ஐயமும்! தெளிவும்!!

in 2019 பிப்ரவரி,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும்படி) நாம் அனுப்பி வைத்தோம். (அல்குர்ஆன் : 14:4)

அந்நஜாத் மாத இதழில் ஒரு நாளின் துவக்கம் ஃபஜ்ருடைய நேரத்தில் இருந்து ஆரம்பமாகும் என எழுதி வருகின்றீர்கள். அதற்கு நபி மொழியிலிருந்து சில தரவுகளை முன்வைக்கிறீர்கள். ஆனால் அவற்றில் மனித யூகங்கள் சேர்ந்திருப்பதை என்னால் உணரமுடிந்தது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் பூமியையும், வானங்களையும், உயிரி னங்களையும் படைத்த நாட்களை விளக்கியுள்ளார்கள்.

அவ்வாறு விளக்கும்போது “ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப் பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸ்ருக்கும் இரவுக்குமிடையேயுள்ள நேரத்தில்இறுதியாகப் படைத்தான்” என்று கூறினார்கள். (நுல்: முஸ்லிம்: 5379)

இதில் நாளின் இறுதி நேரம் என்பது சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தை தெளிவாக விளக்குகின்றது. எனது ஐயத்திற்கு விளக்கம் தருமாறு தயவாய் வேண்டுகின்றேன். M.T.M. முஜிபுத்தீன், ஸ்ரீலங்கா

தெளிவு : அந்நஜாத்தில் பல ஆக்கங்களை எழுதியிருக்கும். உங்களுக்கும் இந்த சந்தே கம் வந்து இருப்பது எனக்கு வியப்பாக உள்ளது. இதில் பலரும் குழப்ப நிலையி லேயே உள்ளனர். காரணம் இரவு, பகல் எது நாளின் துவக்கம் என்று பார்த்தால் சில ஹதீஃத்கள் நாளின் ஆரம்பம் பகல் என்று கூறுகிறது. உதாரணம் நபி(ஸல்) இஃதிகாப் இருக்க விரும்பினால் பஜர் தொழுதுவிட்டு கூடாரத்திற்குள் நுழைவார்கள் என்ற ஹதீஃத் மேலும் ஹஜ் அமல்கள் தொடர்பாக வரும் ஹதீஃத்கள் நாள் காலை முதல் ஆரம்பம் ஆகின்றன என்பதற்கு ஆதாரமாக உள்ளன. இது அவர்களின் லோக்கல் நாள் ஆகும். ஆனால் தாங்கள் கேள்வியில் குறிப்பிட்டுள்ள ஹதீஃத். உலக நாளை பற்றி பேசுகிறது. உலகில் ஆதம் படைக்கப்பட்ட உலக நேரத்தை குறிப்பிட்டு பேசுகிறது. இதனை விளங்கிகொள்ள முதலில் லோக்கல் நேரம், உலக நேரம் பற்றி அறிய வேண்டும்.

0:00 மணி முதல் 24.00 மணி வரை உள்ள நேரம் என்பது தற்போது உள்ள ஆங்கிலேய அடிப்படையின்படி நள்ளிரவு முதல் நள்ளிரவு வரையிலானது 0:00 மணி என்பதும் நள்ளிரவையே குறிக்கும். அதேபோல் 24:00 மணி என்பதும் நள்ளிரவையே குறிக்கும். ஆனால் 0:00 UTC உலக நேரம் என்பது தேதி கோட்டின் உச்சி பொழுதை தான் குறிக்கும்.

அதேபோல் 24:00 UTC என்பதும் உச்சி பொழுதைதான் குறிக்கும். இதிலிருந்து லோக்கள் நாள் என்பதும் உலக நாள் என்பதும் எதிர் எதிரானவை என்று புரிந்து கொள்ள முடியும். லோக்கல் நாள் 0:00 மணி முதல் 24:00மணி வரை உள்ளது நள்ளிரவு முதல் அடுத்த நள்ளிரவு வரையிலானது. அதேபோல் உலக நாள் 0:00 UTC முதல் 24:00 UTC வரையில் உள்ளது. உச்சி முதல் அடுத்த உச்சி வரையிலானது. இந்த ஆங்கிலேய அடிப்படை அமைப்பை அப்படியே இஸ்லாமிய அடிப்படை பஜருக்கு பொருத்திப் பார்த்தால் லோக்கல் நாள் என்பது அவரவர் பகுதிகளில் பஜர் முதல் அடுத்த நாள் பஜர் வரையிலானது. உலக நாள் என்பது மக்காவின் மக்ரிப் முதல் அடுத்த நாள் மக்ரிப் வரையிலானது என்பது புரியும். தங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஃத் உலக நாளை குறித்தும் அதில் ஆதம் படைக்கப்பட்ட நேரம் குறித்தும் விளக்குகின்றது. ஆதம் உலகில் படைக்கப்பட்ட நேரம் அஸருக்கும், இரவுக்கும் இடையிலான சரியான இஸ்லாமிய (மக்காவின் நேரம்) உலக நேரம். அந்த நேரத்தில் தான் சரியான தேதிக் கோட்டில் (அலாஸ்காவில்) பஜ்ரில் புதிய நாள் ஆரம்பம் ஆகிறது. இதை புரிந்து கொண்டால் உங்களுக்கு உண்டான ஐயம் நீங்கி விடும். அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

மேலும் விபரங்களுக்கு இந்த இதழில் S.M.அமீர், நிந்தாவூர் எழுதிய நாளின் ஆரம்பம் என்ற கட்டுரையைப் படிக்கவும்.

 

Previous post:

Next post: