2011 பிப்ரவரி

அபூ அப்தில்லாஹ் மதகுருமார்களின் ஆதிக்கம்: ஆதி மனிதன் ஆதத்திலிருந்து இன்று வரை எத்தனை மதங்கள் தோன்றியுள்ளனவோ அந்த அத்தனை மதங்களிலும், இஸ்லாமிய மதம் உட்பட மதகுருமார்களின்-மதபோதகர்களின் ஆதிக்கமே நிறைந்து காணப்படுகிறது. அனைத்து மதங்களையும் பின்பற்றும் அனைத்து மக்களும் இந்த மதகுருமார்களை கடவுளுக்கு மிகமிக நெருக்கமானவர்கள்; அவர்களின் ஆதரவு இல்லாமல் கடவுளின் பொருத்தமோ, மோட்சம் என்ற சுவர்க்கமோ அடைய முடியாது என்று உறுதியாக நம்புகிறார்கள்.

{ 0 comments }

  அபூ அப்தில்லாஹ் 2010 அக்டோர் தொடர் : 13 உண்மை இதழ் ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்களே! அந்நஜாத்திற்குப் பதிலடி என மூட நம்பிக்கைகளைப் பகுத்தறிவு எனக் கிறுக்கியுள்ள திரு.ந.வெற்றியழகன் அவர்களே, “”உண்மை” என்று வாயளவில் சொல்வதாலோ, ஏட்டளவில் எழுதுவதாலோ “”உண்மை” என்ற பெயரில் மாதமிருமுறை இதழ் வெளியிடுவதாலோ அது ஒருபோதும் உண்மையாகிவிடாது.

{ 0 comments }

   1. பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் (ரஃயல் ஐன் 3:13) என்று நேரடியாகக் கூறும் குர்ஆன் வசனமோ, ஹதீதோ இருக்கிறதா? 2. ஹதீதில் மேகமூட்டம் என்றிருக்கிறதா? மறைக்கப்பட்டால் என்றிருக்கிறதா? (பார்க்க 10:71) கும்ம, குப்பிய, கும்மிய இந்த அரபி பதங்களின் நேரடி தமிழ் பதங்கள் என்ன? 3. நபி(ஸல்) பிறை 29 மாலை பிறை பார்க்கச் சொன்னார்களா? அல்லது தினசரி பார்க்கச் சொன்னார்களா? 4. மாத ஆரம்ப நாட்களில் மாலையில் பார்க்கும் பிறை மறையும் பிறையா? […]

{ 0 comments }

சேலம் S.A.H.அலீ, M.A.,M.Phil.,M.Ed., 1. அல்லாஹ்வின் நியதியும் அதிசயங்களும் வைரஸ், பாக்டீரியா, ஈஸ்டு போன்ற நுண் உயிரினம் ஒன்று, இரண்டாக, நான்காக, எட்டாக பிளந்து பெருகுவது, மனித தாவர விலங்குகளின் நன்மை தீமையை நாடி அல்லாஹ் அனுமதிக்கும் உயிரியல் நியதி. (Biological Nature).

{ 0 comments }

  Y.ஹனீஃப், திருச்சி. “”வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் நெறிநூல். செயல்களில் சிறந்தது முகம்மது நபி (ஸல்) அவர்களின் செயல் முறை” என்ற தாரக மந்திரம் குர்ஆனிலும் ஹதீஸிலும் இருக்க முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் மேற்கண்ட தாரக மந்திரத்தை ஏற்றுக் கொள்கிறார்களே அன்றி நடைமுறைப்படுத்துவதில் புறம் காட்டி பின் வாங்கி தனது பின்னங்கால் புட்டத்தில் அடிபட ஓடவே செய்கிறார்கள்.

{ 0 comments }

  MTM.முஜீபுதீன், இலங்கை ஜனவரி தொடர் : 13 இறைத் தூதர்கள் வருகை பற்றி அல்குர்ஆன் உலகின் ஆதி பிதா ஆதம்(அலை) அவர்கள் முதல், இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வரை பல இறைத் தூதர்கள் இப்பூமியில் வாழ்ந்துள்ளனர். அவர்கள் இறை நெறி நூலின் அடிப்படையில் ஓர் இறைவனையே வணங்க வேண்டும் என போதித்துள்ளனர். அந்த இறைத் தூதர்களின் மிகச் சிலர் பற்றிய செய்திகளே அல்குர்ஆன் மூலம் அல்லாஹ் வெளிப்படுத்தியுள்ளான்.

{ 0 comments }

நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு இன்றைய உலகின் நிலை தெளிவாகவே விளங்கும். மனிதன் செய்யக் கூடாதவை எவை எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் பெருமையுடன் செய்யும் இழி நிலைக்கு இன்று மனித குலம் தள்ளப்பட்டுள்ளது. நான்கு கால் மிருகங்களை விட கேடு கெட்ட வாழ்க்கையை இரண்டு கால் மனிதன் செய்யும் நிலைக்கு மனிதன் தாழ்ந்துள்ளான்.

{ 0 comments }