடியார்களை அழைப்பதை குறித்து இறைவைன் எவ்வளவு கடுமையாக எச்சரிக்கின்றான் என்பதை ஆராய்ந்துப்பார்.

இவ்வுலக வாழ்க்கை உன்னை வீண் வழியில் அழைத்து சென்றுவிடாமல் எச்சரிக்கையாக இரு, உனக்கு ஏதாவது ஒரு தீங்கு நேர்ந்தால் உடனே மண்ணறை(புதைக்குழி)றை நோக்கி ஓடுகிறாய். உன் ஓட்டத்தின் முடிவு உன்னையே நரகிற்கு அனுப்பும் அதற்கு முன் உஷாராகி விடு. என் செயல்களை திருத்திக் கொள்.

கப்ரு மோகம் கொண்டு அலையும் உன் நிலையை உடன் மாற்றிக்கொள்.

“நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து (ஒருவரை) நல்லடக்கம் செய்தோம். வேலை முடிந்து திரும்பும்போது ஒரு பெண்மணி எங்களை முன் நோக்கி வந்தார். அருமே நெருங்கிய போது (நபி (ஸல்) அவர்களின் அன்பு மகளார்) பாத்திமா (ரழி) அவர்கள் தான் வந்து கொண்டிருந்தார்கள். “வீட்டை விட்டு எங்கே புறப்பட்டு விட்டீர்?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர்.

இந்த  “மைய்யீத்தின் குடும்பத்தினர் மீது அனுதாபப்பட்டேன். அதனால் அங்கே சென்று ஆறுதல் கூறி வருகிறேன்) என்று பாததிமா(ரழி) அவர்கள் கூறினார்கள்.

“நீ அவர்களுடன் கப்ருஸ்தானுக்குச் சென்றாயா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர்.

அதற்கு பாத்திமா(ரழி) அவர்கள் “அல்லாஹ் காப்பாற்றுவானாக! நீங்கள் இதுபற்றி எவ்வளவோ கூறியிருப்பதை நான் செவியேற்றிருக்கும்போது (நான் எப்படிக் கப்ருஸ்தானுக்குப்போவேன்) என்று கூறினார்கள்.

நீ மட்டும் அவர்களுடன் கப்ருக்குச் சென்றிருந்தால் உன் தந்தையின் பாட்டன் சுவனத்தைப் பார்க்கும் வரை, சுவர்க்கத்தை நீயும் பார்க்க  முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்துல்லாஹ்பின் அம்ரு(ரழி) (அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னு ஹிப்பான். ஹாக்கிம்)

கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களையும் அதன்மீது விளக்கு கொளுத்துபவர்களையும் நபி(ஸல்) சபித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்:கவன்

நபி(ஸல்) அவர்களில் சாபம் உனக்குத் தேவையா? யோசித்து உன் செயலைத் திருந்திக்கொள்.

முரீது விற்பனை முல்லாக்கள் உன்னை முடக்க முற்படுவார்கள் முடங்கி விடாமல் தவ்ஹீதின் பாதையில் முன்னெறிச் செல்.

அல்லாஹ்வின் குர்ஆனையும். நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளையும் (சுயகருத்தை) புகுத்தாமல்) கடைபிடித்துச்செல், அதுவே உன்னை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் சுந்தா வழிகளாகும்.

வஸ்ஸலாம்

**********************************

ஆச்சார்யா மஹந்த் Dr.சருப்ஜி மஹராஜ்

முதல் நூற்றாண்டின் முஸ்லிமாகத் திகழ்கிறார்!

(ஏன்? எப்படி? எதற்கு? என்பதை அவரே கூறுகிறார்)

தமிழாக்கம் : A. முஹம்மது அலி, M.A.,

இந்து சமயத்தின் பெரும் அறிஞராகவும், தலைவராகவும் மதிக்கப்பட்ட ஆச்சார்யா மஹந்த் Dr.சரூப்ஜி மஹராஜ் சென்ற்த வருடம் போபாலில் அபுல் ஹஸன் அலி தத்வி அவர்களின் முன்னிலையில் இஸ்லாத்தில் சேர்ந்தார். அவருக்கு இஸ்லாமுல் ஹக் என இஸ்லாமியப் பயர் சூட்டப்பட்டது. அவருடன் அவரது அன்பு மனைவியையும், அருமை மகளும் இஸ்லாத்தில் சேர்ந்தனர். அவருக்கு இஸ்லாமுல் ஹக் என இஸ்லாமியப் பெயர் சூட்டப்பட்டது. அவருடன் அவரது அன்பு மனைவியும், அருமை மகளும் இஸ்லாத்தில் சேர்ந்தனர். இவர் சிறந்த அறிஞர், பற்பல பட்டங்களை கல்வித்துறையில் பெற்றனர். நிறைந்த வசதிகளுடன் மனநிம்மதியுடன் வாழ எத்தனித்தவருக்கு, அளவற்ற அல்லாஹிவின் உளவியல் ஆன்மீகத்தில் நிம்மதி இஸ்லாத்தில் கிடைத்ததாக கூறுகிறார். அவரும் அவரது சிறு குடும்பமு் அல்லாஹுவின் உளவியல் ஆன்மீகத்தல் நிம்மதி இஸ்லாத்தில் கிடைந்ததாக கூறுகிறார். அவரும், அவரது சிறு குடும்பமும் அல்லாஹுவின் அளப்பரிய கருணையால் இந்நேர்வழியகை்கு வந்ததாக உரைக்கிறார்.

பற்பல மதக் கோட்பாடுகளை தெள்ளத் தெளிவாக திரணாய்வு செய்து தானே வலிய வந்து இஸ்லாத்தில் சேர்ந்தார். “இஸ்லாம்வானல் பரப்பப்பட்டது” என்று இந்தியாவில் உலவி வரும் பிரச்சாரம் நான் சுயபுத்தியுடன் இஸ்லாத்தில் சேர்ந்ததிலிருந்து முழுக்க முழுக்க பொய்யானது என்பதை உணலைாம் என்கிறார். கீழ்காணும் அவரது பேட்டியிலிருந்து அவரது ஆழ்ந்த திறனாய்வு, அவர் இஸ்லாத்தில் சேர உருவான அழுத்தமான நம்பிக்கையை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது.

கேள்வி: தாங்கள் இஸ்லாத்தில் நுழைந்தபின் என்ன உணர்கிறீர்கள்?

பதில்: நான் இஸ்லாத்தில் சேர்ந்தது அல்லாஹ் எனக்களித்த பெரும் அருட்கருணையாக நினைக்கிறேன். இந்த உண்மையான நேர்வழியை காட்டியதன் மூலம் அளப்பரிய அருளை அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ளான். உலகத்திலேயே தற்போது பெற்றவர்கள்,வெற்றி பெற்றவர்களில் ஒருவனாக உணர்கிறேன். சமயத்துறையில் அவநம்பிக்கைக் கொண்டவனாக இருளிலிருந்த போது நான் பகவான்(கடவுள்) என மக்களால் கருதப்பட்டேன். ஆனால் இஸ்லாம் என்னும் பிரசாரத்தில் நுழைந்த பின்தான் நான் சரியான “மனிதனாக” இருப்பதாக உணர்கிறேன்.

கேள்வி: தங்களது முந்திய பெயரையும், தாங்கள் ஈடுபட்டிருந்த சேவையைப் பற்றியும் சிறிது கூறுங்கள்.

பதில்: எனது முந்தைய பெயர் மஹந்த், டாக்டர் திரு. சக்தி சரூப்ஜி மஹராஜ் அதாரின் தர்மாச்சார்யா உதயசக்தி, நான் இந்து சமய புரோகிதர்கள் குடும்பத்தைச் சார்ந்தவன். எனவே நான் இதுவரை பற்பல இந்து சமய கல்வி ஸ்தாபனங்களில் பணி புரிந்துள்ளேன். அதில் குறிப்பிடத்தக்கது: மதுரா மாவட்டத்தில் பிருந்தாவன் என்ற ஊரிலிருக்கும் பான்கந்த் ஆசிரமம். அதே போன்று பம்பாயில் ஒரு ஆசிரமம். மூன்றாவதாக அகில உலகப் புகழ்பெற்ற வாரனாசியிலுள்ள ஆசிரமமம். இது 50 ஏக்கர் நிலப் பரப்பில் பூமிக்கடியில் இன்றும் வேலை நடந்து வருகிறது. அங்கு எனக்கு விதிக்கப்பட்ட வேலை: இந்து சமயத்தை பரப்புவதும், புதிதாக சேரும் சீடர்களுக்கு பயிற்சி அளிப்பதும் ஆகும்.

கேள்வி: தாங்கள் சான்றாண்மைமிக்க அறிஞர் என கேள்விப்பட்டோம் தங்களது கல்வி பயிற்சி பற்றி சிறிது கூறவும்.

பதில்: நான் எனது ஆரம்பக் கல்வியை இந்து சமயக் கல்வி கூடமான ஆசிரமத்தில் ஆரம்பித்தேன். கீழ்த்திசை மொழிப்புலமை (Orientalism)யில் (M.A.) முதுநிலைப் பட்டத்தை அலகாபாத் பல்கலைக் கழகத்தில் பெற்றேன். அடுத்து ஆன்மீகத்தில் டாக்டர் (D.D.டாக்டர் ஆப் டிவினிடி) ஸனதை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் அடைந்தேன். முடிவாக எல்லா சமயங்களின் ஒப்பீட்டு முறையில் ஆராய்ச்சி செய்து Ph.D.,  பட்டத்தையும் வென்றேன். இவ்விதமாக நான் ஆன்மீகத்திலும், கீழ்த்திசை மொழிப் புலமையிலும் இரு டாக்டரேட் பட்டங்களைப் பெற்றுள்ளேன்.

ஒரு தடவை கண்ணியமிக்க ஆறாவது போப் பால் அவர்களின் அழைப்பில் வாட்கன்(ரோம்) சென்றேன். என்னை ஏழு வேறுபட்ட தலைப்புகளில் பேசப் பணிந்தனர். நானும் பெரு முயற்சி எடுத்து நல்ல திறனாய்வுடன் பேசினேன். எனது திறமைக்கு பரிசாக அவர்கள் O.F.M.(Camp) என்ற கவுரவ விருது அளித்தனர். வாட்டிகன் நகரின் பிரஜை உரிமையுடன் கொடுத்தனர் என்னை எப்படியாவது கிறித்துவனாக மாற்ற பெரும்பாடு பட்டனர். ஆனால் என்னை கிறித்துவம் கவரவில்லை. எனவே அதைவிட உயர்வானதை(வழியை)த் தேடி இந்தியா திரும்பினேன். இங்கு எனக்கு “மஹந்த்” என்ற பொறுப்பளித்து சிறப்பித்தனர்.

கேள்வி: நாங்கள் எப்பொழுது எங்கு பிறந்தீர்கள்? தங்களது வம்சா வழி என்ன?

பதில்: நான் 1936 பிப்ரவரி 3ல் உத்திரபிரதேசத்தில் மதுரா மாவட்டத்தில், பிருந்தாவன் என்ற நகரில் பிறந்தேன். நான் பாபாநானக் அவர்களின் வேதி வானாஷ் என்ற வம்சத்தைச் சார்ந்தவன்.

கேள்வி: எந்த எந்த மொழிகளில் தங்களுக்கு நல்ல புலமையுள்ளது” எந்த மொழிகள் தங்களை அதிகமாக கவர்ந்துள்ளன?

பதில்: எனக்கு ஏறத்தாழ பன்னிரண்டு மொழிகளில் புலமையுள்ளது. அவையாவன: ஆங்கிலம், சமஸ்கிருதம், கிரேக்கம், திப்ரூ, ஹிந்தி, பிரக்ருதி, பாலி, குருமுகி, மராத்தி, குஜராத்தி, உருது, அரபி, ஒப்பீட்டு வழியில், ஆங்கிலம், சமஸ்கிரும், ஹிந்தி, உருது, குருமுகி, அரபி ஆகிய மொழிகள் என்னை அதிகமாக கவர்ந்துள்ளன.

கேள்வி : தாங்கள் நீண்ட காலமாக இந்து சமய கோட்பாட்டில் ஊறியவர்கள், இந்து நண்பர்கள் முஸ்லிம்களைப் பற்றி அச்ச உணர்வு கொண்டிருப்பதை கண்டீர்களா?

பதில்: இந்தியாவில் இந்து சமயத்தவர்கள் முஸ்லிம்களைப் பற்றி அச்ச உணர்வு கொள்ளவில்லை. மாறாக இஸ்லாம் உயர்வான சிறப்பான கோட்பாடுகளை கொண்டுள்ளது. அத்துடன் பலவீனமான கோட்பாடுகளைக் கொண்ட இந்து சமயத்தை ஒப்பிட்டுப் பார்க்க அஞ்சுகிறார்கள். இஸ்லாம் மனிதனை இன, குல, கோத்திரம், மொழி, நிற, நாடு, உயர்வு, தாழ்வு போன்ற வேறுபாட்டிலிருந்து உயர்த்துகிறது. இஸ்லாம் தனக்கென தனிச்சிறப்புமிக்க அடிப்படையைக் கொண்டுள்ளது. அது மனிதனை எல்லா அடிமைத் தளைகளிலிருந்தும், விடுவித்து ஒரே இறைவனுக்கு அடிமையாக இருக்க ஆணையிடுகிறது. பற்பல வேறுபாட்டைக் காட்டிமனிதனை பற்பா அடிமைத் தளையில் பினைந்திருக்கும் இந்துக்கள் இதனால் பயப்படுகிறார்கள். இஸ்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சடங்கு, சம்பிரதாயங்களிலிருந்து விடுபட்டு நிற்பதும் அதன் தனிச்சிறப்பாகும்.

கேள்வி: ஏதாவது ஒரு நாட்டின் ஒரு பகுதியிலாவது இஸ்லாத்தை முழுமையாக அறிந்து விட முடியும் என்ற வாய்ப்புள்ளதா? தங்களால் உணர முடிகிறதா?

பதில்: இஸ்லாம் முழுமையானது; நிரந்தரமானது; அழுத்தமான அடிப்படையில் அமைக்கப்பட்டது. இந்த பூமியில் எந்த சக்தியாலும் இதனை அழிக்கவோ என களங்கப்படுத்தவோ முடியாது. இஸ்லாத்தை பற்றிய அழுத்தமான நம்பிக்கை(ஈமான்) இல்லாத முஸ்லிம்கள் அழிக்கப்படலாம் ஆனால் இஸ்லாத்தை முழுமையாக விளங்கிச் செயல்படும். ஒரே ஒரு முஸ்லிம் இருக்கும் வரை, அவரிடம் ஹிஜ்ரத் உடைய உணர்வும், இஸ்லாமிய வெற்றியின் வேகமும் நிழலாடும் வரை என்றாலும் அதனை அழிக்க முடியாது.

கேள்வி: தாங்கள் இஸ்லாத்தில் சேருவதற்கு முன் எங்காவது இஸ்லாத்தின் தனிச்சிறப்பை வெளிப்படுத்தினீர்களா?

பதில்: நான் உலக மதங்களில் சிறந்த பத்து மதங்களைப் பற்றி அவற்றின் உண்மையான ஆதாரமான நூற்களைக் கொண்டு உண்மை நிலையில் ஆராய்ந்துள்ளேன். எனவே ஒப்பீட்டு முறையில் இஸ்லாத்தின் சிறப்பை உணர்ந்தேன். உலகளாவிய சிறப்பு மிக்க இந்து சமயப் பெரியார்களான சங்கராச்சாரியர்கள்: இராமகோபால், மஹானந்த்மஹேஸ்பர், சுவாமி அகந்தா நந்திஜீ, குருகோவாஸ்கர், பாபா சாஹிப் நேஷ்முக், பால்தாக்ரே, அடல் பிஹாரி வாஜ்பாய், நானா சாஹிப், தேஷ்முக், வினோ பாபாவே போன்றோர் நான் வாழும் காலத்தில் வாழ்பவர்கள். அனைவருடனும் எனக்கு நல்லுறவு என்றென்றும் இருந்தது.

1981ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆச்சாரியா வினோ பாபாவே அவர்கள் அன்னை அவரது பிராமதம் ஆசிரமத்தில் உரையாற்ற அழைத்தார்கள். அங்கு பலபெரும் இந்து சமயத் தலைவர்கள், மஹந்துகள் குழுமியிருந்தனர், அதில் தாதா தரம் அதிகாரி அவர்களும் இருந்தார் அவர் ஒரு திடுக்கிடும் கேள்வியைக் கேட்டார். சுமாமிஜி நாங்கள் உலக மதங்கள் பலவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளீர்கள். அவற்றில் எந்த மதம் மனிதனுக்கு மிகவும் சிறப்பானது” எனக் கேட்டார்.

“இஸ்லாம்” என நான் பதிலளித்தேன். “ஆனால் இஸ்லாம் பற்பல சட்டங்களைக் கொண்டு இக்கட்டாக கட்டப்பட்ட (Tied-up-religion) மதமாயிற்றே!” என்றார். அதற்கு நான், எந்த மதம் கட்டுப்பாடு உடையது என்கிறீர்களோ அது மனிதனுக்கு தேவையான உரிமைகளை, சுதந்திரத்தை தேவையான அளவு, அளிக்கத் தவறவில்லை. ஆனால் கட்டுப்பாடற்ற மதத்தில் பற்பல அடிமைத்தளைகளால் நாமனைவரும் கட்டப்பட்டுள்ளதைக் காணலாம். இவ்வுலக வாழ்வில் மனிதனுக்கு கட்டுப்பாடு உடைய மதம் தேவைப்படுகிறது. அதனால் இவ்வுலகில் அவன் நல்வாழ்வு வாழமுடியும். அதன் பயனாக மறுமையில் கட்டுப்பாடற்ற முழு சுதந்திர, நிரந்தர வாழ்வு கிடைக்கும். எனவே இந்நிலையில் இஸ்லாம் சிறந்த மார்க்கமாக நான் கருதுகிறேன் என்றேன்.

கேள்வி: தான் பின்பற்றும் மதமின்றி மற்றொரு மதத்தைப் பற்றி சிறப்பித்துக் கூற தங்களுக்கு தைரியமிருந்தது ஆச்சரியமானது. அதுவும் சரியான திறனாய்வில் ஆதாரத்துடுன் எடுத்து வைத்தது வரவேற்கத் தக்கது. இது தங்களுக்கு இஸ்லாத்தின் மீதுள்ள ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அது சரி நாங்கள் இஸ்லாத்தில் இணைய காரணமானது என்ன? அதுவும் தற்சமயம் முஸ்லிம்களுக்கு எதிராக பற்பல வகுப்பு கலவரங்கள் குழப்பங்கள் நடக்கும்போது தங்களை இஸ்லாத்தில் சேரவைத்தது எது? இப்படிப்பட்ட சூழ்நிலையை தாங்கள் எப்படி சமாளிக்க போகிறீர்கள்?

பதில்: வருடக்கணக்காக என்னுள் ஆழ்ந்து கிடந்த ஆன்மீக தாகம் ஒரு சிறப்பு நிகழ்ச்சியால் உண்மையானது. 1984ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு நாள் இரவு உறங்குகையில் ஒரு கனவு கண்டேன். அதில் ஒருபெரிய கூட்டம் என்னை துரத்தி வருகிறது. நான் ஓடினேன். பின் நின்றேன். அக்கூட்டமும் ஓடிவந்தது பின் நின்றது. ஏதோ ஒன்றில் நான் தடுத்து விழுந்து விட்டேன். உடனடியாக ஏதோ இரு கதங்கள் என்னைப் பற்றி நிற்க வைத்தது. எழுந்து நின்று நான் எனக்கு உதவியவரின் பிரகாசமான முகத்தைக் கண்டேன். யாரென என்னால் கணிக்க முடியவில்லை. அருகிலிருந்தவர் இவர் முஹம்மது(ஸல்) என எனக்கு கூறினார். நான் என் நிலை மறந்து பரவசமானேன். முஹம்மது(ஸல்) என்னை கலீமா மொழியச் சொன்னார். எனது வலது கரத்தை அவரது கரங்களில் பற்றி கலிமாவை எனக்கு கற்பித்தார். நானும் திருப்பி கூறினேன். அடுத்து அவர் என்னை கட்டியணைத்து கலிமாவை இந்நாட்டு மக்களுக்கு எடுத்து போதிக்கும்படி ஆணையிட்டார். இக்காட்சி எவ்வளவு நேரம் கிழந்தது என்பது தெரியவில்லை. நான் கண்விழித்தபோது இரவு மணி மூன்று.

அன்று இரவு எனது மனைவியும் இதே போன்று கனவு கண்டதாக கூறினாள். அளவுக்கதிகமான பரவசத்தில் நாங்கள் உடல் வியர்த்து போனோம். எங்களது நாடி நரம்புகள் ஆத்மாவின் வேகத்திற்கு வந்தபோது ஏதோ ஒரு புதிய இன்ப நாதமாக தெரிந்தது. நாங்கள் இஸ்லாத்தின் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த முஸ்லிம்களாக உணர்ந்தோம். அந்த முதல் நூற்றாண்டின் இஸ்லாத்தை இவ்வுலகிற்கு வெகுவிரைவில் வரவேண்டுமென்ற அவர் மேலோங்கியது. கனவில் கண்ட அந்த காட்சி இவ்வுலகில் ஏதோ ஒரு சிறப்பு நிகழ்ச்சி நிகழப் போவதை எங்களுக்கு உணர்த்தியது. அன்று முதல் நாங்கள் ஊரறிய, உலகறிய கலிமாக் கூறி இஸ்லாத்தில் சேர முயற்சிகள் எடுத்தோம்.

பற்பல ஊர்களுக்கு சென்றோம். பற்பல முஸ்லிம்களிடம் தொடர்பு கொண்டோம். தனிமையில் அன்றாட தொழுகை போன்ற இஸ்லாமிய வணக்கங்களை செவ்வென செய்து வரலானோம். இவ்விதமாக நாங்கள் அறிஞர்களின் நகரமான போப்பால் வந்தோம். 1986ஆம் ஆண்டு, மே மாதம் 10ம் நாள், ரமலான் முதல் பிறையன்று நான் எனது மனைவி அன்பு மக்களுடன் அல்லாஹுவின் அருட்கொடையான இஸ்லாத்தில் இணைந்தேன். இதனை தான் இயற்கையுடன் இணைந்ததாக நினைக்கிறேன். இப்போது நாங்கள் ஆண்டாண்டு காலமாக உழன்ற அறியாமையின் இருளிலிருந்து விலகி, ஞான உலகில் நுழைந்ததாக நினைக்கிறேன். சாந்தி, அமைதியை நான் முழுமையாக அனுபவிக்க முடிகிறது. அமைதியான நல்ல தூக்கமும் வருகிறது.

கேள்வி: தங்களுக்கு என்ன இஸ்லாமியப் பெயர் வைக்கப்பட்டது? அது தங்களுக்கு உவப்பானதாக தெரிகிறதா?

பதில்: எனக்கு இஸ்லாமுல் ஹக், எனது மனைவிக்கு கதீஜா, எனது மகளுக்கு ஆயிஷா என இஸ்லாமியப் பெயர்கள் சூட்டப்பட்டன். இவ்வளவு அழகிய பெயர்கள் எங்களுக்கு கிடைத்தது. பாவத்திற்குரியது பேறு பெற்றவர்கள்.

கேள்வி: “இந்து நண்பர்களிடையெ இஸ்லாம் வாளால் பரவியது: கட்டாயத்தில் பலர் முஸ்லிம்களானார்கள்” என்ற எண்ணமுள்ளதே! அதைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்” இது ஒரு பொய்ப் பிரச்சாரம் என்பதற்கு நான் வலிய வந்து இஸ்லாத்தில்  சேர்ந்துள்ளதே நல்ல உதாரணமாகும். இத்தவறான எண்ணம் பாமர மக்களிடம் மட்டுமின்றி பல அறிஞர்களிடமும் இருப்பது வருந்தத்தக்க விஷயம். இப்போது நான் முஸ்லிமாகி விட்டேன். பல இந்து சமய அறிஞர்கள், தலைவர்கள் என்னிடம் கடித தொடர்பு கொள்கின்றனர். விசாரிக்கின்றனர். நானும் அவர்களுக்கு நல்ல பதில் அளித்து வருகிறேன். இதைப்போன்று ஒவ்வொரு முஸ்லிமும் தன்னாலான முயற்சியில் இத்தவறான எண்ணம் மறைய பாடுபடவேண்டும்.

கேள்வி: தாங்கள் பற்பல மதங்களைப் பற்றி ஆராய்ந்துள்ளீர்கள். அம்மத நூற்களில் அல்லாஹ், குர்ஆன், முஹம்மது(ஸல்) போன்ற குறிப்புகள் உள்ளதா?

பதில்: பெளத்த, ஜைன மதங்களைத் தவிர மற்ற எல்லா மதங்களிலும் அல்லாஹ், முஹம்மது, அஹ்மது பற்றி குறிப்புகள் உள்ளன. இப்பெயர்கள் இந்து வேதங்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. “அலாஹ்” என்ற சொல் நான்கு பெரும் வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் முதல் அத்தியாயத்திலேயே இடம் பெற்றுள்ளது. இச்சொல்லே “அல்லாஹ்” என கூறப்படுகிறது. அதைப் போன்று “மொஹமது”, “அஹ்மது” என்று முஹம்மது அஹமது என்ற பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளது. ரிக்வேதத்தில் “குர்தா-னு” என்ற சொல் குர்ஆஐன குறிப்பதாக அமைந்துள்ளது.

கேள்வி: உங்களது வளமான வாழ்வையும், பொருட் செல்வத்தையும் துறந்து தாங்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளீர்கள். இனி எப்படி உங்களது வாழ்க்கைக்கான வருவாயை மீட்டப் போகிறீர்கள்?

பதில்: உலகப் பெரும் அரசாங்கமே எனது கையில் இருந்திருப்பினும், அல்லாஹுவின் அருட்கொடையான இஸ்லாத்திற்காக, அதனைத் துறக்க தயங்க மாட்டேன். ஏழு உலகின் அதிபதியாக நான் இருந்திருப்பினும், இஸ்லாத்தில் இணைந்ததால் கிடைத்த இன்பம், சாந்தி, நிம்மதி, எனக்கு கிடைத்திருக்காது. நான் ஆயுர்வேதிக் மருத்துவத்தில் பயிற்சி பெற்றவன் “பாரா மைக்ரோ” என்ற முறையில் அல்லாஹுவின் அருளால், கேன்சர் போன்ற கொடிய நோய்களுக்கும் மருத்துவம் செய்து வெற்றி பெற்றுள்ளேன். எனவே எல்லாம் வல்ல அல்லாஹுவின் அருளால் எனக்கு தேவையான வருவாயை சரியான முறையில் இலகுவாக சம்பாதித்து மன நிம்மதியுடன் வாழ முடியும்.

கேள்வி: முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றி தங்களது கருத்து என்ன?

பதில்: எனக்கு அல்லாஹுவைப் பற்றி அறிவு இல்லாமல் இருந்தது. நபி முஹம்மது(ஸல்) அவர்கள் எனக்கு அல்லாஹுவைப் பற்றி அறிய வைத்தது. நான் பெற்ற பெரும் பேறாகும். அல்லாஹு அகில உலகின் இரட்சகன். இன்பத்தின் இறைவன், அவன் முஹம்மது(ஸல்) அவர்களை  மனித இனத்தில் நேர்வழி காட்ட அனுப்பினான். முஹம்மது(ஸல்) அவர்களின் ஒப்புயர்வற்ற குணங்கள். வாழ்க்கை நெறி, சீரிய ஒழுக்கம் என்னை எனது வாழ்வை மிகவும் கவர்ந்துள்ளது. உண்மையிலும் உண்மை.

கேள்வி: இஸ்லாத்தின் புது வீரரான தாங்கள் இன்றைய முஸ்லிம் சகோதரர்களுக்கு கூறும் செய்தி என்ன?

பதில்: இக்கேள்விக்கு கிறித்துவ சமய நூலிலுள்ள ஒரு நீதிக் கதையைக் கூற விரும்புகிறேன். ஒருநாள் காலை, இயேசுநாதர், தனது இரவு வணக்கங்களை முடித்துவிட்டு, ஒரு ஆற்றின் மறுகரையிலுள்ள தனது சீடர்களை காண நீரின் மீது நடந்து வந்தார். இதனைக் கண்ட அவரது சீடர்கள் வியப்புற்றனர். இதுபோன்று நாங்களும் நீரின்மீது (மூழ்காமல்) நடக்க முடியுமா? என சீடர்கள் வினவினார்கள். அதற்கு இயேசு தூதர் நீங்கள் என்னைப் பார்த்துக் கொண்டே நடந்தால் இதுபோல நீரில் நடக்க முடியும். ஆனால் என்னை பார்ப்பதிலிருந்து உங்களது பார்வை சிறிது திரும்பினால் உடனே நீரில் மூழ்கி விடுவீர்கள் என்றார். அதேப் போன்று அவரது சீடர்கள் அவரை பார்த்துக் கொண்டே நீரில் நடக்க ஆரம்பித்தனர். சிறிது தூரம் நடந்த சீடர்களுக்கு நாம் நீரில் நடக்கிறோமா? என்ற ஐயம் எழவே தங்களது பார்வைகளை சிறிது தாழ்த்தி பார்த்தனர். அவ்வறகு தான்! அவர்கள் அந்நீரில் மூழ்கடிக்கப்பட்டனர். (இந்நீதிக்கதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆதாரமற்றது. இத்தகவலை Dr.இஸ்லாமுல் ஹக் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்)

இந் நீதிக்கதைகளை விவரித்து இஸ்லாமுல்ஹக் தொடர்கிறார். முஹம்மது(ஸல்) நமக்கு காட்டிச் சென்ற வழியை நாம் கண்ணும் கருத்துமாகப் பேணவேண்டும். அப்படி பேணி வாழ்ந்தால் தான். இவ்வுலக வாழ்க்கை என்ற ஆற்றை எவ்வித இடையூறுமின்றி கடந்து, அடுத்த கரை (மறுமை)யை அடைய முடியும். இதில் ஏதாவது சிறிது வேறுபாட்டாலும் இவ்வுலக ஆற்றில் மூழ்கி மீள முடியாமல் அழிவோம். இவ்வழியில் தங்களை திருப்பிக்கொள்ள முஸ்லிம்களுக்கு இன்னும் வாய்ப்புள்ளது. இவ்வாய்ப்பை பயன்படுத்தி நபி(ஸல்) காட்டிய வழியில், சிறிதும் பிறழாமல் செல்வார்களேயானால், இழந்து விட்ட பெருமை, சிறப்பு, மதிப்பு, மீண்டும் மனிமகுடமாக இவர்களுக்கு கிடைக்கும்.

கேள்வி: ஒரு உண்மையான முஸ்லிமின் குணநலன்கள் என்னென்ன? என்பதை தங்களது கருத்துப்படி கூறுவான்!

பதில்: ஒரு முஸ்லிமீன் குணநலன்களை முஹம்மது(ஸல்) அவர்களை விட எவரால் வரையறுத்துக் கூற முடியும். நபி(ஸல்) கூறினார்கள், உண்மையான முஸ்லிம் சுத்தமான தங்கத்தைப் போன்றவன் அத்தங்கத்தை எதில் பதித்தாலும், பதிக்கப்பட்ட பொருள் அத்தங்கத்தால் மெருகு பெறும். அழகு பெறும், சிறப்பு பெறும், மேலும் நபி(ஸல்) கூறினார்கள். ஒரு முஸ்லிம் தேனீமையப் போன்றவன். அத்தேனீ பற்பல வண்ண மலர்களிலிருந்து மதுரமான தேனை சேகரிக்கிறது. அசுத்தத்தை விட்டும் அகன்று விடுகிறது. அப்படி சேகரித்த தேனை தனக்கென வைத்துக் கொள்ளாமல் மற்ற மனிதர்களுக்கு அளித்து விடுகிறது. அதே போன்றவன் தான் முஸ்லிம் வேறு ஒரு இடத்தில் ஒரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிமுக்கு தனது கையாலும், நாவாலும் இடர் தராமலிருக்கிறாரோ, அவரே சிறப்புக்குரியவர் என நபி(ஸல்) அறிவுறுத்தினார்கள்.

கேள்வி: முடிவாக ஒரு கேள்வி, எந்த எந்த வழிமுறைகளின் இஸ்லாத்தின் முதல் நூற்றாண்டின் சிறப்பை நாம் திருப்பி கொண்டு வர முடியுமென்பதை தாங்கள் கூறினார் நலம்!

பதில்: அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் வல்ல அல்லாஹுக்கே! உண்மையாக இது சரியான கேள்வி கேட்கப்படவேண்டிய கேள்வி. நாம் இழந்து விட்ட சிறப்பைப் பெற, மறைந்து விட்ட இஸ்லாத்தின் முதல் நூற்றாண்டு நிலைமை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற போவர். ஆசை இப்பொழுது அதிகமாக உலவி வருகிறது. இன்றைய வளரும் சமுதாயமும், இளைஞர்களும் இவ்விஷயத்தில் வேகமாக இருக்கிறார்கள். (பதில் கூறும் புதிய முஸ்லிம் இஸ்லாமும் ஹக் அவர்களுக்கு தமிழ் தெரியாது. கொள்கையைத் தவிர வேறு எந்த வகையிலும் அந்நஜாத்திற்கு தொடர்பு அற்றவர்-ஆர்.) எனவே சிறந்த இஸ்லாத்தின் முதல் நூற்றாண்டு நிலைமை முழுமையாக உருவாகும் காலம் வெகு தூரமில்லை. அந்நிலைமை மீண்டும் வரவேண்டுமென்ற உணர்வு நீண்ட காலமாக முஸ்லிம்களின் உள்ளங்களில் உயிருள்ள விதையாக இருந்தது. அது பற்பல களைகளால் சூழப்பட்டு, உயிர் பெரும் வசதியின்றி கிடைத்தது. எனவே எல்லாக் களைகளையும் களைந்தெறிந்து, அவ்வுயிர் விதை வேர்விட்டு வளர வசதி செய்யப்பட வேண்டும்.

