புத்தாண்டு சிந்தனை!

in 2021 செப்டம்பர்

ஹிஜ்ரி 1442 முடிவுற்று 1443 பிறந்திருக்கிறது. ஒவ்வொரு புத்தாண்டிலும் முஸ்லிம்கள் புத்துணர்ச்சி பெற்று மேலும், மேலும் முன்னேறிச் செல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அதற்குள்ள ஒரேயயாரு வழி; வேறு வழியே இல்லை; அது அல்லாஹ்வின் இறுதி நெறிநூலான அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து, அவ னது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அடிச்சுவற்றில் அடி பிசகாது நடப்பதே யாகும். ஆனால் ஷைத்தானும், அந்த ஷைத்தா னுக்கு உறுதுணையாகச் செயல்படும் புரோகிதர்களும் முஸ்லிம்களை எப்படியும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த நேர்வழியிலிருந்து பிறழச் செய்து முன்னோர்களின் பெயரால் வழி கெட்டுச் செல்ல வழிவகுக்கின்றனர். புரோகிதர்கள் மார்க்கத்தை தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருப்பதால், அல்லாஹ் வுக்கும் அடியானுக்குமிடையில் இடைத்தரகர்களாகச் செயல்பட்டுச் சீரழிகின்றனர். மக்களையும் சீரழிக்கின்றனர். அல்லாஹ்வை அடியான் நெருங்க அவனுக்கு இடைத்தரகர் தேவையே இல்லை. அவனது பிடரி நரம்பை விட அல்லாஹ் அவனுக்கு மிக நெருக்கமாக இருக்கி றான். இந்த நிலையில் இடைத்தரகர் தேவையா என்பதை ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் சிந்தித்து விளங்கிச் சீர்பட கடமைப்பட்டிருக்கிறார்கள்.

இந்த இடைத்தரகர்கள் தங்களின் பிழைப்பு எவ்வித தடைகளின்றி சீரும் சிறப்புமாக நடைபெற, முஸ்லிம் சமுதாயத்தை பல பிரிவுகளாக, மத்ஹபுகளாக, இயக்கங்களாகப் பிரித்து வைத்துள்ளனர். அதனால் தான் இஸ்லாம் அல்லாத பிரிவுகள், மத்ஹபுகள், இயக்கங்கள், அமைப்புகள் கூடாது. இவை அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணானவை, முஸ்லிம் சமுதாயத்தை வீழ்ச்சி அடையச் செய்பவை என்று நாம் கூறுவதை இந்த இடைத்தரகர்களால் ஜீரணிக்க முடிவதில்லை.

மத்ஹபுகளை வைத்துப் பிழைப்பு நடத்துகிறவர்கள், மத்ஹபுகள் கூடாது என்றவுடன் ஆத்திரப்பட்டு தங்கள் பக்தர்களைக் கொண்டு கடுமையாக எதிர்க்கின்றனர். இயக்கங்கள் கூடாது என்றவுடன் இயக்கங்களைக் கொண்டு பிழைப்பு நடத்துகிறவர்கள் அவர்களின் பக்தர் களைத் தூண்டி விட்டு சமுதாயத்தின் குரல் வளையை நெரித்துக் கொன்றுவிடலாம் என்று முயல்கின்றனர். ஷைத்தானின் துணை அவர் களுக்கிருப்பதால் படித்தவர்களிலிருந்து, பட்டம் பெற்றவர்களிலிருந்து, தங்களை அறி ஞர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் வரை அவர்களின் வலையில் சிக்கி அவர்க ளோடு சேர்ந்து கொண்டு சத்தியத்தை முறியடிக்க பெரும் முயற்சிகள் எடுக்கின்றனர்.

ஆயினும் அல்லாஹ்வின் உண்மையான நல்லடியார்கள் விஷயத்தில் ஷைத்தான் ஆதிக்கம் பெறமாட்டான். இதனை அந்த ஷைத்தானே ஒப்புக்கொண்டிருக்கிறான். எனவே அவனது வலையிலிருந்து விடுபட யார் விரும்புகிறார்களோ அவர்கள் தங்களின் ஐங்கால தொழுகைகளில் குறைவு செய்யாமல் அதன தன் வேளையில் பேணித் தொழுது கொள்ள வேண்டும். ஹலாலான முறையில் பொருளீட்டி அதன் மூலம் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முயல வேண்டும். உரியவர்களின் உரிமைகளை உரியவர்களுக்குக் கொடுத்து அதில் பிசகாது நடந்து கொள்ள வேண்டும். தாங்கள் அறிந்த விஷயங்களில் மனசாட்சிக்கு விரோதமில்லாமல், அல்லாஹ்வின் கட்டளைகளை நபிவழியில் நிறைவேற்று கிறவர்களுக்கு அவர்கள் அறியாத வி­யத்தை அல்லாஹ் கற்றுக் கொடுக்கிறான். அவர்களே ஷைத்தானின் மாய வலையிலிருந்து விடுபட முடியும். “தக்வா” -இறை உணர்வு மிக்க செயல் பாடுகளைக் கைவிட்டு யார் மனோ இச்சைகளுக்கு இடம் கொடுக்கிறர்களோ அவர்கள் எளிதாக ஷைத்தானின் வலையில் சிக்கிவிடுகிறார்கள். அப்படி ஷைத்தானின் வலையில் சிக்கிச் சீரழியும் பெருங்கொண்ட மக்களைக் கருத்தில் கொள்ளாமல் சத்திய வழியில் நடை போடும் மிகமிக சிறு தொகையினரான மக்களைப் பார்த்து படிப்பினை பெறுவோமாக. இதனைப் புத்தாண்டு சிந்தனையாகக் கொள்வோமாக.

Previous post:

Next post: