ஊடகங்களும்! உண்மை நிலையும்!

in 2024 மார்ச்

ஊடகங்களும்! உண்மை நிலையும்!

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

இன்று உலகம் ஊடகங்களால் ஓர் அபாயகரமான காலகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சின்ன சின்ன விசயங்கள் கூட முன்பை விட பெரிய அபாயங்களாக காட்டப்படுகின்றன. வல்லரசு நாடுகள் சிறு நாடுகள் மீது பலவந்தமாக தலையிடுவது ஊடகங்கள் மூலம் பொய்யை உண்மை போல் நம்ப வைக்கிறது.

இப்பொழுது உலகம் ஒரு சிறு கிராமத்தின் அளவிற்கு தகவல் தொடர்பு காரணமாக சுருங்கிவிட்டது. எல்லா நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், சமுதாய இயக்க தலைவர்களும், சினிமா கலைஞர்களும் மாவீரர்களாகவும், இராஜதந்திரத்தின் சாணக்கியர் களாகவும், அறிவாளிகளாகவும் மிகைப்படுத்தி வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது உலகம் போற்றும் சாதனைகளை செய்ததாக புகழ் போதையின் உச்சியில் வைத்து போற்றப் படுகிறார்கள்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலான ஊடகங்கள் நேர்மை தவறாது இருந்தது. நல்ல செய்தியை தெரிந்து கொள்ளவும், நல்லதை படிக்கவும், பார்க்கவும் தூண்டியது. மக்களுக்கும் ஊடகங்கள் மீது நம்பிக்கை இருந்தது. 

இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி பணத்திற்காகவும், பரபரப்பிற்காகவும் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், மனித நேயத்தையும் சீரழிக்க செய்தன, செய்து வருகிறது. இதில் எந்த ஊடகங்களும்  விதிவிலக்காக  இல்லை. 

அதாவது செய்தித்தாள்கள், வானொளி, டி.வி. புத்தகங்கள், சோசியல் மீடியாக்கள் எல்லாமே மாறுதல் என்ற போர்வையில் தீமைகளை தீயைவிட  வேகமாக  பரப்புகின்றன.

இதன் விளைவு கெட்டவன் நல்லவனாகவும், நல்லவன் கெட்டவனாகவும் பாவிக்கும் மனோபாவம் மக்களிடையே பரவியிருக்கிறது. இதில் இப்போது ஏனைய ஊடகங்களை விட சோ´யல் மீடியாவின் ஊடகங்களின் பங்கும் சேர்ந்துகொண்டன. இவைகள் Facebook, Whatsapp, Instragram, Youtube, “X” etc., ஒரு நொடியில் வதந்திகளை உண்மை போல் பரப்பும்  சக்தியை  பெற்று  வருகிறது.

உலகில் உள்ள மீடியாவை பொருத்தவரை நடத்த கூடியவர்களாக பெரும் பான்மையானவர்கள் யூதர்களாகத் தான் இருக்கின்றார்கள். இந்தியாவை பொருத்தவரை ஊடகங்களில் உயர் சாதியினர் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. எப்படி உலகெங்கும் யூதர்களுக்கு சாதகமாக செய்திகள் பரப்பப்படுகிறதோ அதுபோல் இந்தியாவில் உயர் சாதியினருக்கு சாதகமாக செய்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன.

எவ்வாறு என்றால் :

1. உறுதிப்படுத்தப்படாத  செய்திகளை பெரிதாக்கி உண்மை செய்திகள் போல் பரப்புகிறது.

2. நேரடியாக கண்ணால் காணாததை கண்டது போல் கற்பனையான செய்திகளை பரப்புகிறது.

3. வன்முறைக்கும், பிரிவினைவாத செய்திகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

4. சினிமா கலைஞர்கள் வானோலகத்திலிருந்து வந்த தேவர்கள், தேவியர்கள் போல் அவர்களைப் பற்றி மிகைப்படுத்தி காட்டப்படுகிறது.

5. T.R.P. ரேட்டிங் ஏறினால் விளம்பரம் மூலம் வருமானம் கொழிக்கும் என்பதால் கற்பனைக்கு எட்டாத காட்சிகளை கிராஃபிக்ஸ் என்னும் தொழில்நுட்ப மூலம் பொய்யை உண்மை போல் TV.- யில்  காட்டப்பட்டுகிறது.

இன்னும் தெளிவாக சொல்லப் போனால் ஊடகங்கள் எப்படி இருக்கின்றன  என்றால்:

உண்மையை காசுக்காக கொலை செய்யும் நூதனமான கூலிப்படைகளாக ஊடகங்கள்  இருக்கின்றன

இதுவரை ஊடகங்களின் நிலை எப்படி உள்ளது என்பதை பார்த்தோம். இவைகளை எல்லாம் மாற்றி, மக்கள் நலன் காக்க வழிதான் என்ன?

அதற்கு ஊடகங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது நல்லது.

பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய ஏதேனும் ஒரு செய்தி அவர்களுக்கு எட்டுமானால் உடனே, அவர்கள் அதைப் பரப்பிவிடுகிறார்கள். அவர்கள் அதை (அல்லாஹ்வின்) இறை தூதரிடமும் அவர்களில் அதிகாரமுடையவர்களிடமும் தெரிவித்திருந்தால், அவர்களிலிருந்து அதை ஆய்வு செய்பவர்கள் அதனை (நன்கு) அறிந்துகொள்வார்கள். இறைவனின் அருளும், அவனுடைய கிருபையும் உங்கள் மீதில்லாதிருந்தால், (உங்களில்) சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றி இருப்பீர்கள்.  அல்குர்ஆன் 4:83

அதாவது ஏமாற்றுவது, வரம்பு மீறுவது, நம்பிக்கை துரோகம் செய்வது ஆகியவற்றை இறைவன் தடை செய்துள்ளான் என்பதையும் பெரும்பான்மையான மக்களும் அதை விரும்புவது இல்லை என்பதை உணரவேண்டும். அது நாட்டுக்கு எதிராக இருந்தாலும் சரி, தனி மனிதனுக்கு எதிராக இருந்தாலும் சரி.

உங்களின் (மீடியாக்களின்) சுயநலன்களாலும், பேராசைகளாலும், பொறுப்பை உணராமலும் நடக்க முயற்சிக்காதீர்கள்.

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே  சொல்லுங்கள்.

(அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ, அவர் மகத்தான  வெற்றி  பெறுவார்.” அல்குர்ஆன் 33:70,71

Previous post:

Next post: