2013 பிப்ரவரி

{ 0 comments }

ஐயம்: வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுவ தற்கு முன் பயான் செய்வதற்கு இமாம் இல்லாத போது குர்ஆனுடைய ஒரு சூராவை ஓதிவிட்டு தொழுகையை நடத்தினால் அத்தொழுகை ஜும்ஆவாக நிறைவேறுமா? இஸ்மாயீல், தமாம். தெளிவு: குத்பாவுக்குப் பகரமாக குர்ஆனில் ஒரு சூராவை ஓதினால் அதுவே போதுமானது என்பதில் என்ன சந்தேகம்? நபி(ஸல்) அவர்கள் தமது ஜும்ஆவின் குத்பாவில் குர்ஆனுடைய சூராவை ஓதியிருப்பதாக பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

{ 0 comments }

இஸ்லாத்தின் இலட்சியம்: படைப்பின் ஒருமைப்பாடு! இஸ்லாமிய ஐக்கியமே “உம்மத்தன் வாஹிதா’ ஒன்றுபட்ட சமுதாயம்! முஹிப்புல் இஸ்லாம் இஸ்லாமிய ஐக்கியத்தின் முன்னோடிகள் மலக்குகள்! அல்லாஹ்வின் ஆணை மீறலே இஸ்லாம் விட்டு பிரிதல்! பிரிவு விஷம் விதைத்த இப்லீஸ், பிரிவுகளின் மூலவன்!

{ 0 comments }

பஷீர், புதுக்கோட்டை பார்வை : சமீபத்திய டெல்லி பாலியல் வன்முறைச் சம்பவம் தொடர்பான போராட்டமும், அதற்கு முன் நடந்த ஊழல் எதிர்ப்பு போராட்டங்களும் நமது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. டெல்லியில் நடந்த ஒரு பாலியல் பலாத்காரம் சர்வதேச அளவில் இந்தியாவிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கைகள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள்… இப்படி பல தரப்பினரும் கருத்துகளை பதிவு செய்து தம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். RSS பிரமுகர்கள், பெண்ணியவாதிகள் என்று பலரும் மரண தண்டனை கோரி கொடி பிடிக்கின்றார்கள். […]

{ 0 comments }

அன்றாட வாழ்வில் பலப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றோம். காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை இல்லை தூக்கமே வரவில்லை என்ற அளவிற்கு பிரச்சனைகள் நம் மனதை காயப்படுத்துகின்றன. குறிப்பாக வியாபாரப் பிரச்சனை, கடன் பிரச்சனை, தந்தையிடம் அல்லது தாயிடம் அல்லது மனைவியிடம், பிள்ளைகளிடம் என்று அடுக்கிக் கொண்டே போகின்றோம். சிறியப் பிரச்சனைகள் கூட பெரிதாகி அவ மானம் அடையும் நிலை மனம் நிம்மதியை இழந்து, பொறுமை என்னும் அற்புத ஆயுதத்தை கையில் எடுக்க முடியாததால் மகனுக்கும், தந்தைக்கும், […]

{ 0 comments }

S.N.K வேதனை மேல் வேதனை: உலகெங்கும் இஸ்லாத்தை ஏற்றதாய் பெயர் பண்ணிக் கொண்டு வாழும் பரம்பரை பெயர் தாங்கி முஸ்லிம்கள்! இஸ்லாத்தை ஏற்ற பெயர் தாங்கிகள் பெரும்பான்மையினர், இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாகக் கொள்ளவில்லை. இஸ்லாமிய முலாமில், இஸ்லாம் அல்லாத, இஸ் லாத்திற்கு நேர்முரணான வழிகேடுகளே, இஸ்லாமாக அரங்கேறி வருவதுதான் வேதனைக்கெல்லாம் வேதனையான வேதனை.

{ 0 comments }

MTM. முஜீபுதீன், இலங்கை ஜனவரி 2013 தொடர்ச்சி … அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரழி) கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் கஃபாவினருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது குறைஷிகள் தங்கள் சபையில் குழுமியிருந்தனர். “”இந்த முகஸ்துதி விரும்பியை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று அவர்களில் ஒருவன் கேட்டான். “”இன்னாருடைய (அறுக்கப்பட்ட) ஒட்டகத்தினருகில் சென்று அதன் சாணத்தையும் இரத்தத்தையும் மற்றும் கருப்பையையும் எடுத்து வந்து இவர் சஜ்தாச் செய்யும் வரை காத்திருந்து அதை இவரது இரு தோள் புஜத்திலும் போட்டுவிட உங்களில் யார் தயார்?” […]

{ 0 comments }

விபச்சாரத்திற்கு இட்டுச் செல்பவை என்ற வகையில் பின்வருவன விளக்கப்பட்டுள்ளன: அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருத்தல், சுதந்திரமாகப் பழகுதல். இது பற்றி நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்: “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.” (அஹ்மத்)

{ 0 comments }

MSD.சரஹ் அலி, உடன்குடி நாம் வாழும் இந்த பூமியில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். வாழ்ந்து மறைந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இவர்களிடையில் நிறத்தால், குணத்தால், உடல் அமைப்பால், அறிவால், மொழியால் இப்படி எத்தனையோ வித்தியாசங்கள் காணப்படுகின்றன. எவ்வளவுதான் வேறுபாடுகளையும், வித்தியாசங்களையும் மனிதர்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டாலும் இவர்கள் எல்லோருடைய மூலப்பொருள் ஒன்றுதானே. அந்த மூலப் பொருளான இந்திரியத்தில் எந்தவித வேறுபாட்டையும் காண முடியாதே! எல்லோருடைய இரத்தமும் ஒரே மாதிரிதானே இருக்கிறது. மனிதன் என்ற வட்டத்திற்குள்தானே எல்லோரும் இருக்கிறார்கள்; மனிதர்கள் […]

{ 0 comments }

மனிதன் பெற்றுள்ள அறிவு மிகமிக அற்பமானது என்று இறைவாக்கு பனூ இஸ்ராயீல்: 17:85 கூறுகிறது. ஆம்! தன்னை ஈன்றெடுத்த தாயையோ, தந்தையையோ சுயமாக அறிந்து கொள்ள முடியாத, அடுத்த வினாடி தனக்கு என்ன நடக்கும் என்பதையே அறிய முடியாத அற்பமான அறிவைத்தான் மனிதன் பெற்றிருக்கிறான். அவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஐம் புலன்களும் அற்பமானவையே! குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் கேட்க முடியாத, பார்க்க முடியாத, நுகர முடியாத, தொட்டறிய முடியாத, சுவைக்க முடியாத ஐம்புலன்களைக் கொண்டவனே மனிதன். கேட்டல், பார்த்தல், […]

{ 0 comments }