2013 மே

இப்னு ஹத்தாது இதோ இறைவனின் உறுதி மொழிகள் : தைரியத்தை இழக்காதீர்கள்; கவலைப்படாதீர்கள்; முஃமின்களாக இருப்பின் நீங்களே மேலோங்குவீர்கள். (3:139) நம் தூதர்களையும், நம்பிக்கையாளர்களையும் நாம் இவ்வாறே காப்பாற்றுவோம். முஃமின்களைக் காப்பாற்றுவது நம்மீது கடமையாகும். (10:103) இறை நம்பிக்கையாளர்களான அவர்களுக்கு உறுதியாக அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கிறான். (22:38) ……முஃமின்களுக்கு உதவுதல் நம்மீது கடமையாகும். (30:47)

{ 0 comments }

விமர்சனம் : ஜனவரி 2013 அந்நஜாத் இதழில் வெளிவந்துள்ள வட்டி-வங்கி-முஸ்லிம்கள்! சிந்தனைக்குரியதல்ல. பேராபத்தானது. அல்லாஹ்வும், அவனது தூதரும் வட்டியைப் பற்றி விளக்கிய பின் மாற்றுக் கருத்து கொள்ள எவருக்கும் அனுமதியில்லை. வங்கியில் வட்டியின்றி பணம் சேமிக்க கரண்ட் அக்கவுண்ட் வசதி உள்ளது. நிர்ப்பந்தம் என்ற நிலையானால் பல விஷயங்களை ஆதரிக்க வேண்டி வரும்.

{ 0 comments }

ஆள் அடையாளம் தெரியாமல் பெண்கள் முகத்தை மூடுவது அல்குர்ஆன் போதனைக்கு முற்றிலும் முரணானது – ஹராம்!                               அபூ அப்தில்லாஹ் இறை நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு (தூதரே) கூறும் : அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தங்களின் வெட்கத் தலங்களைப் பேணட்டும். அதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையானதாகும். அவர்கள் செய்பவற்றை இறைவன் மிக அறிந்தவன். (அந்நூர் : 24:30)

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் அம்பேத்கரை ஆதரிப்பது ஒவ்வொரு சுயமரியாதைக்காரரின் கடமை! -பெரியார் (17.11.1935) “குடி அரசு’ இதழில் எழுதிய தலையங்கம். எந்த விஷயத்துக்கும் கொள்கைகளுடன் அனுபவ ஞானமும் இருந்தால்தான் அதை மனிதத் தன்மை என்று சொல்லலாமே ஒழிய, மற்றபடி அனுபவ சாத்தியத்துக்கு இணங்காத கொள்கைகள் எதுவானாலும் அதைப் புஸ்தகப் பூச்சி என்று தான் சொல்ல வேண்டும்; அல்லது வெறும் அபிப்பிராயத்துக்கு மாத்திரம் பெறுமானவர்களே ஒழிய, காரியத்திற்குப் பெறுமானவர்கள் அல்ல என்று தான் சொல்ல வேண்டும்.

{ 0 comments }

 “குலா”  மூலம் மணவிலக்குப் பெற்ற பெண் மீண்டும்  அதே கணவனை மணப்பது கூடுமா? ஆத்தூர்.G.S சுல்தான்ஜி, காமராஜனார் சாலை, ஆத்தூர் (சேலம்) 9994112503 முதலில் “”குலா” என்பதற்கான விளக்கத்தை சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். கணவன், மனைவியருக்கிடையே ஏற்பட்டுவிட்ட பிணக்கைப் போக்கி சமாதானம் செய்து வைக்க முற்படும் இரு வீட்டார் சார்பான நடுவர்கள் சமாதானம் செய்து வைக்க முயலும் போது கணவன் சமாதானத்துக்கு முன்வந்த போதும் மனைவி அதை ஏற்காத நிலையில் கணவன்-மனைவி இருவரும் அல்லாஹ்வின் வரம்புக்குள் நிலைத் […]

{ 0 comments }

 டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம் கேப்டன் அமீருத்தீன் “”இஸ்லாமிய சமூக வாழ்வில் பலதாரமணம் சில குறிப்பிட்டச் சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள விதி என்பது சட்டவல்லுனர்கள் அனைவரின் ஒருமித்தக் கருத்தாகும். அதுவும் குறிப்பாக ஒரு குடும்பத் தலைவர் இறப்புக்கு பின் அவரது குடும்பம் ஆதரவற்று விடப்படும் தருணமே அந்த சூழ்நிலையாகும். குர்ஆனில் பலதாரமணம் ஒரு கட்டாய விதியல்ல; அப்படியே அது அங்கு ஊக்கப்படுத்தப்படவும் இல்லை. சாதாரணமாக அனுமதிக்கப்பட்ட ஒரு நடைமுறையே அது. நிபந்தனையுடன் குர்ஆன் அங்கீகாரம் அளிக்கும் பலதாரமணத்துக்கு சுயநலம் […]

{ 0 comments }

MTM. முஜீபுதீன், இலங்கை பிப்ரவரி 2013 தொடர்ச்சி … அபூஹுரைரா(ரழி) கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் காலை மினாவில் இருக்கும்போது, “”நாம் நாளை பனூ கினானாவின் பள்ளத்தாக்கை அடைவோம். அது குறைஷிகள் குப்ரின்(இறை நிராகரிப்பின்) மீது நிலைத்திருப்போம்” என்று சத்தியம் செய்த இடம் என்றார்கள். “”பனூ ஹாஸிமுக்கும் பனூ முத்தலிபுக்கும் எதிராக “”நபி(ஸல்) அவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும் வரை இவர்களோடு திருமண ஒப்பந்தமோ வியாபாரக் கொடுக்கல் வாங்கலோ செய்ய மாட்டோம்” என குறைஷி குலத்தாரும் […]

{ 0 comments }

இன்றைய அறிவியல் உலகில் மேல்நாட்டுக் கலாச்சாரத்தில் மூழ்கி இரண்டு கால் மனிதன் இரண்டு கால் மிருகமாக மாறி வருகிறான். இன்னும் நேரடியாகச் சொல்வதாக இருந்தால் மிருகங்களை விட கேடுகெட்ட நிலைக்கு இன்று மனிதன் ஆளாகியுள்ளான். இந்த உண்மையை இணை, துணை, இடைத்தரகர் இல்லா ஏகனான இறைவன் தனது இறுதி நெறிநூல் குர்ஆனின் அஃராஃப் : 7:175-179 இறைவாக்குகளில் உறுதிப்படுத்துகின்றான்.

{ 0 comments }

பஷீர், புதுக்கோட்டை மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத் தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நீங்கள் நல்லதை(ச் செய்ய) ஏவுகிறீர்கள். தீயதை விட்டும் தடுக்கிறீர்கள். இன்னும், அல்லாஹ் வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள், வேதத்தையுடை யோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண் டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும். அவர்களில் நம்பிக்கையாளர்களும் இருக்கின்றனர். எனி னும், அவர்களில் பலர் பாவிகளாகவே இருக்கின் றனர். (3:110)

{ 0 comments }