1990 செப்டம்பர்

நபி வழியில் நம் தொழுகை தொடர் 44 அபூ அப்திர் ரஹ்மான் என்னை எவ்வாறுத் தொழக் கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள்.    (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி) புகாரீ, முஸ்லிம்) இமாமுக்கும் அவரைப் பின்பற்றி தொழுவோருக்கும் தாம் தொழுதுக் கொண்டிருக்கும் போது சம்பவிக்கும் கோளாறுகளை சரி செய்து கொள்வதன் விபரம். இமாமுக்கோ இமாம் அல்லாதவருக்கோ தமது ஆடையில் (நஜீஸ்)-அசுத்தம் இருப்பதாக நாம் தொழுதுக் கொண்டிருக்கும் போது, சந்தேகம் ஏற்ப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? தொழுபவர் இமாமாகவோ, அல்லது அவரைப் பின்பற்றித் தொழுபவர்களாகவோ, […]

குர்ஆனின் நற்போதனைகள்:    தொடர் : 19 அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே! A. முஹம்மது அலி. பகுதி:5 நபியின் கடமையும், நாம் ஈடேற்றம் பெற வழியும். 1. எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ-அவர்கள் தங்களிடமுள்ள தெளராத்திலும், இன்ஜீலிலும் அவரது புகழ் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலகுவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்க ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்கு தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் […]

ஹதீஸ் பெட்டகம் தொடர் : 6        A. முஹம்மது அலி சத்திக்குட்ப்பட்டதையே செயல்படுங்கள்: திருமறை குர்ஆன் கூறுகிறது; அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவிற்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்ட்டத்தைக் கொடுப்பதில்லை. (2:286,65:7) எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் எதுவும் செய்ய நிர்ப்பந்திக்கப்படமாட்டாது. (2:233) அல்லாஹ் கூறுகிறான்: நாம் எந்த ஆத்மாவுக்கும் அதன் சக்திக்கு அப்பார்ப்பட்ட(தாங்க முடியாத சுமையை) கஷ்ட்டத்தைக் கொடுப்பதில்லை.  (6:152, 7:42, 23:62) அல்லாஹ் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றான்: எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பார்பட்ட(எங்களால் […]

கதிரவனை கையால் மறைப்பவர்கள்! புலவர் செ. ஜஃபர்அலி, பி.லிட்., நாகபட்டினம். “(நபியே! முன்னுள்ள வேதங்களைப்) பலவாறாகப் பிரித்தோர் மீது, முன்னர் நாம் (வேதனை) இறக்கியவாறே, இந்தக் குர்ஆனைப் பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்) ஆகவே உம் இறைவன் மீது சத்தியமாக, (அவர்கள் யாவரையும் நம்மிடம் ஒன்று சேர்த்து) நிச்சயமாக அவர்களிடம் கேள்விக்கணக்குக்) கேட்போம். அவர்கள் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள்? ஆகவே உமக்கு ஏவப்பட்டதை (த்தயக்கமின்றி) நீர் அவர்களுக்கு விவரித்து விட்டு இணைவைத்து வணங்கும் இவர்களை […]

மெளலூது  அபூ அப்தில்லாஹ் ரபீஉல் அவ்வல் மாதம் பிறந்துவிட்டது. பெரும்பாலான பள்ளிகளிலும், வீடுகளிலும் நபி(ஸல்) அவர்களின் பெயரால் ்’சுபுஹான மெளலூது” வெகு பக்திசிரத்தையோடு ஓதப்படும். பலர், தேக்ஷாக்களில் பிரியாணி ஆக்கி பெரும் விருந்து நடத்துவர். ஆக சுபுஹான மெளலூது ஓதுவதால் தங்கள் தொழில்களிலும் வீடுகளிலும் விளை நிலங்களிலும் “பரகத் சொரியும் என்பது இவர்களின் நம்பிக்கை. தங்களை உண்மையான முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் இப்படி மெளலூது ஓதுவதற்குரிய ஆதாரத்தை எங்கிருந்து பெற்றார்கள் என்று கேட்டால் அது […]

நாட்டு நடப்பு 40 நாள் பாத்திஹா பக்தி: திருச்சியில் பெயரும் புகழுடன் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் மத்திய அரசு துரையில் பெரும் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவரின் அன்பு மனைவி மரணித்தார்கள். இவர் ஐந்து பெண்மணிகளுக்கு தாயாகும். ஆண் மக்களில்லை. அல்லாஹ்வின் அருளால் அவர்களுக்கு அமைந்த ஐந்து மருமக்களும் ஆண் குழந்தையில்லா குறையை நிவர்த்தி செய்தனர். இவரது முந்திய கால வாழ்க்கை இஸ்லாமிய கொள்கை கோட்டிபாட்டிற்கு எப்படியிருந்தது என்பது நமக்கு தேவையற்றது. மரணிக்கும் தருவாயில் அத்தாய் கூறி சென்ற வஸியத்தும், […]

தீமையை சுட்டிக் காட்ட தடுப்பதும் இஸ்லாமியக் கடமையல்லவா? தொடர்:3 Er. H. அப்தஸ்ஸமது, Bsc.,Msc,(Eng)     இன்னொரு நபிமொழியில் இதே உண்மை கீழ் வருமாறு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது:- அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ், நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்:- நீங்கள் உமி போன்று (சுரணை அற்ற) மக்களோடு வாழவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானால் உங்கள் செயல் எங்ஙனம் இருக்கும்? (பொது மக்கள்) அவர்கள் வாக்கைப் பாதுகாக்க  வேண்டும் என்ற பொறுப்புணர்வும் நம்பகமும் அற்றவர்களாக இருப்பர்; அவர்களிடையே கருத்து வேற்றுமையும் […]

  பிரிவுப் பெயர்கள் கூடாது என்பதற்கு ஆதாரமாக குர்ஆனிலிருந்து 2:213, 6:159, 21:92,93, 23:53, 42:14, 45:17 ஆகிய வசனங்களை சமர்ப்பிக்கிறீர்கள். இந்த வசனங்களை ஆழ்ந்து நோக்கிய எனக்கு சில சந்தேகங்கள். 2:213வது வசனத்தில் வேதக்கட்டளை பின் வேறுபாடு கொண்டவர்களைக் கண்டிக்கிறான். நேர்வழி நடக்கும் இயக்கத்தார்கள் முகல்லீது மெளலவிகளைப்போல் வேத வசனங்களில் கருத்து வேறுபாடு கொள்ளவில்லையே. இந்நிலையில் அவர்களை எப்படிக் கண்டிக்க முடியும்?

குர்ஆனின் நற்போதனைகள்:                தொடர்:19     A. முஹம்மது அலி. பகுதி:5 நபியின் கடமையும், நாம் ஈடேற்றம் பெற வழியும். 1. எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ-அவர்கள் தங்களிடமுள்ள தெளராத்திலும், இன்ஜீலிலும் அவரது புகழ் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலகுவார்;

3:7 வசன சர்ச்சையில் வரும் “தஃவீல்” என்ற பதத்திற்கு இறுதி நிலை (இறுதி முடிவு) என்றே மொழி பெயர்க்கிறீர்கள்.” இறுதி நிலை என்பதற்கு ஆதாரமாக இப்னு தைமிய்யாவின் கருத்தையும் குர்ஆனின் 4:59, 7:53, 17:35 ஆகிய வசனங்களில் வரும் தஃவீலையும் எடுத்துக் காட்டுகிறீர்கள். ஆனால் சூரந்து யூசுபின் 6:21,36,44,45  ஆகிய வசனங்களில் வரும் “தஃலீல்” என்ற பகத்திற்கு இறுதி முடிவு என்று பொருள் இல்லாமல் (பொதுவாக) விளக்கம் என்றே தர்ஜுமா செய்யப்பட்டுள்ளது. இந்த தஃவீல்களின் விளக்கத்தை ஆதாரமாகக் […]