2013 டிசம்பர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடிதம்

{ 0 comments }

குறிப்பு : நீங்கள், உங்கள் பணியாளர் கடிதத்தில் குறிப்பிட்டது போல் நாங்கள் தேர்ந்தெடுத்த தலைப்புகளில் சில: 1. இஸ்லாத்தில் பிரிவுகள் கிடையாது 2. ததஜவும் ஒரு மத்ஹபே 3. முஸ்லிம்களை காஃபிராக்கும் ததஜ 4. சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிகள், பள்ளிகள் இல்லையா? 5. ஜகாத் பற்றிய ததஜவின் தவறான நிலைப்பாடு! 6. தொழுகையின் இருப்பில் விரல் அசைப்பது நபி வழிக்கு முரணானது, ஷைத்தானின் செயல் ! 7. நெஞ்சின் மீது கை கட்டுவது நபி வழியா? […]

{ 0 comments }

உண்மையை அறிவார்களா? JAQH அமைப்பினர்

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனின் 7:3, 53:1-5 வசனங்களை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் நேர்வழி அல்லாஹ்வால் வஹீ மூலம் இறக்கப்பட்டவை மட்டும் தான். மனித சுய கருத்துக்களை ஒருபோதும் மார்க்கமாக எடுத்து நடக்கக் கூடாது என்பதைத் திட்டமாக அறிய முடியும். 3:31, 33:21,36 இறைவாக்குகளைப் படித்து உணர்கிறவர்கள், அப்படி மனிதக் கருத்துக்களை மார்க்கமாக எடுத்து நடக்கும் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் நரகை நோக்கி நடைபோடுகிறார்கள் என்பதை அறிய முடியும்.

{ 0 comments }

ஹிஜிரி கமிட்டி, கோவை அன்புச் சகோதரர்களே! கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக JAQH அன்சார் பள்ளியின் தலைவர் அமீர் அலி (இப்னு அஹமத்) அவர்கள் ஹிஜிரி கமிட்டியினர் மனோ இச்சையின்படி செயல்படுகின்றனர் என்றும் குர்ஆன் ஹதீஸிற்கு முரணாகச் செயல்படுகின்றனர் என்றும் ஓர் அவதூறை பிரசுரமாக வெளியிட்டார். அதற்குத் தக்க பதிலை ஹிஜிரி கமிட்டி பிரசுரமாக வெளியிட்டது. இவர் மட்டும் தான் இப்படிப் பொய்ப் பிரச்சாம் செய்து வருகிறார் என்று எண்ணினோம். ஆனால JAQH-ன் முன்னாள் தலைவர், இந்நாள் […]

{ 0 comments }

ஜாக்கின் சர்வதேசப் பிறை  நிலைப்பாட்டில் சிலசந்தேகங்கள்! கணக்கு மற்றும் காலண்டர் குறித்த சில சந்தேகங்கள்! இமாம் ஹுஸைன், மாநில பொது செயலாளர், ஜாக் 1. பிறை குறித்த தகவலறிய நாம் தொடர்பு வைத்துள்ள நாடுகள், ஸ்தாபனங்கள் எவை? நபர்கள் யார் யார்? தெளிவு படுத்துவது அவசியம். 2. நமக்கு நேரத்தில் முந்தியுள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், புருணை போன்ற நாடுகளில் பிறை பார்த்துத் தகவல் வந்தால் நமது ஜாக் அதை ஏற்றுக்கொள்வதுண்டா? இன்று வரையில் என்றாவது […]

{ 0 comments }

நேர்முக வர்ணனை : – இப்னு குறைஷ் கடந்த முஹர்ரம் 14 ஹிஜ்ரி 1435 அன்று ஞாயிற்றுக்கிழமை ஜாக் அமைப்பின் சார்பாக சேலம் மாநகரில் பிறை விளக்க மாநில மாநாடு நடத்தப்பட்டது. துல்லியமான சந்திரக் கணக்கீட்டு முறையை சரிகண்டு அதை நடைமுறைப்படுத்தும் ஜாக் உறுப்பினர்கள் தவறாது இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்புக் கொடுக்கப்பட்டது. பிறைகளைக் கணக்கிடுவது தவறானது என்றும் ஜாக்கின் சர்வதேச-சவுதி தேசப்பிறை தான் சரியானது என்றும் கூறி இது சம்பந்தமான கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்கப்படும் என்றும் […]

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் பெரியார்தாசன் என்ற பெயரில் பிரபல்யமாகி, தூய வாழ்க்கை நெறியான இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவி அப்துல்லாஹ்-இறைதாசன் என்ற பெயருடையவராகி சமீபத்தில் இறந்த அவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தானமாக ஒப்படைக்கப்பட்டது. இது முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு பெரும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியது. அதற்குக் காரணம் ஆலிம்கள் என பெருமை பேசும் மவ்லவிகளின் பொருளற்ற வாதமே! இஸ்லாத்தின் அடிப்படை விதியை இந்த மவ்லவிகள் அறியாது பிதற்றுகின்றனரா அல்லது 2:146, 6:20 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் அவர்கள் பெற்ற […]

{ 0 comments }

இப்னு ஹத்தாது. 1985-களில் எமது “”பல்சமய சிந்தனை” என்ற நூலைப் பார்த்துவிட்டு மதனிகள், உலவிகள், இம்தாதிகள், ரஹ்மானிகள் என சில மவ்லவிகள் இஸ்லாம் அல்லாத இயக்கம் எங்களுக்கு இல்லை; ஆலிம், அவாம் வேறுபாடு இல்லை; மார்க்கப் பணிக்குக் கூலி கூடாது, ஒவ்வொரு ஆணும், பெண்ணும் சுயமாக மார்க்கத்தை விளங்கி நடக்க வேண்டும், மனிதர்களில் உயர்வு தாழ்வு என்ற வேறுபாடு அறவே இல்லை, தக்வா-பயபக்தியுடன் நடப்பவர்கள் மட்டுமே இறைவனிடம் உயர் பதவி பெற முடியும் போன்ற குர்ஆன், சுன்னா […]

{ 0 comments }

அல்லாஹ் கூறுகிறான் : ஆதமுக்குப் பணிந்து சுஜூது செய்யுங்கள் என்று வானவர்களுக்கு நாம் கூறியபோது, அனைவரும் பணிந்து சுஜூது செய்தனர். இப்லீஸைத் தவிர. அவன் விலகிக் கொண்டான். பெருமை அடித்தான். இன்னும் காஃபிர்களில் ஒருவனாகவும் ஆகிவிட்டான். (அல்குர்ஆன்: 2:34) இதே கருத்தில் இன்னும் பல வசனங்கள் உள்ளன. அல்குர்ஆனை முழுமையாக உற்று நோக்கினால் இறைக் கட்டளைக்கு எதிராக முதல் புரட்சி ஏற்பட்டதற்கு அடிப்படைக் காரணம் “பெருமை”தான் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

{ 0 comments }

பெங்களூர், M.S.கமாலுத்தீன் “”மக்களாட்சி சீருடன் நடைபெற அதற்கு முழு முயற்சியும் தன்னொழுக்கமும் ஜனநாயகம் பற்றிய பல்வேறு நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளும் விருப்பமும் மக்களுக்குத் தேவை. இதற்குப் பெரும்பாலான மக்கள் தயாராக இல்லாதபோது அங்கு ஜனநாயகம் வீழ்ச்சி அடையும். மேலும் பெரும் பணக்காரர்களோ, ஆயுத பலம் கொண்டவர்களோ நியாயமாக ஒரு சமுதாயத்தை வழிநடத்தவே முடியாது. ஒரு சமுதாயத்தின் மிகச் சிறந்த மனமாற்றங்கள் மட்டுமே அந்த சமுதாயத்தை வழி நடத்தும்” – ப்ளேட்டோ

{ 0 comments }

அந்நஜாத் மாத இதழை 1986 ஏப்ரலில் ஆரம்பிக்கு முன்னரே 1984லிலிருந்தே அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்கும் இடையில் இடைத்தரகர்களோ, புரோகிதர்களோ இல்லவே இல்லை என்பதில் நாம் மிகத் தெளிவாகவே இருந்து வருகிறோம். இந்த உண்மையை 30.10.1984 “பல்சமயச் சிந்தனை” உரையும், 1.3.1985 “”அணுகுவோம்! ஆராய்வோம்!! தெளிவோம்!!! தேர்வோம்!!!!” பிரசுரமும், 11.5.1985-ல் மதரஸாக்களுக்கும், மவ்லவிகளுக்கும் எழுதிய கடிதமும், 24.7.1985-ல் வெளியிட்ட “”முஸ்லிம்களே முஸ்லிம்களாக மட்டுமே வாழுங்கள்” என்ற பிரசுரமும், 18.8.1985-ல் வெளியிட்ட “”நேர்வழி எது”? என்ற பிரசுரமும், 15.10.1985-ல் மவ்லவி […]

{ 0 comments }