மூடநம்பிக்கை

 அபூயாசிர்,உடன்குடி அறிவுக்குப் பொருத்தமான நடைமுறைக்குச் சாத்தியமான வாழ்க்கை நெறியே இஸ்லாம் ஆகும். ஆயினும் இஸ்லாம் என்றாலே மூட நம்பிக்கையின் மொத்த உருவம் என்று கருதும் அளவிற்கு இன்று முஸ்லிம்களின் நிலை இருந்து வருகிறது. இந்த மூட நம்பிக்கைகளில் பெரும்பாலும் பெண்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்றால் மிகையாகாது.

{ 0 comments }

ஓரிறைக் கொள்கையை தகர்க்கும் ஒடுக்கத்து புதன் இஸ்லாமிய ஹிஜ்ரா நாள்காட்டியில் ஸஃபர் மாதத்தில் அன்றைய அரபு மக்கள் வணிக நோக்கத்திற்காக சிரியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கம். எனவே தான் இம்மாதத்திற்கு ஸஃபர்-பயணம் என்ற பெயர் வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இம்மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அந்த மாதம் (ஸஃபர்) பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது.

{ 0 comments }

(காலம் சென்ற மவ்லவி P.S. அலாவதீன் அவர்களால் எழுதப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன் சங்கரன்பந்தல் நகர ஜமாஅத்துல் உலமாவின் சார்பாக இது பிரசுரம் செய்யப்பட்டது. இந்த மாதத்திற்கு மிகவும் தேவையான கட்டுரை என்பதால் இப்போது வெளியிடப்படுகின்றது) உங்களுக்கு வற்றாத செல்வமும் வளமான வாழ்வும் வேண்டுமா? அரைக்கிலோ மைதாவும் அளவான சர்க்கரையும் 50 கிராம் பொட்டுக் கடலையும் முற்றிய தேங்காய்த் துருவலும் கொஞ்சம் கசகசாவும் எள்ளும் தேவை.

{ 0 comments }

புலவர் செ. ஜஃபர் அலி, பி.லிட்., கும்பகோணம் உறவு அற்றுப் போக ஒரு பாத்திஹா!   இஸ்லாத்தின் பெயரால் மார்க்கம் அறியாத பாமர முஸ்லிம்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பாத்திஹாக்களின் வகைகள் இருக்கின்றதே! அப்பப்பா! கொஞ்சமா? மிச்சமா!

{ 0 comments }

மவ்லவி ஹாபிஸ் அப்துஷ்ஷுகூர் உலவி  இப்படியும் ஒரு பாத்திஹா! நான் ஒரு நண்பரின் அழைப்பை ஏற்று அவர் வீட்டின் விசேஷத்தில் கலந்து கொள்ள அவர் வீடு சென்றேன். பெரும் தலைகளெல்லாம் உள்ளே அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவரும் யாரோ ஒருவரின் வருகையை எதிர்ப் பார்த்திருந்தனர். தீடீரென, “என்னப்பா சுருக்கெனப் போய் லெவையைக் கூட்டியா! நேரமாகுது!” என்று ஒரு பெண்ணின் குரல் ஒலிக்க, உடனே அந்த நண்பர் வெளியில் சென்று தாடி, தலைப்பாகை, ஜிப்பாவுடன் கூடிய ஒருவருடன் திரும்புகிறார்.

{ 0 comments }

பீ.ஜே. மண் கேட்ட படலம்! அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களைப் படைக்க எண்ணிய போது, ஜிப்ரில்(அலை) அவர்களைப் பூமிக்கு அனுப்பி மண் எடுத்து வருமாறு பணிக்கிறான். ஜிப்ரில்(அலை) அவர்கள் பூமிக்கு வந்து மண் எடுக்க முற்பட்டபோது, பூமி மண் தர மறுத்ததாம். தோல்வியோடு ஜிப்ரில்(அலை) திரும்பி விடுகிறார்களாம். அடுத்து மீகாயில்(அலை) அவர்களை அல்லாஹ் அனுப்ப, மீகாயிலும் தோல்வியுடன் திரும்பிச் சென்றார்களாம். மூன்றாவதாக இஸ்ராபீலை அனுப்பியபோது, அவரும் வெறுங் கையுடன் திரும்பி விட்டார்களாம். இறுதியாக மலக்குல்மவ்தை அல்லஹ் அனுப்ப, […]

{ 0 comments }

P. ஜைனுல் ஆபிதீன் கஃபத்துல்லாஹ் இடம் பெயர்ந்ததா? இமாம் ஹஸன் பஸரீ அவர்களின் காலத்தில், அவர்கள் ஹஜ்ஜுச் செய்யச் சென்ற போது. கஃபத்துல்லாஹ்வை அதன் இடத்தில் காணவில்லையாம்! எங்கே என்று விசாரித்த போது ராபியா பஸரிய்யா அவர்களை வரவேற்கச் சென்று விட்டதாகத் தெரிந்ததாம். இது கதைச் சருக்கம். இந்தக் கதை பல வகைகளில் விரிவு படுத்தப்பட்டு பல விதமாக சொல்லப்படுகின்றது. “இந்தக் கதை சரியானது தானா?” என்று நாம் ஆராய்வோம்!

{ 0 comments }

மவ்லவி. S. கமாலுத்தீன், ஜமாலி, மதனீ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்தால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. இந்த மாதத்தில் திருமணம் போன்ற நற்காரியங்கள் செய்யக்கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

{ 0 comments }

பீ.ஜே உண்மைக்கு இலக்கணம் இத்ரீஸ் (அலை)    இத்ரீஸ் அலைஹீஸ் ஸலாம் அவர்கள் ‘மலக்குல் மவ்த்’துக்கு நண்பராக இருந்தார்களாம்! “மரணத்தை அனுபவ ரீதியில் உணர தாம் விரும்புவதாக” மலக்குல் மவ்திடம் கேட்டுக் கொண்டார்களாம்! அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து பின்பு உயிர்ப்பித்தார்களாம்! “தான் நரகத்தை கண்கூடாகக் காண வேண்டும்” என்று இரண்டாவது கோரிக்கையை மலக்குல் மவ்திடம் சமர்ப்பித்தார்களாம்!

{ 0 comments }

மெளலவி A. அலாவுதீன் பாக்கவி, ஆற்றங்கரை. நெஞ்சு பொறுக்குதில்லையே! கிழக்கு இராமநாதபுரம் பகுதியில் முஸ்லிம் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் ‘பந்தல் கால் ஊன்றுதல்’ பக்தி சிரத்தையோடு நடை பெறுகிறது! அதாவது திருமணத்திற்கு 4 நாட்களுக்கு முன்னதாக திருமண வீட்டார், ஊர்த் தலைவர்கள் மற்றும் ஊர் பிரமுகர்களிடம் “இத்தனை மணிக்கு பந்தல் கால் ஊன்றப் போகிறோம்! அவசியம் வாருங்கள்” என்று அழைப்பு விடுப்பார்கள். குறிப்பிட்ட நேரத்தில் ஊர் பெரியவர்கள் எல்லோரும் திருமண வீட்டிற்கு வந்து விடுவார்கள். அவர்களில் சிலரை […]

{ 0 comments }

எழுபது வருடங்களாக ‘பள்ளிவாசல் யானை’ என்று பெருமையோடு நெல்லை மாவட்டத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் பவனி வந்து கொண்டிருந்த பொட்டல்புதூர் மொய்தீன் பிச்சையை (ஹபீப் ராஜா) காலன் பறித்த போது சுற்று வட்டாரங்களில் இருந்து பெருமூச்சோடும், கண்ணீரோடும் பல்லாயிரம் மக்கள் செலுத்திய இறுதி அஞ்சலி, ஏட்டில் எழுத இயலாத பாசம் கலந்த நிகழ்ச்சியாகும்.

{ 0 comments }

முழங்காலுக்கு மேல் தூக்காதே! மதுரை மைதீன் உலவி. நாற்பதாம் நாள் பாத்திஹா. இது பொதுவாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நடக்கும் ஒரு விசேஷமான நாள். ஆனால் மதுரை மாவட்டத்தில் ஒரு வேடிக்கை. (மற்ற மாவட்டங்களிலும் இருக்கலாம்) தந்தை இறந்த நாற்பதாம் நாள் அன்று மிக விமரிசையாக பாத்திஹா ஓதப்படும். அதற்காக அழைக்கக் கார்டு அச்சடிப்பது முதல் அறுத்துச் சாப்பிட ஆடு வரை தயார் செய்யப்படும். பணம் இல்லையெனில் வட்டிக்காவது கடன் வாங்கி செய்ய வேண்டும் இல்லை என்றால் […]

{ 0 comments }

அபூ முஹம்மத் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று கூறப்படுகின்றது. அந்த நாளை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப் பின்னனியை நாம் காண்போம். “நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அது பற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவிய போது”மூஸா(அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரியிடமிருந்து (பிர்அவ்ன்) அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும்” என்று யூதர்கள் காரணம் கூறினர். “உங்களை விட மூஸா(அலை) […]

{ 0 comments }

இப்னுமர்யம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கத்துக் காபிர்களும், இந்தப் பதிலை ஆயுதமாகப் பயன்படுத்தித்தான் சத்தியத்தின் குரல்வளையை நெறிக்க முற்பட்டனர். இதைச் சொல்லியே அவர்கள் இஸ்லாத்தின் பால் வெறுப்பை ஏற்படுத்திக் கொண்டனர். இதனை அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் பல இடங்களில் நமக்கு எடுத்துச் சொல்கிறான். அவற்றில் சில வசனங்களைக் கீழே காண்போம். “அல்லாஹ் இறக்கி வைத்த இந்த வேதத்தைப் பின்பற்றுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்படும்போது அவர்கள்; அப்படியல்ல, எங்களுடைய முன்னோர்கள் […]

{ 0 comments }

மவ்லவி S.M. மீரான் ஆலிம், மதுக்கூர். முஸ்லிம்கள் எந்த ஒரு நல்ல காரியத்தையும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானீர்ரஹீம் என்றோ பிஸ்மில்லாஹி என்றோ கூறித் துவக்க வேண்டும் என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பல பொன்மொழிகள் மூலம் நமக்கு தெரிகின்றது. இந்த முறையை இஸ்லாமியர் அகைவரும் செயல்படுத்தியும் வருகின்றனர். பிற்காலத்தில் உலகின் பல பகுதிகளுக்கும் கடிதத் தொடர்புகள் பரவலாக்கப்பட்டன. தங்கள் கடிதங்களில் பிஸ்மில்லாஹர்ரஹ்மானீர்ரஹீம் என்று எழுதினால் அதற்கு மரியாதை செய்யப்படாது. தூய்மையற்ற பலரது கைகளில் அது கிடைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் […]

{ 0 comments }

பேராசிரியர் K. முஹம்மது இக்பால் மதனி, துபை ஷாஃபான் மாதம் 15 ஆம் இரவு நம்மவாகளால், மிக கோலாகலமாகக் கண்ணியப்படுத்தப்பட்டு, விழாவாக கொண்டாடப்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம். இந்த இரவை விழாவாகக் கொண்டாடுவதில் பாமர மக்களோடு ஆலிம்களும் ஆர்வமாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நாளில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் நூதனமான காரியங்களை பல்லாண்டு காலமாக நன்மை என்ற பெயரில் நடத்தி வருகின்றனர். “முன்னோர்களில் சிலர் இதனை உருவாக்கினர்” என்பதைத் தவிர திருக்குர்ஆனிலோ, நபிவழியிலோ, […]

{ 0 comments }