2011 ஏப்ரல்

  மார்ச் இதழ் தொடர்: 3 மதகுருமார்களின் பித்தலாட்டம்! அல்குர்ஆன் 39:9, 58:11, 35:19,20,21,22,28 இறைவாக்குகளை ஓதிக்காட்டி (படித்துக் காட்டி அல்ல) தங்களுக்கு உயர் அந்தஸ்து இருப்பதாகப் பிதற்றுவார்கள் மதகுருமார்கள். ஆனால் இந்த இறைவாக்குகள் அனைத்தும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மார்க்க அறிஞர்களாக ஆகவேண்டும் என ஆர்வமூட்டுகின்றனவே அல்லாமல் ஒன்றுபட்ட சமுதாயத்தை ஆலிம் அவாம் எனக் கூறுபோட்டு, இந்த மதகுருமார்கள் அது கொண்டு வயிறு வளர்க்க அனுமதிக்கவில்லை.

பெங்களூர் M.S.கமாலுத்தீன் நீரில் வாழும் மீன் நீர் குடிப்பது தெரியாதது போல் அரசு ஊழியர்கள் செய்யும் ஊழலும் அடுத்தவருக்குத் தெரியாது”. அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியன்.

முஸ்லிம் சமுதாயம் இன்று இவ்வுலக விவகாரங்களிலும், மறு உலக விவகாரங்களிலும் மிகவும் பின்தங்கி இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் போதிய அறிவின்மையே. சில நல்லுள்ளங்களின் நன் முயற்சியால் தற்போது உலகியல் கல்வியில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் மார்க்கக் கல்வியில் முன்னேற்றம் பூஜ்யம்.