JAQH பிறை விளக்கப் பொதுக்கூட்டமும் அவதூறுப் பிரச்சாரமும்

in 2013 டிசம்பர்,பிறை


ஹிஜிரி கமிட்டி, கோவை

அன்புச் சகோதரர்களே! கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக JAQH அன்சார் பள்ளியின் தலைவர் அமீர் அலி (இப்னு அஹமத்) அவர்கள் ஹிஜிரி கமிட்டியினர் மனோ இச்சையின்படி செயல்படுகின்றனர் என்றும் குர்ஆன் ஹதீஸிற்கு முரணாகச் செயல்படுகின்றனர் என்றும் ஓர் அவதூறை பிரசுரமாக வெளியிட்டார். அதற்குத் தக்க பதிலை ஹிஜிரி கமிட்டி பிரசுரமாக வெளியிட்டது. இவர் மட்டும் தான் இப்படிப் பொய்ப் பிரச்சாம் செய்து வருகிறார் என்று எண்ணினோம். ஆனால JAQH-ன் முன்னாள் தலைவர், இந்நாள் தலைவர் என அனைவருமே அவதூறு பேசிப் பொய்ப் பிரச்சாரம் செய்பவர்கள் தான் என்பதை கடந்த ஞாயிறன்று சேலத்தில் நடந்த பிறை விளக்க(?) (குழப்ப) பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொழுது தான் தெரிய வந்தது.

கமாலுத்தீன் மதனி:
நபி(ஸல்) அவர்களுக்குக் கணக்குத் தெரியாது என்றும், அவர்கள் செய்த ஹஜ், நோன்பு போன்ற காரியங்களைத் தவறாகச் செய்துள்ளார்கள் (நஊதுபில்லாஹ்) என்றும் ஹிஜிரி கமிட்டியினர் கூறுவதாக அப்பட்டமான பொய்யைக் கூறினார். ஹிஜிரி கமிட்டியினர் எழுத்து மூலமாகவோ பேச்சுக்கள் மூலமாகவோ என்றுமே இதைச் சொன்னதில்லை. இப்படி சொல்லாத ஒன்றை ஹிஜிரி கமிட்டியினர் சொன்னதாக அவதூறுப் பிரச்சாரம் செய்து வருகிறார் கமாலுத்தீன் மதனி அவர்கள்.

அன்சர் ஹுசைன் ஃபிர்தவ்ஸி:

ஹிஜிரி காலண்டரைத்தான் உலகம் பின்பற்ற வேண்டும் என நிர்பந்திப்பதாக ஹிஜிரி கமிட்டியினர் மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். ஆனால் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும். இறைவனின் கூற்றுப்படி இறைத் தூதரின் வழிகாட்டுதலின்படி சந்திரனின் படித்தரங்களில் உருவாக்கப் பட்ட நாட்காட்டியைப் பின்பற்றுமாறு அழைப்பு விடுக்கிறோமே தவிர யாரையும் நிர்பந்திப்பதில்லை.

அப்துல் காதிர் மதனி:
ஹிஜிரி கமிட்டியினரால் வெளியிடப்பட்ட “”மனித குல காலண்டர்” என்ற புத்தகம் அரபி ஞானம் இல்லாதவர்களால் தொகுக்கப்பட்டது என்றொரு பொய்யைக் கூறினார். மேலும், இப்புத்தகத்துக்கு அணிந்துரை அளித்தவரும் அரபி ஞானமற்றவர் என்றும் இப்புத்தகத்தில் பல தவறுகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால் இப்புத்தகம் வெளிவந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்புத்தகத்தில் தவறுகள் இருக்கின்றன எனச் சொல்பவர்கள் 5 ஆண்டு காலம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

இப்புத்தகத்தைத் தொகுப்பதற்கு முக்கிய பங்காற்றியவர் மெளலவி M.M. அப்துல் காதிர் உமரி. இவர் இன்றும JAQH-ன் மாநில செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றுகிறார். இந்த 5 ஆண்டுகளில் இப்புத்தகத்தில் உள்ள தவறுகளை இவரிடம் சுட்டிக்காட்டியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? இவர் திருகுர்ஆன் மொழி பெயர்ப்பாளர் என்பது அனைவருக்கும் தெரியும். “”புலூகுல் மராம்” என்ற ஹதீஃத் தொகுப்பையும் மொழி பெயர்த்துள்ளார். அரபியை எளிதில் கற்றுக்கொண்டு திருகுர்ஆனை ஓதிடுவதற்காக “”5 நாட்களில் அரபி” என்ற புத்தகத்தையும் எழுதியவர். மேலும் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவருக்கு அரபி ஞானம் இல்லையாம்!!

இப்புத்தகத்துக்கு அணிந்துரை வழங்கியவர் மெளலவி, ரஹ்மத்துல்லாஹ் இம்தாதீ அவர்கள். இவர் பல ஆண்டுகளாக மார்க்கப் பிரச்சாரம் செய்து வரும் அறிஞர். சவூதி அரேபியாவின் அல்கோபரில் உள்ள “”இஸ்லாமிய வழிகாட்டு மற்றும் அழைப்பு மையத்திலும்” பணிபுரிந்தவர். பல ஆண்டுகளாக JAQH அமைப்போடு மார்க்கப் பணியில் ஈடுபட்டு வந்த ஓர் அறிஞரை தங்கள் கருத்துக்கு மாற்றமான கருத்தை ஆதரிக்கிறார் என்பதற்காக அரபி ஞானமற்றவர் எனக் குறை கூறுகிறார்கள்.

இப்படி அரபி ஞானம் இல்லை! அரபி ஞானம் இல்லை! எனப் பலமுறை தன் உரையிலே குறிப்பிட்ட அப்துல் காதிர் மதனி அவர்கள் கேள்வி நேரத்திலே மக்களுடைய கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கவில்லை. கமாலுத்தீன் மதனியும் பதிலளிக்கவில்லை. குர்ஆனுக்கும் ஹதீஃ திற்கும் அரபி ஞானம் உள்ளவர்கள் தான் விளக்கமளிக்க வேண்டும் எனக் கூறியவர் தன்னை விடவும், தன் நண்பர் கமாலுத்தீன் மதனியை விடவும் அரபியிலே அதிக ஞானம் பெற்ற??? கோவை அய்யூபிடம் ஒப்படைத்து, தன் பேச்சிற்கு நேர்முரணாக நடந்து கொண்டார். கோவை அய்யூப் அவர்கள் எந்த மதரஸாவில் படித்துப் பட்டம் வாங்கினார்?

அப்பொறுப்பைப் பெற்றுக்கொண்ட கோவை அய்யூப் அவர்களோ கேள்விகளுக்கு பதில் கொடுக்கிறேன் என்ற பெயரில் சில கேள்விகளுக்கு மட்டும் லேப்டாப்பிலிருந்து எதையோ பார்த்துப் பார்த்து ஒப்பித்து விட்டு மீதமுள்ள கேள்விகளுக்கு அடுத்த இரு மாதங்களில் அல்ஜன்னத் பத்திரிக்கையில் பதிலளிக்கப்படும் என்று சொல்லி முடித்துக் கொண்டது வேடிக்கையாக இருந்தது. மக்களின் சந்தேகங்களுக்கு இரு மாதங்கள் கழித்துத்தான் அதுவும் அல் ஜன்னத் பத்திரிகை வாயிலாகத்தான் பதில் தருவார்கள் என்றால் எதற்காக பிறை விளக்கப் பொதுக்கூட்டம் என்று மக்களைக் கூட்ட வேண்டும்? மக்களின் கேள்விகளை அல்ஜன்னத்திற்கு அனுப்பச் சொல்லி அதிலேயே பதிலளிக்கலாமே? மொத்தத்தல் இவர்கள் நடத்திய “”பிறை விளக்க (குழப்ப)ப் பொதுக்கூட்டம் வேடிக்கையான ஒன்று!

அரபி ஞானம் மிக்க சகோதரர் கோவை, அய்யூப் அவர்களே!
மாபெரும் ஆற்றலும் வல்லமையும் பொருந்திய, அனைத் துலகையும் படைத்த அல்லாஹ் சுபஹானத்தஆலா கூறுகின்றான்.

“பிறைகளைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். அவை மக்களுக்குக் காலம் காட்டியாகவும் ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன” என(தூதரே)) கூறும். (அல்குர்ஆன் : 2 : 189)

இந்த வசனத்தில் அல்லாஹுத்தஆலா மக்கள்(நாஸ்) எனக் குறிப்பிடுவது முஸ்லிம்களை மட்டுமா அல்லது உலக மக்கள் அனைவரையுமா?

விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Previous post:

Next post: