2021 நவம்பர்

தலையங்கம்! உலக பட்டினி குறியீடு… சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், உலக பட்டினி குறியீடு குறித்த அறிக்கையை ஆண்டுதோறும் வெளி யிட்டு வருகிறது. இந்த அறிக்கை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான 1. ஊட்டச்சத்து குறைபாடு, 2. வயதுக்கேற்ற எடை இல்லாமல் இருத் தல், 3. உயரம் இல்லாமல் இருத்தல் மற்றும், 4.குழந்தைகளின் உயிரிழப்பு ஆகிய முக்கிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. 2020ஆம் ஆண்டு 107 நாடுகளுக்கான பட்டியலில் 94வது இடத்தில் இருந்த இந்தியா, […]

  கடமையான மார்க்கப் பணிக்கு கூலி கூடாது ஏன்? K.M.H.  அபூ அப்தில்லாஹ் மிகமிக உயர்ந்த பதவியிலிருந்த அஜா ஜீல் தன்னுடைய ஆணவத்தின் காரணமாக இறைவனால் சபிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டான். ஷைத்தான், இப்லீஸ் என மிக மிக இழிவான பெயர்களைப் பெற்றான். மனித குலத் தந்தையான எந்த ஆதம்(அலை) அவர்கள் காரணமாக இந்த இழிநிலைக்கு ஆளானானோ அந்த ஆதத்தின் சந்ததிகளை வழிகெடுத்து அவர்களை நரகில் தள்ளி, நரகை நிரப்புவதாக சபதம் செய்தான். எல்லாம் வல்ல இறைவன் அவனுக்கு யுக […]

கோணல் வழிகளை போதிப்பவர்கள் யார்? எஸ். முஹம்மது ஸலீம்,  ஈரோடு (நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு சமுதாயம் (மக்களை) நன்மையின் பக்கம் அழைத்து, நன்மையைச் செய்யும்படி ஏவி, தீமையிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கட்டும். இத்தகையவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.   (குர்ஆன் 3:104) மறுமையில் வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் நன்மையை ஏவி, தீமைகளை தடுக்கும் பணியை கட்டாயமாக செய்தாக வேண்டும் என்று மேற்கண்ட வசனத்தின் வாயிலாக அறிய முடிகிறது. நன்மை என்றால் என்ன? தாமும் தொழுது, […]

எரிகற்களால் (METEOR)  அழிக்கப்பட்ட  மானக்கேடான சமுதாயம்… எஸ். ஹலரத் அலி,  திருச்சி எரிகற்களால் அழிக்கப்பட்ட மானக்கேடான சமுதாயம். அல்குர்ஆன் நிரூபிக்கும் அறிவியல் சான்று! நமக்கு முன் வாழ்ந்த எத்தனையோ மக்கள் சமுதாயங்களை, அவர்களின் அக்கிரமத்தின் காரணமாக அல்லாஹ் அழித்திருக்கிறான். அவர்களின் அழிவுக்கான காரணங்களை நமக்கு படிப்பினையாக அல்குர்ஆனில் சொல்லிக் காட்டுகின்றான். அப்படி அழிக்கப்பட்ட ஒரு சமுதாயமே லூத் நபி அவர்களின் சமுதாயம். நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் சம காலத்தில் வாழ்ந்தவர்தான் லூத் (அலை) அவர்கள். இன்றைய ஜோர்டான் பள்ளத்தாக்கு அருகிலிருந்த […]

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறைநூலை! சரஹ் அலி உங்கள்  மீதும்  உங்கள்  குடும்பத்தினர் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். படைத்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். படைத்த ஏக இறைவன்  பெயரால்…. அறிந்தவரும் அறியாதவரும் சமமா? (நபியே!) “அறிந்தவரும் அறியாதவரும் சமமாவார்களா?”  என்று  நீர்  கேட்பீராக,  அறிவுடையோர்தான்  படிப்பினை  பெறுபவர். (இறைநூல்: 39:9) உங்களை மறந்துவிட்டு… உங்களை மறந்துவிட்டு, நன்மை செய்யுமாறு மக்களை ஏவுகிறீர்களா? நீங்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? (இறைநூல்: 2:44) மறுமை நாளில் […]

நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர்,   நிந்தாவூர். அக்டோபர் மாத தொடர்ச்சி….. அத்தகைய, “நிராகரிப்பாளர்களின் நற்செயல்களை காற்றால் பரப்பப்பட்ட சாம்பலுக்கு ஒப்பிட்டு உதாரணம் கூறுதல்?” தமது இறைவனை ஏற்க மறுத்தோரின் செயல்களுக்கு உதாரணம் சாம்பலாகும். புயல் வீசும் நாளில் கடுமையான காற்று அதை வீசியடிக்கிறது. அவர்கள் திரட்டிய எதன் மீதும் சக்தி பெறமாட்டார்கள். இதுவே (உண்மையிலிருந்து) தொலைவான வழிகேடாகும். (14:18) “நிராகரிப்பாளர்களின் நற்செயல்களைக் கானல் நீருக்கு உவமானமாக அல்லாஹ் குறிப்பிடுதல்” (ஏக இறைவனை) மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் […]

நாம் முஸ்லிம்களே! முஹம்மத் மதார், அபுதாபி “முஸ்லிமீன்” “அவனுக்கு யாதோர் இணையுமில்லை” இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன். (இறைவனை) வழிப்பட்டவர்களில் (முஸ்லிம்களில்) நான் முதன்மையானவன் (என்றும் கூறும்) (அல்குர்ஆன் 6:163) “எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?” என்று கூறி “எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக! முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்களைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” (எனப் பிரார்த்தித்தனர்)  […]

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : இஸ்லாமிய திருமணங்களில் நிக்காஹ் ஒப்பந்தம் முடிந்தவுடன் தாலி என்று கருகமணியில் கட்டுகிறார்கள். காலில் மெட்டியும் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு வாரம் கழித்த பின் நீராட்டுகிறார்கள். இது கிட்டத்தட்ட அந்நியர்கள் (காஃபிர்கள்) செய்வதைப் போன்று தெரிகிறது. உண்மையான நிலையை உங்கள் சொந்த கருத்தின்றி ஹதீதில் அடிப்படையில் சொல்லவும். M. ஜாபர் அலி தெளிவு : இஸ்லாத்துக்கும், தாலிக்கும் சம்பந் தமில்லை. “பாத்திமா நாயகி தாலி கட்டி னார்கள்’ என்று ஒரு பொய்யைச் சொல்லிக் கொண்டு நம்மவர்கள் அதை […]