கடமையான மார்க்கப் பணிக்கு கூலி கூடாது ஏன்? K.M.H.  அபூ அப்தில்லாஹ் மிகமிக உயர்ந்த பதவியிலிருந்த அஜா ஜீல் தன்னுடைய ஆணவத்தின் காரணமாக இறைவனால் சபிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டான். ஷைத்தான், இப்லீஸ் என மிக மிக இழிவான பெயர்களைப் பெற்றான். மனித குலத் தந்தையான எந்த ஆதம்(அலை) அவர்கள் காரணமாக இந்த இழிநிலைக்கு ஆளானானோ அந்த ஆதத்தின் சந்ததிகளை வழிகெடுத்து அவர்களை நரகில் தள்ளி, நரகை நிரப்புவதாக சபதம் செய்தான். எல்லாம் வல்ல இறைவன் அவனுக்கு யுக […]

கோணல் வழிகளை போதிப்பவர்கள் யார்? எஸ். முஹம்மது ஸலீம்,  ஈரோடு (நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு சமுதாயம் (மக்களை) நன்மையின் பக்கம் அழைத்து, நன்மையைச் செய்யும்படி ஏவி, தீமையிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கட்டும். இத்தகையவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.   (குர்ஆன் 3:104) மறுமையில் வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் நன்மையை ஏவி, தீமைகளை தடுக்கும் பணியை கட்டாயமாக செய்தாக வேண்டும் என்று மேற்கண்ட வசனத்தின் வாயிலாக அறிய முடிகிறது. நன்மை என்றால் என்ன? தாமும் தொழுது, […]

எரிகற்களால் (METEOR)  அழிக்கப்பட்ட  மானக்கேடான சமுதாயம்… எஸ். ஹலரத் அலி,  திருச்சி எரிகற்களால் அழிக்கப்பட்ட மானக்கேடான சமுதாயம். அல்குர்ஆன் நிரூபிக்கும் அறிவியல் சான்று! நமக்கு முன் வாழ்ந்த எத்தனையோ மக்கள் சமுதாயங்களை, அவர்களின் அக்கிரமத்தின் காரணமாக அல்லாஹ் அழித்திருக்கிறான். அவர்களின் அழிவுக்கான காரணங்களை நமக்கு படிப்பினையாக அல்குர்ஆனில் சொல்லிக் காட்டுகின்றான். அப்படி அழிக்கப்பட்ட ஒரு சமுதாயமே லூத் நபி அவர்களின் சமுதாயம். நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் சம காலத்தில் வாழ்ந்தவர்தான் லூத் (அலை) அவர்கள். இன்றைய ஜோர்டான் பள்ளத்தாக்கு அருகிலிருந்த […]

தப்லீக்  ஜமாஅத்தினரின்  தஃலீம்  தொகுப்பு நூல்… அமல்களின் சிறப்புகள்… ஒரு திறனாய்வு ! அப்துல் ஹமீத் தொடர் : 75 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்  (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் :  பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட்,  திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு […]

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறைநூலை! சரஹ் அலி உங்கள்  மீதும்  உங்கள்  குடும்பத்தினர் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். படைத்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். படைத்த ஏக இறைவன்  பெயரால்…. அறிந்தவரும் அறியாதவரும் சமமா? (நபியே!) “அறிந்தவரும் அறியாதவரும் சமமாவார்களா?”  என்று  நீர்  கேட்பீராக,  அறிவுடையோர்தான்  படிப்பினை  பெறுபவர். (இறைநூல்: 39:9) உங்களை மறந்துவிட்டு… உங்களை மறந்துவிட்டு, நன்மை செய்யுமாறு மக்களை ஏவுகிறீர்களா? நீங்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? (இறைநூல்: 2:44) மறுமை நாளில் […]

முஸ்லிம்களுக்கு இன்றைய  தேவை! ஒற்றை அமீரும் அவரின் கீழ் உள்ள பைத்துல்மாலுமே! S.H. அப்துர் ரஹ்மான் அன்புள்ள சகோதர சகோதரிகளே! உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். படைத்த அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். இஸ்லாம் என்பது நபி(ஸல்) அவர்கள் மூலம் இறைவன் நமக்கு அளித்த வாழ்வியல் நெறி வழிகாட்டுதல் ஆகும். அதில் நபி (ஸல்) நடைமுறைப்படுத்தி காட்டிய ஒவ் வொன்றும் இஸ்லாத்தில் முக்கியமானது ஆகும். நபி(ஸல்) காட்டி தந்த […]

நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர்,   நிந்தாவூர். அக்டோபர் மாத தொடர்ச்சி….. அத்தகைய, “நிராகரிப்பாளர்களின் நற்செயல்களை காற்றால் பரப்பப்பட்ட சாம்பலுக்கு ஒப்பிட்டு உதாரணம் கூறுதல்?” தமது இறைவனை ஏற்க மறுத்தோரின் செயல்களுக்கு உதாரணம் சாம்பலாகும். புயல் வீசும் நாளில் கடுமையான காற்று அதை வீசியடிக்கிறது. அவர்கள் திரட்டிய எதன் மீதும் சக்தி பெறமாட்டார்கள். இதுவே (உண்மையிலிருந்து) தொலைவான வழிகேடாகும். (14:18) “நிராகரிப்பாளர்களின் நற்செயல்களைக் கானல் நீருக்கு உவமானமாக அல்லாஹ் குறிப்பிடுதல்” (ஏக இறைவனை) மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் […]

நாம் முஸ்லிம்களே! முஹம்மத் மதார், அபுதாபி “முஸ்லிமீன்” “அவனுக்கு யாதோர் இணையுமில்லை” இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன். (இறைவனை) வழிப்பட்டவர்களில் (முஸ்லிம்களில்) நான் முதன்மையானவன் (என்றும் கூறும்) (அல்குர்ஆன் 6:163) “எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?” என்று கூறி “எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக! முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்களைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” (எனப் பிரார்த்தித்தனர்)  […]

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : இஸ்லாமிய திருமணங்களில் நிக்காஹ் ஒப்பந்தம் முடிந்தவுடன் தாலி என்று கருகமணியில் கட்டுகிறார்கள். காலில் மெட்டியும் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு வாரம் கழித்த பின் நீராட்டுகிறார்கள். இது கிட்டத்தட்ட அந்நியர்கள் (காஃபிர்கள்) செய்வதைப் போன்று தெரிகிறது. உண்மையான நிலையை உங்கள் சொந்த கருத்தின்றி ஹதீதில் அடிப்படையில் சொல்லவும். M. ஜாபர் அலி தெளிவு : இஸ்லாத்துக்கும், தாலிக்கும் சம்பந் தமில்லை. “பாத்திமா நாயகி தாலி கட்டி னார்கள்’ என்று ஒரு பொய்யைச் சொல்லிக் கொண்டு நம்மவர்கள் அதை […]

தலையங்கம்! எதை வேண்டுமானாலும் அழிக்கலாம்!? நூலகம் சென்று வாசிப்பு எனும் நல்ல பழக்கத்தை மைசூருவில் ஏற்படுத்திக் கொண்டவர்களில் பெரும்பாலான வாசகர்கள், சையது ஈஷாக் என்பவரை பத்து ஆண்டுகளாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர். மட்டுமில்லாமல், அவருடன் தினசரி தொடர்பிலும் இருந்து வருகின்றனர். அடுத்து, இந்த வாசகர்கள் அனைவரும் முஸாஃபத் ஆஜாத் என்பவரை சமீப காலமாக தெரிந்து வருகின்றனர். மேலும், இந்த இருவரின் மீதும் அரசு பொதுமக்கள் மற்றும் காவல்துறையின் பார்வை கண்ணிய மாகவே இருந்து வருவதாகத் தெரிகின்றன. யார் இந்த […]

சிறப்புமிக்க நடுநிலை சமுதாயம்! M.S. கமாலுத்தீன்,    பெங்களூர். எல்லாம் வல்ல அல்லாஹ(ஜல்) இந்த உலகத்தில் எத்தனையோ கோடி மனித சமுதாயங்களை படைத்திருக்கிறான். தன் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தவர்களை கண்ணியப்படுத்தியிருக்கிறான். வரம்பு மீறியவர்களை அழித்திருக்கிறான். ஆனால் உலக இறுதி நாள் வரை நடுநிலையான சிறந்த சமுதாய மக்கள் என்று திருகுர்ஆனில் புகழ்ந்து சொல்கிற சமுதாயம் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி வருகிற முஸ்லிம் சமுதாயம்தான். இதோ அல்லாஹ் சொல்கிறான்; மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (அல்குர்ஆன் 3:110) […]

மீலாது, மெளலூது, மார்க்கம் சொல்வதென்ன? K.M.H.  அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : ரபீவுல் அவ்வல் மாதம், நாடெல்லாம் மீலாது விழாக்களும், பள்ளிகளில், வீடுகளில் மெளலூதுகளும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். இவை கொண்டு இறை திருப்தியும், நபி(ஸல்) அவர்கள் ஷபாஅத்தும் (பரிந்துரை) தங்கள் உலகக் காரியங்களில் நலனும், அபிவிருத்தியும் ஏற்படும் என்பது இன்றைய முஸ்லிம்களின் மூட நம்பிக்கையாகும். இவற்றை எல்லாம் மார்க்கமாகக் கொள்ள இவர்களுக்கு ஆதாரங்கள் எங்கிருந்து கிடைத்தன? என்பதை நாம் அறியோம். ஆனால் இவையயல்லாம் மார்க்கத்தில் […]

தப்லீக்  ஜமாஅத்தினரின்  தஃலீம்  தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! அப்துல் ஹமீத் தொடர் : 74 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்  (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் :  பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட்,  திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் […]

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறைநூலை! சரஹ் அலி உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். படைத்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். மறைமுக தர்மமே மேலானது : நீங்கள் தர்மங்களை வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நன்றே, அவற்றை மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது இன்னும் உங்களுக்கு சிறந்தது. தர்மங்களால் இறைவன் உங்கள் தீமைகளை அழித்துவிடுவான். நீங்கள் செய்கின்றவற்றை ஏக இறைவன் நன்கறிந்தவன் ஆவான். (இறைநூல்: 2:271) “உங்களில் யாரும், பிறந்துவிட்ட எந்த […]

வரதட்சணை யாசகமா? ஹராமா? S.H. அப்துர் ரஹ்மான் அன்புள்ள சகோதர சகோதரிகளே! உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். படைத்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். திருமணம் என்பது உலக வாழ்க்கையில் இன்பம் பெறவும், தவறுகள் செய்யாமல் இருக்கவும், வாரிசுகளை உருவாக்கவும் இறைவன் செய்த ஏற்பாடு ஆகும். இன்னும் நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே அன்பையும், கிருபையையும் உண்டாக்கி இருப்பதும், அவனுடைய […]

குழந்தைக்காக… அஸ்ரப்புத்தீன், திருச்சி அன்புச் சகோதரிகளே! இன்று நாம் உலகில் பல தேவைகளுக்காக பலவித வணக்க வழிபாடுகளிலும், பலவித நேர்ச்சைகளிலும் ஈடுபட்டு வருகிறோம். இதில் முக்கியமான ஒன்று குழந்தைக்காக, ஒரு பெண்ணுக்குத் திருமணமாகி முதல் வருடத்தில் அவளும், அவளது கணவரும், குடும்பத்தார்களும் எதிர்பார்ப்பது குழந்தையை. ஆனால் அவள் குழந்தையை முதல் வருடத்தில் பெறாமல் இருந்தால் அவளைச் சிலர் இந்த கோயிலுக்கு போ, அல்லது ஏர்வாடிக்குப் போய் தொட்டில் கட்டு; நாகூர்க்குப் போய் வெள்ளியால் செய்த குழந்தை வாங்கி […]

இஸ்லாமிய அழைப்புப் பணி செய்பவர்கள் தங்களை எப்படி அழைத்துக்கொள்ள வேண்டும்? இப்னு சித்தீக்,  கடையநல்லூர் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்பவர்கள் தங்களை எப்படி அழைக்க வேண்டும் என்பது பற்றி சர்ச்சை மிக வேகமாக நம்மிடையே பரவியுள்ளது வருந்தத்தக்கதே! இவ்விதம் நம்மிடையே ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படும்போது நாம் என்ன செய்யவேண்டும், என்பதை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுவதைப் பாருங்கள். விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டு நடங்கள் (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்களில் நேர்மையாக அதிகாரம் வகிப்பவர்களுக்கும் வழிப்பட்டு நடங்கள்; […]

நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர்,   நிந்தாவூர். செப்டம்பர் மாத தொடர்ச்சி….. “வழிகெட்டவனை தலைகுப்புற விழுந்தவனுக்கு உதாரணமாக ஒப்பிடுதல்” முகம் குப்புற (மண்ணில்) விழுந்து கிடப்பவன் நேர்வழி பெற்றவனா? அல்லது நேரான பாதையில் சீராக நடந்து செல்பவனா? (67:22) என்கின்றான். அத்துடன், “உத்தம நபித்தோழர்களைச் செழிப்பான தோட்டத்திற்கு ஏக இறைவனான அல்லாஹ் உவமை காட்டும் அழகு பாரீர்” முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது (கொள்கை ரீதியில்) கடுமையனவர்களாகவும், தங்களுக்கிடையே இரக்கம் […]

நபிமார்களின் வாரிசுகளே! சிந்தியுங்கள்!! அப்துன் நஸீர் அன்புள்ள ஆலிம் பெரும் மக்களே! சற்று நடுநிலை வகித்து இந்த கட்டுரையை ஆராய்ந்து படியுங்கள். நாம் எல்லோரும் மெளலவி என்ற பட்டம் நம் பெயருக்கு முன் வரவேண்டும் என்பதற்காகவோ அல்லது ஏழு வருடங்கள் சாப்பாடு கிடைக்கிறது என்பதற்காகவோ, மதரஸாக்களுக்கு சென்று ஓதவில்லை. நம் பெற்றோர்களும் அப்படி நினைக்கவில்லை; யாரும் அப்படி நினைக்கவும் மாட்டார்கள். மாறாக நம் பிள்ளைகள் அல்லாஹ்வுடைய வேதத்தை கற்றுத் தேறவேண்டும். நபி(ஸல்) அவர்களின் ஹதீதுகளை தெளிவாக உணர்ந்து […]

தவ்ஹீதுவாதிகளே! கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்!         மறு பதிப்பு : எல்லாம் வல்ல இறையோனே! ஏகத்துவத்தைச் சார்ந்தோர்களின் இதயங்களை இணைப்பாயாக! சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் இறைவனுக்காக, இறைவ னின் சமுதாயத்திற்காக ஒன்றுபட்ட இதயங்கள் பதவி, அதிகாரம் போன்றவற்றால் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக ஒன்றுபட்ட சமுதாயத்தை பிரித்துவிட்டார்கள்; அன்று இறைவனுக்காக இதயங்கள் இணைந்தன; இன்றோ தலைவர்களுக்காக இணைந்தவர்கள் பிரிந்துவிட்டனர். சத்தியதோழர்கள் இறைவனின் மார்க்கத்திற்காக தியாகங்களைப் புரிந்தார்கள். இன்றைய தினம் தனி நபர் வளர்ச்சிக்காக, வாழ்விற்காக தியாகங்கள் புரிகின்றனர். […]