மனிதர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவு எவ்வளவு? எதற்கு?

in 2024 மார்ச்

மனிதர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவு எவ்வளவு? எதற்கு?

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

உலகிலுள்ள சுமார் 1080 கோடிக்கு மேல் உள்ள மனிதர்களில் வரவுசெலவு மற்றும் சொத்துக்கள் பற்றி ஆராய்ந்து அவர்களில் ஒருசிலரை மட்டும் உலக பணக்காரர்கள் என்று ஆண்டுதோறும் பட்டியல் வெளியிடுகிறார்கள். அதுபோல் இந்தியாவில் உள்ள சுமார் 143 கோடி பேரில் ஒருசிலரை மட்டும் இந்திய பணக்காரர்கள் என பட்டியல் ஆண்டுதோறும்  வெளிவருகிறது.

ஆனால் எப்பொழுதாவது உலகிலேயே அல்லது இந்தியாவிலேயே இவர்கள் தான் மிக சிறந்த அறிவாளி என்று பட்டியல் வெளியிடப்படுகிறதா என்றால் இல்லை. (நோபல் பரிசு கூட அறிவாளி என்பதற்காக வழப்படுவது இல்லை) அதற்கு காரணம் அறிவு என்பது ஒரு  எல்லைக்குள் அடங்காதது.

இறைவனின் படைப்புக்களிலேயே மிகவும் வித்தியாசமான படைப்பு மனிதன். ஏனைய விலங்கினங்கள், பறவைகள், ஊர்வனங்கள், கடல்வாழ் உயிரினங்கள் இவைகள் அனைத்தும் அவை படைக்கப்பட்டபோது எப்படி இருந்ததோ, எதனை உண்டதோ, எப்படி வாழ்ந்தனவோ, அப்படியே தான் இன்று வரை இருக்கின்றன. இறுதி நாள் வரை  இருக்கவும் போகின்றன.

மனிதன் மட்டும் அப்படி இல்லை. அவனுடைய அறிவாலும், ஆற்றலாலும் ஒவ்வொரு நாளும் பல முன்னேற்றங்களை  உலகம்  கண்டு  வருகிறது.

ஆனாலும் சில விசயங்களில் மனித அறிவு என்பது மிகவும் அற்பமானதே என்பதை இறைவன் உணர்த்துகிறான். அதாவது நீ என்னுடைய படைப்பு தானே தவிர என்னைப் போலவன் (கடவுள்/இறைவன்) அல்ல. அதனால் தான் விலங்குகளை கூட அடக்கி ஆள்ப வனால், தன் மலஜலத்தை அடக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல அற்ப துளியால் தோன்றி, அழகாக உறுமாறி அற்புதங்கள் பல புரிந்து வாழ்ந்தாலும் சில காலங்களுக்கு பிறகு இறந்து போகிறான். மேலும் இத்தனை ஆண்டுகள் நான் உடல்நலத்துடன் சுகமாக வாழ்வேன் என்று உறுதிபடக் கூற முடியாத அறிவு தான்  மனித  அறிவு.

எனவேதான் மனிதன் என்னதான் அறிவியலில் முன்னேற்றம் கண்டாலும் ஒரு முடியையோ, நகத்தையோ உருவாக்க முடிவதில்லை. அதுமட்டுமல்ல உலகில் அடுத்த நொடி என்ன நடக்கும் என உறுதிபட கூற முடியாத அளவிற்கே அறிவைப்  பெற்று  இருக்கிறான்.

ஐயோ, எனக்கு இது முன்பே தெரியாமல் போய்விட்டதே!’ என்று புலம் படக்கூடிய நிலையில்தான் மனித அறிவு உள்ளது.

பெரிய அறிவாளி என்று சொல்லப்படுபவர்களின் வாழ்க்கையில் கூட பல ஏமாற்றங்களும் ஏற்படத்தான் செய்கின்றன. அறிவு இருந்தும் சில நட்புகளையும், நடப்புக்களையும் தவிர்க்க முடியவில்லை.

பிறரின் தயவால் தோன்றி, சுமார் 70-80 ஆண்டுகள் வாழ்ந்தாலும் இறப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை. இதை தவிர்க்ககூடிய  அறிவு  கூட  இல்லை.

அமெரிக்கா நாட்டில் ஆண்டு தோறும் மின்சாரத்தை கண்டுபிடித்ததாமஸ் ஆல்வா எடிசனின்பிறந்த நேரமான இரவு 10.15 மணியளவில் நாடு முழுவதும் ஒரு நிமிடத்திற்கு மின்சாரத்தை நிறுத்திவிடுகிறார்கள். அதுசமயம் அமெரிக்கா முழுவதும் இருளில் மூழ்கிவிடும்.

இது ஏன் என்றால் மின்சாரம் கண்டு பிடிக்கப்படாமல் இருந்திருந்தால் நம் நிலைமை இரவில் இப்படிதான் இருந்திருக்கும் என்று நினைவுபடுத்திக் கொள்ளவே.

அதுவே பல அருட்கொடைகளை தந்த இறைவனைப் பற்றி அறிவைக் கொண்டு மனிதன் சிந்திக்க மறுக்கிறான். எனவே இறைவன் தன் வழிகாட்டும் நூலில் (குர்ஆனில்) “எழுதுகோலையும், அறியாதவற்றையும்தானே கற்றுத்தந்தேன் என்று கூறுகிறான்.” அல்குர்ஆன் 96:4,5

மேலும் இறைவன் அறிவை யாருக்கு வழங்குகிறான் என்பதையும், அறிவானது இவ்வுலகில் எது என்பதையும் அறிவைப் பெற்றவர்கள் எவ்வாறு இருப்பார்கள் / இருக்க வேண்டும் என்பதையும் கூறுகிறான்.

அறிவு  யாருக்கு?

தான் விரும்புவோருக்கு அவன் ஞானத்தை வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்ட வருக்கே ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டுவிட்டது. இதை அறிவுடையோரைத் தவிர வேறு எவரும்  உணர்வதில்லை  அல்குர்ஆன் 2:269

அறிவானது  எது?

நாம் உமக்கு (முஹம்மதே) கூறும் இந்த இறைவழிகாட்டு நூலே (குர்ஆன்) ஞானமிக்கதாகும்அல்குர்ஆன் 3:58

இது (குர்ஆன்) மனிதர்களுக்கு விளக்கமாகவும், இறைவனை அஞ்சுவோருக்கு  அறிவுரையுமாகும்அல்குர்ஆன் 3:138

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு உபதேசமும், நிவாரணமும் வந்துவிட்டது.   அல்குர்ஆன் 10:57

“(நபியே!) பாக்கியம் பெற்ற இந்நெறிநூலை உம்மீது அருளியுள்ளோம். அவர்கள் இதன் வசனங்களை சிந்திப்பதற்காகவும் அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும்.” அல்குர்ஆன் 38:29

அறிவை பெற்றவர்கள் எப்படி இருப்பார்கள்?

அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் இறைவனை நினைப்பார்கள். வானங்களும், பூமியும் படைக்கப்பட்டதைப் பற்றி சிந்திப்பார்கள். மேலும்,

எங்கள் இறைவா! எதையும் நீ வீணுக்காகப் படைக்கவில்லை; நீயே தூயவன். எனவே நரக வேதனையிலிருந்து எங்களை காப்பாயாகஎன்று கூறுவார்கள்.   அல்குர்ஆன்  3:191

அறிவுக்கு  எட்டாததைப்  பற்றி?

என் இறைவா! என் அறிவுக்கு எட்டாததைப் பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள்புரியாவிட்டால் நஷ்டமடைந்தவனாகி விடுவேன்  அல்குர்ஆன் 11:47

அறிவை  வேண்டி!

இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக”. அல்குர்ஆன் 20:114

எனவே மனிதனிடம் செல்வமும், செல்வாக்கும் இருக்கிறதோ, இல்லையோ, “அறிவுஎன்பது  அவசியமாகும்.

உன்னிடம் நூறு ரூபாய் கூட இல்லையா? என்று ஒருவரிடம் கேட்டால் அவர் அதற்கு கோபப்படமாட்டார்; அதுவே,

உனக்கு அறிவு இல்லையாஎன்று கேட்டால்  மிகுந்த  கோபப்படுவார்.

எனவே செல்வத்தை விட அறிவே முக்கியமானது என்று தெரிய வருகிறது.

அறிவு  எவ்வளவு :

ஒரு சிட்டுக்குருவி தன் அலகால் கடலிலிருந்து (நீர் நிலையிலிருந்து) எடுத்த நீரின் அளவே. நமக்கு கொடுக்கப்பட்ட அறிவாகும். இறைவனின் அறிவோடு ஒப்பிடுகையில் நம் அறிவு அவ்வளவே.

ஃபிர்அவ்ன் என்ற மன்னன் நபி மூஸா(அலை) அவர்களிடம் முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன? என்று கேட்டான்.

அதற்கு நபி மூஸா(அலை) சொன்ன பதில் என்ன தெரியுமா?

முன்னோர்களைப் பற்றி அறிவு என் இறைவனிடம் ஒரு நூலில் பதிவு செய்யப்பட் டுள்ளது. என் இறைவன் தவறிழைப்பதில்லை, மறப்பதுமில்லை.  அல்குர்ஆன் 20:52

முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் ஒருமுறை இறை நிராகரிப்பவர்கள்  கேட்டனர்.

“(எதிரிகளாகிய) அவர்கள் அந்த உலக இறுதிநாளின் நேரத்தைக் குறித்து அது எப்போது வரும்? என்று கேட்டார்கள்.

நீர் கூறுவீராக! அதனைப் பற்றிய அறிவு என் இறைவனிடமே உள்ளது. அவனையன்றி அதற்குரிய நேரத்தை எவராலும் அறியமுடியாது. அந்நேரம் வானங்களிலும், பூமியிலும் உள்ளவர்களுக்கு மிக கடுமையான நேரமாகயிருக்கும். அது திடீரென்றுதான் வரும். அதைப் பற்றி உமக்கு தெரிந்தது போன்று உம்மிடம் வினவுகிறார்கள். நீர் கூறும் : அதைப் பற்றி அறிவு இறைவனிடமே உள்ளது.” ஆயினும் மக்களில் பெரும்பாலோர் அதனைப் பற்றி அலட்சியமாக  இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 7:187)

மேலும்நீர் கூறும், நான் எவ்வித நன்மையும், தீமையும் செய்யும் ஆற்றல் பெற்றவன் அல்ல. இறைவன் எதை நாடுகின்றானோ அதுவே நடக்கும். மறைவானவற்றை நான் அறிபவனாக இருந்திருந்தால் ஒருபோதும் எனக்கு எந்த துன்பமும் ஏற்பட்டிருக்காது. நான் (யார் என்றால்) நம்பிக்கை கொண்ட மக்களுக்கு எச்சரிக்கை செய்பவனும், நற்செய்தி கூறுபவனுமாக இருக்கிறேன்.” (அல்குர்ஆன் 7:188)

எனவே மேற்கண்ட வசனங்களிலிருந்து தெரிய வருவது; 

தெரியாததை தெரிந்து கொள்ள வேண்டும், தெரிந்துகொள்ள இறைவனிடம் உதவியையும் நாடவேண்டும், அதே வேளையில் தெரியாததை தெரியாது என்றும் சொல்லவும் வேண்டும்‘.

எனவே அடுத்தவர்கள் சொல்வதை கேட்டோ அல்லது முன்னோர்கள் செய்தார்கள் என்றோ, பார்த்தோ எப்போதும் முடிவு செய்யாதீர்கள். அப்படி செய்வதாக இருந்தால்  நமக்கு  எதற்கு  அறிவு?

குர்ஆனை மொழி பெயர்ப்புடன் படியுங்கள்! சிந்தியுங்கள்! அறிவு பெறுங்கள்!

***********************************************

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர் 

1. நபி(ஸல்) அவர்களின் கடிதங்களில் பொறிக்கப்படும் முத்திரையின் வாசகம் எது?

முஹம்மதுர்  ரஸுலுல்லாஹ்.  புகாரி : 65

2. இறைவனும், சபிப்போர் அனைவரும் யாரைச் சபிப்பதாக இறைவன் கூறுகிறான்?

தெளிவானசான்றுகளையும், நேர்வழி மறைப்பவர்களையும்.     அல்குர்ஆன் 2:159

3. பிறவி குருடரை சுகப்படுத்த எந்த நபிக்கு  அல்லாஹ்  உதவினான்?

ஈஸா (அலை).  அல்குர்ஆன் 5:110

4. ஃபுர்கான் எதை பிறித்தறிவிக்கிறது என்று  அல்லாஹ்  கூறுகிறான்?

சத்தியத்தையும், அசத்தியத்தையும். அல்குர்ஆன் 25:1 

5. சுவர்க்கத்தில் எது இருக்காது என அல்லாஹ்  கூறுகிறான்?

பசி, நிர்வாணம்.    அல்குர்ஆன் 20:118

6. ஒரு ஆண் பெண்ணை மணமுடிக்க எத்தனை நோக்கங்கள் இருக்க வேண் டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

நான்கு: 1. செல்வம், 2. குடும்ப பாரம்பரியம், 3.அழகு, 4.  மார்க்க  நல்லொழுக்கம். புகாரி : 5090

7. நஸ்ர் என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?

உதவி.   அல்குர்ஆன் 110

8. அல்லாஹ்வின் பாதையில் பயணிக்காத வரை என்ன செய்யவேண்டும் என அல்லாஹ்  கூறுகிறான்? 

சிறை  பிடியுங்கள்.  அல்குர்ஆன் 4:89

9. அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட அபூ லஹப் நபி(ஸல்) அவர்களின் என்ன உறவு  முறை? 

சிறிய  தந்தை. முஹம்மத்(ஸல்) அவர்களின் வரலாற்று புத்தகத்தில். பக்கம் 72.

10. பூமி மனிதர்களை சரித்துவிடாதிருக்க அல்லாஹ் எந்தவித ஏற்பாடு செய்ததாக கூறுகிறான்?

மலைகளை.  அல்குர்ஆன் 21:3

11. நபி(ஸல்) அவர்கள் மரணத்திற்கு பின் ஆட்சியாளரை தேர்வு செய்த இடம் எது?

பனூ  சாஇதா  சமுதாய இடம்.  புகாரி : 683

12. பயபக்தியுடையவர் முன் எதை கொண்டு வருவதாக அல்லாஹ்  கூறுகிறான்?

சொர்க்கம்.  அல்குர்ஆன் 26:90

13. இப்றாஹிம் நபி(அலை) அவர்களின் சமூகத்தவர் எதை வணங்கிக் கொண்டிருந்ததாக  அல்லாஹ்  கூறுகிறான்?

சிலைகளை.     அல்குர்ஆன் 26:71

14. நாம் எதை அதிகமாக நினைவு கூற வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்?

மரணம்.  திர்மிதி :  2307

15. எந்த ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டுக்கும் மத்தியில் தடுப்பு இருப்பதாக அல்லாஹ்  கூறுகிறான்?

கடல்.   அல்குர்ஆன்  59:19,20

16. ஜகாத் பெற தகுதியுடையவர்கள் எத்தனை பிரிவினர் என அல்லாஹ் கூறுகிறான்?

8  பிரிவினர்.   அல்குர்ஆன் 9:60

17. மறுமை நாளில் முதன்முதலில் பரிந்துரை செய்பவர் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

முஹம்மத்நபி(ஸல்) அவர்கள்.  முஸ்லிம் : 4575

18. அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள நபிமார்களில் ஜக்கரியா(அலை) அவர்கள் பெயரில் சூரா உள்ளதா?

இல்லை. 

19. கடமையான தொழுகைக்கு அடுத்தபடியான  சிறந்த  தொழுகை  எது?

தஹஜ்ஜுத்  (இரவு)  தொழுகை.   முஸ்லிம் : 2157

20. இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் நிலை என்ன?

அல்லாஹ்வின்  சாபம்  உண்டாகும்.   புகாரி : 5931

Previous post:

Next post: