ஐயமும்! தெளிவும்!!

in 2021 டிசம்பர்

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : ஜும்மா மற்றும் பெருநாள் தொழு கையில் பெண்களுக்கு ஜமாஅத் தொழுகை அவசியமா? அப்துல் காதர்.

தெளிவு : நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து ஜமாஅத்துடன் தொழுதுள்ளனர். பள்ளிவாசலுக்கு ஜமாஅத்துடன் வந்து தொழ விரும்பும் பெண்களை எவரும் தடுக்க முடியாது. எனினும் வீடுகளில் தொழுவதே சிறப்பானது.

“பெண்களை பள்ளிக்கு வருவதைத் தடுக்காதீர்கள்! அவர்களின் வீடு(களில் தொழுவது) தான் அவர்களுக்குச் சிறந்தது” என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) காலத்தில் ஜும்ஆத் தொழு கைக்கும் பெண்கள் வந்து கலந்து கொண்டி ருக்கிறார்கள். அவ்வாறு ஜும்ஆ தொழுதால் அவர்களுக்கும் லுஹர் தொழுகை அன்றைய தினம் இல்லை. எனினும் ஜும்ஆ வுக்கு வரவேண்டும் என்ற கட்டாயம் பெண்களுக்கு இல்லை. மாறாக வீட்டி லேயே “லுஹர்’ தொழலாம்.

“அடிமைகள், பெண்கள், சிறுவர், நோயாளிகள் தவிர மற்ற முஸ்லிம்கள் அனைவர் மீதும் ஜும்ஆ கட்டாயக் கடமை யாகும்” என்பது நபிமொழி. அறிவிப்பவர்: தூரிக் இப்னு ´ஹாப்(ரழி), நூல்: அபூதாவூத்.

பெருநாள் தொழுகை பெண்களுக்கும் அவசியம்தான். கண்டிப்பாக அவர்களும் பெருநாள் தொழ பெருநாள் தொழும் மைதானத்துக்கு வரவேண்டும்.

நோன்புப் பெருநாளில், ஹஜ்ஜு பெருநாளிலும், “மாதவிடாய்’ ஏற்பட்டுள்ள பெண்கள் உட்பட அனைவரையும் கலந்து கொள்ளும்படி நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டனர். எனினும் மாதவிடாய்ப் பெண்கள் தொழுகையில் மட்டும் கலந்து கொள்ளாமல் துஆக்கள் மற் றும் இதர காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் நபி(ஸல்) கட்டளையிட் டார்கள். (ஹதீதின் கருத்து) அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரழி), நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத், திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜ்ஜா)

ஐயம் : குர்ஆனை ஒளூ இல்லாமல் எடுத்து ஓதலாமா? அப்படி ஒளூ இல்லாமல் குர்ஆனை ஓதுவது சரியாகுமா? அப்துல் காதர்.

தெளிவு : அல்லாஹ் திருகுர்ஆனில் கீழ் காணும் திருவசனங்களில் பின்வருமாறு கூறுகிறான்.

“நிச்சயமாக இது மிகவும் கண்ணியம் வாய்ந்த குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் அது இருக்கிறது”.

“பரிசுத்தவான்களைத் தவிர (வேறெ வரும்) அதனைத் தொடமாட்டார்கள்”.  (அல்குர்ஆன் 56:77,78,79)

நபி(ஸல்) அவர்கள் யமன் வாசிகளுக்கு எழுதிய கடிதமொன்றில் “”குர்ஆனைப் பரி சுத்தமானவரன்றி, மற்றெவரும் தொட மாட்டார்”என்று எழுதியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூபக்ருபின் முஹம்மது பின் அம்ரு பின் ஹஜ்மு(ரழி), நூல்கள்: நஸயீ, பைஹகீ, தாரகுத்னீ.

மேற்காணும் ஆயத்தில் அதைத் தொட மாட்டார்கள் எனும் வாசகமிருக்கிறது. அதை என்று சொல்லப்பட்டிருப்பது, “பாதுகாக்கப்பட்ட ஏட்டை” என்பதுதான் பொருள் என்று இப்னு அப்பாஸ்(ரழி) ஷிஅபி லஹ்ஹாக், ஜைதுபின் அலி, முஅய்யிது பில்லாஹ், தாவூத், இப்னு ஹஜ்மு, ஹம்மாது பின் சுலைமான் ஆகிய திருகுர்ஆன் விரிவுரை யாளர்கள் வியாக்யானம் செய்வதுடன் ஒளூ இல்லாதவர் குர்ஆனைத் தொடுவது ஆகும் என்பதும் கூறுகிறார்கள்.
காரணம், மேற்காணும் திருவசனங்க ளில் 77வது வசனத்தில் குர்ஆனையும், 78வது வசனத்தில் பாதுகாக்கப்பட்ட ஏட்டையும் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்ட ஏட்டைத்தான் குறிப்பதாக அவர்கள் கூறுகிறர்கள்.

அடுத்து, நபி(ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தில், “குர்ஆனைப் பரிசுத்தமான வரன்றி மற்றெவரும் தொடமாட்டார்” என்று எழுதியிருப்பதால் நபி(ஸல்) அவர் களே பாதுகாக்கப்பட்ட ஏட்டை என்று பொருட் கொள்ளாது குர்ஆனை என்று தானே பொருள் கொண்டிருக்கிறார்கள் எனலாம்.

அப்படி என்றால் அவர்கள் தொட “”வேண்டாம்” என்று கூறாது. “தொடமாட்டார்” என்றுதானே சொல்லியிருக்கிறார்கள். அவ்வாறிருக்க தொடமாட்டார் என் னும் வார்த்தைக்கு தொட வேண்டாம் என்று பொருட் கொள்வது எங்ஙனம் பொருந்தும்?

அவ்வாறே ஒரு வாதத்திற்காக அதை ஏற்றுக் கொண்டாலும், அவர்களின் அந்த வாசகம் குர்ஆனைப் பரிசுத்தமானவர்தான் தொடவேண்டும் என்பதைப் பொதுவாகக் காட்டுகிறதே தவிர ஒளூவில்லாதவர் அதைத் தொடக் கூடாது என்று குறிப்பிட்டுக் காட்டுவதாக அது அமைந்திருக்கவில்லை.

ஏனெனில் பரிசுத்தமானவர் என்ற வார்த்தை பல கருத்துக்களைக் கொண்ட பொதுச் சொல்லாக அமைந்திருக்கிறது. அதற்கு (1) ஒளூ செய்து சுத்தமானவர்: (2) கையை மட்டம் கழுவி சுத்தமானவர், (3) குளித்து சுத்தமானவர், (4) ஷி´ர்க்(இணை வைத்தல்) என்னும் அசுத்தத்தை அகற்றி முஸ்லிம் என்ற வகையில் சுத்தமானவர் என் றெல்லாம் பல்வேறு கருத்துக்கள் கொள்ள இடமிருப்பதால் ஒளூ செய்து பரிசுத்தமானவர் என்று மட்டும் பொருள் கொள்வதற்கு தக்க ஆதாரம் குர்ஆனிலோ, ஹதீதிலோ இருந்தாக வேண்டும். அவ்வாறிருப்பதாகத் தெரியவில்லை. அல்லாஹ்வும், அவனது ரசூலும் பொதுவாகச் சொல்லியிருக்கும் ஒரு வார்த்தைக்கு, அவனோ அல்லது அவனது ரசூலோ அதற்கு குறிப்பிட்டு விளக்கம் தராதிருக்கும் பொழுது, தக்க ஆதாரமின்றி அதற்கு இதுதான் விளக்கம் என்று குறிப்பிட் டுச் சொல்வதற்கு யாருக்கு அதிகாரமிருக் கிறது. ஒருவருக்கும் அதிகாரமில்லை.

ஆகவே, மேற்காணும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒருவர் ஒளூ இல்லாது குர்ஆனைத் தொட்டால், அவ்வாறு அவர் தொடுவதைத் தடுப்பதற்கு, ஓது வதை தடுப்பதற்கு மார்க்க ரீதியாக நம்மி டம் எவ்வித ஆதாரமும் கிடையாது.

ஐயம் : ஆண்கள் தங்க நகைகள் அணிவது ஹறாம் என நமது மார்க்கம் கூறுகிறது. ஆனால் விலை உயர்ந்த கண் கண்ணாடிகள் (ரேபான்) மற்றும் வாட்சுகளில் தங்க முலாம் பூசப்பட்ட (18 கேரட்) பொருட் களை வெளிநாடு சென்று வரும் முஸ்லிம் கள் அணிகிறார்களே? இது ஆகுமானதா? தக்க விளக்கம் தருக. னி. சையது

தெளிவு : ஒரு போர்க்களத்தில் அர்பஜா என்ற நபித்தோழரின் மூக்கு அறுபட்டு விட்டபோது, வெள்ளியினால் செயற்கை மூக்கைச் செய்து பொருத்திக் கொண்டார். அதனால் துர்வாடை ஏற்பட்டதைக் கண்ட நபி(ஸல்) தங்கத்தினால் மூக்கு செய்து பொருத்திக் கொள்ள அனுமதி வழங்கினார் கள்” என்ற ஹதீத் அஹ்மத், அபூதாவூது, நஸயீ, திர்மிதீ ஆகிய நூல்களில் காணப் படுகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கப் பல் கட்டி இருந்ததாக அஹ்மதில் ஹதீத் ஒன்று பதிவு செய்யப் பட்டுள்ளது.

இந்த ஹதீத்களின் மூலம் சிறிதளவு தங்கம் ஆண்கள் உபயோகிக்கத் தடையில்லை என்பதை விளங்கலாம். நீங்கள் குறிப்பிடும் கண்ணாடி பிரேம், கடிகாரம் இவற்றில் தங்கப் பூச்சுத்தான் இருக்கிறது. முற்றிலும் தங்கத்தால் ஆனவை அல்ல. எனவே கூடாது என்பதற்கு ஆதாரமில்லை.

 

Previous post:

Next post: