ரமளான்

அபூ அப்தில்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாள்களை மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாகக் கொண்டாட அனுமதி வழங்கி இருக்கிறான். ஆண்கள் மஹல்லா பள்ளிகளிலும், பெண்கள் கடமையான ஐங்கால தொழுகைகளை தங்கள் வீடுகளிலும் தொழுது கொள்ள அனுமதித்த நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று தொழத் தடுக்கப்பட்ட மாதவிடாய் பெண்களையும் பெருநாள் திடலுக்கு வரும்படி கட்டளையிட்டிருக்கிறார்கள் என்றால், தங்களின் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைப்பதற்கு உரிய ஆடைகள் இல்லாத பெண்கள் கூட இரவல் ஆடையை வாங்கி அணிந்து கொண்டு பெருநாள் […]

ஷம்ஸுள்ளுஹா ரஹ்மானி நோன்புப் பெருநாளன்று வழங்கப்பட வேண்டிய தர்மத்தை “ஃபித்ரு” என்பர். (நம் தமிழகத்தில் அதனை ஃபித்ரா – என்றும் கூறுவர்) இது கட்டாயமாகசெய்தாக வேண்டிய தர்மமாகும். ஏனெனில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இந்த தர்மத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது “ஜகாத்” என்ற பதத்தையே பிரயோகம் செய்துள்ளனர். அது வருமாறு:-

மவ்லவிகளால் “தராவீஹ்’ என்று அறிமுகப் படுத்தப்படும் ரமழான் இரவுத் தொழுகை, நபி(ஸல்) அவர்களால் தொழுது காட்டப்பட்டதும், உமர்(ரழி) அவர்கள் பிந்திய இரவில் தொழுததும், முந்திய இரவில் முஸ்லிம்கள் ஜமாஅத்தாகத் தொழுவதை அனுமதித்ததும் 8+3=11 ரகாஅத்துகள் மட்டுமே என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்களை அந்நஜாத், 1986-லிருந்து  மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறது.   ரமழான் இரவுத் தொழுகையும்[PDF]

நன்மைகளை அள்ளித்தரும் ரமழானில் பகலில் நோன்பு நோற்பது கடமையாகவும், இரவில் நின்று வணங்குவது ஏற்றம் தரும் செயலாகவும் இருக்கிறது. நன்மைதரும் செயல்கள் என்றால் நிச்சயமாக அச்செயல்கள் அல் அஹ்ஜாப் 33:21, 36 இரு இறைவாக்குகளில் குறிப்பிட்டிருப்பது போல் கண்டிப்பாக அவை இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்களால் நடை முறைப்படுத்திக் காட்டித் தந்தவையாக மட்டுமே இருக்க வேண்டும்.

உலகை வழி நடத்த முன்வாருங்கள்! சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வின் அருளால் ஹிஜ்ரி 1430-ம் ஆண்டின் ரமழானை சந்திக்க இருக்கிறோம். மிக மிக நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பான கணினியின் மூலம் மிகத் மிகத் துல்லியமான கணக்கீட்டின்படி 1430-ம் ஆண்டின் ரமழான் மாதம் 21.08.2009 வெள்ளியன்று ஆரம்பித்து 18.09.2009 வெள்ளியன்று 29 நாட்களுடன் முடிவடைகிறது. 19.09.2009 சனி அன்று பெருநாள். இந்த மிகமிகச் சரியான கணக்கீடுகளின்படி நம்முடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளைப் பெற முயல்வோமாக. இப்போது […]