2019 மார்ச்

அந்நஜாத் மார்ச் 2019 ஜ.ஆகிர்-ரஜப் 1440 தலையங்கம்!  வர்த்தகப் பிரச்சனை! உலகிலுள்ள அத்தனை நாடுகளுமே சில்லறை விற்பனையிலிருந்து பெரும்பெரும் வர்த்தகம் வரை பற்பல வணிகங்களில் பயன் அடைந்து கொண்டிருப்பது உண்மை! அதிலும், குறிப்பாக நாடுகளுக்கிடையிலான ஏற்றுமதி இறக்குமதி துறையில், பல நாடுகள் அதிக அளவில் பயன் அடைந்து வருவது நிதர்சனமான உண்மை. இத்துறை யில் ஏதேனும் பிரச்சனை உருவாகுமேயானால், சிக்கலைத் தீர்க்க இயன்ற அளவு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்றி யமையாத தேவையாக உணரப்பட வேண்டும். இதுதான் வர்த்தகத்தில் […]

அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா? குர்ஆன் விளக்கம்-1 கு. நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள் (இதன்முலம்) இறைவன் உங்களை நேசிப்பான். உங்களுக்காக உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன், நிகரில்லா அன்புடையவன் என்று (நபியே) நீர் கூறுவீராக! ஆல இம்ரானுடைய 31வது வசனம் இது: இந்த வசனம் என்ன சொல்ல வருகிறது என்பதை அதை படித்த மாத்திரத்தில் “பளிச்’ சென்று புரிந்துக் கொள்ளலாம். ஆனால் புரிகிறது என்று சொல்லி ஒதுங்கிக் கொள்ளும் வசனம் […]

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம். தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. திக்ரின் […]

M.T.M. முஜீபுதீன், இலங்கை 2019 பிப்ரவரி தொடர்ச்சி….. உதாரணமாக ஒரு மனிதன் தமது மனைவி சிறு பிள்ளைகளை விட்டு தூரப் பிரதேசம் ஒன்றுக்கு செல்கிறான் என வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தனது சகோதரரிடம் ஒரு கோடி ரூபாயை வழங்கு கிறான். தனது கால்நடைப் பண்ணையையும், விவசாய நிலங்களையும் அவனிடம் ஒப்படைக்கிறான். பின் தனது சகோதரரிடம் எனது பணத்தில் 97.5 சதவீதத்தினை நீ உனது தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள். ஆனால் அப்பணத்தில் 2.5 சதவீதத்தை எனது குடும்பச் செலவுகளுக்காக […]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? ஆய்வுத் தொடர் – 12 அபூ அப்தில்லாஹ் 2019 பிப்ரவரி தொடர்ச்சி….. உதாரணமாக : 12:51 வசனத்தின் இறுதியில் அஜீஸுடைய மனைவி இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான்தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சயமாக அவர் உண்மையாளர் களில் உள்ளவர்” என்று கூறினாள், என்று முடிவுற்றபின், 12:52 வசனத்தில் “இதன் காரணம் நிச்சயமாக அவர் (என் எஜமானர்) இல்லாதபோது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து […]

மர்யம்பீ, குண்டூர், ஈமானின் அம்சங்கள் எத்தனை? 1. அல்லாஹ்வை நம்புவது, 2. மலக்குகளை நம்புவது 3. வேதங்களை நம்புவது (இது வேத கட்டளைகளை செவியேற்று, கட்டுப்பட்டு மன்னிப்பு கேட்டு இறைவனிடமே மீள வேண்டும் என்று நம்புவது) 4. ரசூல்மார்களை நம்புவது,(அவர்களுக்கிடையே வேற்றுமை காணக்கூடாது என நம்புவது) 2:285 மனநிம்மதி அடைய எந்த மூன்றை நம்ப வேண்டும்? அல்லாஹ்வை நம்புவது, மறுமையை நம்புவது, விதியை நம்புவது. மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு என்ன தேடுகின்றனர்? உலகில் உள்ளவர்களுக்காக […]

S.H. அப்துர் ரஹ்மான் பகலின் இரு முனைகளிலும் (காலை, மாலை) இரவு சிறிது கழிந்த நேரத்திலும் தொழுகையை நிலைநாட்டுவீராக. நிச்சயமாக நன்மைகள் பாவங்களை போக்கிவிடும். (11:144) மேற்கண்ட குர்ஆன் வசனம் தொழுகையின் அவசியத்தை உணர்த்துகின்றது. இவ்வளவு தெளிவாக்கப்பட்ட கடமையை நாம் சரிவர பின்பற்றுவதில்லை. நபி(ஸல்) அவர்கள் ஒருநாள் தொழு கையை குறித்து உரை நிகழ்த்தினார்கள். அப்போது பின்வருமாறு கூறினார்கள். எவர் தம் தொழுகையைச் சரியான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு அவரது தொழுகை இறுதித் தீர்ப்பு நாளில் […]

 M.A. ஹனிபா, பொட்டல்புதூர் அமர் பின் ஸலாமா(ரழி) அறிவிப்பது : வாகனத்தில் பயணிப்பவர்கள் (அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று, இறை வேதமான குர்ஆனைக் கற்றுக் கொண்டு திரும்புகையில்) எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களிடமிருந்து நாங்கள் குர்ஆனைக் கற்றுக்கொள்வோம்.என் தந்தையும் நபி (ஸல்) அவர்களிடம் செல்வார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், (அல்லாஹ்வின் வேதமான) “குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த வரே உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்று கூறினார்கள். பின்னர் என் தந்தை (எங்களிடம்) வந்து […]

கா.அ. பழுலூல் இலாஹி இஸ்லாத்தில் குறித்த காலத்தில் செய்யவேண்டிய வணக்க வழிபாடுகளின் நேரங்களை சூரிய, சந்திர ஓட்டங்களின் அடிப்படையில் அமைத்து தரப்பட்டுள்ளது. “சூரியனும், சந்திரனும் (அவைகளுக்கு இறைவன் ஏற்படுத்திய) கணக்கின்படியே இயங்குகின்றன” என்கிறது அல்குர்ஆன் 55:5வது வசனம். எனவே காலத்தைக் கணக் கிட முஸ்லிம்கள் சூரியனையும், சந்திரனையும் பயன்படுத்தி வருகிறார்கள். இருந்தாலும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் காலத்தைக் கணக்கிட, முஸ்லிம்கள் சந்திரனை மட்டும்தான் பயன்படுத்தி வருகிறோம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தினமும் தொழ வேண்டிய ஐங்காலத் தொழுகைகளுக்கான நேரங்களை […]