அதற்காக ஒவ்வொரு முஸ்லிமும், புதிதாக உறுதிப் பிரமாணம் எடுக்க வேண்டும். தூய்மையான, நட்புணர்வோடு கூடிய, இறை நம்பிக்கை வளர கங்கணம் கட்டி காரியத்தில் இறங்கவேண்டும். நபித்தோழர் பிலால்(ரழி) போன்றோரின் உறுதியான ஈமான், விடாமுயற்சியுடன் முஸ்லிமாக வாழ ஆரம்பிக்க வேண்டும். குர்ஆனின் ஆணைகளை தலைமேற்கொண்டு, நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறியுடன் வாழ்வோமென உறுதிமொழி கூறி செயலில் வாழவேண்டும். இப்படி ஒவ்வொரு முஸ்லிம் வாழ முயற்சிப்பாரேயானால்,  அவனால் அவனது சுற்றுப்புறம், சூழலில் நல்ல இறை பக்தியை, நல்லொழுக்கத்தை உருவாக்க முடியும். முதல் நூற்றாண்டின் சிறப்பு மிளிரும்.

இதனடிப்படையில் நான் “Moomin Making” (இறை நம்பிக்கையாளர்களை உருவாக்கும் குழு) என்ற இயக்கத்தை உருவாக்கி செயல்பட இருக்கிறேன். இவ்வியக்கம் இறை நம்பிக்கையாளர்களின் உலகாதாய, மார்க்க சம்பந்தப்பட்ட விஷயங்களில் கருத்துக் கொள்ளும், அதில் ஏற்படும் இடர்பாடுகளை களைந்தெறிய முயற்சிக்கும், பற்பல பிரிவுகளாக பிரிந்துள்ள முஸ்லிம்களை ஒரு கூட்டமாக திரட்ட பாடுபடும். இது மூன்று நெறிகளை கோட்பாடாக கொண்டு இயங்கும்.

அவையாவன:

1. இஸ்லாத்தை (அதன் தூய வடிவில்) பாதுகாத்தல்.

2. உலக, மார்க் விஷயங்களில் முஸ்லிம்களுக:கு இஸ்லாம் அனுமதிக்கும் வழியில் துணை நிற்றல்.

3. இஸ்லாத்தின் தூய கருத்துக்களை, கோட்பாடுகளை முடிந்த வரை அந்தந்த மொழிகளில் எல்லோருக்கும் கிடைக்க வழி வகை செய்தல்.

************************************
ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : வீட்டை விட்டும் புறப்படும் போது பலரும் பலவிதமாக எதனையோ ஓதுகிறார்கள். நபி(ஸல்) அவர்களட் அவ்வாறு ஏதேனும் ஓதியவர்களாக புறப்பட்டார்கள் என்பதற்கு ஹதீஸின் வாயிலாக ஆதாரமுண்டா? ஹபீபுல்லாஹ், மணப்பாறை.

தெளிவு : அனஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள் :

நபி(ஸல்) அவர்கள் தமது வீட்டை விட்டுப் புறப்படும் போது, பிஸ்மில்லாஹி தவக்கல்த்து அவல்லாஹி  லாஹவ்ல வலாதவ்வக்க இல்லாபில்லாஹி.

பொருள் : அல்லாஹ்வின் பெயரால் (புறப்படுகிறேன்) அல்லாஹ்விடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறேன். தீங்கைத் தவிப்பதற்கும், நலனை அடைவதற்கும் அல்லாஹ்வின்றி இயலாது என்று கூறுவார்கள். இவ்வாறு கூறி வெளியில் புறப்படும் நபரை நோக்கி, நநிர்(உமது அனைத்து காரியங்களுக்கும்) போதுமான நிலையையும், பாதுகாப்பையும் பெற்றுவிட்டீர் என்று (மலக்குகளின் வாயிலாக) கூறப்படும். அன்றி ஷைத்தானும் அவரை விட்டு விலகி விடுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதி)

உம்மு ஸலமா(ரழி) வாயிலாக அபூதாவூத், இப்னு மாஜ்ஜாவில் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. உம்முஸலமா(ரழி) அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் எனது வீட்டிலிருந்து புறப்படும்போது வானத்தின் பால் தமது பார்வையை உயர்த்தியவர்களாக, அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க அன் அழில்ல அவ் உழுல்ல அவ் அழ்லிம அவ் உழ்லம அவ் அஜ்ஹல  அவ் உஜ்ஹல் அலய்ய என்று நாம் ஓதாது ஒருபோதும் புறப்பட்டதில்லை.

பொருள் : யா அல்லாஹ்! நான் உன்னிடம் வழிதவறிச் செல்வதை விட்டும், அல்லது பிறரால் நான் வழிதவறச் செய்யப்படுவதை விட்டுமு், மேலும் நான் (பிறருக்கு) அநியாயம் செய்வதை விட்டும் அல்லது (பிறரால்) நான் அநியாயம் செய்யப்பட்டுள்ளதைவிட்டும், மேலும் பிறருக்கு நான் அறியாத்தனமாக எதையும் செய்து விடுவதை விட்டும் அல்லது (பிறரால்) அறியாத்தனமாக எனக்கு எதையும் செய்யப்படுவதைவிட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.

ஐயம் : நபி(ஸல்) அவர்கள் வீட்டை விட்டும் புறப்படும்போது துஆ ஓதியவர்களாக சென்றதுபோல், தாம் வீட்டில் பிரவேசிக்கும் போதும் ஏதும் ஓதியதுண்டா? தாஜுத்தீன், திருச்சி-8.

தெளிவு : அபூமாலிக்கில் அஷ் அரீ(ரழி) அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் தமது வீட்டில் பிரவேசிக்கும் போது பின்வருமாறு ஓதவேண்டும்.

அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக்க கைரல் மவ்லிஜி வகைரன் மக்ரஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வஅலல்லாஹி ரப்பினா தவக்கல்னா

பொருள் : யா அல்லாஹ் நான், உன்னிடம் சிறப்பான பிரவேசிப்பையும், சிறப்பான வெளியேறுதலையும் வேண்டுகிறேன். அல்லாஹ்வின் பெயரால் பிரவேசிக்கிறோம். எங்கள் ரட்சகனாகிய அல்லாஹ்விடம் எங்கள் பொறுப்புக்களை ஒப்படைக்கிறோம் என்று தான் ஓதிய பின், தனது குடும்பத்தாருக்கு ஸலாம் கூறுவாராக! (அபூதாவூத்)

நீங்கள் எந்த வீடடி்ல் நுழைந்தபோதிலும், அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு கிடைத்துள்ள பாக்கியமுள்ள பரிசுத்தமான (அஸ்ஸலாமு அலைக்கும் என்ற) நல்வாக்கியத்தை உங்களுக்குள்  (ஒருவருக்கொருவர்) கூறிக்கொள்ளுங்களட் நீங்கள்(இதை) அறிந்து (நடந்து) கொள்வதற்காகவே இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு (தனது) வசனங்களை விவரிக்கிறான் (24:61)

அனஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள் :

நபி(ஸல்) அவர்கள் என்னை நோக்கி எனதருமை மகனே, நீர் உமது குடும்பத்தாரிடம் வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது (அவர்களுக்கு) ஸலாம் கூறும்! அது உமக்கும் உமது குடும்பத்தவருக்கும் பரகத் – விருத்தியாம்சம் ஆகும் என்றார்கள். (திர்மிதீ)

மேற்காணும் திருகுர்ஆனின் வசனமும், ஹதீஸ்களும் நாம் வீட்டில் பிரவேசிக்கும் போது ஸலாம் கூறிச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

ஐயம் : நபி(ஸல்) அவர்கள் காலில் பாதரட்சை அணியும்போதும், அதைக் கழற்கும் போதும் அதற்கென தனிப்பட்டதோர் முறையை அனுஷ்டித்துள்ளார் என்பதாகக் கேள்விப்படுகிறேன். அது உண்மைதானர்? வெற்றுக்காலுடன் நடப்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா? ஹபீப்யமீன், சேலம்.

தெளிவு : அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள் :

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் காலணி அணியும் போது வலது காலை முற்படுத்துவாராக!  கழற்றும்போது இடது காலை முற்படுத்துவாராக! ஏனெனில் அணியப்படும்போது இரணடி்ல் வலதுபுறம் முரண்மையானதாகவும், கழற்றப்படும்போது இரண்டில் வலதுபுறம் கடைசியானதாகவும் அமையும். (புகாரீ, முஸ்லிம்)

உங்களில் எவரும் தமது ஒரு செருப்புடன் நடந்து செல்லவேண்டாம். கழற்றினால் இரண்டையும் கழற்றி விடுங்கள் இல்லையேல் இரண்டையும் அணிந்து காள்ளுங்கள். அபூஹுரைரா(ரழி), (புகாரீ, முஸ்லிம்)

ஜாபிர்(ரழி) அறிவித்துள்ளார்கள் :

நபி(ஸல்) அவர்கள் தாம் கலந்துள்ள ஒரு யுத்தத்தில் பின்வருமாறு அவர்கள்ட கூற நானட் கேட்டுள்ளேன்.

நீங்கள் காலணிகளை அதிகமாக உபயோகித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒருவர் தமது காலில் செருப்பணிந்து இருக்கும்போது அவர் வாகனத்திலிருப்பவராகவே காட்சியளிக்கிறார். (முஸ்லிம்)

மேற்காணும் ஹதீஸ்களின் மூலம் பாதரட்சையணியும் முறையைத் தெரிந்து கொள்வதோடு, சந்தர்ப்பங்களில் காலில் செருப்பில்லாது நடந்து செல்வதில் தவறில்லை என்பதையும் உணர்கிறோம்.

ஐயம் : எனது நண்பர் ஒருவர் அல்லாஹ்விடம பாவமன்னிப்புத் தேடுவதற்காக நபி(ஸல்) அவர்களட் மிக அழகிய ஒரு துஆவைக் கற்றுத் தந்திருப்பதாகவும், அதை முறையோடு காலை, மாலை ஓதுவோர் நிச்சயம் சுவர்க்கம் புகுவார் என்றும் கூறுகிறார். அப்படி ஏதேனும் துஆ உள்ளதா? அது ஆதாரமற்றதா?
அப்துல்கனி, ஆம்பூர்.

தெளிவு : ஷத்தாது பின் அவ்ஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பாவமன்னிப்புத் தேடுவதில் தலை சிறந்த வாசகம், ஒரு (பாவியான) அடியான் (பின்வருமாறு) கூறுவதாகும்.

யாஅல்லாஹ் நீ தான் எனது ரட்சகன், உன்னை அன்றி வணக்கத்திற்குரியவன் வேறு இல்லை. நான் உனது அடியானாகவும், நீ எனக்கிட்ட கட்டளையின் படியும் என்னால் இயலுமான வரை உனது வாக்குறுதியின்படியும் உள்ளவனாக என்னை நீ படைத்திருக்கிறாய் நான் செய்த பாவங்களில் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் எனக்கு நீ செய்துள்ள உபகாரத்தையும், (அதே நிலையில்) நான் உனக்கு செய்துள்ள பாவத்தையும் ஒத்துக்கொள்கிறேன். ஆகவே. நீ என்னை மன்னித்தருள்வாயாக! ஏனெனில் நிச்சயமாக உன்னையன்றி வேறு எவரும் பாவங்களை மன்னிக்க இயலாது.

எவர் இதை முழுமையாக நம்பி, பகலில் இதைக் கூறி, அன்றைய மாலை வருமுன்ட மரணமாகிவிட்டால் அவர் சுவர்க்கவாசிகளில் உள்ளவராவார். எவர் இதை முழுமையாக நம்பழி இரவில் இதைக் கூறி காலை வருமுன் மரணமாகிவிட்டால் அவரும் சுவர்க்கவாசிகளில் உள்ளவராவார். (புகாரீ)

(இதன் அரபி மூலம்) அல்லாஹும்ம அன்த்து சப்பீ, லாஇலாஹ இல்லா அன்த்த கலகதனீ வஅன அப்துக்க, வஅன அலா அஹ்திக்க வவஃதிக்க மஸ்த்து தஃத்து அஊது பிக்க மின்ஷர்ரீ மாஸனஃத்து அபூ உலக்க பிநிஃமத்திக்க அலய்ய வஅபூஉ, பிதன்பீ ஃபஃ ஃபிர்லீ ஃபஇவ்வஹூ லாயஃ ஃபிருத்துனுப இல்லாஅன்த்த”

ஐயம் : ஒவவொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களின் மொழியிலேயே (போதிக்கும்படி) நாம் அனுப்பி வைத்தோம். (14:4) இவ்வசனத்தில் முஹம்மத் நபி(ஸல்)அவர்கள் அரபியராயிருப்பதால் அம்மொழி பேசுபவர்களுக்கு மட்டும் தானே நபியாக வந்திருப்பதாகத் தெரிகிறது. அகில உலகத்தவருக்கும் அவர்கள் நபியாக வந்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் என்ன? A.முஹ்யுத்தீன், சென்னை.

தெளிவு : தங்களின் கேள்வியில் இடம் பெற்றுள்ள (14:4) வசனத்தில், ஒவ்வொரு நபியும் அல்லாஹ்வின் கட்டளைகளை மக்களுக்கு விளக்கிச் செல்வதற்காக, அம்மக்கள் பேசும் அதே மொழியிலேயே பேசுபவராக அனுப்பப்பட்டுள்ளார்கள்.

மாறாக எந்த நபியும் தமது கூட்டத்தாரின் மொழி அல்லாத மற்றொரு மொழியில் மக்களிட்ம் பேசி அவர்களை ஒன்றும் புரியாதவர்களாக, விட்டுச் செல்லவில்லை என்ற கருத்தைத்தான் வல்ல அல்லாஹ் அவ்வசனத்தில் விளக்கியுள்ளான்.

தாங்கள் கருதுவது போன்று முஹம்மது(ஸல்) அவர்கள் அரபியாக இருப்பதால் அவர்களுக்கு மட்டும்தான் அவர்கள் நபி, வேறு மொழி பேசுபவர்களுக்கு அவர்கள் நபி அல்ல என்ற கருத்து அவ்வசனத்தில் அறவேயில்லை.

ஆகவே நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பாரசீக மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஸல்மானுல் ஃபாரிஸீ(ரழி) என்றொருவர் இருந்தார். அவர் நபி(ஸல்) அவர்களின் சிறப்பான சமுதாயத்தின் ஓர் அங்கத்தினராக இருந்தது மட்டுமின்றி அவர்கள் சங்கைக்குரிய சஹாபாக்களின் ஒருவராகவும் திகழ்ந்துள்ளார்கள்.

இவ்வடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் அரபியருக்கு மட்டுமின்றி அனைத்துலக மக்களுக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபிதான என்பதை உணர்கிறோம்.

மேற்காணும் (14:4) வசனத்தின்படி நபி(ஸல்) அவர்கள் அரபியர்களுக்கு அவர்களின் அவ்வரபிமொழியிலேயே அல்லாஹ்வினட் கட்டளைகளைத் தெளிவாக தாம் எடுத்துக் கூறியதோடு அவற்றின் அடிப்படையில் முறையாக தாமும் நடந்து காட்டிவிட்டு, அம்மககளை நோக்கி, பல்லீகூ அன்னீ வலவ் ஆயா நீங்கள் என்னைப் பற்றி ஒரு விஷயமேனும் அடுத்த நபருக்கு எடுத்துக் கூறிவிடுங்கள். அப்துல்லாஹ்பினட் அம்ரு(ரழி), புகாரீ.

என்று கூறி,  தமது அனைத்துப் பொறுப்புகளையும் ஒட்டுமொத்தமாக அக்காலத்தில் வாழ்ந்த தமது சமுதாயத்திடம் ஒப்படைத்து சென்றுவிட்டார்கள்.

அக்காலத்திய அவர்களின் சமுதாயம் அப்பொறுப்புகளை ஏற்று வாழையடி வாழையாக உலகமெங்கும் எடுத்தோதியதன் பயனாகவே, அல்லாஹ்வின் பேருதவியால் அந்த நபியின்ட சமுதாயமாக பல கோடி மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காணுகிறோம்.

அகில உலகத்தவருக்கும் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பதை கீழ்காணும் வசனம் தெளிவுபடுத்துகிறது.

(நபியே! நீர்) கூறும்! மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன். (7:158)

சிவப்பர், கறுப்பர் ஆகிய அனைத்து மக்களுக்கும், ஒட்டுமொத்தமாக நான் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரழி), (அஹ்மத்)

ஐயம் : 1. குர்ஆனின் குரல் டிசம்பர் 87ல், இமாம்களைப் பின்பற்றாதவர்களிடம் இரண்டு கேள்விகள்! எனும் தலைப்பில் நபி(ஸல்) அவர்கள் தொழவைத்த ஏதாவது ஒரு தொழுகையில், பின்னால் நின்ற ஸஹாபாக்கள் சப்தமாக ஆமீன் கூறினார்கள் என்றோ? அல்லது சப்தமாக ஆமீன் கூறும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்றோ? ஸஹீஹான ஹதீஸ் உண்டா?

2. தொழும்போது தக்பீர் கட்டும் சமயம் கைகளை தொப்புளுக:குக் கீழ் கட்டுவதா? அல்லது மேல் கட்டுவதா? எவ்விடத்தில் எவ்வாறு கட்டவேண்டும் என்பதற்கு ஹதீஸின் விளக்கம் என்ன? என்று கேட்கப்பட்டுள்ளது.அவற்றிற்கு தங்களின் பதில் என்ன? லியாகத் அலி, திருச்சி.

தெளிவு : ஹதீஸ் (1) இமாம் ஆமீன் கூறினால் அப்பொழுது நீங்களும் ஆமீன் கூறுங்கள். ஏனெனில் நிச்சயமாக, எவருடைய ஆமீன் சப்தம் வானவர்களின் ஆமீன் சப்தத்துடன் கலந்து விடுகிறதோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரழி) அவர்க்ள அறிவித்தார்கள். அண்ணர் நபி(ஸல்) அவர்களும் ஆமீன் கூறி வந்தனர். அறிவிப்பவர் : இப்னு ஷிஹாம், ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், முஅத்தா, அபூமாவூத், திர்மிதீ, நஸயீ.

2. அபுஹுரைரா(ரழி), அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் கைரில் மஃழூபி அலைஹிம் வழழ்ழால்லீன் என்று ஓதி முடிந்தவுடன் முதல் வரிசையில் இருப்போருக்கு கேட்கும் வகையில் ஆமீன் கூறுவார்கள். பின்னர் ஆமீன் எனும் சப்தத்தால் பள்ளி எதிரொலிக்கும். இப்னுமாஜ்ஜா, தாரகுத்னீ, பைஹகீ.

மேற்காணும் இவ்வறிவிப்பு குறித்து இதன் தொடர் ஹஸன் என்பதாக தாரகுத்னீயும் இவ்வறிவிப்பு ஸஹீஹ்தான் என்பதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் மற்றொரு தொடர் இருப்பதாக ஹாக்கிமும், ஹஸனுன் ஸஹீஹ் (முறையாக நம்பத்தக்க ஹதீஸின் வகையைச் சார்ந்தது) என்பதாக பைஹகீ அவர்களும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.  (நைலுல் அவ்த்தார் பாகம் 2, பக்கம் 224)

வாயினுபின் ஹுஜ்ரு(ரழி) அறிவித்துள்ளார்கள் :

நபி(ஸல்) அவர்கள் கைரில் மஃழூபி அலைஹிம் வழழ்ழால்லீன் என்று ஓதிய பின் ஆமீன் என்று நீட்டுவதை (மற்றோர் அறிவிப்பில் சப்தத்தை உயர்த்துவதை) நானட் கேட்டிருக்கிறேன். (அஹ்மத், அபூதாவூத், திர்மதீ, தாரகுத்னீ)

Previous post:

Next post: