வலப்புறத்தை முற்படுத்துங்கள்!  K.S.H.அபூஅப்தில்லாஹ்  அல்லாஹ் படைத்த அத்தனைப் படைப்பினங்களும் பொருள்களும் இரண்டு இரண்டாகவே உள்ளன. படைப்பில் சிறந்தவனாகிய மனிதனையும் ஆண், பெண் என ஜோடியாகவே படைத்துள்ளான். இதையே “”நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி, ஜோடியாகப் படைத்தோம்‘ அல்குர்ஆன் 51:49 என்று அல்லாஹ் கூறுகிறான். இப்படி ஜோடி, ஜோடியாகப் படைத் ததில் ஒவ்வொன்றிலும் வலது, இடது என இரு புறங்களையும் அமைந்திருக்கின்றான். மனிதனின் அவயங்களும் வலது இடதாகவே உள்ளன. மனிதன் சுற்றித் திரிந்து சுதந் […]

பொறுமையாளர்களின் சிறப்புக்கள்!  எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.  மே  மாத  தொடர்ச்சி…. அபூசினான்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: இறந்துபோன எனது மகன் சினானை நான் அடக்கம் செய்தேன். அப்போது கப்ரில் இருந்த என்னை அபூதல்ஹா அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் எனது கையைப் பற்றித் தூக்கி வெளியேற்றிவிட்டு “நான் உமக்கு ஒரு நற்செய்தி சொல்லட்டுமா?’ என்று கேட்டார்கள் நான் சரி சொல்லுங்கள் என்றேன் அவர் கூறினார். ஓர் அடியாரின் குழந்தை இறந்துவிட்டால் அல்லாஹ் உயிரைப் பறிக்கும் வானவரை அழைத்து மரணத்தின் வானவரே! […]

வணக்கத்திற்குரியவன்… அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை!  அப்துல் ராஸிக்  உலகத்தில் அல்லாஹ் மனிதனுடைய சிந்தனையில், மனிதனுடைய பார்வையில், அவன் இதயத்தில் அகிலலோகங்களையும் அவற்றிலுள்ளவற்றையும் படைத்திருக்கின்ற படைப்பாளன் அவன் ஒருவன் தான் என்பதை ஆக்கிவிட்டான். வானமும், பூமியும் உலகத்தில் உள்ளவை அனைத்தும் படைப்பாளன் அவன் ஒருவன் தான் என்று சாட்சியளிக்கின்றன. இது எல்லா மனிதனுடைய சிந்தனையிலும் இருக்கிறது. ஆனால் அவன் ஒருவன்தான் என்பதை இந்த உலகத் தில் நிலை நாட்டுகின்ற பாக்கியம், அவன் ஒருவன் தான் என்பதை இந்த உலகத்தில் […]

அறிந்து கொள்வோம்!  மர்யம்பீ, குண்டூர்  1. எந்த கலீஃபாவின் ஆட்சிக் காலத்தில் அல்குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது? உஸ்மான் (ரழி) 2. நபி(ஸல்) அவர்களின் ஹதீத்களை அதிகமாக அறிவிப்பு செய்த நபி(ஸல்) அவர்களின்  மனைவி  யார்? ஆயிஷா(ரழி) 3. திக்ருகளில் சிறந்தது எது என்று நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்? லாயிலாஹா  இல்லல்லாஹ் 4. ஆரம்பகால ஸஹாபாக்கள் தஞ்சம் புகுந்த நாடு  எது? அபீஸீனியா 5. தொழுகையில் அவசியம் ஓத வேண்டிய சூரா எது? அல்ஃபாத்திஹா 6. தீயோர்களின் […]

விமர்சனம்! விளக்கம்!!  விமர்சனம் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! அன்பு அந்நஜாத் ஆசிரியர் அவர்களுக்கு, முஹம்மது இக்பாலின் அஸ்ஸலாமு அலைக்கும்! அந்நஜாத் மே மாத இதழ் கண்டேன். அன்று அல்லாஹ்வுடைய பள்ளி இன்று சுன்னத் வல்ஜமாஅத் பள்ளி என்ற கட்டுரை (பக்கம் 23) அபூ உவைஸ் என்ற சகோதரரால் அற்புதமாக எழுதப்பட்டிருந்தது. மவ்லவிகள் என்ற மத புரோகிதர்களின் சூழ்ச்சிகளைப் பற்றி அதில் தெளிவாக்கப் பட்டிருந்தது. அக்கட்டுரையை எழுதிய சகோதரர் அவர்களுக்கு அல்லாஹ் மார்க்க அறிவை விசாலப்படுத்த அல்லாஹ்விடம் வேண்டுகிறேன். […]

தலையங்கம் : தேர்தலுக்கு இயக்க பிரச்சாரம் செய்யப்போகும் இளைஞர்களே! தேர்தலுக்கு இயக்க பிரச்சாரம் செய்யப்போகும் இளைஞர்களே! மக்களுக்கு மார்க்க பிரச்சாரம் செய்யப்போவது எப்போது?  அன்பு சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும். இறைச்செய்தி 23:52 வசனத்தின் அடிப்படையிலான ஒரே சமுதாய அமைப்பான இஸ்லாமிய மார்க்கத்தை பிரச்சாரம் செய்யப் போகின்றீர்களா?  அல்லது அல்குர்ஆன் 3:105 வசனத்தின் எச்சரிக்கை யான இயக்கங்கள், மத்ஹபுகள், தரீக்கா போன்ற வழிகெட்ட பிரிவினை மதமாகிய போலி இஸ்லாமிய மதத்தை பிரச்சாரம் செய்யப் போகின்றீர்களா? எதைப் பற்றிப் பிரச்சாரம்  […]

சோதனைகளின் நோக்கங்கள்! அபூ இஸ்ஸத், இலங்கை ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதற்காகவே இருக்கிறது; “பரீட்சைக் காக‘ கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர் கள். (21:35) பிறந்தவன் ஒருநாள் இறக்கத் தான் வேண்டும் இந்த பொது விதியிலிருந்து யாருக்கும் விதிவிலக்கு இல்லை இடைப்பட்ட காலத்தில் “பரீட்சைக்காக‘ சோதனைகள் உண்டு; இதுகுறித்து இமாம் ஷாஃபிஈ(ரஹ்) அவர்கள் பின்வரும் கவிதை வரிகளை எடுத்துக்காட்டாகக்  கூறியுள்ளார்கள். எனது இறப்பைச் சிலர் எதிர்பார்க்கின் றார்கள்; நான் […]

உறவுகளை பேணிக்கொள்ளுங்கள்… அன்சர் ய­ரீப் பின் R.A.மாலிக் மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் தமக்குரிய உரிமை களைக் கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் உங்கள் இரத்தக் கலப்புடைய உறவினர் களையும் ஆதரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள்  மீது […]

பிறந்தநாள் விழா! புத்தாண்டு விழா! ஐய்யம்பேட்டை நஜ்முதீன்  2023ம் புத்தாண்டு தொடங்கி 3 மாதங் கள் கடந்துவிட்டது, அதுபோல் ஹிஜ்ரி 1444ம் ஆண்டு  முடிந்து இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1445ஆம் ஆண்டு வர இன்னும் 3 மாதங்களே  உள்ளன. புத்தாண்டையும், பிறந்த நாளையும் உலகம் முழுவதும் பெரும்பாலோர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவதையும், அன்றைய தினம் பல ஆயிரம் கோடி செலவு செய்வதையும்  பார்க்கின்றோம். உண்மையிலேயே  இது  மகிழ்ச்சியான  நாளா?  சுமார் 1990ஆம் ஆண்டு வரை எதையும் இலகுவாக […]

ரமழான், ஈத் சிந்தனை! K.M.H.அபூ அப்தில்லாஹ்  21ம் நூற்றாண்டின் இக்கால கட்டத்தில், உலகளாவிய அளவில் முஸ்லிம்களுடைய நிலை கவலை தரத்தக்கதாக இருக்கிறது. முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கும் நாடுகளில் அவர்கள் துன்புறுத்தப்படுவதும், அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதும் தினசரி நிகழ்ச்சிகளாக இருப்பது ஒருபுறம் இருக்க இன்னொருபுறம் முஸ்லிம் நாடுகளிலேயே முஸ்லிம்கள் பல பிரிவினர் களாகப் பிரிந்து ஒருவரோடொருவர் முட்டி மோதிக் கொண்டு இரத்தம் சிந்திக் கொண்டிருப்பதும் அன்றாடம் ஊடகங்கள் மூலம் அறியும் அவலங்களாகும். பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ் தான் முஸ்லிம் […]

பிறைகளைக் கணக்கிடுவதற்கான குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள்!! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.  2023  மார்ச்  தொடர்ச்சி… அய்யாமுல் யபீழ் எனும் 13,14,15 ஆகிய (நிலவு பிரகாசிக்கும் வெள்ளை) நாட் களில் நோன்பு வைக்குமாறு எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : கதாதா இப்னு மில்ஹான்(ரழி) ரியாளுஸ் ஸாலிஹீன் 1263, அபூதாவூத்:2449) மேலும், அல்லாஹ்வின் “”அய்யாமுல் யபீழ் (எனப்படும் நிலவு பிரகாசிக்கும் 13,14,15 ஆகிய வெள்ளை நாட்களில்) நோன்புகளை விடமாட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல் லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) […]

ஏக இறைத்தன்மையும்! ஏக இறைவணக்கமும்! S.H. அப்துர் ரஹ்மான் ஏக  இறைத்தன்மை! அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அந்த இறைவனின் திருப்பெயரால்  துவங்குகிறேன். தூதரே! நீர் சொல்லுங்கள், அந்த இறைவன் ஒருவன் மட்டுமே. அந்த ஒரே இறைவன் எந்த தேவையும் இல்லாதவன். அந்த இறைவன் (எவரையும்) பெறவு மில்லை; எவராலும் பெறப்படவுமில்லை.  அவனுக்கு பெற்றவர்களோ, குழந்தைகளோ இல்லை; அன்றியும், அந்த  ஒரே இறைவ னுக்கு  நிகராக  எவரும்  இல்லை.  (112:1-4) ஏக இறைவனை மட்டும் வணங்குவது எப்படி […]

அல்லாஹ்வின் அருளும் கிருபையுமாகிய அல்குர்ஆன்! N. அலி, கல்லிடைக்குறிச்சி ஏக  இறைத்தன்மை! முஸ்லிம்களாக வாழக்கூடிய நாம் அல் லாஹ்வின் அருளையும், கிருபையும் மன தார விரும்புகிறோம். அதேசமயம் அதை பெறுவதற்கு நம்முடைய செயல்பாடுகளில் முறையான முயற்சி இல்லை நம்முடைய வாழ்க்கை நடைமுறையில் அல்லாஹ்வின் அருளையும், கிருபையையும் மிக தூரமாக வைத்து அழகு பார்க்கின்றோம். அல்லாஹ் வின் அருளும், கிருபையும் முஸ்லிம்களின் கைகளில்தான் இருக்கிறது. ஆம்! முஸ்லிம் களின் வீடுகளில் பாதுகாப்பு பெட்டகங் களில் பொக்கி­மாக பூட்டி வைக்கப்பட்டி […]

அன்று அல்லாஹ்வுடைய பள்ளி!  இன்று சுன்னத்வல் ஜமாஅத் பள்ளி! அபூ உவைஸ் ஹஜ்ரத்மார்களை கண்மூடி பின்பற்றி அவர்களுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு இருக்கும் எனது அருமை சமுதாயத்தவர் களே! என்று உண்மையை உணரப் போகிறீர் கள்? அன்று அல்லாஹ்வின் இல்லமாம் பாபரி மஸ்ஜித் தரைமட்டமாக்கப்பட்டது. ஒருமித்த குரலில் இறை இல்லம் தகர்க்கப் படுகிறது என நாம் அனைவரும் ஆர்ப்பரித் தோம். இன்னுயிர் பல ஈந்தோம். எனினும் ஒரே இறைவனை மட்டும் வணங்கக் கட்டப்பட்ட வல்ல அல்லாஹ்வின் பள்ளி வாசல் […]

மார்க்கம் மிக மிக எளிதானது!  நூருல் அமீன் இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங் களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்த வில்லை.  (அல்குர்ஆன் 22:78) அல்லாஹ் இவ்வசனத்தில் இஸ்லாத் தில் எந்தவித சிரமத்தினையும் ஏற்படுத்த வில்லை என்று கூறுகின்றான். மனித சமுதா யம் மிகவும் சுலபமாக பின்பற்றக் கூடிய ஒரு அழகிய வாழ்க்கை நெறியினை தான் அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இஸ் லாத்தில் மிக முக்கியமான கட்டாய கடமை யான தொழுகை, நோன்பு, ஹஜ்ஜு, ஜகாத் போன்றவற்றை […]

பொறுமையாளர்களின் சிறப்புக்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.  பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் : இறைநம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்ச யமாக அல்லாஹ் பொறுமையுடையவர் களுடன் இருக்கின்றான். 2:153,45 இந்த வசனங்களின் மூலம் சோதனைகளைத் தாங்கிக் கொள்வதற்கு ஏற்ற வழி! பொறு மையும், தொழுகையும் ஆகும் என்பதை அல்லாஹ் இங்கு விவரிக்கின்றான். அதனால்தான், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனையால் துக்கம், துயரம், ஏற்படுமானால் உடனே தொழுகைக்கு விரைந்து செல்வார்கள். (ஹுதைஃபா பின் […]

தலையங்கம் : இயக்க போதையில் இஸ்லாமிய இளைஞர்கள்! இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் ஏதாவது ஒரு இயக்க போதையில் வீழ்ந்து விடாமல் அவர்களை சத்திய இஸ்லாத்தில் நிலைபெறச் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். தற்போது உள்ள கால சூழலில் குழப்பமான இந்த காலகட்டத்தில் இஸ்லாத்தின் பெயரால் பல இயக்கங்கள் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டு அழகிய வார்த்தைகளைக் கொண்டு அல்லாஹ்வுடைய வேதத்தைக் கொண்டு மக்களை அழைக்கிறார்கள்.  ஆனால் அப்படி அவர்களைப் பின்பற்றி செல்லும்பொழுது தனது இயக்கத்தின் அடிமைகளாக அந்த இளைஞர்களை மாற்றுகிறார்கள். […]

முஸ்லிம்களே ஒன்றுபட்டு! ஒரே அமீரின் கீழ் செயல்படுவோம் வாருங்கள்! அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) 1444 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ்வின் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்கள் அமைத்து, நடத்திக்காட்டி, நமக்காக விட்டுச் சென்ற “ஜமாஅத்துல் முஸ்லிமீன்‘ சமூக அமைப்பில் முஸ்லிம்கள் தங்களுக் கிடையேயுள்ள வேற்றுமைகளை மறந்து இணைந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அதுபற்றிய தெளிவுகளை 1991 வருடங்களில் அந்நஜாத்தில் வெளியிட்டிருந்தோம். மறந்துவிட்ட சகோதர சகோதரிகள் மீண்டும் உணர்வு பெற அக்கட்டுரையை மீண்டும் இந்த இதழில் இடம் […]

இஸ்லாமிய மற்றும் கிறித்துவ ஒற்றுமை ஓங்கட்டும்! அஹமது இப்ராஹிம் நமது தமிழ்நாட்டைப் பொறுத்த வரை நல்ல நண்பர்களாக இருந்த, இருக்க வேண்டிய கிறித்துவ சகோதரர்களை தங்கள் இயக்கத்தை வலுப்பெற வைக்க இயக்க வெறிபிடித்த புரோகிதர்கள் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தூண்டு வதற்காக வேண்டுமென்றே விவாதம் என்ற பெயரில் மார்க்கத்திற்கு விரோதமாக கிறித்தவர்களை வம்புக்கிழுத்து விவாதித்து முஸ்லிம்களுக்கு விரோதியாக்கியது போதாதா? ஏற்கனவே பயங்கரவாத பா.ஜ.க. ஆட்சியில் கிறித்துவர்களும், முஸ்லிம்களும் சொல்லொண்ணா துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம். இதில் இரு […]

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு! K.M.H. .அபூ அப்தில்லாஹ் இன்று இஸ்லாமிய சமுதாயத்தின் பெரும் பகுதியினர் “தக்லீத்‘ என்ற பெயரில் மரியாதைக்குரிய நான்கு இமாம்களைப் பின்பற்றுவதாக நம்பிக்கொண்டு, குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முரணானவற் றையும் மார்க்கமாகக் கருதிச் செயல்பட்டுக் கொண்டு வழிதவறிச் செல்வதால், “தக்லீத்‘ தைப் பற்றிய விவரங்களை இக்கட்டுரையில் ஆராய்வோம். குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முரண்பட் டிருப்பவை மார்க்கமாகி விட்டதற்கான முக்கிய காரணங்களை நாம் கவனிப்போம். பரீட்சையில் “காப்பி‘ அடிப்பதே “தக்லீத்‘! அவர்கள் சொல்லைக் கேட்டு, அவற்றில் அழகானதைப் பின்பற்றுவார்கள்; அல்லாஹ் […]