2014 ஏப்ரல்

ஐயம் : ஆண்கள் தலை முடியை வெட்டிக் கொள் வது போல் பெண்களும் வெட்டிக்கொள்ள இஸ்லாத் தில் அனுமதி உண்டா? ஹதீஃத் ஆதாரத்துடன் விளக்கம் தருக! முஹம்மத் அலி, சிங்கப்பூர் தெளிவு : அபூஸலமாபின் அப்துர்ரஹ்மான்(ரழி) அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் தமது தலை முடியைக் காது வரை வைத்து வெட்டிக் கொள்பவர்களாயிருந்தார்கள். (முஸ்லிம்)

{ 0 comments }

மங்களம் மைந்தன் தித்திக்கும் திருமறையாக இருக்கும் திருகுர்ஆனின் இரத்தினக் கருத்துக்களால் கவரப்பட்டு தினந்தோறும் கணக்கில்லா மக்கள் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறார்கள். சத்தியத்திற்கு சாட்சியளிக்கும் சபையில் சங்கமித்து, சத்தியக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மறுபக்கம் சமுதாய சமுத்திரத்தில் பலர், தங்களின் தவறான கருத்தோட்டத்தில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறான கருத்துக் குருடர்களாக நாடுகள் தோறும் நிறைந்திருக்கிறார்கள். திருகுர்ஆனைப் படித்தப் பிறகும் இஸ்லாத்தை விட்டும் தூரமாக ஒதுங்கியே நிற்கிறார்கள். சத்தியத்தின் ஒளியில் பயணத்தைத் தொடர்வதற்குத் தயங்குகிறார்கள். படைத்தவனுக்கு மட்டும் பணிந்து வாழவேண்டும் […]

{ 0 comments }

இப்னு ஹத்தாது மாயை என்றால் உண்மையில் இல்லாமல், இருப்பது போல் தோற்றம் மட்டும் அளிப்பதாகும். தமிழக முன்னாள் முதல்வர் திரு.C.N.அண்ணாத் துரை அவர்கள் “”ஆரிய மாயை” என்ற பெயரில் ஆரியர்களின் புரோகிதப் புத்தியை வெளிச்சம் போட்டுக் காட்டி இருந்தார். நாமும் முஸ்லிம் மதகுருமார்களின் புரோகித மாயையை வெளிச்சம் போட்டுக்காட்டி ஒரு நூலே வெளியிட்டிருந்தோம். வழிகேட்டில் இட்டுச் செல்லும் இம்மவ்லவிகளின் வசீகர, சூன்ய, உடும்புப் பிடியிலிருந்து விடுபடும் சகோதரர்கள் இயக்க மாயையிலிருந்து விடுபட முடியாமல் அதில் சிக்கிச் சீரழிந்து […]

{ 0 comments }

Y. அஜ்மல்கான், ஜெகதாப்பட்டினம், செல்: 8608735960 நாம் வாழும் சூழலில் மன அழுத்தம் (Depression) பெறாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு உள்ளம் அமைதியை இழந்து விட்டது. இதனால் நரம்பியல் சம்பந்தமான நோய்கள், இருதயம் சம்பந்தமான நோய்கள், தாம்பத்ய நோய்கள் ஏற்படுகிறது. மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க ஒரு முஃமின் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த ஆக்கத்தின் நோக்கம். அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் உள்ளவர்கள் இயற்கைக்கு முரணான குடும்ப உறவுகளால், குடும்ப உறவுகள் […]

{ 0 comments }

ராசிக், திருச்சி. புகை வாழ்வுக்குப் பகை! ஆலைகளிலிருந்து வெளியாகும் புகையை வெளியேற்ற உயரமான புகைப் போக்கிகள் வைத்திருப்பார்கள். அதன் உட்புறச் சுவர் கருப்படைந்து காணப்படும். 15% புகை மட்டுமே உள்ளே படிந்திருக்கும். 85% புகை காற்றில் கலந்து காற்று மாசுபட்டுச் சுற்றுச் சூழல் பாதிக்கும். முதலாளிகள் சுகமாக வாழ சாமானியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதே போல் பீடி, சிகரெட் போன்ற புகை பிடிப்பவர்களுக்குப் புகை போக்கிகள் என்று பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும். புகைப் பிடிப்பதால் உடலில் உட்புற […]

{ 0 comments }

பிப்ரவரி 2014 தொடர்ச்சி…. M.T.M. முஜீபுதீன், இலங்கை நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண் மக்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக. அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக அன்புடை யவன். (அல்குர்ஆன் : 33:59) மனிதர்கள் உடை அணிவது இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஆபாசங்களைத் தவிர்ப்பதற்காக வும், அந்நிய ஆண்களின் துன்புறுத்தலிலிருந்து பெண்கள் தம்மைப் […]

{ 0 comments }

அன்புள்ள சகோதரர்கள் / சகோதரிகளுக்கு, அபூ அப்தில்லாஹ் எழுதியது, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உங்களின் உடல் நலத்திற்கும், பொருள் வளத்திற்கும், ஈமானின் உறுதிக்கும் துஆ செய்கிறோம். நீங்கள் தொடர்ந்து அந்நஜாத் மாத இதழைப் படித்து வருவதால், அதுவும் குர்ஆன் மொழி பெயர்ப்பையும் பக்கத்தில் எடுத்து வைத்துக் கொண்டு அந்நஜாத்தில் இடம் பெறும் வசனங்கள் அனைத்தையும் நேரடியாக குர்ஆனில் பார்த்துப் படித்து வருவதால், 6:153 இறை வாக்குக் கூறும் சுவர்க்கத்தின் ஒரே நேர்வழியையும், நரகத்தின் கணக்கில் அடங்காத எண்ணற்றப் […]

{ 0 comments }

ஐந்தாண்டுகளுக்கொரு முறை வழமையாக வரும் தேர்தல் திருவிழா தமிழகத்தில் 2014 ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற இருக்கிறது. நாட்டை ஆள்வதற்கான திறமையுள்ள தகுதியுள்ளவர்களை முறையாகத் தேர்ந்தெடுக்கும் ஒரு நிகழ்வல்ல இது! மக்களிலேயே ஆகக் கேடு கேட்டவர்கள் மக்களின் பொன்னான வாக்குகளை அற்பக் காசுக்கு வாங்கிக் கொண்டு மக்கள் மன்றத்தில் நுழைந்து உள்ளே அராஜகங்கள் அட்டூழியங்கள் தினசரி செய்ய வாய்ப்பளிக்கும் தேர்தல். நடுத்தர, ஏழை மக்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டு, மக்கள் சொத்தைக் கபளீகரம் செய்து பகல் கொள்ளையடித்து, […]

{ 0 comments }

ஆதி அந்தம், தாய் தந்தை, மகன், ஈடு, இணை, துணை, தேவை,இடைத்தரகு, புரோகிதர்களின் பரிந்துரை என எந்தத் தேவையுமில்லாத ஏகன் அல்லாஹ்வின் தனிப்பெரும் கிருபையைக் கொண்டு, அந்நஜாத் தனது இஸ்லாமிய இலட்சியப் பணியில் 28 ஆண்டுகளை முடித்துக்கொண்டு 29ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எல்லாப் புகழும் அந்த வல்லோன் அல்லாஹ்வுக்கு மட்டுமே! அல்ஹம்துலில்லாஹ்.

{ 0 comments }